Aug 31, 2013

மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாக்குமா?




அமெரிக்கா தலைமையிலான பேரரசின் கீழ் நிறுவப்பட்டு தொழிற்படும் மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகள் மீறப்படும்போது அது குறித்து ஆக்கபூர்வமாக இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதா?

ஈராக்கில் ஆப்கானில் காசாவில் மாலியில் பர்மாவில் சிரியாவில் எகிப்தில் என்று மனித உரிமைகள் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளால் அல்லது ஏகாதிபத்திய அமெரிக்காவினால் மீறப்படும் போது அவர்கள் எத்தகைய மனித உரிமைகளை பாதுகாத்துள்ளார்கள் என்பது குறித்து முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நிச்சயமான குப்பார்கள் முஸ்லிம்களது விவகாரத்தில் கருணைகாட்ட மாட்டார்கள். இது வரலாற்று உண்மை.

இது இவ்வாறு இருக்கும் போது இன்னும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தப் போலியான சர்வதேச அரசியல் நலன்களின் பின்னனியில் தொழிற்படும் ஒரு சர்வதேச அமைப்பிடம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடுவதால் இந்த மனித உரிமைகள் அமைப்பு ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு எதிராகவோ அல்லாது முதலாளித்துவ நலன்களுக்கு எதிராகவே எந்நவிதமான அதிரடி நடவடிக்கைகளை முஸ்லிம்களது விடயத்தில் எடுத்து நீதியை நிலைநிறுத்துமா?

இல்லவே இல்லை. இன்று ஷரீஆச் சட்டம் எந்த முஸ்லிம் நாட்டில் பகுதியாக அமுலாக்கப்பட்டாலும் மனித உரிமைகள் அமைப்பு மடித்துக் கட்டிக்கொண்டு களமிறங்கி இஸ்லாத்தை கற்காலத்திற்கு கொண்டு சென்று காட்டுமிராண்டித் தனமான சிந்தனைகளையும் சட்டங்களையும் கொண்ட மார்க்கமாக சித்தரிக்க முற்படும் போக்கை மிகத் தீவிரமாக முன்னெடுத்து மனித மனங்களை இஸ்லாத்திற்க எதிராக திருப்புவதில் பாரிய பங்களிப்பை வழங்கும்.

அப்படியானால் ஒரு முஸ்லிம் யாரிடம் இந்த மனித உரிமை மீறல்களை முறையிடுவது?

எமது 1300 வருட வரலாற்றில் முஸ்லிம்களது உரிமைகள் மாத்திரமன்றி இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த குப்பார்களது உரிமைகளையும் எவ்வாறு அந்த கிலாபா அரசுகள் பேணியது என்பதனை நாம் உணர்ந்து இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள கிலாபா அரசை மீள நிறுவுவதன் மூலமே முஸ்லிம்களது உரிமைகள் பாதுகாக்கப்படமுடியும் என்ற அடிப்படை உண்மையை நாம் கருத்திற்கொள்ள வேண்டும்

இன்றைய அமெரிக்க யூத இராணுவ முன்னெடுப்புகளில் எமது முஸ்லிம் இராணுவங்கள் கற்றவேண்டிய பாடங்கள்!


இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் கேடயமாக இருந்தது முஸ்லிம்களது இராணுவம். அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றில் மேற்கொண்டதன் பயனாகவே மதீனாவில் நிறுவிய இஸ்லாம் மிகப்பெரும் இரு பேரரசுகளான ரோம் மற்றும் பாரசீகத்தை தோற்கடிக்கும் சக்தியை பெற்று இஸ்லாத்தை நிலைநிறுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கியது என்பது எமது வீரவரலாறு.

ஆனால் இன்று எமது உம்மத்தினது இராணுவம் 4.7 மில்லியனாக அமெரிக்க ரஷ்ய மற்றும் இந்திய இராணுவங்களின் தொகையிலும் அதிகமாக இருந்தும் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது? அது இஸ்லாத்தின் எழுச்சியிலும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் இன்று நாம் இழந்துள்ள கிலாபத அரசை நிறுவுவதிலும் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

நிச்சயமாக, இன்றைய எமது முஸ்லிம் இராணுவம் தமது தேசிய எல்லைக்கு அப்பால் இணைந்து தமது அமானிதமான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்து இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுவுவதில் பங்களிப்பு செய்யும் அதி உன்னத காலத்தில் உள்ளது.

இன்றுள்ள துர்பாக்கியமான நிலை யாதெனில் இன்றுள்ள முஸ்லிம் தலைமைகளால் தங்களது சொந்த நலனுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் தொழிற்பட்டு இன்று முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய முஸ்லிம் இராணுவங்கள் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களையும் கொன்று குவிக்கும் கொடூர நிலைக்கு அவர்களது போக்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து எமது சகோதர இராணுவத்தினை மீட்டெடுப்பதற்கு நாம் பொறுப்புடனும் பக்குவமாகவும் தஃவத் கொடுத்து அவர்களை இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலன்களின் பக்கம் மீட்கவேண்டும்.

அத்துடன் இஸ்லாம் மீண்டும் ஒரு வல்லரசாக மாற்றப்படுவதிலும் குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்து துறைகளில் அமுலாக்கப்படுவதிலும் பாரிய பங்களிப்பை கோரி அவர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இன்றைய முஸ்லிம் சகோதர சகோதரிகளிக்கு பாரிய பொறுப்புள்ளது.

சிந்திப்போம்! எமது முஸ்லிம் இராணுவ துஸ்பிரயோகத்தைக களைய ஆக்கபூர்வமான தஃவா முன்னெடுப்புக்களை முஸ்லிம் நாடுகளில் வழங்க உழைப்போம்! இஸ்லாம் ஒரு சுபபவராக இன்றைய முதலாளித்து தலைமைத்துவத்தின் மாற்றீடாக உலக மக்களது மீட்சியாக மலர உழைப்போம்!

அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு


அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு…. சிரியாவில் கிலாபா நிறுவப்பட்டுவிடும் எனும் அச்சமே காரணமாகும்!

இன்று சிரியாவில் ரஷ்யா தலைமையிலான கொமியூனிச சிந்தனையிலான வல்லரசும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ வல்லரசும் களமிறங்கி இஸ்லாத்தின் எழுச்சியை அது ஒரு கிலாபா அரசாக கட்டியெழுப்பப்படுவதனை தடுக்கும் விதமான தமது போர்ப்படைகளை தயார்செய்துவரும் நிலையில் ஒரு முஸ்லிம் சிரியாகுறித்த எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்?

இன்று சிரியாவில் நடைபெறும் யுத்தம் “சியா-சுன்னி” யுத்த மல்ல. அது ஒரு “சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம்”.

சிரியமக்கள் கொமியூனிசமும் இஸ்லாமும் கலந்த “பாதிசமோ” அல்லது “முதலாளித்துவ மதஒதக்கல் சிந்தனையுள்ள ஜனநாயகமோ” வேண்டாம் என்று புறந்தள்ளி இஸ்லாமிய அரசாகிய “கிலாபா அரசு” வேண்டும் என்கின்ற யுத்தம்.

அசாத் தோற்கடிக்கப்பட்டு முஜாஹிதீன்களது கைக்கு சிரியா சென்றுவிட்டால் அங்கு கிலாபாவிற்கான பைஆ நடைபெற்றுவிடும் என்று இரு தரப்பு பேரரசுகளும் அஞ்சுகின்றன.

சிரியாவில் கிலாபா மீள் எழுச்சி பெற்றால் முஸ்லிம்களது கடமைகளும் பொறுப்புக்களும் அந்த அரசை பாதுகாப்பதிலும் அதற்கு பைஆ கொடுத்து அதனை நிலைநிறுத்துவதில் மாறிவிடும்.

அப்படியானால் அங்கிருந்து “கலீபாவினால் ஒரு அழைப்பு ஜிஹாதுக்கு முஸ்லிம் நாடுகளை நோக்கி விடுக்கப்படும் அழைப்பும்”, “இஸ்ரேல் மீதான யுத்தப்பிரகடணமும்” நாளைய அமெரிக்க யூத நலன்களையும் முதலாளித்து உலகையும் கணிசமாக பாதிக்கும்.

ஏனெனில் இன்றுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்க 57 இருந்து கொண்டு மேற்கிற்கு தாரைவாக்கும் போக்கு கேள்விக்குட்படுத்தப்பட்டு மக்கள் அவ்வாட்சியாளர்களை புறந்தள்ளி கிலாபாவுடன் தமது நிலங்களை இணைக்கும் பாரிய போராட்டப்பணியை மேற்கொண்டால் மேற்கினால் தொடர்ந்தும் முஸ்லிம் நாடுகளில் உள்ள “வளங்களை சுரண்டமுடியாது” மாத்திரமன்றி அவர்களது “சந்தைகளையும் இழக்க நேரிடும்”.

இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுபவப்பட்டால் அதன் முதல் நாளில் உளவு பார்க்கும் அனைத்து வெளிநாட்டு முகவர்கள் நிலையங்களும் மூடப்பட்டுவிடும். முதல் நாளில் இருந்தே வட்டியில்லா வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இது பெருமளவில் அமெரிக்க-யூத முதலைகளை பாதிக்கும். இன்தப் போக்கை “தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் ஒரு சூழ்சியான அரசியல் இராணுவ முன்னெடுப்பாகவே” இன்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அரசியல் நகர்வுகளை சிரியா விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் நோக்கவேண்டும்.

இந்த விடயத்தில் சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. அந்த நாட்டு மக்கள் சிரியாவினது முஜாஹிதீன்களது எழுச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கி எதிரிகளை விரட்டியடிக்கும் பாரிய பணி அவர்கள் மீது இன்று சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்லாம் வரவேண்டும் என நினைக்கும் இஹ்வானிய சகோதரத்துவ அமைப்புக்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பொறுப்புடன் முன்னெடுத்து, “மூன்றுமுறை பின்னடைவை சந்திந்துள்ள ஜனநாயவழிமுறையிலான ஆட்சி மூலம் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியும் என்ற சிந்தனைப்போக்கை கைவிட்டு” கிலாபா ராஷிதாவை நிறுவ “மக்கள் அபிப்பிராயத்தை திரட்டுவதிலும்” “இராணுவ நுஸ்றாவை கோருவதிலும்” முன்வரவேண்டும்.

இஸ்லாம் மீள் எழுச்சிபெறவேண்டிய உன்னதமான வேளையில் நாம் பிரிந்துவிடாது சிரியாவினது கிலாபா நகர்வில் பாரிய பங்குபற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

Aug 30, 2013

இஸ்லாமிய வாழ்க்கை முறை : The Islamic way of life :



இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புதல் என்பது.... 

இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் தங்களது அனைத்து செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்ளும் நிலைக்கு திரும்புதல் என்று பொருளாகும்..

அகீதா,இபாதத்,அஹ்லாக்,முஹ்மலாத் ,நிதாமுல் ஹுகும் (ஆட்சியமைப்பு),நிதாமுல் இக்திசாதி (பொருளாதார கொள்கை ),நிதாமுல் முஜ்தமி (சமூக அமைப்பு),கல்வி கொள்கை,வெளி விவகார கொள்கை ஆகியஎந்த விசயமாகினும் அல்லது முஸ்லிம் வாழும் பிரதேசங்களை தாருல் இஸ்லாமாக மாற்றுவது மூலம் அதில் வாழும் சமூகத்தை இஸ்லாமிய சமூகமாக மற்றும் செயல்பாடுகனாளும் அவற்றை இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளும் நிலை தான் இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பதாகும்...

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் ! (பகுதி 02)

அது வீரத்தின் நிலம் என்பது புரியாமல் கம்யூனிச செங்கரடி தன் நாஸ்திக சித்தாந்த நாகரீகத்தை ஆப்கானில் பதிக்க முனைந்தான் . அந்த வீர சமூகத்தை மண்டி போட வைக்க அலெக்சாண்டருக்கும் முடியாமல் போனது ! பிரிட்டிஷ் காரனுக்கும் முடியாமல் போனது ! என்பதை உணராமல், அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் சாய்த்த ஒரு சமூகத்தை மீண்டும் ஒருமுறை கம்யூனிசமும் மண்டி போடவைக்க முயன்று பார்த்தது . முடிந்ததா ?

