Showing posts with label Political Analysis. Show all posts
Showing posts with label Political Analysis. Show all posts

Jul 11, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-02


உலகில் உள்ள அத்தனை பயங்கரவாத இயக்கங்களுக்கும் சில அரசியல் இலக்குகள் உள்ளன. பயங்கரவாதம் என்பது அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறை மாத்திரமே. ஒரு கிலாபாவை நிறுவுதல் அல்லது ஷரீஆவுடைய ஆட்சியை அமைத்தல் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இராணுவங்களை முஸ்லிம் நிலங்களில் இருந்து விரட்டுதல் அல்லது முஸ்லிம் நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சியார்ளகளைப் பதவியிறக்கம் செய்தல் என்ற ஏதாவது ஒன்றை ISIS இன் அரசியல் இலக்குகளில் ஒன்றாகக் கொள்ளலாம். அவ்வாறானதொரு தோற்றப்பாட்டையே மீடியாக்கள் உருவாக்கி இருக்கின்றன.

பொதுவாகவே எவ்வளவுதான் நியாயமான அரசியல் இலக்குகளாக இருந்தாலும் அவற்றைப் பயங்கரவாதம் என்ற வழிமுறையூடாக அடைந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளையும் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதே சமூகத்தினால் இலக்குகளுக்கும் வழிமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்து அறியமுடிவதில்லை என்பதால் பயங்கரவாதம் என்கின்ற வழிமுறையை எதிர்க்கின்ற அச்சமூகம் பயங்கரவாதத்தின் உயர்ந்த இலக்குகளையும் எதிர்க்க ஆரம்பிக்கும். ISIS என்ற இந்தப்பயங்கரவாத இயக்கத்திற்கு மீடியாக்களில் வழங்கப்படும் அதிகூடிய நேரஒதுக்கீடு, மற்றும் ISIS ஐ ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளோடு தொடர்புபடுத்திக்காட்டல் என்பவற்றின் மூலமாக இஸ்லாத்தின் எதிரிகள் இதனையே சாதித்துள்ளார்கள்: ISISஇன் பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற மக்கள் ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளையும் தற்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள். ISISஇன் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்ட மேலைத்துவக் காலனித்துவ சக்திகளையும் அவற்றின் உள்நாட்டு முகவர்களையும் அவர்கள் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

எனவேதான் ISIS என்ற இந்த இயக்கம் முஸ்லிம் நாடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடாது என்று விரும்புகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையா? என்று சந்தேகிக்கவேண்டி இருக்கின்றது. உண்மையிலேயே அவ்வாறு சந்தேகிப்போர் நிறையப்பேர் இருக்கின்றார்கள். இருப்பினும் இவர்கள் விடுகின்ற இமாலயத்தவறு என்னவெனில், முஸ்லிம் தேசங்களைத் தொடர்ந்து அடிமைத்துவத்தில் வைத்திருக்கவேண்டும் என்கின்ற அந்த இலக்கை அடைவதற்காக ISIS ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் – அல்லது அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனத் தாங்கள் நம்பும் - அந்தத் தீய சக்திகளைக் கண்டிக்காமல், ISIS என்ற அந்தக் கருவியைக் கண்டிப்பதாகும். அவ்வாறு செய்வதனால், உண்மையான குற்றவாளிகள் விமர்சனங்களிலிருந்து தப்பி விடுகின்றார்கள். ISIS மீது உண்டாக்கப்படும் வெறுப்பு இறுதியில் கிலாபா மற்றும் ஷரீஆ போன்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடுகின்றது.

இஸ்லாமிய உலகில் இன்று எத்தனையோ அரசியல் / அறிவியல் இயக்கங்கள் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் இந்த அரசியல் / அறிவியல் இயக்கங்களின் இலக்குகளும் ISIS போன்ற இயக்கங்களின் இலக்குகளும் ஒன்றாக அமைவதும் உண்டு. ஒரு உதாரணத்திற்கு கிலாபா என்கின்ற இலக்கையே எடுத்துக்கொள்ளலாம். இது எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலக்கு. ஆனால், ISISஐ முதலில் வெறுத்து, பின்னர் அந்த வெறுப்பின் தொடராய் கிலாபாவையும் வெறுப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட மக்களால் கிலாபா என்ற உயர்ந்த இலக்கைப் பயங்கரவாதம் அல்லாத அறிவியல் / அரசியல் வழிமுறைகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளலாம், அவ்வாறு அதைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் இயக்கங்கள் இருக்கின்றன, அவ்வாறன இயக்கங்களுக்கு தாம் ஆதரவு வழங்கவேண்டும் என்ற உண்மைகள் புரிவதில்லை.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Mohamed Faizal

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-05

இறுதியில் நீங்கள் ஒரு பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படுவீர்கள்.


பயங்கரவாதம் என்ற பதப்பிரயோகத்தின் குளறுபடிகள்.
பயங்கரவாதம் என்ற சொல் பொதுவாக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தை நோக்குவோம்:
அமெரிக்காவில் இடம்பெற்ற ஒக்கலஹாமா குண்டுவெடிப்பின் போது 168 பேர் கொல்லப்பட்டு 680க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு ஆளானார்கள். அதேபோல் அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பின் போது வெறும் 3 பேர் மாத்திரம் கொல்லப்பட்டார்கள்.
இந்த பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு அரசியல்வாதிகளாலும் மீடியாக்களாலும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று கண்டிக்கப்பட்டது. ஆனால், அதிக கொடுமை மிக்க ஒக்கலஹாமா குண்டுவெடிப்போ ஒரு வெறும் குற்றச்செயல் என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியே அழைக்கப்பட்டது. ஏனெனில், ஒக்கலஹாமா குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் முஸ்லிமல்லாத ஒரு வெள்ளைக்கார அமெரிக்கவன். பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு சந்தேகநபரோ ஒரு முஸ்லிம்.
பயங்கரவாதம் என்ற சொல்லை முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதோரால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அத்தனை மகா பயங்கரவாதங்களும் ஒரு சாதாரண, போலீஸ் நிலையைப் பதிவுகளுக்குள் அடங்குகின்ற அன்றாட நிகழ்வுகளில் ஒன்று போல் சித்தரிக்கப்படுகின்றது. எனவே, பயங்கரவாதம் எனும் பதத்தைப் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அது வன்முறை புரிவோரின் இன மத அடையாளங்களுக்கு அப்பால் பயன்படுத்தப்படவேண்டும். ஈராக்கில் அமெரிக்காவும், மியன்மாரில் அவர்களின் இராணுவ-தீவிர பெளத்த கூட்டமைப்பும், சிரியாவில் அசாத்தும் ரஷ்ய இராணுவமும் புரியும் வன்முறைகள் எல்லாமே பயங்கரவாதம் என்று அழைக்கப்படல் வேண்டும். இல்லையேல் அப்பதம் வழக்கிலிருந்து விலக்கப்படவேண்டும்.

அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்குமிடையான தொடர்பு.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னதான மற்றும் பின்னரான இரண்டு ஈராக்குகளையும் எடுத்துக்கொண்டால், ஆக்கிரமிப்புக்குப் பின்னரான ஈராக்கினுள்ளேயே வன்முறைக்குழுக்களும் வன்முறைகளும் தோற்றம் பெற்றன. ஆக்கிரமிப்புக்கு முன்னதான ஈராக் பாதுகாப்பும் இன மத ஐக்கியம் நிறைந்ததாகவும், அபிவிருத்தியில் உச்சநிலையத் தொட்டதாகவுமே இருந்தது.
அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ இராணுவங்கள் முஸ்லிம் தேசங்களில் உள்ள ஆளுகைக் கட்டமைப்புகளைச் சிதைக்கின்றபோது அங்கே ஒரு வலு-வெற்றிடம் தோன்றுகின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய புதிய ஆயுதக்குழுக்கள் உருவாகுகின்றன. அது தவிர்க்க முடியாதது. அது இயற்கையானது.
ஜெர்மனிய நாட்சிக்கள் பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் அவ்வாறான ஆயுதக்குழுக்கள் தோற்றம் பெற்றன. நாட்சிச எதிரிகளையும் அவர்களின் உள்ளூர் ஒத்துழைப்பாளர்களையும் விரட்டுவதற்காக வன்முறையை ஒருவழியாக இவர்கள் கருதினார்கள். இருப்பினும் எவரும் இந்த வன்முறைக் குழுக்களையோ பிரான்ஸிய சமூகத்தையோ குற்றம் சொல்லவில்லை. மாறாக, எல்லாவற்றிற்கும் அடிப்படைக்காரனமான ஜெர்மனிய நாட்சிக்களையே குற்றம் பிடித்தார்கள்.
ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்தின் நேரடி விளைவாக முஸ்லிம் தேசங்களில் வன்முறைக் குழுக்கள் தோற்றம் பெறுகின்றபோது, வெறுமனே அந்தக் குழுக்களும் அந்நாட்டு முஸ்லிம் மக்களுமே குற்றம் பிடிக்கப்படுகின்றார்கள். அடிப்படைக்காரனமான அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் தப்பித்துக்கொள்கின்றார்கள்.
சர்வதேச அரச பயங்கரவாதிகளை விட்டுவிட்டு, அவர்களின் பயங்கரவாதத்தைத் தினமும் அனுபவிக்கின்ற, பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது வெறும் கோழைத்தனம். குறைந்தபட்சம் நான்கு வார்த்தைகள் கொண்டாவது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் எவ்வாறு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டிலே வண்முறைக்குழுக்களின் பிறப்பிற்குக் காரணமாய் அமைகின்றது என்பதை எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகள் முஸ்லிம்களை நோக்கி பயங்கரவாதம் என்ற பதத்தைத் திரும்பத்திரும்ப உபயோகிக்கப்பதற்கு இரண்டு பிரதான காரங்கள் இருப்பதாகக் கொள்ளலாம்: ஒன்று கவனக்கலைப்பு; மற்றையது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தலும், முஸ்லிம்கள் மீதான மேலதிக பயங்கரவாதக் கட்டவிழ்ப்பிற்கான காரணிகளைத் தோற்றுவித்தலும்.

