Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Oct 6, 2015

'ரியல் சிரியா ' நேற்று இன்று நாளை!!! ஒரு கவிதையிலே...(மறுபதிவு)

அச்சத்தில் எழுந்த அயோக்கிய நாடகம்
அது சிரியா மீதான தாகூத்திய கூட்டின்
அவசர கரிசனை ! - ஆட வழிதேடி விழிபிதுங்கி நின்றபோது
அடித்தான் பசர் அல் அசாத் 'கெமிகல் வெபன் 'அதுதான் அதி பயங்கர நாடக மேடை !

கொலைகாரக் கூத்துக்கு நியாய வடிவம் கொடுக்க NATO முதல் U N வீட்டோ வரை விதம் விதமாய் 'லைட் 'அடிக்க !ஒருபக்கம் ஒபாமாவின் ஓலமும் மறுபக்கம் 'புடினின் ' பிடிவாதமும் எனகாட்சிகள் எல்லாம் கலை கட்டின !

"மிசைல் விடுவோம்" என அமெரிக்க முதலை கண்ணீரோடு கூற "சவூதிக்கு அடிப்பேன் " என ரஷ்ய சைத்தான் 'புல்ஸ் டாப்' போட ! இராஜ தந்திரத் தொட்டிலில் விரல் சூப்பி ரசித்துக் கொண்டிருந்தான்
'அசாத்' எனும் காட்டேறிக் குழந்தை !

தொப்புள் கொடி உறவோடு ஈரான் சீராட்ட !
சுரண்டல் பங்கிற்காக சீனாவும் பாலூட்ட ! 
'டிப்லோமடிக்' பிரேம் வேர்க்கில் '
கேலிக்கூத்து அமர்க்களமானது !

ஓட்டிய ரீலில் மாற்றங்கள் வந்தன !
பிரிவுத் தாளத்தில் பருப்பு வேகாததால்
உண்மை உருவத்தை உலகம் பார்க்க 
'ஹிஸ்புஸ் சைத்தான்களும்' பூ மாலை கொடுக்க(அமெரிக்க ,ரஷ்ய )துருவங்களின் இணைவு இனிதே நடந்தது !ஜெனீவா மண்டபத்தில் 'ரிசப்சனும்' தொடர்ந்தது! 

சியோனிச கள்ளப்பிறப்பை கொஞ்சிய
அதே கைகளால் அசாத்தையும் அரவணைத்து தூக்கி அதர்மப் பந்தியில் சிரியப் படுகொலைகளை ஏதோ 'சிக்கன் டேவல் ' போல் ஆக்கிப்போட்டார்கள் 
அயோக்கியக் கும்பல்கள் !

உம்மத்தின் வளங்களை ஊதாரித் தனமாக்கிய நாதாரிப் பயல்கள் பெப்சிக்கு பெற்றோலை பொறுப்பின்றி கொடுத்து விட்டு !'வெஸ்டர்ன் டிபென்ஸில் ' வெட்டிப் பொழுது போக்கும் வெங்காய மன்னர்களும் 'கிலாபத்தின் ' அச்சத்தில் கிளி பிடித்துப் போக ! முஸ்லீம் அழிப்புக்கு முகவராகி 
பங்குப்பணம் போட்டு கோமாளி வேஷம் கட்டுகிறார்கள் !

'டிமோகிரசி' செட்டப்பில் வேலைகள் முடியுமென்ற 'தாகூத்திய' நப்பாசைக்கு ஆப்படித்து எழுந்துவரும் இஸ்லாமிய அலைகண்டு ஆடிப்போய் உள்ளது இந்த அசத்தியக் கூட்டணி ! - சத்தியம் நோக்கிய 
சாத்தியமான நகர்வுகளில் 'ரியல்' சிரியா 
தொடர் சீரியலாகி ஆணவக் 'குப்பாரை '
குலை நடுங்க வைக்குதடா ! அல்லாஹு அக்பர் ...! அல்லாஹு அக்பர் ...! அல்லாஹு அக்பர் ...!

Jul 13, 2014

ஒரு முஸ்லிமின் சுயசரிதை !

குருதியில் குளித்து 
மண்டையோட்டில் மதுவருந்தி
அநாகரிகத்தின் அடிமடியில் 
கல்லாகிப்போன 'கல்புகளை'
உதாரண புருஷர்களாய்
செதுக்கிய 'வஹியே' !
இன்றும் எம் பரண்களில்
பத்திரமாய் தான் இருக்கிறாய் !

நீ வந்த மாதத்திலும்
உன்னை உதட்டால் ஒலிக்க வைத்து
பத்திரமாய் பொதி சுமக்கும்
பணியில் தான் இன்னும் நான் !?

மௌடீக குப்பைகள் ஈமானை விலைபேச
ஆன்மீக வறுமைதான் விடாமல் தொடர !
தியாகம் இப்போது திகிலூட்டும் விடயம்தான் !

புவியின் ஈர்ப்புக்குள் பாதம்
புதைந்துவிட புழுப்போல் வாழ்கிறேன் !
ஓர் நம்பிக்கை அந்த 'வஹி' எனும் உளி
இப்போதும் பத்திரமாய் தான் இருக்கிறது !
அது இன்னொரு சத்திய வரலாற்றுக்காய் !

Apr 15, 2014

தேர்தல் திருவிழாவும் தேர் இழுக்கும் முஸ்லீம்களும் !!




நேற்றுவரை குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு திடீரென கற்கள் கொட்டப் படுகின்றது !செப்பனிட போகிறார்களாம் . ஆளும் அதிகாரத்தின் பாசப்பார்வையில் பக்காவான சுயநலம் .இது தேர்தல் காலம் அல்லவா ! வாக்கு வேட்டைக்காகாக நடத்தும் நாடக அரசியல் அது .

மக்களுக்காக அதிகாரமா அதிகாரத்துக்காக மக்களா? இந்தக் கேள்வியை புரிந்த நிலையிலேயே இன்றைய அரசியல் நோக்கப்பட வேண்டும் . சுய தேவைக்காக சேவை என்றால் அது வியாபாரம் . உரிமைகளை எதோ சலுகை போல் காட்டி நூற்றுக்கு தொண்ணூறை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் களவாணித் தனமே இன்றைய அரசியல் .

