May 31, 2011

முஸ்லிம் உம்மாஹ்வின் எதிரியாக தொடர்ந்தும் மேற்கு அரச இயந்திரங்கள்

M.ஷாமில் முஹம்மட்

கடந்த ஞாயிற்று கிழமை இஸ்ரேலிய அமைச்சரவையில் உரையாற்றியுள்ள அதன் பிரதமர் நெதன்யாகு ஜெருசலம் இஸ்ரேலின்தலைநகராகவும் அதன் பிரிக்கமுடியாத அங்கமாக இருக்கும் என்று தெரிவித்து இஸ்ரேலின் சியோனிச கொள்கையை உறுதிப் படுத்தியுள்ளார் 1948 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு ஜெருசலத்தை கைப்பற்றியது அங்கிருந்த ஏழு இலட்சம் முஸ்லிம்களை வெளியேற்றியது ஜெருசலத்தின் மேற்கு பகுதி முழுவதும் யூத குடியேற்றங்களால் நிறைக்கப்பட்டது.

அல் குத்ஸ் மஸ்ஜித் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலம் படிப்படியாக யூத குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது அங்கிருந்து பலஸ்தீனர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர் அல்குத்ஸ் மஸ்ஜிதை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல தற்போது நகர அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் பலஸ்தீனர்களை பலவந்தமாக வெளியேற்றி வருகின்றது விரிவாக

இஸ்ரேல ஐந்து ஆண்டு அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் கிழக்கு ஜெருசலத்தையும் யூத மயமாக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அந்த திட்டத்திற்கு “a comprehensive economic plan” என்று பெயரிட்டுள்ளது இதற்கு 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் முழுமையான ஆக்கிரமிப்பு மற்றும் நிலம்பரிப்பு திட்டம் என்று பலஸ்தீனர்கள் வர்ணித்துள்ளனர் இது தொடர்பாக பலஸ்தீன அமைப்புகள் தெரிவித்துள்ள தகவலில் ஐந்து ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலத்தின் மக்கள் தொகையில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கத்தை தெளிவாக பிரதிபளிப்பதாகவும் கிழக்கு ஜெருசல பலஸ்தீனர்களின் மக்கள் தொகையை மேலும் மாற்றத்துக்கு உட்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது என்றும் அவை தெரிவித்துள்ளன.

1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பிரிட்டன் பலஸ்தீனை விட்டு விலகியது அதே தினத்தில் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு பிரகடனம் செய்யப்பட்டது அதனை முன்பு திட்டமிட்டவாறு பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியது. அதன் முதல் பிரதமராக டேவிட் பென் கரியன்- David Ben-Gurion- என்ற சியோனிச இயக்கத்தின் தலைவர் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் முதல் பிரதமாராக சியோனிச இயக்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டார் அரபு முஸ்லிம்கள் மிகவும் கடுமையானதும் தொடரானதுமான எதிர்ப்பை காட்டி வந்தனர்.

இந்த தொடரான எதிர்ப்பை ஒடுக்குவது தொடர்பாக 1953 ஆம் ஆண்டு சியோனிச உயர் பீட தலைவர்கள் கலந்துரையாடல்களை நடாத்தினர் அந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்துரைத்த டேவிட் பென் கரியன் -David Ben-Gurion- அப்போது இவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இயங்கிகொண்டிருந்தார்- அந்த கலந்துரையாடலில் பேசிய அவர் ‘‘வெளிநாடுகளில் நடக்கும் அரசியல் விவாதங்களில் அராபியர்கள் நமக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பைக் குறைத்துக் காட்டுவோம்.

ஆனால் நமக்கு உண்மைகள் தெரியும் அரசியல்ரீதியாக நாம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். இந்த நாடு அவர்களுடையது, ஏனெனில் அவர்கள் இங்கே வசிக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் நாம் இந்த நாட்டை அபகரிக்க வந்துள்ளவர்கள், நாம் இன்னும் இங்கு வெளியாட்கள்தாம் அரபியர்கள் ஏன் சமாதானத்தை ஏற்க வேண்டும்? நான் ஒரு அரபியாக இருந்தால் இஸ்ரேலுடன் சமாதானம் செய்யமாட்டேன் இது இயற்கையானது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், இது அவர்களின் நாடு அதை நாங்கள் கைப்பற்றியுள்ளோம் பலஸ்தீனர்களின் கண் முன்னேயே அவர்களது முன்னோர்கள் வாழ்ந்துவந்த பூமியை கிராமங்களையும் நாம் களவாடுகின்றோம் இன்னும் ஓர் இரு பரம்பரை காலத்தில் அவர்கள் இதை மறந்து விடலாம் ஆனால் இப்போது அதற்கு சந்தர்ப்பமே இல்லை ஆகவே இதற்கான தீர்வு நாம் இராணுவ ரீதியில் மிகவும் பலம் படைத்தவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் என்றால்.

மேலும் அவர், ஒரு நாள் அவர்கள் அனைவரும் வெளியேறி நாம் இந்த நாட்டைப் பெற்று விடலாம். நாம் ஒருவர் என்றால் அவர்கள் பத்துப் பேர் இருக்கிறார்கள். ஆனால் யூதர்களாகிய நமக்கு அவர்களைவிடப் பத்து மடங்கு அறிவு அதிகம் அல்லவா?’’ என்று தெரிவித்தார் இது இஸ்ரேலின் கொள்கை உரை என்றுதான் ஆய்வாளர்கள் பார்க்கின்றனர் அந்த கொள்கையில்தான் இஸ்ரேலிய சட்டவிரோத அரசு இன்றும் செயல்பட்டு வருகின்றது இதற்கு ஒரு எடுத்து காட்டுதான் ஜெருசலம் என்பது பிரிக்கமுடியாத இஸ்ரேலின் தலைநகரம் என்ற இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் வாதம். இந்த அப்பட்டமான சிந்தனை பயங்கரவாதத்திற்கும் நடத்தை ரீதியான அதன் பயங்கரவாதத்திற்கும்தான் அமெரிக்காவும் ஏனைய மேற்கு சக்திகளும் தமது விசுவாசத்தையும் ஆதரவையும் கொட்டிவருகின்றது .

மேற்கு உலகம் சியோனிச பயங்கரவாத கொள்கை கொண்ட தாம் பெற்ற சட்டவிரோத தேசத்தை விசுவாசத்துடன் பாதுகாத்து வருகின்றது அதன் முன்னும் பின்னும் இரும்பு அரணாக அவை காவல் காத்து நிற்கின்றது இராணுவ, அரசியல் , பொருளாதார ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் பாதுகாத்து வருகின்றது எதிர் வரும் செப்டம்பர் மாதம் ஐநா பாதுகாப்பு சபையில் பலஸ்தீன தேசத்தை உருவாக்க தேவையான அங்கீகாரத்தை பலஸ்தீன தரப்புகள் கோரவுள்ளது அதை ஒபாமா நிர்வாகம் நிராகரிக்கும் என்பதை ஒபாமா ஏற்கனவே அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee -AIPAC-யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

இதன் மூலம் சியோனிச பயங்கரவாத்தின் பாதுகாவலனாகவும் முஸ்லிம் உம்மாஹ்வின் எதிரியாகவும் மேற்குலகம் தொடர்ந்தும் வரலாற்றில் இடம்பிடித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

in 1956 David Ben-Gurion

Nahum Goldmann, president of the World Jewish Congress, wrote that in a conversation about the Arab issue in 1956, Ben-Gurion stated: “Why should the Arabs make peace? If I was an Arab leader I would never make terms with Israel. That is natural: we have taken their country … There has been anti-Semitism, the Nazis, Hitler, Auschwitz, but was that their fault? They only see one thing: we have come here and stolen their country. Why should they accept that? They may perhaps forget in one or two generations’ time, but for the moment there is no chance. So it is simple: we have to stay strong and maintain a powerful army.” Goldmann criticized Ben-Gurion for what he viewed as Ben-Gurion’s confrontational approach to the Arab world. Goldmann wrote that “Ben-Gurion is the man principally responsible for the anti-Arab policy, because it was he who moulded the thinking of generations of Israelis.

sources from ourummah.org

May 30, 2011

ஒரு கிளாஸ் மதுவுடன் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :ஒபாமா


பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கடந்த புதன்கிழமை பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் எம்.பிக்கள் பிரபுக்கள் மத்தியிலும் பிரிட்டன் பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்திய ஒபாமா எமது வரலாற்றின் புதிய அத்தியாயத்தை பகிர வேண்டிய தருணத்திற்குள் நாம் நுழைய வேண்டியுள்ளதெனவும்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல வருடங்களாக நீடிக்கும் பயங்கரவாதத்திற்கான போர் என்பவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளும் முன்னெப்போதுமில்லாத முக்கிய தருணத்தை வந்தடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு பிரிட்டன் பாராளுமன்றது முன்பாக ஒபாமா, கெமரூன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது விரிவாக

இதில் கலந்து கொண்டவர்கள் கிலாபா ஒன்றுதான் தீர்வு என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் பிரிட்டின் பிரதமர் கெமரூனும் முஸ்லிம் தேசங்களில் தமது அழுக்கு படிந்த கரங்களை நுழைப்பதை நிறுத்தவேண்டும், அரபு முஸ்லிம் தேசங்களில் மாற்றம் வந்து கொண்டிருகின்றது உண்மையான மாற்றம் கிலாபாதான். மேற்குலகின் பொம்மைகளை முஸ்லிம் உம்மாஹ் துரத்தி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளர்.

மேலும் அங்கு உரையாற்றியுள்ள ஒபாமா புதிய சவால்களுடன் எமது வரலாற்றின் புதிய அத்தியாயத்தை பகிர வேண்டிய தருணத்திற்குள் நாம் நுழைய வேண்டியுள்ளதெனவும் இதேவேளை வல்லரசுகளாக வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளினால் உலகில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் செல்வாக்கு முடிவுக்கு வருமென்ற வாதங்களை நிராகரித்துமுள்ளார்.

And yet, as this rapid change has taken place, it has become fashionable in some quarters to question whether the rise of these nations will accompany the decline of American and European influence around the world. Perhaps, the argument goes, these nations represent the future, and the time for our leadership has passed.” That argument is wrong.The time for our leadership is now.