கவனக்கலைப்பு:

பொதுவாகவே மனிதர்களில் பெரும்பாலோனோர் இருக்கின்ற ஆதாரங்களை ஆராய்ந்து அல்லது வாதப்பிரதிவாதங்களைப் பரிசீலனை செய்து அதன் விளைவாக முடிவுகளுக்கு வருவதில்லை. அதிகாரத்தில் உள்ளோர் (இது அரசியல் அதிகாரமாக இருந்தாலும் சரி ஆன்மீக அதிகாரமாக இருந்தாலும் சரி) அவர்கள் எடுக்கின்ற முடிவுகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.
இன்றைய மேலைத்தேய உலகும் அவர்களுடைய மீடியாக்களும் மிகப்பெரும் அதிகார வர்க்கங்கள். இந்த அதிகார வர்க்கங்கள் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் அது ஒரு தேவவாக்கு போல், குரானிய வசனம் போல் அப்படியே பெரும்பாலோனோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவிதமான ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே அமெரிக்க-ஐரோப்பிய உலகு (முஸ்லிம்) பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் போது, அதன் பக்கவிளைவாய், கண்டனம் செய்கிற அமெரிக்க-ஐரோப்பிய உலகு பயங்கரவாதத்தை விட்டும் மிகவும் தூரமானவர்கள் என்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை விட்டும் உலகின் கவனம் கலைக்கப்படுகின்றது. இது ஒருவகையான பிர்அவுனிய மாயாஜாலமே! இந்தக் கவனக்கலைப்பில், இந்த பிர்அவுனிய மாயாஜாலத்தில் அதிகமான முஸ்லிகளும் சிக்குண்டு போயுள்ளார்கள்.
அடுத்ததாக...
நச்சுப் பாம்புகளாகச் சித்தரிக்கப்படும் ஒரு சமூகம் இறுதியில் பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படும். இது ஒரு வரலாற்று உண்மை.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பொய்யான நச்சுப் பிரச்சாரங்களை முஸ்லிம்கள் எதிர்கொள்ளவில்லையெனில், முஸ்லிம்கள் அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தின் பாதிப்புக்களைத் தினமும் அனுபவிப்பவர்கள் என்கின்ற உண்மையை நாம் உலகுக்கு எடுத்துக் காட்டவில்லையெனில், அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளே அதிபெரிய பயங்கரவாதத்தின் ஊற்றிடம் என்பதை உலகுக்கு உணர்த்தவில்லையெனில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகளையும் அநீதிகளையும் அரச பயங்கரவாதங்களையும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள்.
எனவே பயங்கரவாதம் பற்றிய ஆழமான அகலமான புரிதலை முஸ்லிம் சமூகம் எட்டவேண்டிய ஒரு மாபெரும் தேவை உள்ளது.
அந்தத் தேவையை எட்டச் செய்வதற்கான ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரைகள். இதை அங்கீகரிக்குமாறு அல்லாஹ்வை வேண்டியவனாக....


Mohamed Faizal

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-04




இஸ்லாமிய / முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள் எதுவும் எந்தவொரு முஸ்லிம் பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்றும்; உண்மையில் அவ்வாறான குழுக்களின் இருப்பை அவர்கள் விரும்புகின்றார்கள் என்றும்; இதற்குக்காரணம் இக்குழுக்களின் இருப்பைக் காரணமாகவைத்து அவர்களால் தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்ளமுடியும் என்பதுதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த வாரம் Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் தடைசெய்யக் கோரி இந்தியாவில் எழுந்துள்ள கூக்குரல் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவின் சின்னவீடாகிப்போயுள்ள பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றிற்கும் Dr. ஜாகிர் நாயிக் அவர்களுக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் பிதற்றுகின்றார்கள்.

Dr. ஜாகிர் நாயிக், பொதுவாக, மதங்களுக்கிடயான ஒற்றுமை வேற்றுமைகள் பற்றிப்பேசும் ஒரு அறிஞர். ஓரிரு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கெதிரான அமெரிக்க ஐரோப்பியப் பயங்கரவாதத்தைத் தோலுரித்துக்காட்டியும் உள்ளார். மேற்குலகினர் முஸ்லிம் பயங்கரவாத்தைச் சுட்டிக்காட்டுவதில் தம் வாழ்நாளைச் செலவழிப்பது தமது பயங்கரவாத்தைச் செயல்களிலிருந்து உலகின் கவனத்தைத் திருப்புவதற்கே என்பதையும் இவர் விளக்கியுள்ளார். இவரது இந்த அறிவியல் செயற்பாட்டை முடக்குவதற்காகவே இவரை அவர்கள் பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றோடு தொடர்புபடுத்துகின்றார்கள். இந்த வன்முறைச்சம்பவத்தொடு தொடர்புபட்ட ஒருவர் Dr. ஜாகிர் நாயிக்கின் சமூகவளைத்தலத்தில் இணைந்திருந்ததுதான் இதற்கு ஆதாரம் என்கின்றார்கள்.

(Dr. ஜாகிர் நாயிக் அவர்களை எதிர்த்துக்கொண்டு இஸ்லாமிய விரோதிகளோடு கைகோர்க்கவும் முஸ்லிம்களில் ஒருசாரார் புறப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய சட்டக்கலை தொடர்பான விடயங்களில் இவரோடு உள்ளக முரண்பாடு கொண்டவர்களே இவர்கள்.)
*******
பயங்கரவாதம் பற்றிய சரியான புரிதலை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமெனில் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” (Agent Provocateurs) மற்றும் “பொய்க்கொடித் தாக்குதல்” (False Flag Operations) என்றால்
என்னவென்று நாங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”

அநீதிக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆட்படுகின்ற ஒரு சமூகம் நீதியையும் சுதந்திரத்தையும் பெறுவதற்கு முயற்சி செய்யும். பொதுவாக இந்த முயற்சிகள் அவசியமானவை; பாராட்டப்படவேண்டியவை; அனைவரும் பங்கெடுக்கவேண்டியவை. இருப்பினும் இம்முயற்சிகளிற் சில, சில சமையங்களில், புறநடையாக, உசிதமற்ற முயற்சிகளாக அமைவதும் உண்டு. இவ்வாறன உசிதமற்ற முயற்சிகளில் ஒன்றுதான் பயங்கரவாதமும்.

பயங்கரவாதிகள் எனப்படுவோரின் இலக்குகள் உன்னதமானதாக இருப்பினும் அவர்களின் வழி முறைகள் சாத்தியமற்றவையாக, ஆபத்தானவையாக, எமது உன்னதமான இலக்குகளை விட்டும் எம்மைத் தூரப்படுத்துபவையாக அமைந்து விடுகின்றன. எனவே இவ்வாறான உசிதமற்ற முயற்சிகள் அறிவுரைகளூடாக சீர் செய்யப்படவேண்டும். உசிதமற்ற முயற்சிகளைக் காட்டிக்கொடுப்புகள் மூலம் சீர்திருத்தம் செய்யலாம் என்பது சீர்திருத்தம் என்கின்ற இன்னுமொரு உயர் இலக்கிற்கான இன்னுமொரு பிழையான வழிமுறை; இன்னுமொரு உசிதமற்ற முயற்சி. காட்டிக்கொடுப்புகள் அநீதிக்கு ஆட்பட்ட சமூகத்தை மேலும் பலமிழக்கச் செய்யும்; அதற்கெதிரான அநீதிகளை இன்னும் அதிகரிக்கும்; அதிகரிக்கின்ற அந்த அநீதிகள் இன்னும் அதிகமான உசிதமற்ற வழிமுறையாளர்களின் பிறப்பிற்குக் காரணமாகும். இதனை ஒரு “விஷியஸ் சைக்கிள்” என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

அநீதிகளைக் கண்டு ஆத்திரப்படாதவன் ஒரு ஜடம். அவனால் எதுவித பிரயோசனமில்லை. ஆனால், அநீகளுக்கெதிரான நியாயமான அந்த ஆத்திரம் மாத்திரம் இருப்பது போதாது. ஆத்திரம் என்பது ஒரு உனர்ச்சி. வெறும் உணர்சிகளால் மாத்திரம் உந்தப்படும் செயல்கள் எதிர்பார்க்கப்படும் விளைவுகளைத் தரப்போவதில்லை.

ஆகவே ஆத்திரமும் சீரான சிந்தனையும் ஒன்றிணையவேண்டும். அவ்வாறு இரண்டும் ஒன்றாகக் கிடைக்கப்பெற்றவனே பிரயோசனமான ஒரு மனிதன். அவனால் மாத்திரமே தீர்வுகளுக்கான சரியான வழிமுறைகளைக் கண்டறிய முடியும். அத்துடன், தன்னிடமுள்ள ஆத்திரத்தையெல்லாம் ஒரு இயக்க சக்தியாக மாற்றி தீர்வுக்கான வழியில் பயணிக்க முடியும்.

அநீதிக்கு ஆட்பட்ட எந்தவொரு சமூகத்திலும் அதிக ஆத்திரமும் குறைவான, சீரற்ற சிந்தனைகளும் கொண்ட ஒரு சிலர் இருப்பது இயற்கையானதே. இதற்கு முஸ்லிம் சமூகம் விதிவிலக்கல்ல. 

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”
எனப்படுவோர் இவ்வாறான அதிக ஆத்திரமும் சீரற்ற சிந்தனைகளும் கொண்ட இளைஞர்களைத் தேடி அலைவார்கள். அவர்களின் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேசி அவர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற ஆத்திரத்தை இன்னும் அதிகரிப்பார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கின்ற அல்லது அவ்வாறு கருதப்படுகின்ற தேசத்திற்கெதிராக அல்லது சமூகத்திற்கெதிராக வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படுவார்கள். அவ்வாறன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தேவையான பயிற்சிகளையும் தளவாடங்களையும் வழங்குவார்கள். இவர்கள் “வெற்றிகரமாக” ஒரு வன்முறையைப் புரிந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சியுறுவார்கள். ஏற்கனவே வன்முறையைப் பிரயோகித்துக்கொண்டிருந்த அரசோ அல்லது சமூகமோ இந்த வன்முறையைச் சுட்டிக்காட்டித் தங்களை பாதிக்கப்படுவோராகக் காட்டும். இந்த வன்முறையைக் காரணம் காட்டி புதியதும் அதிகமானதுமான வன்முறையத் தங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடும்.

“பொய்க்கொடித் தாக்குதல்” என்பது அநீதிகள் இளைத்துக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தை அல்லது குழுவைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகவர்கள், குறிப்பாக புலனாய்வுப் பிரிவுகள், தாமாகவே நேரடியாக தாம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசுக்கு அல்லது சமூகத்திற்கு எதிரான ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து, பின்னர் அந்தப் பழியை எதிரிச் சமூகத்தின் மீது சுமத்துவதைக் குறிக்கும். இவ்வாறான “பொய்க்கொடித் தாக்குதல்களின்” விளைவும் நான் மேலே விளக்கிய “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகளை ஒத்ததாகவே இருக்கும்.

(சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் சுயதேடலில் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.)

எனவேதான், முஸ்லிம் சமூகத்தைப் போன்ற ஒரு (underdog) சமூகத்திற்கெதிராகப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இடம்பெற்ற பயங்கரவாதச் செயலில் “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” களின் வகிபாகம் என்னவென்றெல்லாம் நாங்கள் ஆராய முற்படவேண்டும். இதயசுத்தி இழந்து, எதிரிகளிடம் நற்பெயர் பெறவேண்டும் என்ற நோக்கில், வேண்டாதவனைக் காட்டிக்கொடுக்கவேண்டும் என்ற முனைப்புகளோடு சக முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாகப் பயங்கரவாத முத்திரை குத்தப் புறப்படக்கூடாது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Jul 8, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-03


இன்று அநேகமான முஸ்லிம்கள், முஸ்லிம்கள் பயங்கரவாதிகளும் அல்ல இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் மார்க்கமும் அல்ல என்பதை நிரூபிப்பதற்குக் கடும் பிரயத்தனம் எடுப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த முயற்சியின் விளைவுதான் மதீனாவில் நடந்தது போன்ற ஒரு வன்செயலுக்குக் காரணம் முஸ்லிம்களில் ஒருசாரார்தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே முந்தியடித்துக்கொண்டு அந்த வன்செயலைக் கண்டிப்பதுவும், அதற்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டோருக்கு காபிர்கள் என அவசரமாக பத்வா கொடுக்கமுனைவதும்.

