இஸ்லாமிய சமுதாய வீழ்ச்சிக்கான காரணங்கள்..!!!

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் முஹாஜிர்களை நோக்கிகூறினார்கள் " உங்களுக்கு மத்தியில் ஐந்து விஷயங்கள் நிகழ்ந்துவிடாமல் இருப்பதற்கு அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

எந்தவொரு சமுதாயத்தில் மானக்கேடான ( விபசாரம் போன்ற )பாவங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றதோ அந்த சமுதாயத்தில்அவர்களின் மூதாதையர்களிடம் காணப்படாத பயங்கர நோய்கள்அவர்களுக்கு மத்தியில் தோன்றும்

எந்தவொரு சமுதாயம் தனது சொத்துக்குரிய ஸகாத்தைக்கொடுக்கவில்லையோ அவர்களுக்கு மழைபொழிவது தடுக்கப்படும்.மிருகங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு மழை பொழிவிக்கப்படமாட்டாது.

எந்தவொரு சமுதாயம் அளவை, நிறுவையைக் குறைத்து மோசடிசெய்கிறதோ அந்த சமுதாயம் பஞ்சம், வாழ்க்கைச் செலவை சமாளிக்கமுடியாமல் அரசாங்கத்தின் கொடுமை முதலியவற்றால்பிடிக்கப்படுவார்கள்.

எந்தவொரு சமுதாயத்தலைவர்கள் அல்லாஹ்இறக்கியருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அந்தசமுதாயத்தின் மீது அவர்களது எதிரிகளை அல்லாஹ் ஆதிக்கம்செலுத்த செய்வான். அவர்கள் அவர்களிடமுள்ள சொத்துசெல்வங்களையெல்லாம் அழித்து விடுவார்கள்.

எந்தவொரு சமுதாயம் அல்லாஹ்வின் வேத நூலையும் அவனதுநபியின் வழிமுறையையும் செயலிழக்கச் செய்கின்றார்களோஅவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் உட்பூசல்களையும்போராட்டங்களையும் உருவாக்கிவிடுவான் " எனக் கூறினார்கள். (அஹ்மத், இப்னு மாஜா.)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் ‘அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்’ -ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378

''அல்லாஹ்வுக்கு அஞ்சும்படியும் கருத்த அடிமைகளாக இருந்தாலும் சரி அந்த அமீருக்கு செவிசாய்த்துக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் நான் உங்களுக்கு அறிவுரை செய்கின்றேன். ஏனெனில் எனக்குப் பின்பு உங்களில் வாழ்பவர்கள் அதிகக் கருத்து வேறுபாடுகளைக் காண்பார்கள் அப்போது நீங்கள் என்னுடைய வழிமுறையையும் நல்வழிபெற்ற நேர்மையான கலீஃபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றுங்கள். அதைப் பற்றிப் பிடித்து கடைவாய்ப்பற்க்களால் கடித்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இர்ஃபான் பின் ஸாரியா நூல்:அஹமது, அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்கள் இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
“எவர் ஒருவர் அஸபிய்யாவிற்காக (தேசியவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மர ணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக் ) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 7288


நபி ( ஸல் ) அவர்கள் எதிலிருந்தெல்லாம் பாதுகாவல் தேடினார்களோஅந்த அனைத்து விஷயங்களும் இன்று நம் சமுதாயத்தில் பரவலாககாணப்படுகிறது எனவே நம்முடைய சமுதாயம் இதிலிருந்தெல்லாம்விலகி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் வெறும்வாயளவில் இல்லாமல் செயல்வடிவில் வாழ்ந்தால் நிச்சயமாக இந்தசமுதாயம் வீழ்ச்சியில் இருந்து மீண்டும் எழுச்சி பெறும் இன்ஷாஅல்லாஹ்.