Mar 8, 2013

எங்கள் நிலமும் இன்திபாதாவை நோக்கி...

யா யாஸீன்......................
உங்கள் தேசம் இரத்தத்தினால்
யஹுதிகளால் குளிப்பாட்டப்படுகிறது.
நிலத்தில் சிந்திய இரத்தத்தின் அச்சத்தில்
குழந்தைகள் கூட சிறுநீர் கழிக்க மறுக்கின்றன இங்கே.
யஹுதியின் “மர்கபா” டாங்கிகள்
உங்கள் வாசல் வரை வந்து விலாசம் தேடுகின்றன
எதிரி சாவகாசமாக எல்லையில் நின்று குண்டு போட
எம் எல்லைக்குள் அரபு தேச எஜமானரின் பூட்ஸ் லேஸ்
கூட உள் நுழைய அச்சப்படுகிறது.
எதிரி எங்கள் தலைகளை குறிவைத்தான்
எதிரி எங்கள் குரல்களை குறிவைத்தான்
இப்போது அவன் எங்கள் சுரங்க பாதைகளை
குறிவைக்க தயாராகிறான் மெதுவாக...
அராபியாவின் சோமாலியா தான் நாளைய காஸா.
கலஷ்னிகோவ் மடியில் கிடந்தும் அதனை
லோட் செய்ய இயலாத, பலமற்ற போராளிகளாக
நாங்கள் மாற்றப்பட போகிறோம்.
வறுமை, பசி, பஞ்சம், என காஸாவின் அடையாளங்களை
நாளை யூத மீடியாக்கள் படம் போட்டு காட்டும். ..
அப்போது மாட்டிறைச்சியும் பேரீச்சம் பழமும்
எம் அராபிய மன்னர்களால் அனுப்பி வைக்கப்படும்
எங்கள் துயர் துடைக்க. அதனை நாளை அரபு ஊடகங்கள் காட்டும்
பழகிப்போன இஸ்ரேலின் ஷெல் வீச்சு சத்தத்தில்
எங்கள் குழந்தைகள் கண்னயர்கின்றன.
நாங்கள் செய்வது ஜிஹாது இல்லை என கூப்பாடு போடும்
ஸலபிகளின் ஓலத்தில் எங்கள் குழந்தைகள்
மீண்டும் கண் முழிக்கின்றன....
யா ........யாஸீன்......
எங்களிற்கு இன்திபாதாவை கற்றுத் தந்த நீங்கள்
இடைவழியில் அதனை எம்மிடம் விட்டு சென்றுவிட்டீர்கள்.
ஆனாலும் நாம்...
போராடுகிறோம். இறைவனின் உதவியை மட்டும் நம்பி

Mar 6, 2013

சிரியாவுக்கு சவூதி 'வெப்பன் '!! எங்கிருந்து ? ஏன்?

அழிவை ஆரவணைக்க கேடயததை உடைத்தததோம்! அது அல்லாஹவின் வழிகாட்டலை அநியாயமாக காட்டி அஜமியியை புறந்தள்ளி அரபிக்கு முடிசூட்ட ஜாஹிலீய நியாயங்கலோடு மீண்டும் சுல்தானிசம் பிரசவமானது ! இங்கு சுயனலத்தை தவிர ஒன்றுமில்லை . இவர்கள் நசாராவின் நட்புறவில் யகூதியோடும் இங்கு ஆதிக்கத் தாண்டவம் ஆட முஸ்லிம் மட்டும் எப்போதும் புரந்தள்ளப் படுவான்! 

அபூ ஜாஹில்களுக்காக முஸ்லீம்கள்அழிக்கப்பட அனுப்பப்படுகிறது ' வெஸ்ட்'
வழங்கும் ' வெப்பன்' ஸவூதியின் அனுசாரணையில் சிரியா நோக்கி!! இது ஆசாத்தை அழிக்கபுரட்சிப் படைக்கா? கிலாஃபத்தை அழிக்க மீண்டுமொரு கிளர்ச்சிப் படைக்கா ? 'முஸ்தபா கமாள் இஸம்' அரபு 'சைக்' இஸம் ஆக இங்கும் பெயர் மாற்றம் பெற தமது ஆட்சிக் கதிரை காக்கப் பட இப்படி ஒரு 'பொலிடிக்ஸ்'!

முஸ்லிம் உம்மாவே ! புரிந்து கொள் பலஸ்தீனில் இஸ்ரேல் வாழ , ஸவூதியில் மன்னராட்சி வாழ , உலகில் அமெரிக்க அநியாயம் வாழ, ஈரானில் ஸியா வாழ இன்னும் மொத்தமாக உலகில் அநியாயம் வாழ இஸ்லாம் ஒரு சக்தி வாய்ந்த அரசியலாக உலகில் மாறாக் கூடாது ; அது தான் சிரியாமீது ஒரு ஓவரான அக்கறை!! 'கண்ணீர் விடும் மேட்கின்குள்ள நரிகளுடன் நம்ம கோட்டான் கூட்டம் 'பாட்நர்'போடும் நியாயம் இதுதான்.

கிலாஃபாவின் வீழ்ச்சியின் பின் .............

அந்த இறுதி மூச்சுக் கூட அனாதரவாக பிரிய ஒரு சம்பிரதாயமாக கூட கிலாஃபத் வீழ்ச்சி முஸ்லீம் உம்மத்தால் உணரப்படவில்லை . அவமானம் விடுதலையாக கருதப்பட மனித அடிமைத்துவம் சுதந்திரமாக காட்டப்பட்டது . அந்தக் காட்சிகளில் தாருள் இஸ்லாம் தேசிய துண்டுகளாக சிதற எம்மவர் சிலரே குப்ரின் பாதத்தில் செருப்பாக ஏறி அமர்ந்து அந்த 
அநீதிகளின் அதிகார நெருப்பை இஸ்லாமிய பூமிகளில் சாவகாசமாக அள்ளி இறைத்ததனர்.

