Showing posts with label பொருளாதார நெருக்கடி. Show all posts
Showing posts with label பொருளாதார நெருக்கடி. Show all posts

Jul 3, 2016

உலக நிதி நெருக்கடிக்கு பிறகு கிரேக்கத்தை விட்டு வெளியேறிய அரை மில்லியன் மக்கள்

2008 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கிரேக்க வங்கி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கிய , வெளியேறியோர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 100 ஆயிரத்திற்கு (ஒரு லட்சம்) மேலானோராக அதிகரித்து, தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டது.

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்பட வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பலரும் வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிரேக்கத்தின் வேலையில்லா திண்டாட்டம் ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் இந்த சதவீதம் இன்னும் அதிமாகும்.

செய்தி BBC

எமது சரியான பார்வை:

தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.

இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.


2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.


3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.


4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.


ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.

எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.


ஆப்பிள் சந்தை versus பங்குச்சந்தை


வாங்கிய ஐந்து ஆப்பிள்கள் இன்னும் கடைக்கு வந்து சேரவில்லை இதற்குல் ஐந்து பற்று சீட்டுக்களை தயாரித்து விநியோகம் செய்கிறார் வியாபாரி. ஒவ்வொன்றும் 50 ரூபா அளவில் இதனை 5 பேர் கொள்வனவு செய்கின்றனர்.

இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
1.இவ் ஐந்து பேருக்கும் சொல்லப்படுகிறது இரண்டு மாதங்களில் இவை வந்தடைந்தவுடன் 80 ரூபா பெறுமதியில் விற்கப்படும் என்று!

2.இதனை அறிந்து சிலர் 65 ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவிக்கவே ஐந்து பேரில் இருவர் உடனே விற்று விடுகின்றனர்.

3.தகவல் ஒன்று வெளிவருகிறது 2 மாதங்களில் ஆப்பிள் இற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஒரு ஆப்பிள் 120 ரூபா அளவில் விற்பனை செய்யப்படும் என்றும் உத்தேசிக்கப்படுகிரது. உடனே சிலர் 100 ரூபா கொடுத்து அனைத்து சிட்டுக்கலையும் வாங்கி கொண்டனர்.

4.இப்போது இன்னும் ஒரு தகவல் வெளிவருகின்றது ஆப்பிள் உண்ணுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகும் என்று ! இப்போது சிலர் 200ரூபா படி வாங்கி கொள்கின்றன்ர்.

இறுதியாக இப்போது ஆப்பிள் வந்தடைகிறது ஒரே ஒரு ஆப்பிள் மாத்திரமே உகந்ததாக உள்ளது மற்ற அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் உண்மை பெறுமதி தற்போது 35 ரூபாயே எனக்கொள்வோம்.

200 ரூபாய் படி ஐந்து சிட்டுக்களையும் வாங்கியவர்களின் நிலை என்ன?

இந்த ஆப்பிள் சந்தையை போன்றதுதான் தற்போது உத்தேச அடிப்படையில் இயங்கும் பல நிதிச்சந்தைகள், இதில் பங்குச்சந்தையும் மிக முக்கியமானது!

அண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய செய்தி உலக பங்கு சந்தையில் ஒரே நாளில் ஏற்படுத்திய நட்டம் எவ்வளவு தெரியுமா? 12 00 000 000 000 டாலர்கள்.

இதற்கு முன்னரும் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு இப்படி உத்தேச அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட bubbles ஏ காரணம்!

உத்தேச வியாபாரம் தொடர்பான இஸ்லாமிய பார்வை பின்வருமாறு

1.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
”நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ”இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)” என்று செய்யப்படும் வியாபாரமே இது!”

2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள்.”
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இந்த முதலாளித்துவ ஒழுங்கில் பெரும்பாலான வியாபாரம் உத்தேச அடிப்படை யிலே காணப்படுகிறது இது பற்றிய தெளிவு நம்மிடயே குறைவாகவே உள்ளது.

