Showing posts with label அமெரிக்கப் போர்கள். Show all posts
Showing posts with label அமெரிக்கப் போர்கள். Show all posts

Jun 15, 2016

ஒபாமாவின் பதவிக்கால போர்கள்....!!

 
 
 
நியூயோர்க் டைம்ஸ் மே 15 அன்று தனது முகப்புப் பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஒரு முக்கியமான மைல்கல் எட்டப்பட்டிருப்பது பற்றி கவனத்தை ஈர்க்கிறது: “புஷ் அல்லது வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமான காலம் அவர் போரில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.” ஒபாமா தனக்கு முன்பிருந்தவரது சாதனையை மே 6 அன்று விஞ்சியிருந்தார். 


ஆயினும் இன்னும் எட்டு மாத காலம் வெள்ளை மாளிகையில் அவர் இருப்பார் என்பதால், இன்னுமொரு சாதனையையும் அவர் எட்டவிருக்கிறார். டைம்ஸ் எழுதியது: “ஒபாமாவின் பதவிக் காலம் முடிகின்ற வரையிலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டிருக்குமாயின் - சிரியாவுக்கு 250 கூடுதல் சிறப்பு நடவடிக்கை துருப்புகளை அனுப்பவிருப்பதாக ஜனாதிபதி சமீபத்தில் அறிவித்திருப்பதை கொண்டு பார்த்தால் இது ஏறக்குறைய நிச்சயமான ஒன்று தான் - அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முழுப் பதவிக் காலமும் தேசத்தை போரில் ஈடுபடுத்தி வைத்திருந்த ஒரே ஜனாதிபதி என்ற ஒரு அபூர்வமான மரபை அவர் ஏற்படுத்தி விட்டுச் செல்வார்.”


தனது சாதனைப் பயணத்தின் பாதையில், திரு.ஒபாமா, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய மொத்தம் ஏழு நாடுகளில் ஆபத்துமிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் துரிதமாய் விரிந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் அமெரிக்கா, ஆபிரிக்காவில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. போகோ ஹராம் கிளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் நைஜீரியா, கேமரூன், நைஜர் மற்றும் சாத் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளை கட்டியெழுப்புவதை உள்ளடக்கியிருக்கின்றன.


இந்த டைம்ஸ் கட்டுரையை எழுதியிருக்கும் மார்க் லாண்ட்லர், ஒபாமா 2009 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் என்பதை எந்த நகைமுரண் உணர்வுமின்றிக் குறிப்பிடுகிறார். மாறாக, “ஒரு போர்-எதிர்ப்பு வேட்பாளராக அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தவராக” அவர் ஜனாதிபதியை சித்தரிக்கிறார்.... “வெள்ளை மாளிகையில் தனது முதலாம் ஆண்டு முதலாகவே இந்த மாற்றமுடியாத [போர் பற்றிய] யதார்த்தத்துடன் அவர் மல்லுக்கட்டி வந்திருக்கிறார்...”


”ஆப்கானிஸ்தானிற்கு 30,000 கூடுதல் துருப்புகளை அனுப்பும் உத்தரவை வழங்கும் முன்பாக ஆர்லிங்டன் தேசியக் கல்லறைகளின் நடுவே” ஒபாமா ஒரு நடை சென்று வந்தார் என லாண்ட்லர் தனது வாசகர்களுக்குக் கூறுகிறார். ”போர் சில சமயங்களில் அவசியமானதாக இருக்கிறது, சில மட்டத்தில் போர் மனித முட்டாள்தனத்தின் ஒரு வெளிப்பாடாகவும் இருக்கிறது என்ற இரண்டு ஒத்துப்போகாததாய் தோன்றுகின்ற உண்மைகளுக்கு” மனிதகுலம் இணங்கிச் செல்ல வேண்டியதாய் இருக்கிறது என்று ஒபாமா 2009 நோபல் பரிசை பெற்றுக் கொண்டபோது இயலாமையுடன் புலம்பிய உரையின் ஒரு பத்தியை லாண்ட்லர் நினைவுகூர்ந்தார்.


இதில் ஒபாமாவின் பதவிக்காலத்தில், முட்டாள்தனம் தான் மேலோங்கியிருந்தது என்பது தெளிவு. ஆயினும் லாண்ட்லரின் மாவிரர் அங்கே ஒன்றும் செய்ய இயலாதிருந்தார். தனது போர்கள் “முடிப்பதற்கு மிகவும் சிக்கல்மிகுந்தவையாக கடினமாக இருந்தன” என்பதை ஒபாமா கண்டார்.


சிறப்பு போர் நடவடிக்கையாளரான சார்லஸ் கீட்டிங் IV ISIS படைகளுடனான ஒரு துப்பாக்கிச் சண்டையில் சமீபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி ஈராக்கில் அமெரிக்க படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது குறித்து ஒபாமா கூறுவதுடன் முரண்படுகிறது. டைம்ஸ் வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து எழுதுகிறது, கீட்டிங்கின் மரணமானது “ஈராக்கிய படைகளுக்கு ஆலோசனையளிப்பதையும் உதவி செய்வதையும் மட்டுமே அமெரிக்கர்கள் செய்து கொண்டிருந்தனர் என்ற நிர்வாகத்தின் வாதத்தை ஒருபோதுமே நம்பமுடியாததாக்கியது.” வெளிப்படையான வார்த்தைகளில் இதைச் சொல்வதென்றால், ஒபாமா அமெரிக்க மக்களிடம் பொய் கூறி வந்திருக்கிறார்.


உள்ளார்ந்த நேர்மையின்மை தவிர, ஒபாமா குறித்த டைம்ஸின் சித்தரிப்பில் உண்மையான துன்பியலுக்கு தேவையானதாக இருக்கும் அத்தியாவசியமான கூறு இல்லாதிருக்கிறது: அதாவது ஜனாதிபதியின் நடவடிக்கைகளை தீர்மானித்த, அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறநிலை சக்திகளை அடையாளம் கண்டு கூறுதல். அமைதியை நேசிக்கும் இந்த மனிதர், ஜனாதிபதியாக ஆனதால், ஆளில்லா விமானக் கொலைகளை தனது சிறப்புத் தன்மையாக ஆக்க நேர்ந்ததற்காகவும் ஒரு அறநெறிரீதியான சாத்தானாக மாறத் தள்ளப்பட்டதற்காகவும் தனது வாசகர்களை கண்ணீர் வடிக்கச் செய்ய லாண்ட்லர் விரும்புகிறார் என்றால், ஒபாமாவின் இந்த “துன்பகரமான” விதியை தீர்மானித்த வரலாற்று சூழ்நிலைமைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு அவர் முயற்சி செய்திருக்க வேண்டும்.



