Jul 19, 2013

இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள்.

"இன்று முஸ்லீம்களின் நிலை இப்படி இருக்கிறது ; சுலபமாக இருக்கின்ற இஸ்லாமியச் சட்டங்களை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள் . ஆனால் இஸ்லாத்திற்கும் குப்ருக்குமிடையில் அடிப்படையான மோதல் ஏற்படும் கட்டத்தில் தமது முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் . தாம் இஸ்லாத்தில் தாம் பூரணமாக இருக்கிறோம் என கூறிக்கொள்ளும் பெரிய ,பெரிய ஆசாமிகளிடமும் இந்தப் பலவீனம் இருக்கிறது .

'இஸ்லாம் ,இஸ்லாம் என அவர்கள் உரத்து சத்தம் போடுவார்கள் . அதற்கு விளக்கம் கொடுத்து கொடுத்து அவர்களின் நாவு வறண்டு போய்விடும் .இதற்காக அவர்கள் சிறிது பகட்டான வேலைகளும் செய்வார்கள் ! ஆனால் அவர்களிடம் "இஸ்லாத்தின் சிறப்பை நீங்கள் இவ்வளவு பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் , அதற்குள் உங்களையும் நம்மையும் பூரணமாக உட்படுத்தும் ஒரு செயல் திட்டம் பற்றி நாம் சிந்திக்கலாமா ?" என்று கேட்டுப் பாருங்கள் ! உடனே அவர்கள் ,"இதில் தற்போது பாரிய சிரமம் இருக்கிறது !? இப்போதைக்கு விடயங்கள் அப்படியே இருக்கட்டும் "என்று கூறி விடுவார்கள் !?

இதன் கருத்து என்ன ? பூரண இஸ்லாம் என்பது ஒரு கவர்ச்சி கரமான பொருள் ;அதனை முகட்டின் மேலே தனியாக (கடந்த வரலாறாக )வைத்து விடுங்கள் ; (அதன் தவிர்க்க முடியாத சொந்தக்காரர்களாக ரசித்து ருசித்து) அதற்கு தூரத்தில் இருந்து கொண்டு) பாராட்டிக் கொண்டிருக்கலாம் . நம்மீது அதனை சுமத்த முயற்சிப்பது ( ஏதோ தற்கொலைத் தனமானது ) சிரமமானது (அல்லாஹ்வே விடயத்தை சுலபமாக்கித் தரும் வரை ) இந்த பேச்சுக்கே இடமில்லை என்பதா !? ...... (ஒரு இஸ்லாமிய அறிஞர் )


வஹி வரைந்த பாதை ,அதை நடைமுறைப் படுத்த எம் முன்னோர்கள் கண்ட சோதனைகள் என்பவற்றை மறந்து ,எதோ பேச்சளவில் இஸ்லாம் என்றும் பொருந்தும் எனக் கூறி தற்போது வாழ்வியலில் 'ஜாஹிலீயத்தின்'மேலாதிக்கத்தை ஒரு 'அட்ஜஸ்ட்மண்டாக ' சரிகண்டு அவர்களின் விருப்பப் படி எமது இஸ்லாம் மார்க்கத்தை வெறும் மதமாக பூஜிக்கும் எம்மவர்கள் சற்று சிந்திக்க வேண்டும் .

தனது மூக்கு நுனிவரை (பெயரளவில் ) எமக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ள குப்ர் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு மாற்று சித்தாந்தம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .அது அதன் பிரத்தியோகமான அரசியலில் இருந்து அதிகாரத்தையும் , அதற்கான வாழ்வியல் நோக்கிய ஒரு தெளிவான நாகரீகத்தையும் மனித வாழ்வியலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வாழ விரும்பினால் வாழு என்பது தான் குப்ரின் முடிவு .

இறைவன் எமக்களித்த பிரதி நிதித்துவ (கிலாபா ) அரசியலையும் , முழு முஸ்லீம் உம்மாவுக்குமான பிரதி நிதித்துவ (கலீபா ) ஓர் தலைமை அதிகாரத்தையும் ,அதன் மூலம் எல்லாம் வல்ல இறைவன் பூரணமாக அவன் விரும்பிய பிரகாரம் வாழ வஹி மூலம் கட்டமைத்து தந்த இஸ்லாமிய நாகரீகத்தையும் முஸ்லீம்களாகிய நாம் கைவிட வேண்டும் என்பதே குப்ர் எம்மீது தொடுத்துள்ள போர் ஆகும் .

இந்தப் போரை நாம் எவ்வாறு எதிர் கொள்வது !? இதுதான் இன்று ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை . ஏறத்தாழ கீழ்வரும் தீர்வுகளே எம்மவர்களால் முன்வைக்கப் படுகின்றது .

1. நாங்கள் சில அடிப்படை இபாதாக்களையும் ,அஹ்லாக்குகளையும் பேணுவோம் காலத்தால் அல்லாஹ் (எதோ மந்திரத்தால் பறிக்கும் மாங்காய் போல) எமக்கு வெற்றியை தருவான் எனக் கூறி கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்தையும் ஆதாரம் காட்டுகிறார்கள்

"உங்களில் ஈமான் கொண்டு நற்செயல்கள் (அமலுஸ் சாலிஹாத் )புரிகிறார்களோ அவர்களை , அவர்களுக்கு முன்னிருந்தவர்களை ஆட்சியாளர்கள் ஆக்கியபோல் ,
இவர்களையும் நிச்சயமாக பூமியில் ஆட்சியாளர்களாக ஆக்குவதாகவும் ,இன்னும் அவர்கள் பொருந்திக் கொண்ட(இஸ்லாம் ) மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக
நிலைப்படுத்துவதாகவும் , அமைதியையும் ,பாதுகாப்பையும் கொண்டு அவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் "

( சூரா அல் நூர் : வசனம் 55)

அமலுஸ் சாலிஹாத் என்பது வெறும் அடிப்படை இபாதாக்கலான( தொழுகை , நோன்பு ) போன்ற சிலவிடயங்களையும் ,இன்னும்
சில அஹ்லாக்குகளையும் செய்வது மட்டுமல்ல ,வஹியின் திட்டமிட்ட எல்லா நகர்வுமே ஆகும் . (அது 'அர்க்கம் (ரலி)யின் வீட்டை தேடிச் சென்றது முதல் அபீசீனிய நகர்வு , அகபா ,பையதுர் ரிள்வான் போன்ற ஒப்பந்தங்கள் , ஜிஹாதியக் களங்கள் ,அதில் கொல்லுதல் ,கொல்லப்படுதல் இப்படித் தொடரும் ) இப்படிதான் எம் முன்னோர்கள் மார்க்கத்தை விளங்கி இருந்தார்கள் விளக்கினார்கள் , நடைமுறையில் காட்டினார்கள் . சுன்னாவை புறக்கணித்து இஸ்லாம் பேசும் இந்தத் தவறை விட்டு விடுவோமா !?

(வளரும் ..)

Jul 12, 2013

அந்த நாள் முதல் இந்த நாள் வரை ......

அந்த நாள் முதல் இந்த நாள் வரை ......

நான் கீழ்தரும் சம்பவம் 1965ல் எகிப்தில் நிகழ்ந்தது . சோவியத் யூனியனதும் , அமெரிக்க ஏகாதி பத்தியத்தினதும் விசுவாசம் மிக்க கங்காணிகளாக தொழில்பட்ட ஜமால் அப்துல் நாசரின் அநீதமான அடக்குமுறை ஆட்சியின் கீழ் அல் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினர் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட காலப்பகுதி . அந்த இயக்கத்தின் அதி முக்கிய உறுப்பினரான செய்யத் குத்ப் (ரஹ் ) இரண்டாம் முறை கைது செய்யப் படுகிறார்.

