Feb 22, 2013

Feb 21, 2013

பசுந் தோல் போர்த்திய புலிகள் யார் !?

"வணிகத்தில் இலஞ்சம் கொடுப்பது குற்றமில்லை " ! இவ்வாறு கூறுவது 'மாபியா ' இயக்கத்தின் தலைவரோ ,அல்லது ஒரு முன்னாள் 'ரவுடியோ ' அல்ல மாறாக ஒரு புகழ் பெற்ற வரலாற்றை பறை சாற்றி நிற்கும் முன்னாள் காலனித்துவ வாத நாடான 'இத்தாலி 'யின் முன்னால் பிரதமரான 'சில்வியோ பெர்லஸ்கோனி 'ஆவார் .

இத்தாலியின் முக்கிய பிரமுகர்களுக்கு 3600 கோடி இந்திய ரூபா மதிப்பில் 12 அதி நவீன 'ஹெலிகொப்டர்களை ' கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள 'பின் மெக்கானிக்கா ' எனும் இத்தாலிய நிறுவனம் 360 கோடி ரூபா இலஞ்சம் கொடுத்ததாக காரணம் காட்டி கைது செய்யப்பட்டிருக்கும் அந்த நிறுவனத்தின் அதிகாரியான 'கியுசெப் ஓர்சி ' தொடர்பில் , அவருக்கு சார்பாக இந்த கருத்தை 'இத்தாலி 'யின் முன்னால் பிரதமரான 'சில்வியோ பெர்லஸ்கோனி ' தெரிவித்துள்ளார் . மேலும் அவர் இது விடயத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறிய 'ஹைலைட்டான சில கருத்துக்களை கீழே தருகின்றேன் .

* " இலஞ்சம் என்பது நடைமுறையில் இருக்கும் விடயம் ! அவசியம் ஏற்படும் நிலையில் அதை கொடுப்பதில் தவறில்லை "

* "உலக அளவில் இத்தாலியின் வணிக நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது வணிக உலகில் தற்கொலைக்கு ஒப்பானது இந்த நடவடிக்கை இத்தாலியின் சர்வதேச வணிகத்தை பாதிக்கும் "

* "இது ஒரு ஒழுக்க நெறி சார்ந்த விடயம் எனக்கூறுவது நகைப்புக்கிடமானது ! (முதலாளித்துவ ) வணிக உலகில் இதுபோல் விடயங்களை பெரிது படுத்தும் நிலையில் உங்களால் ஒரு சிறந்த வணிக 'ஜம்பவான்கலாக ' மிளிர முடியாது "

மேலே தந்த விடயங்கள் நிகழ்கால முதலாளித்துவ உலகின் சூழ்நிலையை விளக்க முதலாளித்துவம் தன்னைப் பற்றி தானே அளிக்கும் 'சாத்தானிய ' சாட்சிகளாகவே எம்மால் கருத வேண்டியுள்ளது . இந்த கருத்துரையின் படி உலகின் அதிகாரத்தை இத்தகு ஊழல்களை,வரம்பு மீறல்களை அங்கீகரித்து அரசியல் செய்யத்தக்க ' பசுந் தோல் போர்த்திய புலிகளால் ' மட்டுமேசெய்ய முடியும் . என்ற 'ஜங்கிள் லோவை ' 'பிரக்டிகல் வே ' என காட்டி நிற்கின்றது . இந்த அநியாய விதியின் கீழே பின்வரும் விடயத்தையும் சற்று ஒப்பிடுவது பொருத்தம் என நம்புகிறேன் .

பெரும்பான்மை ,சிறுபான்மை என்ற அரசியல் கொந்தளிப்பில் இலாபம் அனுபவித்து அரசியல் செய்யும் 'ஜனநாயக ' வாக்கு வியாபாரத்தை பற்றித்தான் நான் சொல்ல வருகின்றேன் . மனித நேயத்தை இரண்டாம் பட்சமாக்கி பெரும்பான்மை எனும் பக்கச் சார்பின் மீது அதிகார கதிரையை இருத்தி அதில் அலாதியாக அமர்ந்து இன ,மத , குல ,வர்க்க ,நிற வேறுபாடுகளை தூண்டி ஆட்சி செய்யும் தேசிய ,சர்வதேசிய அரசியல் வியாபாரத்தின் வணிகர்கள் பற்றியும் ,அந்த முதலாளிகளுக்கு வாக்கு பலம் கொடுத்து முட்டல்களாகும் நம்மைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் . 'பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் ' எனும் பழமொழி சொல்வது போல் தீமையின் ஆணிவேரே இன்று உலகின் தனிப்பெரும் ஆதிக்க சக்தியாக தன்னை நிலைநாட்டி நிற்கும் தீய முதலாளித்துவ அரசுகளே .என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

இஸ்லாம் கொச்சைப் படுத்தப் படுகின்றது;முஸ்லிமே ! நீ எங்கே இருக்கிறாய் !?

முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் . 
(அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ், வசனம் 29)

நிகழ்கால சூழ்நிலைகளில் முஸ்லீம்களாகிய எமது வாழ்வு ,நடத்தை என்பவற்றின் மீது கேள்வி எழுப்பும் ஒரு வசனமாகவும் , ஒரு முஸ்லிமின் நடத்தை இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இந்த வசனம் அமைந்துள்ளது . ரசூல் (ஸல் ) அவர்களின் நடத்தை வழி ஆதாரத்தின் படி நிராகரிப்பாளர்களின் மீது கடுமை காட்டுதல் என்பதன் அர்த்தமாவது இஸ்லாம் அல்லாத சிந்தனா வாதத்தின் கடும் பிடியாளர்களோடு ,ரசூல் (ஸல்) பலத்தோடு இருந்த சந்தர்ப்பத்திலோ அல்லது எதிர்க்க பலமற்று இருந்த சந்தர்ப்பத்திலோ எவ்வாறு நடந்து கொண்டார்கள் ? என்ற விளக்கத்தை சுற்றியே எம்மை பார்க்கத் தூண்டவேண்டும். அதன்படி மனித நேயம் என்ற எல்லைக்குள் இஸ்லாமிய சிந்தனா வாதத்தை பரிகசிக்காத ,எதிர்க்காத மனிதர்கள் மீது ஒரு கண்ணியமான உறவை பேணுதல் என்பதும் இஸ்லாத்தின் கட்டளை என்பதை சுன்னா தெளிவாகவே எமக்கு காட்டி நிற்கும் .

ஆனால் இன்றைய சூழ்நிலைகளில் முஸ்லீம்களின் நடத்தை என்பது இந்த வஹி வழிகாட்டலுக்கு மாற்றமாக , தலைகீழாகவே அமைந்துள்ளது !! (அதே நேரம் அல்லாஹ்வின் உதவியையும் ,பொருத்தத்தையும் வேறு எதிர்பார்க்கிறார்கள் ! )அதாவது அந்த நடத்தை நிராகரிக்கும் சிந்தனா வாதத்தோடு சமரசம் செய்தல் , இணங்கிப் போதல் , அந்த 'குப்ரிய ' சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பிற்கு அமைந்த வாழ்வியல் வாதங்களுக்கு சார்பாக இஸ்லாத்தை திரித்துக் கூறுதல் ,பேசவேண்டிய தருணங்களில் மௌனம் காக்கத் தூண்டுதல் போன்ற நடத்தைகளின் ஊடாக 'குப்ரை' திருப்திப் படுத்துவதோடு , விரல் நீட்டி இந்த இயக்கத்தின் நடத்தை போல் எமது நடத்தை இல்லை , அந்த அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருகிறது , இவர்கள் தீவிரவாதிகள் என காட்டிக் கொடுத்து குப்பார்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் தான் இனி வாழ்க்கை உள்ளது; என செயல்படவும் தொடங்கி விட்டார்கள் .

கீழே வரும் சம்பவங்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் போது , நிராகரிப்பவர்களின் அதிகாரத்தின் கீழ் விரும்பியோ விரும்பாமலோ வாழும் நிலை ஏற்பட்டால் ஒரு முஸ்லிமின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறந்த சான்றாக அமைகின்றது .

ரசூல் (ஸல் ) அவர்கள் ஒருமுறை குறைசிக் காபிர்களின் கடுமையான நக்கலுக்கும் ,நையாண்டிக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது . அப்போது அந்த காபிர்களின் முன் நின்று கோபப்பட்டவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) பின்வருமாறு கூறினார் ." குறைசிகளே ! நான் சொல்வதை சற்று கவனியுங்கள் . எனது உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக ! உங்களிடத்தில் நான் உங்களை அழிவிற்கு இட்டுவிடும் ஒரு முடிவை கொண்டே வந்துள்ளேன் . (அதாவது அதி விரைவாக உங்கள் கதை முடிந்து விடப் போகிறது )"என்ற இவரின் இந்த ஆவேசமான வார்த்தைகள் குறைசிகளை திடுக்கிட வைத்தது.

இதே போல இன்னொரு சம்பவம் இது உமர் (ரலி ) இஸ்லாத்தை தழுவிய நேரம் நடந்தது . அவர்கள் தான் இஸ்லாத்தை தழுவிய செய்தியை யாரிடம் சொன்னால் அது பகிரங்கமாகும் ? என விசாரித்ததில் 'ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜுமகி 'என அறிந்து அவனிடம் சொன்னார்கள் .அவன் மக்கள் மத்தியில் சென்று "ஓ குறைசிகளே !கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான் " என்று கத்தினான் . அவனோடு கூடச் சென்ற உமர் (ரலி ) " இல்லை இவன் பொய் கூறுகிறான் .நான் மதம் மாறவில்லை .மாறாக முஸ்லிமாகி விட்டேன் ." என்று கூறியவுடன் . காபிர்கள் ஓன்று கூடி அடிக்க ஆரம்பித்தார்கள் உமர் (ரலி )யும் அவர்களோடு சண்டையிட்டார்கள் .இறுதியில் அவர்கள் களைத்து சோர்ந்து விடும் நிலைக்கு வந்த போது கூறினார்கள் . "உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஓன்று மக்கா உங்களுக்கு அல்லது எங்களுக்கு என ஆகிவிடும் " என்று கூறினார்கள் .

இந்த சம்பவத்தின் பின்னர் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) வந்த உமர் (ரலி ) அல்லாஹ்வின் தூதரே ! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தானே இருக்கிறோம் ?" எனக் கேட்டார்கள் .அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் "ஆம் !எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக ! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில் தான் இருக்கிறீர்கள் " என்று கூறினார்கள் .அப்போது உமர் (ரலி )! "இனி நாம் ஏன் மறைவாக செயற்பட வேண்டும் ? இனி சத்தியத்தை வெளிப்படையாக கூறியே ஆகவேண்டும் " எனக் கூறியவராக இருந்த சொற்ப முஸ்லீம்களை இரண்டு அணியாக பிரித்து ஒரு அணிக்கு ஹம்சா (ரலி ) அவர்களை தலைமைதாங்க வைத்து மறு அணிக்கு தான் தலைமை தாங்கியவராக புழுதி பறக்க அணிநடை சென்று கவுபாவுக்குள் நுழைந்தார்கள் .(இதன் பின்னரே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) உண்மைக்கும் பொய்க்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் எனப் பொருள் படும் ' அல் பாரூக் ' என்ற பெயரை உமர் (ரலி )க்கு சூட்டினார்கள் .) காபிர்கள் கதிகலங்கிப் போனார்கள் .

இந்த சம்பவங்கள் எல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருந்த நிலையில் தான் நிகழ்ந்தவை . இன்று காவி அணிந்த காழ்ப்புணர்ச்சிகள் குர் ஆணை மொழி பெயர்த்து எம்மீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேள்வி எழுப்புகின்றன !? 'அபூலஹபை விமர்சித்த சூராவைக் காட்டி இப்படி பேசும் ஒருவனுக்கு இறைவனாக இருக்க தகுதி இல்லை என ஒரு தரக்குறைவு தம்பட்டம் அடிக்கிறது !!.அஹ்லாக் ,அஹ்லாக் என ஆதாரம் காட்டி இஸ்லாத்தை ஒரு மதமாக முன்வைத்து அதன் சித்தாந்தப் பெறுமானம் பேசப்படாத குறையே இந்த குறைமதிகள் 'வஹியை இழுத்து கேலித்தனம் செய்ய காரணமாக ஆகிவிட்டது!!

