Showing posts with label முஸ்லிம் உம்மாஹ். Show all posts
Showing posts with label முஸ்லிம் உம்மாஹ். Show all posts

Jul 22, 2016

நீங்கள் எப்படி!?


முஸ்லீம் உம்மத் எப்படியான சிக்களில் சிக்கியுள்ளது? அதன் மீட்சிக்கான சிந்தனை எவ்வாறு அமைய வேண்டும்? முரண் சிந்தனை கவர்ச்சியை ஏற்பதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் இப்படி பல விடயங்களை சொல்ல வரும்போது...

‪#‎சிலருக்கு‬ புரிகிறது.
#சிலருக்கு கடுப்பு!
#சிலருக்கு பிரச்சினையே தெரியாது!
#சிலருக்கு பிரச்சினை புரிந்தாலும் நாம் சொல்லும் அரசியல் தீர்வில் நம்பிக்கையில்லை!
‪#‎சிலர்‬ பிரச்சினையின் கோணங்களை மாற்றிப் புரிந்ததால் தொலைந்த தீர்வு அர்த்தமற்றது என்பர்!
#சிலருக்கு பிரச்சினையும் புரியும் தீர்வும் புரியும் ஆனால் அதை அடையும் பாதையில் குழப்பங்கள் இருக்கும்!.......

இப்படி பல்வேறு முரண் நியதிகள் கொண்டு முஸ்லீம் உம்மா இயங்கும் நிலையில் முதற்கட்டம் தீர்வு இதுதான் என ஒரு மையப் புள்ளியில் முஸ்லீம் உம்மத்தை ஒன்று குவிப்பதற்கான பணியே இன்று எமக்கு பிரதானமாகிறது! அந்த வகையில் இஸ்லாத்தின் வலுமிக்க இராஜதந்திர பின்புலம் கிலாபா அரசியலின் மீள்கட்டுமானத்தில் இருந்தே தீர்வு இருக்கும் என்பதும், இஸ்லாத்தின் செயல் கட்டமைப்பு ரீதியான பல வெற்றிகளை கிலாபா அரசின் கீழ் இருந்துதான் அல்லாஹ்(சுப) அளித்துள்ளான் என்பதும் எமது ஆழ்ந்த புரிதல். எனவே முஸ்லீம் உம்மா எதிர் கொள்ளும் சிக்கல்களின் தீர்வு என்ற விடயத்தில் கிலாபா அரசு அவசியமாக இருக்கிறது. எனவே கிலாபா அரசியல் எனும் இபாதத்துக்காக உடல் உள உணர்வு ரீதியாக நாம் ஒரு பொது நிலைப்பாட்டை நோக்கி உம்மத் உடன்படுவதே முதல் நிலை தீர்வாக நாம் முன் மொழிகிறோம்! இதை 1.அகீதா ரீதியாகவும் 2.சகோதரத்துவ ரீதியாகவும் 3.இடம் நில பொருள் வள பலத்தின் மூலமும் கட்டமைத்து சுண்ணாவின் வழியில் அமுல் படுத்த வேண்டும் என்ற மக்கள் எழுச்சியை அடுத்த தீர்வியல் இலக்காக குறிப்பிடுகிறோம்!

அடுத்து ரசூல்(ஸல்) காட்டித்தந்த அமைப்பில் அதற்கான தகுதி மிக்கவர்களிடம் நிபந்தனையற்ற உதவியை வேண்டி இந்த வேண்டுதலை முன்வைக்கிறோம். அதில் ஒடுக்கப்படுகிறோம் கைது செய்யப்படுகிறோம் சித்திர வதைகளுக்கு முகங் கொடுக்கிறோம் தடை செய்யப்படுகிறோம்!!!

எமது முடிவின் யதார்த்தத்தை உணர பின்வரும் வரலாற்று பேருண்மை மீது அவதானம் செலுத்த வேண்டியுள்ளது! அதாவது இஸ்லாத்தின் எதிரிகளிடம் இருந்து முஸ்லீம் உம்மா எப்போதிருந்து அரசியல், இராணுவ ,பொருளாதார, சிந்தனா ரீதியான சவால்களை எதிர்கொள்ள தொடங்கியது!? என்று கேட்டால் உடனேயே ரசூல்(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை தொடங்கி அப்படியே தாத்தாரியர் சிலுவைப் யுத்தம் என நகர்ந்து இன்றைய காஸ்மீர் விவகாரம் வரை அடுக்கிக் கொண்டே போகலாம்! இந்த வரலாற்று ஆய்வின் தீர்விடமாக நாம் குறிப்பிடும் கிலாபா அரசு என்ற இராஜதந்திரம் தொழிட்பட்டு நிற்பதை இஸ்லாத்தை புரிந்த எவராலும் மறுக்க முடியாது.