முஸ்லீம் அல்லாஹ்வை தவிர்த்து வாழ்வியலில் வேறு கடவுள்களை நம்ப
திசை திருப்பப்பட்டான் . இஸ்லாம் மஸ்ஜித்துக்குள் முடங்கி சில குறிப்பிட்ட கடமைகளோடு
சுருங்க மார்க்கம் மதமாக்கப்பட்டது . முஸிலிமுக்கே இஸ்லாம் ஒரு விமர்சனப் பொருளானது.
ஹராத்தில் முஸ்லீம் ஹலாலை கண்டான் . ஹலாலை சூழ்நிலைகளுக்காக ஹராமும் ஆக்கினான் . குப்ரின் திருப்திக்கு இஸ்லாத்தை திருப்ப நெகிழும் எனும் எலாஸ்டிக் போட்டுகுப்ர் ஓகே சொல்லும் வரை இழுத்ததுச் சென்றான் .

வஹி ஓசை நயம் மிக்க ஓதும் பொருளானது மற்றும் படி பரணில் கண்ணியமாக அமர்ந்து கொண்டது. எதிரிகள் முஸ்லிம்களை தம் விருப்பப்படி ஆண்டார்கள்,ஆழித்தார்கள், அவமதித்தார்கள். நாம் அரசியல் அனாதையானோம் எனும் சிந்தனை வரும் போதெல்லாம் ஒரு தேசிய முட்டையை காட்டி அதில் மயிர் பிடுங்க சிறுபான்மை பிக்ஹ்
எனும் நாச தீர்ப்புகளை நேச மனப்பான்மை கொண்டு உளமாக்கள் தந்தனர். இந்த புதுப்புது அர்த்தங்களில் பாஸிசப் பூமிகளில் சகஜ வாழ்வாம்!?

இப்போது ஹிஜாப்பை நீக்க குப்ர் சொன்னால் அவுரத்தை மறைக்க சேறு
பூச உளமாக்கள் சொல்வார்களோ!? என முஸ்லிம் சகோதரிகள் இலங்கையில் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். பார்மவை பேசிய ஃபேஸ்புக்கில் நாமும் காட்சியாவோமோ!? எனும் அளவுக்கு அரசியல் அனாதை தனம் தொடர நாளை கிலாஃபாவின் மீள் வருகையில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஒரு சிறு நம்பிக்கையில் முஸ்லிம் வாழ்கிறான்.

ஒரு இஸ்லாமிய அரசின் பாதையிலா சிரியா? (இது மேட்கின் அச்சம் பற்றிய அவர்களின் மனம் திறந்த வாக்கு மூலங்கள்.

"இஸ்லாமிய சரீயா மீதான சிரியாவின் எதிர்பார்ப்பு ஜனநாயக நிலைப்பின் மீது பாரிய அச்சுறுத்தலாகும்." இவ்வாறு கூறுவது 30 வருடம் அமெரிக்க பாதுகாப்பு துறையில் பணியாற்றியவரும் ,வெளிநாட்டுக் கொள்கை மற்றும்,தேசிய பாதுகாப்பு ஆய்வாளருமான 'பிரேட்கேற்றிச் ' என்பவராவார். அமெரிக்காவின் 'த வோசிங்டன் டைம்ஸ் " பத்திரிகையில் கடந்த ஜனவரி 2ம் திகதி வெளியான இவரின் கட்டுரை இன்னும் பல முக்கிய தகவல்களை கொண்டதாக அமைந்துள்ளது. 


20 மாதங்களுக்கு மேல் தொடரும் இரண்டு பண்டைய எதிரிகளுக்கு இடையிலான இந்த மோதல் (ஸியா , சுன்ணி ) தனது இறுதி நிலையில் எவ்வாறான நிலையை அடையும் எனும் இவரது கணிப்பில் 1971 ம் ஆண்டில் இருந்து ஆண்டு வரும் கொடிய 'பாதிஸ்ட் ' ஆட்சியான'அசாத்' குடும்ப ஆட்சி ஹஃபீஸ் மற்றும் , அவரது மகன் பஸர் ஆகியோரால் கொடும் பிடியாக
தொடர்ந்தததை சுட்டிக் காட்டுவதோடு 22.5 மில்லியன் மக்கள் தொகையில் 75% மான சுன்னிகளை இதுவரை அடக்கி ஆண்ட ஸியா ஆட்சியின் முற்றுப் புள்ளியின் பின் எவ்வாறான சிரியா அங்கு உருவாகும்? எனும் மேட்கின் அச்சத்தை பற்றியே இவர் மேட்கூறிய கருத்தை கூறியுள்ளார்.

அதில் மேலும் அவர் குறிப்பிடுவதாவது " அரேபிய புரட்சிகளின் இலகு அறுவடைகலான எகிப்து , துனீசியா , லிபியா, போன்ற இஸ்லாமிய ஜனநாயக மாதிரியின் நீண்ட தூர எதிர்பார்ப்பு இஸ்லாமிய ஸரீயா என்பதையே தேர்தல் முடிவுகள் எதுத்துக் காட்டுவது கூட ,மேட்கு மற்றும் ஒபாமா , மற்றும் ஹிலாறி கிளிங்டன் ஆகியோரது வஸந்த எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைக்கும் எதிர்கால நடப்பு நோக்கிய நிகழ்கால ஆதாரமாகவே பார்க்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Mar 4, 2013