இது இஸ்லாத்தை சாகடித்து ஒரு சிறுபான்மை வாழ்வு எமக்கு அவசியமா ? என சிந்திக்க வேண்டிய தருணம் .ஓ முஸ்லீம் உம்மத்தே ! எம்மிடம் மட்டுமே ஒரு தெட்டத் தெளிவான வாழ்வியல் வழிமுறை உண்டு என்பதே எமது அசைக்க முடியாத அகீதா . யாரும் வெறுக்கும் நிலையிலும் மறுக்கும் நிலையிலும் கிண்டலடிக்கும் நிலையிலும் இந்த சத்தியமே வெற்றியடையும் என்பதும் எமது அகீதா . அல்லாஹ்வுடைய அருள் என்பது அவன் எங்களுக்கு தந்திருக்கும் வாழ்க்கை முறைதான் . 'வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு அல்லது இஸ்லாத்தோடு மரணித்தல் 'என்பது எமது முடிவாக மாறும் பட்சத்தில் இஸ்லாம் சிறுபான்மை பெரும்பான்மை போன்ற எந்த நிலையிலும் கண்ணியத்தோடு வாழும் என்பது வரலாறு மட்டுமல்ல நாம் எதிர் கொள்ளும் நிதர்சன நியாயமும் ஆகும்

Feb 19, 2013

ஒட்டு மொத்த 'கிரிமினல்களின் ' பக்குவமான புகழிடம் எது ?


குடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம் அதுதான் ஜனநாயகம் . ஆண்டிக்கு ஆண்டியே அரசனாம் !! இப்படித்தான் சொன்னார்கள் . சுதந்திரத்தை அடுத்தவனின் மூக்கு நுனிவரை நீட்டமுடியும் என்று துள்ளிக் குதித்தார்கள் . அதன் வடிவம் பற்றிய ஆசை எப்போதும் நிராசையானது தவிர இன்றுவரை நியாயமாகவில்லை . பகல் கொள்ளைக்கும் ,பக்கச் சார்புக்கும் , படு பாதகங்களுக்கும் அது துணை போனதே தவிர உருப்படியாக அது என்றும் தீர்வு சொன்னதில்லை .
மக்களின் விருப்பே ஜனநாயகத்தின் முடிவு இப்படி சொல்லி பகட்டான ஒரு தேர்தலும் வைக்கப்படும் . பல கட்சிகள் ,பல வாக்காளர்கள் இறுதியில் சிதறிய வாக்குகளில் மக்களின் எதிர்பார்ப்புகள் சிதைக்கப்பட்டு புதைக்கப்படும் .அதாவது கூட்டாட்சி என்ற குப்பை சாம்பாரில் அவிந்த வெங்காயங்கள் சில ஆட்சி ஏறி அதிகார தம்பட்டமடிக்கும் .
35% வாக்குகளை பெற்ற சில சாக்கடைகள் சந்தனமாக நெஞ்சு நிமிர்த்தி அதிகார பெருமை பேசும் ! அப்படியானால் மறுபக்கத்தால் 65% மக்களின் எதிர் வாக்குகளின் நிலை என்ன !? இதுதான் ஜனநாயகம் என்றால் மக்களால் தீர்மானிக்கப் படுவது என்பது எங்கே !? புல்லுப் போட்டால் பால் கொடுக்கும் பரிதாப ஜாதியா மக்கள் !
வாக்குறுதியை வீசி வாக்குகளை கறக்கும் வழிமுறையின் கீழ் ஒரு தேசியப் பண்ணை எனும் அயோக்கியத்தனம் தவிர உலகம் இதுவரை சாதித்தது என்ன !?
சாமர்த்தியமான பேச்சுத் திறமையும் , ஒரு வெள்ளையும் சொல்லையுமான வெளித்தோற்றம் போதும் ; ஒருவனது 'ரியல் பயோ டேட்டா ' அவுட் ஒப் ஆர்டர்' ஆகி 'நியூ வெர்சன் அவுட் புட் ஆகிவிடும் !' சண்டியன் ,சண்டாளன் சரித்திர நாயகன் ஆகிவிடுவான் ! மக்கள் தொகை பற்றியே தெரியாதவன் மக்கள் தலைவன் ஆகிவிடுவான் !சினிமாவில் விடும் சில வார்த்தை ரீலையே சிலர் தங்கள்' ப்ரோபோசனால்' வாழ்க்கை ரீலாக்கி 'பொலிடிக்ஸ்' செய்யவும் புறப்பட்டு விடுவார்கள் .
ஜனநாயகத்தில் மேலோங்கிய நாடுகளாம் பிரான்ஸ் ,ஜேர்மன் , என்பன .அதில் மூக்கு நுனிவரை சுதந்திரம் பேணப்படும் என்ற வாக்குறுதி முஸ்லீம் பெண்களின் 'ஹிஜாப் ' விடயத்தில் யாரின் மூக்கை குடைந்தது ? அவிழ்த்துப் போட்டால் கண்களால் சில்மிஷம் செய்து உள்ளத்தால் பாலியல் சுகம் பெறும் அருவருப்பான, அத்தோடு ஆபத்தான காமக் கலாச்சாரத்துக்கு வழிவிடவில்லையே !? என்ற ஒரே கரணம் தான் இந்த அவிழ்ப்பு சு(க )தந்திரத்தை ஜனநாயகத்தில் வேண்டி நிற்கின்றதா !?
நீதி ,நியாயம் ,நேர்மை போன்ற எல்லாம் இன்று சந்தர்ப்ப வாதமான ஒரு பேசு பொருள் தான் . 'துப்பாக்கியோடு வந்து விஸ்வரூபம் 'காட்டிச் செல்வதெல்லாம் சர்வ சாதாரணம் இந்த எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கவும் ,எண்ணை ஊற்றவும் வழக்குப் போட்டு பிழைப்பு நடத்தவும் , சமரசம் பேசி சமபந்தியில் அமரவும் , 'கிரிமினல் ரூட்டில் டிப்லோமடிக் பொலிடிக்ஸ் ' செய்யவும் என ஒட்டுமொத்த அநியாயக் காரர்களுக்கும் ஒரே புகழிடம் இந்த ஜனநாயக அரசியலே .

Feb 13, 2013

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் ஒரு கச்சிதமான முடிச்சு !!

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் ஒரு கச்சிதமான முடிச்சு !! அதுதான் முதலாளித்துவ அரசியல் .!!!

கடந்த வாரம் 57 அரபு நாடுகளின் கூட்டமைப்பான O .I .C அமைப்பின் மாநாடு எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றது . இந்த தலைவர்களில் நேற்று இவர்களோடு இதே போல் ஒரு மாநாட்டில் கலந்து இன்று பலாத் காரமாக கம்பி எண்ணும் முன்னாள் தலைவர்கள் ,பலாத் காரமாக கபுரில் நுளைவிக்கப் பட்ட முன்னாள் தலைவர்கள் என கூட்டிக் கழித்துப் பார்த்தால் புதிய முகங்கள் , அதே மேற்கின் 'ஸ்பீக்கர்' களாக அமர்ந்து அமர்க்களப் படுத்தினார்கள் .

ஒபெக் . மற்றும் இந்த O .I .C போன்ற அமைப்புக்கள் தமது தனித்துவத்தை எடுத்துக் காட்டும் அளவில் இதுவரை சாதித்தது என்ன ? என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் அதற்கான விடையை இஸ்ரேலிய தொழில் நுட்ப உற்பத்தி நிறுவனங்களும் , அமெரிக்க சார் தொழில் நுட்ப உற்பத்தி நிறுவனங்களும் தான் தகுந்த பதிலை தரும் எனும் அளவுக்கு அரபுலகின் அற்புத வளமான பெற்றோலியம் பக்குவமாக பகல் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளதும் அடிக்கப் படுவதும் உங்களுக்கு தெரிய வரலாம் .

அரபுலகிலோ ,அல்லது ஆபிரிக்காவிலோ , அல்லது ஆசியாவிலோ ,உலகின் எப்பகுதி ஆயினும் இத்தகு வளச் சுரண்டலுக்கான பண்ணை அரசியல் தரத்தில் தான் காலனித்துவ அதிகாரங்கள் நவ காலனித்துவ வடிவம் எடுக்கும் போது தேசங்கள் ,தேசியங்கள் என்ற பாகுபாட்டுடன் விட்டுச் சென்றது . இங்கு காலனித்துவ ஏகாதி பத்தியங்களின் எதிர்பார்ப்பு தொடர்ச்சியான மூலப் பொருள் வரவும் , தமது உற்பத்திகளை விற்பனை செய்ய தகுதியான சந்தைகளையும் பேணுவது என்ற அடிப்படையிலேயே சுதந்திரம் என்ற சொல்லாடலை பயன் படுத்தியது .

உண்மை என்னவென்றால் காலனித்துவத்தின் கீழ் இருந்த எந்தவொரு நாடும் இன்றுவரை தனது கொள்கை ரீதியில் ஒரு ஏகாதிபத்திய வல்லரசை சார்ந்தே வாழவேண்டிய(' ராஜாவுக்கு கூஜா தூக்கும் ' பராக், பராக் ) அரசியல் பொருளாதார வழிமுறையையே பின் பற்றவேண்டி இருந்தது . 'சார்பாக மாறு அல்லது மாற்றப் படுவாய் ' என்ற சண்டித்தன அரசியலின் முன் 'கரணம் தப்பினால் மரணம் ' எனும் 'சர்கஸ் தர கோமாளிகளே எம்மை சூழ உள்ள அரசியல் தலைவர்கள் என்றால் அது மிகையான கருத்தல்ல .

1990 களின் ஒரு பொழுதுகளில் 'Victor John Ostrovsky என்ற இஸ்ரேலிய மொசாத் உளவுப் பிரிவின் உளவாளி வெளியிட்ட பல்வேறு தகவல்களில் ஓன்று தான் இலங்கை விவகாரம் பற்றியதாகும் . அந்தத் தகவல் இதுதான் . இஸ்ரேலின் ஒரே இராணுவ பயிற்சி முகாமில் இரண்டு வேறுபட்ட பகுதிகளில் இலங்கை கடற்படைக்கும் , விடுதலைப் புலிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட விவரமாகும் .

அதன் படி" இஸ்ரேலிய தயாரிப்பான ' டோரா ' எனும் தாக்குதல் படகை எவ்வாறு செலுத்துவது என இலங்கை கடற்படைக்கும் , விடுதலைப் புலிகளுக்கு வேகமாக செல்லும்' டோரா ' படகொன்றை எவ்வாறு குறிவைத்து தாக்குவது" என்றும் பயிற்றுவிக்கப் பட்டதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார் . இங்கு புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் தமது சந்தைக்கான அரசியலை எவ்வாறு பேணுவது ? என்பது தான் முதலாளித்தவத்தின் குறிக்கோள் ஆகும் . இதிலிருந்து உலக நிலவரங்களின் பல விடயங்கள் அரசியல் தரத்தில் யாரின் இலாபத்துக்காக ? என்பது கேட்கப்படவேண்டிய கேள்விதான் . பகையில் , படுகொலைகளில் , அடக்குமுறைகளில் என இன்றைய இலங்கை முதல் கெய்ரோவின் O .I .C மாநாடு வரை ஒரு இடைத்தொடர்பு தெரியும் அதுதான் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஆபத்தான கரங்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை .

Feb 12, 2013

பிசாசை விரட்டியபின் சந்திக்க இருக்கும் பூதம் ! (ஒரு பார்வை)

சிரியாவின் பற்றமான சூழ்நிலை பற்றி ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோர்ன் கெர்ரி தெரிவித்துள்ளார் . அங்குள்ள நிலைமையை சமாளிக்கவும் வன்முறைகளை தடுக்கவும் இராணுவ ,இராஜதந்திர நடவடிக்கை பற்றி இப்போது அமெரிக்க அரசு தீவிரமாக ஆராய்வதாக கனேடிய வெளியுறவு அமைச்சருடன் கடந்த பெப்ரவரி 08 இல் நடந்த சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார் .

அந்த சந்திப்பில் குறிப்பிட்ட இன்னொரு முக்கிய விடயமே" சிரியாவில் உள்ள சில அமைப்புகள் பற்றி நாம் விசேட கவனம் செலுத்தவேண்டும் ஏனெனில் அவை மிகுந்த ஆபத்தானவை" என்ற கருத்தாகும் . இந்த அச்சம் மிகுந்த வார்த்தைகள் அமெரிக்க அரசால் வெளியிடப்படுவது இதுதான் முதல் தடவை அல்ல . ஆனால் சிரியாவின் இன்றைய நிலைமைகள் மிக நீண்ட நாட்களாக மீடியா இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் வெளிவரும் இந்த கருத்தானது திட்டங்கள் தயாரான நிலையில் ஒரு கூட்டுச் சதிக்கான முன்னறிவிப்பாக எம்மால் கருத முடியும் . 

அமெரிக்க அச்சம் என்னவென்றால் சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு தேசிய அரசை பேசி நிற்கவில்லை என்பதே ஆகும் . ஆரம்ப போராட்ட சூழ்நிலையில் நிமிர்ந்து நின்ற சிரிய தேசியக்கொடி வெள்ளையில் கருப்பு' எழுத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ..' என்ற வடிவத்தில் பறக்க ஆரம்பித்ததும் , இராணுவ தாக்குதல் அணிகள் கருப்பில் வெள்ளை எழுத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ..' என்ற வடிவத்தில் பறக்க ஆரம்பித்ததும் , தான் சூழ்நிலைகளின் சிக்கலை வெளிப்படுத்தி நின்றது . 

அமெரிக்க உளவுப் பிரிவான C .I .A யின் கழுகுக் கண்களுக்கு லிபியாவில் கடாபி தெளிவாகத் தெரிந்ததும் , அதே கண்களுக்கு தெரியாமல் பசர் அல் அசாத் கச்சிதமாக தப்பித்ததும் சிரியாவில் அமெரிக்க நிலைப்பாடு என்ன ? என்பதை விளக்க போதுமானதாகும் . மேலும் சிரியாவின் இராணுவ ஆய்வு மையத்தின் மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை எதிர்காலத்தில் நடக்கப் போகும் சூழ்நிலைகளின் பிரதான பாத்திரங்களை அறிமுகப் படுத்துவதாகவே உள்ளது . 

மேலும் துருக்கிய தலைநகரமான அங்காராவில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகம் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவமும் எப்படியான ஒரு முற்றுகை சூழலை மத்திய கிழக்கு , குறிப்பாக சிரியா எதிர் கொள்ளப் போகிறது என்பதை குறித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது . இப்போதுள்ள கேள்வி பிசாசை விரட்டி அடிக்கும் இறுதிக் கட்டத்தில் இருக்கும் சிரிய இஸ்லாமிய போராளிகள் முதலாளித்துவ பூதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே ! ஏனென்றால் இந்தப் பூதம் தன்னை அடிமையாக்கி ஒரு அரசியல் அற்புத விளக்கில் அமர்ந்து கொண்டு , சிரியர்களை அலாவுதீன் ஆக்கும் சக்தி வாய்ந்தது . ஆனால் அல்லாஹ் (சுப ) இவர்களை விட நுணுக்கமான சதிகாரன் என்பதை இன்ஷா அல்லாஹ் உலகம் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

Feb 9, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன !!? (பகுதி 13)

வேங்கைகளின் வேட்டைக்கு தயார்படுத்தப் படும் வெள்ளாடுகள் !?

" ........ ஒரு காலம் வரும் அன்று சண் ஆ வில் இருந்து ஹல்றல் மௌத் வரை ஒரு பெண் தனியாகச் செல்லாலாம் ......" --- நபி (ஸல்)

மனித சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இஸ்லாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளிள் ஒன்றே இந்த பெண் பாதுகாப்பாக வாழும் சூழல் பற்றியதாகும் . இன்று அத்தகு வாக்குறுதிகளை செயல் படுத்த விடாமல் தீமையின் அதிகார ஆணிவேர்கள் போடும் ஆட்டத்தின் விளைவு மிகப் பயங்கரமாக உள்ளது . சத்தியம் பயங்கர வாதமாக்கப்பட்டு அசத்தியம் நியாமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலை விளக்க கீழ்வரும் இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் .

தென்னாபிரிக்காவில் 17 வயதான இளம்பெண்ணொருவர் குழுவொன்றினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் கேப்டவுனிலிருந்து சுமார் 130 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரடஸ்டோர்ப் நகரில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் வீசப்பட்ட நிலையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளார்.

அப் பெண் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் அவரின் வயிற்றிலிருந்து, பெண்ணுறுப்பு வரை வெட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பதற்கு முன்னர் அப் பெண் குற்றவாளிகளில் ஒருவரை பொலிஸாருக்கு அடையாளங்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இப்படி நடப்பதற்கான காரணம் என்ன ? கீழே வரும் சம்பவத்தை பாருங்கள் .

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் மனைவி, எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழாவின் போது, கவர்ச்சி உடையில் வந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந் நாட்டில், கடந்த மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பிரதமர் நேதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய பாராளுமன்றத்தின், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.

இப் பதவி ஏற்பு விழாவுக்கு, பிரதமர் நேதன்யாகுவின் மனைவி சாராவும் வருகை தந்திருந்தார்.

மெல்லிய துணியால் உள்ளாடைகள் தெரியும் வகையில் அவர் அணிந்திருந்த ஆடையை, அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன.

அமெரிக்க நடிகையும், பொப் பாடகியுமான பியொன்ஸே போன்று, சாரா உடை அணிந்து வந்தமை அவருடைய மட்டமான ரசனையையை காட்டுகிறது.இந்த வயதில் அவர் இதுபோன்று உடை அணிவது சகிக்க முடியவில்லை' என, பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

இவ் ஆடை விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைகீழ் மற்றம் என்பது கீழிருந்து மேல் நோக்கி செல்ல வேண்டுமா ? மேலிருந்து கீழ் நோக்கி அமுல் நடத்தப் படவேண்டுமா ? என்பதை மனித சமூகம் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது . பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பதை பெண்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் . இப்படி ஒரு அநீதி பெண் மீது நடக்கக் கூடாது, என்று முதலாவது சம்பவம் சொல்லி நிற்க ,இரண்டாவது சம்பவம் இப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதை அவர்களை அதிகாரத்தில் ஏற்றிய சமூகமே கூறி நிற்கின்றது .

இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு காலப்பகுதியில் நிகழ்ந்தவை அல்ல , கடந்த ஒரு சில நாட்களுக்குள் நடந்தவை . இது போல் பல சம்பவங்கள் உலகம் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன . தவறான கலாச்சார மயப்படுத்தல் தவறான விளைவுகளை பெற்றுத் தருகின்றது . இஸ்லாம் 'ஔரத்' கோட்பாட்டின் கீழ் உடலை மறைக்கச் சொன்னால் மட்டும் போர்க்கொடி தூக்கும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த தீமையின் ஆணி வேர்களின் ஆட்டம் பற்றியும் ஒரு போராட்டம் நடத்தலாமே !? முஸ்லீம் பெண் போட்டதை கலட்டும் பெண் உரிமை போராட்டங்கள் பற்றி மட்டும் தான் இப்போது உங்கள் கவனம் திருப்பப் பட்டுள்ளது . வேங்கைகள் வேட்டையாட வெள்ளாடுகள் தயார் படுத்தப் படுகின்றது . இதுதான் முதலாளித்துவ வழிமுறை . ரொம்ப நல்லாயிருக்கு .

இது சியோனிச ரேஞ்சில் ஒரு சிதம்பர இரகசியம் .

கழுகுக்கு உதவ தலைப்பாகை கட்டும் நாட்டுக்கு சிங்கப் படை அனுப்ப கழுகு கேட்டால் அதுபற்றி யோசிப்போம் . மாணிக்க தீவின் ஊடகத் துறை பேச்சாளர் அதிரடி பேட்டி !! இந்த விடயம் சற்று குழப்பமாக இருக்கலாம் .ஆனால் தாம் சியோனிசத்தின் பெட்டிப் பாம்புதான் என்பதை சொல்லாமல் சொல்லும் ஆதார வாக்குமூலமாகவே இதை கருத வேண்டியுள்ளது .

நேற்றுப் பெய்த மலையில் இன்று முளைத்த காளான் ஒரு வீரத் தலைமுறையோடு முட்டி மோதி சரித்திரம் படைக்க நினைப்பது ஒருபக்கம் இருக்கட்டும்;இந்த உதவித் திட்டத்தின் நிகழ்கால எதிர்கால விளைவுகள் மிக ஆபத்தாக படுகின்றது . எங்கோ ஓடும் பாம்பை இழுத்து மடியில் விட்டால் போல ஆகாதா ? எனக் கேட்டால் என்னிடம் பதில் இல்லை .

ஆனால் நடப்பு முடிவுகளின் பின்னால் காரணங்கள் பல உண்டு இப்போது பொலிடிகல் ரேஞ்சில் சினைப்பர் குறிவைக்கப் பட்டிருக்கும் சிறுபான்மைக்கு சில வேளை நிரந்தர சீல் வைக்க 'காயிதா ' பாட்டை தேசிய மயமாக்கும் 'இன்டெர் நஷனல்' காய் நகர்த்தளில் தொடங்குவது என்ற பக்குவமான முடிவாகக் கூட இது இருக்கலாம் . நேற்றைய அனுபவத்தில் இன்னொரு இன ஒடுக்கு முறை சர்வதேச பொலிடிக்ஸ் உடன் இணைந்த லோக்கல் பொலிடிக்ஸ் !!! எங்கள் குஞ்சுகள் கொஞ்சம் நிதானமாக அதே நேரம் தெளிவாக சிந்திப்பது நலம்.

யாருக்கு சொல்கிறார் யானைக்கதை !!??

தேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி 
ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர் ஒரு ஆதாரமாக எடுத்துள்ளது தவறான நகர்வு அப்படிப் பார்த்தால் கீழே ஆக்கத்தில் சொல்லும் யானைக் கதை சிலநேரம் அதை எழுதியவருக்காகவே என சொல்லப் பட்டிருக்கலாம் !

தேசியம் என்ற சிந்தனையின் உள்ளே இருந்துதான் பக்தி மயமான குறுநில வாதம் உற்பத்தி ஆகும் என்பது சாதாரண விடயம்;அந்த வகையில் இன்று சிலரது பார்வை இலங்கையின் கடந்த கால அனுபவத்தை மறந்த ஒரு பார்வை . தேசத்தின் எதிரியாகவும் ,தேசியத்தின் எதிரியாகவும் ஏதாவது ஒரு குழுமத்தை காட்டுவதன் ஊடாகவே தேசிய அரசியல் என்பது பலமடையும் . ஒரு தேசிய இனம் என்பதை விட பெரும்பான்மை சிறுபான்மை என்பதன் ஊடாக ஒரே நிலத்தில் பிரித்தாளும் கொள்கையை இலகுவாக கையாளலாம் . என்பதே பிரித்தானிய அணுகு முறை . இந்த பயிற்றுவிப்பின் நீண்ட கால பிரதி பலனே கடந்த இனவாத யுத்தம் . மேற்கின் அரசியல் நாகரீக வழி வந்த இந்த சிந்தனைத்தரம் ஒரு 'மாபியா' தரக் கொள்கையே .