ஆனால் இப்படியான சிக்கல்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்ற தீர்வு விடயத்தை ஆராயும் போது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) செயல் ரீதியான இராஜதந்திரத்தை கருது கோளாக எடுத்து தீர்வு விடயங்கள் பகுப்பாய்வு செய்யப் படுவதில்லை! உதாரணமாக விட்டுக் கொடுப்பு என்றதும் ஹுதைபியா விவகாரத்தை பாய்ந்தடித்து ஆதாரம் காட்டும் பலர்! ஆனால் அத்தகு சூழலின் ஒப்பீட்டு சமவலு ,தள ஒற்றுமை பற்றி பகுப்பாய்வு அற்றே இவர்கள் பேசுகின்றனர்! இவர்களுக்கு தமது செயல் இஸ்லாத்தின் அங்கீகாரமாக இருப்பதாக அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் மட்டுமே இருக்கிறது! இது போல ஏறாளமான சிந்தனை ஒப்பீட்டு பிழைகள் உம்மாவிடம் இருக்கிறது!

இவ்வாறு அவர்கள் பிழையான வியூகத்தில் தொழிற்படுவதை விமர்சித்து சுட்டிக்காட்ட முயலும் போது எம்மை அவர்கள் வாயடைக்க நினைக்கின்றனர் 1.இவர்கள் வாய் வீச்சாளர்கள் இவர்களிடம் தீர்வில்லை! 2.இவர்களை இஸ்லாத்தின் எதிரிகளே உருவாக்கியுள்ளனர்! 3.இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய வழிகேடர்கள்! என்ற எதிர்ப் பிரச்சாரங்களை பரவலாக முடுக்கிவிடுகின்றனர்! எமது விமர்சனங்களின் மீது உறுதியான ஆதாரங்களை சமர்பித்து பதில் கூற முடியாத நேரத்தில் இத்தகு திசைதிருப்பும் உத்திகளுக்குள் புகுந்து தம்மை பலப்படுத்த நினைக்கின்றனர்! ஆனால் இத்தகயவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றனர் என்பதே உண்மை!

இத்தகய இயக்க வாதம்சார் அச்சுருத்தலுக்காக அவர்கள் விடும் தவறுகளையும் அரசியல் வங்குரோத்து தனத்தையும் விமர்சனப்படுத்தக் கூடாது என அவர்கள் நினைத்தால் அதுவே கருத்தியல் சர்வாதிகாரமாகும்! மேலும் ஒருவன் வந்து குப்ருக்கும் அது சார் சிந்தனை கொண்டவனுக்கும் பைஆ பண்ணுவது இஸ்லாம் கூறும் பைஆவுக்கு நிகரானது ஜனநாயக அரசு கிலாபா அரசுக்கு நிகரானது எனக்கூறும்போது அதை ஆதரிக்க செக்கியூலரிச தீனை ஏற்ற பலர் வரலாம்! இன்று அதுதான் நடக்கிறது! எமது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது இவர்களுக்கு காட்டாதுவிடின் இத்தகு காலக் கபோதிகள் தமது குருட்டுத் தனத்தை சிந்திக்க சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு கூட இஸ்லாம் எனும் தீனை ஒரு டிப்லோமடிக் தரத்துக்கு கொண்டுவர பல வருடங்கள் தேவைப்பட்டது! இவ்வளவுக்கும் வஹி அவருக்கு நேரடியாகவே தன் வழிகாட்டலை வழங்கியது! எமக்கும் மாற்று வழிகள் இல்லை அதே பாதை அதே வழிமுறைதான் அது 60 வருடங்களாக இருந்தாலும் 600 வருடங்களாக ஆனாலும் சரியே! ‪#‎சிந்தனைமாற்றம்‬‪#‎நிபந்தனையற்ற‬ உதவி கிடைக்கும்வரை எமது முயற்சிகளை வேகப்படுத்துவது தவிர மாற்றுவழி எதுவுமில்லை!

Jul 11, 2016

இராக் மீதான டோனி பிளேரின் போர் நியாயமற்றது: சில்காட்



சதாம் ஹுசைனிடம் இருந்து பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில், அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே பிரிட்டிஷ் அரசாங்கம் 2003 ஆம் ஆண்டில் இராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இணைந்ததாக அந்த போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
தவறான உளவுத்தகவல்களின் அடிப்படையில் இராக் மீது போர் தொடுக்கும் கொள்கைமுடிவு எடுக்கப்பட்டது தெளிவாகியுள்ளதாக சர் ஜான் சில்காட் தனது விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளார்.
அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தனது முக்கிய கூட்டாளிகளுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அமெரிக்காவுடன் சேர்ந்து இராக் மீது போருக்கு போனதாகவும் அந்த விசாரணை அறிக்கை கூறியுள்ளது.

பிரிட்டன் அரசியலில் முக்கிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சில்காட் விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கும் காணொளி.

BBC

Jun 24, 2016

மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே!




இது கதையல்ல!

அந்த பூமியில் இவள் பிறந்த போது சியோனிசத் தோட்டாக்கள் தாம் தாலாட்டுப்பாடின! 