எதிர்காலக் கிலாஃபத்தின் இராணுவம்


உலகிலேயே முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட உறுதியான இராணுவத்தைக் கொண்டதாக கிலாஃபத் ஆட்சி இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி பி 1453 இல் இஸ்தான்புல் ஐக் கைப்பற்றிய பீரங்கிப் படை இதற்கு முன்னுதாரணமாகும். ஐரோப்பிய நாடுகள் அன்று கிலாஃபத்தின் தீவிர சக்திக்கும் பொருளாதார வல்லமைக்கும் பயந்தன. இஸ்லாமிய இராணுவ வரலாற்றில் காலித் பின் வலீத் (ரலி), அமர் பின் அல்-அஸ் (ரலி), தாரிக் பின் சியாத் (ரலி), சலாஹுதீன் அயுபி, சுல்தான் முஹம்மது அல் பதிஹ் (இஸ்தான்புல் ஐக் கைப்பற்றியவர்) ஆகிய தலைவர்களும் இராணுவ தளபதிகளும் இஸ்லாத்துக்காக பணியாற்றி முஸ்லிம் உம்மாஹ்விற்கு கௌரவத்தையும் கண்ணியத்தையும் உண்டாக்கினார்கள். 16 ஆம் நூற்றாண்டில் உத்மானி கிலாபா பலம் பொருந்திய இராணுவத்தை தன்வசம் கொண்டிருந்ததோடு, கருங்கடல் "உத்மானிய வாவி" எனக் கூறுமளவுக்கு கலீபாவின் சாம்ராச்சியம் விரிந்திருந்தது. எனினும், 1924 இல் கிலாஃபத்தின் வீழ்ச்சியின் பின்னர் முஸ்லிம் உலகம் எந்த இராணுவ முன்னற்றத்தையும் காணவில்லை. மேலும் மேற்கூறிய தலைவர்களைப் போல் தலைவர்களை உருவாக்கவுமில்லை. 

இன்றைய முஸ்லிம் உலகம் கிலாஃபத்தின் நிழலில் வாழ்ந்தாலும் முன்னையோரின் வல்லமையையும் கௌரவத்தையும் இன்று காண முடியவில்லை. இன்ஷா அல்லாஹ், முஸ்லிம் உலகம் மீண்டும் உதயமாகி முஸ்லிம் உம்மாஹ்வின் கேந்திரமாக அமைவதற்கு ஒரே வழி, கிலாஃபத்தை நிலை நாட்டுவதன் மூலமேயாகும்

முஸ்லிம் உலகம் பலவீனமானது என்பதோடு இன்று உலகில் பலம் வாய்ந்த சக்திகளுக்கு சவாலாக முடியாது என்று பலரும் கருதுகிறார்கள். சோர்வும் ஊழலும் உள்ள அரசாங்கமும் நலிவடைந்த ஆட்சியும் இருந்தாலும், பாகிஸ்தான், துருக்கி, ஈரான், இந்தோனேஷியா போன்ற நாடுகள் இராணுவத்தில் சில முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுள்ளன.

முஸ்லிம் நாடுகளிடையே உள்ள இராணுவ தொழில்நுட்பத்தையும் உட்கட்டமைப்பையும் பயன்படுத்தி தனது செயல்திறனை வலுப்படுத்த கிலாஃபா கொள்கைகளை ஸ்தாபிக்கும்.

பாகிஸ்தான் அதன் இராணுவ பலத்தை பின்வருமாறு காட்டுகிறது,

· அல் காலித் அல் சாரார் யுத்த தாங்கிகள் (H I T )

· J F பல நோக்கு யுத்த விமானம் (இது சீனாவுடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டது)

· MFI-17 முசாக் பயிற்சி விமானம்

· ஆளில்லா விமானம்

· ஏவுகணை

· உலகில் 6 வது தரைப் படை

துருக்கியின் இராணுவ உற்பத்திகள்

· அனுமதிப்பத்திரம் பெற்ற யுத்த விமானம் (TAI)

· யுத்த விமான உதிரிப்பாகங்கள்

· ஆளில்லா விமானம்

· யுத்தக் கப்பல்

· இராணுவ வாகனங்கள்

· உலகில் 7 வது தரைப்படை

· NATO வில் 2வது பெரிய தரைப் படை

· 2020 இல் ஜெட் யுத்த விமானங்களை சுயமாக தயாரிக்கவுள்ளது.


ஈரானின் உற்பத்திகள்

· ராடார் தொழில்நுட்பம்

· தனி இருக்கை யுத்த விமானம்

· ஏவுகணை முறைகள்

இந்தோனேஷியாவின் இராணுவ உற்பத்திகள்

· கணணி யுத்த விமான அமைப்பு

· போர்த் தளபாடங்களும் வாகனங்களும்


கிலாஃபத் அதன் திறமையையும் பாதுகாப்பையும் தொடங்க மேற்குறிப்பிட்ட அபிவிருத்திகள் கட்டி எழுப்பப் பட வேண்டும்.

முஸ்லிம் உலகின் சில இடங்கள் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடங்களாகும். உதாரணமாக, பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் விமான மற்றும் கடற்படைத் தளங்களைக் குறிப்பிடலாம். இதனால் தான் காலனித்துவ சக்திகள் முஸ்லிம் உலகை நசுக்கி அதில் லாபத்தையும் வெற்றியையும் கண்டுள்ளன. உத்மானிய கிலாபத்தில் போச்போரோஸ் நீரினையை அதன் கட்டுப்பாட்டிலே வைத்திருந்ததோடு அதன் அனுமதியுடனே வேறு நாடுகள் கடக்க வேண்டியிருந்தது; கிலாபா ஒருபோதும் தனது நிலத்தையோ நீரினைகளையோ கடற்தலங்களையோ எதிராளிக்கு விட்டுக்கொடுக்கவில்லை.

எதிர்கால கிலாஃபத்தின் இராணுவக் கொள்கைகள் பின்வரும் விடயங்களைக் கொண்டிருக்கும்,

· தற்போதைய இராணுவ உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல்

· வெளிச்சக்திகளால் இராணுவ பலத்தை முன்னேற்றாது சுய பலத்தால் முன்னேற்றுதல்

· பொறியியலாளர்கள், விமானிகள், வைத்தியர்கள் போன்ற நிபுணத்தவர்களை உருவாக்கும் நிறுவனங்களை அபிவிருத்தி செய்தல்

· இராணுவ அமைப்பை திறம்பட அமைத்தல்

மேற்குறிப்பிட்ட கொள்கைகள் கிலாஃபத்தின் உறுதியான இராணுவ பலத்திற்கு வழிவகுக்கும். முஸ்லிம் உலகில் உள்ள இயற்கை வளங்களும் மனித சக்தியும் கிலாபாத்திற்கு சர்வ வியாபித்த பலத்தைக் கொடுக்கும்.