'தாகூத்களுக்கு' அடிமைப்படுவதை விட சஹாதத் மேலானது என அந்த சமூகம் தெளிவாகவே முடிவெடுத்தது . ஆரம்பத் தோல்விகளில் அது அனுபவத்தைக் கண்டது . எதிரியை அளவிட்டது . USSR எனும் சுப்பர் பவரின் இராணுவ ,அதி நவீன ஆயுத வலிமை இங்கு சுவன ஆசையின் முன் செல்லாக் காசாக மாறியது . ஆப்கான் முஸ்லீம் உம்மத் கிடைத்ததைக் கொண்டே போராட்டத்தை தொடங்கியது .

இந்த தூய போராட்டம் தொடரும் வழியில் முழு உலகில் இருந்தும் ஜிஹாதிய ஆர்வளர்கள், இமாம்கள் என ஒன்று குவிக்கப் பட்ட ஒரு களமாகவே ஆப்கன் மாறிப்போனது .ஒரே கல்லில் பல மாங்காய் கள் விழுத்த இந்த ' ஜிஹாதை'அமெரிக்க பயன்படுத்தியது . 'அது ஏன் எப்படி ?.
காரணங்கள் இதுதான் .

1. பனிப்போரின் வலுச் சமநிலையை உடைத்து சோவியத் யூனியனின் அரசியல் இராணுவ பலத்தை கேள்விக்குறி ஆக்குவதன் ஊடாக தனது ஆதிக்க சக்தியை வலுப்படுத்துவது .

2. குறிப்பாக சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஜிஹாதிய ஆர்வளர்கள் ,இமாம்களை ஆப்கானை நோக்கி நகர்த்துவதன் ஊடாக மத்திய கிழக்கின் தனது பிராந்திய ஆதிக்கத்துக்கும் , அதன் ஆட்சியாளர்களுக்கும் (குறிப்பாக சவூதியின் மன்னராட்சிக்கு ) எதிரான சவால்களை தவிர்ப்பது .

3. சவூதி அரேபியாவுடன் , அமெரிக்கா இராணுவ பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இலகுவாக செய்து கொண்டது .(அதன் மூலம் பழைய இருப்பில் இருந்த ஆயுதங்களின் தொகுதிகள் ஆப்கானுக்கு வழங்கவென சவூதி அரேபியாவிற்கு விற்கப்பட்டது .)

4. குறித்த இந்த இலக்குகளை தனது நேரடித் தலையீடோ ,செலவோ இன்றி முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமைகளை பலியிட்டு செய்ய வைத்தது .

(சவூதியின் முதவாக்கள் ஆப்கான் ஜிஹாத் விடயத்தில் அது ஜிஹாத் தான் என்றும் அதில் மரணிப்பவர்கள் 'ஷஹீத் ' எனவும் 'பொசிடிவ் ரிபோர்ட் ' கொடுத்தனர் . ஆனால் சிரிய விவகாரத்தில் மௌனம் !, எகிப்து விவகாரத்தில் அந்த கிங் கோப்ராக்கள் நெகடிவ் ரோல் ! முஸ்லீம் உம்மத்தே இது உனது சிந்தனைக்கு !)

இப்படி பல இலாப அறுவடைகளை ஆப்கான் , USSR யுத்தத்தை வைத்து அமெரிக்கா செய்துள்ளது .என்பது வியப்பான செய்தியாக சிலருக்கு இருக்கலாம் . இந்த ஆப்கான் 'அசைன்மெண்டுக்கு' பாகிஸ்தான் உளவுப் பிரிவான I .S .I தெளிவாகவே அமெரிக்கா பயன் படுத்தியது . இதன் பின் ஆப்கான் பெருநிலம் முஜாஹிதீன்களின் பக்கம் முற்றாகவே வீழ்ந்தது . ஆனால் இஸ்லாமிய சரீயாவை விரும்பிய ஆப்கான் மக்களுக்கு அந்த இலக்கை அடைய முடிந்ததா !? இந்த கேள்விக்கு விடையை இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது ! அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே !


 

நம்புங்கள் 'கிலாபா ' நாளை உதிக்கும். 
மனித அடிமை விலங்கு தெறிக்கும் !

ஒரே தலைமையில் 'உம்மாஹ் ' நிமிர்ந்திடும் .
'பை அத் ' கொடுத்திடும் வாய்ப்பும் வந்திடும் !

'தாகூத்திய சக்திகள் அஞ்சி நடுங்கிடும் .
'ஜிஸ்யாவா '? ஜிஹாதா ? கேள்வி பிறக்கும் !

'வஹியின் ' வழிதனில் சட்டம் வேலிபோடும் .
குனிந்த முகங்களும் நிமிர்ந்து சிரிக்கும் !

நீதியின் உண்மையை உலகம் உணரும் .
முஹம்மதின் (ஸல் ) படையணி மீண்டும் ஜொலிக்கும் !

'சியோனிச 'அதிகாரம் ஓடி ஒதுங்கும் .
தூய பாலஸ்தீன் மீண்டும் கிடைக்கும் !

'பைத்துல் முகத்திஸில் ' அதான் ஒலிக்கும் .
'குப்ரின்' தடைகளை இஸ்லாம் ஒடிக்கும் ! 

 

ஏகாதிபத்தியம் இராணுவ சப்பாத்துக்களை பதிக்க இன்னொரு முஸ்லீம் பெருநிலம் தயாராகி வருகிறது!!

ஆளும் தாகூத்தின் அநியாயம் போதாமல் முதலாளித்துவ ஏகாதிபத்திய தாகூத்தும் தன் ஆதிக்கத் தாண்டவத்தை ஆட இன்னொரு முஸ்லீம் பெருநிலம்! அதுவும் நாளைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முன்னறிவிப்பாக வஹி குறிப்பிட்ட 'ஆஷ் ஷாம் 'இன்று தயாராவது இன்று எதற்காக !? ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களின் துள்ளியமான 'கபுருஸ்தானாக ' அது மாறுமா ? சமரச குள்ளநரித் தனத்தில் சுருண்டு விடுமா !? என்ற எதிர் பார்ப்புக்கு இன்ஷா அல்லாஹ் பதில் சொல்வார்கள் எம் போராளிகள். ஆயிரம் ஆயிரம் படை வந்தாலும் ஆட்கள் தொகையா வெல்லும் !? ஓ முஸ்லிம் உம்மாவே ! உனக்கு அல்குர் ஆன் பதில் சொல்லும் .

டமஸ்கஸ் எயார் போர்ட்டின் விளக்குகள் அனைக்கப்பட்டு விட்டன. ஓடு தளத்தில் பாதையை காட்டும் ஒளிர் விளக்குகளும் அனைக்கபட்டு விட்டன. இந்த விமானத்தளத்தை சூழ 03 மிலிட்டரி பேஸ்கள் அதன் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்தன. விமான நிலையம் முழுவதும் சிரிய கொமாண்டோக்கள் எப்போதும் இருந்து வந்தனர். அமெரிக்க வான் தாக்குதலின் முதல் இலக்கு சிரியாவின் டமஸ்கஸ் சர்வதேச விமானத்தளமாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளதால் இப்போது அங்குள்ள இராணுவத்தினர் அங்கிருந்து ட்ரக் வண்டிகளிலும், துருப்புக்காவி கவச வாகனங்களிலும் ஏற்றப்பட்டு விமான நிலையத்தை அண்டிய நகரான al-Awameen Huran-இற்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

சிரிய பாதுகாப்பு தலைமை கட்டளைப்பீடத்தில் இருந்து அதன் அதிகாரிகளும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இராணுவ ஆராய்ச்சி மையங்கள் என்ற பெயரில் இயங்கி வந்த கட்டிடங்களை விட்டும் அதன் உத்தியோகத்தர்கள், காவலர்கள் வெளியேறியுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு டமஸ்கஸ்ஸின் உயர் பாதுகாப்பு வலைய பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இரவிரவாக ட்றக் வண்டிகளின் உறுமல்கள் கேட்ட வண்ணமேயிருந்தன. ஒரு சில அரசியல் ஆர்வலர்களின் தகவல்களின் படி இந்த ட்ரக் வண்டிகள் துறைமுகம் நோக்கியே சென்றதாக தெரிவித்துள்ளனர். இங்கே தான் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

பஸர் அல்-அஸாத்திற்கு சத்தாம் ஹுஸைனிடமும், முஹம்மர் கடாபியிடமும் கற்றுக்கொண்டவை நிறையவேயுள்ளது.

அதேவேளை ஈராக்கின் அமைச்சர்களும், லிபியாவின் அமைச்சர்களும் பேசிய வீர வசனங்களும், சூளுரைகளம், சவால்களும் இப்போது சிரிய அமைச்சர்களால் விடுக்கப்படுகின்றன. அமெரிக்க தாக்குதலை முறியடிக்க நாம் எப்போதும் தயார் என்று முழங்குகின்றனர் அவர்கள். எம்மை தாக்கினால் ஐரோப்பாவில் இரசாயன தாக்குதல் நடாத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று எச்சரிக்கைகளை விடுக்கின்றனர். இவற்றை வைத்தது பார்க்கும் போது சிரிய சண்டையிட தயாராவது போல தெரியவில்லை.

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_30.html?spref=fb

எகிப்திய மக்கள் சிரிய மக்கள் புரட்சியில் இருந்து பாடம் பெறவேண்டும்!


1. சிரிய மக்கள் மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்! அதே போன்று எகிப்தியர்கள் இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அல்ஜீரியாவிலும் பலஸ்தீனிலும் இருமுறை தோல்விகண்ட மேற்கினது கருவியாகிய ஜனநாயகம் எனும் கருவியை தூக்கி வீசவேண்டும். அதற்கான கோஷத்தை கைவிடவேண்டும்.

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டும் என்று சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதேபோன்று “சிசி” யும் அவனது அடிவருடிகளும் இல்லாமல் போகவேண்டும் என்பதற்கு எகிப்தியர்கள் போராடவேண்டும்.

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதுவே எகிப்திய மக்களது மூலமந்திரமாக வீரவசனமாக மாறவேண்டும்.

ஷாமில் இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி சிரிய மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் எகிப்தில் இன்று முன்னெடுக்கப்படும் சாத்வீக வழிமுறையில் இவற்றை சாதிப்பது எந்தளவுக்கு சாத்தியம்? இத்தகைய சாத்வீகவழிப்போராட்டம் எமது வீர வரலாற்றில் எத்தகைய பங்கை செய்துள்ளது என்பதனை சிந்தித்து ஆக்கபூர்வமாக சிந்தித்து ஹக்கை நிலைநாட்ட எகிப்திய போராடவேண்டும்.

ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை அமுல்படுத்தும் போக்கையும் கோரிக்கையையும் கைவிடவேண்டும். அதுவே இஸ்லாத்திற்கு பலம் சேர்கும். முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கும்.

அமெரிக்க நலன்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் தருணமாக சிரியா மாறுமா?


ஈராக்கினுள்ளும் சிரியாவினுள்ளும் குப்ருடைய ஆட்சியாகிய ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு போலியான காரணங்களை முன்வைத்து களமிறங்கும் அமெரிக்க நலன்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் தருணமாக சிரியா மாறுமா?

ஆம், நிச்சயம் அல்லாஹ்வின் உதவி ஷாம் தேசத்து மக்களுக்கு உண்டு. ஏனெனில் அவர்கள்


1.மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்!

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டு கோருகிறார்கள்! 

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் கோருகிறார்கள்!


இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி போராடும் நிலையில் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பான். குப்பார்களது அனைத்து சதி முயற்சிகளையும் தவிடுபொடியாக்குவான்.

அவர்கள் சிறிய கூட்டமாக இருந்தாலும் ஹக்கில் இருந்து கொண்டு இஸ்லாம் மீள நபிவழியில் அமுலாக்கப்பட வேண்டிய அரசாகிய கிலாபா ராஷிதாவை கோரியபடி போராடுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் நிச்யமாக அல்லாஹ் அவர்களது கரத்தைப் பலப்படுத்துவான்! எதிரிகளை விரண்டோடச்செய்வான்.