சிறிய முதலீட்டாளர்கலின் பணத்தை பண முதலைகள் உறிஞ்சுவதற்கான தளமாகவே இது இருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!

முதலாளித்துவத்தின் கோரமுகம்...? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்!


"ஒரு நாட்டை வெற்றி கொண்டு அடிமை படுத்த இரண்டு வழிகள் உண்டு ஒன்று வாளினைக்கொண்டு மற்றையது கடனைக்கொண்டு” – ஜான் ஆடம்ஸ்.

ஆனால் கடந்த அரசாங்கத்தை விட தமது அரசு பல நாடுகளில் அதிலும் IMF போன்ற நிதி நிறுவனங்களின் இருந்து கடனை பெற்று கொண்டதை பாரிய வெற்றியாக மார்பு தட்டி கொள்கிறது இந்த நல்லாட்சி. 

அபிவிருத்திக்கு கடன் தேவை தானே என்று நினைக்கலாம் ஆனல் நான் சொல்லப்போகின்ற விடயம் எவ்வாறு இந்த அபிவிருத்திக் கடன் இந்தோனேசியாவை கடனில் மூழ்கடித்தது என்பதே!

இந்த விடயம் 1960களில் இருந்து ஆரம்பமாகின்றது. எண்ணெய் , தங்கம் , திறமையான மனித வளம் , என்பன இருந்தும் 70 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டிருந்தனர் .வருமான இடைவெளி பாரிய அளவில் அதிகரித்தது அதாவது சாதரணமான ஊதியம் பார்க்கும் ஒருவர் அங்குள்ள செல்வந்தர் போல திருமணம் செய்ய வேண்டுமாயின் 400 வருடங்கள் ஊதியம் பார்க்க வேண்டும் “ரிசப்ஷன் கோல்” செலவை மாத்திரம் ஈடு செய்ய!

GAP,NIKE,ADIDAS போன்ற நிறுவனங்களின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களான பெரும்பாலான பெண்கள் அதிக உஷ்ணம் உள்ள அதாவது 42 செல்சியத்திலும் அதிக வெப்பமான தொழிற்சாலையில் சில நேரங்களில் 24 மணித்தியாலங்களிற்கு அதிகமாக வேலை செய்து பெரும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? அவர்கள் உற்பத்தி செய்யும் பாதணி எட்டு பவுண்ட்ஸ் எனின் அவர்களுக்கு கிடைப்பது வெறும் நான்கு சதமே! ஆனால் கம்பனியின் இலாபமோ 138 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது.

இது இவ்வாறு இருக்க அமெரிக்க மற்றும் பிரித்தானியா தங்களது வணிகத்திற்கு சிறந்த சந்தையாக இதனை கண்டது இதனால் இவர்கள் நலன் பேணும் ஊழல் மிக்க அரசை ஆட்சிக்கு அமர்த்தி IMF மற்றும் World Bank மூலம் வெளிநாட்டு உதவி என்ற பேரில் பல பில்லியன் அமரிக்க டாலர்களை கடனாக வழங்கி ஆட்சியாளனின் பையை நிறைத்தது.ஆனல் தங்களுக்கு எந்த நலனுமே கிடைக்காத இந்த பணத்திற்கு இன்றும் மக்கள் வரிச்சுமயை தாங்கி கொண்டுதான் இருகின்றனர் .ஜனநாயகம் பேசும் நாடுகள் இவர்களின் கடன் விலக்களிப்பை சிந்திப்பதே கிடையாது ஆனால் வங்கொரோத்து அடையும் வங்கிகளுக்கு பல டிரில்லியன் டாலர்களை உதவிக்கரமாக நீட்டுகிறது. இந்த ஜனநாயகத்தை வாங்க இந்தோனேசியாவிடம் வசதி இல்லை என்றே கூறவேண்டும்.