இவரது உடல் நலன் முற்றாக பலவீனமான நிலையில் இருந்தபோதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து இழுத்துச் செல்லப் படுகிறார் . நாசர் தரப்பு இம்முறை ஒரு தெளிவான முடிவோடு இவர் விடயத்தில் இருந்தது . இவரது குற்றச் சாட்டுகள் மற்றும் விசாரணை தொடர்பில் இரகசிய விசாரணையோடு கூடிய இராணுவ நீதிமன்றமே தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. இந்த விசித்திர விசாரணையில் குற்றங்களை மறுக்கும் அனுமதி கூட மறுக்கப் பட்டிருக்க , ஏறத்தாழ 11 குற்றச் சாட்டுகள் தொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது .

இந்த 11 குற்றச் சாட்டுகளும் இவர் எழுதிய 'மைல் கற்கள் ' என்ற நூலை அடிப்படையாக வைத்தே அத்தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது .armed force magazine ,volume number 446, 18 அக்டோபர் 1965ல் இத் தீர்ப்பின் விபரம் வெளியிடப் பட்டிருந்தது . இந்தக் குற்றச் சாட்டுகளின் சுருக்கம் ஒன்றை 'அல் இஹ்ராம் 'எனும் நாளிதழ் வெளியிட்டது . அது கீழ் வருமாறு இருந்தது .

1. செய்யத் குத்ப் தன் சொந்த நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார் .இந்த வகையில் தன் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்தார் .

2.இவர் எகிப்தின் பொறுப்பு மிக்க தலைவர்கள் ,அதிகாரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டினார் .

3.எகிப்தின் புகழை உலகில் உயர்த்திடும் நடிகர்களையும் ,நடிகைகளையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார் .

4. மைல் கற்கள் எனும் இவரது நூலில் இந்த உலகில் இருக்கும் எந்தக் கொள்கையும் மனித இனத்தை அழிவில் இருந்து காத்திடாது . இஸ்லாம் மட்டுமே மனித சமூகத்தை அழிவில் இருந்து காக்கும் வல்லமை மிக்கது என சாதிக்கிறார் .

5.இவர் மைல் கற்கள் எனும் இவரது நூலில் எகிப்தில் இருக்கும் ஆட்சியும் ,ஆட்சியாளர்களும் 'ஜாஹிலீயா ' எனும் அறியாமையில் இருப்பதாக நிரூபிக்கிறார் .இதன் மூலம் யாருக்கு கீழ்ப்படிய வேண்டுமோ ,அவர்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்கிறார் .

6.இவர் மைல் கற்கள் என்ற நூலில் எகிப்திலிருக்கும் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை செயல் படுத்தவில்லை .இவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியை அபகரித்துக் கொண்டார்கள் .இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்கள் என வாதிக்கின்றார் .இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டுகிறார் .

7.மேலும் இந்த நூலில் எகிப்தின் இன்றைய ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து ஆட்சியை மீட்டே ஆகவேண்டும் , எனப் பிரகடணப் படுத்துகிறார் .இதற்கு பலத்தை பிரயோகிப்பது விரும்பத்தக்கது மட்டுமல்ல கடமையும் ஆகும் என வாதிக்கிறார் . அல் குர் ஆன் வசனங்களை இதற்கு ஆதாரப் படுத்துகிறார் . இது ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய ஒரு புரட்சியை தூண்டிவிடும் மன்னிக்கவியலாத குற்றமாகும் .

8. மேலும் இந்த நூலில் இறைவன் தன் தூதரிடம் (ஸல் ) யாரெல்லாம் அவருடன் போராட வருகிறாரோ அவர்களோடு போரிட வேண்டும் என்றும் ,யாரெல்லாம் போரிட விரும்பவில்லையோ அவர்களை விட்டுவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டதாக கூறுகிறார் .அத்தோடு இஸ்லாம் தற்காப்புக்காக தான் ஜிஹாதை கடமை ஆக்கியுள்ளது ;என்பதை மறுத்து ஜிஹாத் என்பது மனிதன் மனிதனை ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்கும் வரை தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார் .இஸ்லாம் எனும் பேரியக்கத்தின் இயல்பும் ,போக்கும் இதுதான் என்கிறார் .

9. அதே போல இஸ்லாம் மேலோங்கிய பின்னால் பின்னால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் கிளர்ச்சியை யாரும் செய்ய முடியாது என்று கூறுகிறார் .

10. இஸ்லாத்தை நிலைநாட்டுவதில் ஏற்படும் அத்தனை தடைகளையும் அவசியமானால் பலத்தை பயன்படுத்தி அகற்றிட வேண்டும் ; இதை அல் குர் ஆன் வசனங்களை கொண்டே நிரூபிக்கிறார் .

11.மேலும் இந்த நூலில் குத்துப் ,அதிகாரம் ,பலம் ,அல்லாஹ்வின் ஆட்சி ,அதற்கு எதிரான தடைகள் அகற்றுதல் என்ற பதங்களை அதிகம் பிரயோகிக்கிறார் , இது ஒரு புரட்சியை தூண்டும் வசனங்களாகும் .

மேலே தந்தவையே அந்த எகிப்திய இராணுவ நீதி மன்றம் செய்யத் குத்ப் மீது சுமத்திய குற்றமாகும் . இந்த மனோபாவத்தில் இருந்து இன்றுவரை எகிப்திய இராணுவம் தனது மனோபாவத்தை கைவிடவில்லை . அதாவது இஸ்லாத்தை வெறும் மதமாக சிந்திக்கும் முஸ்லீம் தவிர யாருக்கும் எகிப்தில் இடமில்லை . ஆனால் இஸ்ரேலோடு உறவு மட்டும் நிரந்தரமானது . இது யாருடைய இராணுவம் !?

கற்ற பாடங்கள் போதும் சகோதரா ...! (பகுதி 04)

கிங்க்ஸ் ஸ்டைல் பொலிடிக்ஸ் முஸ்லீம் நிலங்களில்
இஸ்லாத்தை எதோ 'ஊறுகாய்' போல் தேவைக்கு ஏற்ப
அவ்வப்போது தொட்டுக்கொள்ளும் ! அந்த 'கிங் டோமை '
'கூல்' ஆக்கும்'முதவாக்களின் பத்துவாக்கள்' சிலுவை
நிழலில் மன்னன் சொல்லும் நியாயங்கள் முன்
மௌனித்து வஹியை கௌரவமாக எளனிக்கும்!

செக்கியுளர் திமோகிரசி இஸ்லாத்தை முஸ்லிமுக்கே
கறி வேப்பிலை ஆக்கி சற்று வாசனையோடு வாழ விடும்
ஆனால் இஸ்லாத்தால் ஆல விடாது ! இங்கு
அல்லாஹ்வின் விருப்பம் மனித தேர்வுகளின் முன்
ஒரு கௌரவப் புறக்கணிப்பு ஆகிவிட 'வஹி' யும்
ஒரு தேர்வாக பெயரளவில் உலா வரும் !

நுபுவ்வத்தின் வழியில் கிலாபாவை கொண்டுவர
ஸுன்னாவின் வழியில் பாதையை சகோதரனே நீ தேடு!
அதில் தான் உனது இம்மை வாழ்வில் இஸ்லாம்
செழிக்கும் ஒரே வழியாகும் . இந்த உண்மைகளை உணராமல்
குப்பாரின் செல்லரித்த கொள்கைகளில் புல்லரித்துப் போய்
சாக்கடையில் மூழ்கி சந்தனம் தேடும் இன்னொரு '
வேர்சனுக்கு 'நாள் குறித்தால் மறுமையில் அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் கொடுக்கவும் காத்திரு ! அல்லாஹ் நம்மை இந்த இழிவில் இருந்து பாதுகாப்பானாக ...

