Showing posts with label அல்ஹு கும் ஷரியா. Show all posts
Showing posts with label அல்ஹு கும் ஷரியா. Show all posts

Jul 19, 2016

ஷரீ’ஆ காலாவதி ஆகிவிட்டதா?


இஸ்லாம் மனிதர்களை உணர்வுகளை கொண்டு அமைத்திருப்பதாகவும் அந்த உணர்வுகளை பூர்த்தி செய்ய அவர்கள் தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாகவும் பார்க்கிறது. இஸ்லாமிய சட்டங்கள் ஆண்களையும் பெண்களையும் ஏழாம் நூற்றாண்டில் அரேபிய பாலைவனத்தில் வசித்த தனி மனிதர்களாக கருதாமல் ஒட்டுமொத்த மனித இனமாகவே கருதி இறக்கி அருளப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை அல்லது இடத்தை சார்ந்த மனித குலத்திற்கு அனுப்பப்பட்டது அல்ல. இன்றைய மனிதன் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே இருக்கின்றான் மேலும் 1400 வருடங்களுக்கு பிறகும் அவ்வாறே இருப்பான். 1

இஸ்லாம் உதித்து மேலோங்கிய காலத்தை விட இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்டது என்பதில் சந்தேகம் துளி கூட கிடையாது. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனை விட மாறுபட்டது. அன்றைய காலத்தில் மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர் இன்று நம்மிடம் வின்னை தொடும் கட்டிடங்கள் உள்ளது, ஆனால் அன்று போல் இன்றும் நமக்கு வீடுகளும் நமது தலைகளுக்கு மேல் கூறைகளும் தேவை படுகின்றது. அன்றைய காலகட்டத்தில் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் தூதர்களை வேற்று நாட்டு அரசர்களுக்கு செய்தி அனுப்ப குதிரைகள் மீது அனுப்பி வைத்தார்கள் ஆனால் இன்று ஒரு தகவலை இமெயில், துரித செய்தி(IM) அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்ப முடிகறது. முஹம்மது(ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் குதிரைகள், வில் மற்றும் அம்பு போன்றவற்றை உபயோகித்து பல போர்கள் புரிந்திருக்கிறார்கள், அதேபோல் இன்றும் போர்கள் பல நடத்தப்படுகின்றன ஆனால் அதிநவீன தொழல்நுட்பம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் புலனாய்வு மேற்கொள்ளுதல் ஆகியவைகளை கொண்டு. முந்தய காலத்தில் முஸ்லிம்கள் வானவியலை பற்றி கற்றறிந்ததால் அவர்கள் எங்கு சென்றாலும் கிப்லாவை நோக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர் மாறாக இன்று அதை ஒரு மின்னனு கடிகாரம் செய்து விடுகிறது. இது மனிதர்கள் அவர்களுடைய தேவைகள் முன்பிருந்ததை போன்று தான் உள்ளது என்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நம் பார்வைக்கு புலப்படும் மாற்றம் என்பது வெறும் கருவிகளின் மாற்றம் அல்லது மனிதர்கள் அந்த பிரச்சினைகளை சரிசெய்யும் போது உபயோகிக்கும் சாதனங்களின் மாற்றம் மட்டுமே.

ஒரு சிந்தனை பொறுத்தமில்லாததாக ஆக்க காலத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் சிந்தனை என்பது கால வரையறைகள் அற்றது. பண்டைய கிரேக்க தத்துவம், கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு 16 ம் நூற்றாண்டில் அடைந்த மறுமலர்ச்சியை ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என குறிப்பிடப்பட்டது. உலகளவில் இன்று நமக்கு கிடைக்கும் சட்டங்கள் மூன்று நூற்றாண்டுகள் முன்னர் எழுதப்பட்ட பாரம்பரியம் கொண்டது.

- உதாரணத்திற்கு:

-1791 ல், அமெரிக்காவில் உரிமைகள் சம்மந்தமாக நிறைவேற்றப்பட்ட சட்டம், 1215 ன் உரிமையை உறுதி செய்யும் மகாசாசனத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

- நவீன கால சிவில் சட்டம் பொறுப்புகள் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும், இது முதன் முதலில் ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றதாகும்.