ஆனால் இந்த சவாலை டைம்ஸ் தவிர்த்து விடுகிறது. ஒபாமாவின் போர் புரியும் சாதனையை கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையினது ஒட்டுமொத்தப் பாதையுடனும் தொடர்புபடுத்திக் காட்டுவதற்கு அது தவறி விடுகிறது. ஒபாமா 2009 இல் பதவியில் கால் வைக்கும் முன்பாகவே, அமெரிக்கா 1990-91 முதல் அமெரிக்க-ஈராக் போர் முதலாகவே ஏறக்குறைய தொடர்ச்சியானதொரு அடிப்படையில் போரில் ஈடுபட்டு வந்திருந்தது. 1990 ஆகஸ்டில் குவைத்தை ஈராக் இணைத்துக் கொண்டது தான் முதலாம் வளைகுடாப் போருக்கான போலிசாட்டாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் குவைத் அரசருடன் ஈராக் ஜனாதிபதி சதாம் குசைனின் மோதலுக்கு அமெரிக்கா காட்டிய வன்முறையான எதிர்வினை என்பது பரந்த உலக நிலைமைகள் மற்றும் கணிப்பீடுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் நிலையில் இருந்தது தான் - இறுதியில் 1991 டிசம்பரில் அது கலைக்கப்பட்டது - அமெரிக்க இராணுவ நடவடிக்கை நிகழ்ந்த வரலாற்று உள்ளடக்கமாக இருந்தது. ஜனாதிபதி முதலாவது புஷ் ஒரு “புதிய உலக ஒழுங்கின்” துவக்கத்தை அறிவித்தார். 1917 இல் நடந்த முதலாவது சோசலிசப் புரட்சியின் விளைபொருளான சோவியத் ஒன்றியம் குறிப்பாக 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்ததன் பின்னர் அமெரிக்க இராணுவ வலிமையை பிரயோகிப்பதற்கு ஒரு தடையாக இருந்தது. மேலும், வரலாற்று அர்த்தத்தில் ரஷ்யாவின் 1917 போல்ஷிவிக் புரட்சியுடன் பிணைந்ததாய் இருந்த 1949 இல் நடந்த சீனப்புரட்சியின் வெற்றியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதையில் மேலும் அதிகமான முட்டுக்கட்டைகளை இட்டது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும், அதனுடன் சேர்த்து சீனாவில் 1989 ஜூன் மாதத்தில் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலைகளை தொடர்ந்து முதலாளித்துவம் கட்டுப்பாடேதுமற்று மீட்சி செய்யப்பட்டதையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் நோக்குடன் உலக புவியரசியலை பாரியளவில் மாற்றியமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமெரிக்க ஆளும் வர்க்கம் கண்டது. அமெரிக்கா தனது மிகப்பெரும் இராணுவ வல்லமையை தாட்சண்யமில்லாமல் பயன்படுத்துவதன் மூலமாக ஒரு நீண்ட காலத்தில் வீழ்ச்சியடைந்து போயிருந்த அதன் உலகளாவிய பொருளாதார நிலையை தலைகீழாக்கி விட முடியும் என்பதான நம்பிக்கையில் உயரடுக்குகளிடம் இருந்து இந்த நடவடிக்கைக்கு மிகப்பெரும் ஆதரவு கிட்டியது.


1992 பிப்ரவரியில் பாதுகாப்புத் துறை வரைவு செய்த பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டல் ஆவணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க அபிலாசைகளை சந்தேகத்திற்கிடமின்றி வலியுறுத்திக்கூறியது. ”எதிர்காலத்தில் மூலோபாய நோக்கங்களை அபிவிருத்தி செய்கின்ற மற்றும் பிராந்திய அல்லது உலக மேலாதிக்கத்தின் ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை உருவாக்குகின்ற நாடுகளோ அல்லது கூட்டணிகளோ உருவாக்கும் சாத்தியம் தோன்றலாம். எதிர்காலத்தில் அத்தகைய உலகளாவிய போட்டியாளர் ஒன்று தோன்றுவதை நிகழாமல் தடுப்பதன் மீது மறுகவனம் குவிப்பதே இப்போது நமது மூலோபாயமாக இருக்க வேண்டும்.”


1990கள் அமெரிக்காவின் இராணுவ வல்லமை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதை கண்டது, மிகக் குறிப்பாய் யூகோஸ்லேவியாவின் கலைப்பில். பால்கன் அரசுகள் மீது திணிக்கப்பட்ட மூர்க்கத்தனமான மறுசீரமைப்பு சகோதரர்களுக்கு இடையிலான ஒரு உள்நாட்டுப் போரை தூண்டியதுடன். இது கொசோவோ மாகாணப் பிரிவினையை ஏற்கச் செய்ய சேர்பியாவை நிர்ப்பந்திக்கிற அமெரிக்க தலைமையிலான 1999 ஆம் ஆண்டு குண்டுவீச்சுப் பிரச்சாரமாக உச்சம் பெற்றது. அந்த தசாப்தத்தில் நடந்த மற்ற முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் சோமாலியாவிலான தலையீடு (அது ஒரு பேரழிவில் முடிந்தது), ஹைட்டி மீதான இராணுவ ஆக்கிரமிப்பு, சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான குண்டுவீச்சு, மற்றும் ஈராக் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு காலகட்டங்களும் அடங்கும்.


செப்டம்பர் 11, 2001 சம்பவங்கள் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற ஒரு பிரச்சார சுலோகத்தை தொடக்க சந்தர்ப்பத்தை வழங்கியது. இந்த சுலோகம் மத்தியகிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் மற்றும் அடிக்கடி ஆபிரிக்காவிலும் இராணுவ நடவடிக்கைகளுக்குமான சகல-நோக்க நியாயப்படுத்தலை வழங்கியது. 2002 இல் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட “முன்கூட்டித்தாக்கும் யுத்தம்” என்ற புதிய கோட்பாட்டை அடியொற்றி அமெரிக்காவின் இராணுவ மூலோபாயம் திருத்தப்பட்டது. 



நிலவும் சர்வதேச சட்டத்தை மீறிய இந்த கோட்பாடு, அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலின் - இராணுவரீதியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, பொருளாதாரரீதியானதாக இருந்தாலும் கூட - ஒரு சாத்தியத்தை வழங்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகின்ற உலகின் எந்த ஒரு நாட்டின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது.