எமது வீரவரலாற்றில் எத்தனையோ படிப்பினைகளை முஸ்லிம் உம்மத் சந்தித்துள்ளது. “ஹந்தக்” எமக்கு மிகப்பெரும் படிப்பினையைத் தருகிறது. “பத்ர்” எமக்கு மேலும் நமது நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.

அல்லாஹ் ஷாம் மக்களது கால்பாதங்களை நிச்சயம் இஸ்திரப்படுத்துவான். அவன் எப்போதும் முஃமீன்களுடன் இருப்பவன். நிச்சயம் அவனது நூரை பிரகாசமடையச் செய்வான்.

எமது இந்த நம்பிக்கைக்கும் பிரார்த்தனைக்கும் பலம்சேர்க்கும் பல நன்மாராயங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சலமா பின் நுபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூல் (ஸல்) கூறினார்கள்.

'முஃமீன்களின் சாம்ராஜியம் கட்டியெழுப்பப்படுவது ஷாமில் இருந்துதான்' (தபராணி)

Aug 29, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைத்துள்ள உண்மைகள் !


சோவியத் யூனியன் (USSR ) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் . இன்று இந்த கூட்டு யூனியன்கள் எல்லாம் உடைந்து ரஷ்யா எனும் கௌரவப் பிச்சைக்காரனாக அது காட்சி தந்தாலும் அதன் அடாவடித்தனம் மட்டும் குறைந்த பாடில்லை .

" அரசியல் அதிகாரம் என்பது துப்பாக்கி பரல்களில் இருந்து பிறக்க வேண்டும் " என்ற வார்த்தைகளின் வடிவமான இந்த தேசத்தின் உண்மை பலருக்கு புரியும் போது, தங்கள் நெற்றிகளுக்கு முன்னாலும் ஒரு துப்பாக்கி தோட்டாவை துப்பத் தயாராக இருந்தது மட்டுமே கடைசிப் பார்வையாக இருந்தது .

"நூறு பேச்சு மேடைகளும் , ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற இவர்களின் இரண்டாம் கடவுள் 'லெனின் கிராட் ' சொன்னதை கச்சிதமாக செய்தது அதன் உளவுப் பிரிவான கே .ஜி .பி . யும் ,அதன் இராணுவமும் .

நாஸ்திக வாத அகீதாவை கொண்ட இந்த சோவியத் யூனியன் எனும் வல்லரசோடு முஸ்லீம்கள் பலப்பரீட்சை செய்த முதல் களமே ஆப்கானிஸ்தான் .இந்த செங்கரடிகளின் இராணுவ மேலாதிக்க வாதத்தின் அழிவுக் கதவுகளை ஆப்கான் உத்தியோக பூர்வமாக திறந்தது 1970 களின் இறுதிப் பகுதியிலேதான் ஆகும் .

1990 கள் வரை தொடர்ந்த இந்த பலப்பரீட்சை மூட்டை முடிச்சுகளோடு ஆப்கானை விட்டு சோவியத் இராணுவம் வெளியேறியவுடன் அதன் இராணுவ வலிமை பற்றிய 'இமேஜ்' ஜுஜூபி வடிவத்தை அடைந்தது .இந்தப் போரில் இன்னொரு பார்வையாக புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் வியட்நாமின் படு தோல்விக்கு சோவியத் யூனியனை பழிவாங்க அமெரிக்காவுக்கு நல்ல சந்தர்ப்பமாகவும் ஆகியதாகும் .

சோவியத் ஆப்கானில் அடைந்த இராணுவத் தோல்வி மற்றும் அதன் ஆட்சித் தலைவராக இருந்த மிக்கைல் கொர்பச்சோ வழங்கிய சீர்திருத்தக் கொள்கைகள் என்பன கொம்யூனிச அகீதாவை அங்கு கோமா நிலைக்கு ஆக்கி முதலாளித்துவத்திடம் சரண்டராகும் நிலைக்கு ஆக்கியது .இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் தொடர்ந்த பனிப்போர் எனும் ஆதிக்கச் சண்டைக்கு முற்றுப் புள்ளியும் வைத்தது . இந்த தோல்வி அரசியலின் முடிவுரைப் பந்தி ஆப்கான் களத்தில் இருந்துதான் எழுதப் பட்டது என்பது 'ஓபன் சீக்கிரட்' .

தெற்காசியாவில் இருந்த அதிகம் அறியப்படாத ஒரு முஸ்லீம் பெருநிலத்தை உலக முஸ்லீம் உம்மாவின் இதயங்களில் பசுமையாக விதைத்ததும் இந்த தியாகப் போராட்டம்தான் என்றால் அதுவும் மறுக்க முடியாதது .அதேபோல கம்யூனிச பிசாசை விரட்ட அமெரிக்கா எனும் பூதம் ஏன் பின்னால் நிற்கின்றது !? என்பதை உணராமல் முஸ்லீம் உம்மா போராடிய தவறும் மறுக்க முடியாதது தான் ஆகும் .

'புரபிட் அன்ட் பெனிபிட் பேசில்' துரோகத்தனமான 'டபுள் கேம்' கொடுப்பது U .S பொலிசியின் பிரதான எண்ணக்கரு என்பது புரியாமல் ,அந்த முதலாளித்துவம் விரித்த சதிவலையில் நாஸ்திக செங்கரடிகள் எதிர்ப்பு என்ற ஒருபக்க பார்வையை மட்டுமே முஸ்லீம் உம்மத் பதித்தது .

'அல்லாஹு அக்பர்' என கையில் இருந்த 'கிளஸ் நிகோ ரைபிளின் ரிகரை ' தட்டுவது பற்றி இருந்த ஆர்வம் ,தனது தலையில் இருந்த சிந்தனை 'ரிகரை தட்டுவதில் இந்த உம்மாவுக்கு அன்று இருக்கவில்லை .நாஸ்திக அகீதாவுக்கு எதிரான கடுமையான பார்வை நாசகரமான 'செக்கியூலரிச முதலாளித்துவக் கடவுளின் ஆதிக்கம் பற்றி மற்றும் குள்ளநரித்தனம் பற்றி ஆராய விடவில்லை . அது எப்படியான திட்டமிடல் !? நடந்தது என்ன !? இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன்.

NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள்

Interference in Syria.

அமெரிக்கத் தலைமையிலான NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் செய்தியே இன்று மீடியாக்களின் பிரதான HOT NEWS ஆக மாறியிருக்கிறது .

இத்தகு இராணுவ நடவடிக்கை நிச்சயமாக பசர் அல் அசாத்துக்கு எதிரானதல்ல .தெளிவாகவே இஸ்லாத்துக்கு எதிரானது என்பதுதான் உண்மையாகும் .

Aug 28, 2013

பிர் அவ்னை தட்டிக்கேட்க நும்ரூதின் கூட்டணியா !?



       சிரியாவில் சிவிலியன்கள் மீதான இரசாயன ஆயுதப் பிரயோகத்தின் பின் அதை காரணமாக வைத்து அமெரிக்கத் தலைமையிலான NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் செய்தியே இன்று மீடியாக்களின் பிரதான HOT NEWS ஆக மாறியிருக்கிறது .
 
தனது அரசியல் ,இராஜ தந்திர , பொருளாதார நிர்ணயங்களுக்காக சில சூழ்நிலைகளை திட்டமிட்டு உருவாக்குதல் , உருவாகியுள்ள சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தல் என்பதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படையான செயல் விதி .

அந்த வகையில் முஸ்லீம்களிடம் மிக வேகமாக எழுந்து வரும் இஸ்லாத்தின் தேடல் ,இஸ்லாத்தை முதலாளித்துவ ஜனநாயக மதச் சார்பின்மையின் வரைவிலக்கணமான மஸ்ஜித்களோடு முடக்கும் மத வடிவத்தை மீறிய ஆர்வமாக வடிவெடுப்பது ,ஒரு பலத்த சவாலாகவே மாறியது .

அந்த வகையில் மிக வேகமாக எழுந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி அலைக்கு திட்டமிட்டு அணைபோடும் அரசியல் , இராணுவ நகர்வுகளாகவே நடப்பு நிலவரங்களை எம்மால் கணிக்கக் கூடியதாக உள்ளது .மாறாக சிரிய மக்கள் மீதுள்ள அக்கறையின் காரணமான ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக இது அமையவில்லை .

சிரியாவில் பசர் அல் அசாதின் கொடூரமான மக்கள் அழிப்பு சம்பவம் இந்த விஷவாயு தாக்குதலால் மட்டுமே நிகழவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது . மேலும் இத்தகு தாக்குதல் சிரியாவில் முதல் தடவையாக நடத்தப் படவுமில்லை.முன்னரே சிரியப் போராளிகள் சில இடங்களில் அசாதின் இராணுவத்தால் 'கெமிகல் வெபன்ஸ் ' பாவிக்கப் பட்டதை பற்றி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது . மேலும் இத்தகு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கும் முடிவுடன்தான் போராளிகளும் இருந்தனர் .

மேலும் இராஜதந்திர ரீதியில் ரஷ்யாவை கட்டுப்படுத்தி இருந்தாலே அசாதின் தரப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்க முடியும் . ஆரம்பத்தில் இருந்தே அத்தகு நடவடிக்கைகள் எதிலும் அமெரிக்காவும் அதன் கூட்டுக் களவானிகளும் முயற்சி எடுக்காமல் சிரிய யுத்தத்தின் திசையில் முஸ்லீம்களின் அழிவோடு கூடிய இன்னொரு அரசியலை விதைக்கவே விரும்பினர் .அந்தத் தீர்வு . சிரியப் போராளிகள் பலவீனமடைந்த நிலையில் சமரசத்தின் மூலம் சுலபமாக பின்வரும் அடிப்படையில் விதைக்க நினைத்தனர்
.


1. தேசிய சிரியா .
2. செக்கியூலரிச ஜனநாயகம் .
3. இஸ்லாத்தை பெயரளவாக கொண்ட சரீயாவின் முன்னுரிமை.



என்ற தெரிந்த விடைக்குள் அது அமைத்திருந்தது . லிபியாவைப்போல , எகிப்தைப்போல , சிரியாவை மடக்கி விடவே முயன்றனர் . அந்த நிலையை தாண்டி விடயங்கள் வந்த போது தான் ஒரு இராணுவ நடவடிக்கைக்கான அவசியத்தை உணர்ந்தனர் .இத்தகு இராணுவ நடவடிக்கை நிச்சயமாக பசர் அல் அசாத்துக்கு எதிரானதல்ல .தெளிவாகவே இஸ்லாத்துக்கு எதிரானது என்பதுதான் உண்மையாகும் .