சில நேரம் இன்று ஏற்பட்டுள்ள பெரும்பான்மையின் தேசிய அரசியல் அழுத்தம் பக்தி பூர்வமாக முஸ்லீம் சமூகத்தை நோக்கி திருப்பப்பட்டதன் தவிர்க்க முடியாத எதிர் விளைவே உலமாக்களினதும் , சில இஸ்லாமிய இயக்கங்களினதும் தேசியம் தொடர்பான கருத்தாக இருக்கலாம் . நிர்ப்பந்தத்தை இபாதத் ஆக்கும் கோட்பாட்டு நியாயங்கள் முஸ்லீம் உம்மத்தை மிகப் பயங்கரமாக பலவீனப் படுத்தும் .
அப்படி இல்லாது விடின் தாம் 'வஹ்ன்' இல் விழுந்தாலும் தாடியில் ' குப்ர் ' ஒட்டவில்லை என்பதற்காக என்னவோ தமது செயல்களுக்கு இஸ்லாத்தை சிலர் பூசிக் கொள்வதாக படுகின்றது . அல்லாஹ் யாவற்றையும் மிக அறிந்தவன் மிக்க கிருபையுடையவன் . இந்த பார்வையோடு கீழே வரும் ஆக்கத்தை படியுங்கள் . உங்களது கருத்தையும் தவறாமல் அனுப்புங்கள் .

நாட்டுப்பற்றும் தேசியவாதமும்.

(இலங்கையின் சமாதான சகவாழ்விற்கும், அபிவிருத்திக்கும் இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டு...).

இன்று இலங்கையில் ஒரு சில இனவாதிகல் நாட்டின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் அச்சுறுத்தலாக இருந்துவருவதை நிகழ்கால இலங்கையின் நிகழ்வுகளை அவதானிப்போருக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிங்கள முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி மீண்டும் இலங்கையை ஒரு யுத்த கலமாக மாற்றும் முன்னெடுப்புகளும் செயற்பாடுகளும் அதிகரித்து வருவதையும், இந்நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பலமான ஒரு சக்தி இருப்பதையும், அது ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் இயங்குவதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம். இச்சூழ்நிலையில் எமது நிலைப்பாடுகளும், திட்டமிடல்களும் அதற்கான செயற்பாடுகளும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பலர் தெளிவற்ற நிலையிலேய இன்னும் இருக்கின்றனர்.இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்திலிருந்து அதனைக் காப்பாற்றிட வேண்டியது இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

இது விடயமாக ஜம்மிய்யதுள் உலமாவும், இயக்கங்களும், நிறுவனங்களும், பல தனி நபர்களும் காத்திரமான முறையில் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.இவ்வாறான பங்களிப்புகளையும் செயற்பாடுகளையும் விளங்காத சில பத்வா ஷைகுகள் இலங்கையின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைமைகளை கருத்திற் கொள்ளாது அல்லது தெளிவான ஆழமானதொரு நோக்கின்றி “...யானையின் வாலைப்பிடித்த குருடன் யானை ஒரு துடைப்பம் போல என்று வாதாடி குழப்பம் விளைவிப்பது போல்” நடந்துகொள்கின்றனர்.உதாரணமாக;

அண்மையில் ஜம்மியத்துல் உலமாவினாலும், சில தனி நபர்களினாலும், மற்றும் சில நிறுவனங்களினாலும் இலங்கையின் சுதந்திர தினத்தில் முஸ்லிம்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தல்கள் வளங்கப்பட்டது.இவ் அறிவுருத்தளையும்,இன்றைய சூழலையும், எதிர்கால விளைவுகளையும் விளங்காமல் இஸ்லாத்தின் அடிப்படையில் நடுநிலைமையான நோக்கின்றி நாட்டுப் பற்றாம்...!!! தேசியவாதமாம்...!!! என்று “...யானையின் வாலைப்பிடித்த குருடன்” போல் சில பத்வா ஷைகுகள் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு யானையின் மற்றைய பகுதிகளும் அதன் முழு உருவமும் விளங்காமல் இருப்பது ஒன்றும் அதிசயமல்ல.

இன்றைய சூழ்நிலையில் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எமது திட்டமிடல்கள்,செயற்பாடுகள் மற்றும் நாட்டுப்பற்று அல்லது தேசியவாதம் பற்றிய தெளிவுகளை நாம் அறிந்து வைத்திருப்பது எமது ஒவ்வொருவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியிலிருந்தும், இஸ்லாமிய வரலாருகளிலிருந்தும் பல உதாரணங்கல் இருக்கும்போது இந்த “யானையின் வாலைப்பிடித்த குருடர்களுக்கு” விளங்காமல் இருப்பது ஒன்றும் அதிசயமல்ல”. உதாரணமாக;

கந்தக் – அகழ்ப்போர்;

பகைவர்களை எப்படி சமாளிப்பது என்பதற்காக நபி(ஸல்) அவர்களின் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஸல்மான் ஃபார்ஸி(ரலி)யின் தட்காப்புத்தந்திர ஆலோசனையை ஏற்று அதனை செயற்படுத்தியது.
அஷ்ஜஃ கோத்திரத்தைச் சேர்ந்த நுஐம் பின் மஸ்வூத் என்பவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் கூறியது, அதனை செயற்படுத்தியது.
யுத்தம் என்பதே ஒரு தந்திரம்தான் என்ற நபியின் முன்மாதிரி.
போன்ற பல வரலாற்றுச் சம்பவங்களினதும் அதன் படிப்பினைகளினதும் அடிப்படையிலும் இன்றைய இலங்கையின் சூழ்நிலையையும் அதற்கான திட்டமிடல்களையும்,செயட்படுகளையும் விளங்கினால் இவ்வாறானதொரு தெளிவற்ற நோக்கிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.மேலும்;

முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்;

முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் சந்தோசமாகச் சென்றுவருகின்ற சுற்றுலாவாக இருக்க வில்லை. அதுபோல அது வாழ்வாதாரத்தை தேடிய பயணமாகவும் இருக்கவில்லை. அதன் மூலம் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர் முயற்சி செய்யவுமில்லை. மட்டுமன்றி, ஒரு நாட்டிலிருந்து அதனை விட சிறந்த ஒரு நாட்டுக்கான பயணமாகவும் இருக்க வில்லை. மாறாக, அவர் பிறந்து வாழ்ந்த அனைத்து விதமாகவும் விரும்பிய தனது நாட்டை விட்டு ஹிஜ்ரத் செய்தார். அவர் நபிமார்களின், முன்னோர்களின் முதுசங்களையும், புனிதப்பள்ளிவாயலையும் கொண்டுள்ள பூமியை விட்டு பயணித்தார். இதனையே அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடு கிறான்:

"(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது. அது அருள் பாளிக்கபட்டதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கிறது. மேலும், எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன்னும் அங்கு செல்வதற்கு சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான்." (03 : 96,97).

நபி(ஸல்) அவர்கள், அந்தஸ்தை உயர்த்த விரும்பிய நாடே மக்காவாகும். அதன் புனிதங்களை பாதுகாக்க விரும்பினார்கள். அதனை சிலை வணக்கத்திலிருந்து பாதுகாக்க முயற்சி செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்டிலுள்ளவர்களின் அறிவையும் நடத்தையையும் உயர்த்தவே விரும்பினார். இதனை அல்குர் ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது;

"மனிதனே! கண்ணியமிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை ஏமாற்றியது எது?. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி, உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன்உறுப்புகளைப்) பொருத்தினான்." (82 : 6-8).

நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்டின் சமூக, பொருளாதார ஒழுங்குகளை சீர்படுத்த விரும்பினார்கள். அங்குள்ள மனிதர்களிடையேயுள்ள பிரிவினையை நீக்க பாடுபட்டார்கள். பலவீனர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முயன்றார்கள். அங்குள்ள சமூகத்துக்கு ஞானம், அழகிய உபதேசம், அன்பு, ஆன் மீகம் போன்றவற்றைக் கொண்டு அழைப்பு விடுத்தார்கள்.

இவ்வாறெல்லாம் பாடுபட்டும் அந்த நபியை அவர்கள் பொய்ப்படுத்தினர். அவரை வேதனை செய்தனர். அவருக் கெதிராக சூழ்ச்சியும் செய்தனர். இறுதியில் அவர் தனது சொந்த நாட்டை விட்டே போகவேண்டிய நிலை வந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு செல்லும்போது பின்வருமாறு கூறினார்கள்;

"அல்லாஹ்வின் மீது ஆணையாக... மக்காவே! நீ அல்லாஹ்வின் பூமியில் அவனுக்கு மிக விருப்பமான இடமாகும். மட்டுமன்றி, நீ அல்லாஹ்வின் புமியில் எனக்கு மிகவும் விருப்பமான பூமியாகும். உன்னில் வசிப்பவர்கள் என்னை வெளியேற்ற முயற்சி செய்திருக்காவிட்டால் நான் இங்கிருந்து வெளியேறி இருக்கவே மாட்டேன்."

மதீனாவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தும் மக்கா மீதான நபி (ஸல்) அவர்களதும், ஸஹாபாக்களதும் விரும்பம் தொடர்ந்திருந்தது. அது இறுதியில் மக்கா வெற்றியாக மலர்ந்தது. அங்கு நீதியை நிலை நாட்டினார்கள். அதனை இணைவைத்தல் என்ற அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தினார்கள்.

இந்த அன்புதான் எமது தாய் நாட்டின் மீதும் எமக்கிருக்க வேண்டும். அதிலே நீதியை நிலைநாட்ட நாம் பாடுபட வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப உழைக்க வேண்டும்.

நாட்டுப்பற்றை அல்லது தேசியவாதத்தை முற்றாக எதிர்ப்பவர்களும், தேசத்தின் மீது நேசமும் நாட்டமும் கொண்டவர்கள் தேசியவாதம் என்பது நாட்டின் மீது அளவிலா அன்பு செலுத்துவதுதான் எனப் பொருள் கொள்வோரும் ஒன்றை விளங்க வேண்டும்; உண்மையில் இயற்கையாகவே நம்மிடம் பிறந்த மண்ணின் மீது ஒரு பாசம் இருக்கவே செய்கின்றது.அதன் எல்லைகளைப் பார்த்திடும் போது கண்கள் இதம் பெரும்,இதயம் அமைதி பெரும்,அத்தோடு இன்னுமொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும்.மனிதனுக்கு பிறந்த பூமியின்பால் பாசம் கொள்வது அவனது இயற்கையோடு ஒட்டியது என்பதோடு இஸ்லாம் நின்று விடுவதில்லை; அது இன்னும் சற்று மேலேயே இதை வளர்த்துள்ளது.

மேலும், தேசியவாதம் என்பது நமது நாட்டின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளை அப்புறப் படுத்துவதுதான் என்றால், இனவாதிகளின் கரங்களிலேயிருந்து இந்த நாட்டை மீட்பதுதான் தேசியவாதம் என்றால்,இந்த நாட்டின் பிரஜைகளின் இதயங்களிலே சமாதானம், சத்தியம்,அபிவிருத்தி, நீதி உணர்வை ஊட்டுவதுதான் தேசியவாதம் என்றால்,நாங்கள் இந்த தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருப்போம். உண்மையில் இஸ்லாம் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தே இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள்;

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் மக்காவை நோக்கி “ நீ எவ்வளவு மனமான தேசமாக இருக்கிறாய். நீ தான் எனக்கு மிக விருப்பமான (பூமியாக) இருக்கிறாய். நிச்சயமாக எனது சமூகத்தார் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நீ அல்லாத ஒரு பூமியில் நான் வசித்திருக்க மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். (நூல் : திர்மிதி).