சந்தர்ப்பதிட்கு சேறு பூசிவிட்டு குட்டிக்கரணங்கள் அடித்து கட்சி மாறி சாக்கடையை சந்தனமாக்கி பேசும் (அ)யோக்கிய தலைவர்களை நம்பி அடிமாடாய் உழைக்கும் முஸ்லீம் உம்மத்தின் உதிரங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அது பட்ட மரத்தில் ஏறி பழம் பறிக்க முடியாது எனும் உண்மையே ஆகும் . சந்தனமாக இஸ்லாம் இருக்க சாக்கடையை நம்பிய வாழ்வு எதற்கு !? குப்ரை நம்பினால் உனக்கு இம்மையும் ஏமாற்றமே ,மறுமையும் ஏமாற்றமே .

நிர்வாண நியாயங்களில் மஸ்ஜிதில் தேசியக் கொடியும்





பறக்க விட்டோம்!! அவமானங்கள்

சாணாக்கியமாக மொழி பெயர்க்கப் பட

கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஆமா சாமிகளாகி !

அல்லாஹ்வை 'ரிஸவ்வில்' ஒழித்தும்

வைத்தோம்! கொல்லப் படுவோம் என்பதட்காக

எம் உயிரினும் மேலான அகீதாவை

தேசியப் படுகுழியில் போட்டு எம் இமாம்கள்

இரகசியமாக இகாமத் சொல்லச் சொன்னார்கள்!

குனூத் ஓதி குப்ரை வெற்றி கொள்வோம்!

என்ற ஆச்சரியமான 'தவக்குலில் ' !!

இப்போது புதிய வார்ப்பாக பிசாசை வெற்றி கொள்ள

பேயோடு கூட்டுச் சேர சொல்கிறார்கள்!!

குப்ரிய 'வைரஸ்' சிதறும் இந்த வார்த்தைகளில்

எம் கொள்கை கொலைகாரன் சிறுபான்மை

வாழ்வென்ற வாளோடு எம்மீது பாய்கிறான்!

கழுத்தைக் கொடுப்பாதா எம் முடிவு !??


courtesy: khandaqkalam.blogspot.com

Mar 19, 2014

நிர்ப்பந்தத்துக்கும் சரணடைவு அழைப்புக்கும் மத்தியில் எனது போராட்டங்கள் !!

அவ நம்பிக்கை ஆக்கப்பட்டுள்ளது நம்பிக்கை !
சமத்துவம் சகவாழ்வு என்ற போர்வையில் நான் 
சடத்துவ வெப்பத்தில் குடித்தனம் நடத்த அழைக்கப் படுகிறேன் !
இஸ்லாத்தின் இலட்சியங்களை ஏட்டுச் சுரக்காய் ஆக்கிவிட்டு 
அலட்சிய அதிகாரத்துக்குள் அடிமைப்படுவதில் சத்தியம் உள்ளதாம் !
உளரும்' உலமாத்' தனங்களில் 'பிக்ஹுல் அகல்லியாத் ' எனும் 
தன்மான விற்பனை நிலையத்தின் இலவச விளம்பரங்கள் 
வெளியிடப் படுகின்றன !கோழையாக வாழ்வதில் கொள்கை சிறக்குமாம் !

காலங்கள் மாறிய  கேவலக் காட்சிகள் மாறுமுன்பே 
ஒரு பான்மை தந்த ஓயாத வஞ்சனைகள் ஆறும் முன்பே 
மகா பான்மை மறுபடியும் பெற்றோலை ஊற்றியது !
மாபாவிகள் மத வாத தீயை பற்ற வைத்தனர் ! அதற்காக 
மாநபி பாதையை ஒழித்து வைத்து இங்கு நாம் 
புத்தனுக்கு பிடித்ததாய் வஹியை 'ரீ வேர்சன் ' செய்வதா !?
புத்தி ஜீவிகள் அப்படித்தான் சொல்கிறார்கள் !!

என்னை எரித்து அந்த அழிவு வெப்பத்தில் 
எதிரிகள் அரசியல் குளிர் காய எத்தனிக்கிறார்கள் !
பற்றுவது நான் பற்று மிக்க இலட்சிய நெருப்பாய் சுடர்விட்டு 
சுட்டெரிப்பேன் அசத்திய அசுத்தங்களை என்ற வரலாற்று வரிகளை 
தெளிவோடு சொல்லி நிற்கிறேன் ! 
அசிங்கமான நிர்ப்பந்த நியாயங்களோடு நான் 
சிங்கத்திடம் சுஜூது செய்ய அழைக்கும் 
அபூர்வ தாயிகளிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான் .
எந்நிலையிலும் நான் ஒரு முஸ்லிம் !!!

http://khandaqkalam.blogspot.ae/2014/02/blog-post_22.html#more

சிறுபான்மை 'பிக்ஹை' நம்பிய பயணங்கள் முடிவதில்லை !!


('மைனோரிட்டி பிக்ஹ் ' ஒரு கொல்லை நோய் ஆக முஸ்லீம் உம்மத்தை பீடித்திருக்கும்ஒரு சாபக்கேடு . அது பாவத்தை நன்மையாக்கி விடுகிறது . குப்ரின் கீழ் அடிமை வாழ்வில் நிர்ப்பந்தத்தை காரணம் காட்டி முஸ்லிமை பணிந்து போக அது அழைக்கிறது . 

இறை திருப்தி ,தாகூத்தின் திருப்தி என்ற முரண்பட்ட எதிர் சக்திகளுக்கு இடையில் ஒரு சமரச தீர்வாக அது ஆகிவிடுகிறது .இப்போது ஒரு முஸ்லிம் தான் யாருக்காக ? எதற்காக ? வாழ்கிறேன் ? எனக்கான வாழ்வியல் விவகார சட்டங்களை யார் தீர்மானிக்கிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு பதிலை தேடும் தேடும் போது . கசப்பான பதிலாக 'குப்ர்' என்ற கொடுமை விடையாகி விடுகிறது . இந்த உண்மையை புலப்படுத்த ஒரு சிறு பதிவு . - அபூ ருக்சான் - )

ஹுப்புத் துன்யாவின் அவசியமும் அவசரமும் வேகத்தை அதிகரிக்க 
ஆரம்பமானது ஓட்டம் ! சில கோஷங்களாலும் வசனங்களாலும் 
கண்கள் கட்டப்பட அசையாத நம்பிக்கையில் 
ஒரு பந்தயக்குதிரை போல ! 
கொடுத்த விலைகள் அதிகம்தான் 
இன்னும் கொடுப்பேன் என் இறைவனுக்காக . 
இலக்கை தெளிவாய் சொன்னார்கள் . 