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_28.html?spref=fb

உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது

உடல் உறுப்புகளின் தானம் என்பது  உயிருடன் இருக்கும்போது செய்தல் மற்றும் இறந்தபின்  செய்தல் என்று இரு வகைப்படும்.
உயிருடன் இருக்கும் போது தானம் செய்தல்
உயிருடன் இருக்கும்போது சில உடல் உறுப்புகளை தானம் செய்ய நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதியளிக்கிறது. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உயிருடன் இருக்கும்போது தானம் செய்பவர்  தன்னுடைய உடலுக்கு முழு உரிமையாளர் ஆவார். ஒருவருடைய கண், காது, கை போன்ற உடல் உறுப்புகள் இன்னொருவரால் சிதைக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ செய்தால் அதற்கான ஷரியத் சட்டத்தை நாம் அறிந்தே வைத்துள்ளோம். கண்ணுக்கு கண் — பல்லுக்கு பல் அல்லது இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளுதல் அல்லது அந்த நபரை முழுமையாக மன்னித்து விடுதல் போன்ற விருப்பத் தேர்வை எடுத்துக்கொள்ள பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் முழு அனுமதி வழங்கியுள்ளது. இதிலிருந்து உயிருடன் இருக்கும்போது  முழு உடலுக்கும் அவரே உரிமையாளர் என்பதை இஸ்லாம் சுட்டிக்காட்டுகிறது. எனவே ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய சில உடல் உறுப்புகளை தானம் செய்வதில்  தடை இல்லை என்றாலும் சில உறுப்புகளை தானம் செய்ய ஷரியத் அனுமதிக்கவில்லை என்பதையும்  விளங்கிக்கொள்ள வேண்டும்.
உயிருடன் இருக்கும்போது உறுப்புகளை தானம் செய்பவர் பேண வேண்டிய விதிமுறைகள்
உறுப்புகளை தானம் செய்பவரின் உறுப்புகள் அகற்றப்படும்போது அவருடைய  உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய  எந்த செயலையும் அனுமதிக்கமுடியாது. எனவே இருதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய இயலாது. இதுபோன்ற மரணம் ஏற்படுதல் தொடர்பான எந்த உறுப்புகளையும் தானம் செய்ய அனுமதியில்லை. அதைப்போன்று ஒருவர் இரத்ததானம் செய்யும்போது குறிப்பிட்ட அளவைவிட அதிகப்படியான இரத்தத்தை தானம் செய்வது கூடாது. பலகீனமான நிலையில் உள்ள ஒருவர் இரத்ததானம் செய்வதின் மூலமோ, உறுப்புகளை தானமாக கொடுப்பதன்மூலமோ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் அவர் தானம் கொடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்.      (அந்நிஸா : 29)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ، عَذَّبَهُ اللهُ بِهِ فِي نَارِ جَهَنَّمَ……
…எவர் தன்னை எந்த பொருளைக்கொண்டு கொலை செய்துகொள்கிறாரோ அந்த பொருளைக்கொண்டே நரக நெருப்பில் அல்லாஹ்  அவரை  வேதனை செய்வான்.                                                       (முஸ்லிம்)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا
மலையின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் கூராயுதத்தை  தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.                          (அபூ ஹுரைரா(ரலி), புகாரி)
தனக்குத்தானே மரணம் ஏற்படும் விதமான செயலை ஒருவர் அனுமதிப்பதும் கொலையிலேயே அடங்கும். இஸ்லாத்தில் தற்கொலை மிகப்பெரிய பாவச்செயல் என்பதால் உறுப்புகளை தானம் செய்ய நேர்ந்தால் மரணம் சம்பவிக்கும் என்று அறிய வந்தால் உறுப்புகளை தானம் செய்ய அனுமதியில்லை. மேலும் உயிருடன் இருக்கும்போது   தன்னுடைய விதைப்பை, கருவகம்   ஆகியவற்றை ஒருபோதும் தானம் செய்ய அனுமதியில்லை. அது உயிருக்கு ஆபத்து விளைவிக்காவிட்டலும் சரியே. குழந்தை உருவாகும் பாக்கியத்தை இழந்து விடும் செயலை மேற்கொள்ள இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. நபி صلى الله عليه وسلم அவர்கள் இதை தடை செய்துள்ளார்கள்.
كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَيْسَ مَعَنَا نِسَاءٌ، فَقُلْنَا: أَلاَ نَخْتَصِي؟ فَنَهَانَا عَنْ ذَلِكَ
எங்களுடன் துணைவியர்  எவரும்   இல்லாத  நிலையில் நபி  صلى الله عليه وسلمஅவர்களுடன் நாங்கள் ஒரு போரில் கலந்து     கொண்டிருந்தோம். எனவே நபி صلى الله عليه وسلمஅவர்களிடம்நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படி செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள்.                      (புகாரி)
விந்து உற்பத்திக்கு  ஒரு விதைப்பை போதுமானது என்பதால், ஆண்மை நீக்கம்  ஏற்படாது என்ற நிலையில் இரண்டு விதைப்பைகளில் ஒன்றை தானம் செய்யலாம். அதன் மூலம் விந்து உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வாதிடுபவர்களின் கூற்று முற்றிலும் இஸ்லாத்திற்கு விரோதமானதாகும்.  ஏனெனில் இவை குழந்தைகள்  உருவாக தேவைப்படும் உயிரணுக்கள் உற்பத்தியாகும் ஆலைகளாக திகழ்கின்றன. மரபுரீதியாக ஒருவரின் குணாதிசயங்கள், உருவ அமைப்பு  போன்றவை உயிரணுக்கள் உற்பத்தியாகும் மூலத்திலிருந்தே நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே உயிரியல் அடிப்படையில் தானம் செய்தவரே  தந்தை என்ற நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே  ஷரியத் அடிப்படையில் பார்க்கும்போது உறவு முறையை தீர்மானிப்பதில் சிக்கல்களை தோற்றுவிக்கிறது.
 நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-   
مَنِ انْتَسَبَ إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ تَوَلَّى غَيْرَ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோஎவர் தம்  உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக்கொள்கிறாரோஅவர்கள்மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய,மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும் !                                                                                           (இப்னுமாஜா)
مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ
யார் தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே தந்தை என்று கூறுவாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும்என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்.                (புகாரி, முஸ்லிம்)
பெற்றோரை தீர்மானிப்பதில் ஏற்படும் இத்தகைய  சிக்கல்களை அனுமதிக்க இயலாது என்பதாலும் தன்னுடைய தந்தையல்லாத ஒருவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள இயலாது என்பதாலும் விதைப்பை, கருவகம்  போன்றவற்றை  தானம் செய்வதும் தானமாக பெற்றுக்கொள்வதும் ஹராமாகிவிடுகிறது. மேற்கூறியவைகளில் அடங்காத கண்,  கை, ஒரு சிறுநீரகம் போன்றவற்றை உயிருடன் இருக்கும்போது தானம் செய்வதில் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில்  தடை இல்லை.
மரணத்திற்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்தல்
மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளையோ அல்லது மருத்துவ ஆராய்ச்சிக்காக முழு உடலையோ  தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உயிருடன் இருக்கும்போது உறுப்புகளை தானம் செய்வதை மரணத்திற்குப்பின் தானம் செய்வதோடு ஒருபோதும் ஒப்பிட முடியாது. ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரே அந்த உடலுக்கு முழு உரிமையாளர் ஆவார். ஆனால் ஷரியத் அடிப்படையில்  மரணத்திற்குப்பின்  அவருக்கு அந்த உடல் உரிமையில்லை. அதேபோன்று மற்றெவரும் அந்த உடலுக்கு உரிமை கொண்டாட முடியாது. அந்த உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யவேண்டியதுதான் அவர்களின் பொறுப்பே தவிர, அந்த உடலுக்கு யாரும் உரிமையாளர் ஆக முடியாது. எனவே மரணித்தவரின் உடல் உறுப்புகளையோ அல்லது முழு உடலையோ தானம் செய்யும் உரிமையை யாரும் பெறமுடியாது.
முஸ்லிம் ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய சொத்துக்களை மரணத்திற்கு பின் முழுமையாக தானமாக கொடுத்துவிடவேண்டும் என்று வசிய்யத் செய்ய அனுமதியில்லை. மூன்றில் ஒரு பங்கு சொத்துக்களையே  அவ்வாறு செய்ய இயலும். அப்படியே அவர் வசிய்யத் செய்திருந்தாலும்  அவருடைய விருப்பத்திற்கு மாற்றமாக இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையிலேயே பாகப்பிரிவினை செய்யப்படும். மரணித்தவர் உயில் எழுதி இருந்தாலும் அதன் அடிப்படையில்   தீர்ப்பளிக்கப்படமாட்டாது. அதேபோன்று வாரிசுதாரர்கள் அவரின் சொத்துக்களைதான்   இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் அடைந்து கொள்ளமுடியுமே தவிர அவருடைய உடலுக்கு உரிமைபெற்றவராகி தங்களுடைய விருப்பம்போல் எதுவும் செய்து விட முடியாது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
كَسْرُ عَظْمِ الْمَيِّتِ، كَكَسْرِهِ حَيًّا
   மரணித்து விட்டவரின் உடல் எலும்பை முறிப்பது அவர் உயிருடனிருக்கையில் (எலும்பை) முறிப்பது போலாகும்.
                                                                                     (அபூதாவூது,அஹ்மது, இப்னு மாஜா)
لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ، فَتَخْلُصَ إِلَى جِلْدِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ
உங்களில் ஒருவர்ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைதல் என்பது, கப்று மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்                          (அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்)
நபி صلى الله عليه وسلم  அவர்கள் கபுறின்மீது அமர்ந்திருந்தவரைப்பார்த்து கூறினார்கள்:- 
انْزِلْ مِنَ الْقَبْرِ لَا تُؤْذِي صَاحِبَ الْقَبْرِ
கபுறிலிருந்து இறங்குங்கள்;  கபுறுவாசிக்கு தீங்கு செய்யாதீர்கள்.  (அஹ்மத்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து மரணித்தவரை எவ்வாறு கண்ணியப்படுத்தவேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். மரணித்தவரின் எலும்புகளை முறிப்பது,  உயிருடன் இருக்கும்போது அவரின் எலும்புகளை முறிப்பது போன்றாகும் என்பதிலிருந்து மரணித்தவரின் உடலை அறுப்பதற்கு அனுமதி இல்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
எனவே கண் தானம், பிரேத பரிசோதனை போன்றவற்றிற்காக உடலை அறுப்பதற்கு அனுமதியில்லை என்றிருக்க மரணத்தவரின் உடல் உறுப்புகளையும் முழு உடலையும் தானம் செய்ய எவ்வித அனுமதியும் இல்லை. போஸ்ட்மார்ட்டம்(பிரேத பரிசோதனை)  செய்யாமல் இருந்தால் குற்றங்களை கண்டறியமுடியாது என்பதால்  பிரேத பரிசோதனைக்காக மரணித்தவரின்  உடலை அறுப்பதும், தலையை உடைப்பதும் தவறில்லை என்பதாக சிலர் வாதிடுகின்றனர். இஸ்லாத்தில் ஒரு செயல் கூடுமா அல்லது கூடாதா  என்பதற்கு  அதனால் கிடைக்கும் பயன்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க நமக்கு அனுமதியில்லை. ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியே கிடையாது. மரணித்தவரின் உடலில் சிறு கீறலைக்கூட  ஏற்படுத்த அனுமதியில்லை என்றிருக்க இத்தகைய செயலை எவ்வாறு அனுமதிக்க முடியும்? உயிருடன் இருப்பவரை முழு உடல் பரிசோதனை மூலம் ஆராய்ச்சி செய்யும் முறைகள் மேம்பாடு அடைந்து கொண்டிருக்க, மரணித்தவரின் உடலை அறுக்காமல் ஆராய்ச்சி செய்து உண்மை நிலையை கண்டறியும்  முறையை மேம்படுத்த இயலாதா?  இத்தகைய மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைப்பற்றி  சிந்திக்காமல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையை ஏன் ஊக்குவிக்க வேண்டும்?
نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَى وَالمُثْلَةِ
    கொள்ளையடிப்பதையும்> ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி صلى الله عليه وسلم  அவர்கள் தடை செய்தார்கள். 
(அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி), புகாரி)
உயிருடன் இருப்பவரின் அங்கங்களை சிதைப்பதும், மைய்யித்தை  கெட்ட எண்ணத்துடன் சிதைப்பதும்தான் தவறு; மரணித்தவரின் அங்கங்களை உறுப்புகள் தானத்திற்காகவும்  ஆராய்ச்சிக்காகவும்  சிதைப்பது குற்றமாகாது என்ற வாதம் முற்றிலும் தவறாகும். உயிருடன் இருப்பவர்களின் அங்கங்களை சிதைப்பதை இஸ்லாம் தடுப்பது போன்று மரணித்தவர்களின் உடல்களை சிதைப்பதை இஸ்லாம் தடுக்கிறது. நல்ல காரியங்களுக்காக மைய்யித்தை சிதைப்பது தவறில்லை என்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும். மைய்யித்தை காபிர்கள் அருவருப்பாகவும் கண்ணியக் குறைவுடனும் பாவிப்பது  போலல்லாமல் முஸ்லிம்கள் அதை கண்ணியமாகவும் அமானிதமாகவும் கையாள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. முஸ்லிம் நாடுகளில் இவற்றை அனுமதித்து  நடைமுறைப்படுத்தியும் வருகிறார்களே! அவ்வாறிருக்க நாமும் ஷரிய்யத்தில் சற்று விட்டுக் கொடுத்தால் என்ன? என்று கூறுவதும் அடிப்படையற்றதாகும். இஸ்லாத்தை முழுமையாக விட்டுக்கொடுத்து குப்ரை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விசயமே. மேலும் அறிஞர்கள் இதில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்கள் என்று கூறி  தகுதியற்ற அறிஞர்களின் அரைகுறை ஆராய்ச்சியினை முஸ்லிம்களாகிய நாம் ஒருபோதும் பின்பற்ற இயலாது..
ஒருவருக்கு வாழ்வளிக்க  நாம் நிர்பந்திக்கப்படுவதால் இறந்தவரின் கண்களை தானம் செய்வதில் என்ன தவறு என்ற கேள்வியும்  அர்த்தமற்றதாகும். இதயம், நுரையீரல், கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒருவர் உயிர் வாழ முடியாது. ஆனால் கண் இல்லாமல் உயிர் வாழமுடியும். எனவே கண்தானம் பெற்றவர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவோ அல்லது நாம் இறந்தாலும் நம் கண்களாவது இந்த உலகை சிலகாலம் பார்த்துக்கொண்டிருக்கட்டுமே என்ற மடமையான ஆசைக்காகவோ ஷரிய்யத்திற்கு மாற்றமாக நடந்துகொள்ள நமக்கு அனுமதியில்லை.
இதிலிருந்து மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளையோ அல்லது மருத்துவ ஆராய்ச்சிக்காக முழு உடலையோ  தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. முஸ்லிம்களில் யாராவது  மரணத்திற்கு பின் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு  வசிய்யத் செய்திருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கோ அல்லது உரிமை பெற்றவருக்கோ அதை நிறைவேற்றிவைக்க அனுமதியில்லை. ஏனெனில் ஷரியத்திற்கு மாற்றமான வசிய்யத் செல்லுபடியாகாது என்பதால் அதை நிறைவேற்றிவைப்பவர்  குற்றம் இழைத்தவராகிவிடுகிறார். மரணித்தவர் மட்டும் முஸ்லிமாக இருந்து அவருடைய பெற்றோர்,மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார்கள்  காபிர்களாக இருந்தால் அவரின் உறுப்புகளையோ முழு உடலையோ  குடும்ப விருப்பப்படி தானமாகக் கொடுக்க முஸ்லிம்கள் இடமளிக்கக் கூடாது. சில சந்தர்ப்பங்களில்  இஸ்லாத்தின் அடிப்படையில் செயல்படமுடியாமல்  குப்ர் சட்டங்கள் நம்மை நிர்பந்திப்பதால் அவர் உயிருடன் இருக்கும்போதே சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படாமல் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை முஸ்லிமுக்கு காபிர் வாரிசாக முடியாது என்பதையும் நினைவில் கொண்டு நாம் செயலாற்றவேண்டும்.
                                                                                                                                       [பாலஸ்தீன அறிஞர் அப்துல் கதீம் ஸல்லூம் (ரஹ்) அவர்கள் அரபியில் எழுதிய – Islamic Verdict on:  Cloning - Human organ transplantation – Abortion-Test tube Babies - Life support   systems – Life and death -  حكم الشرع في : *الاستنساخ * نقل الأعضاء * الإجهاض * أطفال الأنابيب *     أجهزة الإنعاش الطبية * الحياة والموت        என்ற  நூலில் கொடுக்கப்பட்ட விளக்கங்களைக் கொண்டு இக்கட்டுரை தொகுக்கப்பட்டது]