நபியவர்கள் ஹிஜ்ரத் சென்று சில நாட்களுக்குப் பின் அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள்; மதீனா நோக்கிப் பயணமானார்கள். (அந்நேரம் ஹிஜாபுடைய வசனம் இறக்கப்பட்டு இருக்கவில்லை) நேராக ஆயிஷா (றழி) அவர்களிடம் சென்றார்கள், அப்பொழுது நீர் மக்கா எவ்வாறு இருக்கும் நிலையில் வந்தீர் என ஆயிஷா (றழி) அவர்கள் கேட்ட போது அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள்; மக்கா பற்றி வர்ணிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் வரும் வரை சற்று காத்திருக்குமாறு சொல்ல, சில வினாடிகளிலேயே நபியவர்களும் அவ்விடத்திற்கு வந்து, ஆயிஷா (றழி) அவர்கள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டு தமது தேசம் பற்றியே விசாரித்தார்கள். அவர்கள் முன்பு சொன்னது போலவே மக்காவின் வனப்பை வர்ணித்துப் பாட அதைக்கேட்ட பெருமானார்(ஸல்) அவர்களின் கண்கள் பாசத்தால் பணிந்தன. அஸீலைப் பார்த்து பெருமானார்(ஸல்) அவர்கள் “அஸீல், (நிறுத்து) இதயம் சற்று இளைப்பாறட்டும்.மீண்டும் மீண்டும் அந்த மக்கா பற்றிக் கூறி) எம்மை கவலையில் ஆக்கிவிட வேண்டாம் என்றார்கள். (நூல்: அல்-இஸாபா பீ தம்யீஸிஸ் ஸஹாபா).

நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் மதீனாவுக்கு வந்த போதிலும் சதாவும் தாம் பிறந்த தேசத்தைப் பற்றிய கவலையுடனே இருந்திருக்கிறார்கள். ஆனால் காலப் போக்கில் மதீனா பற்றிய அன்பு தமது உள்ளத்தில் வர வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்குத் தோன்றியது. ஏனெனில் தமது த.வாப் பிரச்சாரம் வெற்றி பெறத் தளமாக இருந்த பூமி அந்த மதீனா மாபூமி தான். எனவே தான் தமக்கு மதீனாவின் மீது பற்றை உண்டாக்கும் படி அல்லாஹ்விடத்திலே கீழ் வருமாறு பிராத்தனையும் புரிந்தார்கள்.

“யா அல்லாஹ்! எனக்கு மக்காவின் மீது எவ்வாறு அன்பு இருக்கிறதோ அதே போன்ற பற்றை மதீனாவின் மீதும் உண்டாக்குவாயாக. அல்லது அதை விட அதிகமான அன்பை உண்டு பண்ணுவாயாக”. (நூல்: புகாரி ).

“நபியவர்கள் யுத்தங்களுக்காகவோ அல்லது வேறு தேவைகளின் நிமித்தம் மதீனாவை விட்டும் வெளியே சென்றாலும் அவர்கள் உள்ளம் தமது தேசத்தின் சிந்தனையிலேயே லயித்திருக்கும். மீண்டும் திரும்பி வரும் போது மதீனாவின் எல்லையை நோக்கி தமது வாகனத்தை விரைவு படுத்துவார்கள் என அபூ அப்துல்லாஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்”. (நூல் : புகாரி ).
இதற்கு விரிவுரை எழுதும் அல்லாமா இப்னு ஹஜ்ர் இமாம் அல்-அய்னீ மற்றும் முபாரக் பூரி போன்றவர்களின் கூற்றாவது: மேற்படி நபியவர்களின் நடைமுறையிலிருந்து மதீனாவின் சிறப்பு மற்றும் தேசப்பற்று மார்க்கத்தில் உள்ளவை என்றும் அதன் மீது அன்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். (நூற்கள்: ஃபத்ஹுல் பாரி உம்ததுல் காரி , துஹ்ஃபத்துல் அஹ்வதீ).

ஒரு தடைவ நபி (ஸல்) அவர்கள் : உஹது மலையைப் பார்த்து “ இந்த மலை எம்மை நேசிக்கிறது நாமும் அந்த மலையை நேசிக்கிறோம்” எனக் கூறினார்கள் (நூல்: புகாரி , முஸ்லிம்)

இதுலிருந்து நபியவர்கள் தமது தேசத்தை எந்த அளவு பிரியம் கொண்டிருந்தார்கள் எனத் தெளிவாகிறது.

பிலால்(ரலி);

எம்மைவிட இஸ்லாத்தின் பால் ஆழ்ந்த பிடிப்பும்,அழுத்தமான ஈமானும் உடையவராகத் திகழ்ந்த ஹழரத் பிலால்(ரலி) அவர்கள் மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த போதும்,மக்காவின் மீது தான் கொண்டிருந்த நேசத்தால் சில நேரங்களில் கண்ணீர் வடித்தவர்களாக அமைதியிலந்தவர்கலாகக் காணப்பட்டார்கள்.அதன் காரணமாக அவர்களின் நாவில் பின்வரும் சொற்கள் எழுந்து விடுவதுண்டு.

“இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற் தரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் கிட்டாதா? ”.

“(மக்காவின்) மஜன்னாவின் நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா?”.

“(மக்காவின்) ஷாமா, துஃபீல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? “.

அதே நேரம் அவர்களின் பிராத்தனை இவ்வாறு அமைந்திருந்தது;

“யா அல்லாஹ்! எம்மை இந்த ஷைபா பின் றபீஆ, உத்பா பின் றபீஆ, உமையா பின் கலஃப் போன்றோர் (எமது தேசத்தை விட்டும்) வெளியேற்றியது போலவே இவர்களையும் (உனது றஹ்மத்தை விட்டும்) வெளியேற்றுவாயாக” (நூல்: ஃபத்ஹுல் பாரி ).

இப்றாஹீம் பின் அத்ஹம் (றஹ்);

அபூ நுஐம் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இப்றாஹீம் பின் அத்ஹம் (றஹ்) அவர்கள் கூறினார்கள்: “தமது தாயகத்தை விட்டும் பிரியும் கஷ்டத்தை விட வேறெந்தக் காரியமும் கடுமையானதாக இல்லை”. (நூல்: ஹில்யத்துல் அவ்லியா)

பேரறிஞர் இப்னு பதூதா;

பேரறிஞர் இப்னு பதூதா அவர்கள் தமது சுற்றுலாவுக்காக தமது தாய் நாட்டை விட்டும் வெளியேறிய நிகழ்வைக் குறிப்பிடும் போது;

“…சகல நாடுகளையும் விட என்னிடத்தில் சிறப்புப் பொறுந்திய நான் நேசித்த எனது நாட்டின் பிரிவை நினைக்கும் கஷ்டத்தினால எனக்கு மரணம் வந்து விடுமோ என எண்ணினேன்”. (நூல்: றிஹ்லத்து இப்னி பதூதா).

ஆகவே, பழமையும் தொன்மையும் வாய்ந்த எமது இலங்கை நாட்டின் வரலாற்றைப் புரிந்துகொள்வது, புகழ்வது. இஸ்லாத்தின் வரையறைக்கு உற்பட்டு இலங்கை கண்டெடுத்த முத்துக்களையும், கலையையும், அறிவையும், ஆற்றலையும் போற்றுவது புகழ்வது. இலங்கையின் அழகையும், தரத்தையும் பேசி பெருமைப்படுவது எந்த விதத்திலேயும் தவறாகாது.

தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று அந்த நாட்டிலுள்ள குடிமக்களிடையே நல்லுறவையும் நேசத்தையும் ஏற்படுத்துமேயானால், அந்த நல்லுறவு நேசம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தக் குடிமக்களுக்கு நல்வாழ்வை அமைத்துத் தருமேயானால், அந்நல்வாழ்வின் அடிப்படையில் நீதி(சத்தியம்) நிலைநாட்டப்டுமேயானால் இந்தத் தேசியவாதத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.ஏனெனில் இஸ்லாம் இதை ஒரு கடமை என்றே பணிக்கின்றது.

“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்”. (குர்ஆன்,5:8).

தேசியவாதம் என்பது ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பல்வேறு கூட்டங்களாகப் பிரிந்து நின்று சண்டையிடுவதும், வஞ்சகத்தையும், பகையையும் மனதிலே தேக்கிக்கொண்டு ஒருவரையொருவர் வைவதும், புறங்கூறுவதும், இவற்றின் அடிப்படையிலே உள்நாட்டுக் கலகம் ஏற்படுவதும், சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட போர்கள் இடம் பெறுவதும்தான் என்றால் அந்தத் தேசிய வாதத்திற்கு நாங்கள் பரம எதிரிகளாக இருப்போம்.ஏனெனில் தேசியவாதம் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்றதொரு சூழலை உருவாக்கினால், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு எதிரிகள் நாட்டு மக்களை ஒன்று சேரவோ ஒருமைப்படவோ விடமாட்டார்கள்.மாறாக தங்களுடைய சூழ்ச்சிமதியால் இதுபோன்ற நாட்டு மக்களை தங்களுக்குச் சாதகமாக் வளைத்துப் போட்டுக் கொள்வார்கள். இதன் பயனாக இந்நாடு மக்கள் எங்கேயாவது போகவேண்டும் என்றால் அந்த எதிரிகளிடம்தான் போக வேண்டும். இவர்கள் எங்கேயாவது கூடிப் பேச வேண்டுமென்றால் அது அந்த எதிரிகளின் கோட்டங்களிலேதான் இருக்கும். இவற்றிற்கெல்லாம் இடம்கொடுக்கும் ஒரு தேசியவாதம் பயனற்ற ஒரு தத்துவமேயாகும். இந்தத் தேசியவாதத்தால் இந்நாட்டு மக்களோ, தேசியவாதத்தின் சொந்தக்காரர்கள் என்று பீற்றிக் கொண்டவர்களோ எந்தப் பயனும் அடைய மாட்டார்கள்.

இங்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக விளங்க வேண்டும். நட்டு மக்களின் ஒற்றுமைக்கும், அபிவிருத்திக்கும், நல்வாழ்விற்கும், நீதிக்கும் வகை செய்யும் தேசியவாதத்திற்கு நாங்கள் துணை செய்வோம். அது மட்டுமல்ல, அத்தகையதொரு தேசியவாதத்தின் தீவிரவாதிகளாகவே நாங்கள் இருப்போம்.இங்கே ஒன்றை நினைவு கூற வேண்டும்; இந்தத் தேசியவாதம் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாத்தின் ஒரு பகுதியே ஆகும்.

முஸ்லிம்களுக்கு தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்பது ஈமான் என்ற நம்பிக்கையின் வரையரைக்குட்பட்டதாகும். பிறருக்கோ தேசியவாதம் என்பது பூகோள எல்லைக்குட்பட்டது.

வேறு வார்த்தையில் சொன்னால், எங்கெல்லாம் ஈமான் கொண்டு இறைவனுக்கு அடிபணிந்து வாழும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ,எங்கெல்லாம் லாயிலாகஇல்லல்லாஹ் என்று உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட உயிர்கள் வாழும் இடமெல்லாம் நமது நாடு, நமது தேசம். அவர்களின் நல்வாழ்வுக்கு, கண்ணியத்துக்கு உழைத்திட வேண்டியது நமது கடமையாகும்.அதே நேரம் மிக முக்கியமாக; இந்த உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும், அவர்களின் நலனிலும், நல்வாழ்விற்கும் நாம் அக்கறையுடையவர்களாக் இருப்போம். அவர்களின் துன்ப துயரங்களில் நாம் சரி பாதி பங்கெடுத்துக் கொள்வோம்.ஆனால் தமது எல்லைக்குள், தமது வட்டத்திற்குள் மேய்ந்து கொண்டிருப்பவர்களின் நிலைமை முற்றிலும் மாறானது. அவர்கள் தங்களது எல்லைக்குள் மட்டுமே கட்டுண்டு சிந்திப்பார்கள். அதற்கு வெளியே இருப்பவர்களைப்ப்ற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.