எஞ்சிய இடிபாடுகளுக்குள் இருந்த உடைந்த பராலைகளில் கட்டப்பட்ட கிழிந்த துணியினால் ஆன தொட்டிலில் சுதந்திரக் காற்றை தேடி இவள் ஆழமாக மூச்சுவிட்டபோது...! 

அதில் கலந்திருந்த கந்தக வாசம் பிறப்புரிமை ஆனது! வெடிகுண்டுகளை தடாவிய வாறுதான் தவழ்ந்தாள்! 

யூத துப்பாக்கிகளின் குறிகளை கண்டவாறுதான் எழுந்தாள்! 


வீரத்தையும் தன்னம் பிக்கையையும் தவிர! பெரிதாக எதுவும் பாலஸ்தீன முஸ்லீம் களிடம் இல்லை! 

அதற்கு இவள் விதிவிலக்கல்ஒரு யூதக் கயவனின் வல்லுறவையும் எதிர்வு கூறிய வாரே பாலஸ்தீனில் ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்துகிறாள்! 

இந்த வருடம் மட்டும் 1823 பெண்கள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தி படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள்! 

1000 பெண்கள் வரை சிறையிடப் பட்டுள்ளார்கள்! காரணம் ஒன்றே ஒன்றுதான்.... அவர்கள் முஸ்லீம்அவளது வயதும் வெறும் 14 மட்டுமே!

 அந்த கொடுமை மிக்க பாலஸ்தீன நிலத்தின் வரலாற்றுச் சுமையை சுமந்த வாரே கல்வி கற்பதற்காக புத்தகங்களை சுமந்தவள்! 

யூத இராணுவம் சந்தேகத்தின் பெயரில் அவளை கைது செய்தது! கொடூரமாக தம் சந்தேகத்தை பாலியல் வக்கிரம் மூலம் தீர்த்து படுகொலை செய்தன அந்த யூத நாய்கள்!

 பின்னர் ஒரு குப்பையை போல அவளை வீதியோரத்தில் வீசி எறிந்திருந்தனர்! 

எந்த மீடியா இதை பேசியது!? மலாலாவுக்காக கண்ணீர் வடித்த அந்த பெண்ணுரிமை வாதிகள் எங்கே! 

பொஸ்னியாவில் ,ஈராக்கில், காஸ்மீரில், ஆப்கானில் எல்லாம் இப்படித்தானே நடந்தது! நடக்கிறது! 

முஸ்லீம் என்றவுடன் ஏளனப் பார்வை பார்க்கும் குப்ரிய வர்க்கம், இஸ்லாத்திற் கென்றவுடன் கூட்டுச் சேர்ந்து கருவறுக்க தயங்குவதில்லை! 

முஸ்லீம் உம்மத் கிலாபா எனும் உலகலாவிய இஸ்லாத்தின் கேடயத்தின் கீழ் வராதவரை இத்தகு அக்கிரமங்கள் ஓயப் போவதில்லை. ஒரு பெண் உதவி கேட்டு அழைத்ததன் முடிவாகவே முஹம்மது பின் காசிமின் தலமையில் முழு சிந்துப் பகுதியையும் கட்டுப் பாட்டில் கொண்டுவர உமையா கிலாபத்தினால் படைநடாத்தப் பட்டது என்ற பேருண்மையை நாம் புரிந்திடல் கட்டாயமாகும்.

Jun 21, 2016

ரமழானும் உம்மத்தின் அதிமுக்கிய பொறுப்புக்கள் இரண்டும்!

       

 
அல்லாஹ்(சுபு) தனது நிறைவான ஞானத்திலிருந்தும், அதியுயர் அதிகாரத்திலிருந்தும் தனது அடியார்களில் சிலரை விட சிலரை மேன்மைப்படுத்தியிருக்கிறான். பூமியில் சில இடங்களை விட  சில இடங்களையும், சில சமூகங்களை விட சில சமூகங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அது போன்றே ரமழான் மாதத்தை ஏனைய அனைத்து மாதங்களையும் விடவும் சிறப்பான மாதமாக அறிவித்திருக்கிறான். அதற்கொரு முக்கிய காரணத்தையும் அவன் திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
(அல் பகறா:185)

எனவே ரமழானின் அடிப்படைச் சிறப்பு  என்னவென்றால் அது அகிலத்தாருக்கு வழிகாட்டியை கொண்டு வந்திருக்கிறது. அண்ட சராசரங்களை படைத்து கட்டியாளும் அந்த ரப்பின் நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இறுதித்தூதான புர்கானை மாத்திரமல்லாது, தவ்ராத்தையும், இன்ஜீலையும், சபூரையும் கூட ரமழான் மாதத்திலேயே அல்லாஹ்(சுபு) அருளியிருப்பது ரமழானின் தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

அத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமழானிலே திருக்குர்ஆனை அருளிய அல்லாஹ்(சுபு), அது யாருக்கு வழிகாட்டியாகப் பயன்படும்; என்பது பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; தக்வா பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல் பகறா:2)