Aug 27, 2013

இன்றைய தேவை வெறும் போர்க்குணமா ? அல்லது போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமா ?




ஒரு தாய் அவளின் குழந்தையிடமிருந்து பிரித்து வைக்கப் பட்டபின் அது பசி கொண்டு அழுகின்றது . இப்போது அதற்கு ஏதாவது ஒரு பால் புகட்டப்படும் போது அழுகையை நிறுத்தி ,அதை பருகி ஜீரணித்து வாழ தொடங்கினால் அது சராசரிப் போர்க்குணம் . இது அணைத்து விலங்குகளுக்கும் பொதுவானது .ஆனால் தனது சொந்தத் தாயே தனக்கே உரிய தாய்ப்பாலை தரும்வரை ஒரு குழந்தை வீரிட்டு கதறி அழுவது சற்று வித்தியாசமானது இதுதான் போராட்ட உணர்வோடு கூடிய போர்க்குணமாகும் . ஒரு சராசரி மனிதனுக்கும் தெளிவான இஸ்லாமிய வாதிக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான் .

ஒரு தெளிவான இஸ்லாமிய வாதி சூழ்நிலையின் பசப்பான நியாயங்களில் எப்போதும் சரிகாணவே மாட்டான் . அவற்றை முற்றாகவே புறந்தள்ளி தன்னையே அர்ப்பணித்து இஸ்லாத்தை தனிப்பெரும் சூழ்நிலையாக மாற்ற போராடிக்கொண்டே இருப்பான் .

காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலே இருக்கின்றான் .(ஆனால் ) யார் ஈமான் கொண்டு (அந்த அல்லாஹ் அருளிய வாழ்வியலின் பிரகாரம் அணைத்து ) நல்லமல்களையும் செய்து (அந்த உயர்ந்த இலட்சிய வாதம் நிலைபெற தன்னையே அர்ப்பணித்து அந்த )சத்திய (மார்க்க)த்தை கொண்டு ஏவி (அந்தப்பணியில் சத்திய மறுப்பாளர்கள் கொடுக்கும் மிகப் பலமான சோதனைகளின் போதும் பொறுமையாக (போராட்டத்தை குப்ரின் பேரம் பேசல்களுக்கு விலை போகாமல்) மேட்கொள்கிறார்களோ அவர்களைத் தவிர .

(அல்குர் ஆன் சூரா அல் அஸ்ர் )


அது அல்லாமல் குப்ரிய அரசியல் குட்டையில் ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு முஸ்லீம் சமூகத்தையும் திசை திருப்பி சுயநலமும் போலித்தனமும் மிக்க குப்ரிய அதிகாரக் கூட்டத்துக்கு ஒருபக்கம் 'கோவிந்தா 'போட்டு விட்டு மறுபக்கம் அல்லாஹு அக்பர் சொல்வது சுன்னா வழியல்ல என்பதை முஸ்லீம் உம்மா புரிந்து கொள்ள வேண்டும் .

பௌதீக ,வரலாற்று, ஆன்மீக ரீதியான முஸ்லீம் உம்மாவின் ஒன்றிணைவு தேசிய வாதத்தால் கட்டுப்படுத்தப் பட்டபோது அதையும் ஜீரணிக்கக் கற்றுக் கொண்டோம் !ஜனநாயகம் எனும் பசப்பு அரசியலை விடுதலையாக வர்ணித்து மதச் சார்பின்மையில் காலந்தள்ள எதிரி அல்லாஹ்வின் எதிரி அழைத்தபோது மதில் மேல் பூனையாக வாழவும் துணிந்தோம் ! கேட்டால் நிர்ப்பந்தம் என்ற நியாயத்தையும் 'பிக்ஹ் ' ஆக்கி வேறு வெளியிட்டோம் .

இஸ்லாத்தை எதோ பண்டைய இதிகாசமாய் இரசித்து விட்டு குப்ரின் நியாயங்களோடு ஒன்றிய வாழ்வா காலத்தின் தேவை ?நாங்கள் கழுத்தே சீவப்பட்டாலும் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் அதன் வழிமுறையில் இருந்து மட்டுமே போராடியவர்கள் இந்த முஸ்லீம் உம்மா .

அந்த 1924 ற்கு முன் பிரித்தானிய காலனித்துவத்தின் இறுதிப் பகுதியில் கூட இந்த முஸ்லீம் உம்மத்தின் உள்ளிருந்து சில அடிவருடிகளை பொறுக்கி எடுத்து இதோ உங்கள் தலைவர்கள் ! என ஆங்கிலேயன் சொன்னபோது எங்கள் தலைவர் (கலீபா ) துருக்கியில் இருக்கிறார் என மார்தட்டிச் சொன்னோம் .அந்த கிலாபாவின் வீழ்ச்சியோடு ...அவமானமும் ,தலைகுனிவும், கொடூரமான அடக்கு முறைகளும் , திட்டமிட்ட அழிப்புகளும் தொடர்கின்றன .

அரசியல் அனாதைகளாகிவிட்ட நாம் எதிரியின் நிபந்தனைகளில் இருந்து எமது வாழ்வை பிச்சை கேட்கும் தரத்தில் எம்மை ஆக்கிவிட்டது !? 'ஹுப்புத் துன்யாவை' தத்தெடுத்து எம் சொந்தப் பிறவியான போர்க்குணத்தோடு கூடிய போராட்ட உணர்வை விரட்டி அடித்தோம் . அவமானத்தை 'ஹிக்மத் ' என்ற பெயரில் சுமக்கிறோம் .

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_26.html?spref=fb

Aug 26, 2013

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா?

இன்று எகிப்தில் ஆயிரக்கணக்காண உயிர்கள் பலியிடப்படும் துர்பாக்கிய நிலைக்கு எகிப்தினது அரசியல் வழிகாட்டல் வித்திட்டுள்ளது.

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் கை மேலோங்கிய நிலையில் இவர்களது வழிகாட்டலின் கீழ் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாத்வீக வழிப் போராட்டம் எனும் தோறணையில் பலியிடப்படும் பரிதாபகரமான சூழலிற்கு இன்று இஹ்வானுல் முஸ்லிமின் அமைப்பு வழிகாட்டுகிறது.

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா? சீராவில் அத்தகைய முன்மாதிரி உள்ளதா?

அல்சிசி எனும் கொடுங்கோலன் இஸ்வான்களை ஆறுமாத காலத்துக்குள் கருவறுத்துவிடுவேன் எனும் சூளுரைக்கும் இத்தருணத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிசியின் பின்னணியில் தொழிற்படும்போது சாத்வீகவழியில் மீள இஸ்லாம் மலருமா?

ஏற்கனவே அமெரிக்காவும் அதன் அடிவருடிகளான சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகளும் இஸ்ரேலும் சேர்ந்து இஸ்லாம் ஜனநாயகம் எனும் ஆட்சிமுறைக் கருவியினூடாக அமுல்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான சதித்திட்டத்தை தீட்டி ஆட்சியை கவிழ்த்திருக்கும் போது மீள முர்சியை பதவியில் அமர்த்துவதனால் இஸ்லாத்தை முழுமையாக அமுல்படுத்த விட்டுவிடுவார்களா?

அல்ஜீரியாவில் இதேபோன்றதொரு பாடத்தை படித்துவிட்டு மீள ஜனநாயகம் எனும் கருவியினூடாகவே இஸ்லாத்தை அமுல்படுத்துவோம் என்பதில் எந்தளவு சாத்தியம் உள்ளது என்பது பற்றி உணரமாட்டார்களா எமது இஹ்வானிய சகோதரர்கள்?

இவர்கள் மாற்றீட்டு அரசியல் பற்றி சிந்திக்க மாட்டார்களா? இராணுவ நுஸ்றா இல்லாத நிலையில் இஸ்லாத்தை பகுதியாகவும் தேசத்தின் எல்லைக்குள் அமுல்படுத்தவும் எதிரிகளிடம் இருந்து அரசை பாதுகாக்கவும் இராணுவ நுஸ்றா வேண்டும் என்பதனை உணரமாட்டார்களா?

அல்லாஹ் இவர்களுக்கு இந்த உண்மையை புரியவைக்க வேண்டும் என பிரார்த்திப்போம்! நபிவழியில் கிலாபா நிறுவிட, பாடுபட பிரார்த்திப்போம்!

இஸ்லாமிய எழுச்சியில் எகிப்தினது வகிபங்கும் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் கற்கவேண்டிய படிப்பினைகளும்....?

எகிப்து முஸ்லிம் நாடுகளில் ஒரு பலம்வாய்ந்த கேந்திர முக்கியத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இதன் மற்றுமொரு முக்கியத்துவம் தான் அது மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ்கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளமை. மாத்திரமன்றி இஸ்ரேலுக்கான முழு விநியோகமும் எகிப்தினது சுரங்கப்பாதையினூடாக இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாட்டைச் சூழவுள்ள நாடுகளும் பல்வேறு வளங்ளைக் கொண்டிருப்பதுடன் இஸ்லாமிய எழுச்சியில் மறுமலர்ச்சியில் கனிசமான பங்களிப்பை வழங்கத் தேவையான வசதிகளை கொண்ட நாடுகளாகும்.