ஒரு தேசியவாதி தனது நாட்டுப்பற்றின் எல்லையாக அந்த நாட்டின் முன்னேற்றம், அபிவிருத்தி இரண்டையுமே கொள்வார். ஆனால் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட நம்மைப் பொறுத்தவரை இதையெல்லாம் கடந்து இன்னொரு மகத்தான பொறுப்பும் உள்ளது. அந்தப் பொறுப்பு மனிதர்களின் இதயங்களைத் தூய்மைப்படுத்தி, ஈமான் என்ற ஒளியை ஏற்றிவெய்த்து உண்மையை - சத்தியத்தை – இந்த உலகில் நிலை பெறச் சைவதுமாகும். இன்னும், நாம் விரும்பும் தேசிய வாதம்; கொள்கை சுயநலம் – நமது இனம் மட்டும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் – அடுத்த இனத்தவர்களை அடிமைப்படுத்தி நமது கீர்த்தியை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்கவெறி, ஆகிய குறுகிய குறிக்கோள்களைக் கொண்டதாக ஒரு போதும் அமையாது. எல்லா இனத்தவர்களும் நல்வாழ்வு வாழ வேண்டும், எல்லத் துரைகளிலேயும் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும், உண்மை(சத்தியம்) வெல்ல வேண்டும் என்ற அடிப்படைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த அடிப்படைகளைக் கொண்டுதான் நாம் நாடும் நாடு, நமது தேசியம், என்று நமது முன்னவர்கள் அன்றைக்கு அத்தனை பிரமிக்கத்தக்கவகையில் எமது நாட்டிற்கு விசுவாசமாக நடந்துகொண்டார்கள்.அதனை வரலாற்றிலிருந்து படிக்கும்போது நாம் புருவங்களை உயர்த்தி ஆச்சர்யத்தை வெளிப்படுத்தவில்லையா? அன்றைக்கு நம்மவர்கள் நிலைநாட்டிக் காட்டிய நீதி, நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு,விசுவாசம் இவற்றிலிருந்து நாம் படிப்பினை பெற்று அதனை செயற்படுத்த வேண்டாமா!.

அக்காலங்களில் சிங்கள மன்னர்களின் மிக நெருங்கிய நன்பர்களாக மட்டுமின்றி, அரசர்களின் வைத்தியர்களாக, அந்தரங்கச் செயலாளர்களாக, தமது இரகசியங்களைக் பாதுகாப்பவர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள்.

சிங்களவர்களுக்கு எதிரான சக்திகள் போர் தொடுக்க வந்த போதும் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு கை கொடுத்து காப்பாற்றினர். (நூல்: சிறீ லங்காவே முஸ்லிம்வரு – லோனா தேவராஜ்).

முஸ்லிம்களுடன் இருந்த நம்பிக்கை நாணயம் போன்ற இருக்கமான தொடர்புகளினால் பல பிக்குகள் தமது விகாரைக்குச் சொந்தமான பல பூமிகளை பள்ளிவாசல்கள் அமைக்க கொடுத்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (நூல்: சிறீ லங்காவே முஸ்லிம்வரு).

இப்படி பேரின சமூகத்துடன் நெருக்கமாக இருந்த எமது உறவு இன்று ஆரோக்கியமற்ற நிலையை நோக்கிச் செல்வதற்கான காரணம் யாது? அந்த உறவை உறுதியாக கட்டி எலுப்புவதற்கான திட்டமிடல்கள் செயற்பாடுகள் எவை,எவ்வாறு??? என சிந்திக்க வேண்டாமா.

உண்மை நிலை இவ்வாறு இருக்க நாம் ஏன் நமது முழு வலிமையையும், வழிகளையும், முயற்சிகளையும் பயன்படுத்தி இந்நாட்டை தற்காத்துப் பலப்படுத்திடக் கூடாது? முஸ்லிம்களின் (ஈமான்) நம்பிக்கையும் தேசப்பற்றும் ஏன் ஒன்றோடொன்று இயைந்து போகாது?

நாம் இந்த நாட்டின் தேசப்பற்று மிக்க குடிமக்களாக இருப்பதில் பெருமையடைகிறோம். நாம் இன்னாட்டிற்க்காக உழைக்கவும் அநீதிக்கேதிராக உதிரம் சிந்திடவும் தயாராக இருப்போம்.நம் உடலோடு உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் நாள்வரை நாம் இந்நாட்டின் நல்வாழ்வுக்காகப் பாடுபடுவோம்.ஏனெனில் இதுதான் “நமது இலட்ச்சியத்தை நோக்கி” நாம் எடுத்து வைக்கும் முதல் படியாகும்.

“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை”.(குர்ஆன், 21:107).

“ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை”. (குர்ஆன்,68:52).

Feb 7, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 12)

' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

உலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது . செர்பியாவில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு மனிதனும் வெட்கித்துப் போக வேண்டியுள்ளது . ஆனால் 'கபிடளிசத்தின் ' 'ப்ரோபிட் அண்ட் பெனிபிட் ' தரத்தில் 'ஜஸ்ட் பிரக்டிகள் ஜோக்ஸ் ' வகையை சேர்ந்த இந்த சம்பவம் உலகம் எங்கே உள்ளது ? என்பதற்கு ஒரு நல்ல ஆதாரமாகும் .

சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது,சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார்.இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார்.ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இடைநடுவே அவர் தனது கால்களை அகற்றிக் காட்டியுள்ளார். இதன் போது அப்பெண் உள்ளாடை எதனையும் அணியவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிரதமர் இவிகா டாசிச் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து இந்நிகழ்ச்சி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிகழ்ச்சியானது உண்மையான அரசியல் நிகழ்ச்சியொன்றல்ல எனவும் மாறாக இது தொலைக்காட்சிகளில் நபரொருவரை அவர் அறியா வண்ணம் குழப்பத்தில் ஆழ்த்தும் Practical Joke/ Prank வகையைச் சேர்ந்த வேடிக்கை நிகழ்ச்சியொன்றெனவும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்நிகழ்ச்சிக்கு சேர்பிய பிரதமர் அலுவலகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. குறித்த பெண் தொகுப்பாளர் பிளே போய் சஞ்சிகையில் தோன்றிய மொடல் அழகியென்றும் தெரியவந்துள்ளது.

வீரகேசரி feb 7. 2013

ஒரு பெண் ஒரு ஆணின் பார்வையில் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்பதை இந்த மீடியாக்கள் மிக அழகாகவே காட்டி நிற்கின்றன ! ஒரு பெண் பாலியல் ரீதியாகவோ வேறு எதோ ஒரு வகையிலோ வன்முறைக்கு ஆளாவதை பற்றி கவலையோடு கூக்குரலிடும் இந்த மீடியாக்களின் நோக்கமும் பணத்தால், பணமிட்டு , பணத்திற்காக என்ற கேவலமான இயங்கியலை சுற்றியே பிண்ணப் பட்டுள்ளது . என்பதை உணர்த்த இந்த சம்பவம் நல்ல ஆதாரமாகும் . 

கிளர்ச்சியை தூண்டும் கவர்ச்சித் தூண்டிலில் பெண்ணை இரையாக்கி பாலியல் இரைதேடும் இயல்பான ஆணின் முன் வீசி எறிந்தால் !! விளைவு என்னவாகும் ? சுத்தமான ஒரு சில மீடியாக்கள் தவிர அநேக மீடியாக்கள் செய்வது இந்த 'பெண் போட்டு பிரபல்யம் பிடிக்கும் ' தரக்குறைவான தந்திரமே ! பின்னர்' ஐயோ ! பத்திக்கிச்சு !' என அரசியல் தரத்தில் குற்றம் சுற்றம் பேசுவதுமாகும் . சமூக ஒழுக்கத்தை சாக்கடையாக்கும் முதலாளித்துவ முதலைகளின் சிந்தனைப் பீரங்கிகள் தான் இந்த மீடியாக்கள் என்றால் அது தவறான கணிப்பல்ல .

பெண்ணுரிமை ,பெண் சுதந்திரம் , பெண் கல்வி , என போராட்டம் நடத்தும் உத்தமர்கள் இந்த 'கற்ப் பொழுக்கம் ' பற்றியும் ஒரு போராட்டம் நடத்திக் காட்டலாமே ? 'கணவன் மட்டும் காணும் அழகை கடைகளில் போட்டுக் காட்டும் எல்லோரையும் ஒரு கை பார்க்க பெண்கள் சமூகமே நீ ரெடியா ? ஸ் ..ஸ் .. ஊடக சுதந்திரம் அவர்களின் கேடயமாக அப்போதும் நீங்கள் அடக்கத்தான் படுவீர்கள் . மலாலாவை தாலிபான் சுட்டால் மட்டும் தான் நீங்கள் பெண்ணுரிமை பற்றிப் பேசலாம்!அபீஹம்சாவை அமெரிக்க சிப்பாய்கள் சிதைத்துக் கொன்றபோது கூட நீங்கள் மௌனம் காக்கத்தான் வைக்கப்பட்டீர்கள். உங்களது போராட்டத்தின் நியாயத்தையும் உங்களால் தீர்மானிக்க முடியாது ! ' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

Feb 6, 2013

மேற்கின் கண்டு பிடிப்புகளை பயன்படுத்திக் கொண்டு மேற்கை விமர்சிப்பது சரியா!?

அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் , மற்றும் கலாச்சார நாகரீக மாற்றங்கள் என்பவற்றின் வித்தியாசத்தை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மேற்கை விமர்சித்துக் கொண்டு அதன் சாதனங்களை முஸ்லீம்கள் பயன் படுத்துகிறார்கள் என்னும் அழுத்தமான குற்றச்சாட்டு அந்நிய சமூகங்களால் முவைக்கப்படும் போது அதற்கான பதில்களில் சற்று தளம்பல் தெரிவதை நான் அவதானித்தேன் . மேற்கின் கல்வியும் அதன் நாகரீக பாதிப்பும் தொனிக்கும் பதில்களே அங்கு அதிகமாக உள்ளது .

இயற்கையாக கிடைக்கும் வளங்கள் மீது ஒரு குறிப்பிட்ட சமூகம் சொந்தம் கொண்டாட முடியாது . அதே போல மனித சமூகத்திட்கென்ற கண்டுபிடிப்பான பொது உற்பத்தியின் மீது உரிமை தரத்தை தனியுரிமையாக்குவது ஒரு தவறான செயல் . முஸ்லீம்கள் அதிகாரத்திலும் ,அறிவியல் நாகரீகத்திலும் முன்னணி நின்ற ஒரு காலப்பகுதியில் பல விடயங்களை கண்டு பிடித்து மனித சமூகத்திற்கு அளித்துள்ளார்கள் . 'அல்க்கஹோல்' உட்பட விஞ்சானம் , மருத்துவம் , வானியல் இப்படி பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர்கள் அளித்துள்ளார்கள் .

இவைகளை எல்லாம் இன்று வரை பயன்படுத்திக் கொண்டேதான் மேற்குலகும் , அதன் அடிவருடிகளும் முஸ்லீம்களை மற்றும் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் . இப்னு சீனாவின் மருத்துவ குறிப்புகள் இன்றும் கூட பிரான்சின் மருத்துவ பீட கல்வித்துறையில் பயன் படுவதாக அறிந்தேன் . அதில் குறிப்பிடப்படும் உடல் உறுப்புகள் பற்றிய கருத்துக்களுக்கும் , அதே பிரான்சின் திறந்த பாலியல் கலாச்சாரத்தின் கீழ் ஒரு விலை மாது தனது உடலை விளம்பரப் படுத்துவதற்கும் இடையில் வித்தியாசம் உண்டு .

இதில் இப்னு சீனாவின் கருத்து அறிவியல் மற்றும் மருத்துவத்துறை என்ற வகையில் முழு மனித சமூகத்திற்கும் பொதுவானது . அதே நேரம் அந்த விலைமாதுவின் நடத்தை குறிப்பிட்ட அந்த சமூகத்துக்கே உரிய நாகரீகம் . அதே போலவே அறிவியல் ,தொழில் நுட்ப ரீதியான எந்த ஒன்றையும் முஸ்லீம் சமூகம் தான் கண்டு பிடித்திருந்தாலும் தனது என உரிமை கொண்டாடாது . அடுத்தவர்களின் கண்டு பிடிப்புகளையும் பொதுவானதாக பயன்படுத்தும் .

