Apr 28, 2014

தாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …?

தாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனையாகும். இவ் எண்ணக்கருவைப் பயன்படுத்தியே சாம்ராஜியங்கள் வீழ்த்தப்பட்டது. அந்த வகையில் உதுமானிய கிலாபாவின் வீழ்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கிய ஒரு அடிப்படைச் சிந்தனைதான் இந்த தாராண்மைவாதச் சிந்தனை. இன்று 21 ஆம் நூற்...றாண்டில் இஸ்லாமிய எழுச்சியை தடைசெய்யும் ஒரு கருவியாக மேற்கினால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக உள்ளது என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரக் கடமைப்பட்டுள்ளனர்.

Liberalism என்பது Freedom எனும் கவர்ச்சியான வார்த்தையினாலும்அழைக்கப்படும். இது சாதாரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு கிடைக்கும் “சுதந்திரம்” என்று பார்க்கும் ஒரு பார்வையாகவும் உள்ளது.

சுதந்திரம் என்பது.. மனிதன் தனது அடிமைத்தனத்தில் இருந்து கிடைக்கும் விடுதலையாகவும்; இராணுவ அடக்கு முறையில் இருந்து கிடைக்கும் சுதந்திரமாகவும் கருதினாலும், அரசியலில் மனிதன் தனக்கான “இறைமையை” அதிகார வர்க்கத்திற்கு வழங்கி மீண்டும் அடிமையாகிவிடுகிறான்.

உண்மையில் “இறைமை (Sovereignty)” என்பது மனிதனுக்கு இருக்க முடியாது. ஏன் எனில் அவன் பக்கச்சார்பான சட்டங்களை இயற்றுபவனாக இருக்கிறான். அதிலும் மனிதன் தமக்குத் தேவையான சட்டத்தை ஆக்குவதற்கு அதிகார வர்க்கத்திடம் உரிய ஆணையை ஒப்படைப்பதால் மனிதன் அடிப்படையில் சுரண்டலுக்குட்படுத்தப்படுகிறான். மீண்டும் அடிமையாக நடாத்தப்படுவதற்கு ஆணையை வழங்குகிறான்.

மாறாக இறையாண்மை என்பது மனிதனைப்படைத்த இறைவனுக்குரியாதாக இருக்கும் போதுதான் மனிதன் நீதியாக நடாத்தப்பட வழியேற்படுவதுடன் முதலாளித்துவ மற்றும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப்பட முடியும். அத்துடன் வல்ல நாயன் மாத்திரமே மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை நன்கறிந்தவனாகவும் பூரண அறிவுடையவனாகவும் இருக்கிறான்.

தாராண்மைவாதம் மதங்களுக்கு முற்றிலும் முறணான எண்ணக்கரு. ஏனெனில் அது மனிதன் மனிதனுக்கு முற்றிலும் கீழ்படியவேண்டும் என்று கோருவதுடன் இறைவனுக்கு கீழ்படிவதனை முற்றிலும் மறுக்கிறது. அத்துடன் மனிதன் மனோ இச்சையின்படி தான்தோன்றித்தனமாக தனிமனித சுதந்திரம் எனும் எண்ணக்கருவினூடகவும் மதச்சுதந்திரம் எனும் எண்ணக்கருவினூடாகவும் வாழவழிசமைக்கிறது. இது முற்றிலும் மதத்தை புறக்கணிக்கும் ஒரு வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்தும் சிந்தனையாகும்.

இதனாலேயே ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் இறைவன் விதித்தபடி ஒழுகிடுவதனை வெறுக்கிறது. அதனை விமர்சிக்கிறது. அவனை “கற்காலத்தவன்” எனக் குற்றம்சாட்டுகிறது. அத்துடன் இஸ்லாம் உலகில் மீள் எழச்சிபெற்றுவிடக் கூடாது என்பதனை தடுக்கும் மேற்கினது வாழ்வியல் ஒழுங்கினது ஒரு கருவியாக இன்று முஸ்லிம் நாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு “முஸ்லிமினது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை” மிக மோசமாக பாதிப்பதுடன் அவனை இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்தும் ஒரு கருவியாக தொழிற்படுகிறது.

இவ்வுண்மைகளை உணர்வோம்! இதன் பேராபத்தை உணர்வோம்! எமது இஸ்லாமிய அகீதாவையும் அதன்மீது நிறுவப்பட்டுள்ள வாழ்வொழுங்கையும் அறிந்தொழுக முற்படுவோம். இஸ்லாம் மீண்டும் மீள்எழுச்சிபெற உழைப்போம்! மேற்கினது சிந்தனைத் தாக்கத்தில் இருந்து எமது உம்மத்தை பாதுகாப்போம்!

Apr 17, 2014

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 3


(ஈ) ஆதிக்க செலுத்தத் தேவையான பண்புகளும், அதிகாரமும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளன. அப்பண்புகளுக்கு பொருத்தமானவர் உலகில் வேறு ஏவரும் கிடையாது. அவனே அனைவரையும் மிகைத்தவன்; அனைத்தையும் அறிந்தவன்; மாசற்றவன்; குற்றமற்றவன்; அனைவரையும் கண்காணிப்பவன்; அபயம் அளிப்பவன்; உயிருள்ள, உயிரற்ற எல்லாப் பொருட்களும் அவனுக்கு கட்டுப்பாடு உள்ளன; நன்மையும் தீமையும் அவன் கட்டுப்பாட்டில் தாம் உள்ளன; அவனைத் தவிர அல்லது அவன் அனுமதியின்றி யாரும், யாருக்கும் நன்மையயோ, தீமையயோ செய்திட முடியாது.

அவன் அனுமதியின்றி யாரும் அவன் முன்னே சிபாரிசு செய்திட இயலாது. அவன் யாரை நாடுகின்றானோ அவனைப் பிடிப்பான். நாடியவரை விட்டுவிடுவான். அவனை எதிரித்து எங்கும் “அப்பில்” பண்ண முடியாது. அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், அனைவரும் அவனுக்கு கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும். அவன் நினைத்தது நடக்கும். நடப்பதை தடுத்திட யாராலும் முடியாது. ஆதிக்க செலுத்த தேவையான இத்தனை தகுதிகளும் அல்லாஹ்விதம்தான் உள்ளன. இவற்றில் யாரும் அவனுக்கு இணையாக முடியாது.

6:18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

67:1. எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

2:83.ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

10:65. (நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

48:11“அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்” எனக் கூறும்.

10:107. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.

2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

18:26. “அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.

72:22. கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

23:88. “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.

85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.

5:1. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.

13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

21:23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.

18:27. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.

95:8. அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

7:128. நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.

( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Apr 15, 2014

தேர்தல் திருவிழாவும் தேர் இழுக்கும் முஸ்லீம்களும் !!