எகிப்து வீரவரலாற்றை கொண்ட ஒரு நாடாகும். ஐன்ஜாலூத்தில் வைத்து மொங்கோலியர்களை கறுவருத்து இஸ்லாத்திற்கு பலம் சேர்த்தவர்கள் இந்த நாட்டு மக்கள். இன்று மிக்பெரிய இராணுவ பலத்தை கொண்ட முஸ்லிம் நாடுகளில் எகிப்து முக்கிய இடத்தை வகிக்கிறது.

இஸ்லாமிய எழுச்சியில் அதன் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்த மிகவும் பழமைவாய்ந்த அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தை கொண்ட நாடு. இங்கிருந்து இஸ்லாமிய எழுச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய ஹசன் அல்பன்னா மற்றும் செயித் குத்ப் போன்ற நவீன இஸ்லாமிய அறிஞர்களை வழங்கி இஸ்லாம் அரசியல் மற்றும் ஆத்மீக செயற்பாடுகளில் சமபங்கை வழங்கவேண்டும் எனும் சிந்தனையை விதைத்து இஸ்லாம் இன்று மீள் எழுச்சி பெறுவதில் பங்களிப்பை வளங்கியுள்ளது.

ஆனால் உதுமானிய கிலாபா வீழ்ச்சியின் பின்னர் பல்வேறு நாடுகளினது காலனித்துவத்திற்கு உட்பட்டதாலும் அதன் ஆட்சியாளர்கள் சர்வாதிகளாகவும் குப்ருடைய சிந்தனையை அடிப்படையை கொண்டு ஆட்சி செய்ததன் விளைவாகவும் இன்று மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட மக்களும் கொப்டிக் கிறிஸ்தவர்களும் இஸ்லாம் மீள அரசியல் வடிவில் உருவெடுத்து வாழ்வின் விவகாரங்களை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒழுங்கு படுத்துவதில் பாரிய தடையாக உள்ளனர்.

இவர்கள் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதுடன் இவர்களை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மேற்கினதும் அமெரிக்காவினதும் அடிவருடிகளாக அவர்களது அரசியல் நலன்களில் அக்கறை கொண்டவர்களாக காணப்பட்டதன் விளைவாக இன்று எகிப்தில் கலாநிதி முர்சியினது சரீஆ அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டுவிட்டால் தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் என்பதற்காக பாரிய சதிப்புரட்சி செயடதார்கள். இதற்கு சவூதி, கட்டார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் துணைபுரிந்து இன்று குப்பாரகளது நலன்கள் மேலோங்கவும் முஸ்லிம்களது உயிர்கள் பறிக்கப்படவும் வழிவகுத்துள்ளார்கள்.

அத்துடன் இன்று எகிப்தை பொறுப்பேற்றுள்ள சிசி 6 மாத காலத்தில் 3 மில்லியன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர்களை கறுவறுத்துவிடுவேன் எனவும் சூழுரைக்கும் அபாயகரமான நிலையில் எகிப்துள்ளது. இவன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஹீரோவாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளான்.

இதற்கு சவூதி குவைத் கட்டார் போன்ற நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கும் துர்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உலகு உள்ளது. குப்பார்களுடன் கூட்டுசேர்ரும் முஸலிம்களைப் பார்த்து அல்குர்ஆன் மிகவும் காரசாரமாக கண்டிக்கிறது. அவர்களை குப்பார்களது தரத்தில் வைத்து நோக்கிறது என்ற அடிப்படையையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இத்தகைய ஆபத்துக்களை சுமந்த எகிப்திய மக்களுக்கு பாரிய தஃவாப்பணியுள்ளது. இவர்களை வழிநடாத்தும் இஸ்லாமிய தலைமைத்துவங்கள் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவும் போது கவனத்திற்கொண்ட “இராணுவ நுஸ்றாபற்றி” சிந்திக்க வேண்டும். இஸ்லாமிய அரசை நிறுவியதன் பின்னர் “குப்பார்களுடன் எவ்வாறான உறவை நபி (ஸல்) மேற்கொண்டு இஸ்லாத்தை முழுமையாக அமுல்படுத்தினார்கள்” என்பது பற்றி சிந்தித்து அதனை முழுமையாக அமுல்படுத்தும் “கிலாபா பற்றிய கோசத்தை” முன்வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகளினால் “மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியமைப்பினால் இஸ்லாம் முற்றாக அமுல்படுத்தப் படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளது” என்ற சிந்தனையை விதைத்து மக்கள் “ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சிமுறைக் கருவியினூடாக இஸ்லாம் அமுல்படுத்தப்பட முடியாது” என்ற செய்திகுறித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.

எகிப்தில் கிலாபா நிறுவப்படத் தேவையான நுஸ்றாவை கோரி இராணுவத்தை இஸ்லாம் அமுலாக்கப்படுவதிலும் பொது எதிரியினது அனைத்து இராணுவ முன்னெடுப்புகளை எதிர்கொள்வதிலும் பயன்படுத்த கோரும் ஹிஸ்புத் தஹ்ரீரின் மாற்றீட்டு வழிமுறைபற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான வெகுஜன அபிப்பிராயத்தை திரட்டுவதிலும் மக்கள் நம்பிக்கையூட்டப்படுவதிலும் பாரிய தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு எகிப்தில் நாளை ஒரு கிலாபா உருவாக்கப்படுமானால் முஸ்லிம் நாடுகளில் உள்ள இராணுவம் நுஸ்றாவை வழங்குவதற்கும் இவர்களது கரம் பலப்படுத்தப்படுவதற்குமான அரசியல் முன்னெடுப்பு தஃவாக்கள் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

கிலாபா அரசின் கீழ் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கடந்த வரலாற்றுச் சான்றுகிளில் இருந்து வழங்கி மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு “கிலாபா அரசில்” நம்பிக்கையூட்டி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்ய ஆக்கபல தஃவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

https://www.facebook.com/mohideen.lebbe

வருமுன் காக்க நினைக்கிறதா சியோனிசம் ?


தேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன் எனும் நாசகார கங்காணியும் அங்கு வரலாற்று நியாயங்களோடு குடியமர்த்தப் பட்டான் .

இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல்
தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .

மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத் சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாதேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன் எனும் நாசகார கங்காணியும் அங்கு வரலாற்று நியாயங்களோடு குடியமர்த்தப் பட்டான் .
இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல்
தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .

மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத் சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாம்.

Aug 24, 2013

முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

எகிப்தில் இஸ்லாம் நபிவழியல் மீள் எழுச்சி பெறுவதற்கான அடிப்படையான சிந்தனைகள்..! முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

இன்று எகிப்தில் இஸ்லாம் மீள் எழுச்சிபெற்று அமுலாக்கப்பட நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மதீனாவில் ஆட்சியை நிறுவினார்களோ அதுவே உங்கள் வழிமுறையாக இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதில் அமைய வேண்டும்.

இதற்கு எகிப்தியமக்களதும் முழு முஸ்லிம் உம்மத்தினதும் பணி என்ன என்பது பற்றி அவசியம் சிந்தித்து செயற்படவேண்டும்.

இதுகுறித்து பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையுள்ளது.

1.சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட முர்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட உழைக்கவேண்டும்.

2.அமெரிக்காவின் பின்னணியில் இருந்து இராணுவத்தினால் வரையப்பட்ட அனைத்து திட்டங்களையும் வீசியெறிய பாடுபடவேண்டும்.

3.அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட இரத்தம் சிந்தக் காரணமான இராணுவ ஆட்சியில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளை நோக்கியும் நகர கூடாது. மாற்றீடாக இஸ்லாமிய அடிப்படையில் ஆளப்படத் தேவையான கிலாபா அரசு வேண்டும் என்றும் மேற்கினது எந்த ஆட்சித் தலையீடும் தேவையில்லை என்றும் மக்கள் கோரவேண்டும்.

4.ஜனநாயக அரசியல் தந்திரோபாய விளையாட்டில் இருந்து முற்று முழுக்க விடுபட்டு, கிலாபாவை மாற்றீடாக கோரி மக்கள் பாடம் பெறவேண்டும். அல்ஜீரியாவிலும் பலஸ்தீனத்திலும் இருந்து இந்த ஜனநாயக அரசில் விளையாட்டில் மேற்கினது கை ஒங்கி ஏற்பட்ட அழிவுகளையும் இன்று எகிப்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களது இக்கட்டான நிலையையும் கருத்திற்கொண்டு பாடம் படிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியினை கருத்தில் கொள்ள வேண்டும்.
' ஒரு விசுவாசி ஒரே புற்றினுள் இருமுறை தீண்டப்படமாட்டான்'

5.மதச்சார்பற்ற ஜனநாயக வழிமுறையிலான அனைத்து கோஷங்களையும் நிராகரிப்பதுடன் மேற்கினாலும் அமெரிக்காவினாலும் முன்வைக்கப்படும் குறுகிய கால நலன்களுக்கு மசிந்து விடக்கூடாது.

6.கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகளினால் “மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியமைப்பினால் இஸ்லாம் முற்றாக அமுல்படுத்தப் படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளது” என்ற சிந்தனையை விதைத்து மக்கள் “ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சிமுறைக் கருவியினூடாக இஸ்லாம் அமுல்படுத்தப்பட முடியாது” என்ற செய்திகுறித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.

7.எகிப்தில் கிலாபா நிறுவப்படத் தேவையான நுஸ்றாவை கோரி இராணுவத்தை இஸ்லாம் அமுலாக்கப்படுவதிலும் பொது எதிரியினது அனைத்து இராணுவ முன்னெடுப்புகளை எதிர்கொள்வதிலும் பயன்படுத்த கோரும் ஹிஸ்புத் தஹ்ரீரின் மாற்றீட்டு வழிமுறைபற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான வெகுஜன அபிப்பிராயத்தை திரட்டுவதிலும் மக்கள் நம்பிக்கையூட்டப்படுவதிலும் பாரிய தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8.இவ்வாறு எகிப்தில் நாளை ஒரு கிலாபா உருவாக்கப்படுமானால் முஸ்லிம் நாடுகளில் உள்ள இராணுவம் நுஸ்றாவை வழங்குவதற்கும் இவர்களது கரம் பலப்படுத்தப்படுவதற்குமான அரசியல் முன்னெடுப்பு தஃவாக்கள் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

9.கிலாபா அரசின் கீழ் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கடந்த வரலாற்றுச் சான்றுகிளில் இருந்து வழங்கி மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு “கிலாபா அரசில்” நம்பிக்கையூட்டி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்ய ஆக்கபல தஃவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

10.அல்லாஹ்வினது உதவியும் வெற்றியும் வந்து கிலாபா நிறுவப்படும்வரை பொறுமையுடன் தொடர்ந்து தஃவா முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துன்பங்களையும் அவனது தீன் நிலைநாட்டப்படுவதற்காக சகித்துக்கொள்ள வேண்டும்.

மக்களாட்சி அல்லது ஜனநாயகம்

மேற்கினது ஆட்சியமைப்பாகிய “ஜனநாயகம்” எனும் கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை ஆளுகைநிலைக்கு கொண்டுவருவதில் தொடர்ந்தும் தோல்வி…!

நபிவழியிலான கிலாபா ஆட்சி முறைபற்றி சிந்தித்து செயற்படும் தக்க தருணத்தில் முஸ்லிம் உம்மத்..!

ஜனநாயகம் குறித்த மேற்கினது வரைவிலக்கணம்:
“மக்களுக்காக மக்களைக்கொண்டு மக்களே செய்யும் ஆட்சிதான் மக்களாட்சி அல்லது ஜனனாயகம் என்றழைக்கப்படுகிறது.”

இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களின் நலனுக்காக ஆட்சிசெய்கிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் ஆட்சி அதிகாரம் தேர்தல் நடாத்தும் அதிகாரம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆகிய அனைத்தும் மக்களுக்குரியது. இங்கு இறையான்மை எனும் உச்சகட்ட அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் விரும்பிய சட்டத்தை ஆக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.