அதே நேரம் நாகரீக மாற்றத்தையும் , சமூகத் தீமைக்கு இட்டுச் செல்லும் என தெளிவான விடயங்களை இஸ்லாம் தெளிவாகவே எதிர்க்கும் . மேற்குலகிட்கும் , இஸ்லாத்திற்கும் இடையிலானமுரண்பாடே இந்த நாகரீகங்களுக்கிடையிலான யுத்தமே ஆகும் . கம்பியூட்டரையும் , செல் போனையும் வெஸ்டர்ன் மேட் என பாவிப்பதில் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை . 

அதே போல அறிவியலையும் தொழில் நுட்பமும் மேற்கின் நாகரீகத்திற்கு இட்டுச் செல்லத் தக்க பயன்பாட்டை செய்வதும் குற்றமாகும் . ஒரு இயற்கை காட்சியை ரசிக்கும் நிலைக்கும் , ஒரு பெண்ணின் நிர்வாணத்தை கலை என்ற ரீதியில் ரசிப்பதும் மாறுபட்டது .இங்கு இயற்கை காட்சி பொதுவானது ,ஆனால் பெண் தொடர்பான பார்வை நாகரீகம் சம்பந்தப் பட்டது . நேரடியாக முடியாத எந்த ஒரு செயலையும் தொழில் நுட்ப சாதனங்களிலும் இஸ்லாம் அனுமதிக்காது .

'அல்கஹோளின் ' பயன்பாடு போதை என்ற நிலைக்கு மாறாத வரை இஸ்லாம் அதை தடை செய்யாது . போதை எனும் நிலை வந்தால் அது தடைக்குரியதாக ஆகிவிடும் . இந்த சிறிய விளக்கம் அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் , நாகரீகத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளவும் , அறிவியல் தொழில் நுட்பம் நாகரீகத்தை நோக்கி எவ்வாறு திருப்பப் படுகின்றது என்பதையும் ஓரளவு புரிந்து கொள்ள போதுமானதாகும் என நம்புகிறேன் . இதிலிருந்து மேற்கு தொடர்பில் இஸ்லாம் எதை எதிர்க்கிறது ? என்பதையும் நன்கு புரியக் கூடியதாக இருக்கும் .

Feb 5, 2013

இதோ ஓர் அரிய வாய்ப்பு !!!


'இஸ்ரேலின் டெல அவிவ் ' வரையான முஸ்லிமின் பாதுகாப்பான பயணத்திற்கும் , அமெரிக்க 'வைட் ஹவுசின் ' செங்கம்பளத்தில் முஸ்லீம் தொழவும் இதோ ஓர் அரிய வாய்ப்பு !!!
தீமையில் இருந்து நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் முஸ்லீம் உம்மத்தின் முடிவில் அதில் இருக்கும் தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம் செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர முடியாது .
சாக்கடை கழிவு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் பிரித்து பயன் பெற முனைவது அதிக 'ரிஸ்க் ' அதவிட அப்பழுக்கற்றது ,தீமையே இல்லாதது இஸ்லாம் என்பதுதான் எமது நம்பிக்கை அதன் பிரயோகம் தொடர்பில் ஜாஹிலீயத் உடன் பாலம் போட முனைவது இஸ்லாத்திடம் இந்த காலத்திற்கு எதுவும் இல்லை என்ற கருத்தையே வலுப்படுத்துகின்றது .
அறிவியலையோ ,தொழில் நுட்பத்தையோ முஸ்லீம் உம்மா வெளியில் இருந்து பெறவேண்டாம் என நான் கூறவில்லை அவை பொதுவானவை .அனால் குப்ரின் சித்தாந்தத்தை சரிகாணும் அந்த நாகரீகத்தை தழுவச் சொல்லும் அரசியலையும் அதன் வழிமுறைகளையும் முஸ்லீம் உம்மா எந்தக் காரணம் கொண்டும் சரிகானவே கூடாது .
அவ்வாறு செய்தால் நடக்கப் போவது இப்போது அதிகார நிலையில் மிகைத்திருக்கும் எதிரி அவனது நாகரீகத்தை எம்மீது திணிக்கும் முகமாக அதன் தவறுகளையும் சரிகாண பணிப்பான் . இப்போது சரணடைவென்பது காலத்தின் தேவையாக உணரப்படும் .எஞ்சியதை வைத்து எதோ வாழ்ந்து விட்டுப்போதல் எனும் தோல்வி அரசியலின் கைதிகளாக நாம் வாழ தலைப்பட்டு விடுவோம் .
மேற்கு இவ்வாறான ஒரு அரசியலை முஸ்லீம் உம்மத்தின் மீது சர்வதேச அளவில் திணிக்கவே முயல்கின்றது .அதை முஸ்லீம் உம்மா ஏற்றுக்கொண்டால், (இந்த வெற்றி எனும் தோல்வியோடு )'டெல் அவிவ் ' வரை ஒரு முஸ்லீம் பயணிக்கலாம் . 'வைட் ஹவுஸ்' செங்கம்பளத்தில் கூட்டுத் தொழுகை கூட முஸ்லீம்கள் நடத்தலாம் . யஹூதியும் , நசாராவும் பாதுகாப்பு வேறு கொடுப்பார்கள் . ஆனால் நாம் ஒரு கௌரவ அடிமையாக எமது சில மத அடையாளங்களோடு வாழ்ந்து விட்டு போகலாம் அவ்வளவுதான் .

வேஷம் போடும் வேதாளங்களும் 'பாத்தில்' சகதியில் புதைக்கப் படும் 'ஹக்' கும் !!!

முதுகை அழுத்திய அந்த காலனித்துவ பூட்சுகள் 
அகற்றத் துணிந்த எமது பார்வைகளை அவர்களது 
கண்களால் பார்க்கவே கற்றுத் தந்திருந்தார்கள் 
அந்த 'வெள்ளைத் தோல் ' போர்த்திய ஏகாதி பத்திய 'SIR 'கள் !
எமது 'ஐயா ' க்களும் அவர்களின் பாதணிகளாகி 
பக்குவமாக அவர்களின் பாதங்களுக்கு முகமூடி போட்டார்கள் !

விடுதலை எதிர் பார்ப்புகளுக்கு ஏட்டுச் சுரக்காய் உருவத்தோடு
ஒரு கொடியும் தரப்பட்டது ! - சுவைக்கும் ஆசையோடு ஏற்றினோம் !
உற்சாகமாய் 'சல்யூட்டும் அடித்தோம் . நாம் அடிமையல்ல
என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்களாக . - நடந்த கதை
சுதந்திரத்தின் பெயரால் சுரண்டல் தத்துவத்தின்
இரண்டாம் பாகம் இனிதே அரங்கேறியது !

அந்த நவகாலனித்துவம் தேச எல்லைக்குள் பிரித்துச் சிதைத்து
எமக்கு' திமோகிரசி ' கடிவாளம் பூட்டி கனவுகளோடு
'செக்கியூலிரிச' செக்கிழுக்க வைத்தது . - அதிலும்
எண்ணை 'வெஸ்டனுக்கு ' சென்று விடுமாம் !
புண்ணாக்கை மட்டும் நவீனம் என்ற பெயரில்
ரசித்து ருசித்து புசிக்கத் தருவார்களாம் !!!

'வஹி ' சுமந்த கழுதைகளாக இந்த பன்றி திண்ணும்
குட்டிச் சுவர்களுக்குள் சம பந்தியில் அமர்ந்து
நடுத்துண்டு கேட்டோம் ! நிர்ப்பந்தத்தை இபாதத் ஆக்கி
ஹராத்தை இணைத்து ஒரு இஸ்லாமிசமும் செய்தோம் !
நேற்று முழங்கிய 'ஹாக்கிமியத்' வாதங்கள் 'எக்ஸ்ப்பயார்ட் ' ஆக
'பாத்தில்' படுகுழி 'சிஸ்டத்தில்' பக்குவமாய் அது புதைக்கப் பட்டது !!! 

Feb 3, 2013

எது சுதந்திர தினம் !?


ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு நாளை சுதந்திர தினமாக கொண்டாடுகின்றன . ஆனால் சுதந்திரம் என்ற இவர்களது பார்வையில் அப்பட்டமான போலித்தனமே தெரிகின்றது . தம்மை ஆண்டு வந்த காலனித்துவ அடக்குமுறையில் இருந்தோ ,அல்லது சர்வாதிகாரமான மேலாதிக்கத்தில் இருந்தோ கிடைக்கும் விடுதலையே சுதந்திரம் என்பதாக பொதுவாக குறிப்பிடப் படுகின்றது .
ஆனால் நிகழ் காலத்தில் சுதந்திர தினம் என குறிப்பிடப் படுவது காலனித்துவம் என்ற நேரடி அடிமை வடிவத்தில் இருந்து நாகரீகமான நவ காலனித்துவ மறைமுக அடிமைத்தன வடிவத்துள் உத்தியோக பூர்வமாக அழைத்துச் சென்ற நாளையே ஆகும் .ஒரு பிரத்தியோக கொடியையும் , அதற்கொரு கீதத்தையும் அமைத்து அதன்கீழ் அணிவகுத்து நின்று தேசப்பற்றை தெய்வீக அம்சமாக்கி எமது என்ற போர்வையில் யாருக்காகவோ வாழ்ந்து விட்டுப் போவதே சுதந்திரம் என எம்மீது திணிக்கப் பட்டதுதான் உண்மையான நிலை ஆகும் .
எமது அதிகார அரசியலுக்கான யாப்புக்களும் ,கொள்கைகளும் யாரால் வடிவமைத்து தரப்பட்டவை ? எமது சமூக ,கல்வி ,கலாச்சார சூழல் யாரால் வடிவமைத்து தரப்பட்டுள்ளது ? என்ற வினாக்கள் எம்மால் தொடுக்கப் பட்டால் அதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஓர் ஏகாதிபத்திய உருவத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் . அப்படிப் பார்த்தால் எமது சுதந்திரமான இயக்கம் இன்றும் கூட கட்டுப்படுத்தப் பட்டேயுள்ளது .அந்த வகையில் ' வேஸ்டாக ' ஒரு நாளை பக்தி மயமாக பூஜிக்க வைக்கப்பட்டுள்ளோம் . அது சிலநேரம் எட்டி நின்று ஆதிக்கம் செய்யும் முன்னாள் எஜமானர்களை நினைவு கூர்வதாக கூட இருக்கலாம் .
தெற்காசியாவை பொருத்தவரை போர்த்துக்கேயர் ,ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் என்று கைமாறிய ஆதிக்க வரிசையில் இறுதியாக ஆங்கிலேயரிடம் இருந்து கிடைக்கப் பெற்றதே சுதந்திரம் என்பதாக சொல்லப் படுகின்றது . இத்தகு சுதந்திரத்தை பெற நடத்திய இறுதிக்கட்ட சம்பவங்களில் 'SIR ' பட்டம் பெற்ற தேச பிதாக்கள் அவர்களுக்கு 'SIR ' பட்டம் கொடுத்த 'SIR களை ' நாட்டை விட்டு வெளியேறு என்று 'வளர்த்த கடா மார்பில் பாயும்' தனத்தில் சவால் விட்டதில் இருந்தே இறுதிக்கட்ட சூட்டை அடைந்தது .
எவர்களை விரட்ட இந்த தேசப்பற்றாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்களோ , அவர்களிடம் கற்ற கல்வியும் வழிமுறைகளுமே இவர்களுக்கும் தெரிந்திருந்தது . அதுவே நவகாலனித்துவத்தை 'வெள்ளைக் ' காரன் இலகுவாக 'சாதிக்க ' காரணமாக அமைந்தது . ஏற்கனவே பிரித்தாளும் கொள்கையின் கீழ் மதங்களாக , இனங்களாக , குலங்களாக , கோத்திரங்களாக ......இப்படி பல்வேறு பிரிவினைகளை வைத்தே ஆண்டு வந்தவன் அதே நிலையோடே தான் வளர்த்த கடாக்களிடம் விட்டுச் சென்றான் .
அவர்களும் மதச்சார்பின்மை எனும் அதே மதத்தை அரசியலாக்கினார்கள் . அதன்படி தேசியம் எனும் எல்லைகளோடு மனிதர்கள் சிறைவைக்கப்பட்டார்கள் . ஜனநாயகம் எனும் கடவுளிடம் மண்டியிடவும் சொன்னார்கள் .நம்மால் ,நமக்கு ,நமக்காக என்ற நப்பாசையின் கீழ் விடிவுள்ளதாக கூறினார்கள் . ஆனால் நடந்தது என்ன ? இவர்கள் தமது எஜமானர்களின் வளச் சுரண்டல்களுக்கு வெளிநாட்டு வருமானம், சர்வதேச உறவு போன்ற பெயர்களால் நியாயம் கூறினார்கள். எமது என்ற பெயரில் இருந்த இடுப்புக் கச்சைக்குக் கூட 'டெக்ஸ்' அடித்து எம்மை வறுமைக்குள் வாழ விட்டார்கள் . போதாக் குறைக்கு சர்வதேசக் கடன் எனும் பெயரில் எமது தலைகளுக்காகவும் பிரித்துத் தந்தார்கள் .
சுதந்திரம் என்ற பெயரில் அடிமைத்துவத்தின் இன்னொரு வடிவத்தில் புகுத்தப் பட்டுள்ளோம் என்பதுதான் உண்மை . தொடரும் இந்த கொத்தடிமை சாசனத்தின் வருடாந்த நினைவு கூறலே இந்த சுதந்திர தினம் என்றால் புரிந்து கொள்ளாமல் ' மழை பெய்தாலும் சேற்றிலேதான் புரள்வேன் எனும் எருமை மாட்டுத் தனத்தோடு அணி திரள்பவர்கள் திரளத்தான் செய்கிறார்கள்.
உண்மையான சுதந்திர தினம் என்பது மனிதன் மனிதனில் அடிமைப்படுதலில் ஏற்பட முடியாது. அது சுயநலம் மிக்கதாகவும் , குறைபாடுள்ளதாகவும் தான் இருக்கும் . ஜப்பானின் காருக்கு இந்தியா 'கட்லோக் ' தயாரிக்க முடியுமா ? இறைவனால் படைக்கப் பட்ட மனிதனுக்கு மனிதனே வழிகாட்ட முடியுமா ? இந்த சிந்தனையின் முடிவில் தான் ஒருவனின் உண்மையான சுதந்திர தினம் தீர்மானிக்கப் படும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும் .

