Aug 22, 2011

லிபியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்

லிபியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்: கலிமா கூறியவாறே முஸ்லிம் சகோதரர் உயிர்த்தியாகம்லிபிய இராணுவ சிப்பாய் சுடுவதற்கு முன்னால், முவாம்மர் கடாபி நீடூடி வாழ்க, அல்-ஃபயித் நீடூடி வாழ்க என்று கூறச்சொல்லியும், அதை மறுத்து “அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று பதில் கூறியவாறு ஷஹீத் ஆகும் நேரடி காட்சி.
அல்லாஹ்سبحانه وتعالى இந்த முஸ்லிம் சகோதரரை ஷஹீதாக ஏற்றுக்கொள்வானாக! ஆமீன். மார்ச் 2011.



SOURCES FROM SINDHANAI.COM

Classical Scholars on The Khilafah


Aug 20, 2011

ரமதான் தக்வாவின் மாதம் மாத்திரமல்ல, பெற்றுக் கொண்ட தக்வாவைக் கொண்டு பல வெற்றிகளையும்; பெற்றுக் கொண்ட மாதம்

இஸ்லாமிய மார்க்கம் பூமியில் நிலை பெறுவதற்கும் தலைத் தோங்குவதற்குமான வெற்றிகள் பல, புனிதம் நிறைந்த இந்த ரமதான் மாதத்தில் தான் நிகழ்ந்துள்ளன என்பது இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து நாம் அறிகின்ற பேருண்மையாகும்.

• இஸ்லாத்தின் முதல் யுத்தமும் முதல் வெற்றியுமான 'பத்ரு'ப் போர் நிகழ்ந்தது ரமதான் 17ம் நாளிலாகும். 

• அரபு தீபகற்பம் முழுவதும் இஸ்லாம் செல்வாக்குச் செலுத்துவதற்கும் உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கம் பரவுவதற்குமான அதி முக்கிய நிகழ்வு மக்கா நகர வெற்றியாகும்.இந்த வெற்றியும் புனித ரமதான் மாதத்திலேயே நிகழ்ந்தது.

• முஸ்லிம்கள் ஐரோப்பா மீது படை யெடுத்தமையானது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.இது 'தாரிக் பின் ஸியாத்' தலைமையில் 'ஸ்பெயின்' வெற்றி கொள்ளப் பட்டதன் மூலம் சாத்தியமானது.இதுவே ஐரோப்பாவுக்கு இஸ்லாமிய தூதை எடுத்துச் சென்ற நிகழ்வாகவும் கருதப்படுகின்றது.இந்த வெற்றியும் புனித ரமதான் மாதத்திலேயே நிகழ்ந்தது.

• முஸ்லிம் சமூகம் சந்தித்த மிகப் பாரிய அழிவு மங்கோலியப் படையெடுப்பால் நிகழ்ந்ததாகும். இதே மங்கோலியருக் கெதிரான மிகப் பெரிய வெற்றி பலஸ்தீனுக் கருகில் உள்ள 'ஐனு ஜாலூத்' என்ற இடத்தில் கலீபா 'குத்ஸ்' தலைமையில் நிகழ்ந்ததுது.இந்த வெற்றியும் புனித ரமதான் மாதத்திலேயே நிகழ்ந்தது. 

எமது வரலாற்றைப் பார்க்கின்ற நாம், எமது வரலாற்றின் அதி முக்கிய நிகழ்வுகள், திருப்பு முனைகள் அல்லாஹ்வின் நாட்டப்படி இந்தப் புனித ரமதான் மாதத்தில் நிகழ்ந்திருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.
பசி,தாகம்,பாலியல் தேவை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவர்களாக மனோ இச்சைப் படி வாழ்வதை விட்டு விட்டு, இறைவனின் விருப்பப்படி வாழ்வதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாம், இறைவனின் சட்டதிட்டங்களை சம்பூரணமாக பூமியில் நிலை நாட்ட வேண்டும் என்ற உணர்வைப் பெறுவதும்; எமது மூதாதையர்கள் பெற்றுத் தந்த புகழையும் கீர்த்தியையும் மீளப் பெற்றுக் கொள்வதற்குரிய அம்சங்களை ஏற்றுக் கொண்டு அதனை நோக்கி மக்களையும் படைகளையும் நகர்த்துவதும் இன்றைய காலத்தில் விரைவாகச் செய்யப்பட வேண்டிய மார்க்கக் கடமையாகும்.