இது எமது தலைமைத்துவகாலம் தலைமைத்துவம் காலத்திற்கேற்ப மாற்றத்தினைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறெனில் நாளடைவில் அமெரிக்க பிரிட்டிஷ் தலைவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு கிளாஸ் மதுவுடன் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அம் மாற்றம் அமைந்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

sources from ourummah.org

முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய "நேர் அணுகுமுறை" Positive approach

M.ஷாமில் முஹம்மட்

முஸ்லிம்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதிதூதர் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வேத நூலை அல்குர்ஆனை முழுமையாக நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஸஹிஹான ஹதீஸ்களை முழுமையாக நம்பி விசுவாசிக்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகைக்காக அழைகின்றார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு இறைவனை , ஒரு திசையை நோக்கி தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் இறைவனை தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைக்கின்றார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸகாத் கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜை கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் அல் ஜிஹாதை ஒரு கடமையாக கொள்கிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பதை கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் -அல் குதுஸ்- மீட்பதை கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உலகளாவிய தலைமையை ஏற்படுத்த விரும்புகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் உலகில் மீ இஸ்லாம் மாபெரும் சக்தியாக உருவாக விரும்புகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைதான் இஸ்லாம் என்றும் நம்புகிறார்கள்

இப்படி பல விடையங்களை குறிப்பிட முடியும் இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைகளை எடுத்துக்கொண்டால் பலமான சமூக ஒற்றுமைக்கான கட்டமைப்பு இருப்பதை காணமுடியும் நாம் ஒரே உம்மாஹ் என்ற கோட்பாட்டு ஒரு கிராமத்தில் ஒரு கோடியில் அதிலும் ஓலைகளால் ஆண ஒரு சிறிய மஸ்ஜிதில் தொடங்கி மக்காவின் கவ்பா வரை தொடர்கிறது முஸ்லிம்களின் ஒற்றுமை ஒரு ஊரில் அல்லது ஒரு நகரத்தில் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் உணர்த்தபடுகிறது முஸ்லிம்கள் அனைவரும். தேச , பிரதே, மொழி , இன , வர்க்க ,வகுப்பு வாதங்கள் அனைத்தையும் உதறிவிட்டு தொழுகைக்காக இறைவன் முன் முஸ்லிம் என்ற ஒரு அடையாளத்துடன் மட்டும் நிற்க வேண்டும் இங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த ஒரு அடையாளமும் நிராகரிக்கப்பட்ட அடையாளம்தான் அவ்வாறே பல ஊர், நகரம் அல்லது அவற்றின் பல பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகைக்காக ஒன்று சேரும் போது சமூக ஒற்றுமை பலமாக உணர்த்தபடுகிறது அவ்வாறே வருடாந்தம் இரு பெருநாள் தொழுகைகளின் போதும் பல்வேறு ஊர்களையும் , நகரங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் ஒரு பரந்த திடலில் ஒன்று சேரும் போது பலம் பொருந்திய ஒற்றுமை அங்கு தனித்துவமாக உணர்த்தபடுகிறது. இவ்வாறு இஸ்லாம் தனது உலகளாவிய முஸ்லிம் உம்மாஹ் என்ற கோட்பாட்டை உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிவரை கட்டமைத்து நிற்கிறது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டு கட்டுமான பணி ஹஜ்ஜில் மிக பலமாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழுதப்படுகிறது - அங்கு கிழக்கும், மேற்கும் , வடக்கும் தெற்கும் சந்திக்கிறது. அங்கு சந்திப்பவர்கள் வெள்ளை மனிதனாக கருப்பு மனிதனாக நகர மனிதனாக கிராம மனிதனாக அமெரிகனாக , ரஷ்யனாக விவசாயியாக தொழிலாளியாக முதலாளியாக மத்தியதர உயர்தர கீழ்தர வர்க்கத்தவனாக இருக்கலாம் , ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம் மொழி ரீதியாக தமிழ் பேசுபவானாக, சிங்களம் பேசுபவானாக, அரபு பேசுபவானாக, சீன மொழி பேசுபவானாக இருக்கலாம் இந்த சிறிய அடையாள அடுக்குகள் அனைத்தையும் உதறிவிட்டு தொழுகைக்காக இறைவன் முன் முஸ்லிம் என்ற ஒரு அடையாளத்துடன் மட்டும் நிற்க வேண்டும் இங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த ஒரு அடையாளமும் நிராகரிக்கப்பட்ட அடையாளம்தான் இங்கு மனித பாகுபாடுகளை புறக்கணித்து முஸ்லிம் என்ற அடையாள முத்திரையை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதைத்தான் இஸ்லாம் போதிக்கிறது இதுதான் நாம் ஒரு உம்மத் ,நாம் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டுக்கு வழிகாட்டி சர்வதேச முஸ்லிம் உம்மாஹ்வின் ஒற்றுமை நிஜமாகும்ஆகவே எமது உம்மாஹ்வின் ஒற்றுமை என்பது வெறும் கானல் நீராக இன்ஷா அல்லாஹ் இருக்காது நிஜமான போகும் உண்மை இஸ்லாம் மீண்டும் உலகை அரசோச்சும், முஸ்லிம்களும், மனிதத்தை விரும்புபவர்களும் ஒரு அணியில் இருப்பார்கள் மனித விரோதிகளும், பாசிச மேலாதிக்கசக்திகளும் பகைவன் படையில் இருப்பார்கள் மனிதன் மனிதனை அடிமைபடுத்தும் பாசிச மேலாதிக்க நிலை ஒழிக்கபடும் மனிதன் இறைவனுக்கு மட்டும் கட்டுப்படும் சுதந்திரமான நிலை தோன்றும் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டை நோக்கி உலகின் ஒவொரு கோடியில் இருந்து நகரவேண்டும் இந்த நகர்வுகள்தான் குறுந் தேசிய எல்லைகள் அகற்றப்பட்ட விரிந்த முஸ்லிம் தேசம் உருவாக துணைபுரியும் அதைத்தான் கிலாபாத் என்போம் அங்குதான் இஸ்லாமிய தலைமை பிறக்கும் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்த்தும் இதை அல்லாஹ் கூறும்போது

"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;". அல்குர்ஆன் 3:103இந்த வசனம் முஸ்லிம்கள் அனைவரும். தேச , பிரதே, மொழி , இன , வர்க்க ,வகுப்பு வாதங்கள் அனைத்தையும் உதறிவிட்டு ஒன்று பட்ட ஒரு உம்மாவாக இருக்க வேண்டும் என்பதைதான் வலியுறுத்துகின்றன. அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது அல்குர்ஆனை பற்றிப்பிடிக்க கட்டளை இடுகிறான் . இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் தனித்தனி நார்களாக இருந்ததைத்தான் ஒன்றினைத்து ஒன்றாக கயிறாக உருமாற்றுகிறோம் என்பதை எளிதான உணார்த்துவதன் மூலம் குழுக்களாக , வகுப்புகளாக வர்க்கங்களாக , இனங்களாக இருக்கும் மனிதர்கள் அனைத்தையும் உதறிவிட்டு ஒன்று பட்ட ஒரு உம்மாவாக இருக்க வேண்டும் என்பதைதான் வலியுறுத்துகின்றன .(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவினை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்குர்ஆன் 3:105

Islam Dominaton


May 28, 2011

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்


புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்!! பகுதி 02


இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்

முஸ்லிம்கள் எத்தகைய சமூகப்பின்னணிகளைக் கொண்டவர்களாக, எத்தகைய கருத்துமுரண்பாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உறவு தாம் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை கொல்வது என்பது இன்னொரு முஸ்லிமுக்கு ஒரு தேர்வாகக்கூட இருக்கக்கூடாது. எமது தேசியங்களும், கோத்திரங்களும், மத்ஹப்களும், ஜமாஆத்களும் முஸ்லிம்கள் என்ற எமது அடையாளத்திற்கு முன்னால் வலுவிழந்தவைகள். அவை இரண்டாம் பட்சமானவை. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளாரானபோது முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்கள். அவ்வொப்பந்தம் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கிறது.

“ இது அல்லாஹ்வின் து}தர் முஹம்மத்(ஸல்) அவர்களின் புறத்திலிருந்தான ஓர் ஒப்பந்தமாகும். இது குரைஷிகளைச் சேர்ந்த முஸ்லிம்களினதும்;, யத்திரிப்பின் முஸ்லிம்களினதும், அவர்களை பின்பற்றியவர்களினதும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களினதும், அவர்களுடன் சேர்ந்து போரிட்டவர்களினதும் உறவை ஒழுங்குபடுத்தும் ஆவணமாகும். ஏனையவர்களிலிருந்து வேறுபட்ட  இவர்கள் அனைவரும் ஓர் உம்மாஹ் (சமூகம்) ஆகும்.”

சகோரத்துவம் குறித்து அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகிறான்.

“ நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே!” (49:10)

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து முஹம்மத்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்.

“ எவனுடைய கருத்தில் எனது உயிருள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் எவரும் சுவர்க்கம் புகமாட்டார் விசுவாசித்தவரைத் தவிர, உங்களில் எவரும் விசுவாசித்தவராக மாட்டார், நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை, நான் உங்களுக்கு மத்தியில் அன்பினை ஏற்படுத்தும் ஒன்று குறித்து வழிகாட்டாதிருக்கவா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் (சாந்தி) பரப்புங்கள்.” (முஸ்லிம்)


வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொள்ளும் வழிமுறை

உண்மையில் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அமுல் செய்யக்கூடிய பொறுப்பும், து}ய்மையுமுள்ள தலைமை இல்லாமையே. பெரும்பாலும் இஸ்லாத்தின் நீதியும், பாதுகாப்பும் மட்டுமே, பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவை உருவாகாமல் இருக்க வழி செய்து விடுகின்றன. எனினும் அதனையும் தாண்டி பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் இஸ்லாமியத்தலைமை அதனை ஷாPஆவின் பிரகாசத்தில் தீர்த்து வைத்துவிடுகிறது.