உறுதியான இறைவிசுவாசமும், அனைத்து சந்தர்ப்பத்திலும் அவனது பிரசன்னத்தை மறந்திராத விழிப்புணர்வும், என்றும் அவனது விசாரணைக்கு அஞ்சி வாழ்கின்ற இறையச்சமும் உள்ள ஒருவருக்கே அல்லது ஒரு சமூகத்திற்கே அல்குர்ஆன் வழிகாட்டியாக தொழிற்படும் என்பதே இதன் பொருளாகும். ரமழானிலே மனித குலத்திற்கான வழிகாட்டலை வழங்கியதற்காக அந்த மாதத்தை ஏனைய மாதங்களை விட சிறப்பித்த அல்லாஹ்(சுபு), அந்த வழிகாட்டலால் பயன் பெறக்கூடிய ஒரு சமூகத்தின் முக்கிய பண்பான தக்வாவை வளர்ப்பதற்கான ஓர் பயிற்சியையும் அதே மாதத்திற்குள் பொதித்திருப்பது அவனது வழிகாட்டலின் பரிபூரணத் தன்மையை நிரூபிக்கிறது. ரமழானில் நோன்பை  அல்லாஹ்(சுபு) கடமையாக்கியிருப்பது அதற்காகத்தான். நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விபரிக்கும் இந்த திருமறை வசனம் இதனை தெளிவுபடுத்துகிறது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வாயுடையோர் ஆகலாம்.
(அல் பகறா:183)

எனவே ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற முஸ்லிம் உம்மத்தின் மீது குறைந்தது இரண்டு முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன. முதலாவது, மனிதகுலத்தின் வழிகாட்டியான அல்குர்ஆனை தனது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அமூல்படுத்த அது தயாராக வேண்டும். அல்லது அதற்காக முயற்சிக்க வேண்டும். இரண்டாவது, அந்த வழிகாட்டலை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடய மனோபாவமான தக்வாவை இந்த மாதத்தில் மிக ஆழமாக வளர்த்துக் கொள்ள அது எத்தனிக்க வேண்டும்.

முதலாவது அல்குர்ஆனை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது என்பதன் பொருள் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட அல் பகறாவின் 185 வசனத்தின் ஊடாக சுருக்கமாக பார்ப்போம்...

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்குர்ஆனை அல்ஹுதா என அல்லாஹ்(சுபு) அறிமுகப்படுத்துவது “ அது சத்தியத்தின்பாலும், ஸிறாத்தல் முஸ்தக்கீமின் பாலும் வழிகாட்டக்கூடியது என்ற பொருளிலும், கால, இட வேறுபாடுகளைக் கடந்த முழு மனதிகுலத்திற்குமான பூகோள வழிகாட்டி என்ற பொருளிலுமாகும்.

தொடர்ந்து பய்யினாத் மின் அல் ஹுதா என்று அல்லாஹ்(சுபு) தெரிவிப்பது, அந்த வழிகாட்டலுக்கான (அனைத்தையும் பற்றிய) மிகத்தெளிவான விளக்கமாக அது அருளப்பட்டிருக்கிறது என்பதையும், அது எதனுடனும் ஒப்பிடமுடியாத, இன்னொருவரால் கொண்டு வர முடியாத அல்லாஹ்(சுபு) வின் தீர்க்கமான அத்தாட்சி என்பதையும் தெளிவுபடுத்துவதாகும். இமாம் அல் மவர்தி இந்த வசனத்தில் வருகின்ற (பய்யினாத் மில் அல் ஹுதா மற்றும் அல் புர்கான்) என்ற சொல்லாட்சிகள் குறித்து குறிப்பிடும் போது “அது எது ஹலால், எது ஹராம் என்பதை விளக்குவதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய அளவுகோளாகவும் வந்திருக்கிறது” என விளக்குகிறார்கள்.

இறுதியாக அல்குர்ஆன் தன்னை அல் புர்கான் அதாவது அளவுகோல் என்று அழைக்கும் சொல்லாட்சி அது சத்தியத்தையும், அசத்தியத்தையும், நல்லதையும், கெட்டதையும், நல்ல செயலையும், கெட்ட செயலையும் வேறு பிரிக்கக் கூடியது என்ற பொருளை விளக்குவதாக அமைந்துள்ளது. இமாம் அல் பைதாவி அல்குர்ஆன், தன்னை “பய்யினாத் மின் அல் ஹுதா மற்றும் அல் புர்கான் - என இரு விதமாக அறிமுகப்படுத்துவதன் ஊடாக சொல்லவருவது, அல்லாஹ்(சுபு), அல்குர்ஆனை அற்புதத்தன்மை பொருந்திய, மனிதகுலத்திற்கான வழிகாட்டியாக அருளியுள்ளதுடன் அது சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடிய மிகத்தெளிவான வசனங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது. மேலும் அது தனக்கும்; ஏனைய பிழையான சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் இடையான வித்தியாசத்தை பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