(முற்றும் )

Jul 11, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 03)

செக்கியுலரிச அகராதியில் மார்க்கம் மதமாகி !
மஸ்ஜித் கதவுகளால் சற்று எட்டிப் பார்க்க
'எக்ஸ்பயார்ட் ' ஆக்கப்பட்ட சத்தியத்தின் பூமி
சண்டாளர்களால் சதிக்கோல வாழ்வியலால்
பிரித்தாளப் பட்டிருந்தது ! இந்த அவமானத்தை
அரவணைத்த உம்மத்தின் புத்திரர்கள்
அறியாமைச் சடத்துவத்தில் புதுச் சுவை கண்டார்கள் !
இன்றுவரை தொடருது இந்த இழிவான அரசியல் !
அது தாகூதிய தாண்டவம் !
சகோதரா !அதில் நீயும் ஓர் கூத்தாடியா !?

எரிந்து விட்டது கூரை இனி தெளிவாய் தெரியும்
நிலா ! என சூழ்நிலையில் சுகம் காண முடியாது !
விரல் விழுந்து விட்டது இனி நகம் வெட்டும் நேரம்
மிச்சம் ! என இருப்பதில் இலாபம் பார்ப்பது ஒன்றும்
இஸ்லாம் கற்றுத் தந்த ' ஹிக்மத் ' அல்ல !
சந்தர்ப்ப வாதப் புதை குழியில் 'அல்ஹம்து லில்லாஹ் '
என்று அமர்ந்து நாமே எம் தலைக்கு மண்ணள்ளிப்
போட முடியாது சகோதரா !

இஸ்லாம்தான் இலக்கானால் அதன் அடைவுப்
பாதையை 'குப்ரா ' காட்டித்தரும் ! இப்லீஸ் சொல்லித்
தந்த 'ஆயத்துல் குர்ஷி ' போன்றதா ' திமோ கிரசி '!?
வேத வாக்காகக் கொள்ள !? வஹியை வாழ்க்கையாக்குமுன்
'மௌட்டீக ' குப்பையை நம்பியா குடும்பம் நடத்துவது
முஸ்லீம் என்ன பொறுக்கித் திண்ணியா சகோதரா !?

ஏகாதிபத்தியப் பேய்கள் I. M.F கடிவாளத்தோடு
உன்வாசல் வந்தபோது, அது ஏதோ அற்புத விளக்கு போல்
காட்டி 'அலாவுதீன் கணக்கில் நீ 'ரீல் 'விட்டபோது ,
'ஹலாலின்' நிர்வாணத்தை வட்டியுடை உடுத்தி
'ஹராம் ' எளனித்த போது, வயிற்றெரிச்சலோட
உன்னை எச்சரித்தோம் ! அப்போதும் அபூஜாஹில்களுக்காக
புறக்கணிக்கப் பட்ட உம்மி மக்தூம்களாக (ரலி )
நாம் ஆக்கப் பட்டாலும் , இன்று சில நேரம் புரிந்திருக்கும
பிறவிக் குருடன் காட்டும் காலைக் காட்சிதான்
உன் விளக்கம் என்பதை !? இருந்தும் உனக்காக
தொடர்ந்தும் பிரார்த்திப்பேன் நீ என்றும் என் சகோதரன் ....



(இன்னும் வளரும் )

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 02)

தாருள் இஸ்லாத்தை குப்ரால் குளிப்பாட்டி
தேசிய விலங்கிட்டு மனித அடிமைதுவத்துக்க
முஸ்லிமை மறுபிரவேசம் புரிய வைத்தது
அந்த 1924 ம் ஆண்டுதான் ! - வில்லங்கம் அன்று
தாத்தாரியர் பாக்தாதுக்குள் நுழைந்தது போல்
வாளேந்தி வரவில்லை ! அது இந்த முஸ்லீம்
உம்மத்தின் உதிரத்தில் உதித்த ஒரு அடாவடி
மகனால் தான் நிகழ்ந்தது 'ஜாஹிலீய ' மயக்கத்தில்
மதிகெட்டு அந்த மாபாதன் முஸ்தபா கமால் அதாதூர்க்
மிதித்தான் இஸ்லாத்தின் அரசியலை என்பது உண்மை .

ஆனால் அதற்குமுன் அரபி அஜமிக்கு அடிமையா !?
என்ற மமதை நெருப்பு 'கிலாபாவை ' பற்றவைத்து
சகோதரத்துவத்துவத்தை சாம்பலாக்கி அதில்
சுல்தானிசம் சுயநலத்தோடு சுகப்பிரசவம் கண்டதும்
மறுக்க முடியாத உண்மையாகும் .அந்த எறிந்த வீட்டில்
கொள்ளி பிடுங்குவது 'தாகூதிய ' கோட்டான்களுக்கு
சுலபமாய் போனது !அது குரங்கு கையில்
பூமாலையாகி மரம் தாவித் தத்துவத்தில் முஸ்லிம்
உலகின் அரசியலை மாற்றியது !

கோலா லீற்றருக்கு மசகு எண்ணை பீப்பா சமன் என்ற
'வெஸ்டன்' புரபிட் பேஸ்' அந்தப்புர' பெனிபிட்களால் '
புரிந்தும் புரியாமல் விடப்பட்டது ! இந்த முஸ்லீம்
'கிங் கோப்ராக்களுக்கு ' மகுடி வாசிப்பு என்னவோ
பிரிட்டிஷ் M I 5 வும் U .S பென்டகனும் தான் என்பது
ஓபன் சீக்கிரட் ! எதிர்த்துக் கேட்போரை 'நீங்கள்
கேட்டவை என அடக்கி வாசிக்கத்தான்
'சரீயா ' சட்டமாம் இந்த பூச் சுத்தலுக்கு ரிசவ்
'பதுவாக்களோடு ' கிளிப்பிள்ளை ஆலிம்கள்
உலகெங்கும் ஏராளம் !
(இன்னும் தொடரும் ..)

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.!

நீயும் இந்த முஸ்லீம் உம்மத்தின் ஓர் அங்கம்
உனது காயங்களுக்காக எனது கண்களும் என்னை
அறியாமலே கண்ணீர் சிந்துகின்றன !உனது ஏமாற்றத்தில்
நானும் அதிர்ந்து போகிறேன் .இருந்தும் இன்று நடந்தது
கொடிய எதிரியோடு யுத்தத்தில் கண்ட விழுப்புண் அல்ல !
அவன் பொறியில் தேடிப்போய் மாட்டிய மகா தவறு !

நீதியையும் சமத்துவத்தையும் வேறெங்கோ தேடிப்போய்
உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொதித்த மக்களுக்காய் நீ
அரியணை ஏறியபோது படிமுறை மாற்றம் வெற்றிப்
படிக்கட்டாக உன்னால் படம் காட்டப் பட்டது ! மாற்றம்
என்பது மாறாதது என்று கூறி 'வஹியின்' (கதயி )
திட்டவட்ட முடிவுகளிலும் உன் திருவிளையாடல் புகுந்து
மக்கள் திருப்தியே மகேசன் திருப்தி என நீ சொன்னபோது
'சியோனிசத்தின்' கரகோஷம் அதன் மீடியாக்களால் வானைப் பிளந்தது !

காலத்தின் தேவை என்ற கண்கட்டு வித்தையில் இஸ்லாத்தை
நீ குப்ரின் விருப்புக்குள் இழுத்த இழுப்புக்கு சபாஷ் போட்ட
இந்த சாத்தானிய சக்திகள் பற்றி நீ அறியாமல் இல்லை !
இருந்தும் நீ கானல் நீர் பருக குடத்தோடு குதித்தது தான்
எனக்கின்று புரியவில்லை ! அதிலும் அரசியல் சரணடைவை
'ஹிக்மத்தாக ' மறுபெயர் கொடுத்தது எனக்கு கோபத்தை
கிளப்பியது !அப்போதும் உனக்காக பிரார்த்தித்தேன
எதரியின் சதியை விதியாக்கிய சரித்திரம் உன்னை
தொடராதிருக்க ஏனென்றால் நீ என் சகோதரன் .

(தொடரும் ...)