சாதாரனமாக எந்தவொரு குற்றச்செயலும் இழைக்கப்படும்போது எழுப்பப்படும் கேள்விகள் எதுவும் இங்கு எழுப்பப்படவில்லை. இதில் ஒரு மடமையும், தெளிவான ஒரு சுயநலமும் இருக்கின்றது: தாங்கள் எந்த வகையிலும் குற்றவாளிகள் அல்ல என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்போர் முன்னிலையில் நிரூபித்து நற்பெயர் பெறவேண்டும் என்ற ஒரு உந்துதல் இருக்கின்றது.

இவ்வாறு நாம் செயற்படுவது எமது சுயபெறுமானம் வலுவிழந்த நிலையக்காட்டுகின்றது. அவ்வாறு செய்யவேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பதிலளிப்பதையே ஒரு மார்க்கக் கடமையைப்போல் நாம் எடுத்துக்கொண்டால் நாம் ஒருபோதும் முன்னேற்பாட்டுச் செயற்பாட்டாளர்களாக (proactive) மாறமாட்டோம்; தொடர்ச்சியான எதிர்வினைச் செயற்பாட்டாளர்களாகவே (reactionary) இருப்போம். அதாவது, எமக்கென சொந்தமான எதுவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், எம் எதிரிகளின் நிகழ்ச்சிநிரலிலேயே இயங்கிக்கொண்டிருபோம். எமது பொதுஎதிரிகள் யார் என்பதை மறந்து, அவர்களின் நோக்கங்கள் என்ன என்பதை மறந்து, எம் இருப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பான அவர்களின் வேலைத்திட்டங்கள் என்ன என்பதை மறந்து உள்ளக முரண்பாடு வளர்ப்பதிலேயே நாம் காலம் கழிப்போம். இது எழுச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தின் பண்பாக இருக்கமுடியாது.

எமக்கிடையான உள்ளக முரண்பாடுகள் மிகவும் உக்கிரமாகத் தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈரான் மற்றும் சவூதியின் ஊக்குவிப்போடு குறிப்பாக ஷீஆ-சுன்னி முரண்பாடுகள் இன்று சூடுபிடித்து வருகின்றன. சவூதி சலபிக்களை எதிர்க்கும் சில ஷீஆ ஆதரவுக் குழுக்கள் தங்களின் எதிரிகளை ISIS காரர்களாகச் சித்தரித்து காட்டிக்கொடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவர்களுக்கு
ISIS இலங்கையில் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கு விடைகான்பதில் எதுவித அக்கறையும் இல்லை. தங்கள் எதிரிகளைக் காட்டிக்கொடுத்துப் பழிவாங்கவேண்டும் என்ற வேட்கையில் இலங்கையிலும் ISIS இருக்கின்றது என்ற மாயையையும் அச்சத்தையும் இவர்கள் தோற்றுவிக்க முனைகின்றார்கள்.

அத்துடன் இந்தக் காட்டிக்கொடுப்புகள் சில சவூதிசார் சலபிக்களாலும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. சவூதியின் சர்வாதிகாரப் போக்கையும், அதன் காலனித்துவ நாடுகளுடனான கள்ளத்தொடர்பைக் கண்டிக்கின்ற அத்தனை குழுக்கள் மீதும் இவர்கள் ISIS முத்திரை குத்துவார்கள். இக்குழுக்களின் வழிமுறை வன்முறை அற்ற வெறும் அரசியல் / அறிவியல் வழிமுறையாக இருக்கின்றபோதும் கூட இந்தக் காட்டிக்கொடுப்பைச் செய்ய இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

2011ஆம் ஆண்டிலே ஆப்கானிஸ்தானிற்குள் தாலிபான் என்ற “பயங்கரவாதிகளும்” 2013ஆம் ஆண்டிலே ஈராக்கிற்குள்ளே சத்தாம் ஹுசைன் என்ற “பயங்கரவாதியும்” இருப்பதாகக் கூறிய அமெரிக்கா அவ்விரு “பயங்கரவாதிகளிடமுமிருந்து”அந்நாட்டு மக்களைத் தான் விடுவிக்கப்போவதாகப் பொய்க்கோசம் எழுப்பியது. அப்போது ஆப்கானிஸ்தானிற்கு எதிராக ஈரானும், ஈராக்கிற்கு எதிராக சவூதியும் அமெரிக்காவுடன் இணைந்து காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அந்தத் துரோகத்தனத்தின் விளைவாக இன்றும் அவ்விரு நாடுகளிலும் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று இங்கு (இலங்கையில்) இல்லாத ஒரு ISIS இற்கு எதிரான காட்டிக்கொடுப்பு அவ்வாறன ஒரு விபரீதத்தையே ஏற்படுத்தும்.

அமெரிக்கா உலகில் உள்ள எந்தவொரு இராணுவச் சக்தியுடனும் ஒப்பிடமுடியாத அளவு பலம் கொண்ட ஒரு இராணுவச் சக்தி. அதனோடு இரானுவரீதியாகப் பொருதி வெற்றிகொள்ளக்கூடிய எந்தவொரு நாடும் உலகில் இல்லை. அப்படியிருக்க, சாதாரண ஆயுதக்குழுக்களால் எவ்வாறு அதனைத் தோற்கடிக்க முடியும்? எனவே எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அமெரிக்கா அச்சமடைவதில்லை. மாறாக அவ்வாறன பயங்கரவாதக் குழுக்களின் இருப்பு அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகின்றது. ஏனெனில், அவ்வாறன குழுக்கள் இருக்கின்றபோதுதான் அமெரிக்காவை எங்கள் நாடுகளுக்குள்ளும் சமூகங்களுக்குள்ளும் வரவேற்கின்ற துரோகிகள் எங்களுக்குள் உருவெடுக்கின்றார்கள். எனவே, உண்மையிலேயே அவ்வாறன பயங்கரவாதக்குழுக்கள் இல்லாவிடில் அவற்றைத் தாமே தோற்றுவிக்கும் பணியிலும் தாமே இறங்குகின்றார்கள். இதற்கான சான்றுகள் தென்னமெரிக்க நாடுகளுடனான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் நிறையவே காணக்கூடியதாக உள்ளது.

எனவே எம்மத்தியில் ISIS போன்ற குழுக்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்ற கேள்விகளும்; உண்மையிலேயே அவை காணப்பட்டால் அவற்றைத் தோற்றுவித்தது யார்? என்ற கேள்விகளும்கூட அர்த்தமற்றவை. இருக்கின்ற அல்லது இல்லாதிருக்கின்ற இந்தப் பயங்கரவாதக்குழுக்களைக் காரணமாகக் காட்டி அமெரிக்கா (மற்றும் ஏனைய முஸ்லிம் விரோத சக்திகள்) எவ்வாறு எங்களுக்குள் ஊடுருவல் செய்யமுனைகின்றன என்பதிலேயே எங்கள் பிரதான கவனம் இருக்கவேண்டும். முஸ்லிம் நாடுகளுக்கெதிரான இன்றைய யுத்தங்களைத் தலைமை தாங்குகின்ற மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான் எங்களின் எதிரிகள். அந்நாடுகளின் நகர்வுகள் தொடர்பாகவே நாங்கள் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டும்.

இயக்கவெறி என்ற நோய்க்கு ஆட்படாத எவராலும் இந்த இயக்கவாதத்தின் ஆபத்துகளை உணரமுடியும். இந்த இயக்கவெறி நோயிலிருந்து இந்த உம்மத்தைக் காப்பதற்கான ஒரேயொரு வழி எமது பொது எதிரி யார் என்பதை அடையாளப்படுத்திக்கொண்டு அந்த எதிரி தொடர்பான எமது செயற்பாடுகளைக் கூட்டிக்கொள்வதில்தான் உள்ளது.

எமது பொதுஎதிரி மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இவர்களின் யுத்தங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில் தொடங்கிய முஅத்தா யுத்தம் முதல், பின்னர் சிலுவை யுத்தங்கள், அதன் பின்னர் காலனித்துவம், தற்போது “பயங்கரவாதத்திற்கு” எதிரான யுத்தம் என்று தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே எமது பொது எதிரி மீதான கவனத்தை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற அல்லது இருப்பதாகச் சொல்லப்படுகின்ற குழுக்களை விமர்சிப்பதிலேயே நாம் காலம் கழிப்பது எமது எதிரிக்கு நன்மையாகவே அமைகின்றது. நாம் அப்படிச் செய்வதையே அவர்களும் விரும்புகின்றார்கள்.

அமெரிக்கா எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்குக்காரணம் அதனிடம் இருக்கின்ற அதியுயர் இராணுவ பலம். அமெரிக்கா மிகவுமே அஞ்சுவது அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனங்களைத் தோலுரித்துக்காட்டி மக்கள் மனங்களிலிருந்து அதனைத் தூரப்படுத்த முனைகின்ற அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இஸ்லாமிய இயக்கம் இலங்கைவாழ் சமூகங்களிடையே அமெரிக்காவின் காலனித்துவ யதார்த்தத்தைப் புரிய வைத்து, அதன் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக்காடுகின்ற வேலையைச் செய்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த முயற்சியில் அது வெற்றியும் பெறுகின்றது என்றும் வைத்துக்கொள்வோம். இதன் விளைவு என்னவாக இருக்கும்? இது இலங்கை – அமெரிக்காவிடையான உறவுகளில், ஒத்துளைப்புகளில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும்? இவ்வாறான இயக்கங்கள் உலக நாடுகள் அனைத்திலும் செயற்பட்டால், உலகநாடுகளிடையே அமெரிக்காவின் நிலை என்னவாகும்? எனவே அமெரிக்கா, மற்றும் காலனித்துவ ஐரோப்பிய சக்திகள் மிகவும் அஞ்சுவது இவ்வாறான முஸ்லிம் அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. எனவே, ISIS போன்ற இயக்கங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் பயன்படுத்தி, வன்முறையற்ற, சாத்வீகமான அறிவியல் / அரசியல் முயற்சிகளை முன்னெடுக்கின்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் இவர்கள் தடை செய்வார்கள். இதை முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அனைவரும் மிகவும் வருந்தவேண்டி வரும்!