பின்வரும் காரணிகள் கிலாபாத்தின் வளர்ச்சிக்கு சாதகமாயிருக்கும்,

· உலகின் மிகப்பெரிய இராணுவம்

· பரந்த நிலப்பரப்பு

· கேந்திர முக்கியத்திவம் பெற்ற விமான, கடற் தளங்கள் மற்றும் நீரினைகளைக் கொண்டுள்ளமை

· பாரிய இயற்கை வளம்

கிலாஃபத்திற்கு இராணுவ அபிவிருத்தியைப் பெற காலம் எடுக்கும், எப்படி இருப்பினும், திறமிக்க இராணுவ பலத்தைப் பெற ஒழுங்கு முறை அவசியம். சக்தி வாய்ந்த உலக நாடுகள் அதன் இராணுவ பலத்தைப் பெற பல தசாப்தங்கள் ஆய்வை மேற்கொண்டு முன்னேறின.

கிலாஃபத் உலகின் பலம்மிக்க இராணுவத்தை கொண்டிருப்பது தமது எல்லைக்குள்ளும் வெளியிலும் பாதுகாப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதுடன் கிலாபத்தின் இராணுவ வல்லுமை காலனித்துவச் சூழ்ச்சியில் முஸ்லிம் உலகம் இன்று சிக்கியிருப்பது போல் எதிர்காலத்தில் சிக்காமல் இருப்பதற்கு முக்கிய பங்களிக்கும். கிலாஃபத் முஹம்மது பின் காசிம் போன்றோரை உருவாக்குவதுடன் அத்தகையோர் இஸ்லாத்திற்காகவும் கிலாஃபத்திற்காகவும் பணியாற்ற வழி செய்யும். கிலாஃபத் மனிதகுலத்திற்கு ஒரு கலங்கரை விளக்காக இருப்பதுடன் அனைத்து தேசங்களுக்கும் ஒரு நல்லுதாரணமாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

எந்த ஒரு சுதந்திர நாடும் தனது எல்லைகளை வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது அதன் ஸ்திரத்தன்மைக்கு அவசியமாகும். எந்த ஒரு நாடு தனது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கிறதோ அது தனது உள்நாட்டு அபிவிருத்தி மற்றும் சுபீட்சம் குறித்து கவனம் செலுத்த முடிவதுடன் வெளிநாட்டு இடையூறுகள் குறித்து அஞ்சத்தேவையில்லை. வலிமைமிக்க இராணுவ அபிவிருத்தியைப் பெறுவதன் மூலமே இவ்இலக்கை அடைய முடியும்.

கடந்த கால வரலாற்றை நோக்கின் நாடுகள், குலங்கள், சாம்ராஜ்யங்கள் என்பன அவற்றைப் பாதுகாக்கவும் இராணுவ பலத்தைப் பேணவும் பலவகையான ஆயுத உற்பத்திகளையும் தொழில் நுட்பங்களையும் உருவாக்கியதைக் காணலாம். உலக வரலாற்றை நோக்கின் அனைத்து வல்லரசுகளும் தத்தமக்கென படைப்பலத்தையும் நவீன ஆயுதங்களையும் கையாண்டு எதிரிகளைத் தாக்கின. உரோம சாம்ராஜ்யம், பிரித்தானிய சாம்ராஜ்யம், ஐக்கிய அமெரிக்கா, போனபாட்டின் பிரான்ஸ், நாசி ஜெர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்தியம், சோவியத் யூனியன், சீனா அதேபோன்று கிலாபத்தும் கூட இராணுவ பலத்தினையே உருவாக்கின.

உலகின் நவீன முதிர்ச்சியடைந்த இராணுவ அபிவிருத்தியைக் கொண்டுள்ள தேசங்கள் வல்லரசுகளாக இருப்பது ஆச்சரியமான விடயமல்ல; இவ்வல்லரசுகள் தமது சுய லாபத்துக்காக சர்வதேச அமைப்புமுறைகளைக் கையாள்கின்றன. ஆனால் நம் முஸ்லிம் உலகை நோக்கின், அவை தமது அடிப்படை இராணுவ தேவைகளுக்குக் கூட மேற்குலக நாடுகளையே தங்கியுள்ளன. இதனாலேயே முஸ்லிம் தலைவர்கள் சுதந்திரமாக செயற்பட இயலாத கைப்பாவைகளாக உள்ளனர்.

அரபு வசந்தத்தின் நிகழ்வுகள், முஸ்லிம் உம்மாஹ் இன்றுள்ள நடைமுறைகளை மாற்றி வெளிநாற்றுத் தலையீடுகளைத் தகர்த்து எல்லைகளைப் பாதுகாத்து தசாப்தங்களாக இருந்து வரும் அந்நிய சக்திகளை உடைத்தெறிய எழுந்துள்ளது என்பது தெளிவு..

Mar 2, 2013

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 89 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை

முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா (இஸ்லாமிய அரசு) ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம்3) ம் தேதியில் முஸ்தபா கமால் அதா துர்க்கினால் துருக்கிய தலைநகரான இஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு ஹிஜ்ரி 1431 ரஜப் 28 உடன் 87 வருடங்கள் கடந்துவிட்டன. 1924 மார்ச் 3 ம் தேதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாஃபத் உலகை விட்டும் அழிக்கபட்டது. இறுதியாக துருக்கியில் இஸ்லாமியசாம் ராஜியதின் கலீஃபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீஃபா அப்துல் மஜீத். இவர் கிலாஃபா அழிக்கபட்டு ஒரு மணி அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் .இந்த அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற துரோகி.முஸ்லிம் உம்மா அனாதையானது; மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது; முஸ்லிம் உம்மா துடி துடித்தது .அரசியல் அனாதையானது .ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்கவில்லை. மறுகணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறப்பட்டது. பயணம் மிகவும் நீண்டது. இன்றும் தொடர்கின்றது .

கிலாஃபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும்,முஸ்லிம் உலகிலே அவர்களின் கைப்பாவையான ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரிய அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டு மொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உலகம் பொருளாதார பலமற்றதாக, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிறுசிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மா இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும்,கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல்,பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசங்களாக மாறிவிட்டது.

 முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குஃப்பார்களின் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள்,பிரான்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள்,அமெரிக்கர்கள், செர்பியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதி முகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும்,படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண் முன் பலஸ்தீனம்,ஈராக்,ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா,பொஸ்னியா,அரிட்ரியா போன்ற பூமிகளின் கொடூரமான நிலவரத்தி னைநிலைநிறுத்திப் பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தேசியவாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது. தேசியவாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உம்மத்தின் முதுகில் ஏறி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. அழிக்கபட்ட கிலாஃபா உலகில் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை முஸ்லிம் உம்மா கட்டியம் கூறுகிறது.

‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” ஆல இம்றான்: 193

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய அரசு எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3) முஸ்தபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாஃபா வீழ்த்தப்பட்ட இந்த காலகட்டத்தில் கிலாஃபா அரசு பலகீனமடைந்திருந்ததுடன் சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப் போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத்தொடங்கியிருந்தபோது முஸ்லிம்களின் அடிப்படையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாஃபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாச்சாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலைகள்,வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் தந்திரமாக கல்வியியல் விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாகசெலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.

வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிபரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாஃபத்தின் கட்டமைப்பும் அதன் அஸ்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. காபிர்களுக்கு தமது சிந்தனைகளை இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கிலாஃபத்தின் இந்த வீழ்ச்சியில் குஃப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாஃபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குஃப்ர் அரசுகள் கிலாஃபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.

அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர்.பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்தினையும், கிலாஃபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள்ஒன்று திரண்டார்கள். அவர்கள் ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிபரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை செலுத்த யோசித்தனர்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரியதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் வீழ்ச்சியும் நடந்தேறியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகாரப் பூர்வமாக கிலாஃபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி,மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாஃபத்திற்கெதிரான இந்த சதி முயற்சிக்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிஃப் ஹசைன்-( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தான்
இவ்வாறு கிலாஃபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காஃபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாஃபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லிம்களை கடுமையாக தண்டித்தனர்.

இவ்வாறாக காஃபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்திய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைக்கல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான் . (4:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமதுபாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். (3:28)


விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம். (60:1)

விசுவாசிகளே! உங்களையன்றி இறைநிராகரிப்போரை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும்,நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும். (3:118)

செத்துப் போன கிளிக்கு சிங்காரித்து என்ன பயன் ?

மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் முற்றுப்புள்ளியை முல்லைத்தீவின் நந்திக்கடல் களப்பில் இட்டதன் பின்னர் ஒரு தொடர்ச்சியான விசாரணைக்கான அழுத்தத்தை ஐநாவின் மனித உரிமை கமிஷன் இலங்கை அரசு மீது இட்டுக்கொண்டு வருகின்றது .

ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை அரச படைகள் நடந்து கொண்ட விதம் சரியா தவறா ? என்றவிடயம் ஒரு பக்கம் இருக்க யுத்தக் குற்றம் என்ற தூண்டிலில் சர்வதேச சட்டம் என்ற இரையை இட்டு, விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதை விழுங்க வைத்து விசாரணை எனும் ஆப்படித்து தீர்ப்பு எனும் சதிக்கு விதி என்ற பெயரிட்டு விடுவதா ? அல்லது ஆதார அச்சப்படுத்தல் மூலம் ஒரு இராஜ தந்திர கட்டுப்பாட்டில் இலங்கை அரசை கொண்டு வந்து ஒரு நாகரீக அடிமைத்துவ உழைப்பை இலங்கை அரசிடமிருந்து ஐ .நா சபை எதிர்பார்க்கிறதா ? இந்தக் கேள்விகள் சிலருக்கு அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் ஐ .நா .சபையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இப்படி இரு வினாக்களை கேட்டுவிட்டே விடயத்துக்கு வரவேண்டியுள்ளது .

சுருக்கமாக சொன்னால் யாருக்காகவோ ஒரு குறித்த 'அசைன்மெண்டை ' நிறைவேற்ற துள்ளியமான திட்டங்களோடு ஐ .நா சபை துடிக்கின்றது என்பதுதான் நான் சொல்லவரும் உண்மை . அந்தவகையில் யார் இந்த ஐ .நா சபை ? எனும் வினாவுக்கு நீங்கள் விடையை தெரிந்து கொண்டால் இந்த ஐ .நாவின் விசாரணை என்ற வண்ட வாளம் உண்மை என்ற தண்டவாளத்தில் ஏறி விடும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் சர்வதேச அமைதிக்காக அமைக்கப் பட்ட பொது நிறுவனம் என்பது தான் அனேகமாக எல்லோரும் அறிந்தது .ஆனால் நீதி ,நியாயம் என்ற போர்வையினில் அநீதி மறைக்கப்பட்ட அதன் அதர்ம வடிவம் பற்றி உலகம் ஏமாந்து போனது என்பது புரிந்தும் புரியப்படாத ஒரு உண்மையாகும் .