முகமூடி யுத்தம் எனும் இராணுவ பாசை ..! குப்ரிய அரசியல் தம் அழிவை தடுக்க தேர்ந்துள்ள இறுதி மொழியா !?

சந்தர்ப்பங்களை மிகச் சரியாக பயன்படுத்துவதில் இருந்து தான் குப்பார்களின் அரசியல் ஆதிக்க சதிகள் முஸ்லீம் உலகில் நிகழ்த்தப் படுகின்றன .ஆனால் இவர்களின் திட்டமிடல் என்பது ஒரு சவாலே தவிர விதியல்ல . முஸ்லீம் உலகில் இஸ்லாமிய அரசியல் வந்து விடக் கூடாது எனும் அச்சம் தவிர இதற்கான பலமான காரணம் வேறு இருக்க முடியாது .

முஸ்லீம்களின் பலம் வாய்ந்த இராணுவங்களை பலமிழக்க வைப்பதே லிபிய ,எகிப்து ,சிரிய விவகாரங்கள் மூலம் குப்ரிய எதிர் சக்திகள் சாதிக்க நினைப்பவை என தவறாக சில ஊடகங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றன . ஒரு ஒப்புக்காக இந்த கருத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் ,குப்ரிய மேலாதிக்கத்துக்கு எதிராக இந்த இராணுவ வலிமை எப்போது மிகச் சரியாக பயன்பட்டுள்ளது !? என்ற வினாவோடு நிலைமையை ஆராயும் போது அதன் விடை தேசிய விதிகளுக்குள் முடக்கப்பட்ட குப்ரிய மேலாதிக்க அரசியலின்
துணை கருவியாக பயன் பட்டுள்ளதா !? என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தி நிற்கின்றது .

முஸ்லீம் உலகின் இஸ்லாமிய அரசியலுக்கான சாதக சூழ்நிலைகளை ,அதற்கான அறிகுறிகளை காணும் பட்சத்தில் அவை தடுக்கப்பட ,திசை திருப்பப் பட சில நிர்ணயங்களை அவசரமாக செய்ய வேண்டிய கடப்பாடுகள் பற்றிய தடுமாற்றத்தை குப்ரிய சக்திகளுக்கு ஏற்படுத்தி விடும் .ஏறத்தாழ அவ்வாறான குழப்ப நிலைதான் இன்று மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது .

சுமூகமான குப்ரிய திட்டமிடல்கள் பலமிழந்து வரும் நிலையில் அது இஸ்லாத்தை மட்டுமே தீர்வாக வேண்டும் மக்களை நோக்கி இராணுவ அடக்கு முறையை அதற்கான சில நியாயங்களோடு பயன் படுத்தும் 'முகமூடி யுத்தத்தை 'தொடுக்க வேண்டும். அதாவது 'முஸ்லிமை முஸ்லிமால் முடக்கிப்போடும்ஜனநாயக அரசியல் கருவிகளின் செயல்திறன் பற்றி எழுந்துள்ள நம்பிக்கையீனமே இராணுவத்தை இறுதி வழிமுறையாக பயன்படுத்தி அதாவது 'முஸ்லிமை முஸ்லீம் இராணுவத்தால் அடக்கிப்போடும் அரசியலை செய்யத் தூண்டியுள்ளது .

இப்போது முஸ்லீம் உலகில் நடப்பது சர்வ நிச்சயமாக இஸ்லாமிய கிலாபா அரசியலின் மீள்வருகைக்கான தெளிவான அறிகுறிகளே ஆகும் . இப்போது இஸ்லாத்தின் எதிரிகள் நேரடியாக களம் குதிப்பதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும் அந்த முயற்சியிலேயே குப்பார்கள் காய் நகர்த்துகிறார்கள் .இஸ்லாமிய எழுச்சியை( 1970 களைப் போல்) வெறும் ஒரு இயக்கத்தின் வரையறைக்குள் வைத்து அடக்க முடியாது .காரணம் தனது உண்மையான அடிமைத்துவத்தை இறைவனுக்காக நிரூபிக்கும் தரத்தில் மக்கள் போராட்டத்தில் முஸ்லீம்கள் களமிறங்கி விட்டார்கள் .

இந்த குப்ரிய அநியாயக்காரர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக இவர்கள் துரும்பாக பாவிக்கும் முஸ்லீம் இராணுவமே சில ,பல ஜெனரல்களோடு இஸ்லாமிய இராணுவமாய் தம்மை எதிர்க்கும் என்ற பாலர் பாடத்தை சிரியாவில் இருந்து இவர்கள் புரிந்து கொண்டாலும் . வேறு வழியற்ற நிலையில் தொடுக்கும் முகமூடி யுத்தமே இன்றைய இராணுவ பாசை .

வரலாற்றையே மாற்றியது இந்த புர்க்கான் எனும் வஹி ......


(ரமழான் அல்குர் ஆனின் மாதம் அதன் சுவையை உணர்ந்த எம் முன்னோர்கள் எவ்வாறு மாற்றம் பெற்றார்கள் !? நாம் சிந்திக்க சில வரிகள் )

கோத்திர வெறியும் ,பழிவாங்கும் உணர்வும் மலிந்த பண்டைய அரேபிய தீப கற்பம் ; ஒரு சாராரின் ஒட்டகம் இன்னொரு சாராரின் தோட்டத்தில் நுழைந்து மேய்ந்து விட்டது எனும் ஒரே அற்ப காரணத்தி ற்காக பரம்பரை பரம்பரையாக வாட்களால் மனித இரத்தம் சுவைத்த சமூகம் . ஒரு தந்தையின் மரண சாசனம் அன்று விசித்திரமாக இருந்தது அது 'இன்னாரின் மண்டை ஓட்டில் நீ மது அருந்த வேண்டும் 'என மகனிடம் கடைசி ஆசையாக பணித்தது .

சுற்றியிருந்த ரோம் ,பாரசீக 'ஜென்டில் மேன்கள் ' எல்லாம் கூட இவர்களை 'இடியட்சாக ' சொல்லாமல் சொல்லி பக்குவமாக அவர்களது தேவைகளுக்கு பயன் படுத்தும் பண்ணை இடையர்களாக வேறு கருதிக் கொண்டிருந்தார்கள் . கருவுற்ற ஒரு பெண்ணை பார்த்தவுடன் சந்தியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த அந்த சமூகத்தின் இருவருக்கு ஒரு சர்ச்சை ஏற்பட்டது அது அவளின் வயிற்றில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா ? என்பதே சர்ச்சைக்கு அவர்களே காட்டு மிராண்டித் தனமாக தீர்வையும் கண்டார்கள் . நடுத் தெருவில் அந்தப் பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு சிசு ஆராயப் படுகிறது !

பெண் குழந்தை அவர்களுக்கு கேவலத்தின் சின்னம் அதை குழி தோண்டிப் புதைப்பது தான் அவர்களுக்கு கெளரவம் ! விபச்சாரம் அன்று வியாபாரம் மட்டுமல்ல ஒரு திருமண வழிமுறையும் கூட ! கணவனே கூட்டிக் கொடுப்பான் பிறக்கும் குழந்தைக்கு தானே தந்தை என மார்தட்டியும் கொள்வான் ! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் . இப்படியான ஜாஹிலீயத் ஆண்டு வந்த சமூகத்தை தான் 'வஹியின் ' வீச்சு தலை கீழாக புரட்டிப் போட்டது .

இன்றும் அதே ஜாஹிலீயா தலை விரித்து ஆடுகின்றது சற்று வித்தியாசமாக அறிவியல், தொழில் நுட்பத்தால் அலங்கரிக்கப் பட்டுள்ளது . இன்னும் நவீனம் காலத்தின் தேவை என்பவைகளால் சரிகாணப்பட்டுள்ளது . முஸ்லீம் சமூகமே ! புரிந்து கொள்ளுங்கள் இன்றைய ஜாஹிலீயத்திடம் நாங்கள் தோற்று விடக்கூடாது . அதை வெற்றி கொள்ள ஒரே வழி வஹியை 100% பின்பற்றுவதே தவிர வேறில்லை . வஹி வாசிப்பதற்காக மட்டுமல்ல அதன் வழி சுவாசிப்பதட்காகவும் தான் எமக்காக அருளப் பட்டுள்ளது .