From Mohamed Faizal
(தொடரும் இன்ஷா அல்லாஹ்

Jul 4, 2014

ஜிஹாத் - மேற்குலகின் பிரச்சாரமும், உண்மை நிலையும் (காலத்தின் தேவை கருதிய மீள்பதிவு )


கடந்த பல தசாப்தங்களாக மேற்குலகைப் பொருத்தவரையில் ஜிஹாத் என்பது ஒரு வாதப்பொருளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் உண்மையான சக்தியினை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, மேற்குலகு, ஜிஹாத் என்ற சொல்லிற்கு அஞ்சுகிறது. எனவே அதனது உண்மை அர்த்தத்தினை திரிக்க அவர்கள் முயற்சிப்பது ஒன்றும் முஸ்லிம்களுக்கு புதிதானது அல்ல.


முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக சிலுவைப்போர் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தம் திரிக்கப்படுகிறது என்பதனை நாம் வரலாறு நெடுகிலும் காண்கின்றோம். ஆனால்; அதன் வடிவங்கள் வேறுபடக்கூடும். உதாரணமாக, டோனி பிளயெரின் கூற்றில் 'இஸ்லாம் ஒரு சமாதானத்திற்கான மார்க்கம்" என்பதாகவும், மேற்குலகை ஆதரிக்கும் இஸ்லாமியவாதிகளின் அர்த்தத்தில், "ஒருவர் தமது மனோ இச்சைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு விஷயம்" என்பதாகவும் இருக்கலாம்.

இவ்வாறான அர்த்தங்களை திரிக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, மேற்குலகானது, ஜிஹாதினை ஒரு 'பயங்கரமான விஷயமாக" சித்தரிக்கின்ற உபாயங்களையும் தனது வழிமுறையாக கையாண்டு வருகிறது. உதாரணமாக, ஜிஹாத் தொடர்பாக உரை நிகழ்த்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாத்திலுள்ள பின்ஸ்பெரி பார்க் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டதை நாம் ஊடகங்களினு}டாக அறிந்திருப்போம். பள்ளிவாசல்களை மூடப்படுவதைப்போன்ற இத்தகைய செயற்பாடுகள், ஜிஹாத் தொடர்பான இஸ்லாத்தின் கருத்துக்கள் பள்ளிவாசல்களில் பேசப்படுவதை பெரும்பாலும் தடுத்து விடுகின்றன. உம்மத்திற்கெதிராக அதிகளவில் அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற இன்றைய சூழலில் ஏன் நீங்கள் ஜிஹாத் தொடர்பாக பேச மறுக்கின்றீர்கள் என பொதுமக்கள் பள்ளிவாசல் நிர்வாகங்களை வினவும்போது, அவர்கள், 'பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை", என தெரிவிக்கின்றனர். இவ்வாறான எத்தகைய வழிமுறைகளையும் கடைப்பிடித்து, ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தத்தினை திரிபுபடுத்த முயற்சிப்பதில் அவர்கள் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். ஏனெனில் யுத்தம் என்பது எமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். பாரம்பரியமாகவே, தமது இலக்கினை அடைந்து கொள்வதற்காக, மேற்குலகு, தமது பலத்தினை உபயோகப்படுத்த என்றும் தயங்கியதில்லை. அமெரிக்க கூட்டுப்படையின் ஈராக்கிய யுத்தம் இதற்கொரு சிறந்த உதாரணமாகும். ஆனால், 'இஸ்லாம் பலப்பிரயோத்திற்கு எதிரானது" என முஸ்லிம்களையே கூறவைக்கும் நயவஞ்சக முயற்சிகளை மேற்கொள்வதிலும் அவர்கள் வல்;;லவர்கள். இத்தகைய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலமாக முஸ்லிம்களின் மனோநிலையை பலவீனப்படுத்தி தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எளிதுபடுத்துவதில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகண்டுள்ளார்கள்.

யுத்தம் ஏன் தவிர்க்கப்பட முடியாதது?

தனது இறையாண்மையை பாதுகாக்கும் தற்காப்பு உணர்வு உலகின் அனைத்து நாடுகட்கும் அதன் மக்கட்கும் உண்டு. அதனை பாதுகாப்பதற்காக அந்த தேசம் எந்த விலையினையும் கொடுக்கத் தயாராகி விடுகிறது. அதேபோன்று ஒவ்வொரு தேசத்திற்கும் அடிப்படையான இலக்குகளும் காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைவதே மேற்கத்தியத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் இஸ்லாத்தினை பொருத்தமட்டில் அல்லாஹ் (சுபு) வின் திருப்தியை பெற்றுக்கொள்வதே அதனது ஏக இலக்காகும். எனவே இவற்றில் எந்த தேசத்தினை எடுத்துக்கொண்டாலும் அது தனது சித்தாந்தத்தை மேலோங்கச்செய்து தனது இலக்கினை அடைவதற்கு பலம் அவசியமாகும். இதற்காக உள்நாட்டிற்குள் காவல்துறையும் புலனாய்வுத்துறையும் செயற்படுத்தப்படுவதுடன் வெளிநாட்டுறவில் இராணுவமும் புலனாய்வுத்துறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுவாக எந்தவொரு தேசத்தை பொருத்தவரையிலும் அதனது வரவுசெலவுத்திட்டத்தில் பெரும் ஒதுக்கீட்டை பெறுவது பாதுகாப்புத்துறையேயாகும். எனவே எவராவது ஒருவர் பலப்பிரயோகம் தேவையற்றது எனக்கூறுவாரேயானால் அவர் யதார்த்தத்தை மறுக்கிறார் என்பதே உண்மையாகும். பலம் இல்லாத நிலையில் குழப்ப நிலை தொடர்வது தவிர்க்க முடியாதது. இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டால் எமது வாதம் யுத்தத்தை மறுப்பதாக அல்லாமல் அது எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை நோக்குவதாக இருக்கும்.

சோசலிஷவாதிகள், மனிதாபிமானவாதிகள் போன்றோர்களுடன் யுத்தம் தொடர்பாக உரையாடும்போது, 'யுத்தம் தவறானது" என்ற வாதத்தின் வாயிலாக இஸ்லாத்தினை யுத்தத்திற்கு எதிரான ஒன்றாக இனம்காட்டும் முயற்சியின்போதும், 'யுத்தம் குறித்து இஸ்லாத்தில் எவ்வித கொள்கையும் இல்லை' என்பதை நிறுவ முயற்சிக்கும் விஷயத்திலும் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விசுவாசம் கொண்டோரே! நிராகரிப்போரிலிருந்து உங்களை அடுத்து இருப்போருடன் போர் செய்யுங்கள்; அவர்கள் உங்களிடம் கடுமையையே காண வேண்டும்: இன்னும், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான். (அத்தவ்பா:123)

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என இறை நிராகரிப்பாளர்கள் கூறும் வரையில் போர் புரியுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன்.
இதேபோன்று, அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச்செய்வதற்கான முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றும் பொருட்டு காபிர்களுடன் போராடுவதே ஜிஹாத் என்பதாக உலமாக்கள் ஏகோபித்த முடிவினைக் கொண்டுள்ளனர்...

இங்கு கவனிக்கத்தக்க முக்கிய இரு விஷயங்கள் இருக்கின்றன.
அதாவது.

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக காபிர்களுடன் போராடுவது. 
நோக்கம் குறித்தது: அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வது.
அனைத்து சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் பொருத்தவரையிலும், அதனை மேலோங்கச்செய்வதிலும், பரப்புவதிலும், பாதுகாப்பதிலும் போராட்டங்களும் யுத்தங்களும் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்குலகின் யுத்தத்திற்கான அடிப்படை உலக இலாபங்களை அடைந்து கொள்வதாகும். அதனை இவ்வாறு சொல்லலாம். ஆதாவது உலக இலாபங்களை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்காக போராடுதலாகும்.

இங்கும் கவனிக்கத்தக்க முக்கிய இரு விடயங்கள் இருக்கின்றன.
அதாவது

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக எவருடனும் போராடுவது. 
நோக்கம் குறித்தது: உலக இலாபங்களை அடைந்து கொள்வது. 

இந்த அடிப்படையில் பார்க்கும் போது தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக முதலாளித்துவ தேசமும் இஸ்லாமிய தேசமும் பலத்தையினை பிரயோகிப்பதை நம்மால் காணமுடிகிறது. எனினும் மிகத்தெளிவான வேறுபாடு அதனது நோக்கத்திலேயே இருக்கிறது. எனவே நோக்கத்தில் காணப்படும் இந்த அடிப்படை வேறுபாட்டினை புரிந்து கொண்டு காபிர்களின் வலையில் சிக்கிவிடுவதிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

அதாவது ஜிஹாத்தினுடைய அர்த்தத்தினை தமது மனோ இச்சைகளுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இனம்காட்டுவதன் மூலம் அதனது உண்மை அர்த்தத்தினை மறைத்து முஸ்லிம்களை பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குள் தள்ளுவதற்கான சகல முயற்சிகளையும் காபிர்கள் எடுப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜிஹாத் என்பது வெறுமனவே தமது மனோ இச்சைகளுக்கு எதிரான ஒரு போராட்டமா?
இந்த வினா இஸ்லாமிய ஷரியத்திலிருந்து விளங்கிக்கொள்ளப்படவேண்டும். ஜிஹாத் தொடர்பான மேற்குறித்த வாதமானது மிக அரிதான ஷரிஆ ஆதாரத்தின் அடிப்படையிலேயே விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் ஜிஹாத்தினுடைய நேரடி மொழியியல் அர்த்தம் தொடர்பான விளக்கத்திலும்; அதனது ஷரிஆ hPதியான அர்த்தத்திற்குமிடையிலான வேறுபாட்டினையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மொழியியல் ரிதியான ஜிஹாத் என்பதன் அர்த்தம் முயற்சித்தல் அல்லது போராடுதல் ஆகும்

எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அவ்விஷயத்தில் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். ( லுக்மான்:15)
மேலும் அல்லாஹ்வுடைய வழியில் எவர் ஜிஹாத் செய்கிறாரோ அவர் ஜிஹாத் செய்வதெல்லாம் (அதன் பலனெல்லாம்) தனக்காகத்தான் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
( அல் அன்கபூத்:6)


மேலும் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். அன்றியும் எதைப்பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு (மனிதனே) அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விடயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். (அல் அன்கபூத்:8)

மேலும் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் - அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களி(ன் கூட்டத்தாருடன் சுவனத்தி)ல் நுழைவிப்போம். (அல் அன்கபூத்:9)

மொழியியல் ரிதியாக ஜிஹாத்திற்கான அர்த்தம் வழங்கபடுவது மேற்குறிப்பிட்ட நான்கு ஆயத்களில் மாத்திரமேயாகும். இந்த ஆயத்துக்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ ஆயத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இந்த ஆயத்துக்களைப்பொருத்தமட்டில் அது உண்மையாகவே யுத்தத்தைக் குறிக்கவில்லை. எனவே இந்த ஆயத்துக்களுக்கு சண்டையிடுதல் அல்லது கொல்லுதல் என அர்த்தம் கற்பிப்பது தவறானதாகும். எனினும் சண்டையிடுவதையும் கொல்வதையுமே ஜிஹாத்திற்கான ஷரிஆ ரிதியாக விளக்கமாகக் குறிக்கின்ற 120இற்கும் மேற்பட்ட ஆயத்துக்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.