இந்த கடனை பெற்றுக்கொள்ள கட்டமைப்பு மாற்றம் என்ற பேரில் வறிய மக்களுக்கான சமூக செலவினை குறைத்தது. இது வறியோர்களை மேலும் வறியோராக்கியது எந்தளவுக்கு என்றால் மூன்று வேலை உணவை உண்ணும் சிலர் இரண்டு வேலை உணவைதான் பூர்த்திய செய்ய முடிந்தது ஆனால் இதனை தனது வணிகத்திற்கான வாய்ப்பாக குறைந்த ஊதியம் வழங்கி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது.

இதுமட்டுமா ஒரே நாளில் நிதி சந்தையினை ஊழல் செய்து ஒரு டாலர் 2500 ரூபியா இருந்தததை ஒரு டாலர் 10000 ரூபியா என்றளவுக்கு நாணய மதிப்பிறக்கம் செய்ததது இது உலகமயமாக்கலின் திறந்த நிதிச் சந்தை என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. இது மேற்கு கம்பனிகளின் ஏழை பணியாலர்களின் ஊதியத்தை ஒரே நாளில் 25% ஆள் குறைத்தது . இதன் தாக்கம் இன்றும் இந்தோனேசியாவில் -மேற்கு சுமாத்திராவில் மாத்திரம் 32000 சிறுவர்கள் போதிய சத்து இன்மை குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு 1.3 மில்லியன் சிறுவர்கள் வறுமையின் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை !

இவ்வாறு கடன் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட பல நாடுகள் இன்றும் நிமிர முடியாத நிலையிலேயே காணப்படுகிறது .


இலாபத்தை மாத்திரம் நலன் என்ற அடிப்படைடியில் கட்டப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கில் இது ஒன்றும் வியத்தகு விடயமல்ல தனது பை பல பில்லியன்களால் நிரம்ப வேண்டுமானால் இதற்காக பலர் பட்டணியில் கிடப்பது ஒன்றும் பெரிதல்ல என்ற இவர்களது கொள்கை எத்தகைய ஜாகிலியம்.

From Mohamed Imran

Oct 7, 2013

உலக பொருளாதார நெருக்கடிக்கு வயது ஏழு


உலகை உலுக்கிய பொருளாதார நெருக்கடி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆறாம் ஆண்டை பூர்த்தி செய்து இப்போது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த அதிகாரிகள் ஐரோப்பிய கண்டத்தில் “recession” என்று சொல்லக்கூடிய பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனவும்,அதை உண்மைப்படுத்துவது போன்ற புள்ளியியல் விபரங்களையும் அறிவித்தனர். சீனா அதன் பொருளாதாரம் 2013 ஜூலையுடன் முடிந்த நடப்பாண்டில் 7% வளர்ந்ததாக அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா அதன் பொருளாதாரம் 2013 ஆம் ஆண்டு 1% வளர்ச்சி பெற்றதாக பட்டியல் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பங்களிப்பு, உலக பொருளாதரத்தில் 50 விழுக்காட்டிற்கும் மேலாகும். இந்த நாடுகளின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross Domestic Product) வைத்தே கடந்த ஆறு ஆண்டுகளாக உலக பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது.எனவே உண்மையாகவே உலக பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதா என்பதை இங்கு ஆராய்வோம்.