' ஹிட்லர் ' அழிந்தாலும் 'ஹிட்லரிசத்தை கூட்டாக வாழவைப்போம் ' என்ற ஏகாதிபத்திய விதியை கௌரவ தோற்றத்தில் சர்வதேச மயப்படுத்தல் என்பதற்கு துணை போனதுதான் ஐ .நா இதுவரை செய்துள்ளது . அந்த வகையில் இந்த ஐ .நா. சபைக்கு நான் கொடுக்கும் வரைவிலக்கணம் இது தான் .

'ஏகாதிபத்திய அதர்மத்தில் உலகை பங்காளியாக்கி அநியாயத்தை ,நியாய வடிவத்தில் காட்சிப்படுத்தி சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் சம்பவங்களை தனக்கு சாதகமாக காட்டி தனக்கான இலாபங்களை அறுவடை செய்ய ஏகாதிபத்தியத்தால் அமைக்கப் பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் ஐ .நா .சபை ' என்று கூற முடியும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் வல்லரசு கோட்பாடு வலுப்பெற்ற நிலையில் இந்த ஐ .நாவை மீறிய சக்திகளாக நேட்டோ ,மற்றும் வார்சோ ஒப்பந்தங்கள் பனிப்போரின் கொடும் பிடிக்குள் உலகை ஆட்டுவித்த போது 'வீட்டோ 'என்ற மகுடித்தாளத்தில் ஆடி வல்லரசுகளின் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுதல் என்பது தான் ஐ.நாவின் வரலாறு . அதாவது ஊருக்கு உபதேசம் என்பதும் அது சிலருக்கில்லை என்பதே ! அந்த வகையில் கொள்கையளவில் ஐ .நா .சபை கையாலாகாத தோல்வி நிறுவன வடிவம் .

அணு ஆயுதங்கள் , இரசாயன ஆயுதங்கள் , பயலோஜிகள் ஆயுதங்கள் என வகை தொகையற்று சிலர் தயாரிப்பார்கள் பரீட்சிப்பார்கள் ,பயன் படுத்துவார்கள் ! இன்னும் சிலர் அது பற்றி மூச்சு விடவும் கூடாது !? தடை நிபந்தனைகள், குற்றங்கள் யாருக்காக பிரயோகிக்க வேண்டும் என்பதைக்கூட இந்த வல்லரசுகளே தீர்மானிக்குமாம் !

முதலாளித்துவம் , கம்யூனிசம் என்ற இரு கொடும் பேய்களின் பொண்டாட்டியாய் இந்த ஐ .நா பணியாற்றினாலும் அதன் உண்மையான விசுவாசம் என்னவோ இந்த முதலாளித்துவத்தோடு தான் ! இந்த உண்மை உலகத்திற்கு தெளிவாக தெரிந்தது கம்பியூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் தான் .

அந்த வகையில் யுத்தக் குற்றம் ,மனித உரிமை மீறல் என்பன உலகில் இலங்கையில் மட்டுமா கண்ணுக்கு தெரிந்த விடயம் !? வியட்நாமில் , பலஸ்தீனில் ,ஆப்கானில் ,ஈராக்கில் ,ஏன் மியன்மாரில் ,இந்தியாவில் என நீண்டு செல்லும் பட்டியலில் இலங்கை குறிப்பாக குறிவைக்கப் பட்டுள்ளது தமிழர் நலனுக்காக என்று யாரும் நினைத்தால் அப்படியான ஏமாளிகள் கணக்கில் ஐ .நா .சபை இன்னும் உயிர் வாழ்கின்றது .

உங்கள் சிந்தனைக்கு சில வரிகள் .

கடந்த 12ம் திகதி 'பராக் ஒபாமா 'அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வாகிய பின் முதல் தடவையாக பேசியபோது பின்வரும் கருத்தை வெளியிட்டார் . இந்தக் கருத்தின் பின்னால் உள்ள அரசியலை சற்று அலச வேண்டிய தேவை உள்ளது .

"ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 66 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களில் 34 ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள். பின்னர் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு அங்கு தீவிரவாதிகளுடனான (அமெரிக்க) போர் ஆண்டு இறுதியில் (2013 டிசம்பரில் ) முற்றிலும் நிறுத்தப்படும்." (அப்படியானால் தாலிபான் இல்லாமல் போய் விடுமா ? அல் காய்தா அழிந்து விடுமா ? இந்த வினாக்களை மையப்படுத்தி சில ஆழமான பார்வை எமக்கு அவசியமானது .

'புஸ் ' அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த போதே ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்டது . 'ஒசாமாவை டார்கெட் ' பண்ணிய யுத்தம் ஒபாமாவின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது அப்பணியில் ஒரு அசத்தல் ஹீரோவாக ('ஒசாமா 'அழிப்பு கிளைமேக்ஸ் காட்சிகளை கடந்த வருடம் U .S சீல் கொமாண்டோக்கள் மூலமாக காட்சிப் படுத்தியதன் பின்னர்) அமெரிக்கர்கள் மத்தியில் வலம் வந்தார் .

இப்போது தெற்காசிய கள நிலவரத்தில் ஆப்கானை மையப்படுத்திய பொருளாதார ஒப்பந்தங்கள் யாவும் அமெரிக்க மற்றும் அவர்கள் சார்ந்த கூட்டு அமைப்புகளிடம் ஏறத்தாள வந்து விட்டன . ஆப்கானில் தனது இராணுவ சேவைகள் தொடர்பான பகிர்வு பற்றிய அரசியல் நகர்வுகளுக்குள் தகுதியான படை திரட்டளுக்கு தெற்காசிய வளைய நாடுகளை நிர்ணயிப்பது சிறந்த முடிவாக இருக்கும் என அமேரிக்கா எதிர்பார்க்கலாம் .'ப்ளேக் வாட்டர் ' போன்ற கூலிப்படைகளை விட குறைந்த செலவில் தற்போது போர் முடிந்த நிலையில் சம்பளம் ,பராமரிப்பு செலவு என்ற அளவில் அல்லாடிக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாட்டு இராணுவங்கள் சில நேரம் அந்த இடத்தை நிரப்ப தகுதியானவை எனும் கடைக்கண் பார்வையும் அமெரிக்காவுக்கு உண்டு .