விசுவாசிகளில் தங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

இலேசாகவும் கவனமாகவும் ( இளைஞர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், செல்வம் இல்லாதவர்கள், வாகனத்தில் ஏறியவர்கள், நடப்பவர்கள் ஆகியோர்) புறப்பட்டு, உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யுங்கள்: நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும். (அத்தவ்பா: 41)

(அத்தகைய வியாபாரமானது ) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய (இத்) துதரையும் ஈமான் கொண்டு உங்களுடைய பொருட்களையும் உங்களுடைய உயிர்களையும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் (ஜிஹாத்) செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாக இருக்கும். (அஸ்ஸவ்ப்:11)

இந்த ஆயத்துக்களை பொருத்தமட்டில் இவைகள் நேரடியான சண்டையிடுதலையே குறிப்படுகிறதேயொழிய இவற்றிற்கு நேரடி சொல் விளக்கத்தினை எடுப்பது தவறானதாகும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உலமாக்களும் ஜிஹாத்திற்கான ஷரிஆ அர்த்தமாக யுத்தம் புரிவதையே சரிகாண்கின்றனர்.

ஹனபி மத்ஹப் - பாதியா அஸ்ஸானியா மாலிக் மத்ஹப் - மன்ஹல் ஜலீல் ஷாபி - அல் இக்னா ஹன்பலி - அல் முஹ்னி சிலர் ஷரிஆ அர்த்தத்தை ( சண்டையிடுதல், கொல்லுதல்) பொருள் ரிதியான அர்த்தத்தை (மனோஇச்சைகளுக்கு எதிரான போராட்டம்) விடவும் குறைவாக கணிக்கின்றனர். அதற்காக அவர்கள் கீழ்வரும் ஹதீஸினை முன்வைக்கின்றனர்.

நான் சிறிய ஜிஹாத்திலிருந்து பெரிய ஜிஹாதிற்கு திரும்பியுள்ளேன். இதற்கு ஸஹாபாக்கள் எது பெரிய ஜிஹாத் என நபிகளாரிடம் வினவியபோது அதற்கு அவர்கள் மனோ இச்சைகளுக்கெதிரான ஜிஹாத் என்றார்கள்.

மேற்கூறப்படும் ஹதீஸானது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதன்று. ஏனெனில் இது புனைந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹதீஸ் கலை நிபுணர் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் இப்ராஹீம் பீ அபி அப்லா என்வரின் கூற்று மட்டுமே என அறிவிக்கின்றார்கள்.

மேலும் கீழ்வரும் காரணங்களினால் இதனது கருத்தில் தவறு இருப்பது புலப்படுகிறது.

1. மேற்படி கூற்றானது ஜிஹாதின் மேன்மை குறித்த உறுதியான குர்ஆனின் கருத்திற்கு மாறுபாடானது.

விசுவாசிகளில் சங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

2.மொழியியல் ரிதியான பொருளானது பொதுவானதாகும். ஆதாவது அது 'நப்ஸ்" யிற்கு எதிராக போராடுவதையும் சண்டையிடுவதையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் அதனது ஷரிஆ ரிதியான அர்த்தமானது காபிர்களுக்கு எதிரான போராட்டமேயாகும்.

3. மேற்படி ஹதீஸானது யுத்தம் செய்வதா, செய்யாது விடுவதா என்பது குறித்து தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கவில்லை. இது யுத்தத்தினை தடை செய்வதற்கான எவ்வித அறிகுறியையும் தெரிவிப்பதாக இல்லை.

இதேநேரத்தில் சிலர் ஜிஹாதினை தற்பாதுகாப்பிற்கான ஒரு விடயமாக மாத்திரம் இனம்காட்ட முயற்சிக்கின்றனர். இது மிகமிகத் தவறானதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை மேலோட்டமாக பார்த்தால் கூட இது தவறான கருத்து என புரிந்து கொள்ளலாம்.

முஅத்ஆ யுத்தமானது ரோமாபுரிக்கெதிராக முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் 200,000 விரர்கள் கொண்ட ரோம இராணுவத்தினை 3000 முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். அதேபோன்று மக்காவெற்றியானது ஹ{னைன் யுத்ததினை தவிர்க்கமுடியாததாக மாற்றியமைத்ததையும் நாம் அறிவோம். தபூக் யுத்தமும் கூட முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டு அது ரோமர்களை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதற்கு ஏதுவாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸஹாபாக்களின் இஜ்மா ( ஏகோபித்த முடிவு) விலும் அவர்கள் ஜிஹாத்தினை ஷாம், ஈராக், ஈரான், எகிப்து, வட ஆபிரிக்கா போன்ற பிரதேசங்களில் ஆரம்பித்திருப்பதை நாம் காணலாம். மேலும் ஷஹீத்களின் அந்தஸ்த்தானது இஸ்லாத்தில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே எவ்வாறு ஜிஹாத்தானது ஏனைய விடயங்களை விட குறைவாக மதிப்பிடப்படலாம்?

இஸ்லாத்தை நோக்கிய முறையான அழைப்பிற்கு பின்பு காபிர்களை இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவதை இஸ்லாம் தடைசெய்கிறது. மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் நிர்ப்பந்தம் இல்லை என்ற குர்ஆனியக்கருத்தும் இதனையே வலியுறுத்துகிறது. எனினும் உலகில் அனைவரையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காகவே இந்த தீன் இறக்கப்பட்டுள்ளது. இதனை அடைந்து கொள்வதற்கான கருவியே ஜிஹாதாகும். ஜிஹாத் இல்லாமல் அல்லாஹ் கூறுவதைப்போன்று இஸ்லாம் மறைந்து விடும்.

அவன் எத்தகையோன் என்றால் அவன் தன்னுடைய து}தரை நேர்வழியைக்கொண்டும் உண்மையான மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும் மற்ற எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச்செய்யவே (தன் துதரை அனுப்பிவைத்தான்.)
( அஸ் ஸவ்ப்:9)


முஸ்லிம்கள் காபிர்களிடமிருந்தும் தம்முள் காணப்படும் காபிர்களின் முகவர்களிடமிருந்தும் இஸ்லாத்தினை பாதுகாக்க உறுதி கொள்ளவேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்

எவர் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக்க அழகானவர் யார்? (புஸ்ஸிலத்:33)

Jun 1, 2014

எதில் இருந்தாவது நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்

நீங்கள் ஒரு விடயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதில் இருந்தாவது நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் உங்களது முடிவில் அதில் இருக்கும்
தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம்
செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர முடியாது .

சாக்கடை கழிவு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் பிரித்து பயன் பெற முனைவது அதிக 'ரிஸ்க் ' அதவிட அப்பழுக்கற்றது ,தீமையே இல்லாதது இஸ்லாம் என்பதுதான் எமது நம்பிக்கை அதன் பிரயோகம் தொடர்பில் ஜாஹிலீயத் உடன் பாலம் போட முனைவது இஸ்லாத்திடம் இந்த காலத்திற்கு எதுவும் இல்லை என்ற
கருத்தையே வலுப்படுத்துகின்றது . அறிவியலையோ ,தொழில் நுட்பத்தையோ முஸ்லீம் உம்மா வெளியில் இருந்து பெறவேண்டாம் என நான் கூறவில்லை அவை பொதுவானவை .அனால் குப்ரின் சித்தாந்தத்தை சரிகாணும் அவர்களின் நாகரீகத்தை தழுவச் சொல்லும் சித்தநந்த அரசியலையும் அதன் வழிமுறைகளையும்
எடுப்பது தொடர்பில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எமது சித்தாந்தத்தில் பிழையாக கருதுவதை எதிரியின் சித்தாந்தத்தில் சரிகாணப்பட்டிருக்கும்.
இப்போது அதிகார நிலையில் மிகைத்திருக்கும் எதிரி அவனது நாகரீகத்தை எம்மீது திணிக்கும் முகமாக தவறுகளை சரிகாண பணிப்பான் . இப்போது சரணடைவென்பது காலத்தின் தேவையாக உணரப்படும் .எஞ்சியதை வைத்து எதோ வாழ்ந்து விட்டுப்போதல் எனும் தோல்வி அரசியலின் கைதிகளாக நாம் வாழ தலைப்பட்டு விடுவோ
ம்.

May 31, 2014

இது தான் இன்றைய சினிமா ....

" இன்று படத்துக்கு பாட்டெழுத கம்பனே வந்தாலும் சீதையை பற்றி சிலேடையாக சொன்னால் தான் சினிமா கம்பெனியில் இடமுண்டு "
இந்த வார்த்தைகள் அந்த சினிமாவோடு சம்பந்தப்பட்ட ஒரு கவிஞ்சனால் சொல்லப்பட்டவை . இன்று நல்ல கருத்துக்காக காட்சி சொல்லும்
சினிமாக்களை விட , வசூலுக்காக ஆபாசம் , வன்முறை கலந்த ரீல் விடும் 100% முதலாளித்துவ இலாப நோக்கும் , தமது சிந்தனை செயல்களுக்கான நியாயப் படுத்தலின் பக்காவான கருவியாகவுமே ஹோலிவூட் முதல்
கொலிவூட் வரை சினிமாத்தனம வியாபித்துள்ளது .

இங்கு வெள்ளைக் காக்கா மல்லாக்கா பறப்பதும், சிகப்பு யானை பல்லாக்கு தூக்குவதும் சர்வ சாதாரணம். அப்படி இருக்க முஸ்லீம்களை தீவிரவாதிகளாக , பயங்கரவாதிகளாக ,அடிப்படை வாதிகளாக காட்டுவது ' ப்ரோபிட்பேசில் ' சூடான விடயம்தான் . கியூவில் நின்று டிக்கெட்
எடுத்து ரசித்து விசில் அடித்து கல்லாப்பெட்டிகளை நிரப்ப
காத்திருக்கும் இன ,மதவாத சிந்தனை தரத்திற்கும் , கோட் ,சூட்
போட்ட வெஸ்டேர்ன் உலகத்தின் இன ,மதவாத சிந்தனை தரத்திற்கும் பொதுவாக விரும்பத்தக்க விளையாட்டாய் இஸ்லாம் ,முஸ்லீம் கொச்சைப்படுத்தல் சினிமாத்தனம் அமைந்துள்ளது .
(நடுநிலையாக சிந்திக்கும் மனிதர்கள்
இந்த கருத்துக்குள் உள்ளடங்க மாட்டார்கள் ).
சமூக ஊடகங்களில் இந்த சினிமாவின் தாக்கம் மிக முக்கியமானது என்பதும் அதனூடாக தமது கொள்கை மற்றும் சமூகத்தூண்டல்களோடு இலாபத்தையும் சம்பாதிக்கலாம் என்பது ,யூத இலுமினாட்டி களுக்கு தெரிந்தது போலவே இந்துப்பாசிசமும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது . அந்த
வகையில் இந்தியாவின் இந்துத்துவா என்பது இலுமினாட்டிகளின்
தெற்காசியாவின் தத்துப் பிள்ளைகளில் ஓன்று அல்லது இந்த இலுமினாட்டிகள் இந்துத்துவாவின் 'ரோல் மொடல்கள்' என்பதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்கள் மீதான சினிமா காழ்ப்புணர்ச்சி அரசியலின்
யூகிக்கக் கூடிய ஒரே உண்மை .

