Showing posts with label Documentaries. Show all posts
Showing posts with label Documentaries. Show all posts

Jun 1, 2014

பூகோளமே உறங்கி விட்டதே !!!!


அவல அரங்கேற்றத்திற்கு நியாயக்
கவிபாடும்
உன் ஊடகத் தாலாட்டில் உலகம் பூரிக்க
நான் பொய்ப்பிக்கப் பட்டு விட்டேன் !
ஓலங்களை இராகமாயும்
குருதியை பாணமாயும்
அழகாய் நீ மாற்றிப் பருக்கிய போது உன்
ஏகாதிபத்திய மாயத் தொட்டிலில்
பூகோளமே உறங்கி விட்டதே !
உன் கசாப்புக்
கடைக்கு எம்மை அடிமாடுகளாக்கி விட்டு
முதலைக் கண்ணீரோடு நீ பூசும் சமாதானச்சாயம்
உன் வழமையான வியாபாரம் தான் !
சதிகளின் மீது நீ சரித்திரம்
எழுதுவது எமக்கு
முதற் தடவை அல்லதான் ! அதை
விதியாக்கிக் கொள்ளும் முட்டாள்
தனத்தில்
நாமிருக்கும் வரை உன்
பாடு கொண்டாட்டம் தான் !

Sep 20, 2013

ஹிஸ்புத் தஹ்ரீர் வெளியிட்ட உள்ளங்களை பிரட்டிப்போடும் விவரணப்படம் - (சிறப்பு பதிவு)

உலகில் இஸ்லாமிய ஆட்சி பற்றி கிலாபாவின் உருவாக்கம் பற்றி பேசும் இரண்டு அமைப்புக்களில் Hizb ut Tahrir முதன்மையானது. ஒரு மெய் சிலிர்க்கும் சிரியா பற்றிய விவரணப்படத்தை “ஹிஸ்புத் தஹ்ரீர்”அமைப்பின் மீடியா பிரிவினர் உருவாக்கியுள்ளனர். சிரியா பற்றி உலகலாவிய முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அந்த விவரணப்படம் வெளியாகியுள்ளது.

Aug 24, 2013

மக்களாட்சி அல்லது ஜனநாயகம்

மேற்கினது ஆட்சியமைப்பாகிய “ஜனநாயகம்” எனும் கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை ஆளுகைநிலைக்கு கொண்டுவருவதில் தொடர்ந்தும் தோல்வி…!

நபிவழியிலான கிலாபா ஆட்சி முறைபற்றி சிந்தித்து செயற்படும் தக்க தருணத்தில் முஸ்லிம் உம்மத்..!

ஜனநாயகம் குறித்த மேற்கினது வரைவிலக்கணம்:
“மக்களுக்காக மக்களைக்கொண்டு மக்களே செய்யும் ஆட்சிதான் மக்களாட்சி அல்லது ஜனனாயகம் என்றழைக்கப்படுகிறது.”

இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களின் நலனுக்காக ஆட்சிசெய்கிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் ஆட்சி அதிகாரம் தேர்தல் நடாத்தும் அதிகாரம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆகிய அனைத்தும் மக்களுக்குரியது. இங்கு இறையான்மை எனும் உச்சகட்ட அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் விரும்பிய சட்டத்தை ஆக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.

ஆனால் இஸ்லாத்தில் இறையான்மை சரீஆவிற்குரியதாக இருப்பதுடன் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது. எனினும் ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய உரிமையை அல்லாஹ் உம்மாவுக்கு வழங்கியுள்ளான். ஆகவே உம்மாவின் சார்பாக ஆட்சி செய்வதற்கும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்வதற்குரிய உரிமையை அல்லாஹ் உம்மாவிற்கு வழங்கியுள்ளான்.

இஸ்லாத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் உம்மாவிற்கு இல்லை.

இதனாலேயே ஜனனாயக ஆட்சியமைப்பு குப்ருடைய ஆட்சியமைப்பாகும். இதனால் இந்த ஆட்சியமைப்புக்கு அழைப்பு விடுப்பதும் குப்ருக்காக விடுக்கப்படும் அழைப்பாகும்.

இன்று முஸ்லிம் நாடுகளில் மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனனாயக வழிமுறையில் ஆட்சிக்காக அழைப்பு விடப்படுவதுடன் அல்லாஹ்வுடைய சட்டம் பகுதியாக அமுல்படுத்தப்படும் துர்பாக்கிய நிலையையும் நாம் காணலாம். இது மிகப்பெரிய ஆபத்தாகும்.

அத்துடன் ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சியமைப்பு கருவியை பயன்படுத்தி எதிர்கட்சியில் மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட ஏகபிரதிநிதிகளையும், குப்பார்களது பொம்மைகளையும் வைத்தபடி இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அழிவை சந்தித்த வரலாற்றை “அல்ஜீரியாவிலும்” “ பலஸ்தீனத்திலும்” கண்ட நாம் இன்று “எகிப்தில் “ அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்.

எனவே, “குப்பார்களது அரசியல் நலன்களுக்கும்” “ முதலாளிகளுக்கு தேவையான சட்டவாக்கத்திற்கும்” வடிமைக்கப்பட்ட ஒரு ஆட்சிமுறை யான “ஜனநாயக ஆட்சிமுறைக்” கருவியை பயன்படுத்தி இஸ்லாத்தை ஆளுகைக்கு கொண்டுவருவது பற்றிய சிந்தனையை களைந்து “கிலாபா ஆட்சிமுறை” பற்றிய கோசத்தை வலுப்படுத்தி இராணுவ நுஸ்றாவை முஸ்லிம் நாடுகளில் பெற்று ஆட்சியமைக்க தஃவா முன்னெடுப்புக்கள் அமையவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

1300 வருடத்திற்கும் மேலாக உம்மத் ஆட்சிசெய்யப்பட்ட வழிமுறை மிகத்தெளிவாக உள்ளபோது இன்றைய முஸ்லிம் நாடுகளில் இஸ்லாம் பகுதியாக ஆட்சிசெய்யப்படக் காரணமான இந்த மேற்கினது ஆட்சிமுறை மாறி நபிவழியிலான கிலாபா உருவாக நாம் எமது சிந்தனைகளை மாற்றி அதற்காக உழைக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம். அதன் மூலமாகவே உம்மத்தினது மீட்சியும் எழுச்சியும் தங்கியுள்ளது. அதுவே இஸ்லாம் முழுமையான சகல துறைகளிலும் (பொருளியல் அரசியல் சமூகவியல் கல்வி மற்றும் வெளிநாட்டுக் கொள்கை) அமுலாக்கப்படத் தேவையான அதிகாரத்தை உம்மாவிற்கு வழங்கும்.

சிந்திப்போம்! ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

Jun 9, 2011

BEFORE WE_THE MUSILM_WERE DIVIED


Documentary on Hizb ut Tahrir


O Muslims For how much longer


The Ulema' and the struggle for the Khilafah through history and in our times


Islam and Khilafah - Khilafah Conference 2007


Islam, The global liberation of Women


Strengths of the Muslim Ummah


Struggle for Islam in the West [HQ]


The Need For Political Unity in the Muslim world Documentary


The Rise of Islam A brief presentation


Fall of Capitalism brief snapshot


Khilafah is a vital issue - Khilafah Conference 2007


Destruction of the khilafah