ரமதான் தக்வாவின் மாதம் மாத்திரமல்ல, பெற்றுக் கொண்ட தக்வாவைக் கொண்டு பல வெற்றிகளையும்; பெற்றுக் கொண்ட மாதம் என்பதை நினைவு படுத்தி அதில் மக்களின் கருத்தை வெல்வதனூடாக அல்லாஹ் விரும்புகின்ற இஸ்லாமிய கிலாபத்தை நிலைநாட்டுவது இன்று செய்யப்பட வேண்டிய முக்கிய உழைப்பாகும். 

ஆக்கம்: முஹம்மது இஸ்மாயில்

SOURCES FROM Ourummah.org

Aug 10, 2011

கிலாபா ஒரு கடமை! - அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களின் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள்...

அரபியில் சகோதரர் இர்பான் அவர்கள் தொகுத்துள்ள அனைத்து அஹ்ளுசுன்னாவை சேர்ந்த மூத்த அறிஞர்களினதும் கருத்துக்களை இங்கு பதிகிறேன்.

அந்த ஆக்கம் கிலாபா வாஜிப் என்பதை தமது முடிவாக எடுத்த அறிஞர்களை பட்டியலிடுகிறது. இதில் அறிஞர் இப்னு ஹசம் அவர்கள் தனது (الفصل في الملل والأهواء والنحل) எனும் நூலில் :

اتفق جميع أهل السنة وجميع الشيعة، وجميع الخوارج (ماعدا النجدات منهم) على وجوب الإمامة
"தலைமைத்துவம் வாஜிப் (கடமை) எனும் விடயத்தில், அஹ்லுஸ் சுன்னாவுடைய அறிஞர்களும் அனைத்து ஷீஆக்கலும், (சில விதிவிலக்கானவர்களித்தவிர) அனைத்து கவாரிஜ்களும் கடமை எனும் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்."

இமாம் இப்னு ஹஜர் அல்அச்கலாணி தனது 'பத்ஹுள் பாரி' நூலில் இது பற்றி குறிப்பிடும் போது, இமாம் நவவி அவர்களும் இன்னும் பலரும் இந்த விடயத்தில் (கிலாபா ஒன்று அமைவது கடமை) ஒத்த கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறார்.

இப்னு ஹஜர் ஹய்சமி எனும் அறிஞர் இது பற்றி ( الصواعق المحرقة) எனும் நூலில் கூறும்போது:

"اعلم أيضا أن الصحابة رضوان الله عليهم أجمعوا على أن نصب الإمام بعد انقراض زمن النبوة واجب بل جعلوه أهم الواجبات حيث اشتغلوا به عن دفن رسول الله صلى الله عليه وسلم

"சஹாபாக்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களின் பின் ஒரு அரசியல் தலைவர் ஏற்படுத்தப் படல் வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை பட்டனர். மட்டுமல்லாது, அவர்கள் ஒரு முக்கிய கடமையாகவே ஆக்கினர். எந்த அளவு என்றால், நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்யும் வேலையை விட இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்." என்று குறிப்பிடுகிறார்.