துவேசத் தூண்டல் + இலாபாம் =
கொள்கையளவில் இரட்டை இலாபம் ,
அதுதான் இன்றைய இன,
மதவாத சினிமாவின் உண்மை முகம் .

இஸ்லாம்தான் சவால் ! ஒபாமா குமுறல்


“மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு உண்மையான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்…. ரஷ்யா அல்ல…” இவ்வாறு ஒபாமா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ……….
“ரஷ்யா முன்பு  சோவியத் யூனியனாக இருந்தபோது தலைமை ஏற்று நடத்தியது போன்று தற்போது எந்த நாடுகளின் கூட்டமைப்பையும் தலைமை ஏற்று நடத்தவில்லை; மேலும் அது தற்போது சர்வதேச சித்தாந்தத்தையும் கொண்டிருக்கவில்லை”
விளக்கம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஜனநாயக சித்தாந்தத்தை சோதிக்கும் வகையில் அமைந்துள்ள சமீபத்திய சவாலாக உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு எதிராக சர்வதேச நாடுகளின் முயற்சிகள் குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடினிற்கு பிராந்திய நிலைப்பாட்டை மாற்றும் தகுதி இருப்பதாக ஒபாமா உணர்ந்திருந்தாலும், ரஷ்யா தனது கம்யுனிச சித்தாந்தத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலக நிலையை மாற்றும் நிலையில் எவ்வகையிலும் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.
“Ideology knows the answer before the question has been asked – கேள்வி கேட்கப்படும் முன்பே அதற்கான பதிலை சித்தாந்தம் அறிந்திருக்கும்.” என்ற ஜார்ஜ் பேக்கரின் கூற்று நினைவுக்கு வருகிறது.
சித்த்தாந்தம்  ஒருவருடைய இலக்கு, எதிர்பார்ப்பு மற்றும் செயல்களை உருவாக்கும் . அது உலக கண்ணோட்டத்தை பார்க்கக் கூடிய விஷயமாகவும் அல்லது ஒரு முழுமையான பார்வையை கொண்டதாகவும்ம், சமூகத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மக்களில், சில ஆதிக்கமுடைய வர்க்கத்தினர் முன் வைக்கும் எண்ணங்களின் தொகுப்பாகவும் இருக்கும். உலக கண்ணோட்டம் மக்களின் பொது காரியங்களில் நடைமுறை படுத்தப்படும்; ஆகவே அரசியலில் மையக்கருவாக சித்தாந்தம் விளங்குகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஜப்பானில் ஏற்பட்ட பொருளாதார அதிசயமானது, ஜப்பான் மேற்கத்திய குழுவுடன் இணைந்து முதலாளித்துவ கொள்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அரசின் பொருளாதாரத்தில் தலையிட்டதே முதன்மையான காரணமாகும். நாடுகளுக்கிடையே தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பதையும்  அதன் சொத்துக்களை எவ்வாறு நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதையும்  அந்த நாடுகள் பின்பற்றும் சித்தாந்தங்கள் தீர்மானிப்பதால், வேறுபட்ட சித்தாந்தங்களுக்கிடையே அதற்கான ஆதாயங்களை அடையக்கூடிய விஷயத்தில் முரண்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
நிரப்பப்பட்டதுப்பாக்கி
பனிப்போர்  உச்சகட்ட நிலையில் இருந்த காலகட்டத்தில் ஐக்கிய சோவியத் நாடுகள் ஒன்றாக இருந்தது.கம்யூனிசம் மற்றும் முதலாளித்த்துவ சித்தாந்தங்களுக்கிடையில் நிறைய வேற்றுமைகள் இருந்து  இருவேறு துருவங்களாக செயல்பட்ட காரணத்தால் அக்காலத்தில் மக்கள் அவர்களுக்கு எந்த சித்தாந்தம் வேண்டும் என்பதை(பெயரளவிலாவது) தேர்வு செய்ய முடிந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை உடைய  நாடுகளை சோவியத் யூனியன்  தலைமை தாங்கி உலகளாவிய அச்சுறுத்தலாக விளங்கியது.எனவே காலங்காலமாக அதிகாரத்தை கொண்டிருந்த ஐரோப்பிய சக்திகளும் புதிதாக சக்தி வாய்ந்ததாக வளர்ந்து வந்த அமெரிக்காவும் தங்களுடைய முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு போட்டியாக கம்யூனிசத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளானது. அதாவது மேற்கத்திய முதலாளித்துவம் தனது வாடிக்கையாளரை வென்றெடுக்க வேண்டியிருந்தது, அதற்காக ஊக்கத்தொகை அளிக்க வேண்டியிருந்தது.அதற்கு ஒரு தரமான பொருள் தேவைப்பட்டது. ஜான் மேனார்ட் கேய்ன்ஸ்(கேய்னீஸியேனிஸம்) என்பவரின் கலப்பு பொருளாதார (Hybrid Economics) முறை கம்யூனிசத்துடன் போட்டியிட முதலாளித்துவத்தின் தேவையால் உருவானது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் தலைமையின் கீழ் அமெரிக்கா தான் சந்திக்கும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் சீர்படுத்தப்படாத தாராள பொருளாதார சந்தையின் காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளான தனது குடிமக்கள் தங்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் மாற்றம் தேவை என கோரி எழுந்த ஒரு வலுவான போராட்டத்தை தடுக்க சில உள்நாட்டு தொடர் திட்டங்களை கொண்டு வந்தார். அந்நேரத்தில் சிலர் முற்றிலும் மாறுபட்ட அடிப்படைக்காக  1932 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சம் அமெரிக்கர்கள் சோசலிச அல்லது கம்யூனிச வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
இதனடிப்படையில் அமெரிக்க தொழிலதிபர்கள் மனவெறுப்புடன் ரூஸ்வெல்ட்டின் இந்த புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். முதலாளித்துவத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானதால்  யாரும்  பட்டினிக்கு ஆளாகாதவாறு பொதுத்துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி சந்தையை சற்று மிருதுவாக ஆக்கும் நிலை தேவைப்பட்டது. பனிப்போரின் காலத்தில் எவ்வொரு நாடும் இந்த அழுத்தமான நிலையிலிருந்து தடுத்து கொள்ளும் நிலையில் இல்லை. உண்மையில், மத்திய நூற்றாண்டில் முதலாளித்துவம் அமெரிக்காவில் அடைந்த சாதனைகளான- தொழிலாளர் பாதுகாப்பு, ஓய்வூதியம், பொது மருத்துவம் மற்றும் ஏழைகளுக்கான அரசு உதவிகள் – இவையனைத்தும் பலம் வாய்ந்த இடதுசாரிகளிடமிருந்து சலுகையாக பெறும் நடைமுறையில் சாத்தியப்படும் வகையில் நிலவிய சூழ்நிலையில் பெறப்பட்டதாகும். புகழ்பெற்ற “History of the Marshall Plan” ன் ஆசிரியர் கேரொலின் ஈசன்பெர்க் குறிப்பிடுகையில் இந்த அணுகுமுறை பொதுநல பண்பினால் உருவாகவில்லை, ” சோவியத் யூனியன் ஒரு நிரப்பப்பட்ட துப்பாக்கியாகும்” சோவியத் ரஷ்யா மற்றும் கம்யூனிச சித்தாந்தம் இறுதியாக 1991-ல் தாராளமயமாக்கத்திடம் வீழ்ந்ததன் பின்பு, உலகம் வேறொரு இடமாக மாறியது – தாராளமயமான சந்தை தற்போது உலக ஏகாதிபத்தியமாக மாறியுள்ளது.
ஒருதலைப்பட்சமானஉலகமும் “வரலாற்றின்முடிவும்“
1989 ஆம் ஆண்டு கோடையில்” The National Interest “எனும் பத்திரிகை அதிரடியான கொட்டை எழுத்துக்களில் “The End of History?” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது, கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நடைபெற்ற சித்தாந்தத்தின் போரானது முடிவுக்கு வந்தது. மேலும் மேற்கத்திய தாராளமயமான ஜனநாயகம் வெற்றி பெற்றது என அதன் ஆசிரியரும் அரசியல் அறிஞருமான ஃப்ரான்சிஸ் ஃபுகுயோமா அறிவித்தார். சோவியத் யூனியன் முழுவதிலும் ஏற்பட்ட கம்யூனிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இந்த கட்டுரையை உண்மைப்படுத்தியது. பன்முனை ராணுவ நிலையிலிருந்து(1815-1945) உலகம் இருமுனை நிலைக்கு(1945-1989) மாறி தற்போது ஒருமுனை நிலையுடைய சூழலுக்கு மாறியுள்ளது. ஃபுகுயோமா அரசியல் அறிவியலில் எதிர்பாராத நட்சத்திரமாக உருவானார். அவர் ஜான் க்ரேயினால் “உலக முதலாளித்துவத்தின் ராஜ தத்துவ ஞானியாக போற்றப்பட்டார்”. அவருடைய புத்தகமான “The End of History? and The Last Man”
வெளியாகிய மூன்றாண்டுகளுக்கு பின் அத்தலைப்பில் உள்ள கேள்விக்குறி காணாமல் போனது.
ஃபுகுயோமா நடப்புகளை பற்றி பேசாமல் சிந்தனைகளைப் பற்றி பேசினார். மேற்கத்திய தாராளமய ஜனநாயகத்தின் சமமான சுதந்திரம் மற்றும் அனைவரும் சமம் என்னும் விஷயத்தை நோக்கி முயற்சிகள் மேற்கொண்டதன் காரணத்தால் இதை யாரும் மிஞ்ச முடியாது எனவும் அதை கடைபிடிப்பதால் உலக நடப்புகளில் ஒரு பொதுவான அமைதி ஏற்படும் எனவும் நீண்ட காலத்திற்கு எடுத்து கொள்வோமேயானால் இது தான் நாட்டிலிருந்தும் ஒரே நம்பகத்தன்மையுடையதாக இருக்கும் என அவர் நம்பினார். அவர் எழுதிய “நாம் இப்போது கண்டுகொண்டிருப்பது”, என்பது “பனிப்போரின் மடிவு மட்டுமல்ல; அல்லது பிந்தைய போர்க்கால வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து செல்வது போலல்லாமல், மாறாக இது வரலாற்றின் முடிவு ஆகும்: அதாவது, மனிதனின் சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியின் முடிவாகவும் மேற்கத்திய சுதந்திர ஜனநாயகமே மனித அரசமைப்பில் இறுதி வடிவாக உலகமயமாக்கப்படுத்துதலே ஆகும்.