நேற்றுவரை குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு திடீரென கற்கள் கொட்டப் படுகின்றது !செப்பனிட போகிறார்களாம் . ஆளும் அதிகாரத்தின் பாசப்பார்வையில் பக்காவான சுயநலம் .இது தேர்தல் காலம் அல்லவா ! வாக்கு வேட்டைக்காகாக நடத்தும் நாடக அரசியல் அது .

மக்களுக்காக அதிகாரமா அதிகாரத்துக்காக மக்களா? இந்தக் கேள்வியை புரிந்த நிலையிலேயே இன்றைய அரசியல் நோக்கப்பட வேண்டும் . சுய தேவைக்காக சேவை என்றால் அது வியாபாரம் . உரிமைகளை எதோ சலுகை போல் காட்டி நூற்றுக்கு தொண்ணூறை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் களவாணித் தனமே இன்றைய அரசியல் .

சந்தர்ப்பதிட்கு சேறு பூசிவிட்டு குட்டிக்கரணங்கள் அடித்து கட்சி மாறி சாக்கடையை சந்தனமாக்கி பேசும் (அ)யோக்கிய தலைவர்களை நம்பி அடிமாடாய் உழைக்கும் முஸ்லீம் உம்மத்தின் உதிரங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அது பட்ட மரத்தில் ஏறி பழம் பறிக்க முடியாது எனும் உண்மையே ஆகும் . சந்தனமாக இஸ்லாம் இருக்க சாக்கடையை நம்பிய வாழ்வு எதற்கு !? குப்ரை நம்பினால் உனக்கு இம்மையும் ஏமாற்றமே ,மறுமையும் ஏமாற்றமே .

நிர்வாண நியாயங்களில் மஸ்ஜிதில் தேசியக் கொடியும்





பறக்க விட்டோம்!! அவமானங்கள்

சாணாக்கியமாக மொழி பெயர்க்கப் பட

கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆமா சாமிகளாகி !

அல்லாஹ்வை 'ரிஸவ்வில்' ஒழித்தும்

வைத்தோம்! கொல்லப் படுவோம் என்பதட்காக

எம் உயிரினும் மேலான அகீதாவை

தேசியப் படுகுழியில் போட்டு எம் இமாம்கள்

இரகசியமாக இகாமத் சொல்லச் சொன்னார்கள்!

குனூத் ஓதி குப்ரை வெற்றி கொள்வோம்!

என்ற ஆச்சரியமான 'தவக்குலில் ' !!

இப்போது புதிய வார்ப்பாக பிசாசை வெற்றி கொள்ள

பேயோடு கூட்டுச் சேர சொல்கிறார்கள்!!

குப்ரிய 'வைரஸ்' சிதறும் இந்த வார்த்தைகளில்

எம் கொள்கை கொலைகாரன் சிறுபான்மை

வாழ்வென்ற வாளோடு எம்மீது பாய்கிறான்!

கழுத்தைக் கொடுப்பாதா எம் முடிவு !??


courtesy: khandaqkalam.blogspot.com

Apr 11, 2014

சே குவாரா முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறான் !?




(இன்று பல முஸ்லீம் இளைஞ்சர்கள் புரிந்தும் புரியாமல் இந்த சே குவரா என்ற கம்பியூனிச புரட்சியாளனின் புகைப்படத்தை தமது 3 வீலர்களில் அலங்காரமாக்கி யுள்ளனர் . புரட்சி என்றவுடன் சே யும் கியூபாவும் பொலிவியாவும் பலரால் உணரப்படுவது போல அல்லாஹ்வின் தூதரும் (ஸல் ) மதீனாவும் முஸ் அப் இப்னு உமைரும் (ரலி ) நினைவுக்கு வருவதில்லை .இந்தக் கவலை ஒருபுறம் இருக்கின்றது .
ஆன்மீகப் பெறுமானத்தோடு மட்டும் பார்க்கப்படும் மத வியாக்கியானத்தினுள் முஸ்லீம்களுக்கு இஸ்லாம் பயிற்றபட்டிருப்பதால் முதலாளித்துவம் கொடுத்த அந்த மாய உலகில் எதோ முஸ்லிமாக இஸ்லாத்தை சித்தாந்தப் பெறுமதி அற்று ஜீரணிப்பதில் மட்டுமே உம்மத் கவலை கொள்கின்றது .

ஆனால் முதலாளித்துவ மேற்கு தன்னை எதிரியாக பார்த்த ஒரு கம்யூனிச சித்தாந்தப் போராளியை தனது அரசியலுக்காக எவ்வாறு இன்று பிரயோசனப் படுத்தியுள்ளது !?என்பதை நாம் புரிந்து கொண்டால் மேற்கு எதிர்பார்க்கும் வடிவத்தில் இஸ்லாத்தை வரையத் துடிக்கும் முஸ்லீம்கள் முதலாளித்துவ கபடத்தில் அகப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை அப்பட்டமாகிறது .

அந்த வரிசையில் இலங்கையின் ஜே .வி .பி எனும் கம்யூனிச சித்தாந்திகள் ,முதலாளித்துவ எகாதிபத்தியத்துக்குள் கரைந்த நிலையில் ஒரு முரண்பாட்டு ஜனநாயகத்தை பேசிச் செல்வதன் அரசியல் தோல்வி பல முஸ்லீம்களால் உணரப்படுவதில்லை . இத்தகு தவறுகளை உணர்த்த இந்த கீழ்வரும் பதிவு உதவலாம் . இன்ஷா அல்லாஹ். )

“சே குவரா” என்ற பேயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு என்ன வரும்? அழுக்கு துணிகள் உடுத்தி, லேசான தாடியுடன்,கண்களில் புன்னகையுடன், துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞன் நினைவுக்கு வருவன். சேகுவார என்ற இந்த பெயரும், அந்த உருவமும், புரட்சி என்பதற்கான குறியீடு.

சேகுவரா படத்தை டிசர்டில் போட்டுகொண்டால் அது போராளியின் அடையாளம். ”ஆம் நான் ஒரு போராளி” என்று உலகிற்கு உணர்த்த ஒரே வழி சேகுவரா டிசர்ட். நான் மற்றவரிடமிருந்து மாறுபட்டவன் என்று காட்ட பலர் டீசர்டில் சேகுவரவையும், கையில் பொலிவியன் டைரி எனும் புத்த்கத்தையும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.

சே பிறப்பால் ஒரு அர்ஜென்டினன், ஆனால் அவன் போராடியது க்யுபா விடுதலைக்காக. நடுவில் காங்கோவில் போரடியுள்ளான். தனக்கு கொடுக்கபட்ட மந்திரி பதவியை துறந்து, பொலியவியவிற்கு சென்று புரட்சி செய்ய முனைந்தவன். அங்கே துரோகிகளால் காட்டிகொடுக்கபட்டு தந்திரமாக சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் இறப்பு பொலியாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை!