ஜனாதிபதி இரண்டாம் புஷ்ஷின் நிர்வாகம் 2001 இலையுதிர் காலத்தில் ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கு உத்தரவிட்டது. 9/11 ஐத் தொடர்ந்த உரைகளில் புஷ் “21 ஆம் நூற்றாண்டின் போர்கள்” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார். இந்த விடயத்தில் அவர் துல்லியமாகவே கூறினார்.


“பயங்கரவாதத்தின் மீதான போர்” ஆனது ஆரம்பத்தில் இருந்தே உலகெங்கும் முடிவில்லாத இராணுவ நடவடிக்கைகளின் வரிசையாகவே சிந்திக்கப்பட்டது. ஒரு போர் அத்தியாவசியமாகவும் தவிர்க்கவியலாமலும் அடுத்த போருக்கு இட்டுச் செல்வதாய் இருந்தது. ஆப்கானிஸ்தான் போர் ஈராக் படையெடுப்புக்கான ஒத்திகையாக நிரூபணமானது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தொடுஎல்லை விரிந்துகொண்டே போனது. 


புதிய போர்கள் தொடங்கப்பட்டன, பழைய போர்கள் தொடரப்பட்டன. சிடுமூஞ்சித்தனத்துடன் மனித உரிமைகள் என்னும் போலிக்காரணங்கள் கையிலெடுக்கப்பட்டு லிபியாவுக்கு எதிரான போரை நடத்துவதற்கும் மும்மார் கடாபியின் ஆட்சியை தூக்கிவீசுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அதே இரட்டைவேட சாக்கு சிரியாவில் ஒரு பினாமிப் போரை ஏற்பாடு செய்வதற்கும் பிரயோகிக்கப்பட்டது. மனித உயிர்கள் மற்றும் துயரங்களின் விடயத்தில் இந்தப் போர்கள் ஏற்படுத்திய பின்விளைவுகள் கணக்கிலடங்காதவை.


உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் மூலோபாய தர்க்கமானது மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் இரத்தம்பாயும் நவகாலனித்துவ நடவடிக்கைகளைக் கடந்த மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அமெரிக்காவின் புவிஅரசியல் அபிலாசைகள் சீனா மற்றும் ரஷ்யா உடன் அபாயம் பெருகிய மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இன்னும் சொன்னால், நடந்து கொண்டிருக்கும் பிராந்தியப் போர்கள் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஆசியக் கூட்டாளிகளுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையில் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் மோதலின் உள்ளார்ந்த பாகங்களாகி கொண்டிருக்கின்றன.


ஒபாமாவின் பதவிக்காலத்தை முடிவற்ற போர்களின் ஒரு காலமாக ஆக்கிய அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளில் அடித்தளத்தைகொண்டுள்ள ஆழமான புறநிலைக் காரணங்கள் குறித்து நியூஜோர்க் டைம்ஸ் அதிகம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல, அடுத்து வெள்ளை மாளிகையில் அமரவிருப்பவர் யாராயிருந்தாலும் - அவர் பெயர் கிளிண்டன் என்றாலும், டிரம்ப் என்றாலும், அல்லது சாண்டர்ஸே என்றாலும் - அவர் இதையே தான் என்பது மட்டுமல்ல, இதனினும் மோசமானதையே தரமுடியும் என்பது குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையையும் அது தன் வாசகர்களுக்கு வழங்கவில்லை. போர் பிரச்சினை என்பது இந்தத் தேர்தலில் “குறிப்பிடமுடியாத மிகப்பெரும் ஒன்றாய்” இருக்கிறது.


Sources From Khaibar Thalam

 

Sep 16, 2015

கௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்காவை கண்டு பிடித்ததோ பற்றிய செய்திகளை சொல்லும் அளவு அங்கிருந்த சுதேசிகளான செவ்விந்திய சமூகத்துக்கு நிகழ்ந்த அநீதம் மிக்க இனத்துடைப்பு வரலாறு பெரிதாக பேசப்படுவதில்லை .

தங்களை நாகரீகம் மிக்கவர்களாக போற்றிக் கொள்ளும் மேற்குலகு ஒரு அப்பட்டமான மனித வேட்டையின் இரத்தச் சுவடுகள் மீதுதான் அமெரிக்கா எனும் ஏகாதிபத்திய நாகரீகத்தை வடிவமைத்துள்ளது.என்ற உண்மை புரியப்பட கீழ்வரும் வரலாற்று சம்பவம் சிறந்த ஆதாரமாகிறது .

நிர்ப்பந்த சமரசம் எனும் அடிமைத்துவ அரசியல் மீது கவர்ச்சிகரமான ஈர்ப்பை ஏற்படுத்தி தனது நன்மைகளையும் ,இலாபங்களையும் அடைவதே முதலாளித்துவ பொறிமுறை. இந்த சுயநலவாதம் தான் இன்றும் கூட உலகை ஆளும் சாபக்கேடாகும் .ஒரு சித்தாந்த மாற்றத்தை உலகம் அவசியம் வேண்டி நிற்கிறது .அதை உணர்த்துகிறான் ஒரு செவ்விந்திய தலைவன் 'சியாட்டல் 'எனும் அமெரிக்க சுதேசி !

கி ,பி 1853 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்ளின் பியர்ஸ் என்பவர் தனது உயர் குடி ஆதிக்க குடிமக்களால் சுதேசிகளான செவ்விந்தியர் படும் துன்பங்களை கண்டு கவலை கொள்கிறார் ! ஆடு நனையும் போது அழும் ஓநாய் போல நிலைமையை வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் ஒரு கௌரவமான ஓநாயாக ஒரு தீர்வுத் திட்டத்தை கடிதம் மூலம் செவ்விந்திய தலைவனான 'சியாட்டலுக்கு 'அனுப்பி வைக்கிறார் .

அற்புதமான அந்த சமரச அழைப்பின் தீர்ப்பு இதுதான் ." நீங்கள் உங்கள் நிலங்களை வெள்ளையர்களுக்கு விற்று விட்டு சென்று விடுங்கள்" ! என்பதே அந்த தீர்ப்பாக இருந்தது . இன்னொரு புறத்தால் இதை ஒரு மிரட்டலாக கூட சொல்ல முடியும் . இராணுவ தொழில் நுட்பம் ,ஆயுத வலிமை போன்றவற்றில் அனுபவம் இல்லாத அந்த செவ்விந்தியர்கள் இந்த நிர்ப்பந்த சமரசத்தில் வேறு வழியின்றி உடன்பட்டுப் போகிறார்கள் .