Jul 9, 2013

ஒரு முஸ்லீம் மூலம் முஸ்லீம்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகிறார்கள்!?

எகிப்தின் இடைக்கால அரசிற்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நிகழ்வுகளும் அங்கீகாரமும் திட்டமிட்டபடி நடந்துள்ளன . செக்கியுலரிசம் வேசஸ் இஸ்லாம் என மக்கள் இரண்டு முகாம்களாக்கப் பட்டு மோத விடப்பட்ட நிலையில் மீண்டும் இராணுவம் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு இந்த ஆட்சி மாற்ற நாடகத்தை பக்குவமாக அரங்கேற்றியுள்ளது . இந்த இடத்தில ஆட்சிக்கடிவாளம் யாரின் கையில் இருந்திருக்கின்றது என்ற இரகசியம் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது .

மார்க்கத்தை மதமாக்குதல் என்பதில் இருந்துதான் முர்சி தரப்பின் அரசியல் தளம் பரீட்சார்த்தமாக அரங்கேற அனுமதிக்கப் பட்டுள்ளது என்றே நிலமையை சந்தேகிக்க வேண்டியுள்ளது .அந்த வகையில் வாழ்வியலில் இருந்து மார்க்கத்தை பிரித்து அது விகிதாசார அடிப்படையிலான மனித விருப்பு என்ற ஜனநாயக பாடத்தை பக்குவமாக மீண்டும் செக்கி யு லாரிஸ்ட் தரப்பு நடத்திக் காட்டியுள்ளதா !? அதன் மூலம் ஜெஸ்மின் புரட்சியின் வெளித் தெரியாத சப் மிசன் அடையப்பட்டுள்ளதா !? என்றே பல கேள்விகளை நாம் கேட்க வேண்டியுள்ளது .

இஸ்லாத்தை வாழ்வியலாகவும் அது அல்லாததை குப்ர் என (ஜனநாயகம் உட்பட ) நேற்று பேசியவர்களை ஒரு அரசியல் குழப்பத்தை காரணம் காட்டி நிகழ்வு சித்தாந்த நடப்பை நம்பி ஆட்சி ஏறுவதற்கான நியாயங்களை இஸ்லாத்தை ஒப்புக்கு காட்டி பேசவைத்து முஸ்லீம் உம்மாஹ் திசைதிருப்பப் பட்டது .அந்த வகையில் குப்ர் தரப்பு தனக்கெதிரான ஒரு சித்தாந்த
அரசியலை காலத்துக்கு ஒவ்வாத செல்லாக் காசாக ஒரு இஸ்லாமிய இயக்கத்தை !?வைத்தே பக்குவமாக பேச வைத்ததே கடந்த ஒரு வருடமாகும் .( பல வருட உழைப்பை ஒரு வருடத்தில் ஊதாரித்தனம் பண்ணிய உதாரண புருஷர்களாக முர்சி தரப்பு மாறியதுதான் இங்கு மிச்சமாகும் .)

1. போராட்டத்தில் தோல்வி என்பது வேறு எதிர்தரப்பில் இருந்து தனக்கெதிராக தானே பாவிக்கப் படுவதென்பது வேறு,
2.முஸ்லிமிடம் இருந்து இஸ்லாத்தை வேறுபடுத்துவது

  1. குப்பாரின் துல்லியமான இலக்கு இந்த இரண்டு அடைவுகளும் தான் . முபாரக்கை தூக்கி முர்சியை காட்டி இந்த இலக்குகள் ஒரு படமாக ஒட்டப்பட்டது ;பின் அவரையும் தூக்கி அட்லி மன்சூர் இன்று அமர்த்தப் பட்டுள்ளார் . எப்போதும் இஸ்ரேலோடு ' கேம் டேவிட் 'போன்ற ஒப்பந்தங்கள் பக்குவமாக பேணப்படும் என்பது மட்டும் தான் நிலையான எகிப்தின் அரசியலாக இருக்க வேண்டும் என்பதே 'சியோனிசம் ' கருதும் அடைவு மட்டமாகும் .

அல் பத்ர்' எனும் சமர்க்கள வெற்றி (ரமழானை நினைவுறுத்திய மீள் பதிவு )

ரமழான் வெற்றியின் மாதம் என முஸ்லிம்களால் பொதுவாக கூறப்படும் . ஆனால் இந்த மாதத்தில் முஸ்லிம் உம்மாவின் பலத்தை பறைசாற்றிய நிகழ்வுதான் 'அல் பத்ர்' எனும் சமர்க்கள வெற்றி என்றால் அது மிகையான கருத்தல்ல . பலமான எதிரி அவனின் வலுவான ஆயுதங்கள் இதற்கு முன்னாள் முஸ்லிம்களின் உள்ளிருந்தே நயவஞ்சகமாக
உடைந்து சென்ற ஒரு கூட்டம் வேறு ;தோற்றுப்போவதட்கே என என்னும் அளவிற்கு ஒரு சிறு படை ஒரு சில வேலை அப்படையை இஸ்லாத்தின் உயராயுதப் படை என்றல்ல மிஞ்சி இருந்த உயிராயுதப் படையணி என்று கூட சொல்லமுடியும் !
'பத்ர்" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: 'உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்டமூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப்போதாதா?" என்று.(ஆல் இம்ரான் 3:123 124)
இஸ்லாமிய வரலாற்றில் இது முதல் போரும் முதல் வெற்றியுமாகும்.

313 படைவீரர்கள்2 குதிரைகள் 70 ஒட்டகங்களுடன் நபிகளார் தலைமையில் மதீனாவினின்று சென்றஇஸ்லாமிய படையானது 1000 வீரர்கள் 100 குதிரைகள் 700 ஒட்டகங்களுடன் மக்காவினின்றும்அபு ஜஹல் தலைமையில் வந்த படையை வீழ்த்தியது. அப்போரின் போது இறைவன்நபிகளாருக்கு(ஸல்) வஹீ மூலம் அறிவிக்கின்றான்.

உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: '(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

இதனைக் கேட்ட நபிகளார்(ஸல்) மகிழ்சியுற்று 'ஓ அபூபக்கர்! அல்லாவின் வெற்றி நம்மை வெகுவிரைவில் வந்தடையும். அல்லாவின் மீதாக ஜிப்ரயீல் குதிரையில் வருவதை என்னால் காணமுடிகிறது" என்றனர்.

இதனைப்போன்றே யூத அரசுக்கெதிரான போரில் வெற்றி பெருவோம் என்பது மட்டுமன்றி இஸ்லாத்தின் ஆதிக்கம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதையும் பல ஹதீத்கள் விளக்குகின்றன. அதற்காக நாம் துஆ செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஒரே உம்மத்தாக நின்று ஒரே இஸ்லாமிய அரசினை நிலைநாட்டி அதன்மூலம் அவ்வெற்றிகளுக்காக பாடுபடவேண்டும் என்பது இஸ்லாம் நம்மீது விதித்த கடமையாகும்.

பத்ர் போரின் வெற்றி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை வலுப்படுத்தி மதினாவில் ஒரு வலுவான அரசினை நிலைநாட்டி அதனை அரசியல், ஆன்மீக, ராணுவ மையமாக ஆக்கியது.

"முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். "(அந்நிஸா :141)
"விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்." (ஆல இம்ரான் :28)
விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம்.(60:1)

*பத்ர் களத்தின் பின் மிக முக்கிய வெற்றியான 'பத்ஹ மக்கா ' அதாவது மக்கா வெற்றியும் இந்த ரமழான் மாதத்தில் தான் நிகழ்ந்தது .இதன் பின் பல வெற்றிகள் இந்த மாதத்தில் கிடைத்திருந்தாலும் இன்னும் இரு முக்கிய வெற்றிகளை உங்கள் முன் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது .
ஓன்று ஏறத்தாள பதினெட்டு இலட்சம் முஸ்லிம்கள் ஈசல்கள் போல் கொல்லப்பட்டு மீண்டும் முஸ்லிம் உம்மா தலை தூக்குமா !!? என கருதிய தத்தாரிய சத்துருக்களை ஸைபுதீன் குத்ஸ் என்பவர் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜலுத் எனுமிடத்தில் 26ம் ரமழான் 658ல் வீழ்த்தினார்.இறைவனது உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.இப்படி வரலாறு தொடர்ந்து இந்த நூற்றாண்டின் ஒரு நிகழ்வு இதோ .

அது 1990௦ களில் ரஷ்ய செங்கரடிகள் ஒட்டு மொத்தமாக அவர்களது அடிவருடிகளோடு ஆப்கனிலிருந்து விரட்டப்பட்டதும் ஒரு ரமழான் மாதத்தில்தான் !! இஸ்லாமிய வரலாறு எமது வெற்றிகளுக்ககவும் வாயில்களை திறந்தே வைத்துள்ளது ;அது வாழ்வதற்காக இறக்கும் உலகில் இறப்பதற்காக வாழ எம்மை தயார் படுத்தும்வரை ஒரு எட்டாக்கனி ! அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) குறிப்பிட்டது போல் உலகத்தை வெறுத்து மரணத்தை நேசிக்காத வரை நாம் குப்பார்களின் சுவையான உணவுப்பண்டம் தான் .

ஹிஜ்ரி 1434 ரமழான் தலைப் பிறை அறிவிப்பு


شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). ( 2:185)
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பின்வருமாறுகூறியுள்ளார்கள்,
 "ரமழான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு)பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம்தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" (ஸஹீஹ் முஸ்லிம்)
 புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை ஷரியாஹ் விதிமுறைகளின்படிதிங்கள்கிழமை உறுதி செய்யப்படாததால், இன்ஷா அல்லாஹ் நாளை,செவ்வாய்க்கிழமை ஷஹ்பான் மாதத்தின் 30 ஆவது நாளாகவும், புதன்கிழமை(ஜூலை 10ஆம் திகதி) புனித ரமழான் மாதத்தின் முதல் நாளாகவும்தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமீர், அல் ஆலிம் அதா பின்கலீல் அபூ ரஷ்தாவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
 இந்த புனித மாதத்தில், வறுமையாலும், ஆக்கிரமிப்பாலும்,அடக்குமுறையினாலும் உலகெங்கிலும் துன்பப்படும் நம்முஸ்லிம் உம்மாஹ்வை எமது துஆக்களிலும்பிரார்த்தனைகளிலும் நினைவு கூறுவோம்.

இகாமதுத் தீனுக்காய் ஸுன்னாவை' மிஞ்சிய 'ஹிக்மத்' ஒரு சிறப்புப் பார்வை

எதிரியின் கையில் அழிவுக்கான ஆப்பைக் கொடுத்து விட்டு சந்தர்ப்பம் வந்தால் அடிக்கலாம் என்ற மனோபாவத்தையும் அவனுள் வளர்த்து விட்டு ஆட்சித் தலைமையை பிடித்தல் ஊடாக படிமுறை மாற்றம் என்ற 'சிரிஞ்சில் ' இஸ்லாமிக் வக்சினை ' செலுத்தி சமூக மட்டத்தில் தேவைக்கு தகுந்தால் போல் 'டோஸ் ' போட்டு சத்தியத்தை சாத்தியமாக்கலாம் என்ற 'ஹிக்மத் ' இப்போது அதன் ஆபத்தான எதிர்விளைவை எகிப்தில் சந்தித்துள்ளது .


இந்த நிகழ்வுகள் உண்மையில் சந்தோசப்படும் ஒரு விடயமல்ல என்பதை இஸ்லாத்தின் மீது பற்றுக் கொண்ட முஸ்லீம்' உம்மாஹ் 'உணர்ந்து கொள்ள வேண்டும் .விடயத்தை இயக்கவியல் கோணத்திலோ , தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை மையப்படுத்தியோ சிந்திப்பது என்பதை விட தவறை திருத்திக் கொள்ள ,சரியானதை தேந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமாக சூழ்நிலையை பயன்படுத்துவது சிறந்தது .

எதிர்தர கோட்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு , விட்டுக்கொடுப்பு என்பனவற்றில் காணப்படும் நிபந்தனை எனும் அரசியல் தந்திரம் மிகச் சரியாக உணரப்பட வேண்டும் . அல்லாது விடின் வீழ்ந்து விடுவோம் அல்லது வீழ்த்தப்படுவோம் என்பது நடைமுறை உண்மையாகும். நடப்பது முரண்பாடான இரண்டு 'அகீதாக்களுக்கு' இடையிலான போராட்டமாகும் இதில் சமரசம் எனும் நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டதே எதிர்தரப்பு என்பதை இஸ்லாமிய வாதம் பேசுபவர்கள் உணர்ந்த நிலையிலேயே அதை பயன்படுத்த களமிறங்கினர் . எதிர் தரப்பின் பொறுமை ,அதன் எல்லை என்பன பற்றி சற்றும் சிந்திக்காத வகையில் இந்த திட்டமிடல் சிந்திக்கப் பட்டுள்ளது .

ஒரே அணி ஆனால் இரு வேறுபட்ட இலக்குகள் அதனால் சந்தர்ப்பங்கள் சிலபோது 'சேம் சைட் கோல் ' போட்டாவது இலக்குகளை அடையவே சிந்திக்கப்படும் .எனவே இங்கு முரண்பாடென்பது உணரப்பட்ட விதி .போராடி மரணித்தல் என்பது வேறு தூக்கு மரத்தில்
ஏறி கழுத்தில் கயிற்றைப் போட்டாவாறு வாழ்தல் என்பது வேறு ! அந்த வகையில் தற்கொலை அரசியல் ஒரு வெற்றிகரமான பாதையாக பார்க்கப் பட்டுள்ளது என்பதுதான் உண்மையாகும் .

எதிர் கோட்பாட்டின் நிபந்தனையுடன் கூடிய எந்த ஒத்துழைப்பையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) ஏற்றுக் கொண்டதாக சீறாவில் எந்த ஆதாரங்களுமில்லை . அது மக்காவில் அவர்கள் பலம் குன்றிய நிலையில் இருக்கும் போதோ ,மதீனாவில் பலமான நிலையில் இருக்கும் போதோ நிகழவில்லை .இஸ்லாத்தை நிலைநாட்டுதல் தொடர்பில் 'ஸுன்னா 'விட்டுச் சென்றுள்ள அடிப்படை நியதிகள் பற்றிய தெளிவு ,தேடல் இன்று அவசியமானதாகும் .

'ஜாஹிலீயா' என்பது தொழில் நுட்பத்தால் மெருகேற்றப்பட்டுள்ளது ; என்பதுதான் உண்மை .தவிர மிகை தொழில் நுட்பம் என்பது அடிப்படை நியதிகளை மாற்றிவிடாது . அதாவது அபூஜஹளுக்கும் , ஒபாமாவுக்கும் இடையிலான பொது உடன்பாடு மாறிவிடாது . எனவே ஒரு முஸ்லிமை பொறுத்தவரை தனது வாழ்வியலுக்கான நகர்வுகளை 'ஸுன்னா வில் ' இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் . அந்த நகர்வின் தோல்வியும் வெற்றிதான் . அது அற்ற முயற்சிகளின் இடைக்கால வெற்றிகளும் தோல்விதான் .