ஒரு காலத்தில் தான் மூர்கமாக எதிர்த்த அமெரிக்க, இப்பொழுது சேகுவரவை புரட்சியளானாக காட்டுவதை பார்க்கமல் சென்றுவிட்டான். தன்னை கொலைகாரன், காமுகன், காட்டுமிரண்டி என்று உயிருடன் இருக்கும் போது விளித்த பல முதலாளித்துவ நாடுகள் இன்று அவனை புரட்சிகாரனாக சித்தரித்துக்கொண்டிருக்கிறது.

கொஞ்சம் இருங்கள்.

ஏன் சே குவரவை இன்று மொத்த முதலாளித்துவ நாடுகளும் கொண்டாடுகின்றன? அவன் முதலாளித்துவ எதிரி, சே ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவன்,அதை அழிக்க நினைத்த்வன், அதற்காக சாகும் வரை போராடியவன். ஆனால் அவனை இன்று ஏகாதிபத்தியம் கொண்டாடுகிறது அல்லது கொண்டாட அனுமதிக்கிறது. அவன் கம்யூனிஸ்ட் வேறு.

இதே அமெரிக்கா கம்யுனிஸ்ட்கள் என்று பயந்து சிகப்பு டை கட்டியவர்களை கூட சிறையில் போட்டு சித்திரவதை செய்திருக்கிறது. ஆனால் சேகுவரவை இன்று புரட்சிகாரனாக சித்திரிக்கும் வேலையையும் செய்கிறது? என்ன அதிசியம்

கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் ஐநாவில் இலங்கைக்கு எதிரான காகித தீர்மானத்தை அமெரிக்க கொண்டு வந்தது.அமெரிக்க என்ற ஒரே காரணத்திற்காக எதிர்த்த கியூபாவை பார்த்து தமிழனவாதிகள். கம்யுனிஸ்டுகளே இப்படி தான் என்று பேஸ்புக்கில் பொங்கிவிட்டார்கள். கியூபா கம்யுனிஸா நாடு என்பது உண்மையானல் சே கம்யுனிஸ்ட் தான். சே கம்யுனிஸ்ட் என்பது உண்மையானால், அமேரிக்கவிற்க்கு வேண்டியது இந்த கம்யுனிஸ்ட் தான்.

அரசின் மீது கோபம் வரும்போது, மக்கள் ஒருங்க இணைந்து அந்த அமைப்பை தூக்கி போட தயாரகும் போது. அந்த அமைப்பை காப்பாற்றவும், மக்களின் கோபத்திற்கு வடிகாளாகவும், இருக்க அதிகாரம் மிக்க அரசுகளுக்கு உதவி புரியும் சீர்திருத்தவாதிகள் தான், காந்தி, மன்டேலா, அன்ன ஹசரே என்றால். கோபக்கார இளைஞர்களை காயடிக்க உதவும் போரட்ட வடிவம் தான் சேகுவாரா’விசம்’.

சே குவராவின் போராட்ட வடிவம் எளிமையானது. நான்கைந்து, முடிந்தால் 40, 50 கோபக்கார இளைஞர்கள் ஒன்று திரண்டு கொரில்லா ராணுவம் அமைத்து சில பல சண்டைகள் போட்டு அரசை கைப்பற்றுவார்கள். இதில் மக்கள் பார்வையாளர்கள். இந்த ராணுவ வீரர்களுக்கு தேவையான உதவி செய்தால் போதும். அரசை இவர்கள் கைபற்றியவுடன் மக்களுக்கு தேவையான நல்லதுகளை செய்வார்கள். நடுவில் அரசு இவர்களை அழித்துவிட்டால் . டிசர்டில் போட்டோவாகிவிடுவார்கள்.

க்யுபா எனும் சிறு நாட்டில் வெற்றிபெற்ற இந்த முறை அதன் பின் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மற்ற இடங்களில் இந்த முறை வெற்றி பெற்றதாக வெளியில் சொல்லபட்டது, ஆப்ரிக்கவிலோ, சில அரபு நாடுகளிளோ, நாட்டின் வளத்தை ஏகதிபத்தியங்களுக்கு விற்று சில கொரில்லா குழுவினர் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் ஆட்சியை பிடித்தனர்.அது தான் உண்மை.

உண்மையில் சேவின் இந்த முறை அவரை பொலிவியாவில் கொன்று போட்டது. சே துப்பாக்கி தூக்கிய போது பார்வையாளாராக இருந்த மக்கள், சேவின் பிணத்தை பார்பதிலும் பார்வையாளாராக இருந்தார்கள்.

மக்கள் பங்கேற்பில்லாதா இந்த போர் முறை இயல்பில் உலகில் உள்ள பல சாகசவாத இளைஞர்களை ஆக்கிரமித்துவிடுகிறது. உடனடி தீர்வு வேண்டும்.மக்களுக்கு பதில் சொல்லி அவர்களை திரட்டும் பொறுமையில்லை. நாளையே புரட்சி வர வேண்டும். மக்கள் முட்டாள்கள் இந்த மத்தியவர்க எண்ணம் தான் இந்த இடது சாகசவாதிகளின் மூலதனம்.

இவர்கள் எண்ணம் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பது தான் மதிக்கிறோம், சேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஆதரிக்கிறோம் ஆனால் இவர்கள் கொடுக்கும் தீர்வு? அது ஆபத்தாயிற்றே.

இது தான் இப்பொழுது ஏகாதிபத்தியங்களுக்கு வேண்டும். அமைப்பின் அழுகிய ஊழல், கொள்ளை இவற்றை பார்த்து கோபம் வருகிறதா, மக்கள் சக்தி ஒன்றுபடுகிறதா. ஒன்று படும் மக்கள் சக்தியை மழுங்கடிக்க முதல் வழி அவர்களை அமைதியாக பஜனை பாட செய்வது. சமத்துவம், சகோதரத்துவம், அஹிம்சை என அவர்களை அடக்கிவிடுவது. நம் கண் முன் உதரணம் காந்தி, அன்ன ஹசரே.

அதே இளைஞர்கள் கோபடுகிறார்கள் அப்பொழுது அவர்கள் மனதில் சேகுவார வழியை நிலை நிறுத்துவது. திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிக்கை, புத்தகங்கள் என்று சகலத்திலும டீசர்ட் வரை, சே குவரா வழி ஆரதிக்கபடுகிறது. அது அந்த இளஞர்கள் மூளையில் வேலை செய்யும். சிறு குழு ஒன்று அமையும்.அதன் பின் நாம் சில சாகச செய்திகளை படிக்களாம்,சில குண்டு வெடிப்புகள், சில துப்பாக்கி சூடுகள். சில கொலைகள். தொலைகாட்சி லைவில் பார்க்கலாம் .இறுதியில் குழிவில் அனைவரும் கொல்லபடுவார்கள், மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் ஏன் ஒரு பயம் கூட அரசு மீது மக்கள் மனதில் கவ்விவிடும்.