பாதையினை தான் அடிக்கடி மாற்றினார்கள் 
நேற்று பிழை என்றது இன்று சரியாகும் ! 
குப்ரிய கொல்லைப்புரங்களிலும் 
'ஹிக்மத் ' மேச்சல்கள் !!! 


பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி 
குர்பான் கொடுத்தால் ஹலாலாம் !!! 
ரகீப் ,அதீதே(அலை ) 
குழம்பி போய் விடுவார்கள் 
நான் என்ன செய்ய ?! இந்த புதிய 
இஜிதிஹாத் எனக்கும் புரியவில்லை !! 
செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும் 
நக்கித்தான் ஆகவேண்டுமாம் !!?? 

ஆர்வம் மட்டும்தான் 
இலக்கை நோக்கி பாதை தெளிவற்று 
'குப்ரை ' குளிப்பாட்டி 
சத்திய ஆடை கொடுத்து !! 
அந்த சாக்கடைக்கு சந்தனம் பூசி 
தொடரும் எம் இலக்கு நோக்கிய 
பயணங்கள் தான் முடிவதில்லை !!

...............

Mar 18, 2014

இது சிரியாவின் முகவரியில் இருந்து உலக முஸ்லீம் உம்மாவின் உள்ளத்தை நோக்கி……





மரத்துப் போன மனதில் இருந்து
விறைத்துப்போன விரலுக்கு
வரும் வாத்தைகள் இந்த 'உம்மாவின்'
சோகங்களால் கண்ணீர் வடிப்பினும்
மீண்டும் இஸ்லாம் சக்தியாய் மாறி
கிலாபாத்தின் கேடயத்தில்
விடுதலைக்கதவுகளை
தட்டித்திறக்கும் நாள் வெகுதூரமில்லை.


ஓ சபிக்கப்பட்ட சமூகமே !
ஓ வழிதவறிய சமூகமே !
சமரசத்தின் பெயரில் மனித அடிமை
நீ தரும் சாசனம் தான் நீ தரும் ஜனநாயகம் !
பூகோள மய பூச்சாண்டியில்
முஸ்லிம் பூமிகளை மயானமாக்க
எம்மவரைக்கொண்டே எம் நிலத்திலே
எமக்கான கபுறு தோண்டி நீ
சாதிக்க நினைக்கும் சாத்தானிய இராஜ்ஜியம்
உன் நிரந்தரக் கனவுதான் !!
சத்திய வாசனையும் ஜாஹிலிய துர்நாற்றமும்
ஒன்றாகிவிட்ட எம் கழுதைகள்
சற்று அரசியல் கொட்டமடிக்கட்டும்!
விரைவில் இஸ்லாத்தின் கட்டுத்தறியில்
கட்டுண்டு விடும் !

ஆதிக்க கதிரை காக்க துவக்கு குதிரைகளை
தட்டுவது உன் வரலாற்று வழிமுறைதான்
உன் ஈனத்தனமான ஈயங்கள்
எமக்கு முடிவுரை எழுதிடாது !!
இனி நீ சந்திக்கப்போவது எம் கிலாபாத்தின்
உதயத்தில் சஹாதத்தின் வேட்கையில்
தோல்வியின் சமாதியில் துயரத்தின்
அழிவினைத்தான்!!


மீண்டும் நாம் உனக்கு கைபரை நினைவு கூர்வோம் !!
ஸ்பெயினை நினைவு கூர்வோம் !!
உங்களிருவருக்கும் சமாதியா
அல்லது "ஜிஸ்யா" வா அது உங்கள் தெரிவு !
என்னென்றால் சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது !
இனியும் சத்தியம் உள்ளதால் அசத்தியம் அழிந்தே தீரும் !

Oct 15, 2013

இது சற்று அதிகம்தான்!


இருள் சூழ்ந்த பொழுதுதினில்
இரத்தக் கசிவுடன் என் கண்கள்!
ஆழப்பதிந்த தீமையின் ஆணிவேர்கள்
அதிகார விருட்சங்களாய், அரக்கத்தனமாய்
ஆட்சி செலுத்த அடங்கிப்போக முடியாது!!

ஜாஹிலிய சதுரங்கத்தில்
பலிக்காய்களா என் சமூகம்?
விஷத்தை அமுதமாக்கிய
தேசிய சகதியில் சிதைந்ததோ தனித்துவம்!!
உனக்கென்ன உன் எல்லைக்கு அப்பால்
ஒரு முஸ்லிமின்
உயிர்…
உடமை…
மானம்… ஒன்றும் பெரிதல்ல!!


இஸ்ரேலோடு சமரசமும்
அமெரிக்கப் பாதுகாப்பும் எந்த
அகீதா கற்றுக் கொடுத்தது?
அடிப்படைகளைத் துவம்சம் செய்துவிட்டு
அழங்காரச் சுன்னாக்களில்
அதிசயமாக இஸ்லாமிய எழுச்சி வருமாம்!
பச்சைக் குப்ரையே சுத்த இஸ்லாம் என்பது
சற்று அதிகம்தான்!!

Oct 8, 2013

'ரியல் சிரியா '! ஒரு கவிதையிலே

அச்சத்தில் எழுந்த அயோக்கிய நாடகம்
அது சிரியா மீதான தாகூத்திய கூட்டின்
அவசர கரிசனை ! - ஆட வழிதேடி விழிபிதுங்கி நின்றபோது
அடித்தான் பசர் அல் அசாத் 'கெமிகல் வெபன் '
அதுதான் அதி பயங்கர நாடக மேடை !

கொலைகாரக் கூத்துக்கு
நியாய வடிவம் கொடுக்க NATO முதல் U N வீட்டோவரை
விதம் விதமாய் 'லைட் 'அடிக்க !
ஒருபக்கம் ஒபாமாவின் ஓலமும்
மறுபக்கம் 'புடினின் ' பிடிவாதமும் என
காட்சிகள் எல்லாம் கலை கட்டின !

"மிசைல் விடுவோம்" என
அமெரிக்க முதலை கண்ணீரோடு கூற
"சவூதிக்கு அடிப்பேன் " என
ரஷ்ய சைத்தான் 'புல்ஸ் டாப்' போட !
இராஜ தந்திரத் தொட்டிலில்
விரல் சூப்பி ரசித்துக் கொண்டிருந்தான்
'அசாத்' எனும் காட்டேறிக் குழந்தை !