அந்த வகையில் பார்க்கும் போது அல்லாஹ்வின் தூதரது அரசியல் நகர்வில் கீழ்வரும் மூன்று அடிப்படைகள் துல்லியமாக பொதிந்திருப்பதைநாம் அவதானிக்க முடியும் .
1. கூவதுல் அகீதா .(பலம் மிக்க கோட்பாட்டு கட்டமைப்பு )
2. கூவதுல் வஹ்தா .(பலம் மிக்க சகோதரத்துவக் கட்டமைப்ப
3. கூவதுஸ் சிலாஹ் . (மேற்கூறிய இரண்டையும் அடிப்படையாக கொண்ட இராணுவ வலிமை ) . இந்த மூன்று நிலைகளும் சாத்தியப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் வரை அல்லது அத்தகு சூழ்நிலைக்கான நிபந்தனையற்ற ஆதரவுத் தளம் உருவாகும் வரை கருத்தியல் போராட்டத்தையே விடாது தொடர்ந்தார்கள் என்பதுதான்
தெளிவான சீரா .

அதை விட்டுவிட்டு குப்ரிய கோட்பாட்டின் கீழிருந்து 'செக்கியூலரிச ' செக்கிழுத்து இஸ்லாமிய எண்ணை வார்ப்போம் என்ற ஸுன்னாவின் பாதையற்ற தவறான வழிமுறைகளை கைவிட்டு சரியானதை தேட இந்த நிகழ்வு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன் மிக்க கிருபையுடையவன் .

Jul 7, 2013

எகிப்தில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்தியம் .... ஒரு பார்வை.

ஒளியை மிளிரச் செய்ய இருளிடமும் அனுமதி கேட்பதா ? 'ஹக்கை ' அமுல் படுத்த 'மெஜாரிட்டி 'பவரா ? அதுவும் இஸ்லாத்தை அமுல் படுத்த முஸ்லீமிடமே உத்தரவு வேண்டப் படுகின்றதா ? சற்று குழப்பமான விடயம்தான் . வேலி போட பயிரின் அனுமதி வேண்டுமாம் !!

நியாயங்களை புதைத்து விட்டு ஒப்புக்காக காரணம் தேடுவது அயோக்கியத் தனமானது . 'வஹியின் ' தேவைப்பாடு தொடர்பில் விகிதாசாரம் பார்ப்பது ஒரு முஸ்லிமை பொருத்தவரை மிகத் தவறானது . அல்லாஹ்வின் மார்க்கத்தை பலதோடு ஒன்றாக நிணைப்பதும் அறிவிற்கு பொருந்தாதது . நடப்பது இதுதான் (நவீன ஜாஹிலீயத் எனும் )ஜனநாயக விழுமியங்களின் கீழ் 'வஹி ' விளையாட்டுத் தனமாக ஏளம் விடப்பட்டுள்ளது .

'வஹி' விருப்பாளர்கள் வெற்றி பெற்றால் அதுவும் சில நிபந்தனைகளோடு பிரயோகிக்கப் படலாம் , 'வஹியை ' விரும்பாதோர் வெற்றிபெற்றால் வழமை போலவே 'வஹி , கிடப்பில் போடப்படும் .அவ்வளவுதான் .

ஜெஸ்மின் புரட்சியின் சடவாத முன்னுரிமை இதுதான் .அதாவது ஆட்கள் தொகையே சத்தியத்தையும் நடைமுறை சாத்தியமாக்கும்.மேலும் நவீனம், காலத்தின் தேவை 'வஹியை ' காலாவதி ஆக்கும் வல்லமை பொருந்தியதாம் .

உண்மையில் இங்கு நடக்கின்ற கதை சாத்தியத்தை காரணம் காட்டி இஸ்லாம் மதச்சார்பின்மை எனும் தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப் பட்டுள்ளது . கடைசி நிமிடத்தில் அதனை பெரும்பான்மை சிலநேரம் காப்பாற்றலாம் .அல்லாது விடின் அசத்தியம் சாத்தியமாக உலாவரும் .ஆச்சரியமான தீர்ப்பு ! இது அல்லாஹ்வுக்கே நியூ சிலபஸ் போல் தோன்றவில்லையா !!?

நாம் முஸ்லீம் என்பதிலேயே இன்று வெட்கப்பட வேண்டியுள்ளது . வாக்குச் சாவடிக்குள் முண்டியடித்து 'வோட்டுப்' போட்டுத்தான் அல்லாஹ்வின் மார்க்கத்தை அமுல் நடாத்த கோரவேண்டியுள்ளது . முஸ்லீம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல் எனும் பொருள் உண்டு தெரியுமா ?எதற்கு ?என்ற இன்னொரு கேள்வி கேட்டால் இங்கு நாறிப் போகும் பிழைப்பு !!

இந்த முஸ்லீம் உம்மத்தின்உயிரோட்டம் மழுங்கடிக்கப் பட்டுள்ளது. அது சுத்திச் சுத்தி சுப்பனின் கொல்லை என்பது போல் 'திமோகிரசி ' கண்ணாடி போட்டுத்தான் உலகத்தை பார்க்க வேண்டுமாம் .என்பது ஏவல் விலக்கல் தொடர்பில் முஸ்லீம்களுக்கு கிறிஸ்தவம் போல இனி ஒரு புதிய ஏற்பாடு .அதாவது வாழ்வியலை தீர்மானிப்பது' மெஜாரிட்டி பவர் ' !! சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது .

இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு அது தன்னை அமுல் படுத்த நிபந்தனையற்ற உதவியையே வேண்டி நிற்கும் .அந்த உறுதிப்பாடான நிலை உருவாகும் வரை சிந்தனா ரீதியாக போராடும் .தனது எழுச்சிக்காக ஆள் வளத்தை திரட்டுவதென்பதுவேறு ,தன்னை நியாயப் படுத்த ஆள்வளத்தில் தங்கி நிற்பது வேறு .இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றாகி விடாது . தவிர 'சுன்னாவில்' இருந்து ஆதாரம் காட்ட முடியாதது .

சத்தியத்தின் போராட்டம் என்பது கிடைப்பதை சுருட்டிக் கொண்டு கிடைக்காததற்கு பெரும் பான்மையின் வாக்குப் பிச்சை வேண்டுவதல்ல . இஸ்லாத்தை இகாமத் செய்யவே இங்கு அதிகாரம் கோரப்படும். அதிகாரத்துக்காகஇஸ்லாம் சோடை போக வைக்கப்படக் கூடாது . அல்லாஹ்தான் நம் அனைவரையும் யகூதி ,நசாராவை பின்பற்றும் கீழ்த்தரமான வழிமுறைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இந்த முடிவு சரிதானா !?


சிதறிய சில்லரைகளாய் சிங்களத் தீவில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை நாம் சமரச சதிவலையில் சரண்டர் 'பொலிடிக்சை' குப்பார் சொல்ல சமத்துவம் ,சகவாழ்வு என்று
தனித்துவம் தொலைத்து தத்துவம் பேசுகிறோம் !!

தொட்டிலில் இருந்து கபுறு வரை கபிடளிசம் கோடு போட
அதில் ரோடு போட்டு வாழ்க்கை வண்டி விட்டு
'அல்ஹம்துலில்லாஹ்' சொல்லுவது யாரை ஏமாற்ற !?
உன் சிலையை வணங்க மாட்டோம் ஆனால்
பூஜைக்கு பூத்தருவோம் என்ற புது விளக்கம் புரியவில்லை !!

'ஹிஜாபும் ,நிகாபும் ' இங்கு தேவையில்லை ''அவுரத்'
ஒன்லி அரேபியன்ஸ் ' என்று முஸ்தபா கமாலின்
பேரப் பிள்ளைகள் இங்கு பட்டிமன்றம் போட
சல்மான் ருஸ்டியும் , தஸ்னிமா நஸ்ரினும் சபாஸ் போட
'லம்யா கடோல்' புன்முறுவல் பூக்கிறார் !!