இலங்கையில் ஜேவிபி, இந்தியாவில் சாரு தலமையிலான நக்சல்பாரி, தமிழ்நாட்டில் தமிழரசன் தலமையிலான ஒரு தமிழ்தேசிய குழு(பெயர் நினைவில்லை ). ஆபிரிக்கவில், அர்ஜென்டினாவில் இந்தியாவில் இப்போதைய மாவொயிஸ்ட் குழு, ஏன் ஈழத்தில் மக்களை பார்வையாளராக வைத்து ராணுவத்தின் மூலம் விடுதலை வெல்லலாம் என நினைத்த குழுக்கள் ஏகாதிபத்தியங்களால் அழிதொழிக்கபட்டுவிட்டன. அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மக்கள் பார்வையாளராக செய்திகளை பார்த்து கடந்துவிடுகிறார்கள். குறைந்தபட்சம் அவர்களுக்காகத்தான் இந்த மரணங்கள் என்று கூட தெரிவதில்லை.

இத்தகு பாதைகளுக்கு பின்னால் உள்ள இராணுவ அரசியல் ஏகாதிபத்திய நியாயங்களுக்காக தேவைப்பட்டுப் போகின்றது .அது ஆக்கிரமிப்பு ,வளச் சுரண்டல் , ஆயுத விற்பனை போன்ற முதலாளித்துவ இலாபங்களை இலகுவாக கையகப்படுத்தும் பொறிமுறையாகவும் இன்று மாறி நிற்கின்றது

Apr 10, 2014

குர்ஆன் கூறும் அரசியல்



இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 2
குர்ஆன் கூறும் அரசியல்

1. உலகத்தைப் பற்றிய பார்வை

உலகத்தைப் பற்றிய பார்வையை சரியாகப் புரிந்து கொண்டால் தான் குர்ஆன் கூறும் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். அரசியல் நோக்கில் அதைப்பற்றி ஆராயும் போது கீழ்வரும் விசயங்களில் நமக்கு புலபடுகின்றன.

(அ) மனிதனுடைய, இவ்வுலகினுடைய மற்றும் இவ்வுலகில் மனிதன் பண்படுத்தும் அனைத்துப் பொருள்களுடைய, படைப்பாளன் அல்லாஹ் ஆவான்.

6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்;

13:16. (நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.

4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;

2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;

35:3. மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா?

56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

(ஆ) தன்னால் படைக்கப்பட்ட இவ்வனைத்தும் படைப்பினக்களின் சொந்தக்கரன்னும், ஆதிக்கம் செலுத்துபவனும், நிர்வகிப்பவனும் அவனே ஆவான்.

30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

(இ) இவ்வுலகின் மீதான ஆதிக்கம் – ஹாகிமிய்யத் (Sovereignty) அல்லாஹ்வைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது. அதில் பங்கு கேட்கவோ, பங்கு பெறவோ யாருக்கும் உரிமை கிடையாது

2:107. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?

25:2. (அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை;

28:70. மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

6:57. தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்

18:26. வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.

3:154. “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” (என்று, அதற்கு) “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

30:4. சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

57:5. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.

16:17. (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?

13:16. “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”;

35:40. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?”

35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.


( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Apr 9, 2014

இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலிருந்து... பகுதி 1


நூல் பெயர் : இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்


ஆசிரியர் : மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களின் புகழ்பெற்ற நூற்களில் ஒன்றான ‘கிலாஃபத் வ முலூகிய்யத்’ எனும் நூலை தமிழில் ஹிந்துஸ்தான் பதிப்பகம் வெளியிட்டயர்கள்.

இஸ்லாமிய இறையாட்சி - கிலாஃபத் – என்றால் என்ன? எத்தகையதொரு ஆட்சி அமைப்பை இஸ்லாம் உருவாக்க நினைக்கிறது? எதற்காக உருவாக்க நினைக்கிறது? அவ்வமைப்பைக் கொண்டு இவ்வுலகில் என்ன சாதிக்க நினைக்கிறது? என்பன பற்றியெல்லாம் மௌலானா அவர்கள் இந்நூலில் அழகாக வர்ணித்துள்ளார்கள்.

அதுபோன்றே, உண்மையான இஸ்லாமிய இறையாட்சி - கிலாஃபத் எவ்வாறு இருக்க வேண்டும்? எத்தகையதொரு, எடுத்துக்காட்டான கிலாஃபத் ஆட்சியாக ஈமானில் முந்திக்கொண்ட சஹாபாப் பெருந்தகைகளின் ஆட்சி திகழ்ந்து? என்பதனை விளக்குவதோடு மட்டுமல்லாமல், கிலாஃபத், பிற்காலத்தில் எவ்வாறு மன்னராட்சியாக மாறிப்போனது என்பதனையும் மௌலானா விவரித்துள்ளார்கள்.


முன்னுரை

கிலாஃபத்தை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன? முதலாம் நூற்றாண்டில் எந்தெந்த நியதிகளின் கீழ் அது செயல்பட்டது? என்னென்ன காரணக்களால் அது மன்னராட்சியாக மாறியது? அதனால் ஏற்பட்ட விளைவுகள் யாவை? அவ்விளைவுகளினால் உம்மத்தில் ஏற்பட்ட எதிர்த்தாக்கங்கள் என்னென்ன?

என்பன பற்றியெல்லாம் மௌலானா விவரித்துள்ளார்கள. இன்ஷா அல்லாஹ் இந்த நூலில் உள்ள ஒரு சில பகுதிகளை வரும் நாட்களில் இந்த இணையத்தளத்தில் தரக் இருக்கிறன்.

இஸ்லாமியச் சகோதரன்,

Islamicuprising.blogspot.com

( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

இஸ்லாத்தில் அதிகாரம் ஏன்? (பகுதி – 1)