முதலாவதாக, அமெரிக்காவின் ஆட்சியாளர்கள், 16 ட்ரில்லியன் டாலர் அளவிலான தங்கள் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையில், “stimulus spending” என்று சொல்லக்கூடிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் சில “ஊக்க திட்டங்களை” அறிமுகப்படுத்தினர். இதன் விளைவாக ஒரு நிலையற்ற வளர்ச்சி ஏற்பட்டது.ஏனெனில் இந்த “ஊக்க திட்டங்கள்” தற்காலிகமான நடவடிக்கைகளாகும்.அதைக் கொண்டு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இயலாது. 2013 ஆம் ஆண்டு வளர்ச்சி பெற்றபோதிலும், சில அடிப்படை பொருளாதார விசயங்கள் அதற்கு மாற்றமான ஒன்றாக இருக்கிறது. 12 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்றி உள்ளனர். அமெரிக்காவின் வாகன உற்பத்தியின் சின்னமாகவும், மிகப்பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் (Detroit) நகரம் ஜூலை 2013 ஆம் ஆண்டு திவாலாகியது. இதற்கு முன்னர் முப்பத்தியாறு சிறு நகரங்களும் திவாலாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்கா கூறிக்கொண்ட இந்த வளர்ச்சிக்கான முக்கிய கரணம்,பொருளாதார வளர்ச்சியை அளவிடும் முறையில் அமெரிக்கா சில மாற்றங்கள் செய்ததே ஆகும். முதன்முறையாக இசை தயாரிப்பு, மருந்து காப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துக்களும் வளர்ச்சியைக் கணக்கிடும்போது சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் 560 பில்லியன் டாலர் அதிகரித்து 3.6% அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது. உண்மை என்னவெனில் அமெரிக்காவின் பொருளாதாரம் இன்றும் அவல நிலையிலேயே உள்ளது. மக்கள் போதிய வருமானமின்றி தங்கள் செலவினங்களை வெகுவாக குறைத்துக்கொண்டது இதற்கு சான்றாகும். ஆதலால் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுவது செயற்கையானதும், மிகைப்படுத்தப்பட்டதுமாகும் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்கள் ஐரோப்பிய கண்டத்தின் ஒட்டுமொத்த நிலையை பிரதிபலிப்பதாக அமையவில்லை. இவர்கள் வெளியிட்ட புள்ளி விவரம் ஆரம்பகட்ட மதிப்பீடாகும். அதில், பாதிப்பில் உள்ள அயர்லாந்து மற்றும் கிரேக்க நாடுகளின் புள்ளி விவரங்கள் சேர்க்கப்படவில்லை.ஆரம்பகட்ட மதிப்பீடுகளை புள்ளி விவரங்களாக வெளியிட்ட ஐரோப்பாவின் புள்ளி விவர நிறுவனம் எனப்படும் – யூரோஸ்டட் (Eurostat), தேசிய புள்ளியியல் அலுவலகங்கள் (National statistical offices) கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும். ஒவ்வொரு நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகங்கள், வெவ்வேறு விதமான முறைகளில் புள்ளி விவரங்களை சேகரிக்கின்றன. இந்த மதிப்பீடுகள், கூடுதல் விவரங்கள் கிடைக்கப்படும் போதெல்லாம் திருத்தம் செய்து வெளியிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.ஜெர்மனியின் புள்ளியல் அலுவலகம்(German statistical office ) ஒருமுறை வெளியிட்ட புள்ளிவிவரத்தை நான்கு ஆண்டுகள் வரை திருத்தம் செய்து வெளியிடும் வழமை கொண்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய குறைபாடுகள் கொண்ட புள்ளியியல் மதிப்பீடுகளை வைத்து ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடிநிலை சரியாகிவிட்டதாக கூறுவது மிகையானதாகும்.