நேட்டோவோடு கைகுலுக்கி ,வீட்டோ பவர்களின்
தத்துப் பிள்ளையாகி சுவரில்லா சித்திரமாய் இஸ்லாம்
காட்டும் 'ஹிக்மத் ' தொண்டர்கள் பெரும்பான்மைக்குள்
சிறுமைப்பட்டுப் போக நாமும் வாழவேண்டும்
இந்த இம்மையில் இழிமை பட்டாலும் பரவாயில்லை!!
எனும் முடிவு சரிதானா !?

நிஜாமான செய்தி


Atha Ullah
நீ சொல்ல வந்த செய்தி
நான் சொல்ல மறந்த செய்தி
நாம் வெல்ல இருந்த செய்தி - இப்போது
எம்மை சல்லடையாக்கிய செய்தி-இது
பிந்திய செய்தி - அல்ல - அல்லது
பின்தங்கிய செய்தி யும் அல்ல - இது தான்
சத்தியத்தின் செய்தி.........

வஹி சொன்னது - செய்தி
அண்ணல் எம் பெருமானுக்கு

வஹி நிழலில் சீரா சொல்லுது - செய்தி
அண்ணலாரின் உம்மாஹ்
என்று சொல்லிக் கொள்ளும் எமக்கு

நிஜாமான செய்தி....

எதிரிகள் புடை சூழ
எதார்த்தமே இல்லாத
மனிதனே மனிதனை தம் இஷ்டப்படி
சட்டம் இயற்றி கஷ்டப் படுத்தி
ஆள்வோருக்கு ஒரு நீதி
ஆளப் படுவோருக்கு ஒரு நீதி - என
நீதியே இல்லாத அரசுகளை ,
அம்முறைமைகளை - தான்
எம் பெருமான் முஹம்மதே முஸ்தபா (ஸல்)
ஜாகிலிய்யா என அடையாள படுத்திய - செய்தி
நிஜாமான செய்தி

சட்டம் இயற்றும் அதிகாரம்
உலகையும், அதன் படைப்புகளையும்
படைத்தவனுக்கும் -
அப்படைப்புகளின் அனைத்துத் தன்மைகளையும்
அறிந்தவனும் ஹாகீமும் -ஆன ஏகன்
அல்லா ஒருவனுக்கே உண்டு என்று
அவன் அருளிய சட்ட யாப்பாம்
அல்குர் ஆணை நடைமுறைப் படுத்திய - செய்தி
நிஜாமான செய்தி

அனைத்து அரச முறைமைகளும்,
அரச சிந்தனைகளும் அகற்றப்பட்டு
இஸ்லாம் மட்டுமே அரச முறைமையாக
நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆள்வோருக்கும், ஆளப்படுவோருக்கும்
சமமான நீதி
முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லதவனுக்கும்
சமமான நீதி
அனைத்துத் தீமைகளுக்கும்
சமமான நீதி
இஸ்லாம் வழங்கியது
இது நிஜாமான செய்தி.

ஜீரணிக்க முடியாத செய்தி
அதே ஜாகிலிய்யா இன்று
ஜனநாயகம் என்றும்
சோசலிசம் என்றும்
பெயர் மாற்றம் பெற்று
முஸ்லீம்களையும் ஏற்க வைத்திருக்கும் செய்தி...

அண்ணலார் இவற்றுக்கு எதிராக
எவ்வாறு போராடினார்
எவ்வாறு இஸ்லாத்தை மாத்திரமே
அரச முறைமையாக்கினார
என்பது
வருடக் கணக்காக
படிக்க படிக்க - பயான் என்று
கேட்க கேட்க
விளங்காத செய்தி
விளங்கிக் கொள்ள முடியாத செய்தி -என்னால்
ஜீரணிக்க முடியாத செய்தி from athaullah

இது என் இனிய சகோதரனுக்கு......


இலட்சிய தேடலில் ஆழமான போராட்டம் .
அதிர்ந்து போன எதிரி தந்த ஆழமான காயங்கள்
அதற்கும் மருந்தாய் அவனே தர நினைக்கும்
தீர்வெனும் 'கான்சர் செல்கள் '!! - அது
'வஹி ' வழி மறந்த அதே வரலாற்று தவறு நோக்கி !!
சத்திய அகீதாவையே அசைக்கும்
விலை கொடுத்தா உன் விடுதலை !!

'கிரேக்க கைசர்கள் ' மக்களை மயக்கி
'மாக்களாக்கி ' அடக்கி ஆள கொடுத்த மாய விஷம்
'த கிரேட் திமோகிரசி ' அதுதான் உன்னையே கடவுளாய்
காட்டி கானல் நீரால் தண்ணி காட்டி கனவோடு
காலம் தள்ளும் மனிதப்பண்ணை அரசியல் !!
இன்று சியோனிச சந்தையில் அபூர்வமாய்
முலாம் பூசப்பட்ட ஜாஹிலீய கற்காலம் !!
அதனால் வருமா உன் பொற்காலம் !! - இறைமறை
உனக்கிருக்க இந்த அரைகுறை உனக்கெதற்கு !!

"நிச்சயமாக அல்லாஹ் அங்கீகரித்தது
இஸ்லாம் ஒன்றே ஒன்றுதான் ."
"படைத்ததும் கட்டளையிடுவதும்
அவனுக்குரியதல்லவா "!? இரவு பகல்
இதைப்படித்தும் "உலகத்தை தேடவேண்டும்
எனும் பேராசைதான் பராக்காக்கி விட்டதோ !?"
மார்க்கத்தை 'மஸ்ஜிதுல்' முடக்கி
மத வேலியிட்டு மடக்கி விட்டு சிலுவை நிழலிலும்
யூத தயவிலும் வாழ்வை தொடர்ந்து
"உடும்பின் பொந்திலும் அவனோடு நுழைவதா !?"

'தாகூத்திய ' குப்பைகளில் சத்துரிஞ்சி
சத்திய மரம் வளர்ப்பது தான் எமக்கு 'சுன்னா'
தந்த தூய வழிமுறையா !? நபியின் சீறாவுக்கு
சில்லறை விளக்கம் கொடுத்து அசிங்கத்தை
அரவணைக்க எதிரி அழைக்க அம்மதத்தை
சம்மதமாக்கி சறுக்கி விழாமல் நீ போராடு
" நிராகரிப்போர் வெறுத்த போதிலும் மற்ற எல்லா
தீனையும் மிகைக்கவே அவன் (அல்லாஹ் ) தன்
தூதரை ஹக்குடனும் நேர்வழியுடனும் அனுப்பினான்
அதற்கு சாட்சியாய் இருக்க அவனே போதுமானவன் .

Jul 1, 2013

இந்த நிலை சரிதானா?


இஸ்லாம் என்பது - ஓன்று
இறைவன் என்பது - ஓன்று
இறைத் தூதர் முஹம்மத் என்பது - ஓன்று
இறைவேதம் குர் ஆன் என்பது - ஓன்று
இவற்றை எல்லாம் ஒருமை - என்று
இன்றுவரை ஏற்ற முஸ்லீம் சமூகம் என்பது- ஒன்றல்ல??

"பல தேசியங்கள்"
"பல தலைவர்கள்"
"பல பிறைகள்"
(அதனால் பல கறைகள் )
இந்த நிலை சரிதானா?

ஒரே தேசியம் - தாருல் இஸ்லாம்
ஒரே தலைவர் - கலீபா
ஒரே பிறை- சாத்தியம்
இந்த நிலைதான் சரி என
ஏன் தான் ஏற்க மறுக்குதோ
வரலாறு மறக்குதோ
விடை இருக்க
விடுகதைகள் தொடர்கிறது.....
என் ஊம்மத் மட்டும்
வாழ்வா சாவா என
இரண்டுக்கும் மத்தியில் ஒற்றுமை தேடுது???