ரமதான் மாதத்திலே அல்குர்ஆனின் மகிமை பற்றி மஸ்ஜித்கள், குத்பாக்கள், வெகுசன ஊடகங்கள் என அனைத்திலும் ஞாபகமூட்டப்படுவதைப் பார்க்கிறோம். இம்மாதத்தில் அதனை ஓதுவதன் சிறப்புப்பற்றியும், அது தரக்கூடிய அதியுயர் வெகுமதி பற்றியும் நாம் தொடர்ந்து நினைவு படுத்தப்படுகிறோம். எனினும் நாம் மேலே சுட்டிக்காட்டியதைப்போல அதனை முழுமையான அந்தஸ்த்துடன் அணுகுகிறோமா? அல்லது அது வெறுமனவே பாராயணம் செய்வதற்கும், ஒரு சில கிரிகைகளில் ஓதுவதற்கும் மாத்திரம் பயன்படுகிறதா? ஏன் அல்குர்ஆனை ஹுதாவாவும்(வழிகாட்டி), அல் புர்கானாகவும்(அளவுகோல்) நாம் பயன்படுத்துவதில்லை? ஏன் முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களை அல்குர்ஆன் தீர்மானிப்பதில்லை?  இவை போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்தால் எமது அணுகுமுறையின் ஆபத்து புலப்படுவதுடன் இன்று உம்மத் அடைந்துள்ள இழிநிலை ஏற்பட்டதற்கான காரணிகளும் தெளிவாகும்.

இன்று தராவீஹ் தொழுகைகளிலே அல்குர்ஆன் அதிகமதிகம் பாராயணம்  செய்யப்படுவதும், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்(சுபு) திருப்த்தியைப் நாடி இந்த மாதத்திலே ஒருமுறையேனும் முழு குர்ஆனையும் ஓதி முடிக்க முயன்று வருவதும் சந்தோசமான விடயங்கள்தான். எனினும் அந்த அல் குர்ஆன் எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்தை இன்று வரை எம்மால் நிறைவேற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது? எமது சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நீதித்துறைகள் அனைத்தும் அல்குர்ஆன் வழிகாட்டாத, இஸ்லாம் சொல்லாத அந்நிய சட்டங்களாலும், கொள்கைகளாலும் அல்லவா வழிநடத்தப்படுகின்றன? எமது அகீதாவுக்கும், பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும், வரலாறுக்கும் மாற்றமாக மனித மூளைகளிலிருந்து உதித்த சடவாத சிந்தனைகளினால் அவை கட்டுப்படுத்தப்படுவதையும், முதலாளித்துவ சிந்தனைகளாலும், முறைமைகளாலும் நாம் ஆளப்பட்டு வருவதையும் அல்லவா நாம் அனுபவித்து வருகிறோம்? காலத்திற்கு காலம் சீர்திருத்தம் என்ற வேடம் தரித்து வந்த அந்நிய சிந்தனைகள் அல்குர்ஆனை எமது நடைமுறை வாழ்விலிருந்து படிப்படியாகப் பறித்து விட்ட பிறகு நாம் இந்த இழிநிலையை அடைந்திருப்பது தவிர்க்க முடியாததுதான்.

இஸ்லாமிய அரசியல் அதிகாரம் சுமார் ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்ட பின்னர் உம்மத்தின் விவகாரங்களை ஆளுகின்ற சட்டங்களும், முறைமைகளும் இஸ்லாம் அல்லாத மூலங்களிலிருந்தும், பெறுமானங்களிலிருந்தும் பெறப்பட்டு மோசடியான கொடுங்கோலர்களின் கரங்களினால் எம்மீது அமூல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடருகின்ற இந்த அரசியல் சாபத்தின் விளைவு சர்வாதிகாரமும், கொடுங்கோலும், வறுமையும், வன்முறையும், பலகீனமும், பாரபட்சமும் கொண்ட தேசமாக எமது தேசம் மாறியிருக்கிறது. அனைத்து வளங்களையும் பெருமளவில் கொண்ட எமது நிலங்கள் தற்போது பொருளாதார மேம்பாடற்ற, கைத்தொழில் முன்னேற்றமற்ற பிராந்தியங்களாகவும், மேற்குலகின் சுரண்டல் சந்தைகளாகவும்  உருமாறியிருக்கின்றன.

ஆனால் நம்பிக்கை தருகின்ற விடயம் என்னவென்றால் எமது மிக அண்மிய வரலாறு மாற்றத்திற்கான வேட்கை உம்மத்தில் மீண்டும் ஓங்கி வருவதை காட்டுகிறது. மக்கள் அதற்காக எவ்விலையையும் தர தயாராகி வருகிறார்கள் என்பதை தெரிவிக்கிறது. அரபுலகில் வெடித்த புரட்சிகள் மக்கள் மத்தியில் பலமான சிந்தனை அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. சிரியாவிலே அரை தசாப்த்தங்களையும் தாண்டி இன்று வரை பஷாருக்கு எதிரான புரட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அது குறைத்து மதிப்பிடமுடியாத நல்ல சமிஞ்ஞையே. அல்ஹம்துலில்லாஹ்!

