Mar 26, 2016

சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை நிறுத்தி முஸ்லிம்கள் பலகீனப்படுத்தும் சந்தர்ப்பம்

பொதுநலனுக்கான பந்தம்
 

ஈரான்-மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர்– றுதி பாகம்

அமெரிக்காவுடன் தனது உறவை சுமூகப்படுத்தியதன் ஊடாக பிராந்தியத்தில் தனது செல்வாக்கை உயர்த்த நினைத்த ஈரானுக்கு அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன், அமெரிக்காவுக்கு ஈரானின் ஆசையை நிறைவேற்ற வழிவிடுவதன் ஊடாக சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை நிறுத்தி முஸ்லிம்கள் பலகீனப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சுயநலனையும், பேராசையையும் அடிப்படையாகக்கொண்ட தீய உடன்பாட்டின் அடிப்படையிலேயே இரு தரப்புக்களும் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஜெனிவாவிலே இரு தரப்புக்களும் சந்தித்து ஆராய்ந்ததும் இதனைத்தான். எனவே ஈரானின் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலையும், இத்தகைய உடன்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால்; ஈரான் இஸ்லாத்தின்பாலோ அல்லது அதற்கென்ற ஒரு சித்தாந்தத்தின்பாலோ, குறைந்தபட்சம் அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்கின்ற ஷியாயிஸத்தின்பாலோ இயங்கவில்லை என்பதை தெளிவாகக் புரிந்துகொள்ளலாம். மாறாக ஈரானின் நிகழ்ச்சி நிரல்களெல்லாம் அதன் தேசிய மேலாதிக்கத்தை பிராந்தியத்தில் உயர்த்துவது என்ற குறுகிய தீவிர தேசியவாத எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். எனவே ஈரான், இந்த குறுகிய இலக்கை அடைந்து கொள்வதை அளவுகோளாகக் கொண்டே தனது செயற்பாடுகளை எடைபோடுகிறது. அந்த இலக்கிற்கு சாதகமான எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடுத் துணிகிறது. எனவே ஷியா கிரஸண்ட் என்ற அதனது நிகழ்ச்சித்திட்டமும்கூட இந்த நோக்கத்தை இலக்காகக்கொண்டதேயல்லாமல் ஷியா கிரஸண்டின் ஊடாக ஷியாயிஸத்திற்கு சேவகம் செய்வதற்காகவல்ல. ஷியாக்கொள்கைதான் அதன் இலக்காக இருந்திருந்தால் அதன் நடவடிக்கைகள் அனைத்து ஷியாக்களையும் தழுவியதாக அமைந்திருக்கும். எனினும் ஈரான் உலகிலுள்ள அனைத்து ஷியாக்களையும்; பாரபட்சமின்றி அணுகுவதில்லை. மாறாக தனது பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஷியாக்களுக்கு மாத்திரம்தான் அது உதவி வருகிறது என்ற விடயத்தை ஆராய்ந்தால் இது இலகுவாகப்புலப்படும். உதாரணமாக அஜர்பைஜான் அல்லது தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழுகின்ற ஷியாக்கள் அதிகளவில் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவுவது பற்றி ஈரான் எப்போதும் சிந்திப்பதில்லை. மாறாக தனது பிராந்தியக்கனவுக்கு அத்தியவசியமானது என்பதால் ஆப்கானிஸ்தானிலோ அல்லது சவூதியிலோ வாழும் ஷியாக்களின் பிரச்சனைகளை அது தனது பிரச்சனைகளாகக் கருதுகிறது.

முடிவுரை

அமெரிக்காவை பொருத்தமட்டில் அமெரிக்காவுக்கும் - ஈரானுக்குமிடையில் உருவாகியுள்ள இந்த சுமூக நிலையும், புரிந்துணர்வும் ஈரானை பிராந்தியத்தில் ஊக்கப்படுத்துவதன் ஊடாக உம்மத்தை ஷியாசுன்னி என்ற அடிப்படையில் சிதைத்து, பிளவுபடுத்துவதற்கு ஈரானை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்காகும். மேலும் சிரியாவிலே அமெரிக்க நிகழ்ச்சி நிரலை பாதுகாப்பதற்கு ஈரானின் வகிபாகம் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. ஈரானின் உதவியில்லாதிருந்திருந்தால் அஸாத்தின் கணக்கு என்றோ தீர்க்கப்பட்டு இஸ்லாமிய நிகழ்ச்சிநிரல் நடைமுறைக்கு வந்திருக்கும். அது அமெரிக்காவின் அராஜகத்திற்கு முற்றிபுள்ளி வைத்திருக்கும். அஸாத்தின் அழிவுக்கு பின்னால் சிரியாவில் உதயமாகக்கூடிய கிலாஃபத்தின் வருகை குறித்த இந்த அச்சமே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ஈரானை சுமூகமான ஒரு உறவுடன் அவசர அவசரமாக களத்துக்கு கொண்டுவருவதற்கு நிர்ப்பந்தப்படுத்தியது. மத்திய கிழக்கில் நீண்ட காலங்களாக தோல்வியைச் சந்தித்து வரும் அமெரிக்காவின் மானத்தை மறைப்பதற்கு எடுக்கப்படும் உச்சகட்ட முயற்சிகளில் ஒன்றே ஈரானுடனான ஊடலாகும் என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். எனவே மத்திய கிழக்கிலே களத்தில் நிற்கின்ற சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் அமெரிக்கா போஷிக்க நினைக்கும் ஷியா-சுன்னி குழுவாதத்தை அடிப்படையாகக்கொண்டு செயற்படாமல் ஒரு அரசியல் முறைமையின் ஊடாக முஸ்லிம்களின் வேறுபாடுகளைக் கையாண்டு அவர்களின் ஒற்றுமைக்காக உழைத்து எதிரி வளர்த்தெடுக்க நினைக்கும் இத்தகைய குழுவாதங்களுக்கு எதிராக களமிறங்க வேண்டும்.