இஸ்லாம் ஒர் சம்பூரண வாழ்க்கைத் திட்டமாகையால் அது எவ்வகையான பேதங்களையும் தீர்த்துவைக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளது. அது கிலாபாவின் குடிமக்களுக்கும், கலீபாவுக்கும் இடையில் தோன்றும் பேதங்கள் தொடக்கம் வௌ;வேறு குழுக்கள், இயக்கங்கள் என்பவற்குக்கிடையில் தோன்றும் சச்சரவுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழும் கருத்து வேறுபாடுகளால் உருவாகும் பிரச்சனைகள் வரை அனைத்து வகையான சச்சரவுகளையும் தனக்கேயுரிய பாங்கில் தீர்த்து வைத்து விடுகிறது. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் பேதங்களைக் களைந்து அவர்களை ஓரணியாக மாற்றி பிளவு எனும் பாரிய ஹராத்திலிருந்து பாதுகாப்பதற்கு கிலாபா ஒன்றினாலேயே சாத்தியமாகும்.

கிலாபத் ஆட்சியிலே குடிமக்களுக்கும், கலீபாவுக்குமிடையில் தோன்றும் பிரச்சனைகளை மஹ்கமத் அல் மதாழிம் (அநீதச்செயல்களுக்கான நீதிமன்றம்) என்ற விஷேட நீதிமன்றம் தீர்த்து வைக்கும். அதேபோல ஒரு குறித்த விடயத்தில் ஷாPஆவின் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றும் கருத்து பேதங்கள், கலீபா அந்நிலைப்பாடுகளில் (இஜ்திஹாத்) ஒன்றைத் தேர்வு செய்து முஸ்லிம்கள் மீது அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருப்பதால் அச்சிக்கல் நடைமுறை hPதியாகத் தீர்க்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், கிலாபத்தின் ஒறுமைப்பாடும் உறுதி செய்யப்படும். மேலும் தனிநபர்களோ, அல்லது குழுக்களோ தங்களுக்கிடையில் முரண்பட்டுக்கொண்டால் அவர்களுக்கென நியமிக்கப்படும் நீதிபதி அது குறித்து விசாரித்து அவர் மேற்கொள்ளும் தீர்மானம் இறுதித்தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தகைய பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். எனவே கிலாபத்தை உருவாக்குவதில் நாம் முனைப்புக்காட்டுவது எமது முரண்பாடுகள் பலவற்றை தீர்ப்பதற்காக நாம் எடுத்து வைக்கும் எட்டுக்களாகும். எனினும் கலீபா இல்லாத நிலையில் தாண்தோன்றித்தனமாக இப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கலீபா ஒருவர் இல்லாத நிலையில் கூட முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் ஷாPஆவிற்கு கட்டுப்பட்டு அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தமது முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதன்போது எவர்களேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அத்துமீறி நடந்தால் அவர்களை அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ் வருமாறு கட்டளையிடுகிறான்.

“விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரின்மீது அக்கிரமம் செய்து வரம்பு மீறினால் (வரம்பு மீறிய ) அக்கூட்டத்தவர் (அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்) திரும்பி வரும் வரை நீங்கள் போர் செய்யுங்கள். அக்கூட்டத்தார் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பிவிட்டால் அவ்விருவருக்கிடையே நீதியைக்கொண்டு சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.” (49:9)

ஆகவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது கிலாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் விடயத்தில் கூட வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு இரத்தம் சிந்துவதை இஸ்லாம் முற்றாக மறுத்துரைக்கிறது. இன்று முஸ்லிம் அரசுகளுக்கும் அதனை எதிர்த்து போராடும் போராட்டக் குழுக்களுக்குமிடையே இடம்பெறும் அதிகமான ஆயுதப் போராட்டங்களை எடுத்துக்கொண்டால் அவை இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றத்தை அரச மட்டத்தில், சமூகத்தில் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என முனையும் கூட்டத்தாருக்கும், அவற்றை நசுக்க முனையும் அரசுக்மிடையிலான போராட்டங்களாகவே இருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகளுக்கு காரணமான இந்த முக்கிய விடயம் குறித்து இங்கே மிகச் சுருக்கமாக குறிப்பிடுவது பொருத்தமாகும். இஸ்லாமிய அரசை ஏற்படுத்த அல்லது ஷாPஅத்தை அமுல்படுத்த முனையும் இயக்கங்கள் இஸ்லாம் இது குறித்து எத்தகைய வழிகாட்டலை வழங்குகிறது என்பதை நிதானமாக ஆராய வேண்டும். அத்துடன் கிலாபத்தை நோக்கிய பாதை இஸ்லாத்தின் வெளித்தில் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் எவ்வாறு கிலாபத்தை நோக்கி இயங்கினார்கள் என்பதையும், அவர்களுடைய பாதை எவ்வித முரண்பாடுகளுமின்றி எவ்வாறு தெளிவாக அமைந்தது என்பதையும் ஆராய்வது மிக மிக முக்கியமாகும். அல்லாஹ்(சுபு) தனது து}தரிடம்(ஸல்) நீங்கள் வழிநடாத்தும் உங்கள் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறுங்கள் என்று கீழ்கண்டவாறு சொல்கிறான்.

“(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான் (உங்களை)அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின்மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (12:108)

கிலாபத்தை நோக்கிய ரஸ}ல்(ஸல்) அவர்களின் பயணத்தில் இராணுவ வழிமுறை உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் தெளிவாப்புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் மக்காவில் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அவர்களை முற்று முழுதான இஸ்லாமிய முன்மாதிரிகளாக மாற்றினார்கள். இவ்வாறு எவரெல்லாம் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தின ஷரிஆவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு சுவர்க்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பற்ற அவாவுடன் உறுதியாக இஸ்லாத்திற்காக உழைத்தார்கள். பின்னர் ஈமானிலும், திருக்குர்ஆனிலும் நன்கு தோய்த்தெடுக்கப்பட்ட அந்த ஆரம்ப முஸ்லிம்கள் ரஸ}ல்(ஸல்) அவர்களின் தலைமையிலான ஒரு அரசியல் சமூகக் குழுவாக செயற்பட்டு மக்காவில் ஒரு அறிவார்ந்த போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் மேற்கொணடார்கள். இதன் மூலம் அங்கு நிலவிவந்த பழக்க வழக்கங்களையும், சமூக, அரசியல் கட்டமைப்புக்களையும், அங்கு நிலை கொண்டிருந்த பாரம்பரியம், வழக்காறுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் துணை கொண்டு எதிர்த்தார்கள். இவ்வாறு ஜாஹிலிய சமூக வழமைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளையும், தீர்வுகளையும் முன்வைத்தார்கள். இவ்வாறு வளர்ந்த போராட்டத்திற்கு மத்தியில் இஸ்லாத்திற்கான உதவியை அதாவது நுஸ்ராவை சமூகத்தலைமைகளை நோக்கியும், ஆட்சி மற்றும் அதிகார வர்க்கத்தை நோக்கியும் கோருமாறு அல்லாஹ்(சுபு) முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த தீர்க்கமான பாரிய முயற்சியில் இடைவிடாது முயற்சித்துக்கொண்டிருந்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறுதியாக நுஸ்ராவை யத்ரிபின் அன்ஸார்களிடமிருந்து அல்லாஹ்(சுபு) வழங்கினான். இந்த பரிணாம வளர்ச்சியையே நாமும் எமது உம்மத்தின் மத்தியில் பொறுமையுடன் ஏற்படுத்த வேண்டும். இது எமக்குளேயே நாம் ஐக்கியமிளந்து ஒருவரை ஒருவர் குறி வைக்கும் அழிவிலிருந்து பாதுகாக்கும்.

warmcall.blogspot.com

உம்மத்தின் பிளவும் காலத்துவ சக்திகளின் ஆதிக்கமும்


புனிதமானது ஓர் முஸ்லிமின் இரத்தம்!! பகுதி 03

உம்மத்தின் பிளவும் காலத்துவ சக்திகளின் ஆதிக்கமும்

உண்மையில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தம் செய்து கொள்வதன் மிகப்பாரது}ரமான அடுத்த விளைவு காலனித்துவ குப்பார்கள் எம்மீது தமது இரும்புக்கரத்தை மென்மேலும் பிரயோகிப்பதற்கு வழிவிடுவதாகும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியரும் முஸ்லிம் உம்மத்தின் பலத்தை குறைவாக எடைபோடவில்லை. ஐரோப்பாவின் ஒரு பாரிய பகுதியைக் கூட (அந்தலு}சியா - இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் உட்பட்ட பகுதி) முஸ்லிம் உம்மத் கிலாபத்தின் கீழ் பல நு}ற்றாண்டுகளாக ஆட்சி செய்தது என்பதையும், முஸ்லிம் உம்மத்தை ஓர் கட்டமைக்கப்பட்ட உம்மத்தாக யுத்தத்தில் சந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் முஸ்லிம் உம்மத்தை எவ்வாறெல்லாம் பலகீனப்படுத்த முடியுமோ அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எம்மை மென்மேலும் பிளவுபடுத்த முனைவார்கள். இது குறித்து ரஸ}ல்(ஸல்) கூறிய கீழ்வரும் ஹதீஸ் ஓர்; முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

“எவ்வாறு ஒரு பெரிய உணவுப்பாத்திரத்தை நோக்கி மக்கள் சூழ்ந்து கொள்வார்களோ, அதேபோல உங்களை நோக்கி பல தேசங்கள் சூழ்ந்துகொள்ளும். “ அப்பொழுது நாங்கள் சிறிய எண்ணிக்கையில் இருப்போம் என்பதாலா அவ்வாறு ஏற்படும்” என ஒருவர் கேட்டபோது, இல்லை, அப்பொழுது உங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும், எனினும் நீங்கள் வெள்ளத்தில் உருவாகும் நுரைகளைப்போலிருப்பீர்கள்.” (அபுதாவூத்)