மூன்றாவதாக, சீன புள்ளி விவரங்கள் எப்போதும்போல் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்து விரிந்த நாடாகும். சீனா வெளியிட்ட புள்ளிவிவரங்கள் துல்லியமான ஒன்று என்பதாக எடுத்துக்கொண்டாலும், அத்தகைய விவரங்களை சீனா சேகரிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. சீனா ஒவ்வொரு ஆண்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி – Gross Domestic Product (GDP) விவரத்தை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடும். மூன்றே மூன்று வாரத்தில் சீன அரசால்,அதன் பொருளாதாரம் முந்திய ஆண்டு எவ்வாறு இருந்தது என்பதை கணக்கிட்டு கூறுவது இயலாத காரியமாகும். 2013 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று சீனாவின் மக்கள் தொகையிலும் தொழிற்சாலை உற்பத்தியிலும் மிகப்பெரிய மாநிலமான குவாங்டோங்க் மாகாணத்தின் நிதி விவகார அலுவலகம்( Finance Affairs Office of Guangdong ) வெளியிட்ட சர்வே முடிவில், அதன் மின்பயன்பாடு 2013 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் வீழ்ச்சியடைந்து உள்ளதாக தெரிய வந்தது. இதே மாநிலம், முன்னர் சீன அரசால் அறிவித்ததைப்போல் 12.9% வளர்ச்சி பெற்று இருக்க முடியாது என்பதையே இந்த சர்வே முடிவு காட்டுகிறது. தேசிய அளவில் பார்க்கும் போது சீன நாட்டின் GDP இன் அளவு, அதன் மாநிலங்களின் GDP இன் அளவுகளின் கூட்டுத்தொகையைக்காட்டிலும் குறைவாக அறிவிக்கப்பட்டது விசித்திரமானதாகும்.

நான்காவதாக, GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி – Gross Domestic Product) – ன் அளவுகோலை வைத்து பொருளாதார நடவடிக்கைகள் அளவிடப்பட்டாலும், இந்த அளவீடு பொருளாதார நடவடிக்கையில் நம்பகமற்ற துல்லியமில்லாத அளவீடாகும். ஏனெனில் GDP , நிதித்துறை சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை மட்டுமே கணக்கில் கொள்ளும். சம்பளமின்றி செய்யப்படும் வேலைகள் மற்றும் உதவிகள்(charity) ஆகியவை கணக்கில் வராது. 0.1% பொருளாதார வீழ்ச்சிக்கும் 0.2% GDP வளர்ச்சிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றே கூறலாம். ஒரு வருடத்திற்கும் அடுத்த வருடத்திற்கும் GDP – ல் உள்ள மாற்றங்களை வைத்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையோ அல்லது வீழ்ச்சியையோ உறுதிபட கூறமுடியாது. பொருளாதரத்தின் பல முக்கிய அங்கங்களை இந்த கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளாததால் GDP எனப்படும் இந்த அளவீடு, பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்வதற்கான நல்ல அளவீடு அல்ல என்பதே உண்மையாகும்.

இறுதியாக, ஆறாண்டுகள் ஆகியும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கான தகுந்த தீர்வு காணப்படவில்லை. பொருளாதார வீழ்ச்சியின் வேகம் குறைந்து வந்தாலும், பொருளாதாரம் முன்னேற்றம் அடையவில்லை. ஊக்க திட்ட செலவீட்டு முறை(stimulus spending) மூலம் அமெரிக்கா தன் பொருளாதாரத்தை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாக கூறிக்கொண்டாலும், இது பணப்புழக்கத்தை அதிகப்படுத்தச்செய்யும் தற்காலிகமான நடவடிக்கையாகவே அமையும், ஏனெனில் குறைந்து கொண்டேவரும் அதன் பணமூலமும் அதற்கு அதிக நாட்கள் உதவாது. பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய அரசுகள் சிக்கண நடவடிக்கைகள் மூலம் செலவினங்களை வெகுவாக குறைத்துக் கொண்டதால், அதன் சமூக நலத்திட்டங்களை நிறுத்தியது. இதனால் இந்த அரசுகளின் உதவியுடன் வாழ்ந்து வந்த மக்களின் நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. புள்ளிவிவரங்களை எளிதாக தமக்கேற்றவாறு எளிதாக மாற்றியமைத்து கூறலாம். மேலும் GDP -யை வைத்து நிலைமை முன்னேறி வருவதாக பூசி மெழுகலாம். எனினும் வேலையின்மை, கடன் தேவைகள், செலவினங்கள் போன்றவைகளை வைத்து பார்த்தால், உலக பொருளாதாரம் இன்னும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது என்பதே உண்மையாகும்.

ஆக்கம் :-  அத்னான் கான்