பதில் கடிதத்தை அனுப்பும் முன் அந்த சமூகத்தின் தலைவனான 'சியாட்டல்' தன் மக்கள் முன் ஒரு வரலாற்று பிரசித்தம் மிக்க உரையை நிகழ்த்துகிறான் .அந்த உரையின் பகுதிகள் சில இதோ !

"வொசிங்க்டனில் வாழும் வெள்ளையர்களின் தலைவர் எமது நிலங்களை பணம் கொடுத்து வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் , அத்துடன் எம்முடனான (சுரண்டல் ) நட்பையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார் . அவரின் வேண்டுகோளின் பக்கம் எமது கவனத்தை திருப்பி உள்ளோம் .

 "எமது நிலத்தை நாம் விற்காவிடின் ,அவர்கள் ஆயுத பலத்தால் அதை அபகரிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனினும் நீலநிற வானத்தையும் வளமான நிலத்தையும் பணம் கொடுத்து வாங்க முடியுமா !?இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை !?

" காற்றின் தூய்மையும் , நீரின் குளிர்மையும் எம்ம்முடையதல்ல .அவ்வாறாயின் அதனை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் !?..........

இப்படி இயற்கையை வர்ணித்து அற்புதமாக ஒரு நீண்ட உரையை தொடுத்து விட்டு பதில் கடிதம் அனுப்புகிறார் அதில் இவ்வாறும் கூறுகிறார் ."

... எதோ ஒரு காரணத்தால் வெள்ளையர்களை இங்கு அழைத்து வந்து எம்மை வெற்றி கொண்டு அவர்களது ஆதிக்கத்தை பரப்பிட இடமளித்த இறைவனின் வல்லமையால் நீங்களும் அழிவுறக் கூடும் !

மனிதனின் விதி தீர்மானிக்கப் படுவது இன்னும் பரம இரகசியமாகவே உள்ளது ." இந்த உரையும் ,பதில் கடிதமும் தாங்களே நாகரீகத்தின் உச்சத்தில் உள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் கௌரவக் காட்டுமிராண்டிகள் குறித்த ஒரு தெளிவான விளக்கமாகவே உள்ளது .


நன்றி
ஹந்தக் களம்

Sep 12, 2015

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)

1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள்.
 
1941 இல் உக்ரைனை பிடித்துவிட்டு, கீவ் நகருக்குள் நடத்திய போரில், 5 லட்சம் சோவியத் மக்களை கொன்று குவித்துவிட்டது ஜெர்மன் படை. அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டவுடன், மீதமுள்ளோர் ஜெர்மன் படைக்கு சேவை செய்ய அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டனர். உக்ரைனின் தோல்வி, சோவியத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. நிலக்கரி, இரும்பு, எரிவாயு மற்றும் தாதுப்பொருட்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து ஜெர்மனியர்களால் திருடப்பட்டன. உக்ரைனை வீழ்த்திவிட்டு, ஜெர்மன் படைகள் அனைத்தும் சோவியத்தின் இதயமான மாஸ்கோவை நோக்கி முன்னேறின. ஜெர்மனியின் தாக்குதலை சோவியத் யூனியனால் நான்கு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று பிரிட்டனும் அமெரிக்காவும் நினைத்தன. இருப்பினும் போரில், சோவியத் உடனே தோற்றுவிடுவதை அவர்கள் விரும்பவில்லை. ஜெர்மனியும் சோவியத்தும் நீண்ட நாட்கள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால்தான் இருவரும் மீளமுடியாத அழிவைச் சந்திப்பார்கள். அதனை பயன்படுத்தி உலக வல்லரசாகிவிடலாம் என்பது அமெரிக்காவின் கனவாக இருந்தது.

“ஜெர்மனி வெல்வது போலிருந்தால் சோவியத்திற்கும், சோவியத் வெல்வது போலிருந்தால் ஜெர்மனிக்கும் நாம் உதவ வேண்டும். அவ்வாறு செய்தால்தான், இருவரும் பெருமளவில் செத்துமடிவார்கள்”

என்று அமெரிக்க செனட்டர் ட்ரூமன் வெளிப்படையாகவே பேசினார் (இதே ட்ரூமன் தான் ரூசுவல்டின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராகி, பனிப்போருக்கு வித்திட்டவர்) அதேவேளையில்,

போருக்குப் பின்னால் பிரிட்டன் மீண்டும் உலகையே காலனியாக்கி மிகப்பெரிய சர்வாதிகார நாடாகிவிடுமோ என்கிற அச்சமும் அமெரிக்காவிற்கு இருந்தது. அதனாலேயே தனது கீழிருக்கும் காலனி நாடுகளை விடுதலை செய்யவேண்டுமென்று பிரிட்டனிடம் கூறியது
அமெரிக்கா.

இந்தோனேசியாவை விடுதலை செய்யச் சொல்லி, அதே நெருக்குதலை நெதர்லாந்துக்கும் கொடுத்தது அமெரிக்கா. இந்தியா, இந்தோனேசியா போன்ற முக்கியமான நாடுகளை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று நினைத்திருந்தது அமெரிக்கா.
 
போருக்குப் போகலாமா? வேண்டாமா? என முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, போருக்குப் பின் ஒட்டுமொத்த உலகின் மீது அதிகாரம் செலுத்தப் போவது யார்? என்கிற போட்டி அமெரிக்காவிற்கும் பிரிட்டனிற்கும் உருவாகியது.

ஆனால், பிரிட்டன் மீது ஜெர்மன் நடத்திய வான்வழித்தாக்குதல்களால் லண்டன் மாநகர் உட்பட பிரிட்டனின் பலபகுதிகள் பெரும்சேதத்திற்கு உள்ளாகின. அதனால் பிரிட்டன் நிலைகுலைந்து போயிருந்தது. அச்சூழலினை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. எப்படியாவது பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்றே, தானும் ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டுமென்று விரும்பியது ஜப்பான். அதனால் உலக எண்ணை வளத்தில் பாதியளவிற்கு தன்னுள் வைத்திருந்த அமெரிக்கா, ஜப்பானுக்கு எண்ணை தரமறுத்தது. இந்தோனேசியா ஒரு எண்ணை வளமிக்க நாடென்பதால், அதனைப் பிடித்துவிட துடித்துக் கொண்டிருந்தது ஜப்பான். சீனா, மலேசியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என ஒவ்வொன்றாக ஆக்கிரமித்துக் கொண்டே, 1941 ஜூலையில் இந்தோசீனாவிற்குள் நுழைந்து ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது ஜப்பான். இந்தோனேசியாவில் எண்ணையைத் தவிர, ரப்பர் போன்ற இயற்கை வளங்கள் குவிந்து கிடப்பதையும் மனதில் வைத்தே முன்னேறியது ஜப்பான்.