Sources From iqrah.net

அல்ஹம்துலில்லாஹ்
இன்று நமது சமுதாயத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மார்க்கத்தை வணக்க வழிபாடு மட்டும் தான், அதைத் தாண்டினால் தாவா (அழைப்பு பணி) மட்டும் போதும் என்றும் நினைத்துக் கொண்டுள்ளார்கள். இஸ்லாம் ஆள வேண்டும் என்ற சிந்தனை சில முஸ்லிம்களிடம் மட்டுமே இருந்து வருவதைக் காண்கிறோம்.
இஸ்லாத்தை ஒரு ஆளும் கொள்கையாக ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாக மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்பவர்களை சிலர் ஏளனப்படுத்தி வருவதையும் நாம் காணலாம்.
நமது நாயகம் முஹம்மது நபி (ஸல்) அதிகாரம் இல்லாமல் வெறும் தாவா (அழைப்புப்பணி) மட்டும் செய்தார்கள் என்று சொன்னால் நபித்துவத்தில் அதிக ஆண்டுகள் அதாவது 13 ஆண்டுகள் மக்காவில் தான் பணி புரிந்தார்கள். அந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ஆனால் நபி (ஸல்) ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு சென்ற உடனே முதல் வேலையாக தலைமைத்துவம் மாறுகின்றது. அதாவது அதற்கு முன்னாள் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இபுனு உபை என்பவன் தான் மதினாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் அகபா உடன்படிக்கை அவனுடைய பேராசைக்கு ஒரு பேராபத்தாக அமைகின்றது.
அதிகாரத்தில் முஸ்லிமல்லாதவர்கள் இருக்கட்டும் நாம் சிறந்த ஆன்மீகவாதிகளாக இருக்கலாம். ஆட்சி அதிகாரம் ஹராம், உலக ஆசையின் நுழைவாயில் என்று நபி (ஸல்) காஃபிர்களுக்கு, அதாவது அங்கு உள்ள ஆட்சியை கைப்பற்ற துடித்த அப்துல்லாஹ்இபுனு உபைக்கு கொடி பிடித்து நிற்கவில்லை. மாறாக எங்களுக்கு என்று தனி சட்ட திட்டங்கள் (ஸரிஆ) உள்ளது என்று செயல்கள் மூலமாக பிரகடனப்படுத்தினார்கள். செய்தும் காட்டினார்கள். அல்ஹம்து லில்லாஹ் இஸ்லாமிய ஆட்சியையும், குர்ஆனை ஒரு வாழ்க்கை நெறியாகவும் கொண்டு வந்தார்கள். செயல் படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தின் பொறுப்பை ஏற்றுகொண்டார்கள் (அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் -முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) ” (9:33.)
மக்காவில் 13 ஆண்டு காலம் அதிகாரம் இல்லாமல் பிரச்சாரம் செய்தும் ஏறத்தாழ 80 பேர்தான் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். ஆனால் அதிகாரத்தை கைக்கொண்டு பிரச்சாரம் செய்த குறைந்த நாட்களிலேயே,
அன்றைய வல்லரசுகளாக திகழ்ந்த ரோமப் பேரரசும், பாரசீகப் பேரரசும் இஸ்லாமிய ஆளுமையின் கீழ் வருகிறது. மேலும் ஹபஸா, மிஸ்ரு (எகிப்து), பஹ்ரைன், யமாமா, ஸிரியா, ஓமன் போன்ற நாடுகளும் இஸ்லாமிய ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது.
ரோமபுரி மன்னன் ஹெர்குலிஸ் (ஹிர்கலிடம்) அபூ ஸுஃப்யான் (ரலி) இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் பேசிய நீண்ட உரையாடலின் முடிவில் அவர்களே கூருவதை பாருங்கள் அந்த ரோமர்களின் மன்னன் கூட அவரை (முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அவரின் காரியம் உறுதியாகி விட்டது என்று கூறுமளவிற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.

மேலும் பஹ்ரைன் நாட்டு ஆளுநர் ‘அல்முந்திர் இப்னு ஸாவி’ என்பவருக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். “அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் (எனது) நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். ஆனால் மஜூஸிகளும், யூதர்களும் இருக்கின்றனர். எனவே, நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு கட்டளை பிறப்பியுங்கள்” என்று அல் முந்திர் கட்டளையை நபிகள் நாயாகம் (ஸல்) அவர்களிடம் கேட்டுப்பெறும் அளவிற்க்கு உலக வரலாற்றையே மாற்றி அமைத்தார்கள்.
மேலும் யமாமா நாட்டு அரசருக்கு நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்த விதத்தை பாருங்கள் அவர் பெயர் ‘ஹவ்தா இப்னு அலீ’ ஆகும் நபி (ஸல்) இவருக்கு அழைப்புக் கொடுத்த வாசகமாவது:
“அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது – ” நேர்வழியைப் பின்பற்றுவோறுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்கு கீழ் உள்ள பகுதிளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்”.
இந்த வார்த்தையின் பொருள் என்னவென்றால் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டுதான் அதிகாரத்தில் இருக்க முடியும் அதிலும் இஸ்லாமிய அதிகாரத்தையே செயல்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அவர்கள் மதினாவில் உள்ளவர்களுக்கு கூறிய வார்த்தை அல்ல. அது வேறொரு நாட்டு மன்னனிடம் கூறுமளவிற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.
மார்க்கத்தை மற்ற மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வதுதான் அதிகாரம் பெறுவதன் முக்கிய நோக்கம் என்பது தெளிவாகின்றது.

கலிஃபாக்களின் ஆட்சியிலும் இந்த சுன்னா தொடரப்பட்டு வந்தது அல்ஹம்துலில்லாஹ்….. உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் மூன்று கண்டங்களை தாண்டி இஸ்லாம் வேகமாக பரவியது.
(அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) “(9:33.)
இனி சகோதர சகோதரிகளே, மார்க்கம் (தீன்) என்றால் என்ன என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம்.
எந்த கொள்கையை நீங்கள் பின்பற்றுகின்றீர்களோ அதாவது எந்தக் கொள்கை உங்களை வழிநடத்தி செல்லும் சட்ட திட்டங்களைத் தருகிறதோ அதுதான் உங்கள் மார்க்கம் (தீன்). நீங்கள் கம்யூனிஸத்தினைப் பின்பற்றினால் கம்யூனிஸ தீனில் (வாழ்க்கை நெறியில்) தான் இருக்கின்றீர்கள். ஜனநாயகத்தைப் பின்பற்றினால் ஜனநாயக தீனில் (வாழ்க்கை நெறியில்) இருக்கின்றீர்கள். முதலாளித்துவத்தை பின்பற்றினால் முதலாளித்துவ (தீனை) (வாழ்க்கை நெறியில்) இருக்கின்றீர்கள். நீங்கள் இஸ்லாத்தை பின்பற்றினால் (இஸ்லாமிய) தீனில் இஸ்லாமிய சத்திய (வாழ்க்கை நெறியில்) இருக்க்ன்றீர்கள்.
ஆக நீங்கள் உங்களுக்கெதிரான கொள்கையைக் கொண்ட வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்டால், அது நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை என்பதற்கு முற்றிலும் போதிய ஆதாரமாகி விடுகிறது.
அசத்திய தீனை (தாகூத்தை) பின்பற்றக்கூடியவர்களுக்கும் அல்லாஹ்வுடைய தீனை இஸ்லாத்தை சத்தியத்தை பின்பற்ற கூடியவர்களுக்கும் அல்லாஹ் கூறும் உவமையைப் பார்ப்போம்.

”இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர், போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (11:24)
இவர்கள் பூமியில் அல்லாஹ் திட்டமிட்டிருப்பதை தோற்கடித்து விடமுடியாது அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை, இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும், அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்த விட்டார்கள் இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள். இவர்கள் தாம் தங்களுக்கு தாங்களே நட்டம் விளைவித்துக் கொண்டார்கள், இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த யாவும் இவர்களை விட்டு மறைந்துவிடும். (11:20-21)
இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். இந்த அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வழியில் செல்லமுடியாமல் மக்களைத் தடுக்கின்றார்கள்: அதனைக் கோணலாக்க விரும்புகின்றார்கள்.” (11:18-19)
இப்போது ஒரு கேள்வி எழலாம் அனைவரும் ஜனநாயகத்தை தானே பின்பற்றுகின்றோம்? இதற்கு என்ன செய்வது?
( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

ரஷ்யா உக்ரைனையும் இணைத்துக் கொள்ளுமா ?

ரஷ்யா க்ரிமியாவை  தன்னுடன் இணைத்துள்ளது.க்ரிமியாவை  ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளும் சட்ட ஒப்புதல் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் 18/03/2014 அன்று ஆவணத்தில் கையொப்பமிட்டார்.எனவே ரஷ்யா உக்ரைனையும்  தன்னுடன் இணைப்பதற்கான முன்னேற்பாடாக இது  இருக்குமோ என்ற  கேள்வி எழலாம்.
இப்போதைய பிராந்திய, சர்வதேச சூழ்நிலைகள், மூன்றில் எந்த ஒரு தரப்பும் இதை அனுமதிக்காது. உக்ரைனை உரிமை கொண்டாடுவோர், உக்ரைனை முழுமையாக கட்டுபடுத்தவதற்கு அல்லாமல் மூன்று தரப்பினருக்கும் இடையே ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு என்பது ஒரு சமரசமேயாகும்…ஆகையால் ரஷ்யா உக்ரைனை முழுமையாக தனதாக்கிக் கொள்வது என்பது தற்சமயமோ அல்லது  சிறிது காலத்திற்கோ நடைபெறுவது சாத்தியமற்றதாகும். ரஷ்யா க்ரீமியாவை தனதாக்கிக் கொள்ள முடிந்துள்ளதால், அமெரிக்கா உக்ரைனின் இதர பகுதிகளை தனதாக்கிக் கொள்ளும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது. உக்ரைனை மூன்று தரப்பினரில் எவ்வொருவரும் தற்சமயம் அல்லது சிறிது காலத்திற்கு ஆக்கிரமிக்க முடியாது. ஏனெனில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் செயல்களானது சமரசத்தை ஏற்படுத்துவதற்கும்; அதாவது ரஷ்யா க்ரீமியாவை கட்டுபடுத்தவும், மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா உக்ரைனின் ஏனைய பகுதியை கட்டுபடுத்தவும் இயலும்  என்பதை பின்வரும் நிகழ்வு  சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகலை (Chuck Hagel) ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு(Sergei Shoygu) 20/03/2014 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில், மாஸ்கோ கிழக்கு உக்ரைனை தாக்காது என்று  குறிப்பிட்டுவிட்டு  அவரிடம் கூறியதாவது:- “தன் எல்லைகளுக்கு அனுப்பப்பட்ட படைகள் என்பது வெறும் ராணுவ பயிற்சிக்காகவேயன்றி உக்ரைனின் எல்லையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடுவதற்காக  அல்ல.”
ரஷ்ய மொழி பேசுபவர்களைக் கொண்ட உக்ரைனின் கிழக்கு பகுதியை தன்னுடன் இணைக்க ரஷ்யா மேற்கொள்ளும் எவ்வொரு முயற்சியையும் “ராணுவத்தை கொண்டு பதிலளிப்போம்” என்ற  கீவ்(Kiev)வின் இடைக்கால அரசின் அறிவிப்பு இதை ஊர்ஜிதப்படுத்தியது. “இது 19/03/2014 அன்று க்ரீமியாவிலிருந்து தனது படைகளை திரும்ப அழைப்பதற்கு தயாராக உள்ளதாக அறிவித்ததை அறிந்திருந்தும் ஒரு நாளுக்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியானது. உக்ரைனின் பாதுகாப்பு துறை தலைவர் ஆன்ரே ப்ரோபாய்(Andrey Probai) தனது நாடு படைகளையும் க்ரீமியாவின் குடிமக்களையும் திரும்பப்பெற ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக அறிவித்தார். தங்களது முக்கிய குறிக்கோள் என்பது படைகளையும் உக்ரைனிய குடும்பங்களையும் “விரைவாகவும் சிறப்பான முறையில்” இடமாற்றம் செய்வதாகும் என்பதாக அவர் கூறினார்.
 உக்ரைனின் ஏனைய பகுதிகளை கைமாற்றம் செய்து கொள்வதற்கான சமாதானத்திற்கான சமிக்ஞை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது! உக்ரைன் தன்னுடைய  கிழக்கு பகுதியில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதை இது காட்டுகிறது, அதேசமயம் தனது தீபகற்பகத்தில் கொண்டுள்ள ஆர்வம் குறைந்துள்ளது. இந்த சமிக்ஞைகள் 21/03/2014 அன்று ஊர்ஜிதமாகியது. 21/03/2014 அன்று ப்ரூஸல்ஸில்(Brussels) நடைபெற்ற ஐரோப்பிய மாநாட்டில், உக்ரைனின் இடைக்கால பிரதமர் ஆர்சென்லி யட்சென்யுக்(Arsenly Yatsenyuk) என்பவருடன் ஐக்கிய ஐரோப்பிய நாடுகள், அரசியல் நிலைக்கான ஒரு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தமானது கீவ்(Kiev)வை ஐக்கிய ஐரோப்பிய சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு நெருங்க செய்யும் உக்ரைனிற்கும் ரஷ்யாவிற்கும் பிரச்சனையை உண்டாக்கிய ஒப்பந்தமாகும், உக்ரைனின் முன்னாள் அதிபர் யானிகோவிச்(Yanukovych) இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் உக்ரைனியர்கள் மிகப்பெரிய போராட்டங்கள் மற்றும் பேரணிகளை மேற்கொள்ள தூண்டியது… இதற்கும் மேலாக, இவ்வனைத்து குறியீடுகளும் சமாதான தீர்வு ஏற்பட மேற்கொண்ட முயற்சிகளை வெளிக்காட்டியது… எவ்வாறிருப்பினும் உக்ரைனின் சூழ்நிலைகள்,பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ரஷ்யாவிற்கோ அல்லது மேற்குலகிற்கோ சாதகமாக மாறுவதறகேற்ப எந்நேரமும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டாகவே இருக்கும். அப்பொழுது இரு தரப்பினரும் அக்கால சர்வதேச சூழலுக்கு ஏற்ப முழு உக்ரைனையும் தனதாக்கிக் கொள்ள முயல்வார்கள்… உக்ரைன் ரஷ்யாவின் இடுப்புக்கோடு போன்று உள்ளதோடு, ஐரோப்பாவின் வாயிலாகவும் உள்ளது. சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் சூழ்நிலைகள் மாறாத வரையில் இச்சமாதான தீர்வு அப்படியே நீடித்திருக்கும். இது தற்காலிக நிலைத்தன்மை  மற்றும் “தற்காலிக அமைதியை” ஏற்படுத்தும்… நீடித்த நிலைத்தன்மையை பொறுத்தமட்டில்,குறிப்பாக க்ரீமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பதற்கு முந்தைய கிலாஃபத்தின் காலமான 18 மற்றும் 19ம் நூற்றாண்டின் நிலைத்தன்மையை போன்று ஏற்பட்டாலேயன்றி; அஃதாவது இன்ஷா அல்லாஹ் கிலாஃபத்தின் மீள்வருகையின் ஒரு பகுதியாக அது இருக்கும்போது ஏற்பட்டாலேயன்றி வேறு வகையான நிலைத்தன்மை  அங்கு ஏற்பட வாய்ப்பில்லை.