ஆகவே, சில இடங்களில் துடைத்தெறிவதற்கான சண்டைகள் நடந்தாலும்   – சில தேசியவாத எழுச்சிகள் நிகழ்ந்தாலும், சில கம்யூனிச நாடுகள் சிதறாமல் இருந்தாலும்( வட கொரியா அல்லது கியூபா) மற்றும் சில பிரிவினைவாத அரசுகள் (ஈரான்) நிலை கொண்டிருந்தாலும் சந்தைகளும், தனிநபர் உரிமைகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும் மக்கள் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளும் பாதையாக விளங்கியது. இதன் விளைவாக மேற்குலகம் ரஷ்யா தனக்கு போட்டியாக காட்டிக்கொள்வதை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் அறிவார்ந்த தலைமையை தாங்கி நின்றது. சோவியத்தின் காலத்தில் தனது சித்தாந்தத்தை ரஷ்யா பகிரங்கமாக நெடுதூரம் விரிவான பரப்பளவில் பிரச்சாரம் மேற்கொண்டதை போன்று வாழ்விற்கான ஒரு முழுமையான வழியாக வழங்க ரஷ்யாவால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்திற்கு சவால் விடும் வகையில் அல்லது அதை உள்நாட்டு அளவில் பிரச்சினை கொடுக்க முடியாமல் போனது.
பந்தயபோக்குமாற்றம்
நெடுங்காலமாக ஃபுகயாமாவின் வாதங்கள் இடது சாரிகளின் எதிர்ப்புகளால்  மௌனியாக முடிந்தது. நவீன சுதந்திரமயமாக்கல் ஏகாதிபத்தியமாக இருந்தது. 2008 ம் ஆண்டின் வங்கிகளை மீட்டெடுக்கப்பட்டதற்கு தாமதமாக எழுந்த எதிர்ப்புகளால் கடந்த மூன்றாடுகளில் அதற்கு விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகளாவிய ஆக்கிரமிப்பு போராட்டங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல இடதுசாரி ஆய்வாளர்களை – பிரான்சின் தத்துவஞானி ஆலன் பேடியோ தனது The Rebirth of History மற்றும் Selma Milne ஆகிய தனது கட்டுரைகளில் – வரலாறு தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளதா என வியக்க வைக்கிறது, “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறார். “அந்த தளர்ந்து போன உலகத்தின் விலையின், தொடர்ச்சியா? தனது வெற்றிகரமான விரிவாக்குவதன் மூலம் ஏற்பட்ட உலகின்ஒரு சுகந்தரும் பிரச்சினையா? அவ்வுலகின் முடிவா? ஒரு மாற்றமான உலக உருவாக்கலின் ஆரம்பமா? அவர் இந்த 2011 ஆண்டின் எழுச்சிகளை ஒரு புதிய அரசியல் முறையை ஏற்படுத்தும் நிலையுடைய முக்கியமான நிகழ்வுகளாக கருதுகிறார். அதேபோல் மில்னேவைப் பொறுத்தவரை அமெரிக்காவினால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் அடைந்த தோல்வியினாலும் பொருளாதார வீழ்ச்சியும் “ஒருமுனை கொண்ட நிலை கடந்து போகும் காலம்”என்னும் நிலையை வெளிப்படுத்துகிறது.
அக்கட்டுரை வெளிவந்து 25 வருடங்கள் கழித்து மற்றும் செப்டம்பர் 11(அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்) நிகழ்ந்து  பதிமூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், ஃபுகுயாமாவின் கணிப்பை மறுபடியும் உற்று நோக்கும் காலம் வந்துள்ளது. “இந்நவீன காலத்தில் தாராளமயத்திற்கும் கம்யூனிசத்திற்கும் மாற்றமான ஒரு ஆளுமையுடைய ஓர் அரசியல் மாற்றத்தை இஸ்லாம் மட்டுமே வழங்குகிறது”. க்ரிமியாவை ரஷ்யா தன்னுடன் சேர்த்து கொண்டதை அடுத்து அது உக்ரைனின் மீது படையெடுப்பு நடத்துமோ என்ற பலரது அச்சம் மற்றும் இப்பிரச்சினை உருவானதை அடுத்து உலகளாவிய கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டது- இருந்தாலும் அரசியல் ஆய்வாளர்கள சிரியாவில் வெளிவரும் நிகழ்வுகள் பக்கம் தங்களது கவனங்களை வைத்த வண்ணம் இருக்கின்றனர். “The catastrophe now taking place in and Syria”என்ற கார்டியன் பத்திரிகையின் வெளியுறவு கட்டுரையாளர் தனது சமீபத்திய கட்டுரையில் சுட்டிக்காட்டிய “இப்போதைய பேரழிவானது சிரியா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்பதே அடிப்படையிலான ஒரு சவாலாகவும் மற்றும் தற்போதைய உலக நிலைக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாகவும் எழுதியுள்ளார், இதற்கான மூலகாரணமாக ஜிஹாதிய போராளிகள் “மேற்கத்திய மதிப்பு மற்றும் ஈடுபாடுகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதில் ஒற்றுமையாக உள்ளனர்.” முஸ்லிம் உலகம் மற்றும் அதனைத்தாண்டி ஏற்படும் விளைவுகளை பற்றி கூறுவதற்கு முன் அவர் ” உக்ரைனை மறந்து விடுங்கள், சிரியா தற்போதைய உலகத்தின் மிகபெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என குறிப்பிடுகிறார்.
என்வே ஒரு முழுமையான சித்தாந்தத்தையும் அதை எடுத்துரைக்கும் தூதுவர்களை கொண்ட இஸ்லாம் வெற்றி கொள்வது உண்மையான சவாலாக விளங்குகிறது. கம்யூனிசத்தின் சிவப்பு அச்சுறுத்தல் மற்றும் அடிப்படைவாத இடதுசாரிகளின் பயம் தற்போது இஸ்லாம் மற்றும் ஷரீ’ஆவின் பசுமை அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு கொடுங்கோல் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆயுதப்போராட்டத்தை தற்போது வேறு வகையான கண்ணாடி மூலம் இஸ்லாத்தின் மீது நாட்டம் கொண்டிருக்கும் போராட்டமாக காணப்படுவது கண்கூடாக தெரிகின்றது. சிரிய போராட்டத்திற்கு மேற்குலக முஸ்லிம்களிடையே ஆதரவு கிடைத்தி ருப்பதால் பண்டைய கால அமெரிக்க மெகாத்தீயத்தில்(McCarthyism) கடைபிடிக்கப்பட்டது போன்று முஸ்லிம்கள் பல நியாயமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை யுத்திகளுக்கு எதிர்கொள்ள நேரிட்டது; அதாவது அப்போது ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் கம்யூனிஸ்டுகள் எனவும் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டு அரசு அல்லது தனியார் நிறுவன குழு, கமிட்டி மற்றும் ஏஜென்சிகளால் கொடூரமான விசாரணை மற்றும் கேள்விகளுக்கு உட்படும் மக்களாக ஆளானார்கள்.
உஸ்மானிய கிலாஃபா வீழ்த்தப்பட்டதற்கு பின்னர் இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்கு  இயலாமல்  போனதால்  உலக சூழ்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்த இயலாத நிலைக்கு முஸ்லிம்கள்  ஆளாயினர். இதன் அடிப்படையில் புரூஸல்ஸில் மேற்கின் ஆதரவு தாங்கி வந்த கோரிக்கைகள் சிரிய முஸ்லிம்களால்  நிராகரிக்கப்பட்டது கருத்தியல் மாற்றத்திற்கான அறிகுறிகள் என சுட்டிக்காட்டுகிறது. ஏற்கனவே இருநூறு கோடி மக்களில் இஸ்லாமிய கொள்கை ஊடுருவியுள்ளது- சட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவகப்படுத்தி அதை மறுபடியும் செயல்படுத்தும் எண்ணத்தை கொண்டுள்ளனர், அது இப்போது நிலவிவரும் சிலர் மட்டுமே அனுபவிக்கும் வகையில் உள்ள மக்களே செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றமான ஒரு வரையறையை கொண்டிருக்கும் அது இப்போதுள்ள நிலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கி சுகம் அனுபவித்து வருபவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதவாறு இருக்கும்.
மீண்டும்  நாகரிகங்களின்மோதல்
“The Clash of Civilisations” என்ற நூலின் ஆசிரியர் சாமுவேல்  ஹண்டிங்டன் வருங்காலத்தில் உலக அரசியலின் அச்சாணி மேற்கு மற்றும் மேற்கு அல்லாத நாகரீகத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை ஒட்டியே அமைந்திருக்கும் என அறிவுறுத்தினார். அவர் மேற்கத்திய நாடுகள் அல்லாத நாகரீகங்கள் மேற்கின் பொதுவான நடவடிக்கைகளாக தாராளமய விழுமியங்களை ஓங்கி ஒலித்த வண்ணமும் அதனை ஏற்றக்கொள்ள வைக்க அரும்பாடுபடும் விதமாகவும் இருக்கும் என்பதை முன்வைத்தார். தங்களுடைய சொந்த விழுமியங்களை பாதுகாத்துக் கொள்ள நாட்டம் கொள்பவர்கள் அதற்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும் எனவும் அதை வெகுசில நாடுகள் மட்டுமே செய்ய முடியும் என அவர் வாதிட்டார். சிரிய முஸ்லிம்கள் ஏற்கெனவே மிக அதிக விலையை கொடுத்துள்ளனர் இந்த போராட்டம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படாதது மேற்கிற்கு மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.
இறுதியாக இப்போது நடைபெற்று வரும் க்ரீமியாவின் போராட்டம் மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு சவால் விடக்கூடியதாக இல்லை.  மாறாக முஸ்லிம் உலகின் இஸ்லாமிய நாட்டமானது சமூகத்திற்கு ஒரு மாற்று கண்ணோட்டத்தை முன்னிறுத்துகிறது. ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தத்தின் (Sykes-Picot agreement)மூலம் ஏற்படுத்தப்பட்ட செயற்கை எல்லைகளை களைந்தெறிவது, மேற்கின் நலன்களை அல்லாமல் முஸ்லிம்களின் நலன்களை மட்டுமே தங்களின் விருப்பமாக கொண்டுள்ள தலைமைத்துவம், நெறிமுறை, அரசியல் மற்றும் பொருளாதாரங்களை செயல்படுத்த ஓரு மாறுபட்ட சித்தாந்தம்;இதுவே நாகரீகங்ளுக்கு மத்தியில் போராட்டம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகும். மேலும் இது தற்போது நிலவிவரும் முதலாளித்துவத்தின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக நிலைக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் இருக்கிறது.
இந்த மாறுபட்ட நாகரீகம் 200 கோடி முஸ்லிம்களை ஒரு அரசின் கீழ் கொண்டுவரும் தலைமைத்துவத்தை அஃதாவது கிலாபத்தை மட்டும் நாடாது; மாறாக அதன் பின் இந்த அறிவார்ந்த தலைமைத்துவத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்காகவே நாடுகிறது.
“இஸ்லாத்தின் சக்கரமானது சுழன்று கொண்டிருக்கிறது, ஆகவே அது எங்கெல்லாம் சுழல்கிறதோ அதனுடன் சுழன்று கொள்ளுங்கள்.”       [தப்ரானி]

May 28, 2014

நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள் 'அல்ல , 'கிங் ஜோக்கர்கள்'!