Japanese_attack_on_Pearl_Harbor,_Hawaii
 
 
ஜப்பானுக்கு தடைபோடும் விதமாக, ஹவாய் அருகே பியர்ல் ஹார்பரில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தியிருந்தது அமெரிக்கா. உலகில் யாருமே எதிர்பாராத வண்ணம், 1941 டிசம்பர் 7 இல் பியர்ல் ஹார்பரில் அமெரிக்க கடற்தளத்தை கடுமையாக தாக்கியது ஜப்பான். 2500 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதுடன், அமெரிக்காவை அக்கடற்தளத்தில் செயலிழக்கவும் செய்தது.
 
மறுநாளே, அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பானுக்கு எதிரான போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில், ஜெர்மனியும் அமெரிக்காவுக்கு எதிரான போரினை அறிவித்தது. ‘ஜப்பானை தோற்கடித்தால், வெறும் ஜப்பானை மட்டுமே வென்றதாக இருக்கும். ஆனால் ஜெர்மனியை வென்றால், உலகப்போரையே வென்றதாகிவிடும்’ என்று கருதிய ரூசுவல்ட், ஐரோப்பாவிலேயே கவனம் செலுத்தினார். ஜெர்மனியுடன் நேரடியாக போர்புரிவதை பெருமளவில் தவிர்த்திருந்தாலும், போரில் முன்னணியில் நிற்பது போன்ற தோற்றத்தை தருவதில் மட்டும் முனைப்புடன் செயல்பட்டது அமெரிக்கா.

இதனை நன்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜப்பான், உலகின் ஆறில் ஒரு பங்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு தொடர்ந்து கிழக்கே முன்னேறிக் கொண்டிருந்தது. தாய்லாந்து, மலேசியா, ஜாவா, போர்னியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா மற்றும் பர்மா வரை ஆக்கிரமித்தது. இவற்றில் பெரும்பாலான நாடுகளில், பிரிட்டன்-பிரான்சு-அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளிலிருந்து தங்களை விடுவிக்க வந்தவர்கள் என்றே ஜப்பானியர்களை கருதி வரவேற்றார்கள். அதனால், ஆக்கிரமிப்பும் எளிதாகிப்போனது ஜப்பானுக்கு. இவற்றில் மிகப்பெரிய வெற்றியாக 1942 இல் சிங்கப்பூரில் பிரிட்டன் படைகளையே சரணடைய வைத்தது ஜப்பான்.

முற்றும்.

Thanks maattru

 

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1)

 
1945 இல் அமெரிக்காவின் சங்க்ரே டி கிரேஸ்டோ மலைப்பகுதியில் ஒரு கட்டிடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விடியற்காலைப் பொழுதினை பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். விஞ்ஞானி ஒப்பன்ஹைமரின் தலைமையில் மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அணுவாயுதத்தைப் பரிசோதித்த நாள்தான் அது. அப்பரிசோதனைக்கு “டிரினிடி” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேவேளையில், அவ்விடத்திற்கு சில மைல் தூரத்தில் விஞ்ஞானிகள் குழுவின் கண்காணிப்பில், பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்சின் தலைமையில் அமெரிக்காவின் போர் தலைமையகம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனை விட மிகப்பெரிய ஒளியினை எழுப்பி, காலை 5 மணி, 29 நிமிடங்கள், 45 வினாடிக்கு உலகின் முதல் அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டது.

இன்றைக்கு முழுமையான இராணுவ அரசாக பரிணமிக்கும் அமெரிக்காவின் பயணத்திற்கு அன்றைய அணுகுண்டு பரிசோதனை மிகப்பெரிய அடிக்கல் நாட்டுவிழாவாக இருந்தது.

வேறுவழியில்லாமல் மிகப்பெரிய தயக்கத்துடனேயே இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது அமெரிக்காஅணுகுண்டு வீசியதாக காலம் காலமாக உலகமக்களிடையே பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அதற்குப் பல ஆண்டுகள் முன்னாலேயே, தன்னுடைய உலக வல்லரசுக் கனவிற்காக அணுகுண்டு தொடர்பான ஆய்வினை தொடங்கிவிட்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற இந்த 70 ஆண்டுகளில், அமெரிக்கா தன்னுடைய அரசியலை உலக அரங்கில் எப்படியெல்லாம் நடத்தியிருக்கிறது என்கிற வரலாறு ஏறத்தாழ பெருவாரியான மக்களுக்கு சொல்லப்படாத கதைகள்தான். அவற்றை தமிழில் ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆவலில் எழுதப்படுகிற தொடர்தான் இது. இதற்காக ஆலிவர் ஸ்டோன் எழுதிய “Untold stories of United States” என்கிற புத்தகத்தையும், அதனையொட்டி அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களையும், திரைப்படங்களையும், இன்னும் ஏராளமான கட்டுரைகளையும், வரலாற்று ஆவணங்களையும் மூலமாக வைத்துக்கொண்டு எழுதப்படுகிற தொடரிது.

இரண்டாம் உலகப்போர்:

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஜெர்மனிய நாசிசத்தையும், இத்தாலிய பாசிசத்தையும், ஜப்பானிய இராணுவமயத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரு “நல்லபோர்” என்றுதான் இரண்டாம் உலகப்போர் குறித்து வரலாறாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், 3 கோடி சோவியத் மக்களும், 1-2 கோடி சீன மக்களும் 60 லட்சம் யூதர்களும், 60 லட்சம் ஜெர்மனியர்களும், 30 லட்சம் யூதரல்லாத போலந்து மக்களும், 25 லட்சம் ஜப்பானியர்களும், 15 லட்சம் யூகோஸ்லாவியர்களும், 2.5-5 லட்சம் பிற நாட்டவர்களும் (ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, ஹங்கேரி, ரோமேனியா, அமெரிக்கா) உயிரிழந்த மிகமோசமான போர்தான் இரண்டாம் உலகப்போர். முதல் உலகப்போர் போன்றல்லாமல், மெதுவாகவும் படிப்படியாகவும் துவங்கியது இரண்டாம் உலகப்போர்.