இத்தகு கருத்துக்களை வலுப்படுத்தும் விதமாக இலங்கை தொடர்பில் ஐ .நாவின் பிரசன்னம் சற்று அதிகமாகவே இப்போது உள்ளது . அதாவது 'யானை வருவதற்கான மணியோசை ஆக இன்றைய நிலையை கருத முடியும் . இத்தகு நிலையை தவிர்க்க சீனா ,இந்தியா என்பன தமக்கு உதவும் என இலங்கை அரசு கருதினாலும் சூட்சுமமாக ' ஆப்கானுக்கு படை அனுப்புவது குறித்தும் சிந்திப்போம் ' என தம் மீது வைக்க இருக்கும் 'செக்' இலிருந்து தப்பிக்க அமெரிக்க எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளவும் இலங்கையின் ஆளும் தரப்பு கருத்துக்களை வெளியிடுகின்றது .

" புகை அடித்தாவது கனிய வைப்போம் என்பது அமெரிக்க முடிவு" ,"தவிர்க்க முடியா விட்டால் நாமாகவே நழுவி உங்கள் கைகளில் விழுவோம்" என்பது இலங்கையின் அண்மைய சூட்சும பதில்கள் . பொறுத்திருந்து பார்ப்போம் . இலங்கையில் அமைக்கப் படவுள்ள இந்திய அனல் மின் நிலையம் ,மற்றும் பெருந் தெருக்கள் தொடங்கி , புதிய சுதந்திர வர்த்தக வளைய நிறுவலுக்கான சீன முதலீடுகளை மீறி .அமெரிக்க சூத்திரங்கள் இலங்கையில் நிறுவப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் .

இலங்கையின் 'ஹலால் விவகாரம் 'ஒரு பார்வை .

இலங்கையின் பொது பல சேனா எனும் பௌத்த மதவாத அமைப்பின் அண்மைய நகர்வு பொருட்களுக்கு 'ஹலால் ' சான்றிதழ் வழங்கும் முறையை நீக்கக் கோரிய முஸ்லீம் எதிர்ப்பு வடிவமாகும் .நடப்பு நிலவரப்படி' ஹலால் ' சான்றிதழ் வழங்கும் விவகாரத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முஸ்லீம்கள் இதோ ஓரளவு நல்ல அறிகுறி குறித்த விடயத்தில் கிடைத்து விட்ட திருப்தியோடு 'அல்ஹம்துலில்லாஹ் ' சொன்னதையும் நாங்கள் அவதானிக்கிறோம் .

பொது பல சேனா உண்மையில் முஸ்லீம்களை குறிவைக்கவில்லை ;அவர்கள் குறிவைத்திருப்பது இன்றைய இலங்கை வாழ் முஸ்லீம்களின் வாழ்வில் அமுல் நடாத்தப் படும் மிகக் குறைந்தபட்ச இஸ்லாமிய வாழ்வின் எதிர்பார்ப்புகள் மீதே என்றால் அது மிகையான கருத்தல்ல .புனித பூமி சிந்தனா வாதத்தின் எதிரொலியாக மஸ்ஜித்கள் ,சாவியாக்கள் ,குறிவைக்கப்பட்டது , முஸ்லீம்களின் வியாபாரத் தளங்கள் ,வியாபார நடவடிக்கைகள் மீதான அச்சமூட்டும் நச்சுக் கருத்துக்களை பௌத்த சமூகத்திடம் பரப்பப்பட்டது ,இப்படி பல்வேறு விடயங்களை குறிப்பிட முடியும் .
முஸ்லீம்கள் எல்லோரும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அது 'குப்ரிய ' அதிகாரங்களின் கீழான முஸ்லிமின் வாழ்வு இவ்வாறுதான் அமையும் என்பது வெளிப்படையான உண்மை .'குப்ர் ' எங்களை எதிர்ப்பதற்கான காரணம் ஒன்றே ஓன்று தான் ;அது இஸ்லாத்தை வாழ்வியலாக முஸ்லீம் எதிர்பார்க்கக் கூடாது என்பதேயாகும் .முழு உலகிலும் முஸ்லீம் உம்மத்தின் நிலை இது தான் . அது முஸ்லீம் பெரும்பான்மை நிலமாக இருக்கட்டும் ,அல்லது சிறுபான்மை நிலமாக இருக்கட்டும் எங்கும் இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு தீர்வளித்தல் என்ற விடயத்தில் தடைகள் மற்றும் பல்வேறு முட்டுக் கட்டைகள் தொடர்கின்றன .
இஸ்லாத்தால் ஆளப்பட்டால் மாத்திரமே இஸ்லாம் வழிமுறையாகளாம் என்ற உண்மை முஸ்லீம்களால் உணரப்படவேண்டும் . 'குப்ரிய ஆட்பலமாக இருக்கட்டும் ,அல்லது அதிகார நிலையில் இருக்கும் 'குப்ரிய 'சிந்தனா பலத்தின் வழி வந்த முஸ்லிமாக இருக்கட்டும் ,இவ்வாறான யாராலும் இஸ்லாத்தின் சிந்தனைத்தரத்தை அதன் அரசியல் வடிவத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியாது .எனவேதான் இத்தகு சூழலில் இஸ்லாத்தின் சட்டங்கள் 'குப்ரிய 'சிந்தனா வாதத்தால் கேவலப்படுத்தப்படும்.
மத்திய கிழக்கின் முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களில் கூட இஸ்லாம் ஒரு ஆரோக்கியமான ஆதிக்க சக்தியாக இல்லை .!அதாவது முஸ்லீமிடம் இஸ்லாமும் ஒரு 'சொய்ஸ் ' . தேவையானால் வாக்குப் பலத்தின் மூலம் தேர்ந்து கொள்ளலாம் !!எனும் மேற்கின் அரசியல் சகதியே சந்தனமாக ஆட்சி ஏறியுள்ளது .மேற்கின் எதிர்பார்ப்பின் படி மதச் சார்பின்மை ஒரு பலமான ஆளும் கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாக விடப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் 'குப்ரிய ' மேலாதிக்கத்தின் கீழ் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்களின் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை . அதன் தொடர் வடிவமே இந்த இலங்கையின் 'பொது பல சேனா ' சொல்லும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் ஆகும். இஸ்லாம் ஒரு அரசியல் இராஜ தந்திர சக்தியாக உலகில் இல்லை . முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களும் தமது தேசிய ,சர்வதேச விதிகளை மீறி இலங்கையில் தலையிட முடியாது எனும் இன்றைய ஜனநாயக முற்றுகையின் கீழ் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவம் எப்போதும் ஒரு கேள்விக்குறிதான் .என்பதை 'பொது பல சேனாவும்' தெரிந்த செய்திதான் .
ஹலால் ,ஹராம் என்பது தான் உண்மையில் ஒரு முஸ்லிமின் வாழ்க்கை .ஹராத்தை தவிர்த்தல் ,ஹலாலை அமுல் படுத்தல் என்பதிலேயே இறை திருப்தி தங்கியுள்ளது என்பதை புரிந்து கொண்ட சாத்தானிய சக்திகள் ஹராமான வாழ்வை நோக்கி ஒரு முஸ்லிமை திருப்ப பகீரத பிரயத்தனம் செய்யும் என்பதுதான் இயல்பு . இதிலிருந்து தவிர ஒரே வழி முழு முஸ்லீம் உம்மத்தையும் ஒரே தலைமையில் இணைத்து ,'குப்ரிய ' அதிகாரங்களை தனது அரசியல் இராஜதந்திர பலத்தின் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய 'கிலாபா ' அரசை தகுதியான இடத்தில் உருவாக்குவது மட்டுமே .அவ்வாறு சிந்திக்காத நிலையில் 'சமரச 'தளத்தில் சரணடைவு அரசியலில் இஸ்லாத்தை விட்டுக்கொடுத்து 'சபூர் ' வாழ்க்கையில் கோழைகளாக வாழ்வது தவிர வேறு வழியில்லை .
அதாவது நான் இங்கு சொல்ல வருவது முஸ்லீம்களது போராட்ட சிதனையில் முன்னுரிமை கொடுக்கவேண்டியது எது ? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் . எமது மதிப்பு மிக்க பூமாலையை குட்டிக் குரங்கு சின்னா பின்னப்படுத்த தொடங்கியுள்ளது ! என்ற அச்சத்தில் அதன் அப்பனான கொரில்லாவிடம் பாதுகாக்க கொடுக்க நினைப்பது மிகத் தவறானது .