மேலும் கட்டம் கட்டமாக வெளுத்து வரும் ஈரானின் சாயமும், அதனது குறுகிய தேசிய நலனைத்தவிர இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலுக்கும் அதற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்ற உண்மையும, ஈரானின் நயவஞ்சகத்தனத்தை முஸ்லிம்கள் முன் தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அமெரிக்க-ஈரானிய அணுதிட்ட உடன்பாட்டின் பின்னால் உள்ள யதார்த்தத்தை இனங்கண்ட உம்மத், உம்மத்தை பிளவுபடுத்தும் தீய குழுக்களுக்கு பின்னால் இருக்கும் ஈரானின் மறைகரத்தையும், அஸாத் போன்ற அரக்கனை பாதுகாக்க அது காட்டும் பிரயத்தனத்தையும் தற்போது நேரடியாக சான்று பகர்கிறது. அந்த வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலனைப்பாதுகாப்பதில் சவூதியையும், இஸ்ரேலையம் விஞ்சிய நிலையில் ஈரான் களமிறங்கியிருக்கிறது என்பதை 79 இன் ஈரானியப்புரட்சியை இன்றும் அசைமீட்டிக் கொண்டிருப்பவர்களும், ஈரான் இஸ்ரேலின் எதிரி, அமெரிக்காவின் எதிரி என்று பிதற்றிக்கொண்டிருப்பவர்களும், ஈரானின் வளர்ச்சி இஸ்லாத்தின் வளர்ச்சி என மணற்கோட்டை கட்டுபவர்களும் எப்போது சிந்திப்பார்கள்?
 

முற்றும்.

வாசிங்டனின் பார்வையில் மத்திய கிழக்கு

 

ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 4

தனது பிராந்தியம் தொடர்பாக ஈரான் கொண்டுள்ள இலட்சியத்தை எவ்வாறு கையாள்வது என்ற விடயம், அமெரிக்காவுக்கு ஒரு பிரதான சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. அந்தச் சவாலை எதிர்கொள்வதுற்கு அமெரிக்கா, ஈரானை கட்டுப்படுத்தல், அதனுடன் இணங்கி ஈடுபாடு காட்டுதல், யுத்த சமிஞ்ஞையை வெளிப்படுத்தும் விதமாக மிரட்டுதல் போன்ற கொள்கைகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தது. ஒரே பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிராந்தியத்தை மேலாதிக்கம் செய்தல் என்ற ஒரே இலட்சியம் இருப்பதே அமெரிக்கா ஈரான் தொடர்பாக தொடர்ந்து சந்திக்கும் பிரதான சவால். பல சந்தர்ப்பங்களில் ஈரானின் இந்த இலட்சியத்தையே பயன்படுத்தி பிராந்தியத்தில் தனது இலக்குகளை அமெரிக்கா அடைந்திருக்கிறது. எனினும் அமெரிக்க அரசியல் மட்டங்களில் ஈரானை முழுமையாக நம்ப முடியாது என்ற ஒரு ஆழமான சந்தேகக்கண் தொடர்ந்து இருந்து வருவதால் இரு நாடுகளுக்குமிடையே உறவை சுமூகப்படுத்துவது எப்போதும் முழுமையாக வெற்றியளிப்பதில்லை. எனினும் நிலைமை இன்று மாறியிருக்கிறது. ஈராக்கிலும், பின் ஆப்கானிலும் ஆழிச்சகதிக்குள் மாட்டிக்கொண்ட அமெரிக்காவை சிரியாவின் களநிலை முற்றாகப்புதைத்து விடமுன் ஈரானின் வாசஸ்தளத்தை அமெரிக்கா நேரடியாகத் தட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. முஸ்லிம் உம்மத்தின் தளராத போராட்டங்களினால் இராணுவ ரீதியாக முழுப்பிராந்தியத்திலும் அவமானத்தை சந்தித்த அமெரிக்கா தனது நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள அல்லது தனது மேலாதிக்கக்கனவை அடைகாக்க ஈரானுடன் கைகோர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. நவ-பழமைவாத (Neo-Conservative Administration) நிர்வாகத்தினால் ஏற்படக்கூடிய அரச மாற்றம் பற்றிய அச்சம் பொதுவான விடயங்களில் ஈரானுடன் இணங்கிச்செல்லல் என்ற ஒரு நிலைப்பாட்டை அமெரிக்க நிர்வாகம் அவசர அவசரமாக எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. எனினும் ஈரானின் மீது ஆளுமை செலுத்த அவர்களுடன் ஈடுபாடுகாட்டுவதா அல்லது அவர்களின் பிராந்தியக்கனவை களைக்கும் விதமாக இரும்புக்கரங்கொண்டு நசுக்குவதா என்ற விடயம் இன்றும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் இருக்கின்ற பிரதான சிந்தனைக்குழப்பங்களில் ஒன்றுதான் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இன்றுவரை அமெரிக்கா, மத்திய கிழக்கிலே தனது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பிராந்தியத்திலுள்ள பல்வேறுபட்ட சக்திகளை ஒருவர் தோண்டிய குழிக்குள் மற்றவரை தள்ளிவிடுவதன் ஊடாக பலச்சமநிலையை பேணி அடைந்து வருகின்றது. பிராந்தியத்தில் இஸ்ரேலின் வியாபிப்பை கட்டுப்படுத்த ஈரானையும், ஈரானின் ஆதிக்கக் கனவை கட்டுப்படுத்த இஸ்ரேலையும் அது கையாள்கிறது. இவர்கள் இருவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சவூதியை பயன்படுத்த, அது ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராக இயங்கும் ஆயுதக்குழுக்களை போசித்து வளர்த்து ஆயுதங்களை விநியோகித்து தனது கைமாறைச் செய்து வருகின்றது. இதனூடாக நேரடி அமெரிக்க இராணுவத்தலையீடு தவிர்க்கப்படுகிறது. ஈரானின் அணுப்பரிசோதனை நிலைகளை அழிக்க இராணுவத்தாக்குல் நடத்தவேண்டும் என்ற அழுத்தத்தை இஸ்ரேல் அமெரிக்காவிடம் பலமுறை செய்திருந்தாலும் அதனால் இஸ்ரேல் பலம்பெற்று தான் பிராந்தியத்தில் பேணிவரும் பலச்சமநிலை குழம்பிவிடலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் அமெரிக்கா அதனை தொடர்ந்து எதிர்த்து வருவது இதற்கொரு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஈரான் தன்னைச் சூழ அமைந்திருக்கும் ஷியாக்களின் பரம்பல் அதிகமாகவுள்ள பிராந்தியங்களை அல்லது தேசங்களை பலப்படுத்தி நிலத்தொடர்புள்ள ஒரு பிறை வடிவிலான அகன்ற ஷியா கூட்டிணைவொன்றை உருவாக்கக் கனவு காண்கிறது. ஷியா கிரஸண்ட் என அறியப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தையும் அமெரிக்கா தனக்குச் சாதகமாகக் கருதுகிறது. ஏனெனில் ஈரானின் இந்த நிகழ்ச்சித்திட்டம் முஸ்லிம் உலகை பௌதீக ரீதியாக கூறுபோடுவதுடன், இதனால் தீவிரமடையக்கூடிய ஷியா-சுன்னி குழுவாத மனோநிலை உம்மத்தை மேலும் பிளவுபடுத்தி பலகீனப்படுத்தும். எனவே பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேணலாம் என அது கருதுகிறது. எனினும் அதற்கான கெட்டபெயர் தனக்கு வரப்போவதில்லை. மாறாக ஷியா கிரஸண்ட் திட்டத்தை நடைமுறையில் அமூல்படுத்தும் ஈரானுக்கும், ஷியாக்களுக்குமே அதனால் கெட்டபெயர் வரப்போகிறது என்ற கபடத்தனத்தில் அதற்கு ஆதரவு கொடுத்து வருகிறது.

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு ஈரானின் இலட்சியக்கனவை ஒரு அபாயக்குறியாக காட்டி மத்திய கிழக்கில் தனது இராணுவப்பிரசன்னத்தை நியாயப்படுத்திய அமெரிக்கா, இன்று அரபுப்புரட்சிகளில் சிக்கிய மத்திய கிழக்கில் தனது இலக்கு நோக்கிய ஒரு அரசியல் வியூகத்தை நிர்மாணிப்பதில் தடுமாற்றத்தை சந்திக்கிறது.