தொப்புள் கொடி உறவோடு ஈரான் சீராட்ட !
சுரண்டல் பங்கிற்காக சீனாவும் பாலூட்ட !
'டிப்லோமடிக்' பிரேம் வேர்க்கில் '
கேலிக்கூத்து அமர்க்களமானது !

ஓட்டிய ரீலில் மாற்றங்கள் வந்தன !
பிரிவுத் தாளத்தில் பருப்பு வேகாததால்
உண்மை உருவத்தை உலகம் பார்க்க
'ஹிஸ்புஸ் சைத்தான்களும்' பூ மாலை கொடுக்க
(அமெரிக்க ,ரஷ்ய )துருவங்களின் இணைவு இனிதே நடந்தது !
ஜெனீவா மண்டபத்தில் 'ரிசப்சனும்' தொடர்ந்தது

சியோனிச கள்ளப்பிறப்பை கொஞ்சிய
அதே கைகளால் அசாத்தையும் அரவணைத்து தூக்கி
அதர்மப் பந்தியில் சிரியப் படுகொலைகளை
ஏதோ 'சிக்கன் டேவல் ' போல் ஆக்கிப்போட்டார்கள்
அயோக்கியக் கும்பல்கள் !

உம்மத்தின் வளங்களை ஊதாரித் தனமாக்கிய
நாதாரிப் பயல்கள் பெப்சிக்கு பெற்றோலை
பொறுப்பின்றி கொடுத்து விட்டு !
'வெஸ்டர்ன் டிபென்ஸில் ' வெட்டிப் பொழுது போக்கும்
வெங்காய மன்னர்களும் 'கிலாபத்தின் ' அச்சத்தில்
கிளி பிடித்துப் போக ! முஸ்லீம் அழிப்புக்கு முகவராகி
பங்குப்பணம் போட்டு கோமாளி வேஷம் கட்டுகிறார்கள் !

'டிமோகிரசி' செட்டப்பில் வேலைகள் முடியுமென்ற
'தாகூத்திய' நப்பாசைக்கு ஆப்படித்து எழுந்துவரும்
இஸ்லாமிய அலைகண்டு ஆடிப்போய் உள்ளது இந்த
அசத்தியக் கூட்டணி ! - சத்தியம் நோக்கிய
சாத்தியமான நகர்வுகளில் 'ரியல்' சிரியா
தொடர் சீரியலாகி ஆணவக் 'குப்பாரை '
குலை நடுங்க வைக்குதடா !
அல்லாஹு அக்பர் ...! அல்லாஹு அக்பர் ...! அல்லாஹு அக்பர் ...!

http://khandaqkalam.blogspot.ae/2013/10/blog-post_8.html

Sep 24, 2013

'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வது என்ன ?




இது இஸ்லாமிய அகீதாவை
'கபுரில் ' போட்டு மூடி எஞ்சிய
சாமானை பாதுகாக்கும் சடத்துவ முயற்சி !
'குப்ரோடு ' ஒன்றிய வாழ்விற்காய்
'ஸுன்னாவை' புறக்கணித்து அரங்கேற்றும்
'வஹி'த்தோல் போர்த்திய 'ஜாஹிலீயத் '!

சிறுபான்மை வாழ்விற்காய் 'எமர்ஜென்சி சொல்யூசனா '!?
சத்திய உறுதியை அழிக்க 'பத்துவா' எனும் 'பாயிசனா '!?
நல்ல' பாத்தில் ' கெட்ட 'பாத்தில் 'என
சாக்கடைக்கு ' அத்தர் ' பூசி' தாகூதில்' ஒன்றை
தரம் என்று தேர்ந்தெடுத்து பேய்க்கு பேண்
பார்க்கச் சொல்லும் பயங்கர முயற்சி !!!

இங்கு நாளை அதற்கும் மதம் பிடிக்காது என்பதற்கு
என்றும் உத்தரவாதமில்லை !! எனவே இது
மருந்தென்ற பெயரில் வழங்கப்படும் கொடிய 'வைரஸ் '!!!

Sep 17, 2013

அவர் சரியாகத்தான் சொன்னார் !



அவர் சரியாகத்தான் சொன்னார் !
அவருக்கு பொன்னாடை போர்த்தி 
கொடிபிடித்து பட்டாசு வெடித்து 
நாம் தான் பிழையாக விளங்கிக் கொண்டோம் !

தாருல் குப்ருக்கு இவர்கள் விசுவாசம் 
இல்லாதவர்களாம் . அல்லாஹ்வுக்கும் 
அவன் 'வஹி' வழி அமைந்த தாருல் இஸ்லாத்துக்கும் 
தான் நாம் விசுவாசமானவர்கள்.
தேசிய அழுக்குப் படிந்திருந்தாலும் 
எதோ ஒரு ஓரத்தால் உண்மை உருவம் புரிந்ததால் 
சொன்ன 'சொலிட்டான ' வார்த்தை !

மறுமையை மறந்து இம்மைக்குள் 'டென்ட் ' அடித்து 
'ஹுப்புத்துன்யா' இயக்கத்தில் நிர்பந்த நியாயத்தில் 
குப்ருக்கு சரண்டராகி மரணத்தை வெறுத்த 
போதும் அவர் சரியாகத்தான் சொன்னார் !

சந்தர்ப்ப பல் இளிப்பு ! வாக்குறுதி 'லிஸ்ட்' தூக்கி 
அவர் வந்தபோது 'போலின்' போட்டு 
'தாகூத்துக்கு' நாம் பையத் கொடுத்தது அவர் தப்பில்லையே !
பிழையை சரியாக்கி 
இலுப்பம் பூக்களை
சர்க்கரை ஆக்கியது எம் தப்புதான் ! 

ஆனாலும் அவர் இன்னும் சரியாகவே சொன்னார் !
சர்வதேசத்தோடு எமக்கு 'லிங்க்' உண்டாம் !
நல்ல கணிப்பு . நாம் சிறுபான்மை இல்லை என்பதை 
புரிந்து சொன்ன வார்த்தை அது !
' வன் 'உம்மாஹ் கென்செப்டை 'யார் சொன்னால் என்ன ?
'இப்லீஸ்' கற்றுத் தந்த 'ஆயதுல் குர்ஷி 'போல !