'மீடியா ' பூச் சுத்தலும் சிரிய விவகாரமும் .

சிரிய விவகாரத்தில் அசாத் படைக்கு எதிராக போராடும் இயக்கங்களுக்கு அமெரிக்க இராணுவ உதவி !! என்ற தலைப்பு இப்போது அநேகமான மேற்கின் 'மீடியாக்களால்' வெளிவிடப்படுகின்றது . இந்த விடயத்தில் சரி பிழை ஒருபக்கமிருக்க மீடியா யுத்தத்தில் 'அம்புஸ் ' தனமான 'கெரில்லா'உத்திகளையும் செய்ய முடியும் என்பதை மேற்கின் மீடியாக்கள் மீண்டும் ஒருமுறை இத்தகு செய்திகள் மூலம் நிரூபித்துள்ளன .

துள்ளியமான கண்காணிப்பு சாதனங்கள் , சக்தி வாய்ந்த ஆயுதங்கள் சகிதம் நேட்டோ படைகள் சிரியாவை சுற்றி பார்த்துக் கொண்டிருக்க சிரிய கொடுங்கோலன் பசர் அல் அசாத் சென்ற இடம் எது ? என்ற விடயம் சிதம்பர இரகசியமாக இந்த மீடியாக்களுக்கு இருக்கின்றதாம் !? ஆனாலும் அமெரிக்கா அங்கு போராடும் போராளிகளுக்கு உதவி செய்தது . என்ற தகவலை மட்டும் தாளம் தப்பாமல் சொல்ல முடியுமாம் ! 'சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப் பட வேண்டும் . அல்லது சந்தர்ப்பங்கள் உருவாக்கப் பட்டு பயன் படுத்தப் பட வேண்டும் 'என்ற முதலாளித்துவ சதிமுகத்தை விதி வடிவமாக தப்பாமல் மேற்கின் மீடியாக்கள் செய்கின்றன .என்பதுதான் உண்மை .

கடந்த சில மாதங்களாக சிரிய விவகாரத்தில் தெளிவான இருட்டடிப்பையே இந்த மீடியாக்கள் செய்து வந்தன . சேதங்களையும் ,இழப்புக்களையும் பற்றி மட்டுமே தகவல்களை தந்து கொண்டிருந்தன . அந்த வகையில் இந்த அரசியல் உள் நோக்கம் மிக்க நடவடிக்கையின் நோக்கம் சிரியாவின் போராட்ட தூய்மையை முஸ்லீம் சமூக மட்டத்தில் தரக்குறைவாக எடை போட வைக்கும் ஒரு தெளிவான முயற்சியே . அதாவது 'சிரியாவில் நடப்பது ஒரு அமெரிக்க யுத்தம் என்ற போலி மாயையில் முஸ்லீம் உம்மத் மூன்றாம் தர அந்தஸ்தில் சிரிய போராட்டத்தின் மூலம் கிடைக்க இருக்கும் 'கிலாபத் ' எதிர்பார்ப்புகள் மீது பார்வையை பதிய வேண்டும் எனும் சதியே . இவர்களை விட அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன் மிக்க அறிவுடையவன் .