எனவே நிராகரிப்பாளர்களின் நாடுகள் எமது பிளவுகளை வலுப்படுத்தி எம்மை ஆதிக்கம் செலுத்த முனைவார்கள் என்பதையும், இதனையே காலணித்துவ தசாப்த்தங்களில் அவர்கள் நேரடியாக மேற்கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. காலனித்துவ நாடுகள் எம்மீது முதலாளித்துவம் என்ற குப்ர் கட்டமைப்பை திணித்து அவர்களின் அரசியற் கைதிகளாக வைத்துக்கொள்ள முனைந்தார்கள். இதன்மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தி எமது வளங்களை அளவுகணக்கின்றி சுரண்டினார்கள். “ பிளவுபடுத்துதலும், ஆக்கிரமித்தலும்” என்ற இந்த யுக்தியை டி.ஈ. லோரன்ஸ் (லோரன்ஸ் ஒப் அரேபியா) பின்வருமாறு கூறுகிறான். “அவரது அரசியல் மாற்றம் ஓர் வன்முறையான அரசியல் மாற்றமாக உருவெடுக்க செய்துவிட்டால் இஸ்லாம் என்ற அந்த சக்தியின் மீதான எமது அச்சத்தை அழித்துவிடலாம். பிரிப்பதன் மூலம் இஸ்லாத்தை அதன் இதயத்திலேயே அதற்கு எதிராகவே திருப்பிவிடலாம். பின்னர் துருக்கியில் ஒரு கலீபா இருந்து, அரேபியாவில் ஒரு கலீபா இருந்து மதச்சண்டை உருவாகும். பின்னர் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலான ஒன்றாக இருக்காது”. இந்த யுக்தியை பின்பற்றியே சைக் - பிக்கட் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பூமி பிரித்தானியாவுக்கும், பிரான்ஸிற்குமிடையே பங்கு போடப்பட்டது. இந்த ஒப்பந்தமும், ஏனைய ஐரோப்பிய சூழ்ச்சித்திட்டங்களுமே ஒரே கிலாபத்தின் கீழ் இணைந்திருந்த முஸ்லிம் தேசம் இன்று ஐம்பதுக்குமேற்பட்ட தேசங்களாக பிரிந்து முஸ்லிம்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலையை தோற்றிவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்களின் வழித்தடத்ததை பின்பற்றி அதற்கு தலைமைப்பொறுப்பை ஏற்று இன்று ஐக்கிய அமெரிக்கர் தொடர்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை பிளவுபடுத்தி எமது தேசத்தை தாம் விரும்பியவாறு பிரித்து, கூறுபோட்டு வரைந்தெடுத்த தேசப்படத்தை அமெரிக்கா திருப்த்தியுடன் பார்க்கவில்லை. மென்மேலும் அத்தேசங்களை கூறுபோட்டு தனது வேட்டைக்கேற்ற ஒரு புதிய தேச வரைபடத்தை வரைவதற்கு முஸ்லிம் தேசத்திற்குள் கால்பதித்து நிற்கிறது. முஸ்லிம் தேசங்களை மேன்மேலும் பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் அமெரிக்க இராணுவ துருப்புக்களின் சஞ்சிகையொன்றில் 2006ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இத்திட்டத்தில் ஈராக், துருக்கி, பாக்கிஸ்தான், சவூதி அரேபியா உட்பட மேலும் பல முஸ்லிம் நாடுகளை மென்மேலும் பலகீனமான சிற்சிறு நாடுகளாக பிளவுபடுத்தும் சூட்சுமை அடங்கியிருந்தது. இந்தத்திட்டத்தின் அறுவடையையே ஈராக்கிலும், தற்போது பாக்கிஸ்தானிலும் நாம் கண்டு வருகிறோம். எனவே ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை இவர்கள் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை. ஓர் உம்மத் என்ற கோட்பாடுடையவர்களை “உம்மைடிஸ்” என்று அழைக்கும் “ராண்ட்” என்ற அமெரிக்கச் சிந்தனைத் தளமொன்று ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் வியூகம்’ என்ற தனது கட்டுரையில் எத்தகைய வெட்கமுமற்று.“ முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக பழமைவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள். பழமைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்குமிடையில் கூட்டிணைவு ஏற்படுவதை மட்டந்தட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.

இவ்வாறு குப்பார்கள் தமது குறிக்கோளில் தெளிவுடன் வெளிப்படையாகவே எம்முடன் மோதிவரும் நிலையில் நாம் எமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு அவர்கள் விரித்த வலையில் அதுவும் அவர்கள் இங்கே வலையை விரித்து வைத்துள்ளோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற பொழுதும்கூட நாம் அல்லாஹ்(சுபு) மாறு செய்த நிலையில் அதற்குள் சென்று அகப்பட்டுக்கொள்வோமானால் எம்மை எப்படி வர்ணிப்பது.

எனவே கிலாபத்தை நிலைநாட்டுவதன் மூலமாக முஸ்லிம்களை முரண்பாடுகளிலிருந்து பாதுகாத்து அவற்றை ஷாPஆவின் அடிப்படையில் தீர்த்து வைத்து எதிரிகளின் சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு நீதியான ஆட்சியாளரை அல்லாஹ்(சுபு) எமக்கு நல்குவானாக!

“நிச்சமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் நன்கறிந்தவன். (யாவரையும்) நன்குணர்பவன்.”(49:13)

warmcall.blogspot.com

May 25, 2011

கல்வி, கற்றல், கற்பித்தல் - நபிகளாரின் வழிகாட்டல்கள்

இஸ்லாம் கல்வி, கற்றல், கற்பித்தல் தொடர்பாக விரிவாக பேசுகின்ற மார்க்கமாகும். அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.அல்குர்ஆனைப் போலவே நபியவர்களின் ஹதீஸ்களிலும் அறிவு பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளதை காணமுடிகிறது.பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் கிதாபுல் இல்ம் என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும். அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. 

உதாரணமாக 'கிதாபுத் திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புஹாரியில் மாத்திரம் 'கிதாபுல் இல்ம்' என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன. இனி, அறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களை பார்ப்போம்.'ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)'நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. 

ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அறிவை மட்டுமே வாரிசாக விட்டுச் சென்றனர். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.' (அபூதாவுத், அஹ்மத்)

அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும் போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத்தரும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது

.'அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்' என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

இதிலிருந்து இந்த உலகம் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்கமுடிகின்றது.கற்பித்தலுக்கான நபிகளாரின் வழிகாட்டல்கள்கல்வி, அதன் முக்கியத்துவம், கோட்பாடு பற்றியெல்லாம் விளக்கியுள்ள நபியவர்கள் கல்விப் போதனையின் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள், கற்பித்தலுக்குக் கையாளவேண்டிய முறைகள், உத்திகள் பற்றியும் விளக்கியுள்ளார்கள்.மாணவனுக்கு அன்பு காட்டல்:ஆசிரியர், மாணவர்களை அன்பாகவும் பண்பாகவும் நடாத்த வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசானாகக் கருதப்படும் நபி (ஸல்) அவர்கள், மக்களை அன்பின் அடிப்படையில் வழி நடாத்துபவர்களாகவே இருந்தார்கள். இவ்வுண்மையை அல்குர்ஆன் எத்துணை அழகாக விளக்குகின்றது என்பதனைக் கீழ்வரும் திருமறை வசனம் உங்களுக்கு உணர்த்துகின்றது.

''(விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் (அது) அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும்.அன்றி, உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும், விசுவாசிகள் மீது மிகவும் அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்'' (9:28)

தம்மைப் பற்றி வர்ணித்த நபியவர்கள்.....,'உண்மையில் நான் உங்களுக்கு, குழந்தைகளுக்குத் தந்தையைப் போன்று இருக்கின்றேன்' என்றார்கள். (அபூதாவூத், அந்நஸாஈ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்) 

தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான தொடர்பு அன்பினதும் பாசத்தினதும் அடிப்படையில் அமைந்திருக்கும். அவ்வாறுதான் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமிடையிலான தொடர்பும் அமைய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு தந்தை, தனது பிள்ளைகள் மத்தியில் பரஸ்பர பாசத்தை வளர்ப்பது போல ஓர் ஆசிரியர் தனது மாணவர்கள் மத்தியில் பரஸ்பர அன்பை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளார்.மாணவர்களுக்குப் பாடங்களை இலகுபடுத்தியும், ஆர்வமூட்டும் விதத்திலும் போதிப்பது மாணவர்கள் மீது ஆசிரியர்களது அன்பின் வெளிப்பாடாக அமையும். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை ஆசிரியர்களாக, அழைப்பார்களாக. நீதிபதிகளாக அனுப்பிய வேளைகளில் இந்த அம்சத்தையே அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்' (புகாரி , முஸ்லிம்)'கல்வியூட்டுங்கள், கடுமையாக நடத்தாதீர்கள், கல்வியூட்டுபவன் கடுமையாக நடப்பவனைவிடச் சிறந்தவன்.' (அல்-பைஹகீ -ஷுஅபுல் ஈமான்) மக்களுக்கு அறிவூட்டும் ஆசானாகத் திகழ்ந்த நபியவர்கள் தம்மிடம் போதனைகளைப் பெற வருவோரை அன்பாகவும் பண்பாகவும் நடத்துபவர்களாக இருந்தார்கள் என்பதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது. 

''நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீராயின், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்'' (3:159) ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது, தடியைப் பயன்படுத்துவது இஸ்லாமிய கல்வி முறையில் வரவேற்கப்படுவதில்லை. ஏனெனில், தடியைப் பாவிப்பது, நாம் இதுவரை விளக்கிய மாணவர்களை அன்புடன் நடாத்தும் பான்மைக்கு முரணானதாகும்.'நபி (ஸல்) அவர்கள் தமது கையினால் எந்தவொரு பெண்ணையோ, பணியாளனையோ அல்லது மிருகத்தையோ அடித்ததில்லை' என அன்னாரின் சேவகனாகவிருந்த அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)பிள்ளைகள் பத்து வயதை அடைந்த பின்னரும் தொழுகையை நிறைவேற்றாத வேளையில், அவர்களை அடிப்பதற்குப் பெற்றோருக்கு இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. இது தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக விதிவிலக்காக அமைந்த ஒரு சட்டமாகும்.தவறு செய்தவனுக்கு அனுதாபம் காட்டல்மாணவர்கள் தவறு செய்யும் போது கடுமையாக நடந்து கொள்வது, தண்டிப்பது, பரிகசிப்பது போன்ற அணுகுமுறைகளை விட, அவர்களின் மீது அனுதாபம் கொள்வதே வரவேற்கத்தக்கதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இதனைத் தெளிவாகக் காண்கின்றோம்.

ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித்தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தனர். உடனே நபியவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி ''அவரைக் கண்டிக்காது விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவரையணுகி, ''இப்பள்ளிவாசல்கள் சிறுநீர் கழிப்பது, அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்குத் தக்க இடங்களல்ல. இவை அல்லாஹ்வை 'திக்ர்' செய்வது, தொழுவது, குர்ஆன் ஓதுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்'' என்று கூறிவிட்டு, ஒருவரை அழைத்து, ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)இங்கு நபியவர்கள், அந்த மனிதர் பிறந்து வளர்ந்த நாட்டுப்புற பின்னணியைக் கவனத்திற் கொண்டு, அவர் செய்த தவறை எவ்வாறு அனுதாபத்துடன் நோக்கி, மிகவும் நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதை காண்கின்றோம்.இவ்வாறு, ஒரு பாடசாலைக்கு வரும் மாணவர்களும் வித்தியாசமான குடும்பங்களிலிருந்து வருவார்கள். முரண்பட்ட பண்புகளுடையவர்களாக இருப்பார்கள். இதனால், அவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் மிகவும் அனுதாபத்துடன் நோக்குவதே சாலச் சிறந்ததாகும்.அன்புகாட்ட வேண்டும், அனுதாபம் கொள்ள வேண்டும் எனும்போது, தவறு செய்தவர்களை அவர்கள் செய்த தவறுகளைக் சுட்டிக்காட்டாமலேயே விட்டு விட வேண்டும் என்பது அர்த்தமல்ல. மாறாக, நாசுக்காக, தேவையைப் பொறுத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றையுணர்த்துவது பிரதானமாகும். திறமைகளைப் பாராட்டுதல் மாணவர்களுக்கு அன்பு காட்டுவது, அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி, நாசுக்காகத் திருத்துவது போன்றவற்றுடன் மாணவர்களின் திறமைகளை மெச்சுவதும், அவர்களது நன்னடத்தைகளைப் பாராட்டுவதும் முக்கியமானவையாகும். எப்போதும் ஆசிரியர், திறமையை வெளிகாட்டும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.

இந்தவகையில்தான் நபி (ஸல்) அவர்கள், அழகாக அல்குர்ஆனை ஓதக்கூடியவராக இருந்த அபூமூஸா அல் அஷ்அரி (றழி) அவர்களைப் பாராட்டினார்கள். (புகாரி, முஸ்லிம்)பொதுவாக ஸஹாபாக்கள் நல்ல விடயங்களைச் செய்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களை நபியவர்கள் புகழ்ந்திருப்பதையும் பாராட்டியிருப்பதையும் வரலாற்றில் காணமுடிகின்றது. நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (றழி) அவர்களை 'இந்த உம் மத்தின் நம்பிக்கைக்குரியவர் என்றும், அபூபக்கர் (றழி) அவர்களை உம்மத்தினரில் அன்பானவர் என்றும், அலி (றழி) அவர்களைச் சிறந்த நீதிபதியென்றும், ஸைதை வாரிசுரிமைச் சட்ட வல்லுநர் என்றும், முஆத் (றழி) அவர்களை ஹலால் ஹராம் விடயங்களில் தேர்ந்தவர் என்றும் வர்ணித்துப் பாராட்டியுள்ளார்கள்.படிமுறை அமைப்பைப் பேணல்:இஸ்லாம் எல்லா விடயங்களிலும் படிமுறை அமைப்பைப் பேணுகின்றது. இஸ்லாமிய சட்டங்களும் படிப்படியாகவே வழங்கப்பட்டன. கல்விப் போதனையின் போதும் இம்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாம் போதிக்கின்றது. முஆத் (றழி) அவர்களை நபியவர்கள் யெமன் பிரதேசத்திற்கு அனுப்ப முற்பட்ட வேளையில் எவ்வாறு படிப்படியாக, ஒன்றன் பின் ஒன்றாக மார்க்கக் கடமைகளை அங்கு வாழும் மக்களுக்கு விளக்க வேண்டுமென்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் அளவு, அமைப்பு ஆகிய இரண்டிலும் இப்படிமுறையைப் பேண வேண்டும் அதாவது, மாணவனுக்கு அவன் இருக்கும் தரத்தில் எந்தளவு அறிவைக் கொடுக்க வேண்டுமோ அந்தளவையே வழங்க வேண்டும். ஒரே தடவையில் அதிகமான விடயங்களைப் புகுத்த முற்படும் போது, அவனால் கிரகிக்க முடியுமான சிறிதளவையும் கூட, அவன் இழந்து விடும் நிலையே உருவாகும்.மேலும், பாடங்களைப் பொறுத்தவரையிலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதலில் தெரிந்ததையும் பின்னர், தெரியாததையும் முதலில் தெளிவானதையும் பின்னர் மயக்கமானதையும் முதலில் இலகுவானதையும் பின்னர் கஷ்டமானதையும், முதலில் நடைமுறையையும் பின்னர் சித்தாந்தத்தையும் படிமுறை அமைப்பில் கற்பிக்க வேண்டும். முக்கியமான விடயம் யாதெனில், ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர், முதலில் மாணவர்களுக்கு அப்பாடத்துடன் தொடர்பான சிக்கலான, நுணுக்கமான விடயங்களைக் கற்பிக்கக் கூடாது. அப்பாடத்தின் இலகுவான, மயக்கமற்ற பகுதியில் இருந்தே போதனையை ஆரம்பிக்கவேண்டும்.எனவேதான் எமது ஆரம்பகால அறிஞர்கள், தரத்தைக் கவனத்திற் கொண்டு, நூல்களைக் கட்டங்களாகப் பிரித்து எழுதினார்கள். உதாரணமாக, இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் சட்டங்களை விளக்கும் ஓர் ஆரம்ப நூலை அல்வஜீஸ் (சுருக்கம்) என்ற பெயரில் எழுதினார்கள். பின்னர் அல்வஸீத் (இடைநிலை நூல்) என்ற பெயரில் மற்றொரு நூலை எழுதினார்கள். அடுத்து அல்மப்ஸூத் (விளக்கம்) எனும் பெயரில் விரிவான ஒரு நூலை ஆக்கினார்கள்.இவ்வாறு மாணவர்களின் தர வித்தியாசத்தைக் கருத்திற் கொண்டே எமது இமாம்கள் நூல்களை எழுதியுள்ளார்கள்.தனிநபர் வித்தியாசங்களைக் கவனத்திற் கொள்ளல் ஆற்றல்களையும் திறமைகளையும் பொறுத்தவரையில் மாணவர்கள் பல தரத்தினராக இருப்பர். விளங்கும் தன்மை, கிரகிக்கும் ஆற்றல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்பர். ஒருவருக்குப் பொருந்தும் ஒன்று மற்றொருவருக்குப் பொருத்தமாயிருக்காது. ஒரு சூழலுக்கு இயைபாக இருக்கும் ஒன்று மற்றொரு சூழலுக்கு ஏற்புடையதாய் இருக்காது ஒரு காலத்துக்குப் பொருத்தமாயமையும் ஒன்று மற்றொறு காலத்துக்குப் பொருத்தமற்றதாக இருக்க முடியும்.ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக அவதானித்து அவனுக்குத் தேவையான அறிவை அவசியமான அளவிலும் தரத்திலும், பொருத்தமான நேரத்திலும் வழங்கும் திறமையுள்ளவரே சிறந்த ஆசிரியர் ஆவார்.மனித இனத்தின் முதல் ஆசானாகக் கருதத்தக்க நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வித்தியாசங்களை கவனத்திற் கொள்ளத் தவறவில்லை. 

கல்விப் போதனையின் போது மேற் குறிப்பிட்ட வேறுபாடுகளை நபி (ஸல்) அவர்கள் கவனத்திற் கொண்ட விதத்தைப் பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிட முடியும்.

1. தம்மிடம் வந்தவர்களின் வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டு, அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற போதனைகளைப் பொருத்தமானதாக அமைத்துக் கொண்டமை.. நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய வேளைகளில், அவர்கள் வித்தியாசமான உபதேசங்களைச் செய்தார்கள்.. ஒருவருக்கு 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு 'ஷிர்க்' வைக்கக் கூடாது. தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத்தையும் கொடுக்க வேண்டும். இனபந்துக்களைச் சேர்ந்து நடக்க வேண்டும்' என்றார்கள்.. மற்றொருவருக்கு, 'எங்கிருந்த போதும் அல்லாஹ்வைப் பயந்து கொள்வீராக. ஒரு தீமையைச் செய்துவிட்டால், அதனைத் தொடரந்து ஒரு நன்மையைச் செய்து விடுவீராக. அந்த நன்மையானது அத்தீமையை அழித்து விடும். மனிதர்களுடன் பண்பாகப் பழகுவீராக' என்றார்கள்.. மேலும் ஒருவருக்கு, 'அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று கூறிப் பின்னர் அதில் நிலைத்திருப்பீராக' என்று உபதேசித்தார்கள்;.. இன்னொருவருக்கு நபியவர்கள், 'கோபப்படாதீர்' என உபதேசித்தார்கள்.