முற்றுப் பெறாதது சாத்தானின் தூதே ... கஸ்தூரியை சுமந்தவர்கள் குப்ரிய
சாக்கடையில் சுகந்தம் தேடி புறண்டதனால் தூய இலட்சியங்கள் நாறிப்போக
இரத்தமும் சதைகளும் உணர்வுகளும் உரிமைகளும் அற்பமென்றாகி அவல ஊர்வலங்கள் இந்த உம்மாவின் வீதிகளில் வலம் வரத் தொடங்கின !

கலங்கரை விளக்குகள் குட்டிச் சுவர்களுக்குள் சுயநல வாழ்க்கை தொடரக்
கற்றுக்கொண்டதால் தான் அதற்காகவே காத்திருந்த ஓநாய்கள் சாவகாசமாக முற்றுகையிட்டு எம் நிலங்களிலேயே முகாமிட்டு விஷப்பற்களை பதிக்கத் தொடங்கின!


இன்று ஜாஹிலீய சத்துருக்களின் அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள் 'அல்ல , 'கிங் ஜோக்கர்கள்'!


அல்லாஹ்வின் அமானிதத்தை அலட்சியம் செய்துவிட்டு
அசத்திய' பொலிடிக்ஸில்' நவீனம் காண்கிறோம் ! இது அநாகரீக மேடையில் நாகரிக நடனமாம் !

'ஹராத்தில் ' மூழ்கி 'ஹலாலை ' தேடுவது அற்புதக்கலை என்பது அல்லாஹ்வுக்கே(சுப) தெரியாதது !!!

அவனின் தூதர் (ஸல் ) அவர்களுக்கோ புரியாதது !!!
அதிசயமான இந்த வஹிப்பிரதி, மக்கியா ? மதனியா? 'ஹிராவில்' தொடங்கி' ஹஜ்ஜதுல்விதாவரை' இல்லவே இல்லை. சத்தியத்தின் தூதுக்குத்தான்
பூர்த்தி நடந்து விட்டதே !! ஆனால் சாத்தானின் தூதுக்குத் தான் பூர்த்தியே இல்லையே !
ஒருவேளை இந்த நூற்றாண்டின்? சதிப்பிரதி 'சியோனிச 'அருளால் 'பென்டகனில் '
இறங்கி 'வைட் ஹவுஸ் ' மொழியால் அரேபிய நுழைந்திருக்கலாம் !!

May 9, 2014

King of Brunei Betrays Islam


News:
Last week Hassanal Bolkiah, the Sultan of Brunei unveiled plans to implement sharia law. He said, "With faith and gratitude to Allah the Almighty, I declare that tomorrow, Thursday 1 May 2014, will see the enforcement of sharia law phase one, to be followed by the other phases."
The plan was immediately denounced by the West and recently famous western personalities have started boycott properties in the West owned by the absolute monarch.
Comment:
Media reports clarified that Sharia law would only be limited to penal matters and that it would be implemented in three stages. The first stage includes: fines or jail terms for offences ranging from indecent behaviour to failure to attend Friday prayers. The second stage will include: Islamic punishments for theft and robbery, while the last stage will cover Islamic punishments for homosexuality and adultery. The edict also stated that the law would be applied to both Muslims and non-Muslims.
There are three main problems with this announcement. First and foremost, is that Islamic sharia cannot be restricted to mere penal codes. Islam is a complete way of life and the Islamic sharia is responsible for governing all aspects of life, which are more than just criminal matters i.e. it also encompasses social, economic, political, foreign affairs etc. To compartmentalise or secularise Islam is strictly forbidden. Allah سبحانه وتعالى mentions in the Quran:
وَمَن لَّمْ يَحْكُم بِمَا أنزَلَ اللّهُ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ
"Those who do not judge by what Allah has sent down, such people are Zalimoun (wrongdoers)."
(Al Maidah: 45)
وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللّهُ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ
"Those who do not judge by what Allah has sent down, such people are Fasiqoon (deviators)."
(Al Maidah: 47)
Incidentally, the Sultan of Brunei quoted these very same verses in the speech announcing the implementation of such punishments. Yet, he remained oblivious to the fact that these same verses also apply to rule by Islam in all aspects of life, and that includes the right of the Ummah to select their ruler and not someone who was imposed upon them by the British.
Second, Islam cannot be implemented in a piecemeal fashion, where the implementation of some rules is delayed. Picking and choosing between the implementation of Islamic rules is a grave sin. Allah سبحانه وتعالى says
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
"Do you, then, believe in one part of the Book and reject the other? What repayment will there be for any of you who do that except disgrace in this world? And on the Day of Rising, they will be returned to the harshest of punishments. Allah is not unaware of what you do."
(Al Baqara: 85)
Again, Hassanal Bolkiah quoted this verse, but did not choose to ponder on its meaning, as it fully applies on him.
Third, the secularisation of Islam and its gradual implementation will never bring dignity or honour to the Ummah, nor will it grant her peace and security. The only reason Hassanal Bolkiah and other rulers persist with the gradual implementation of Islam is because it allows them to mollify the sentiment of Muslims and maintain the status quo, which is to guard the riches of the Muslim lands for the Kafir colonialist powers.
Besides this, the piecemeal implementation of Islam will never yield the full realisation of Islamic sharia in Muslim lands as it is commonly understood by some. The Muslim Brotherhood in Egypt and the Taliban in Afghanistan have found this out to their own cost.
All of this gives relentless ammunition to the enemies of the Ummah to point fingers at Islam's inability to solve problems, which again is major exaggeration of reality. When the messenger of Allah صلى الله عليه وسلم established the first Islamic state in Madina nations embraced Islam, as they witnessed first-hand the complete implementation of Islam working in practice. This was followed by the Khulafah after him صلى الله عليه وسلم.
Hence, Muslims must redouble their efforts to re-establish the Khilafah Rashida, as the only means to fully realise the complete implementation of Islam, and also to silence the Kafir colonialist. For surely, when the Khilafah returns, the oppressed people in the West will leave in droves to embrace Islam causing their rulers immense distress and anguish.
Written for The Central Media Office of Hizb ut Tahrir by
Abu Hashem

Khilafah.com

Apr 28, 2014

தாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …?

தாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனையாகும். இவ் எண்ணக்கருவைப் பயன்படுத்தியே சாம்ராஜியங்கள் வீழ்த்தப்பட்டது. அந்த வகையில் உதுமானிய கிலாபாவின் வீழ்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கிய ஒரு அடிப்படைச் சிந்தனைதான் இந்த தாராண்மைவாதச் சிந்தனை. இன்று 21 ஆம் நூற்...றாண்டில் இஸ்லாமிய எழுச்சியை தடைசெய்யும் ஒரு கருவியாக மேற்கினால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக உள்ளது என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரக் கடமைப்பட்டுள்ளனர்.

Liberalism என்பது Freedom எனும் கவர்ச்சியான வார்த்தையினாலும்அழைக்கப்படும். இது சாதாரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு கிடைக்கும் “சுதந்திரம்” என்று பார்க்கும் ஒரு பார்வையாகவும் உள்ளது.

சுதந்திரம் என்பது.. மனிதன் தனது அடிமைத்தனத்தில் இருந்து கிடைக்கும் விடுதலையாகவும்; இராணுவ அடக்கு முறையில் இருந்து கிடைக்கும் சுதந்திரமாகவும் கருதினாலும், அரசியலில் மனிதன் தனக்கான “இறைமையை” அதிகார வர்க்கத்திற்கு வழங்கி மீண்டும் அடிமையாகிவிடுகிறான்.

உண்மையில் “இறைமை (Sovereignty)” என்பது மனிதனுக்கு இருக்க முடியாது. ஏன் எனில் அவன் பக்கச்சார்பான சட்டங்களை இயற்றுபவனாக இருக்கிறான். அதிலும் மனிதன் தமக்குத் தேவையான சட்டத்தை ஆக்குவதற்கு அதிகார வர்க்கத்திடம் உரிய ஆணையை ஒப்படைப்பதால் மனிதன் அடிப்படையில் சுரண்டலுக்குட்படுத்தப்படுகிறான். மீண்டும் அடிமையாக நடாத்தப்படுவதற்கு ஆணையை வழங்குகிறான்.

மாறாக இறையாண்மை என்பது மனிதனைப்படைத்த இறைவனுக்குரியாதாக இருக்கும் போதுதான் மனிதன் நீதியாக நடாத்தப்பட வழியேற்படுவதுடன் முதலாளித்துவ மற்றும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப்பட முடியும். அத்துடன் வல்ல நாயன் மாத்திரமே மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை நன்கறிந்தவனாகவும் பூரண அறிவுடையவனாகவும் இருக்கிறான்.

தாராண்மைவாதம் மதங்களுக்கு முற்றிலும் முறணான எண்ணக்கரு. ஏனெனில் அது மனிதன் மனிதனுக்கு முற்றிலும் கீழ்படியவேண்டும் என்று கோருவதுடன் இறைவனுக்கு கீழ்படிவதனை முற்றிலும் மறுக்கிறது. அத்துடன் மனிதன் மனோ இச்சையின்படி தான்தோன்றித்தனமாக தனிமனித சுதந்திரம் எனும் எண்ணக்கருவினூடகவும் மதச்சுதந்திரம் எனும் எண்ணக்கருவினூடாகவும் வாழவழிசமைக்கிறது. இது முற்றிலும் மதத்தை புறக்கணிக்கும் ஒரு வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்தும் சிந்தனையாகும்.

இதனாலேயே ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் இறைவன் விதித்தபடி ஒழுகிடுவதனை வெறுக்கிறது. அதனை விமர்சிக்கிறது. அவனை “கற்காலத்தவன்” எனக் குற்றம்சாட்டுகிறது. அத்துடன் இஸ்லாம் உலகில் மீள் எழச்சிபெற்றுவிடக் கூடாது என்பதனை தடுக்கும் மேற்கினது வாழ்வியல் ஒழுங்கினது ஒரு கருவியாக இன்று முஸ்லிம் நாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு “முஸ்லிமினது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை” மிக மோசமாக பாதிப்பதுடன் அவனை இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்தும் ஒரு கருவியாக தொழிற்படுகிறது.

இவ்வுண்மைகளை உணர்வோம்! இதன் பேராபத்தை உணர்வோம்! எமது இஸ்லாமிய அகீதாவையும் அதன்மீது நிறுவப்பட்டுள்ள வாழ்வொழுங்கையும் அறிந்தொழுக முற்படுவோம். இஸ்லாம் மீண்டும் மீள்எழுச்சிபெற உழைப்போம்! மேற்கினது சிந்தனைத் தாக்கத்தில் இருந்து எமது உம்மத்தை பாதுகாப்போம்!