இப்னு கள்தூன் அவர்கள் தமது (المقدمة) எனும் நூலில்,

"إن نصب الإمام واجب قد عرف وجوبه في الشرع بإجماع الصحابة والتابعين

ஒரு அரசியல் தலைவரை (இமாமை) நியமிப்பது கடமை என்பதையும் இதற்கான சட்டம் சஹாபாக்கள் அனைவரினதும், மற்றும் தாபிஈன்களினதும் ஒன்றுபட்ட முடிவில் இருந்து பெறப் பட்டதாக கூறுகிறார்.
நபி(ஸல்) அவர்களின் வபாத்தின் பின் உடனடியாக அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்டு அவர் தெரிவு செய்யப்பட்டதும் அக்காலப் பகுதியில் சமுகம் எந்த நிலையிலும் ஒரு தலைமைத்துவம் அற்ற நிலையில் விடுபட்டிருக்கவில்லை என்பதே இதற்கான ஆதாரம் என்றும் அவர் குறிக்கிறார்.

அறிஞர் நசபி அவர்கள் தமது( العقائد) எனும் நூலில்,

والمسلمون لا بد لهم من إمام يقوم بتنفيذ أحكامهم وإقامة حدودهم وسدّ

முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் தலைவர் இருப்பதும், அவர் முஸ்லிம்கள் தொடர்பான சட்டங்களை நிலை நாட்டுவதும் அவசியம் என்று குறிப்பிடுகிறார்.

அறிஞர் ஜமாலுத்தீன் கஸ்நவி அவர்கள் தமது (أصول الدين) எனும் நூலில்,

لا بد للمسلمين من إمام يقوم بمصالحهم من تنفيذ أحكامهم

கிட்டத்தட்ட மேலே இமாம் நசபி சொன்ன அதே கருத்தை கூறுகிறார்.

அறிஞர் இழ்ழு தீன் அவர்கள் தமது ( المواقف) எனும் நூலில்

نصب الإمام عندنا واجب علينا سمعا... وأما وجوبه علينا سمعا فلوجهين: الأول إنه تواتر إجماع المسلمين

ஒரு இமாமை ஏற்படுத்துவது எம்மீது கடமையான ஒரு விடயம் ஆகும்.இங்கு இவர் நபி(ஸல்) அவர்களின் வபாத்தின் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் நிகளித்திய உரையையும், பின்னர் அனைத்து விடயங்களையும் அவர் பின்னர் கலீபாவாக தேர்ந்து எடுக்கப்படுவது முக்க்யத்துவம் கொடுக்கப் பட்டமையையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது ஆதாரமாக இறைவனின் சட்டங்கள் (குற்றவியல், ஜிஹாத், ஏனையவை) கடமையாக்கப் படல் ஒப்புக்கொள்ளப்பட்ட கடமை எனும் வகையில், அதனை நிலை நாட்ட எடுக்கப்படும் முயற்சியும் கடமை என்பதையும் குறிப்பிடுகிறார்.

இமாம் குர்துபி அவர்கள் அவரது குர்ஆன் விளக்கவுரையில்,

هذه الآية أصلٌ في نصب إمامٍ وخليفةٍ يُسمعُ له ويطاعُ؛ لتجتمع به الكلمةُ

ஒரு கலீபா அமையவேண்டும் என்பதற்கும், அவருக்கு மக்கள் செவி சாய்த்து கட்டுப்பட வேண்டும் என்பதற்கும் சில குர்ஆன் வசனங்களை ஆதாரமாக வைத்து அது ஒரு கடமை என்பதில் கருத்து வேறு பாடு இல்லை என்று குறிப்பிடுகிறார்:

إِنِّى جَاعِلٌ فِى ٱلْأَرْضِ خَلِيفَةً ۖ

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது (2:30)

--------------

وَعَدَ ٱللَّـهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى ٱلْأَرْضِ كَمَا ٱسْتَخْلَفَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ ٱلَّذِى ٱرْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِى لَا يُشْرِكُونَ بِى شَيْـًٔا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (24:55)

-------------

يَـٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَـٰكَ خَلِيفَةً فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّـهِ ۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّـهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ

(நாம் அவரிடம் கூறினோம்;) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், அனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு. (38:26)