Apr 7, 2014

ஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் !


 
 
தமது வாழ்வியலுக்கான வழிமுறைகளை பெரும்பான்மை எனும் பிரமாண்டமான மக்கள் தொகையின் உருவத்தில் சட்டங்களையும் , யாப்புகளையும் மக்களே உருவாக்கி (அல்லது கிடைப்பதை அங்கீகரித்து) அதே பிரமாண்டமான வாக்குத் தெரிவின் அடிப்படையில் மக்களே தீர்மானிக்கும் அதிகாரிகளிடம் அவர்கள் தீர்மானித்த சட்டங்களையும் , யாப்புகளையும் தம்மை நோக்கியே பிரயோகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே ஜனநாயகமாகும் .

இதை கூர்ந்து அவதானியுங்கள் ஒரு உண்மை புலப்படும் . அதுதான் இங்கு கடவுள் வடிவத்தில் பெரும்பான்மை மக்கள் அமர்ந்திருக்க அவர்களின் வரத்தின் மூலம் அவர்களுக்கே பணிவிடை செய்ய பூசாரிகளாக அரசு இயங்க வேண்டும் என்பதே அந்த கோட்பாட்டுச் சுருக்கமாகும் .அதாவது இந்த ஜனநாயக அரசியல் பொறியின் மூல மந்திரமே மக்களின் விருப்பு எனும் மேற்போக்கான கருத்தியலை கொண்டதல்ல மாற்றமாக சட்டங்களை,யாப்புக்களை ஆக்கும் உரிமையும், அங்கீகரிக்கும் உரிமையும் கொண்ட 'சுப்பர் பவர் ' மக்களிடமே உள்ளது என்பதாகும் .

இந்த கருத்தியலின் ஆழ்ந்த முடிவானது ஒவ்வொரு தனி மனிதனும் குட்டிக் கடவுள்கள். ஆனால் அவர்களின் ஆதிக்க திறன் தம்மோடு கூட்டுச் சேர்க்கின்ற பெரும்பான்மை விகிதா சாரத்தின் அடிப்படையிலேயே என்பதிலேயாகும் . சரி இப்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விடயம் இருக்கின்றது . அது அல் குர் ஆனிய பரிபாசையில் ' தாகூத் ' எனும் சொற்பதம் விளக்குவது என்ன ? என்பது பற்றியதாகும் .

'தாகூத் ' எனும் அரபுச் சொல்லுக்கு வரம்பு மீறுதல் என்பது பொருளாகும் 'வஹியின் ' மொழி மரபில் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் தன்னை இணைக்காமல் ,அதற்கு கட்டுப் படாமல் தான்தோன்றித் தனமாக மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஒவ்வொருவரையும் குறிக்கும் .


இன்னும் சற்று இது பற்றி விரிவாக சொன்னால் ;
1. இச்சைகளின் பால் இட்டுச் செல்லும் மனம் .
2.பொய்மையின் பக்கம் அழைப்புக் கொடுக்கும் அழைப்பாளன் .
3.அல்லாஹ்வின் (சுப ) சட்டங்களுக்கு எதிராக , அல்லது மாற்றமாக (சாணாக்கியம் ,காலத்தின் தேவை போன்ற நியாயங்களை காட்டிய நிலையிலோ ,அல்லது அல்லாமலோ ) வேறு சட்டங்களை ,யாப்புகளை பிரயோகிக்க நிணைக்கும் தனி மனிதன் ,சமூகம் ,அல்லது இயக்கம் ஆகிய அனைத்துமே இந்த தாகூத் எனும் பதத்தில் உள்ளடங்கி விடும் .

இதனடிப்படையில் இன்று ஒவ்வொரு முஸ்லிமும் தம்மை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது . இந்த 'தாகூதியத்தின் ' பின்னால் அணி திறலும் தவறை முஸ்லீம்கள் கைவிட வேண்டும்.

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_9323.html

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?

அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கூறியுள்ளார்கள் .

"நிச்சயமாக எனது சமூகத்தின் மீது நான் பயப்படுவதெல்லாம் வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியேயாகும்."
அபூதாவூத்4252

சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .

இப்போது நடைமுறை ரீதியாக குப்ரின் விருப்பு வெறுப்புகளை ,ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தக்கன பிழைத்தல் வாழ்வை நோக்கி இஸ்லாத்தின் பெயரோடு முஸ்லீம் உம்மத்தை அழைப்பது மட்டும்தான் 'தவ்வா ' என்பதாக மூத்த 'தாயிகள் 'வெளிப்படையாக பேசி நிற்கின்றனர் .இந்த சரணடைவு பாதை தான் காலத்தின் தேவையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .

இங்கு 'ஹராத்தோடு' கலந்த விடயங்கள் 'ஹலால் 'என்ற பெயரில் மிகச் சுலபமாக ஜீரணிக்கப்படும்! சில பாரிய ஹராம்களின் பாரதூரங்கள் ஏதோ சிறு பாவம் போல சித்தரிக்கப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . மிக அண்மையில் ஒரு பொலிஸ்மா அதிபர் ஒரு பிரசித்தமான இயக்கத்தின் 'இஜ்திமாவிட்கு' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் . அவர் அங்கு பௌத்த சிந்தனையை சிறப்பாக 'பிரித்' ஓதி! பேசிவிட்டு விட்டு போயுள்ளார் ! கேட்டால் மத நல்லிணக்கம் என அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார்கள் !!!இதை 'சிர்க்கோடு ' நல்லிணக்கம் என அழகாக மொழி பெயர்க்கலாமே!!!