ஜாஹிலீய சக்தியை பஞ்சு மெத்தையாக்கி வாழ்ந்த 
எம் கடந்த காலம் !அதில் இனவாத முட்கம்பி 
முளைத்த போதும் ,மிச்ச சொச்சத்துக்காக 'அகீதாவையும்'
அடகு வைக்கும் அற்பப் பிறவிகளாக மாறியது 
எம் தப்புதான் . அவர் சரியாகத்தான் 
சொன்னார் . நாம் தான் எம் மார்க்கத்தை மதமாக 
பிழையாக விளங்கிக் கொண்டோம் !!!
சொன்னவன் காவியத் தலைவனல்ல 
காவிகளின் தலைவன் !

http://khandaqkalam.blogspot.ae/2013/09/blog-post_17.html?spref=fb

Sep 7, 2013

இந்த வரிகளுக்கு அர்த்தம் புரிந்தால் இவன் வலிகளுக்கும் அர்த்தம் புரியும் !!!



சிறுபான்மை என்ற அடங்கிய பார்வையில் 
'கொசுவுக்கும்' கொம்பு கொடுத்தோம் !
அதை சீவிவிட்டு பேரினப் பேய்களை எம்மீது 
ஏவிவிட நாசத்தின் சக்திகள் வந்தபோது ...!!!
பிச்சை வேண்டாம் உன் நாயைப் பிடி 
என்ற 'சரண்டர் பொலிடிக்சில் '  எமக்கு நாமே 
சமாதியும் தோண்டினோம் !

'தேசிய' நியாயத்தில் 'குப்பார் ' எம் மார்க்கத்தை 
விலைபேசியபோது ! தயங்காமல் அந்த வியாபாரத்தில் 
எஞ்சியதையும் விற்று அந்த 'தாகூத்தின் ' சின்னத்தை 
ஒரு சுண்ணத்தாக பேசி 'மஸ்ஜித்' மினாராக்களில் 
கம்பீரமாய் பறக்கவும் விட்டோம் ! - 'ஹலால்' பொலிசியை 
'நஷனல்  எக்ஸ்போட்டுக்காக ' இலவசமாக்கி 
இடி விழுந்த நியாயங்களில் வெற்றியாய் பேசியது !
நாளைய செய்தியாய் எம் தூய  'அகீதாவுக்கும்'
'சந்தூக்கு' வாங்கவா !?

இந்த கொத்தடிமை சாசனத்தின் பின்னும் 
உடைப்பதை உடைத்தார்கள் !! தடுப்பதை தடுத்தார்கள் !!
இப்போதும் நாம் 'லகும் தீனுக்கும் வலியதீன் 'என 
'மன்சூஹ் ' ஆன வசனத்தை ஓதி ஒதுங்கப் பார்த்தோம் !!
விட்டார்களா பாவிகள் !? இனி நாம் சொல்வதுதான் 
'நியூ வெர்சன்' இஸ்லாம் என 'கலிமாச்' சொல்லாதவன் 
கண்டிசன் வேறு போடுகிறான் !!!?

இப்போதும் 'சபூர் ' வாதத்தோடு 'ஹுப்புதுன்யா '
ரீசனோடு ' வஹியை அடிவருடி 'அல்லாஹ்விடம் 
பாரம் சாட்டிவிட்டு 'அல்ஹம்துலில்லாஹ் 'என
வாழ்க்கை வண்டி ஓட்டுபவனா உண்மை முஸ்லீம் !!!


Aug 30, 2013

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது ! அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே !


 

நம்புங்கள் 'கிலாபா ' நாளை உதிக்கும். 
மனித அடிமை விலங்கு தெறிக்கும் !

ஒரே தலைமையில் 'உம்மாஹ் ' நிமிர்ந்திடும் .
'பை அத் ' கொடுத்திடும் வாய்ப்பும் வந்திடும் !

'தாகூத்திய சக்திகள் அஞ்சி நடுங்கிடும் .
'ஜிஸ்யாவா '? ஜிஹாதா ? கேள்வி பிறக்கும் !

'வஹியின் ' வழிதனில் சட்டம் வேலிபோடும் .
குனிந்த முகங்களும் நிமிர்ந்து சிரிக்கும் !

நீதியின் உண்மையை உலகம் உணரும் .
முஹம்மதின் (ஸல் ) படையணி மீண்டும் ஜொலிக்கும் !

'சியோனிச 'அதிகாரம் ஓடி ஒதுங்கும் .
தூய பாலஸ்தீன் மீண்டும் கிடைக்கும் !

'பைத்துல் முகத்திஸில் ' அதான் ஒலிக்கும் .
'குப்ரின்' தடைகளை இஸ்லாம் ஒடிக்கும் ! 

 

Aug 3, 2013

நாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...


இந்த முஸ்லீம் உம்மத்தின் வாழ்வின் மீது 
அநீதப் பூட்டுப் போட்டு அதன் சொந்த முற்றங்களில் 
அவலங்களால் நிரப்பி ஆனந்தப் படும் 
அல்லாஹ்வின் எதிரிகளே !?

அயோக்கியத்தை நியாயமாக்கி நீ
அடிவருடித்தனத்தை சுயநல இலாப பிச்சை காட்டி
எமக்குள் விதைத்தாய் ! அந்த கோடரிக் காம்புகள்
தேசிய விலங்கிட்டு சகோதரத்துவத்தை
ஒருபக்கம் கேள்விக்குறி ஆக்கின !

'ஹரத்தின்' எல்லைக்குள் 'ஹராம்' வந்தாலும்
பரவாயில்லை ! என பரம்பரை முடிகாக்க வெள்ளைத்தோல்
கொள்ளையருக்கு இஸ்லாத்தின் தூய நிலங்களில்
சல்லாபிக்க மடம் கட்டிப்போட்டு அவன்
சாவகாசமாய் பவனி வர கழுதையாய்
உழைக்கும் கண்றாவி மன்னர்கள் மறுபக்கம் !

சதிகளும் ,சாக்கடையில் புரள்வதில் சந்தோசமும்
இருண்ட வாழ்வின் மீது சந்தர்ப்ப நியாயங்களால்
வார்த்தை ஒளி கொடுக்கும் 'செக்கியூலர் இஸ்லாமிச'
செம்மல்கள் வேறு மல்லாக்காய் பறக்கும்
வெள்ளைக் காக்கை காட்டுவோம் !! என்ற
குருட்டு நம்பிக்கையில் இன்னொரு புறம் !!