Feb 2, 2013

நாளைய பொறியை தவிர்க்கும் இன்றைய குறிகள் .

'ஓநாயாக இருந்து பார்த்தால் தான் ஓநாயின் நியாயம் புரியும்' என்பார்கள் . சிரிய விவகாரத்தில் இன்றைய நிகழ்வுகள் பற்றி சொல்ல இந்த வார்த்தைகள் 100% பொருத்தமானவை . நான் சொல்ல வருவது சிரியாவின் டமஸ்கஸ் அருகில் ஜாம்றாயா என்ற இடத்தில் அமைந்திருந்த சிரிய இராணுவத்தின் ' இராணுவ ஆய்வு மையம் ' இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தையே ஆகும் .

சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களுக்கு சென்று விடக்கூடாது என்பதனால் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டதாக இஸ்ரேல் நியாயம் கூறினாலும் , அந்தத் தாக்குதல் தொடர்பில் சிந்திக்க வேண்டிய இன்னொரு பக்கம் இருக்கின்றது . அது இதுதான் .

இந்த ஆய்வு மையத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை நோக்கி இஸ்லாமிய இராணுவம் தனது வியூகத்தையும் , படை நகர்த்தலையும் மேற்கொள்ளத் தொடங்கி விட்டதன் பின்னர்தான் இஸ்ரேலின் விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை . ஏனென்றால் சிரியாவின் அரச இராணுவம் ஏறத்தாள முக்கியத்துவம் மிக்க பல தளங்களையும் நிலைகளையும் விட்டு பின் வாங்கியது உலகறிந்த உண்மை . அந்தவகையில் இந்த இராணுவ ஆய்வு மையமும் இஸ்லாமிய இராணுவத்திடம் பறிபோகும் சந்தர்ப்பங்களே அதிகமாக இருந்தன . உண்மையான இஸ்ரேலின் அச்சம் இந்த இடம்தான் .

அந்த வகையில் இஸ்ரேல் சொல்லும் இந்த ஹிஸ்புல்லா பூச்சாண்டி அரசியல் தனமான ஒரு போலித் தகவல் ஆகும் ; அத்துடன் தமது எதிர்கால அச்சத்தை நிவர்த்திக்கும் இராணுவ இராஜ தந்திரங்களை சியோனிசக் கூட்டு தொடங்கி விட்டது என்பதற்கான ஒரு ஆதார நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியுள்ளது .

ஏனென்றால் சிரியாவில் கிலாபா அரசு தோற்றம் பெற்றால் அது ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீனாகவே இஸ்ரேலை பார்ப்பதோடு அதற்கு எதிராக யுத்தப் பிரகடனத்தை வெளிவிடுவது தவிர்க்க முடியாதது . என்பதை சியோனிசம் உணர்ந்துள்ளது . இஸ்ரேல் தரப்புக்கு இப்போதுள்ள தலைவலி இராணுவ வலுச் சமநிலையில் இஸ்லாமிய இராணுவம் தனக்குப் போட்டியாக களமிறங்கி விடக்கூடாது என்பதே . அந்த நாளைய பொறியை தவிர்க்கும் இன்றைய குறிகளில் ஒன்றே சிரிய இராணுவத்தின் ' இராணுவ ஆய்வு மையம் ' மீதான பாரிய விமானத் தாக்குதல் ஆகும் .

இன்னும் இதுபோல் இஸ்ரேலின் பல இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம் எதுவரை என்றால் இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவர்களில் 'அல்லாஹு அக்பர் ' என்ற கோசத்தோடு பாலஸ்தீன சமூகம் அடுத்த 'கைபரை' கண்களால் காண அணிவகுத்து நிற்கும் அந்த தூய நாள் வரை .

முதலாளித்துவ அரசியல் சதிகளில் சிக்கியுள்ள மனித சமூகம் .


இந்த பதிவு சித்தாந்த ரீதியில் முதலாளித்துவ வடிவத்தை முன்வைக்கும் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல .நிகழ்காலத்தின் உண்மைகளை அரசியல் தரத்தில் மனித சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு சிறு முயற்சியாகும் .
ஒவ்வொரு தேசியமும் தனது எல்லைகளுக்குள் நலனையும் நியாயத்தையும் பேண முற்படும் போது . அதன் எல்லைகளுக்கு வெளியே வாழும் மனிதன் கருத்தளவில் மிருகத்தை விட கேவலமாகப் பார்க்கப் படுகிறான் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் இன்றைய சர்வதேச அரசியல் .
இவ்வாறே ஒவ்வொரு தேசியமும் தனக்குள் பெரும்பான்மை எனும் ஜனநாயக நியாயத்தில் கரைந்து போகும் போது இனவாதம் ,மதவாதம் என்ற உருவமெடுத்து பேரினவாதம் என்ற பார்வையில் சிறுபான்மை அடக்குமுறை அரசியலாக்கப் படுகின்றது . இப்போது அது தவிர்க்க முடியாமல் எஜமான் அடிமை என்ற கீழ்த்தரமான தேசிய அரசியலாகின்றது .
இந்த சாபக்கேடான பார்வைகளுக்குப் பின்னால்
அவைகளை இயக்கும் தரத்தில் அமர்ந்திருப்பது முதலாளித்துவம் தான் என்பதை மறுப்பவர்கள் முடிந்தால் தங்கள் நியாயங்களை சொல்லட்டும் .
சுயநலம் , தான்தோன்றித்தனம் என்பவற்றை தவிர அதிகாரங்களோ அரசியலோ இன்று ஆதிக்கத்தில் இல்லை .
U .N இன் வீட்டோ அதிகாரம் முதல் , N A T O வின் சர்வாதிகாரம் வரை சர்வதேச சட்டங்களும் ,அமைப்புகளும் சுயநலத்தில் அல்லாமல் இயங்கவில்லை என்பதை நியாயப்படுத்த தைரியமுள்ள ஒருவரை வரச் சொல்லுங்கள் .
மதச் சார்பின்மை என்ற மதத்தின் கீழ் ஆளப்படுவதே நியாயம் எனக் கூறிவிட்டு ஆடு புலி ஆட்டமாக சிறுபான்மையை ஜனநாயக முற்றுகையில் வெட்டுக்காய் ஆக்கி சந்தர்ப்ப வாத அரசியலில் குளிர் காயும் இந்தியா , இலங்கை போதுமே முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழிக்க .
அமெரிக்கா ஈராக்கிலோ , ஆப்கானிலோ புகுந்த அரசியலுக்கும் , பாலஸ்தீன விவகாரத்தின் சர்வதேச அதிகார சக்திகளின் பார்வை , பிரான்ஸ் மாலி மீது ஆக்கிரமித்த அரசியலுக்கும் , அல்லது இந்தியா இலங்கையில் அமைதி காப்பு போர்வையில் அனுப்பிய I .P .K .F இராணுவத்திற்கும் , சோமாலியாவின் வறுமைக்கு நிவாரணம் கொடுத்தேன் பேர்வழி என்ற போர்வையில் நுழைந்து நிர்வாணமாக அடிவாங்கி வெளியேறிய U .S மரின்களுக்கும் இடையில் ஒரு பொதுத் தொடர்பு உண்டு .
அல்லது தனது அரசியல் இலாபத்துக்காக U .S மரின்கலுக்கு எதிராக மக்களை திருப்பிய யுத்தப் பிரபு ஜெனரல் பரா ஐடிட்டுக்கும் , பர்மிய கோரப் படுகொலைகளுக்கும் , அதை எச்சரிக்கிறேன் பேர்வழி என ஏறத்தாள எல்லாம் முடிந்த பின் தலைமைத்துவ முகம் காட்ட பர்மா வந்த துருக்கியதூதுவர்கள் போன்ற சம்பவங்களின் பொதுவான இடைத்தொடர்பு சமூக நலன் என்பதைவிட சாக்கடை முதலாளித்துவ அரசியல் தான் .
செர்பிய இராணுவ முகாம்களில் பொஸ்னிய முஸ்லீம் பெண்கள் கிறிஸ்தவ சிப்பாய்களின் கருக்கொள்ளப்படும் வரையான காம வெறியாட்டத்தின் முன் சிதைக்கப் பட்டபோது , ஈராக்கின் முஸ்லீம் பெண்கள் மீதான அமெரிக்க இராணுவ வெறியாட்டம் வெளித்தெரிந்த போதோ அடங்கி இருந்த மனித உரிமை ,பெண்ணுரிமை அமைப்புகள் ஆப்கானில் ஒரு பெண்ணின் கழுத்தை சிராய்த்து சென்ற ஒரு தோட்டாவுக்குப் பின் துள்ளி எழுந்த பிரச்சார அரசியலும் இந்த முதலாளித்துவ சுயநலப் பார்வையின் வடிவமே .
ஓ மனித சமூகமே ! நீ நீதியை தேடினால் நியாயத்தை தேடினால் உனது மௌனத்தை உடைத்து சரியானதை புரிந்து கொள்ள முயற்சி செய் . உலகின் சம்பவங்களை கோர்த்துப்பார் ஒரு உண்மை உனக்குப் புரியும் அது இந்த சர்வதேச அநியாயக் காரர்கள் ஒட்டுமொத்தமாக பயங்கர வாதமாக விரல் நீட்டிக்காட்டுவது இஸ்லாத்தின் மீதே ஆகும் . அநியாயம் அதைப் பார்த்து அஞ்சுகிறது என்றால் நியாயம் அதன் பக்கம் தான் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேறு வார்த்தை தேவையில்லை .