உம்மத்தில் தோன்றியிருக்கின்ற இந்த மாற்றம் ஆறுதல் அளித்தாலும் எப்போது அல்குர்ஆன் எமது அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மாறுகிறதோ, எமது வாழ்வியல் விவகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட ஆரம்பிக்கிறதோ அப்போது மாத்திரமே உண்மையான மாற்றம் சாத்தியமாகும். எமது துயரங்களும், கஷ்டங்களும் அது வரையில் அகழப் போவதில்லை. அந்த உண்மை மாற்றத்தை அடைவதற்கு அல்குர்ஆன் தன்னைத்தான் அறிமுகப்படுத்துவதைப்போல அல்குர்ஆனை உம்மத் பூரண வழிகாட்டியாகவும் (ஹுதாவாகவும்), அந்த வழிகாட்டலின் விளக்கமாகவும், தனது வாழ்வுக்கான ஒரேயோரு அளவுகோலாகவும்(புர்கானாகவும்) முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே மறுமலர்ச்சியின் பாதையில் அதனால் பயணிக்க முடியும்.

அல்குர்ஆனை முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இவ்வாறு எடுத்துக்கொண்டதன் விளைவுதான் அவர்களால்; முழுக்க முழுக்க அல்குர்ஆனிய ஆளுமைகளாக நடமாட முடிந்தது. அல்குர்ஆனிய சமூகமொன்றை முதன்முறையாக மதீனாவில் நிலைநாட்ட முடிந்தது. இதேபோன்றதொரு ரமழான் மாதத்திலே பத்ர் களமானது, யவ்முல் புர்கானாக - (சத்தியவான்கள் யார்?, அசத்தியவான்கள் யார்? எனத் தீர்மானிக்கும் நாளாக) மாறியதென்றால் அதற்கு காரணம் அல்குர்ஆனை அவர்கள் அல்புர்கானாக ஏற்றுக்கொண்டதே. அதேபோல அவர்கள்  அல்குர்ஆனை ஒரு பாரிய சமூகப்புரட்சியின் ஆயுதமாக எடுத்துக்; கொண்டதன்; விளைவுதான் மீண்டும் ஒரு ரமழானில் மக்காவை வெற்றி கொண்டு முழு அரேபிய தீபகற்பத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு அல்குர்ஆன் தம்மீது சுமத்திய பொறுப்பின் பரப்பை ஸஹாபாக்கள் மாத்திரம் புரிந்திருக்க வில்லை. அதற்கு பின்னர் வந்த இஸ்லாமிய சமூகமும் பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருந்தது. அதனால்தான் எவ்வாறு ரமழான் மாதம் ஸஹாபாக்களுக்கு வெற்றியின் மாதமாக அமைந்ததோ, அவர்களுக்கு பின் வந்தவர்களுக்கும் அது வெற்றியின் மாதமாக திகழ்ந்தது. சலாஹ}த்தீன் அய்யூபி ஹித்தீன் சமரில் சிலுவை யுத்தக்காரர்களுக்கு முடிவு கட்டியதும், ஐன்ஜாலூத் போரில் சைப்புத்தீன் குத்ஸ் தாத்தாரியர்களை முறியடித்ததும் இந்த மாதத்தில்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே அல்குர்ஆனை முழுமையான வழிகாட்டியாக, நிரந்தரமான அளவுகோலாக கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை இன்றைய முஸ்லிம் உம்மத் ஏற்றாக வேண்டும். அதனை இந்த ரமழான் மாதம் அவர்களுக்கு ஞாபகப்படுத்துமாக இருந்தால் அது விமோசனத்தின் முதற்படியாக அமையும்.