என்ற மூன்று வசனங்களையும் ஆதாரமாக காட்டுகிறார்.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது (السياسة الشرعية) நூலில்,

"يجب أن يعرف أن ولاية أمر الناس من أعظم واجبات الدين، بل لا قيام للدين إلا بها. فإن بني آدم لا تتم مصلحتهم إلا بالاجتماع لحاجة بعضهم إلى بعض، ولا بد لهم عند الاجتماع من رأس حتى قال النبي صلى الله عليه وسلم "إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم" رواه أبو داود من حديث أبي سعيد وأبي هريرة ... ولأنّ الله تعالى أوجب الأمر بالمعروف والنهي عن المنكر، ولا يتمّ ذلك إلا بقوة وإمارة..".
மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமைகளுள் மிகவும் தலையாயது ஆகும். இல்லாவிடின் தீன் என்பது நிலை நாடப்பட முடியாத ஒன்றாகி விடும்.ஆதமுடைய மகன்(மனிதன்) உடைய விவகாரங்கள் ஒருவருக்கொருவர் தேவை கொண்டதாக இருப்பதோடு, அவை கூட்டாக இல்லாதவிடத்து பூரணத்துவம் அற்றதாகவே அமையும். அவ்வாறு கூட்டாக மனித செயல்பாடுகள் இருக்கும் இந்த நிலையில், அந்த கூட்டு சமுகத்திற்கு ஒரு தலைமை அமைவது அவசியம் ஆகும். இதற்கு ஆதாரமாக 'மூன்று முஸ்லிம்கள் ஒரு பயணத்தில் ஈடுபட்டாலும் தமக்குள்ள ஒரு தலைவரை நியமித்துக் கொள்ளட்டும்' எனும் அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸை ஆதாரமாக கொள்கிறார். மேலும் அல்லாஹ் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை நமக்கு கடமையாக்கி இருக்கிறான். அந்த பணி அதிகாரபூரவமற்ற ஒரு தலைமைத்துவம் இன்றி பூரணம் அடைய மாட்டாது என்றும் கூறுகிறார்.

இமாம் ஷவ்காணி அவர்கள் தமது السيل الجرار எனும் நூலில் பல ஆதாரங்களை காட்டி இந்த விடயம் ஒரு கடமை என்று கூறுவதையும், அதே போன்று அறிஞர் சம்சுதீன் ரம்லி எனும் அறிஞரும், ஷைக் தாஹிர் இப்னு ஆஷூர் எனும் அறிஞர்களும் அதே வகையான கருத்தை கொண்டிருப்பதையும் காணலாம்.

அத்தோடு ஜசீரி எனும் அறிஞர் தமது الفقه على المذاهب الأربعة எனும் நூலில்,

"اتفق الأئمة رحمهم الله تعالى على أن الإمامة فرض وأنه لا بد للمسلمين من إمام يقيم شعائر الدين وينصف المظلومين من الظالمين وعلى أنه لا يجوز أن يكون على المسلمين في وقت واحد في جميع الدنيا إمامان لا متفقان ولا مفترقان

நான்கு (மத்ஹபுகளுடைய) இமாம்களும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமை என்பதில் கருத்தொற்றுமை படுகிறார்கள். முஸ்லிம்களின் மார்க்க விவகாரங்களிலும், அநியாயம் செய்யப்பட்டவனுக்கு அநியாயம் செய்தவனிடம் நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் இது அவசியம் என்றும் கூறுகிறார்கள். ஒரே நேரத்தில் உலகில் ஒரு தலைமைத்துவம் மட்டுமே இருக்க முடியும் என்பதிலும் இவர்கள் கருத்தொற்றுமை படுகிறார்கள். என்று குறிப்பிடுகிறார்.

Aug 2, 2011

BOOK: All Muslims are obliged to start Ramadhan on the same day


PrintPDF
Download the book from here.
A visual book addressing the topic of why ALL Muslims are obliged to start Ramadhan on the same day no matter where the moon is sighted.
Khilafah.com