2. ஒரே கேள்விக்கு, அதனைக் கேட்டவர்களைக் கவனத்திற் கொண்டுவித்தியாசமான பதில்களைக் கூறியமை. உதாரணமாக, 'சிறந்த அமல் எது? அல்லது இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது? இவ்வாறு பலர், பல சந்தர்ப்பங்களில் நபியவர்களிடம் கேட்டுள்ளனர். இத்தகைய கேள்விகளுக்கு அவர்கள் சிலபோது தொழுகையையும், மற்றொரு போது ஜிஹாதையும். சிலவேளை ஹஜ்ஜையும் சிறந்த அமல்' என விளக்கியுள்ளார்கள்.. இந்த வகையில்தான் 'காலச் சூழல் மாற்றங்களுக்கேற்ப சட்டங்கள் மாறுபடும்' என்ற அடிப்படையை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

நபியவர்கள் தம்மிடம் வந்தவர்களின் வேறுபாடுகளைப் பொறுத்து அவர்களுடன் நடந்து கொள்ளும் முறையையும் வித்தியாசமானதாக அமைத்துக் கொண்டார்கள்.. மேலும், நபியவர்கள் கட்டளைகளைப் பிறப்பிக்கும்போது மனிதர்களின் சக்தி, பின்னணி போன்றவற்றைக் கருத்திற் கொண்டார்கள்.. ஒருவரின் குறித்த ஒரு நடத்தையை அங்கீகரித்த நபி (ஸல்) அவர்கள், மற்றொருவரில் அதே நடத்தை வெளிப்பட்டபோது அதனை அங்கீகரிக்காதிதிருந்ததுண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனிதர்களின் பின்னணிகள் போன்றவற்றைக் கவனித்தே அவர்கள் இவற்றைத் தீர்மானித்துள்ளார்கள்.நடுநிலையைக் கைக்கொள்ளல். கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் எப்போதும் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கியமானதோர் அம்சமாக இது விளங்குகின்றது. மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்படும் அளவுக்கு விரிவாகவோ, அல்லது பிரயோசனத்தைக் குறைத்துவிடும் அளவுக்குச் சுருக்கியோ கல்விப் போதனையை அமைத்துக் கொள்ளக் கூடாது, மாறாக நடு நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மக்களுக்குப் போதனை செய்பவர்களாக இருந்தார்கள். ஒரு முறை ஒரு மனிதர் அவர்களை அணுகி, 'ஏன் நீங்கள் தினமும் போதனை செய்யக் கூடாது?' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள். 'நான் மக்களைச் சலிப்படையச் செய்வதை வெறுக்கின்றேன். இதுவே அப்படிச் செய்ய எனக்குத் தடையாகவுள்ளது. எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகக் கவனமாக உபதேசித்தது போன்றே நானும் நடந்து கொள்கின்றேன்' என்றார்கள். (ஆதாரம் : புகாரி).

நடைமுறைச் சம்பவங்களைப் போதனைக்குப் பயன்படுத்தல். ஒரு சிறந்த ஆசிரியர் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வைத்து மாணவர்களுக்குச் சிறந்த படிப்பினைகளை வழங்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு நிகழ்ச்சியையும் இந்த வகையில் பயன்படுத்தாதிருந்ததில்லை.. ஒரு முறை கௌரவமான மக்ஸுமிய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி களவாடி அகப்பட்டுக் கொண்டாள். அவளது கை வெட்டப்பட்டுத் தண்டிக்கப்படுவதை அவளது கோத்திரத்தவர்கள் விரும்பவில்லை. எனவே, இது விடயமாக (நபி) ஸல் அவர்களிடம் சிபாரிசு செய்வதற்காக, நபியவர்களின் அன்புக்குரியவரான உஸாமா பின் ஸைதை அனுப்பிவைத்தனர். உஸாமா (றழி) அவர்கள் நபியவர்களிடம் வந்து அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து பேசியபோது, நபி (ஸல்) அவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சமத்துவம் பற்றியதும் குல, வகுப்புவாதம் பற்றியதுமான இஸ்லாத்தின் கருத்தை வலியுறுத்த விரும்பினார்கள். அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.'உஸாமாவே! அல்லாஹ்வின் தண்டனை விடயத்திலா சிபாரிசு செய்கின்றீர்? உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அழிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்களில் மேன்மகன் திருடினால் அவனை விட்டுவிடுவர்: பலவீனன் திருடினால் அவனைத் தண்டிப்பர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஹம்மதுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், நான் அவரது கையையும் வெட்டியேயிருப்பேன்.

'நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது! இதனைக் கண்ட மக்கள், ரஸூலின் மகன் இறந்ததுதான் இக்கிரகணத்திற்குக் காரணமாகும் என்று பேசிக் கொண்டனர். பொதுவாக இத்தகைய மூட நம்பிக்கைகள் அன்றைய ஜாஹிலிய்யாக் கால மக்களிடம் நிலவின, இத்தகைய மூட நம்பிக்கைகள் பிழையானவை என்று விளக்குவதற்கு நபியவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் மக்களுக்கு பின்வருமாறு கூறினார்கள்.'மனிதர்களே!, சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும்.

அவை, ஒருவர் பிறப்பதாலோ இறப்பதாலோ கிரகணத்திற்குட்படுவதில்லை.'கற்பித்தலுக்கு பொருத்தமான சாதனங்களைப் பயன்படுத்தல். நபி (ஸல்) அவர்கள், தமக்குக் கிடைக்கக் கூடியதாகவிருந்த பலதரப்பட்ட கற்பித்தல் சாதனங்களையும் பயன்படுத்தினார்கள்..'ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், 'மண்ணில் ஒரு கோட்டைக் கீறி, ஸஹாபாக்களுக்கு அதனைச் சுட்டிக் காட்டி, இதுவே அல்லாஹ்வுடைய பாதையாகும்' என்றார்கள். பின்னர் அக்கோட்டின் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பல கோடுகளைக் கீறி 'இவை பல பாதைகளாகும். இவை ஒவ்வொன்றின் மீதும் ஒரு ஷைத்தான் இருக்கின்றான். அவன் அதன் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றான்.' என்று கூறிவிட்டு 'இதுவே நேரான பாதையாகும். இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனைய பாதைகளைப் பின்பற்றாதீர்கள். அவை உங்களை அவனது (அல்லாஹ்வினது) பாதையில் இருந்து பிரித்து (வழிகெடுத்து) விடும்' என்ற ஸூறத்துல் அன்ஆமின் 153 ஆம் வசனத்தை ஓதிக்காண் பித்தார்கள்.மேலும், பல சந்தர்ப்பங்களில் நபியவர்கள் சில கருத்துக்களைக் காட்சிகளினூடாக விளக்கி, அவற்றை மனதில் ஆழமாகப் பதியவைக்க முயன்று வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. 'தக்வாவுக்குரிய இடம் உள்ளமாகும்' என்ற கருத்தைக் கூற விரும்பிய நபியவர்கள் தமது நெஞ்சைக் காட்டி 'தக்வா இருப்பது இங்குதான்' என்று மூன்று முறை கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 'நானும், அனாதைகளைப் பராமரித்தவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்' என்று கூறி, நபியவர்கள் தமது இரண்டு விரல்களை இணைத்துக் காட்டியமையும் இங்கு குறிப்பிடக்கூடிய ஓர் உதாரணமாகும்.. நபி (ஸல்) அவர்கள் போதனைகளின் போது விரிவுரை முறையைக் கையாண்டார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாக, அவர்களின் இறுதி ஹஜ்ஜின் பிரசங்கங்களை குறிப்பிட முடியும். இத்தகைய பிரசங்கங்களை வெறும் விரிவுரைகளாக அமைத்துக் கொள்ளாது, கேள்விகள் எழுப்பி, சபையோரை விழிப்புடன் வைத்துக் கொள்வார்கள் நபியவர்கள்.உதாரணங்கள், உவமைகள் மூலம் பல கருத்துக்களை விளக்குவதும் நபியவர்களின் கற்பித்தல் முறைகளில் ஒன்றாகும். இதற்குப் பல உதாணரங்களை ஸீராவில் காணலாம். இங்கு இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் உங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம்.'தன்னை மறந்துவிட்டுப் பிற மனிதர்களுக்குப் போதிக்கும் மனிதன், பிறருக்கு ஒளியைக் கொடுத்து, தன்னை எரித்துக் கொள்ளும் திரியைப் போன்றவனாவான்.''முஃமின் தேனீயைப் போன்றவனாவான். அது நல்லதைச் சாப்பிடும், நல்லதையே வெளியேற்றும். அது ஒரு கொடியில் அமர்ந்தாலும் அதனை முறித்து விடாது.' (அத்தபரானி, அல் பஸ்ஸார்)இவற்றுடன், போதனையின் போது இடைக்கிடையே கேள்விகள் எழுப்புவதன் மூலமும் நபியவர்கள் தாம் கூற வந்த கருத்துக்களை சபையோரின் மனதில் பதியவைக்க முயன்றமைக்கு உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.

sources from thalaimaithuvam.blogspot.com

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்!


அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.
பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.
தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.
இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.
ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?

றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.
இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.

“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.

பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.
தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள்,
தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள்
எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்?

இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.

இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.
முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன?
அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற
இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள்.

மற்றும் அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்,
பள்ளிவாசல்கள் கட்டுதல்,உழ்ஹய்யா கொடுத்தல்,கிணறு வெட்டுதல் போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது.
அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும்.

அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும்.

அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்...

0 அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும்.

0 முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும்.

0 அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க முடியும்.
இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.

அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்

ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா
ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா
பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...
ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....
தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.
அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை!
இதனால் ஏற்படும்
இழப்பு...
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம் உம்மத்திற்கும்,
இலாபம்..
அரபு மன்னர்களுக்கும்
அவர்களின் யெஹுதி நஸாரா தோழர்களுக்கும்..