1931 இல், ஜப்பானின் குவாண்டங் படைகள் சீனாவின் மஞ்சூரியா பகுதியில் குண்டுகள் பொழிந்து சீனாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அதே வேளையில், முதல் உலகப்போரின் தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக, ஐரோப்பாவில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி ஒரு போர் பூதமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. 1935 இல் இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியின் ஆணைப்படி, எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது இத்தாலி. ஜெர்மனி ஐரோப்பாவிலும், ஜப்பான் சீனாவிலும், இத்தாலி ஆப்பிரிக்காவிலும் நிகழ்த்திய ஆக்கிரமிப்புப் போர்களைக் கண்டு பலம் வாய்ந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை நன்கு அறிந்து கொண்ட ஹிட்லர், ரைன்லாந்தின் மீது படையெடுத்தார். (ரைன்லாந்து என்பது ஜெர்மனிக்கு மேற்கில் மத்திய ஐரோப்பாவிலிருக்கும் ரைன் நதியச் சுற்றியுள்ள பகுதிகள்). முதல் உலகப்போரின் முடிவில், ரைன்லாந்திற்குள் நுழையக் கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையினையும் மீறி ஆக்கிரமிப்பை நடத்தியிருந்தது ஜெர்மனி.

“ரைன்லாந்திற்குள் படையெடுத்த அந்த 48 மணிநேரம்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே பதட்டமான நேரம். பிரான்சு மட்டும் அப்போது சிறு எதிர்ப்பு காட்டியிருந்தால், எங்களது வாலை சுருட்டிக் கொண்டு ஓடியிருப்போம்”

என்று பின்னாளில் அதனை ஹிட்லர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

1936 ஜூன் மாதத்தில், ஸ்பெயின் மக்கள் குடியரசை கைப்பற்றி இராணுவ ஆட்சியமைத்த ஜெனரல் பிரான்கோவிற்கு அமெரிக்கா மறைமுக ஆதரவையும், ஹிட்லரும் முசோலினியும் பல்லாயிரக்கணக்கான படைகளை அனுப்பி நேரடி ஆதரவையும் வழங்கினர்.

நிலைமையினை சீர்செய்ய, சோவியத்தின் சார்பாக ஆயுதங்களையும் ஆலோசகர்களையும் ஸ்பெயின் அனுப்பி வைத்தார் சோவியத் அதிபர் ஸ்டாலின். ஆனால் பிரான்சோ, இங்கிலாந்தோ, அமெரிக்காவோ எவ்வித உதவியும் செய்யாமல் அமைதிகாத்தன. ரூசுவல்ட் தலைமையிலான அமெரிக்க அரசு, ஸ்பெயினில் யாருக்கும் உதவக் கூடாது என்ற உத்தரவிட்டது. அதைமீறி, ஜெனரல் மோட்டார்ஸ், பாயர்ஸ்டோன் மற்றும் அமெரிக்காவின் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பலவும் ஸ்பெயினின் பாசிச இராணுவத்திற்கு டிரக்குகள், டயர்கள், மற்றும் இதர போர் ஆயுதங்கள் வழங்கி உதவின. டெக்சகொ எண்ணை நிறுவனம் ஒரு படி மேலே சென்று, ஸ்பெயினின் பிரான்கோ அரசிற்கு தேவையான அளவு எண்ணை எரிபொருளை கடனாக தருவதாகவும், கடனை எப்போது வேண்டுமானாலும் திருப்பி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. விவரமறிந்த ரூசுவல்ட், டெக்சகொ எண்ணை நிறுவனத்திற்கு அபராதம் விதித்ததும், பின்னாளில் அதே நிறுவனம் ஹிட்லருக்கு தொடர்ந்து எண்ணை வழங்கியதும் வரலாறு.

அமெரிக்க பெருமுதலாளிகள், ஹிட்லரின் இராணுவம், பாசிச பிரான்கோ இராணுவம் போன்ற ஆயுத, பண பலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் 1939 இல் ஸ்பெயின் குடியரசு வீழ்ந்தது.

ஸ்பெயின் உள்நாட்டுபோரின் போது அமெரிக்கா எடுத்த முடிவு மிகத் தவறானது என்று பின்னாளில் 1939 இல் அமெரிக்க அதிபர் ரூசுவல்டே கேபினட் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஸ்பெயின் போரிலிருந்தும், தனது பலத்தை பெருக்கிக் கொண்டது ஜெர்மனி இராணுவம்.

ஹிட்லரின் நாஜிப்படைக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டுமென்று ஸ்டாலின் பல வருடங்களாக விடுத்த வேண்டுகோளை நிராகரித்துக் கொண்டே வந்தன மேற்குலக நாடுகள்.

1937 இல் வலிமை வாய்ந்த ஜப்பானியப் படைகள் சீனாவின் ஒவ்வொரு நகரையும் ஆக்கிரமித்துக் கொண்டே முழுவீச்சுடன் போராக மாற்றியிருந்தது. 1937 டிசம்பர், சீனாவின் நேன்சிங் பகுதியைப் பிடித்து, 2-3 லட்சம் அப்பாவி மக்களை கொன்றதோடல்லாமல், பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்தது ஜப்பானிய இராணுவம். விரைவில், 20 கோடி மக்கள் வாழ்ந்த கிழக்கு சீனாவை முழுவதுமாக தன்வசப்படுத்திவிட்டது ஜப்பான்.

1938 இல் ஆஸ்திரியா, செகஸ்லோவேக்கியாவின் ஒரு பகுதி என்று தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது ஹிட்லரின் ஜெர்மனி. 1939 மார்ச் மாதத்தில் செகஸ்லோவேக்கியாவை முழுமையாக தனதாக்கியது ஹிட்லரின் ஜெர்மனி. ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்துக் கொண்டே, ஜெர்மனியென்னும் போர் பூதமொன்று தன்னை நோக்கி வருவதை உணர்ந்தது சோவியத் யூனியன். வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த சோவியத்தின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும், போரினால் ஏற்படப்போகிற பேரழிவினை தடுக்கவும், தன்னால் இயன்றவரை போரினை தடுக்கவே முயன்றார் ஸ்டாலின். போரில்லா சமூகத்தை அமைக்க, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எவையும், ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வரத் தயாராக இல்லை. அதனால், தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த ஜெர்மனியிடமே, சோவியத் ஒரு ஒப்பந்தத்தினை ஒருங்கிணைத்து கையெழுத்திட்டது. ஜெர்மனியோ, சோவியத்தோ ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதுதான் அவ்வொப்பந்தத்தின் சாராம்சம்.