எனினும் தாஹுத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்தின் கீழும், கொடுங்கோண்மையான குப்ரிய ஆட்சிகளுக்கு கீழும் பல இருண்ட யுகங்களை கடந்து வருகின்ற உம்மத்திற்குள் இந்த தலைகீழ் மாற்றம் தோன்றுவது இலகுவான காரியமல்ல. அந்த மாற்றம் மிக உறுதியான ஈமானும், துடிப்புள்ள தக்வாவும் இருக்கின்ற ஒரு உம்மத்தில் மாத்திரமே தோற்றம் பெறும். இந்தக்கருத்து நாம் இந்தக் ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டாவது பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது. அதுதான் தக்வாவை அடைந்து கொள்வது பற்றியது.  அல்லாஹ்(சுபு) நோன்பை கடமையாக்கியிருப்பதும், இராப்பொழுதுகளில் நின்று வணங்கச் சொல்லியிருப்பதும் அல்லாஹ்(சுபு)வின் பிரசன்னத்தை கனப்பொழுதும் மறவாத ஓர் உயர்ந்த உம்மத்தை தோற்றுவிக்கவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரமழானிலே இரவு பகலாக வளர்க்கப்படும் இந்த மனோபாவம் அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலை உம்மத்தின் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமூல்படுத்துவதற்கு இன்றியமையாதது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளை கடக்க வேண்டி ஏற்பட்டாலும் அவனது தீனை இந்த உலகத்திலே நிலை நாட்டுவதற்கு தக்வா எனும் இந்த மனோநிலையே அடிப்படையான ஆயுதம். எப்போது தக்வா என்னும் இந்த மனோநிலை உம்மத்திடம் வலுவிழந்து போனதோ, எப்போது அல்லாஹ்(சுபு)விற்கு மாற்றாக அவனது சிருஷ்டிகளின் பால் அதனது அவதானமும், அச்சமும் தோன்றியதோ அப்போதே அழிவின் பாதையை அது திறந்து விட்டது. அந்த அழிவின் பாதையில் மிக நீண்ட தூரம் பயணித்தது. தக்வாவுடையவர்களுக்கு மாத்திரம்தான் இந்த அல்குர்ஆன் வழிகாட்டும் என அல்லாஹ்(சுபு) கூறியதை மெய்ப்படுத்தும் விதமாக தக்வா இல்லாத நிலையில் அல்குர்ஆன் அணுகப்பட்டபோது உம்மத்தின் வழிகாட்டலுக்கும், வளர்ச்சிக்கும் அது வடிகாலாக அமையவில்லை. உம்மத் தக்வாவின் வீழ்ச்சியால் அல்குர்ஆன் வசனங்களுக்கு தனது ஆசாபாசங்களுக்கு ஏற்ப விளக்கம் அளிக்க முற்பட்டது. கிரேக்க தர்;க்கத்தின் அடிப்படையிலும், இந்திய தத்துவங்களின் அடிப்படையிலும் அதனை வியாக்கிஞானம் செய்தது. பிற்காலத்தில் அதிகளவில் மேற்குலக சிந்தனைகள் அவற்றின் இடத்தை பிடித்தன. சத்தியமும், அசத்தியமும் கலந்த, இஸ்லாமும், குப்ரும் குலைந்த ஒரு கலவையை நவீன கால இஜ்திஹாத், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் என்று அது பெருமிதத்துடன் அறிமுகம் செய்தது. இவ்வாறு உம்மத் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே அதனது வாழ்விலிருந்து அல்குர்ஆன்; பறிக்கப்பட்டது. அது வெறுமனவே மனனமிடுதலுக்குள்ளும், அழகான பாராயணத்துக்குள்ளும், அலங்காரமான பிரதிகளுக்குள்ளும் முடங்கிப்போனது. எதனால் இந்த உம்மத்திற்கு வெற்றியும், கண்ணியமும் கிட்டியதோ அந்த ஆற்றல் சக்தி அதனிடமிருந்து பறிபோனது.

அதனால் அன்று முஃமீன்களைக் கண்டால் குலைநடுங்கிய குஃப்பார்கள்; இன்று முஃமீன்களின் முதுகுகளில் ஏறி சவாரி செய்யும் நிலை தோன்றியிருக்கிறது. உம்மத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதனது வளங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. சுயமரியாதையும், கண்ணியம் இழந்த நிலையை அது அடைந்து நிற்கிறது. அதனது பிரச்சனைகளுக்கு அந்நியர்கள் பஞ்சாயத்து சொல்கிறார்கள். அல்குர்ஆன் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் குஃப்ரிய சிந்தனைகள் அமர்ந்துள்ளன. மொத்தத்தில் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் வீழ்ந்திடாத அதலபாதாளத்தில் இன்றைய உம்மத் வீழ்ந்து கிடக்கிறது.

எனவே உம்மத் இந்த மாபெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டு, மீள வரலாறு படைக்க வேண்டுமென்றால் இந்த  ரமழானில் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதிலும், அவனுக்கு கட்டுப்படுவதிலும் தனது உட்சாகத்தையும், விருப்பத்தையும் வெளிக்காட்டுகின்ற உம்மத் ரமழானுக்கு இந்தச் சிறப்பு எங்கிருந்து வந்தது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ரமழான் அல்குர்ஆன் அருளப்பட்டதால்தான் சிறப்பிக்கப்பட்டதென்றால் அந்த அல்குர்ஆன் இந்த உலகில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற வந்தது என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ்(சுபு)வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கான வழிகாட்டல் அல்குர்ஆனிலிருந்து மாத்திரம்தான் ஊற்றெடுக்க முடியும் என்பதை அது முழுமையாக நம்ப வேண்டும். தனது வாழ்விற்கான ஒரேயொரு அளவுகோல் அல்குர்ஆன் மாத்திரம்தான் என்பதில் அது உறுதியாக நிற்க வேண்டும். அத்தகைய ஒரு சூழல் உலகில் தோற்றம் பெறவேண்டுமென்றால் அது அல்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியால் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதையும் அது உறுதியாக நம்ப வேண்டும். எனவே இந்த ரமழான் அத்தகையதோர்; தூய இஸ்லாமிய அரசியற் தலைமையை நிலைநாட்ட உழைக்கின்ற உம்மத்தை தயார்படுத்துமானால் அது ரமழானின் நோக்கத்தையும், அதிலே அருளப்பட்ட அல்குர்ஆனின் நோக்கத்தையும் ஒருசேர நிறைவேற்றிய பெருமையைப் பெறும். இன்ஷா அல்லாஹ்!
 