அஸீஸ் நிஸாருத்தீன் 

sources from http://www.badrkalam.com

May 24, 2011

எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்

இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி சவுதியின் உமரையும் பாரசீக ஸல்மானையும் எத்தியோப்பிய பிலாலையும் சகோதரர்களா ஆக்கியது-

‘நிச்சயமாக முஃமின்கள் எல்லோரும் சகோதரர்களாவர்’ -அல் ஹுஜுராத் 49:10

M.ரிஸ்னி முஹம்மட்

பிரிட்டன் அரசும் அமெரிக்க அரசும் இணைந்து பல முஸ்லிம் தேசங்களில் தமது பயங்கரவாத படைகளை ஏவிவிட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிவருகின்றது முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்கிறது சிறுவர் சிறுமியர் என்ற எந்த வேருபாடுகளும் பார்க்காமல் கொன்று குவிக்கின்றது பெண்களை சிறைகளில் அடைத்து நிர்வாணபடுத்தி வதை செய்கின்றது, இத்தனையும் செய்யும் இந்த மேற்கு பயங்கரவாத இராணுவம் தமது மாமிச வேட்டை , காம வேட்டை போன்றவற்றை முடித்துவிட்டு நாடு திரும்பும்போது பிரிட்டனிலும் , அமெரிக்கா மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பு மேலாதிக்க நாடுகளிலும் உள்ள முஸ்லிம் வாலிபர்கள் வெறியாட்டத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் சிப்பாய்கள் கூட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் விரிவாக பார்க்க

 இது தவிர்க்க முடியாத இயல்பான உணர்வின் வெளிப்பாடு ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலும் , ஈராகிலும் கொல்லப்பட்ட பிரிட்டன் ஆக்கிரமிப்பு படை சிப்பாய்களை அவர்களில் சாமாதிக்கு சென்று வணக்கம் செலுத்தும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரைகுறை ஆலிம் ஒன்றையும் BBC தனது செய்தி சேவையில் ஒளிபரப்பியது இத்தகைய பாவங்களில் இருந்து அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் தேசம் , தேசியம் ,நாடு என்ற குறுந் தேசிய எல்லைகளை காரணம் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்படமுடியாது எந்த காரணங்களையும் முன்வைத்து தனது சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் அரசையோ , அரசின் இயந்திரமான இராணுவத்தையோ ஆதரிக்க முடியாது என்ற வலுவான குரல் இதற்கு எதிராக ஓங்கி ஒலித்து கொண்டிருகின்றது

இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி சவுதியின் உமரையும் பாரசீக ஸல்மானையும் எத்தியோப்பிய பிலாலையும் சகோதரர்களா ஆக்கியது- 

‘நிச்சயமாக முஃமின்கள் எல்லோரும் சகோதரர்களாவர்’ -அல்ஹுஜுராத் 49:10.

இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவே முனைந்தது. முனைகிறது இந்த உலகளாவிய சகோதரத்துவதுக்கு தடையாக அமையும் , தேசம், தேசியம், மொழி, இனம் , பிராந்தியம், இயக்கம் என்ற வேறுபாடுகளை அனைத்தையும் இஸ்லாம் புறம் தள்ளி முஸ்லிம் என்ற பிரதான அடையாளத்தை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது அந்த பிரதான அடையாளத்துக்கு எதிரான எந்த கோட்பாடுகளையும் முஸ்லிம் என்ற அடையாளம் புறம் தள்ளி விடுகின்றது இன்று நாட்டின் எல்லைகளுக்குள் அடையாளத்தை தொலைக்கும் தொலைக்க தூண்டும் நிகழ்வுகளை காண கூடியதாகவுள்ளது இதில் முஸ்லிம் சமுகத்தில் சிறிய ஒரு பகுதியினர் ஈடுபட்டாலும் மேற்க்கு ஊடகங்கள் உலகின் பெரும்பான்மை முஸ்லிம்களின் செயலாக இவற்றை காட்ட முனைந்து வருகின்றது இந்த வீடியோ இதைத்தான் காட்டுகின்றது.

இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியை பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடும் போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” -முஸ்லிம்.

‘(நபியே!) எந்த மனிதர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை நேசிக்கமாட்டார்கள். அவர்கள், தங்களுடைய மூதாதைகளாயிருந்த போதிலும் அல்லது தங்களுடைய சகோதரர்களாயிருந்த போதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோருடைய இதயங்களில் தான் அல்லாஹ் விசுவாசத்தைப் பதியவைத்துத் தன்னுடைய உணர்வைக் கொண்டும் இவர்களைப் உறுதிப் படுத்தி வைத்திருக்கின்றான்’ -அல்முஜாதலா- 22

ourummah.org

தமிழ் மொழி ஊடகங்கள் மேற்கு கூறும் கதைகளை தமிழில் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும் கொண்டவையா ?

 M.shamil mohamed

ஆப்கானிஸ்தானில் தினமும் பலர் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையால் கொன்று குவிக்கபடுகின்றனர் இதில் குழந்தைகளும் இளம் பெண்களும் தான் அதிகம் ஒரு மாதம் ஒன்றுக்கு 120 வரையிலான பெண்களும் குழந்தைகளும் குண்டுகளாலும் ஏவுகனைகளாலும் கொல்லபடுகின்றார்கள் என்றால் அதில் பல மடங்கு காயபடுகின்றனர்.
இவர்களின் முகம் சிதைக்கப்பட்டவர்கள் கண்களை இழந்தவர்கள், கைகளை இழந்தவர்கள், உடல் முழுவதும் காயங்களால் கோரமாக ஆக்கப்பட்டவர்கள் தாக்கபட்ட பின்னர் மருத்துவம் மறுக்கப்பட்டவர்கள், முறையான சிகிச்சை வழங்கபடாமையால் அவயவங்களை இழக்கும் நிலையில் உள்ளவர்கள் என்று ஆயிரகக்னகான ஆப்கான் பொதுமக்கள் ஆப்கானிஸ்தானில் நிறைந்து வரும்போது அவர்களை பற்றி மேற்கு மீடியாக்கள் திட்டமிட்டு அவர்கள் பற்றிய தகவல்களை புறக்கணிகின்றன அவற்றை youtube போன்ற இணையத்தளங்களில் யாரும் பதிவு செய்தாலும் அவைகள் உடனடியாக நீக்கபடுகின்றன அமெரிக்கா செய்தால் அது கொலையல்ல, மேற்குலக பயங்கரவாதம் அது ஜனநாயகம் என்ற காட்டு சட்டம் பின்பற்றபடுகின்றது விரிவாக

இந்த வருடம் கடந்த ஆறு மதங்களில் மட்டும் 1200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் -என்று ஆப்கான் மனித உரிமை அமைப்புகள் Afghanistan Rights Monitor தெரிவித்துள்ளன இந்த காலபகுதியில் காயம் அடைந்தவர்கள் இறந்தவர்களைவிடவும் மிகவும் அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகின்றது இந்த தகவல்களுக்கு மேற்கு ஊடகங்கள் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை அந்த விபரங்கள் சாதாரண செய்தியாக மட்டும் வெளிவருகின்றன இல்லை அவை திட்டமிட்டு அதன் முக்கியத்துவம் புறக்கணிக்கபடுகின்றது இதை மிக சிறந்த ஊடகவியலாளரான Robert Fisk மேற்கத்திய ஊடகங்கள் சுதந்திரமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும் அவை பக்க சார்பான போக்கை கைவிடவேண்டும் என பிரிட்டன் ஊடகவியலாளர் தெரிவித்து வருகின்றமை மேற்கின் பக்கசார்பு நிலையை எடுத்து காட்டுகின்றது.

அதற்கு மாறாக இஸ்லாத்தில் பெண்களின் நிலை அடிமை நிலைக்கு ஒப்பானது என்றும் பெண்கள் அடைமைபடுத் தபப்டுகின்றனர் என்றும் பெண்களுக்கு இஸ்லாத்தில் எந்த வகையான உரிமைகளும் வழங்கபடுவது இல்லை என்றும் உரிமைகளுக்கு பதிலாக பெண்கள் கொடுரங்களை எதிர்கொள்வதாகவும் சித்தரித்து வருகின்றது இந்த வகையில் கடந்த வருடம் பாகிஸ்தான் தாலிபான்கள் ஒரு இளம் பெண்ணை நடுவீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஒளி ஒலி பரப்பியது இது பாரிய உணர்வலைகளை எழுப்பியது இதன் பின்னர் இந்த வீடியோ திட்டமிட்ட முறையில் அமெரிக்க , பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் இணைந்து அந்த வீடியோ வை உருவாக்கியது என்று தெரியவந்தது ஆனால் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி முக்கியத்துவம் கொடுக்கப் படாமல் புறக்கணிக்க பட்டது இங்கு நான் தாலிபான்களின் நடவடிகளைகளை முழுமையாக ஏற்றுகொண்டவனாக இதை கூறவில்லை.
இங்கு கவனிக்க படவேண்டிய விடையம் இஸ்லாத்தையும் அதன் நாமத்தால் செயல்படுபவர்களையும் இழிவுபடுத்த, பயங்கரவாதிகளாகவும், நாகரீகம் அற்றவர்களாகவும் காட்ட முற்படும் மேற்கு மீடியாக்கள் மேற்குலகின் நாகரீகத்தின் விளைவாக மேற்கில் நடைபெறும் மிகவும் பயங்கரமான கொடூரங்களை முதன்மை படுத்தி காட்ட முன்வருவதில்லை என்பதும் மேற்கு உலகம் மற்ற நாடுகளில் புரியும் பயங்கரவாதம் மேற்கு மீடியாக்களில் முக்கியத்துவம் பெறுவதாக இல்லை என்பதும்தான்
மேற்கு ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளரும் சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவருமான ஜோன் பிராட்லி என்ற ஊடகவியலாளர் மேற்கு ஊடகத்துறை பற்றி இப்படி கூறுகின்றார்.

அமெரிக்க ஊடகங்களில் அரபுலக சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான ‘சிறப்புப் பார்வை’ நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். காஸா , மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் “Occupied” அல்லது “Occupation” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு “Contested அல்லது Disputed” போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் பலஸ்தீனின் அப்பகுதிகளையே “இஸ்ரேல்” என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.

இந்த வரிசையில் ஆப்கானிஸ்தானில் கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கானில் நிகழ்ந்துள்ளது என்றும் இந்த இளம்பெண்ணின் பெயர் ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே அவரது தந்தை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார் என்றும். அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார் என்றும் ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர் என்றும்
அதனால் அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது என்றும் உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.என்றும் இந்த பெண்ணின் துயரை துடைக்க அமெரிக்க நிறுவனங்கள் பல முன்வந்துள்ளது என்றும் இவர் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைக்காக அமெரிக்கா பயணமாகின்றார் என்றும் அமெரிக்க டைம்ஸ் முகப்பு படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது இந்த செய்தி எல்லா தமிழ் தளங்களிலும் உலாவருகின்றது.

இதன் உண்மை தன்மை வழமைபோன்று போலியாக சோடிக்க பட்டதா என்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை , இங்கு கவனிக்க படவேண்டிய விடையம் தமிழ் மொழி ஊடகங்களிலும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய மேற்கு ஊடகங்கள் திரித்து கூறுபவை அப்படியே மாற்றங்கள் ஆய்வுகள் இன்றி மொழிபெயர்க்க படுவதால் இஸ்லாமிய எழுச்சி பற்றிய மிகவும் திரிக்க பட்டதகவல்கள் மட்டும் தமிழ் மொழியில் கிடைக்க பெறுகின்றது உலகில் நடைபெறும் இஸ்லாமிய எழுச்சி அலைகளை சரியான முறையில் தமிழ் மொழியில் வழங்க கிடைக்க பெரும் தகவல்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சரியான தகவல்களை வழங்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை எம் மீது உள்ளது.