ஆனால் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மட்டும்
ஓயாத அலைகளாய் சத்திய விடியல்களை படைக்க
குருதியின் விலை கொடுத்து சுன்னாவின் வழி
உறுதியோடு உழைக்கிறார்கள் ! சஹாதத்தின் வேட்கையில்
மரணபயம் வெருண்டோட அல்லாஹ்வை
இன்முகத்தோடு சந்திக்க 'தாகூத்' மீது
இடியாய் இறங்குகிறார்கள் ! இன்ஷா அல்லாஹ்
நம்புங்கள இறையாட்சி மீண்டும் பிறக்கும்
மனித அடிமை விலங்கு தெறிக்கும்
அல்லாஹு அக்பர் .. அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்

Jul 12, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா ...! (பகுதி 04)

கிங்க்ஸ் ஸ்டைல் பொலிடிக்ஸ் முஸ்லீம் நிலங்களில்
இஸ்லாத்தை எதோ 'ஊறுகாய்' போல் தேவைக்கு ஏற்ப
அவ்வப்போது தொட்டுக்கொள்ளும் ! அந்த 'கிங் டோமை '
'கூல்' ஆக்கும்'முதவாக்களின் பத்துவாக்கள்' சிலுவை
நிழலில் மன்னன் சொல்லும் நியாயங்கள் முன்
மௌனித்து வஹியை கௌரவமாக எளனிக்கும்!

செக்கியுளர் திமோகிரசி இஸ்லாத்தை முஸ்லிமுக்கே
கறி வேப்பிலை ஆக்கி சற்று வாசனையோடு வாழ விடும்
ஆனால் இஸ்லாத்தால் ஆல விடாது ! இங்கு
அல்லாஹ்வின் விருப்பம் மனித தேர்வுகளின் முன்
ஒரு கௌரவப் புறக்கணிப்பு ஆகிவிட 'வஹி' யும்
ஒரு தேர்வாக பெயரளவில் உலா வரும் !

நுபுவ்வத்தின் வழியில் கிலாபாவை கொண்டுவர
ஸுன்னாவின் வழியில் பாதையை சகோதரனே நீ தேடு!
அதில் தான் உனது இம்மை வாழ்வில் இஸ்லாம்
செழிக்கும் ஒரே வழியாகும் . இந்த உண்மைகளை உணராமல்
குப்பாரின் செல்லரித்த கொள்கைகளில் புல்லரித்துப் போய்
சாக்கடையில் மூழ்கி சந்தனம் தேடும் இன்னொரு '
வேர்சனுக்கு 'நாள் குறித்தால் மறுமையில் அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் கொடுக்கவும் காத்திரு ! அல்லாஹ் நம்மை இந்த இழிவில் இருந்து பாதுகாப்பானாக ...

(முற்றும் )

Jul 11, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 03)

செக்கியுலரிச அகராதியில் மார்க்கம் மதமாகி !
மஸ்ஜித் கதவுகளால் சற்று எட்டிப் பார்க்க
'எக்ஸ்பயார்ட் ' ஆக்கப்பட்ட சத்தியத்தின் பூமி
சண்டாளர்களால் சதிக்கோல வாழ்வியலால்
பிரித்தாளப் பட்டிருந்தது ! இந்த அவமானத்தை
அரவணைத்த உம்மத்தின் புத்திரர்கள்
அறியாமைச் சடத்துவத்தில் புதுச் சுவை கண்டார்கள் !
இன்றுவரை தொடருது இந்த இழிவான அரசியல் !
அது தாகூதிய தாண்டவம் !
சகோதரா !அதில் நீயும் ஓர் கூத்தாடியா !?

எரிந்து விட்டது கூரை இனி தெளிவாய் தெரியும்
நிலா ! என சூழ்நிலையில் சுகம் காண முடியாது !
விரல் விழுந்து விட்டது இனி நகம் வெட்டும் நேரம்
மிச்சம் ! என இருப்பதில் இலாபம் பார்ப்பது ஒன்றும்
இஸ்லாம் கற்றுத் தந்த ' ஹிக்மத் ' அல்ல !
சந்தர்ப்ப வாதப் புதை குழியில் 'அல்ஹம்து லில்லாஹ் '
என்று அமர்ந்து நாமே எம் தலைக்கு மண்ணள்ளிப்
போட முடியாது சகோதரா !

இஸ்லாம்தான் இலக்கானால் அதன் அடைவுப்
பாதையை 'குப்ரா ' காட்டித்தரும் ! இப்லீஸ் சொல்லித்
தந்த 'ஆயத்துல் குர்ஷி ' போன்றதா ' திமோ கிரசி '!?
வேத வாக்காகக் கொள்ள !? வஹியை வாழ்க்கையாக்குமுன்
'மௌட்டீக ' குப்பையை நம்பியா குடும்பம் நடத்துவது
முஸ்லீம் என்ன பொறுக்கித் திண்ணியா சகோதரா !?

ஏகாதிபத்தியப் பேய்கள் I. M.F கடிவாளத்தோடு
உன்வாசல் வந்தபோது, அது ஏதோ அற்புத விளக்கு போல்
காட்டி 'அலாவுதீன் கணக்கில் நீ 'ரீல் 'விட்டபோது ,
'ஹலாலின்' நிர்வாணத்தை வட்டியுடை உடுத்தி
'ஹராம் ' எளனித்த போது, வயிற்றெரிச்சலோட
உன்னை எச்சரித்தோம் ! அப்போதும் அபூஜாஹில்களுக்காக
புறக்கணிக்கப் பட்ட உம்மி மக்தூம்களாக (ரலி )
நாம் ஆக்கப் பட்டாலும் , இன்று சில நேரம் புரிந்திருக்கும
பிறவிக் குருடன் காட்டும் காலைக் காட்சிதான்
உன் விளக்கம் என்பதை !? இருந்தும் உனக்காக
தொடர்ந்தும் பிரார்த்திப்பேன் நீ என்றும் என் சகோதரன் ....