- பொதுச்சட்டம், இது அடிப்படையில் முந்தய நீதிமன்றத்தீ்ர்ப்பிலிருந்து குறிப்பெடுத்து தீர்ப்பளிக்கும் முறையானது முதன்முதலில் மத்திய கால ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றிருந்தது மற்றும் நார்மன் ஸாக்ஸனிய பழக்கவழக்கத்தால் ஈர்க்கப்பட்டதாகும் இன்றும் அது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவின் சட்டமியற்றுதலுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது.

இதனடிப்படையில் உற்று நோக்கினால் பழங்காலத்திய பூர்வீகம் கொண்டிருப்பதால் ஜனநாயகம் தற்காலத்திற்கு உகந்த நிலையில் இல்லாமல் இருந்திருக்கும். ஆகையால் இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு அரேபியாவில் உதயமான காரணத்தை கொண்டு தற்காலத்திற்கு பொருத்தமானதல்ல என்ற வாதம் சரியானதல்ல. இஸ்லாமிய சட்டம் மனிதர்கள் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்புடையதாகவும் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கருவிகளை தொடர்புபடுத்தி இல்லாத காரணத்தால், இஸ்லாமிய ஷரீ’ஆ அன்று அரபு மக்களின் நிலையை உயர்த்தியது போன்று இன்றைய மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.


Sources: sindhanai.org

Sep 10, 2013

அல் அஹ்காம் ஷரியாவின் வகைகள் - Typed of Al Ahkam Shar’iah (Anwaa’ ul Ahkam Shar’iah)

அஹ்காம் ஷரியா ஐந்து வகையானது : அவை 

1) கடமையானவை (FARD)

2) தடுக்கப்பட்டவை (HARAM)

3) பரிந்துரைக்கப்பட்டவை (MANDOOB)

4) விரும்பத்தகாதவை (MAKRUH)

5) அனுமதிக்கப்பட்டவை (MUBAH)


ஹு கும்ஷரியா என்பது ஒரு செயலை மேற்கொள்வதற்கோ அல்லது ஒரு செயலை செய்யாமல் அதைவிட்டு விலகிகொள்வதற்கோ உரிய கட்டளையாகும். ஒரு செயலை மேற்கொள்வதற்குரிய கட்டளை திட்டவட்டமானதாக இருந்தால் அது கடமையானது (FARD) என்றோ அல்லது வாஜிப் (WAAJIB) என்றோ அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு சொற்களும் ஒரே பொருள் கொண்டவை. ஒரு செயலை மேற்கொள்வதற்குரிய கட்டளை திட்டவட்டமானதாக இல்லாமல் இருத்தால் அது பரிந்துரைக்கப்பட்டவை (MANDOOB) என்று அழைக்கப்படுகிறது. ஒரு செயலை மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டளை திட்டவட்டமானதாக இருந்தால் அது ஹராம் அல்லது மஹ்ஜிர் (MAHZAR) என்றோ அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு சொற்களும் ஒரே பொருள் கொண்டவை. ஒரு செயலை மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டளை திட்டவட்டமானதாக இல்லாமல் இருந்தால் அது விரும்பத்தகாதவை (MAKRUH) என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஃபர்து அல்லது வாஜிபைப் பொறுத்தவரை அதை நிறைவேற்றுபவர் பாராட்டப்படுகிறார் அதை நிறைவேற்றாதவர் கண்டனத்திற்கு உட்படுகிறார் மேலும் ஃபர்துவை நிறைவேற்றாதவர் தண்டனைக்கு உரியவராவார். ஹராமான செயலை மேற்கொள்ளபவர் கண்டனத்திற்கு உட்படுகிறார் அதிலிருந்து விலகியிருப்பவர் பாராட்டப்படுகிறார் மேலும் ஹராமான மேற்கொள்ளபவர் தண்டனைக்கு உரியவராவார். மன்தூபை மேற்கொள்ளபவர் பாராட்டப்படுகிறார் பிரிசுக்கப்படுகிறார் அதை மேற்கொள்ளாதவர் கண்டனத்திற்கு ஆளாவதில்லை அதாவது மன்தூபை மேற்கொள்ளபவர் பிரிசுக்கப்படுகிறார் அதை மேற்கொள்ளாதவர் தண்டிக்கப்படுவதுதில்லை. மக்ரூஹ்விலிருந்து விலகி இருப்பது புகழ்ச்சிக்குரிய செயல் அதை செய்வதைவிட செய்யாமல் இருப்பதே ஏற்றமானது. மூலஆதாரம் (TEXTUAL EVIDENCE) கூறுகின்றபடி சட்டம் விட்டுவிடுவதையே மனிதர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வுசெய்து கொள்வதை மறைமுகமாக அனுமதித்தல் அது முபாஹ் என்று அழைக்கப்படுகிறது.