ஆனால் இஸ்லாத்தில் இறையான்மை சரீஆவிற்குரியதாக இருப்பதுடன் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது. எனினும் ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய உரிமையை அல்லாஹ் உம்மாவுக்கு வழங்கியுள்ளான். ஆகவே உம்மாவின் சார்பாக ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்வதற்குரிய உரிமையை அல்லாஹ் உம்மாவிற்கு வழங்கியுள்ளான்.

இஸ்லாத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் உம்மாவிற்கு இல்லை.

இதனாலேயே ஜனனாயக ஆட்சியமைப்பு குப்ருடைய ஆட்சியமைப்பாகும். இதனால் இந்த ஆட்சியமைப்புக்கு அழைப்பு விடுப்பதும் குப்ருக்காக விடுக்கப்படும் அழைப்பாகும்.

இன்று முஸ்லிம் நாடுகளில் மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனனாயக வழிமுறையில் ஆட்சிக்காக அழைப்பு விடப்படுவதுடன் அல்லாஹ்வுடைய சட்டம் பகுதியாக அமுல்படுத்தப்படும் துர்பாக்கிய நிலையையும் நாம் காணலாம். இது மிகப்பெரிய ஆபத்தாகும்.

அத்துடன் ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சியமைப்பு கருவியை பயன்படுத்தி எதிர்கட்சியில் மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட ஏகபிரதிநிதிகளையும், குப்பார்களது பொம்மைகளையும் வைத்தபடி இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அழிவை சந்தித்த வரலாற்றை “அல்ஜீரியாவிலும்” “ பலஸ்தீனத்திலும்” கண்ட நாம் இன்று “எகிப்தில் “ அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்.

எனவே, “குப்பார்களது அரசியல் நலன்களுக்கும்” “ முதலாளிகளுக்கு தேவையான சட்டவாக்கத்திற்கும்” வடிமைக்கப்பட்ட ஒரு ஆட்சிமுறை யான “ஜனநாயக ஆட்சிமுறைக்” கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை ஆளுகைக்கு கொண்டுவருவது பற்றிய சிந்தனையை களைந்து “கிலாபா ஆட்சிமுறை” பற்றிய கோசத்தை வலுப்படுத்தி இராணுவ நுஸ்றாவை முஸ்லிம் நாடுகளில் பெற்று ஆட்சியமைக்க தஃவா முன்னெடுப்புக்கள் அமையவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

1300 வருடத்திற்கும் மேலாக உம்மத் ஆட்சிசெய்யப்பட்ட வழிமுறை மிகத்தெளிவாக உள்ளபோது இன்றைய முஸ்லிம் நாடுகளில் இஸ்லாம் பகுதியாக ஆட்சிசெய்யப்படக் காரணமான இந்த மேற்கினது ஆட்சிமுறை மாறி நபிவழியிலான கிலாபா உருவாக நாம் எமது சிந்தனைகளை மாற்றி அதற்காக உழைக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம். அதன் மூலமாகவே உம்மத்தினது மீட்சியும் எழுச்சியும் தங்கியுள்ளது. அதுவே இஸ்லாம் முழுமையான சகல துறைகளிலும் (பொருளியல் அரசியல் சமூகவியல் கல்வி மற்றும் வெளிநாட்டுக் கொள்கை) அமுலாக்கப்படத் தேவையான அதிகாரத்தை உம்மாவிற்கு வழங்கும்.

சிந்திப்போம்! ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

Aug 23, 2013

சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள். (ஒரு கணிப்பு.)




சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

பசர் அல் அசாதின் தரப்பு குறித்த ராக்கெட்டுகளை தான் ஏவவில்லை என மறுப்பதுடன் வேண்டுமானால் அதுபற்றி ஆய்வு செய்ய சர்வதேச சமூகத்தை வேண்டியுமுள்ளது .சம்பவம் இடம்பெற்ற பகுதி தலைநகர் டமஸ்கசின் மாகாண எல்லையான Ghouta என்ற பகுதியே

கடந்த புதன்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதும் இன்னும் சில சந்தேகங்களை ஏற்படுத்தி நிற்கின்றது .பொதுவாக சிரியக்களம் அதன் புரட்சிப் போராளிகளால் மரபு + கெரில்லா உத்தி கொண்ட போராட்ட முன்னெடுப்புகளை கொண்டே நகர்த்தப்பட்டுள்ளது .பொதுவாகவே ஊடுருவித் தாக்குதல் போன்ற இராணுவ உத்திகளை கெரில்லா அணிகள் இருளோடு கூடிய அதிகாலை நேரத்திலேயே மேற்கொள்வர் . இதன் போது எதிரி அணியின் பலம் வாய்ந்த பாதுகாப்பு நிலைகள் உடைக்கப் படுவதோடு எதிரி வான் வழி உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது போவதே அதற்கு காரணமாகும் .

பின்னர் சிதறிய எதிரிகளை 'கட் அவுட் ' போட்டு பிரித்து வேட்டையாடும் நிலை வரும்போது விடிந்து விடும் எதிரியோடு மிக நெருக்கமான சுடு தூரத்துக்குள் போராளிகள் வந்து விடுவர் இப்போதும் எதிரி ஆட்லறி உதவிகளையோ , வான் வழி உதவியையோ எதிர்பார்க்க முடியாது .அந்த வகையில் போராளிகள் குறித்த பகுதி ஊடாக டமஸ்கஸ் நகரை நெருங்கும் ஒரு பாரிய தாக்குதலை தொடுத்த வேலை சிரிய இராணுவத்தின் offensive line ,மற்றும் defensive line தாண்டிய நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் .(கிடைத்த தகவல்களின் படி டமஸ்கஸ் நகரம் சிரியப் போராளிகளால் முற்றுகையிடப் பட்டுள்ளது .)

பசர் அல் அசாதின் அண்மைய அறிக்கைகள் இன்னும் ஒரு விடயத்தை குறித்துக் காட்டுகின்றது .அது சர்வதேச தலையீட்டின் தேவையை இப்போது அவர் சிரியாவில் எதிர் பார்க்கிறார் என்பதே ஆகும். . கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இது சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவும் இதில் வேறு தலையீடுகள் தேவையில்லை என்று காட்டமாக கூறிய அவர் இப்போது சர்வதேச தலையீட்டை வேண்டி வருகிறார். எனவே இந்த சில்லரைக் கடவுளின் அல்லது முதலாளிக் கடவுள்களின் வேலையாக கூட இரசாயன ஆயுதப் பிரயோகம் இருக்கலாம்.

ஜனநாயக சிரியா மீதான புதிய package , U.N மற்றும் NATO இராணுவ சப்பாத்துக்கள் சிறிய மண்ணில் கால் பதிக்க அவசியம் வந்ததை காட்டும் நியாய அடையாளமாக கூட இந்த சம்பவம் இருக்கலாம். இஸ்ரேலின் தூக்குக் கயிற்றையும் , முதலாளித்துவத்தின் தோல்வி அரசியலையும் , உருவாக விட்டு பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்!? அழிந்து போவதை விட ஆழித்தாவது சற்று வாழ்வோம். எனும் நப்பாசை தான் இன்றைய சிரியா மற்றும் எகிப்து சொல்லும் செய்திகள் ஆகும்.

இரண்டு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு (Twin bombings rock mosques in Tripoli, Lebanon)

இரண்டு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு வெள்ளிக்கிழமை திரிபோலி வடக்கு லெபனானில் உள்ள மசூதிகள் அருகே சுற்றுப்புறங்களில் மூலம் பிளவுபட்ட.
குறைந்தது 29 பேர் இறந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு காயமுற்றனர், 







யார் இந்த சிசி?


இது ஒரு 'தாகூதிய' செருப்பு பற்றிய அறிமுகம் .

இப்னு சலூல் தொடங்கி இப்னு சபாவை ஊடறுத்து முஸ்தபா கமால் வரை இந்த முஸ்லீம் உம்மா துரோகத்தின் வடிவங்களை நிறையவே கண்டு வந்துள்ளது .குப்ரிய 'தாகூத்' களோடு கூட்டுச் சேர்ந்து அந்த எதிரி காலில் செருப்பாய் மாறி' பாசிசம்' புரியும் சிரியாவின்' அசாத்' எகிப்தின் 'சிசி' என இந்த துரோக வரலாறு இரத்த தாகத்தோடு முஸ்லீம் உம்மத்தை துரத்துகின்றது .அந்த வகையில் எகிப்தில் முஸ்லீம் இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியை பற்றிய ஒரு பதிவை கீழே தருகிறேன் .

யார் இந்த சிசி? - Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi. எகிப்தின் இராணுவ ஏதேச்சாதிகாரி. ரபா படுகொலைகளை புரிந்து வரலாற்றில் தனது பெயரையும் ஏரியல் ஷரோன், பொல்பொட்டின் வரிசையில் பதிந்தவன். 12 ஓகஸ்ட் 2012 முதல் எகிப்தின் இராணுவ தளபதியாகவும், ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் ஒரே நேரத்தில் மூன்று அதிகாரமிக்க பதவியை வகித்தவன்.

General Command and Staff Course-னை ஐக்கிய இராச்சியத்திலும், War Course மற்றும் Basic Infantry Course-னை அமெரிக்க குடியரசிலும் கற்று தேறியவன். சவுதி அரேபிய இராணுவ அகடமியிலும் கூட்டு கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவன். Master's Degree in Military Sciences இலும் Fellowship of the High War College இலும் தனது உயர் கற்கை நெறிகளை எகிப்தில் முடித்தவன். மொத்தத்தில் ஒரு மேற்கின் இராணுவ ஜெனரலிற்கு இருக்கும் அனைத்து அறிவுகளும், நுட்பங்களும், பண்புகளும் இவனிற்கு உண்டு. Defense diplomat ஆக சவுதி அரேபிய குடியரசில் பணியாற்றிய காலமுதல் சவுதி யின் ரோயல் இராணுவ தளபதிகளிற்கும் இவனிற்கும் நல்ல நெருக்கம். அது போலவே அமெரிக்க கற்கை நெறிகளின் போது அதே கற்கை நெறியை பூர்த்தி செய்ய வந்திருந்த யூத இஸ்ரேலிய ஜெனரல்களுடனும் மிக நெருக்கமான தோழமை இவனிற்கு உண்டு .

இவனது தாய் பிறப்பில் யூத பெண்மனி. இவனது தாய் மாமன் இஸ்ரேலிய பாராளுமன்ற அங்கத்தவர். முஹம்மத் ஹுஸைன் தன்தாவியை பதவி விலகும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ள இஹ்வானிய சாணாக்கியம் எல்-சிசியை கைகளை விரித்து செயற்பட அனுமதித்தது. இப்போது இரண்டாம் நாஸராக அவர்கள் சிசியை பற்றி கட்டுரை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஒரு தேசத்தில் ஒன்று பலத்த மக்கள் அதரவை கொண்ட தலைவன் இருப்பான். இல்லையென்றால் பலத்த இராணுவ மற்றும் முப்படை ஆதரவை கொண்ட தலைவன் இருப்பான். இதில் எது ஒன்றை கொண்டும் நிலையான அதிகாரத்தை செலுத்த முடியாது. இந்த இரண்டு சக்திகளும் இரண்டு கரங்களாக தொழிற்பட முனையுமானால் அவன் சர்வஅதிகாரம் மிக்க தலைவனாக உருவாவான். அடோல் ஹிட்லர் இவ்வாறே உருவானவன். பிடல் கஸ்ரோவும் இராணுவத்தையும் மக்களையும் தம் இரு கரங்களாக கொண்டவர். சாதம் ஹுஸைனும் மக்கள் இராணுவம் இரண்டையும் லாவகமான கையாளும் வித்தை தெரிந்தவர். இப்படி சில தேசங்களில் இரண்டு பலமிக்க சக்திகளையும் தம் வசம் கொண்டுள்ளவர்கள் தனித்துவமிக்க தலைவர்களாக உருவாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்பிற்கு இராணுவ பலம் இருந்த போதும் மக்கள் பலம் இருக்கவில்லை. அதனால் அவர் மண் கவ்வினார். மொஹமட் முர்ஸியிடம் மக்கள் பலம் இருந்த அளவிற்கு இராணுவ பலம் இருக்கவில்லை. அதனை கையாளும் வியூகங்களும் தெரியவில்லை. இதனை ஜெனரல் சிசி நன்குணர்ந்துள்ளான். அதனாலேயே அவன் இராணுவத்தில் தன் நிலையை வலுப்படுத்திய பின் மிலிட்டரி கூவை ஆரம்பித்தான். அப்போதும் கூட அவனிற்கு மக்கள் பலம் பற்றிய சந்தேகம் இருந்தது.