(இன்னும் வளரும் )

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 02)

தாருள் இஸ்லாத்தை குப்ரால் குளிப்பாட்டி
தேசிய விலங்கிட்டு மனித அடிமைதுவத்துக்க
முஸ்லிமை மறுபிரவேசம் புரிய வைத்தது
அந்த 1924 ம் ஆண்டுதான் ! - வில்லங்கம் அன்று
தாத்தாரியர் பாக்தாதுக்குள் நுழைந்தது போல்
வாளேந்தி வரவில்லை ! அது இந்த முஸ்லீம்
உம்மத்தின் உதிரத்தில் உதித்த ஒரு அடாவடி
மகனால் தான் நிகழ்ந்தது 'ஜாஹிலீய ' மயக்கத்தில்
மதிகெட்டு அந்த மாபாதன் முஸ்தபா கமால் அதாதூர்க்
மிதித்தான் இஸ்லாத்தின் அரசியலை என்பது உண்மை .

ஆனால் அதற்குமுன் அரபி அஜமிக்கு அடிமையா !?
என்ற மமதை நெருப்பு 'கிலாபாவை ' பற்றவைத்து
சகோதரத்துவத்துவத்தை சாம்பலாக்கி அதில்
சுல்தானிசம் சுயநலத்தோடு சுகப்பிரசவம் கண்டதும்
மறுக்க முடியாத உண்மையாகும் .அந்த எறிந்த வீட்டில்
கொள்ளி பிடுங்குவது 'தாகூதிய ' கோட்டான்களுக்கு
சுலபமாய் போனது !அது குரங்கு கையில்
பூமாலையாகி மரம் தாவித் தத்துவத்தில் முஸ்லிம்
உலகின் அரசியலை மாற்றியது !

கோலா லீற்றருக்கு மசகு எண்ணை பீப்பா சமன் என்ற
'வெஸ்டன்' புரபிட் பேஸ்' அந்தப்புர' பெனிபிட்களால் '
புரிந்தும் புரியாமல் விடப்பட்டது ! இந்த முஸ்லீம்
'கிங் கோப்ராக்களுக்கு ' மகுடி வாசிப்பு என்னவோ
பிரிட்டிஷ் M I 5 வும் U .S பென்டகனும் தான் என்பது
ஓபன் சீக்கிரட் ! எதிர்த்துக் கேட்போரை 'நீங்கள்
கேட்டவை என அடக்கி வாசிக்கத்தான்
'சரீயா ' சட்டமாம் இந்த பூச் சுத்தலுக்கு ரிசவ்
'பதுவாக்களோடு ' கிளிப்பிள்ளை ஆலிம்கள்
உலகெங்கும் ஏராளம் !
(இன்னும் தொடரும் ..)

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.!

நீயும் இந்த முஸ்லீம் உம்மத்தின் ஓர் அங்கம்
உனது காயங்களுக்காக எனது கண்களும் என்னை
அறியாமலே கண்ணீர் சிந்துகின்றன !உனது ஏமாற்றத்தில்
நானும் அதிர்ந்து போகிறேன் .இருந்தும் இன்று நடந்தது
கொடிய எதிரியோடு யுத்தத்தில் கண்ட விழுப்புண் அல்ல !
அவன் பொறியில் தேடிப்போய் மாட்டிய மகா தவறு !

நீதியையும் சமத்துவத்தையும் வேறெங்கோ தேடிப்போய்
உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொதித்த மக்களுக்காய் நீ
அரியணை ஏறியபோது படிமுறை மாற்றம் வெற்றிப்
படிக்கட்டாக உன்னால் படம் காட்டப் பட்டது ! மாற்றம்
என்பது மாறாதது என்று கூறி 'வஹியின்' (கதயி )
திட்டவட்ட முடிவுகளிலும் உன் திருவிளையாடல் புகுந்து
மக்கள் திருப்தியே மகேசன் திருப்தி என நீ சொன்னபோது
'சியோனிசத்தின்' கரகோஷம் அதன் மீடியாக்களால் வானைப் பிளந்தது !

காலத்தின் தேவை என்ற கண்கட்டு வித்தையில் இஸ்லாத்தை
நீ குப்ரின் விருப்புக்குள் இழுத்த இழுப்புக்கு சபாஷ் போட்ட
இந்த சாத்தானிய சக்திகள் பற்றி நீ அறியாமல் இல்லை !
இருந்தும் நீ கானல் நீர் பருக குடத்தோடு குதித்தது தான்
எனக்கின்று புரியவில்லை ! அதிலும் அரசியல் சரணடைவை
'ஹிக்மத்தாக ' மறுபெயர் கொடுத்தது எனக்கு கோபத்தை
கிளப்பியது !அப்போதும் உனக்காக பிரார்த்தித்தேன
எதரியின் சதியை விதியாக்கிய சரித்திரம் உன்னை
தொடராதிருக்க ஏனென்றால் நீ என் சகோதரன் .

(தொடரும் ...)

Jul 7, 2013

இந்த முடிவு சரிதானா !?


சிதறிய சில்லரைகளாய் சிங்களத் தீவில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை நாம் சமரச சதிவலையில் சரண்டர் 'பொலிடிக்சை' குப்பார் சொல்ல சமத்துவம் ,சகவாழ்வு என்று
தனித்துவம் தொலைத்து தத்துவம் பேசுகிறோம் !!

தொட்டிலில் இருந்து கபுறு வரை கபிடளிசம் கோடு போட
அதில் ரோடு போட்டு வாழ்க்கை வண்டி விட்டு
'அல்ஹம்துலில்லாஹ்' சொல்லுவது யாரை ஏமாற்ற !?
உன் சிலையை வணங்க மாட்டோம் ஆனால்
பூஜைக்கு பூத்தருவோம் என்ற புது விளக்கம் புரியவில்லை !!

'ஹிஜாபும் ,நிகாபும் ' இங்கு தேவையில்லை ''அவுரத்'
ஒன்லி அரேபியன்ஸ் ' என்று முஸ்தபா கமாலின்
பேரப் பிள்ளைகள் இங்கு பட்டிமன்றம் போட
சல்மான் ருஸ்டியும் , தஸ்னிமா நஸ்ரினும் சபாஸ் போட
'லம்யா கடோல்' புன்முறுவல் பூக்கிறார் !!