இன்னொரு பிரசித்தமான இயக்கம் ஜெனீவாவுக்கு எதிராக ,இலங்கை அரசுக்கு ஆதரவாக பகிரங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள் !! இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த எத்தனையோ அநீதிகளுக்கு முன் பெயரளவு பெறுமானத்தோடு அடக்கி வாசித்த அரசியலை . ஜெனீவாவுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது யாரை திருப்திப் படுத்தவாம் !? இதை சரியாக புரிந்து கொண்டால் 'பிர் அவ்னுக்கு' பிடில் வாசிக்கும் இவர்களது அரசியல் தரம் புரிந்து போகும் .

தவ்ஹீதை கப்ரு வணக்கத்தில் கண்டு பிடித்த இவர்களுக்கு ,தமது தூய அகீதாவுக்கு மண்ணள்ளிப் போடும் இத்தகு மடத்தனம் புரியாதது அதிசயமே .சிர்க்கை,பித் அத்தை நுணுக்கமாக கண்டுபிடிக்கும் இந்த இயக்கங்களுக்கு இஸ்லாமிய அரசியல் அகீதாவுக்கே ஆப்படிக்கும் 'ரித்தத்' வழிமுறையான குப்ரிய பொலிடிக்ஸ் உடன் உறவு கொள்வதில் தெளிவில்லாதது ஆச்சரியமே!

ஒரு முஸ்லிமினது அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இஸ்லாமிய ஷரீஆவாகும். அவன் தான் விரும்பியபடி வாழமுடியாது. மனித சட்டங்களை ஏற்று வாழ முற்படவும் முடியவே முடியாது . இஸ்லாத்தோடு வாழ்வு ,அல்லது இஸ்லாத்துக்காக தன்னை மரணம் வரை அர்ப்பணித்து போராடுதல் . இது தவிர ஒரு இடைக்காலம் இல்லவே இல்லை .

அல்லாஹ்வுடைய ஏவல் விலக்கல்களை தமது வாழ்வில் கடைப்பிடித்து வாழக் கடமைப்பட்டுள்ளான். அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றி வாழமுடியாது. இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது.

“நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார். எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" (20: 123-124)

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_29.html#more

ஒரு உறையில் பல வாள்கள் !! 'பைஅத்' சாத்தியமா !?

கிலாபா எனும் இறைவன் வகுத்து தந்த அதிகார அரசியலுக்கு கட்டுப்படுவதும் , அதன் ஏகோபித்த தலைவரான கலீபாவிட்கு ('பைஅத்' )உறுதிப்பிரமாணம் கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடிப்படைக் கடமையாகும் . இந்த 'பைஅத்' தொடர்பாக வரும் ஆதார பூர்வமான நபி மொழிகள் பிரகாரம் இந்த விடயம் அகீதா சார்ந்ததாகும்.

அதாவது திட்டவட்டமான (முதவாதிரான ) வஹி அறிவிப்புகள் பிரகாரம் முன் வைக்கப்படும் எந்த விடயமும் அகீதா சார்ந்தது. இது இஸ்லாமிய பிக்ஹ் துறை இமாம்களில் அதிகமானோர் ஏற்றுள்ள நடைமுறையாகும் . இதில் கருத்து வேறுபாடு கொள்வதோ ,புறக்கணிப்பதோ பாரிய குற்றமாகும் .

கிலாபா என்பது அதன்கீழ் கட்டுப்பட்டு வரும் முஸ்லீம்கள் ,முஸ்லீம் அல்லாதோர் தொடர்பில் ,அவர்களது அடிப்படை உரிமைகள் ,பாதுகாப்பு , அடிப்படை வசதிகள் ,சேவைகள் தொடர்பான பகிர்வுகள் விடயத்தில் பூரணமாக பொறுப்பு சொல்லவேண்டிய ஒரு அதிகார அரசியல் ஆகும் .வெறுமனே இராணுவ வலிமையை முன்னிறுத்தி சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கு 'சரீஆ' சட்டத்தை அமுல் படுத்தும் வடிவத்தை கிலாபா எனும் விரிந்த அரசியல் குறித்து நிற்காது .

கிலாபா அரசில் இராணுவம் ஒரு மிக அவசியமான பகுதி என்பதில் சந்தேகம் இல்லை .இஸ்லாமிய தவ்வா வை கொண்டுசெல்லும் பாதையில் குப்ரியத் தடைகளை தகர்ப்பதற்கும் , (தாருல் இஸ்லாம் ) இஸ்லாமிய நிலம் ,மற்றும் முஸ்லீம் உம்மத்தின் பாதுகாப்பு தொடர்பில் ,இஸ்லாமிய இராணுவம் மிகுந்த கடப்பாடு உடையது . ஜிஹாத் பர்ளுஐயின், பர்ளு கிபாயா எனும் ரீதியில் அந்த இஸ்லாமிய இராணுவத்துக்கு பூரண ஒத்துழைப்பு தேவைக்கு ஏற்ப வழங்கும் கடப்பாடு ,அந்த கிலாபா அரசுக்கு கட்டுப்பட்டு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு .

ஆனால் இதற்கும் ஒரு இஸ்திர அரசற்ற நிலையில் ஒரு போராடும் முஸ்லீம் ஆயுத குழுவிற்கும் இடையில் பலத்த வித்தியாசம் உள்ளது . இன்னும் இத்தகு அமைப்பு தானே இஸ்திரமற்ற நிலையில் ,முஸ்லீம் அல்லாதோர் மீது ஜிஸ்யா போன்ற வரிகளை விதிப்பதும் , முஸ்லீம்கள் இடம் 'பைஅத்' வேண்டுவதும் மிகத் தவறானது .

'பைஅத்' மேலோட்டமான பெயரளவுப் பெறுமானத்தோடு கேட்கப்படவும் கூடாது .; கொடுக்கப்படவும் முடியாது . இத்தகு அரசியல் பார்வையுடன் தான் சில முக்கிய சஹாபாக்கள் கூட அபூபக்கர் (ரலி )போன்ற முக்கிய கலீபாக்களிடம் கூட குறிப்பிட்ட காலம் 'பைஅத்' செய்யாமல் இருந்துள்ளார்கள் .

ஒரு இஸ்திரமற்ற நிலையில் இருந்து 'பைஅத்' கோரப்படுவதும் ஒரு ஆர்வக் கோளாறு அரசியலாகவே இருக்கின்றது .(ஒரு சில நேரம் முஸ்லீம் உம்மா மீதான ஆர்வத் தூண்டலை நோக்கி இத்தகு ஏற்பாடு செய்யப்படுமாக இருந்தால் அது வரவேற்கத் தக்கது .)ஆனாலும் சித்தாந்த தெளிவற்ற இத்தகு போக்கு ஒரு போட்டி அரசியலை இஸ்லாத்தின் பெயரால் உசுப்பிவிடும் அபாயத்தையும் அதிகமாக்கலாம் . அது குப்பார்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உள்ளார்ந்த அழிவு அரசியலாகவும் மாறிவிடும் .

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_27.html#more