Sep 9, 2013

அல்ஹு கும் ஷரியா (பகுதி-2) Divine Rules (AlHukm Shar’iah)


இஜ்திஹாத் பற்றிய சில அறிவை பெற்றவராக இல்லாத நிலையில் ஒருவர் ஆதாரங்களை அறிந்து கொள்ள இயலாமல் ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்வரானால் அவர் ஆம்மி (AAMMI) எனப்படுவார். இந்த ஆம்மி முஜ்தஹிதீன்கள் அபிப்ராயத்தை கண்டிப்பாக தக்லீத் செய்யவேண்டும் மேலும் முஜ்தஹிதீன்கள் இஸ்தின்பாத் செய்து கொண்டுவந்தால் அல்ஹு கும் ஷரியாவை நடைமுறைப்படுத்த வேண்டும். அவரைப் பொறுத்தவரை அவர் பின்பற்றும் முஜ்தஹித் கொண்டு வந்ததுதான் அவர் நடைமுறைப்படுத்த வேண்டிய அல்ஹு கும் ஷரியாவாகும். ஆகவே இஜ்திஹாத் செய்வதற்கு தகுதியுள்ள ஒரு முஜ்தஹித் இஸ்தின்பாத் செய்து கொண்டுவந்த ஹு கும்தான் அல்ஹு கும் ஷரியா எனப்படுகிறது. அது அல்லாஹ்(சுபு)வுடைய ஹு குமாகும். அதை விடுத்து வேறேரன்றை தக்லீத் செய்வதிற்கு அந்த முஜ்தஹிதுக்கு அனுமதி இல்லை மேலும் அந்த முஜ்தஹிதை பின்பற்றுகிறவர்களுக்கும் அதுதான் அல்லாஹ்(சுபு)வுடைய ஹு குமாகும் அதை விட்டுவிடுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு விஷயத்தில் ஒரு முக்கலித் (MUQQALID- பின்பற்றுவர்) ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்து அதனடிப்படையில் ஒரு ஹு குமை செயல்படுத்துவாரேயானால் பிறகு அந்த விஷயத்தில் வேறு முஜ்தஹிதை தக்லீத் செய்யவதற்காக அந்த ஹு குமை விடுவதற்கு அவருக்கு அனுமதி இல்லை. எனினும் ஒரு முக்கலித் மற்ற விசயங்களில் வேறு ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்யவதற்கு அனுமதி உண்டு. ஏன் எனில் இஜ்மாஅஸ்ஸஹாபாவின் அடிப்படையில் வெவ்வேறுவிசயங்களில் வெவ்வேறு ஆலிம்களை ஒரு முக்கலித் கோருவதற்கு அனுமதி உண்டு. ஷாபி மத்ஹுப் போன்ற ஒரு மத்ஹுப்பை முற்றிலுமாக தக்லீத் செய்யவதற்கு ஒரு முக்கலித் மேற்கொள்வாரேயானால் பின்பு அவர் கிழ்கண்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தக்லீத் செய்யும் மத்ஹுப்பின்படி ஏற்கனவே அவர் நடைமுறைப்படுத்தவரும் விசயங்களில் வேறு ஒரு முஜ்தஹிதை தக்லீத் செய்யவதற்கு அவருக்கு இல்லை. அவர் ஏற்கனவே நடைமுறைப் படுத்தாத விசயங்களில் மற்ற ஒரு முஜ்தஹிதீன்களை தக்லீத் செய்யவதற்கு அவருக்கு உண்டு. ஒரு முஜ்தஹித் தன்னுடைய இஜ்திஹாதை நான்கு ஷரத்துக்களின் அடிப்படையில் விட்டுவிட வேண்டும்:

1) ஒரு முஜ்தஹித் மற்றொரு முஜ்தஹிதின் இஜ்திஹாத் வலுவான ஆதாரத்தைப் பெற்றுருக்கிறது என்பதை அறியும் போது தன்னுடைய இஜ்திஹாதை விட்டுவிட்டு வலுவான ஆதாரத்தைப் பெற்றுள்ள இஜ்திஹாதை தக்லீத் செய்யவேண்டும்.

2) ஒரு முஜ்தஹித் மற்றொரு முஜ்தஹித் இஜ்திஹாதிலும், இஸ்தின்பாதிலும் சிறந்தவராக இருக்கிறார் என்பதை அறியும் போது தன்னுடைய இஜ்திஹாதை விட்டுவிட்டு தன்னைவிட சிறந்த முஜ்தஹிதின் இஜ்திஹாத் தக்லீத் செய்யவேண்டும்.

3) ஒரு முஜ்தஹித் இஜ்திஹாத் மூலமாக ஒருவிசயத்தில் ஒரு ஹு குமை பெற்றுருக்கும் நிலையில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய பையாத் சமயத்தில் நிகழ்ந்ததைப் போல முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அபிப்ராயத்தின் கீழ் ஒன்றுபட அவசியம் ஏற்பட்டால், அப்போது அந்த முஜ்தஹித் இஜ்திஹாதை விட்டுவிட்டு உம்மாஹ்வின் ஒற்றுமைக்கு ஏறுபுடைய இஜ்திஹாதை தக்லீத் செய்யவேண்டும்.


4) கலிபா ஒரு ஹு குமை ஏற்றுஅமுலாக்கம் (ADOPTION) செய்திருக்கும் நிலையில் அதே விசயத்தில் ஒரு முஜ்தஹித் வேறு ஒரு அபிப்ராயத்தை பெற்று இருந்தாலும் அப்போது தன்னுடைய இஜ்திஹாதை விட்டுவிட்டு கலிபா ஏற்றுஅமுலாக்கம் செய்துள்ள ஹு குமை அவர் தக்லீத் செய்யவேண்டும்.

Sep 7, 2013

அல்ஹு கும் ஷரியா (பகுதி-1) Divine Rules (AlHukm Shar’iah)

ஷரியா என்பது சட்டம் இயற்றுபவரின் உரையாகும் (Speech of the legislator) அது அடியார்களின் செயலோடு தொடர்புடையது. அது அல்குர்ஆன், ஹதீஸ்முத்தவாதிர போன்ற திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டவையாக இருக்கலாம் அல்லது முத்தவாத்திர் அல்லாத ஹதீஸ் போன்ற திட்டவட்டமாக நிருபிக்கப்படாதவையாக இருக்கலாம். திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டவையாக இருந்தால் அதன் அர்த்தம் நிச்சயமானது அதனுடைய ஹு குமும் திட்டவட்டமானது. இதற்கு உதாரணம் தொழுகையில் நிறைவேற்றவேண்டிய ரகாஅத்கள் இவை ஹதீஸ் முத்தவாத்திரில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுபோலவே வட்டி தடை செய்யப்பட்டிருப்பது திருடன் கை வெட்டப்படுவது விபச்சாரம் செய்தவருக்கு (ADULTERER) கசையடி கொடுக்குப்படுவது ஆகியவை திட்டவட்டமான சட்டங்களாகும் அவைகளுக்கு சரியான திட்டவட்டமான ஒரே அர்த்தம் தான் உண்டு.