ஒப்பந்தம் போட்ட இரண்டே வாரத்திற்குள், அதனை மீறிக்கொண்டு போலந்திற்குள் நுழைந்தன ஹிட்லரின் படைகள். பிரிட்டனும், பிரான்சும் விழித்துக் கொண்டு, போலந்துடன் இணைந்து ஹிட்லரை எதிர்த்து நின்றன. சோவியத்தும் போலந்திற்குள் நுழைந்து, தன்னுடைய எதிர்ப்பினைக் காட்டி, எஸ்டோனியா, லத்வியா, லித்துவேனியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் நுழைந்தது.

இரண்டாம் உலகப்போரும் ஏறத்தாழ துவங்கிற்று….


எதையும் கண்டுகொள்ளாமல், தன்னுடைய ஆக்கிரமிப்பை டென்மார்க், நார்வே, ஹாலந்து, பெல்ஜியம் என தொடர்ந்தது ஹிட்லரின் ஜெர்மனி. அந்நாடுகளின் தேசிய இராணுவங்கள் எல்லாம் பலம்பொருந்திய ஜெர்மன் இராணுவத்துடன் மோதமுடியாமல் பின்வாங்கின. மிக அருகாமையிலிருந்த பிரான்சும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் எல்லா நாடுகளையும் பிடித்த பின்னர் ஜெர்மனியின் பார்வை இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது. இங்கிலாந்தைப் பிடித்துவிட்டாலோ, பணியவைத்துவிட்டாலோ, அதன் பின்னர் சோவியத்தை மிரட்டுவது எளிதாகிவிடும் என்பது ஹிட்லரின் கணக்கு. இங்கிலாந்தை தாக்கியதற்கு இதனைவிடவும் முக்கியமான மற்றுமொரு காரணமுமிருந்தது. இங்கிலாந்தை பிடித்துவிட்டால், இந்தியா உட்பட அதன்வசமுள்ள ஒட்டுமொத்த காலணிகளும் தன்வசமாகிவிடும் என்றும் கணக்குப் போட்டது ஜெர்மனி.

ஆனால், வான்வழியாக பிரிட்டனைத் தாக்குவதா அல்லது கடற்படையினை வீழ்த்துவதா, அல்லது பிரிட்டன் நகரங்களை குண்டுபோட்டு அழிப்பதா என்பதில் ஹிட்லருக்கு இருந்த குழப்பங்களால், பிரிட்டனை வெற்றி கொள்ள முடியாமல் திரும்ப வேண்டியதாயிற்று.



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Thanks maattru

முதல் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு

 
 
 முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, உதுமானிய கிலாபத் , பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா,அமெரிக்கா,இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன.

 
 

1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின.

போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது. 1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின.

போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும்.

எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப்படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.
போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன.

இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன.

இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார். ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர்.

யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது.

போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று. ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய கிலாபத் என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின.சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது.

யூகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின.

மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்" ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன.

ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா அச்சங்கத்தில் கடைசிவரை சேரவில்லை.
 
செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் வேற ஒரு வரலாற்று பதிவில் சந்திப்போம்.

 
நன்றி விக்கிபீடியா

Sep 8, 2015

உலக வரலாற்றில் அமெரிக்கா தொடுத்தப் போர்கள்...!!!

 
 
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் சகோதர, சகோதரிக்கு...
 
Islamic Uprising வாசகர்களாக.....
 
 
நமது வலைத்தளத்தில் இஸ்லாமிய உம்மத்தின் நிலைமைகளை பற்றியே நம் பகரிந்து வந்தது நீங்கள் அறிந்த ஒன்று. 
 
தன்னை ஒரு வல்லாரசு சொல்லிக்கொண்டு மற்ற உலக நாடுகளையும்  மற்றும் அதன் மக்களையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காயின் போர்கள் பற்றியும் ஆதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் பற்றியும் தான் படிக்கக் இருக்கிறோம். இவர்களை பற்றி இஸ்லாமிய சமுதாயம் நன்றாக தெரிந்து வைத்துள்ளது  என்றாலும் இவர்களின் கைப் பாவை இருந்துக் கொண்டு முஸ்லிம்களின் தலைவர்கள் என்ற தன்னைக் வெளியில் தம்பட்டம் அடித்துக்கொண்டு முஸ்லிம் உம்மாஹ்தை நயவஞ்சக அமெரிக்காவின் சட்டையில் பேஜி குத்திவிடும் இந்த கை பாவைப் பற்றி தெரியாது தான் கவலைக்கு உரிய விஷயம்.
 
அமெரிக்க ஓரு நாட்டின் மீது படை எடுப்பது என்பது அதற்கு மிகவும் கைவந்த கலைக்களில் ஒன்று.
 
என்றேரால்,
 
இவர்களக்கு நிரந்தர நண்பர்களும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது.
 
ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதும் ஆகரித்த பின்பு அந்த நாட்டின் மீது நட்பு பாராட்டுவதும் இன்றும் நாம் கண் முன்னே  நடந்துக் கொண்டு இருக்கிறது.
 
இவர்களின் போர் வரலாற்றை நாம் எடுத்து பார்த்தோம் என்றால் தெரியும். 18 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 நூற்றாண்டின் இன்று வரைக்கும்  போர் நிலைப்பாடு இருந்துக்கொண்ட வருகிறது. ஆனால் இன்றோ ஒபாமா கையில் வெள்ளைக் கொடிய கொடுத்து "உலக அமைதி" விருப்பம் நாடு அமெரிக்கா என்று உலக நாடு மக்களை முட்டாள்களாக ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
18 ஆம் நூற்றாண்டின் போர்கள்
  • அமெரிக்கப் புரட்சிப் போர் (1775-1783)
  • Chickamauga போர் (1776-1795)
  • வடமேற்கு இந்தியப் போர் (1785-1793)
  • விஸ்கி எதிர்ப்பு கலகம் (1791-1794)
  • குவாசி போர் (1798-1800)