மதச்சார்பற்றவர்கள், மேற்கத்தைய மோகமிக்க சடவாதிகள், இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்கள், கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் என பல தரத்தவரையும் ஒன்று திரட்டி சவுதி அரேபியா வழங்கிய பணத்தை தண்ணீரை இறைந்து, ஒரு பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணையத்தான். இந்த இஹ்வானிய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களால் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டும் தன் வசம் வந்த நிலையிலேயே அவன் ரபாவின் படுகொலைகளை மேற்கொண்டான். அவனது கொலை வெறிச்செயலை இரு புனித நகரங்களின் காவலர் என தன்னை புகழ்ந்து கொள்ளும் சவுதி அரேபிய தேசத்து அரசரே ஆதரிக்கும் அளவிற்கு அவனது அரசியல் செயற்பாடுகள் அகன்றுள்ளன.

தன்னை ஒரு சிறந்த மனிதாபிமானமிக்க, தராள பொருளாதார கொள்கைவாதியாகவும் இவன் காட்டிக்கொள்ள தவறிவில்லை. தன்னை ஒரு லிபரல் தலைவனாக இவன் எப்போதும் வெளிக்காட்டி வந்துள்ளான். இவன் பேஸ்-புக்கில் ( https://www.facebook.com/Egyptian.Defense.Minister ) இதற்காக மிக சிரத்தையுடன் பல பதிவுகளை வெளியிட்டு வெற்றிகரமாக மக்களை தன் கருத்துக்கள் சென்றடையும் வண்ணம் செயற்பட்டுள்ளான். இன்று இன்னொரு நாஸர்பாதி, கமால் பாஷா பாதி கலந்து செய்த கலவையாக ஆளவந்தான் சிசி உருவாகியுள்ளான்.

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_23.html?spref=fb

"சகோதரச்சிந்தனையால்"


"சகோதரச்சிந்தனையால்" இஸ்லாமிய அகீதாவின் பிணைப்பால் இணைவோம்! இஸ்லாம் மீள் எச்சிபெற ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

இன்று முஸ்லிம் உம்மத் வேண்டி நிற்கும் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனை! களையவேண்டிய சிந்தனை தேசியவாதச்சிந்தனை!

இன்று முஸ்லிம் உம்மத் உணரவேண்டிய அடிப்படைச் சிந்தனை சகோதரத்துவச் சிந்தனையாகும்!

ஆனால் இன்றைய முஸ்லிம் உம்மத் துண்டாடப்பட்டிருப்பதும், காலனித்துவ வாதிகளது நலனுக்கு உம்மத்தை பலவீனப்படுத்த பயன் படுத்ப்பட்டிருப்பதுமான சிந்தனை தேசியவாதமாகும்.

இன்று தேசிய எல்லைக்குள் சிந்திக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கினது முகவர்களாக தொழிற்பட்டு முஸ்லிம்களை கறுவருக்க வழிவகுப்பதுடன் மேற்கினது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக தொழிற்படுவதனை நாம் காணலாம்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சியின் எதிரிகளாக தொழிற்படுகிறார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீள நாம் தேசத்திற்கு அப்பால் இணையவேண்டிய தருணத்தில் உள்ளோம்!

எமது பெறுமதிமிக்க முஸ்லிம் இராணுவம் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் எனும் கயவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு யகிப்திலும் சிரியாவிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை கொன்று குவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு வித்திட்டுள்ள இந்த தேசியவாதச் சிந்தனையை நாம் களைந்து சகோதரச் சிந்தனையை வலுப்படுத்துவேண்டும்.

இன்று முஸ்லிகளிடம் விதைக்கப்பட்டுள்ள மதஒதுக்கல் சிந்தனை மற்றும் ஜனநாயவழிமுறையிலான இஸ்லாமிய ஆட்சிமுறைபற்றிய பிழையான சிந்தனைகளைக் களைவோம். இஸ்லாத்திற்கு பலம்சேர்போம். சிந்தனைத் தெளிவைப் பெறுவோம்!

அத்துடன் முஸ்லிம் உம்மத்தை இந்த இழிநிலையில் இருந்து விடுவிக்கும் இஸ்லாமிய அரசாகிய கிலபாவின் மீள் உருவாக்கம் பற்றி சிந்தித்து ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்

“வாழ்க்கைச் சித்தாந்தமாக”!!!!

இஸ்லாம் வெறுமனே ஆத்மீகத்தை போதிக்கும் மதமல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான செய்தியாக, சம்பூரணமான வாழ்க்கைத்திட்டமாக இஸ்லாம் விளங்குகிறது.

மனிதனது வாழ்வியல் விவகாரங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் அது நிர்ணயம் செய்கிறது. அனைத்து வாழ்வியல் விவகாரங்களில் எழும் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.

மேலும் படைப்பாளனான அல்லாஹ்வுடன் மனிதன் கொண்டுள்ள உறவு, மனிதன் தனக்குத் தான்னே கொண்டுள்ள உறவு, மனிதன் இதர மனிதர்களுடன் கொண்டுள்ள அனைத்து வகையான உறவுகளையும் அனைத்துக் காலங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

இஸ்லாம் தனித்தன்மை கொண்ட தீர்க்கமான கருத்துக்களை கொண்டிருப்பதுடன் அவற்றில் இருந்து தனித்தன்மையான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

இக்கலாச்சாரம் வாழ்வியல் கண்ணோட்டம் குறித்து கோடிட்டுக் காட்டுவதுடன் அக்கலாச்சார வட்டத்தினுள் உறுதியாக நிலைப்படுத்துகிறது.

அத்துடன் தனித்துவம் கொண்ட சிந்தனைகளையும் ஹலால் ஹறாம் அடிப்படையிலான வாழ்வியல் கண்ணோட்டத்தையும் தனித்துவம் கொண்ட வாழ்க்கை முறையையும் இஸ்லாமிய ஷரீஆ உருவாக்கியுள்ளது.

இஸ்லாத்தின் செய்தி ஒரு முழுமையான செயலாக்க அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆட்சியமைப்பு, பொருளாதாரம், சமூகம், கல்வி, உள்நாட்டு விவகாரம், வெளிநாட்டு விவகாரம் தொடர்பான அரசின் கொள்கைகளையும் அரசிற்கும் சமூகத்திற்கும் மத்தியில் உள்ள உறவுகளையும், அரசிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளையும், போர் மற்றும் அமைதி ஆகியவற்றில் ஏனைய அரசுகள் மற்றும் சமூகங்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகளையும் நிர்ணயித்துள்ள ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

இவ்வாழ்க்கைச் சித்தாந்தத்தை அமுல்படுத்தும் இஸ்லாமிய அரசே கிலாபத்து அரசாகும்.

ஆனால் அத்தகைய இஸ்லாமிய அரசை இன்று முஸ்லிம் உம்மத் இழந்து நிற்கிறுது. அதனை மீள உருவாக்க உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமிதும் கடமையாகும்.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இஸ்லாம் பற்றிய அடிப்படையை “மாற்றீட்டுச் சித்தாந்தமாக”, “மாற்றீட்டு வாழ்க்கை முறையாக” பெரும்பான்மை குப்ர் சமூகத்திற்கு முன்வைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.

இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களது வாழ்கை முறைக்கெதிராகவும் முன்னெடுக்கப்படும் சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தள்ளப்பட்டுள்ளது என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் பொறுப்பு பற்றி சிந்தித்து செயற்படவேண்டும்.

இதனை நிரந்தமாக பேணும் ஒரு இஸ்லாமிய உலக தலைமையும் கிலாபாவினது மீள் உருவாக்கும் முஸ்லிம் நாடுகளில் உருவாக பங்களிப்புச் செய்யவேண்டும். அதற்கான தஃவாக்களை முன்னெடுக்க வேண்டும்.

இஸ்லாத்தை வெறுமனே ஒரு மதமாக பார்க்கும் சிந்தனைப்போக்கை மாற்றி அது வாழ்வில் எழும் அனைத்து விடயங்களுக்குமான தீர்வை வழங்கும் ஒரு “வாழ்க்கைச் சித்தாந்தமாக” முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கி தீனுல் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட உலக தலைமைத்துவம் மீள உலகில் உருவாகி மனித சமூகம் நேர்வழிப்பட, நிம்மதியடைய தமது தஃவாபற்றி பரந்து சிந்திக்க வேண்டும்.

நாம் வெறும் ஆத்மீகதிருப்தியோடு நின்றுவிடும் மனப்பாங்கை மாற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அருளாக அனுப்பப்பட்ட நோக்கத்தை உணர்ந்து இறுதி மனிதன் வரைக்கும் அல்லாஹ்வுடை தீன் சென்றடைவதற்கான இஸ்லாமிய ஆட்சிபற்றி சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

டமஸ்கஸ்ஸில் சிரிய இராணுவம் 'விஷவாயுவினை' உபயோகித்து தாக்குதல் !! 1300 பேரிற்கு அதிகமானவர்கள் பலி.


டமஸ்கஸ்ஸில் தம் பரம வைரிகள் நுழைவதை தாங்க முடியாமல் பஸர் அல் அஸாதின் இராணுவம் முஸ்லிம் போராளிகள் தாக்குதல்களை மேற்கொள்ளும் கள முனைகள் நோக்கி விஷ வாயு குண்டுகளை கொண்டு தாக்கியுள்ளது. கடந்த புதன்கிழமை (21 / இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டமஸ்கஸ் மாகாணத்தின் Ghouta மாவட்டத்திலேயே இந்த நச்சு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகாலையில் நடாத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பரிதாபகரமாக தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

மக்கள் நெருக்கம் மிக்க Jobar பகுதியில் இந்த குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. டமஸ்கஸ்ஸிற்கு 03 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஷவாயு குண்டுகளை ஏந்திய முனைகளை ரொக்கட்களில் பொருத்தியே இந்த தாக்குதல் நிகழ்த்ப்பட்டுள்ளது.

Tahrir al-Sham Brigade அமைப்பினரின் தாக்குதல் அணியான Fadi al-Shami-ஐ இலக்கு வைத்தே இந்த குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. Jobar-Zamalka பகுதிகளை தம் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக முன்னேறிய போதே அதிகாலை 02.30-03.00 மணியளவில் இந்த குண்டுகள் ரொக்கெட்கள் மூலம் ஏவப்பட்டுள்ளன. இவை அப்பட்டமான இரசாயன தாக்குதல்கள் என்பது உறுதியாகியுள்ள போதும் சிரிய அதனை நிராகரித்துள்ளதுடன் தாங்கள் எந்த விஷ குண்டு தாக்குதல்களையும் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது நிகழ்த்தவில்லை என உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த கொலைகார ஆட்சியாளர்களிற்கு ஆதரவாக ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியாவில் இரசாயன தாக்குதல்கள் நிகழ்த்தப்படவேயில்லை என கூறியுள்ளது.

1988-ல் சதாம் ஹுஸைன் குர்திஷ் போராளிகள் மேல் நடாத்திய இரசாயன ஏவுகனைத் தாக்குதல்களில் பல்லாயிரம் குர்திஷ் பொது மக்கள் பலியாகினர். இப்போது அதனை விடவும் மோசமான தாக்குதல்களை சிரிய ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். அண்ணலவாக 1300 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 1000 இற்கும் அதிகமானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், சிறுவர் சிறுமிகளாவர்.

“பாசிஸம் தன் தோல்வி தன்னை நெருங்கும் போது முதலில் தன்னை சூழ இருப்பவர்களையும் அழிக்க முற்படும்” என்பதே விதி.

டமஸ்கஸ் மாகாணம் சிரிய ஆட்சியாளர்கள் வசம் இருப்பதனால் இந்த படுகொலைகள் எகிப்திய படுகொலைகள் போல் ஊடகங்களால் வெளிக்கொணர முடியாத நிலையே இன்றும் உள்ளது.