சட்டம் இயற்றுபவரின் உரை திட்டவட்டமாக இருந்தும் நிச்சயமான அர்த்தத்தைக் கொடுக்கவில்லையெனில் அதனுடைய ஹு கும் திட்டவட்டமற்றது. உதாரணமாக ஜிஸ்யா தொடர்பாக உள்ள குர்ஆனின் வசனம். அந்த வசனம் திட்டவட்டமானது ஆனால் அதன் அர்த்தம் திட்டவட்டமானது அல்ல. ஹனபி மத்ஹுப் அதை ஜிஸ்யா என்று அழைக்க வேண்டுமன்று அதை செலுத்தும் நிலையிலுள்ளவர்கள் தாழ்வுநிலையை வெளிபடுத்த வேண்டிம் என்றும் நிபந்தனை செய்திருக்கிறது. எனினும் ஷாபி மத்ஹுப் இதை ஜிஸ்யா என்று அழைக்கத் தேவையில்லை என்றும் அதை இருமடங்கு ஸகாத் என்று அழைத்துக் கொள்ளலாம் என்றும் இதை செலுத்தும் நிலையிலுள்ளவர்கள் தாழ்வுநிலையை வெளிபடுத்தவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டால் போதும் என்றும் நிபந்தனை செய்திருக்கிறது.

சட்டம் இயற்றுபவரின் உரை முத்தவாத்திர்ஹதீஸ் அல்லாத திட்டவட்டமாக நிருபிக்கப்படாதவையாக இருந்தால் அதனுடைய ஹு கும் நிச்சயமற்றது, அதன் அர்த்தம் திட்டவட்டமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே. உதாரணம் ஷாவ்வாலில் ஆறுநாட்கள் நோன்பு நோற்பது அல்லது விவசாய நிலத்தை குத்தவைக்கு விடுவதை தடைசெய்வது ஆகியவை, இவை இரண்டிற்கும் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறது.

சட்டம் இயற்றுபவரின் உரையிலிருந்து சரியான இஜ்திஹாத் முலம் ஹு கும் ஷரியா விளங்கிக் கொள்ளப்படுகிறது. எனவே ஒரு முஜ்தஹிதுடைய இஜ்திஹாத் ஹு கும் ஷரியாவை உருவாக்குகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு முஜ்தஹிதிற்கும் அல்லாஹ்(சுபு)வின் ஹு கும் எதுவென்றால் இஜ்திஹாத் மூலம் ஒரு முஜ்தஹித் அதிகபட்சமாக சாரியாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கருதி எதைக்கொண்டு வருகிறாரோ அந்த ஹு கும் தான்.

சட்டப்படி பொறுப்புள்ள ஒருவர் (MUKALLAF) ஒரு பிரச்சினையிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினையிலோ இஜ்திஹாத் செய்யும் திறன் பெற்றவராய் இருந்து அதன் அடிப்படையில் ஒரு ஹு குமை இஸ்தின்பாத் செய்து கொண்டுவந்தால் பிறகு அந்த குறிப்பிட்ட பிரச்சினையில் வேறு முஜ்தஹிதை பின்பற்றுவதற்கு அவருக்கு அனுமதியில்லை என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். ஏன் எனில் அவர் எந்த அபிப்ராயம் சரியானது என்று கருதுகிறாரோ அதிலிருந்து வேறுபட்ட ஒரு அபிப்ராயத்தை தக்லீத் (TAQLEED) செய்வதற்கு அவருக்கு அனுமதி இல்லை. இஜ்திஹாத் பற்றிய சில முக்கிய அறிவை பொற்றவராய் ஓருவர் இருந்து ஆதாரங்களை (DALEEL) விளங்கிக்கொண்டு ஒரு ஹு குமை தக்லீத் செய்வராக இருந்தால் அவர் முத்தபீ (MUTTABI) எனப்படுவார். இதன்படி இந்த முத்தபீக்கு அல்லாஹ்(சுபு)வின் ஹு கும் எதுவென்றால் அவர் எந்த முஜ்தஹிதின் அபிப்ராயத்தை பின்பற்றுகிறாரோ அந்த ஹு கும் தான்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)