19 ஆம் நூற்றாண்டின் போர்கள்
  • முதல் காட்டுமிராண்டி போர் (1801-1805)
  • டெக்யூம்சே போர் (1811)
  • 1812 போர் (1812-1815)
  • க்ரீக் போர் (1813-1814)
  • இரண்டாம் காட்டுமிராண்டி போர் (1815)
  • முதல் செமினோல் போர் (1817-1818)
  • டெக்சாஸ்-இந்திய போர்கள் (1820-1875)
  • Arikara போர் (1823)
  • Aegean கடல் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கை (1825-1828)
  • முதல் சுமத்திரா பயணம் (1832)
  • பிளாக் ஹாக் போர் (1832)
  • இரண்டாம் செமினோல் போர் (1835-1842)
  • நாட்டுப்பற்று போர் (1838)
  • அமெரிக்காவில் ஆய்வு பயணம் (1838-1842)
  • இரண்டாம் சுமத்திரா பயணம் (1838)
  • மெக்சிகோ-அமெரிக்க போர் (1846-1848)
  • தைப்பிங் கலகம் (1850-1864)
  • அப்பாச்சி வார்ஸ் (1851-1900)
  • Greytown மீது குண்டுத் தாக்குதல் (1854)
  • நீர்சந்தியில் போர் (1855-1856)
  • முரட்டு ஆறு வார்ஸ் (1855-1856)
  • மூன்றாம் செமினோல் போர் (1855-1858)
  • யகிமா போர் (1855-1858)
  • முட்டுக்கட்டைகளை போர் (1856-1857)
  • இரண்டாம் அபின் யுத்தம் (1856-1859)
  • யுடா போர் (1857-1858)
  • நவாஜோ வார்ஸ் (1858-1866)
  • முதல் மற்றும் இரண்டாம் கார்டினாவிற்கு போர் (1859-1861)
  • Paiute போர் (1860)
  • சீர்திருத்த போர் (1860)
  • யார் Nhon மீது குண்டுத் தாக்குதல் (1861)
  • அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-1865)
  • Yavapai வார்ஸ் (1861-1875)
  • 1862 டகோட்டா போர் (1862)
  • கொலராடோ போர்(1863-1865)
  • Shimonoseki போர் (1863-1864)
  • பாம்பு போர் (1864-1868)
  • தூள் ஆறு போர் (1865)
  • ரெட் கிளவுட் போர் (1866-1868)
  • மெக்ஸிக்கோ நகரத்தின் முற்றுகை (1867)
  • Comanche பிரச்சாரம் (1867-1875)
  • கொரியா அமெரிக்கா பயணம் (1871)
  • Modoc போர் (1872-1873)
  • சிவப்பு நதி போர் (1874-1875)
  • 1876 கிரேட் சியோக்ஸ் போருக்கு (1876-1877)
  • எருமை ஹண்டர்ஸ் போர் (1876-1877)
  • Nez Perce போர் (1877)
  • சான் Elizario உப்பு போர் (1877-1878)
  • Bannock போர் (1878)
  • செயேனி போர் (1878-1879)
  • Sheepeater இந்தியப் போர் (1879)
  • Victorio போர் (1879-1881)
  • வெள்ளை நதி போர் (1879-1880)
  • எகிப்திய பயணம் (1882)
  • பைன் ரிட்ஜ் பிரச்சாரம் (1890-1891)
  • கார்ஸா புரட்சி (1891-1893)
  • ஹவாய் பேரரசு (1893)
  • பிரேசிலிய கடற்படை கிளர்ச்சி (1893-1894)
  • Yaqui வார்ஸ் (1896-1918)
  • இரண்டாம் ஸாமோவான் உள்நாட்டுப் போர் (1898-1899)
  • ஸ்பெயின்-அமெரிக்க போர் (1898)
  • பிலிப்பைன்ஸ்-அமெரிக்க போர் (1899-1902)
  • மோரோ கலகம் (1899-1913)
  • பாக்ஸர் எழுச்சி (1899-1901)
20 ஆம் நூற்றாண்டின் போர்கள்
 
  • கிரேசி பாம்பு கலகம் (1909)
  • எல்லைப் போர் (1910-1919)
  • நீக்ரோ கலகம் (1912)
  • நிகரகுவா தொழில் (1912-1933)
  • பிளஃப் போர் (1914-1915)
  • ஹைட்டி தொழில் (1915-1934)
  • சர்க்கரை தலையீடு (1916-1918)
  • டொமினிக்கன் குடியரசு தொழில் (1916-1924)
  • முதலாம் உலகப் போர் (1917-1918)
  • ரஷியன் உள்நாட்டு போர் (1918-1920)
  • சம்ஸூங் தாக்குதல் (1922)
  • போசி போர் (1923)
  • இரண்டாம் உலகப் போர் (1941-1945)
  • கொரிய போர் (1950-1953)
  • லெபனானில் தலையீடு (1958)
  • பிக்ஸ் மீது விரிகுடா (1961)
  • டொமினிக்கன் உள்நாட்டுப் போர் (1965-1966)
  • வியட்நாம் போர் (1965-1973)
  • இரண்டாம் Shaba (1978)
  • லெபனானில் சர்வதேசப் படை (1982-1984)
  • கிரெனடா படையெடுப்பு (1983)
  • பனாமா படையெடுப்பு (1989-1990)
  • வளைகுடாப் போர் (1990-1991)
  • ஈராக் பறக்கக் கூடாத பகுதிகள் (1991-2003)
  • சோமாலி உள்நாட்டுப் போர் (1992-1995)
  • ஹைட்டியில் தலையீடு (1994-1995)
  • போஸ்னியன் போரை (1994-1995)
  • கொசோவோ போர் (1998-1999)
21 ஆம் நூற்றாண்டில் போர்கள்
 
  • ஆப்கானிஸ்தான் போர் (2001-தற்போது)
  • ஈராக் போர் (2003-2011)
  • பாக்கிஸ்தான் போர் (2004-தற்போது)
  • ஆபரேஷன் பெருங்கடல் கேடயம் (2009-தற்போது)
  • லிபிய உள்நாட்டுப் போர் (2011)
  • ISIL மீதான போர் (2014-தற்போது வரை)
 
ஈராக் உள்நாட்டுப் போர், சிரிய உள்நாட்டுப் போரில், இரண்டாம் லிபிய உள்நாட்டுப் போர் ஒரு பகுதி, ஹரம் கிளர்ச்சி, மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போர்
பிற இணையத்தளத்தின் உதவி உடன் இந்த பதிவு தொகுக்கப்பட்டு இருப்பதால் தவறுகள் இருப்பின் சுட்டிக் கட்டினால் இன்ஷா அல்லாஹ் திருத்தம் செய்யப்படும்.
 
அன்பு சகோதார,சகோதரிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
islamic uprising
 
References Wikipedia