கிலாஃபத் நீர்மூலமாக்கப்பட்டு 95 வருடங்கள் முடிவடைந்த நிலையில் மனித சமுதாயத்தை இறை நிராகரிப்பு என்னும் இருளிலிருந்து இஸ்லாம் என்னும் வெளிச்சத்தை நோக்கி இஸ்லாத்தின் ஒளி மீண்டும் பரவச்செய்ய நாம் பாடுபடுவோம்.
ரஜப் மாதம் முஸ்லிம்கள் மீது 95 வது முறையாக வந்தடைந்திருக்கிறது கிலாஃபத் இல்லாத நிலையில், இமாம் அற்ற நிலையில், ரசூலுல்லாஹ்(ஸல்) இந்த கிலாஃபத்தை பற்றி இவ்வாறு விவரித்து கூறினார்கள்:
«وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ»
 
 
“இமாம் என்பவர் கேடயமாவார்: அவருக்கு பின்னாலிருந்து போர் புரிவர், மற்றும் அவரை கொண்டு பாதுகாக்கப்படுவர்.”
(அபுஹுரைரா (ரலி) அறிவித்ததாக புகாரியில் இடம்பெற்றுள்ளது)
இத்தகைய ஒன்று இல்லாத்தன் காரணத்தால், இறைநிராகரிப்பு செய்யும் நாடுகள் முஸ்லிம்களை எல்லா திசையிலருந்தும் குறிவைத்து பல வகையான அடக்குமுறைகளை கையாண்டு வருகிறார்கள், ஷரீ’ஆவின் சட்டங்கள் நீக்கப்பட்ட பிறகு,  அதன் ஒற்றுமை பல நாடுகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்களுடைய உதிரம் சிந்தப்பட்டு, மேலும் இரண்டு கிப்லாவில் முதன்மையானதான ரசூலுல்லாஹ் (ஸல்) மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்ட இடம் சிதைக்கப்பட்டு, மற்றும் பர்மாவிருந்து மத்திய ஆப்பிரக்கா போன்று அனைத்து திசையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக  அட்டூழியங்களையும் படுகொலை செய்யப்பட்டு வருகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் குஃப்ரிய நாடுகள் கிலாஃபத்தை நீர்மூலமாக்குவதற்கு முன்னோடியாக பல ஆண்டுகள் அறிவார்ந்த படையெடுப்பு மேற்கொண்டு முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமிய சிந்தனையை நிரந்தரமாக மதிப்பிழக்க செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அல்லாஹ் (சுபு)வின் மாபெரும் கருணையால் அவனுடைய வெற்றியால், முஸ்லிம் நாடுகளின் தலைநகரங்களில் கிலாஃபத் மீண்டும் வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்து இடிமுழங்கும் குறள்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது, இது ஹிஸ்புத் தஹ்ரீர் இந்தோனேசிய, மலேசியா, பாகிஸ்தான், துருக்கி, அஷ்-ஷாம், லெபனான் மற்றும் பாலஸ்தீனம், மற்றும் துனீசியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை அரவணைத்து கொண்டுள்ளது.
இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் ஹிஸ்புத்தஹ்ரீர் நடத்திய மாபெரும் மாநாடுகள் துருக்கியில் கிலாஃபத்தை மறுநிர்மாணம் செய்ய வேண்டி எழும் கோரிக்கையை தடுத்து நிறுத்த மேற்கொண்ட வீனாகிப்போன முயற்சிகளால் மதசார்பற்ற முஸ்தஃபா கமாலின் ஆதரவாளர்களின் தூக்கத்தை கலைத்திருக்கிறது. இதனூடே, ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய வழிமுறைப்படி நேர்வழி பெற்ற கிலாஃபத்தை நிறுவுவதற்கு பாடுபட தூண்டும் விதமாக ஹிஸ்புத்தஹ்ரீரை சார்ந்த உறுப்பினர்கள் பாலஸ்தீனம், லெபனான், துனீசியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் தொடர் மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அல்லாஹ் விதித்த ஷரீ’ஆவை நடைமுறைபடுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ள அரசு இல்லாமல் இஸ்லாம் வாழ்வில் நிலைபெற்றிராது, அந்த அரசு அல்லாஹ் (சுபு) எதை தடுத்துள்ளானோ அதை தடுத்து மற்றும் அவன் அனுமதியளித்ததை அனுமதி அளிக்கும், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களின் நலன்களை பாதுகாக்கும், ஷரீ’ஆவின் சட்டங்களை கொண்டு நீதியை பரப்பும், பாதுகாப்பை வழங்கும், எனவே மக்கள் இஸ்லாம் என்னும் ஒளியின் நிழல் மற்றும் வழிகாட்டுதல் மூலம் இளைப்பாறுவர் மற்றும் உலகளாவிய காலனியாதிக்க வாதத்தின் அடக்குமுறையின் பாதிப்பிலருந்து தங்களை விடுவித்து கொள்வர். அதனால் இஸ்லாமிய உம்மத் மீண்டும் மனிதகுலத்திற்கு அனுப்பப்பட்ட சிறந்த சமூகமாக திரும்ப வரும்: இறைச்செய்தி ஏந்திய ஒரே உம்மத், அதன் பின்னர் தன்னை கறை படிந்த மற்றும் அழுகிப்போன சமுதாயத்திற்கு அடிபணிதல் என்னும் கேவலமான நிலையலிருந்து விடுவித்து கொண்டு மனித சமூகத்தை குப்பைகூலம் மற்றும் வன்முறையிலிருந்து விடுவித்து இஸ்லாத்தின் நீதி மற்றும் கருணையை நோக்கி அழைத்து செல்லும்.
நாங்கள் அல்லாஹ்(சுபு)வின் வாக்கின் மீது திண்ணமாக நம்பிக்கை கொண்டுள்ளோம் ஏனெனில் அவனது வாக்கு உண்மையாகும்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَنْ كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ
َ‏
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
(சூரா அந்-நூர்: 55)
தவ்பான்(ரலி) அவர்கள் அறிவித்து முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் ரசூலுல்லாஹ்(ஸல்) இவ்வாறு கூறுகிறார்கள்:
«إِنَّ اللهَ زَوَى لِي الْأَرْضَ، فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا، وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكُهَا مَا زُوِيَ لِي مِنْهَا»
“அல்லாஹ்(சுபு) எனக்கு பூமியை காண்பித்தான், நான் அதன் கிழக்குகளையும் மேற்குகளையும் கண்டேன், என்னுடைய உம்மத் எனக்கு காட்டப்பட்ட இடங்களை நிச்சயமாக ஆட்சி செய்வார்கள்”
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையாளர்கள் மேலும் குஃப்பார்களும்(இறை மறுப்பாளர்கள்) அவர்களுடைய மக்களும் பொய்யுறைக்கின்றனர்.
ஒஸ்மான் பகஷ்.
 
sources:
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com