நேட்டோவோடு கைகுலுக்கி ,வீட்டோ பவர்களின்
தத்துப் பிள்ளையாகி சுவரில்லா சித்திரமாய் இஸ்லாம்
காட்டும் 'ஹிக்மத் ' தொண்டர்கள் பெரும்பான்மைக்குள்
சிறுமைப்பட்டுப் போக நாமும் வாழவேண்டும்
இந்த இம்மையில் இழிமை பட்டாலும் பரவாயில்லை!!
எனும் முடிவு சரிதானா !?

நிஜாமான செய்தி


Atha Ullah
நீ சொல்ல வந்த செய்தி
நான் சொல்ல மறந்த செய்தி
நாம் வெல்ல இருந்த செய்தி - இப்போது
எம்மை சல்லடையாக்கிய செய்தி-இது
பிந்திய செய்தி - அல்ல - அல்லது
பின்தங்கிய செய்தி யும் அல்ல - இது தான்
சத்தியத்தின் செய்தி.........

வஹி சொன்னது - செய்தி
அண்ணல் எம் பெருமானுக்கு

வஹி நிழலில் சீரா சொல்லுது - செய்தி
அண்ணலாரின் உம்மாஹ்
என்று சொல்லிக் கொள்ளும் எமக்கு

நிஜாமான செய்தி....

எதிரிகள் புடை சூழ
எதார்த்தமே இல்லாத
மனிதனே மனிதனை தம் இஷ்டப்படி
சட்டம் இயற்றி கஷ்டப் படுத்தி
ஆள்வோருக்கு ஒரு நீதி
ஆளப் படுவோருக்கு ஒரு நீதி - என
நீதியே இல்லாத அரசுகளை ,
அம்முறைமைகளை - தான்
எம் பெருமான் முஹம்மதே முஸ்தபா (ஸல்)
ஜாகிலிய்யா என அடையாள படுத்திய - செய்தி
நிஜாமான செய்தி

சட்டம் இயற்றும் அதிகாரம்
உலகையும், அதன் படைப்புகளையும்
படைத்தவனுக்கும் -
அப்படைப்புகளின் அனைத்துத் தன்மைகளையும்
அறிந்தவனும் ஹாகீமும் -ஆன ஏகன்
அல்லா ஒருவனுக்கே உண்டு என்று
அவன் அருளிய சட்ட யாப்பாம்
அல்குர் ஆணை நடைமுறைப் படுத்திய - செய்தி
நிஜாமான செய்தி

அனைத்து அரச முறைமைகளும்,
அரச சிந்தனைகளும் அகற்றப்பட்டு
இஸ்லாம் மட்டுமே அரச முறைமையாக
நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்கும்
சமமான நீதி
முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லதவனுக்கும்
சமமான நீதி
அனைத்துத் தீமைகளுக்கும்
சமமான நீதி
இஸ்லாம் வழங்கியது
இது நிஜாமான செய்தி.

ஜீரணிக்க முடியாத செய்தி
அதே ஜாகிலிய்யா இன்று
ஜனநாயகம் என்றும்
சோசலிசம் என்றும்
பெயர் மாற்றம் பெற்று
முஸ்லீம்களையும் ஏற்க வைத்திருக்கும் செய்தி...

அண்ணலார் இவற்றுக்கு எதிராக
எவ்வாறு போராடினார்
எவ்வாறு இஸ்லாத்தை மாத்திரமே
அரச முறைமையாக்கினார
என்பது
வருடக் கணக்காக
படிக்க படிக்க - பயான் என்று
கேட்க கேட்க
விளங்காத செய்தி
விளங்கிக் கொள்ள முடியாத செய்தி -என்னால்
ஜீரணிக்க முடியாத செய்தி from athaullah

இது என் இனிய சகோதரனுக்கு......


இலட்சிய தேடலில் ஆழமான போராட்டம் .
அதிர்ந்து போன எதிரி தந்த ஆழமான காயங்கள்
அதற்கும் மருந்தாய் அவனே தர நினைக்கும்
தீர்வெனும் 'கான்சர் செல்கள் '!! - அது
'வஹி ' வழி மறந்த அதே வரலாற்று தவறு நோக்கி !!
சத்திய அகீதாவையே அசைக்கும்
விலை கொடுத்தா உன் விடுதலை !!

'கிரேக்க கைசர்கள் ' மக்களை மயக்கி
'மாக்களாக்கி ' அடக்கி ஆள கொடுத்த மாய விஷம்
'த கிரேட் திமோகிரசி ' அதுதான் உன்னையே கடவுளாய்
காட்டி கானல் நீரால் தண்ணி காட்டி கனவோடு
காலம் தள்ளும் மனிதப்பண்ணை அரசியல் !!
இன்று சியோனிச சந்தையில் அபூர்வமாய்
முலாம் பூசப்பட்ட ஜாஹிலீய கற்காலம் !!
அதனால் வருமா உன் பொற்காலம் !! - இறைமறை
உனக்கிருக்க இந்த அரைகுறை உனக்கெதற்கு !!

"நிச்சயமாக அல்லாஹ் அங்கீகரித்தது
இஸ்லாம் ஒன்றே ஒன்றுதான் ."
"படைத்ததும் கட்டளையிடுவதும்
அவனுக்குரியதல்லவா "!? இரவு பகல்
இதைப்படித்தும் "உலகத்தை தேடவேண்டும்
எனும் பேராசைதான் பராக்காக்கி விட்டதோ !?"
மார்க்கத்தை 'மஸ்ஜிதுல்' முடக்கி
மத வேலியிட்டு மடக்கி விட்டு சிலுவை நிழலிலும்
யூத தயவிலும் வாழ்வை தொடர்ந்து
"உடும்பின் பொந்திலும் அவனோடு நுழைவதா !?"

'தாகூத்திய ' குப்பைகளில் சத்துரிஞ்சி
சத்திய மரம் வளர்ப்பது தான் எமக்கு 'சுன்னா'
தந்த தூய வழிமுறையா !? நபியின் சீறாவுக்கு
சில்லறை விளக்கம் கொடுத்து அசிங்கத்தை
அரவணைக்க எதிரி அழைக்க அம்மதத்தை
சம்மதமாக்கி சறுக்கி விழாமல் நீ போராடு
" நிராகரிப்போர் வெறுத்த போதிலும் மற்ற எல்லா
தீனையும் மிகைக்கவே அவன் (அல்லாஹ் ) தன்
தூதரை ஹக்குடனும் நேர்வழியுடனும் அனுப்பினான்
அதற்கு சாட்சியாய் இருக்க அவனே போதுமானவன் .