உதாரணமாக பாகிஸ்தானில் மஸ்ஜிதுகளில் வெடிக்கும் குண்டுகள் இவைகள் முஸ்லிம்களால் முஸ்லிம்கள் கொலை செய்யபடுவதாகவும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை செய்து வருவதாகவும் மேற்குலக ஊடகங்கள் கூறிவரும் அதே வேளை பாகிஸ்தானில் பல பொது அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் இவை அமெரிக்க உளவு நிறுவனங்களில் சதி நாச வேளை இவற்றுக்கு விதைகளை விதைப்பவர்கள் மேற்கு உளவு மற்றும் அவர்களின் உள்நாட்டு முகவர்கள் என்பதை ஆதாரங்களுடன் கூறிவருகின்றது – அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான – Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார்- ஆனால் தமிழ் மொழியில் மேற்கு ஊடகங்கள் கூறுபவை மட்டும் எந்த ஆய்வுகளும் இன்றி மொழிபெயர்க்க படுகின்றது இதனால் தமிழ் மொழியில் செய்திகள் பொய்யான தகவல்களுடன் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மேற்கின் ஊடக பயங்கரவாதம் தமிழிலும் அரங்கேறுகின்றது
தமிழ் மொழி ஊடகங்கள் பொதுவாக உலக விவகாரங்கள் தொடர்பில் சொந்தமான ஆய்வுகளை கொண்டவை அல்ல மேற்கு கூறும் கதைகளை தமிழ் மொழிபெயர்க்கும் தன்மையை மட்டும்கொண்ட வையாக காணப்படுகின்றமை உண்மையான செய்திகள் தமிழ் மொழி உலகிற்கு தவறி விடுவதுடன் சோடிக்கப்பட்ட போலியான தகவல்களால் தமிழ் மொழி உலகம் ஆதிக்கம்பெறுகின்றது.

மீடியாக்களின் பாதிப்புகளை விளங்கிக்கொள்ள டாக்டர் சாகிர் நாயிக் இப்படி கூறினார் ஒரு முஸ்லிம் ஒரு சினிமா படத்தை , பாடலை பார்ப்பதை விடவும் ஆபத்தானது இன்றைய செய்திகளை பார்ப்பது சினிமா படம் , பாடல் என்பன பாவத்தை தூண்டும் பாவங்களாக இருக்க செய்திகளை பார்ப்பது குப்ரை இஸ்லாத்தை நிராகரிக்க தூண்டும் விடயமாக இருக்கிறது என்றார் அந்த அளவுக்கு இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை கொண்டதாக இன்றைய செய்திகள் உருவாக்கபடுகின்றது என்பதை நாம் விளங்கி கொள்வதுடன் அவற்றை சரியான உண்மை தோற்றத்துடன் முன்வைக்க முயற்சிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் இவற்றை பார்க்கும் போது இஸ்லாத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படுகினது என்றால் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளாத மனிதர்கள் பார்க்கும்போது எந்த நிலை ஏற்படும் என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளமுடியும்.

Sources From ourummah.org

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் (Valley Of The Wolves Palestine 2011 (English Subs)

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற திரைப்படம் மேலும் இஸ்ரேலுக்கு பலத்த அடி ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலிய முற்றுகைக்குல் வதைக்கப்படும் காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை சித்தரிக்கும் ‘ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற பெயரில் துருக்கியில் ஒரு இராணுவ தாக்குதல் திரைப்படம் தயாரிக்கப்படுள்ளது.

இத்திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது. இந்த பெயரில் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் ஒன்று துருக்கியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த தொலைக்காட்சி தொடர் துருக்கி இஸ்ரேல் உறவில் மேலும் பல விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இந்த கப்பலில் இலங்கையை சேர்ந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தமை குறிபிடத்தக்கது One Man Army, Spy operation போன்ற இராணுவ முறைகளை கையாண்டு துருக்கி எதிரிகளை வேட்டையாடுவது இதில் சிதரிக்கபடுகின்றது சிறப்பு காட்சியாக ஒன்பது துருக்கி நாட்டு முஸ்லிம்களை படுகொலை செய்த flotilla கப்பல் தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய கொமாண்டோ தலைவர் கொல்லப்படும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாலர்களை பலஸ்தீனின் ஓநாய்கள் என்று வர்ணித்து பெயர் சூட்டியுள்ளமையும் சிறப்பானதாக துருக்கிய மக்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க Video....This Is Full Movie



ஓநாய்களின் பள்ளத்தாக்கு’-பலஸ்தீன் திரைப்படம் துருக்கி நாட்டுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபைக்கும் ஏற்பட்டுள்ள முறுகலை தவிர்க்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பலத்த அடியாகும் என விமர்சிக்கப்படுகின்றது

அந்த திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் துருக்கியில் தொலைக்காச்சிகள், மற்றும் திரையரங்குகளில் காண்பிக்க படுகின்றது அந்த காட்சிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்ர்றது.

ourummah.org

May 23, 2011

மானுட வசந்தத்தின் வருகை

ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில் மனித சமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர் வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.'ரபீஉன்' என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉல் அவ்வலில்' பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.ஆன்மீக, லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவுகின்ற ஒரு காலம் இது. 

மீண்டும் ஒரு வசந்தத்தின் தேவையை- வருகையை இன்றைய பூமி அவசரமாக வேண்டி நிற்கின்றது. நிச்சயமாக அந்த வசந்தத்தை சுமந்துவரும் ஆற்றல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உண்டு. ஆனால் அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. மற்றுமொரு நபி வரப்போவதுமில்லை. எனினும் அன்னார் விட்டுச் சென்ற அல் குர்ஆனும் ஸுன்னாவும் பசுமையாக எங்களிடம் இருக்கின்றன. இன்றைய உலகில் வரட்சியைப் போக்கிடும் ஆற்றல் அவற்றுக்கு நிறைவாகவே உண்டு. ஒரு புத்துலகை- புதுப்பொழிவுடன் உருவாக்கும் தகுதியும் உண்டு.ஆனால் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் மைந்தர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிலபோது விழித்துக் கொண்டாலும் அடிப்படைப் பணியை மறந்துவிட்டு வீண் வாதப் பிரதிவாதங்களிலும் அர்த்தமற்ற தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றனர். நபிகளார் பிறந்த இம்மாதத்தில் அன்னார் கொண்டுவந்த தூதுக்கு உயிரூட்டுவதை, அதனை உலகறியச் செய்வதை விட்டுவிட்டு அன்னாரை வைத்து வீண் சர்ச்சைகளைக் கிளப்பி குழப்பம் விளைவிக்கின்றனர்.

நபிகளாரின் அந்தஸ்து என்ன, அவர்களைக் கொண்டு வஸீலா தேடலாமா, அவர்கள் பேரில் மௌலூது ஓதலாமா, அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாமா என்று வம்புப் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். எத்தனை நூற்றாண்டுகளாக இச்சண்டைகள் முடிவின்றி தீர்வின்றி தொடர்கின்றன!! இதனால் எம் சமூகத்தில் எத்தனை, எத்தனைப் பிரிவுகள், பிளவுகள் உருவாகியுள்ளன. இத்தகைய சர்ச்சைகளால் இஸ்லாம் அடைந்த பயன்தான் என்ன? நபிகளாரின் தூதுத்துவப் பணி கண்ட பிரயோசனம் யாது? இவ்வாறு நாம் சிந்திப்பதில்லை. சிலர் எம்மை சிந்திக்க விடுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்தப் பிரச்சினைகளில் வாழ்க்கை நடாத்துபவர்கள், வயிறு வளர்ப்பவர்கள்.இனியும் இந்நிலை தொடர அனுமதிக்கலாகாது. நபிகளாரின் பெயராலேயே, அவர்களும் அவர்களின் வழிவந்த நல்லடியார்களும் கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூகத்தைத் தகர்க்கும், துண்டாடும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கக்கூடாது. 

சிறுசிறு சன்மார்க்க பிரச்சினைகளையெல்லாம் பூதாகரமான பிரச்சினையாக சித்தரித்து சமூகத்தில் விஷமம் செய்வோர் இனங்காணப்பட்டு ஓரங்கட்டப்படல் வேண்டும்.இயக்கங்கள், ஜமாஅத்கள், தரீக்காக்கள் உட்பட ஏனைய சன்மார்க்க அமைப்புகள் இருந்துவிட்டு போகட்டும். அவற்றின் நன்மைகளை சமூகம் பெறத்தான் வேண்டும். ஆனால் அவற்றின் பெயரால் சண்டை போடுவதற்கும், முட்டி மோதிக் கொள்வதற்கும் இனி முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். இதற்காக இஸ்லாத்தில் பொதுவான அடிப்படைகளை வைத்து முழு சமூகத்தையும் வழிநடாத்தக்கூடிய ஒரு நடுநிலை சக்தி உருவாக வேண்டும், அது ஆரம்பத்தில் உலமாக்கள் மட்டத்திலிருந்து தோன்றுதல் வேண்டும். அப்போதுதான் நபிகளார் காண விரும்பும் இலட்சிய முஸ்லிம் சமூகமாக நாம் மாறமுடியும்...

Sources From thalaimaithuvam.blogspot.com

ஒரினசேர்க்கைக்கு தீர்வு என்ன ?


Global Ummah- Challenges And Opportunities

Global Ummah- Challenges And Opportunities Part-1 (ENGLISH)


Global Ummah- Challenges And Opportunities Part-2 (ENGLISH)


Global Ummah- Challenges And Opportunities Part-3 (ENGLISH)


Global Ummah- Challenges And Opportunities Part-4 (ENGLISH)


Global Ummah- Challenges And Opportunities Part-5 (ENGLISH)


Global Ummah- Challenges And Opportunities Part-6 (ENGLISH)