Nov 15, 2015

மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரயீல் போரை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது!

நமது பொறுப்பு என்ன?
 
 
 

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
 
 நிச்சயமாக நாம் நம்முடைய தூதருக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் உதவி செய்வோம் சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்! (அல்மூஃமின் : 51)

 
 அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
 
உண்ணுதல் நிமித்தம் மக்கள் ஒன்றுகூடுவது போலவே (பல்வேறு) சமுதாயத்து மக்கள் உங்களுக்கு எதிராக வெகுவிரைவில் ஒன்றுகூடுவார்கள்!  ‘அந்நாட்களில் நாங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாகவா?’ என்று வினவப்பட்டது. ‘இல்லை! அந்நாட்களில் நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பீர்கள்! எனினும் கடல் நுரையை போன்று (பலவீனமாக) இருப்பீர்கள்! அல்லாஹ்(சுபு) உங்களை பற்றிய அச்சத்தை உங்கள் எதிரிகளிடமிருந்து அகற்றிவிட்டு உங்கள் இதயங்களில் வஹ்னை போட்டு விடுவான்!’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று வினவப்பட்டது. ‘உலக வாழ்க்கையின் மீதுள்ள (ஆழமான) விருப்பம் மற்றும் மரணத்தின் மீதுள்ள (கடுமையான) வெறுப்பு!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (நூல் : அஹ்மது, அபூதாவூது)
 
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக பல வாரங்கள் நிகழ்த்தப்பட்டுவரும் போரில் இஸ்ரேலிய படைகள் ஆண்களையும் பெண்களையும் முதியவர்களையும் இளைஞர்களையும் குழந்தை களையும் எத்தகைய வேறுபாடுகளுமின்றி பட்டப்பகலில் கொன்று குவித்துவருகிறது! கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக புனித மண்ணை ஆக்கிரமித்துள்ள நிலையில் முஸ்லிம்களை மிருகத்தனமான கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் இஸ்ரேலிய அரசு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை!
 
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் ஒன்றபின் ஒன்றாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன! குறிப்பாக பாலஸ்தீன மக்களின் நிலை குறித்து ரசூலுல்லாஹ்வின் இந்த சமுதாயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளது!
 
 பாலஸ்தீனம் என்றால் என்ன? இஸ்லாத்தில் அதற்கு என்ன முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது?
பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்வெளி பயணத்திற்கு உயர்ந்துசென்ற புனித பூமியாகவும் திகழ்கிறது!
 
 அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,
(அல்லாஹ்) மிகவும் பரிசுத்தமானவன்! அவன் (முஹம்மது ஸல் எனும்) தனது அடியாரை (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து (தொலைதூரத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் எனும்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓர்இரவில் அழைத்துச்சென்றான்! நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிக்கும் பொருட்டு அதனை சூழவுள்ள பகுதிகளை நாம் செழிபுற்று அபிவிருத்தி அடையச்செய்துள்ளோம். நிச்சயமாக அவன் நன்கு செவியுறு பவனாகவும் (அடியார்களை) உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்  (அல்இஸ்ரா : 1)                                                  

 
அன்றியும் பாலஸ்தீன பூமி முஸ்லிம்களின் மூன்றாது புனித ஸ்தலமாகவும் விளங்குகிறது!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறியதை செவியுற்றதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்திருப்பதாவது,
மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறெதற்கும் (புனித)பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அவையாவன : எனது மஸ்ஜித் (மஸ்ஜித் அந்நபவி); மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா); மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) ஆகியவையாகும் (நூல் : முஸ்லிம் # 007 ஹதீஸ் எண் #  3218)
 
முஸ்லிம்களின் இத்தகைய புனித பூமியில்தான் இஸ்ரேலிய படைகள் அட்டூழியம் புரிந்து வருகின்றன! மிருகங்கள் புரிந்திடாத கொடிய செயல்களை யூதவெறியர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் இளம் சிறுமிகளை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை! கல்விகற்க செல்லும் அவர்களை சோதணையிடுதல் என்ற சாக்கில் இடைமறித்து இஸ்ரேலிய இராணுவம் இழிவுபடுத்துவதோடு பகிரங்கமாக சுட்டிக்கொல்கிறது. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன!

 
முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் அங்கமாக இருப்பவர்கள் என்ற முறையில் நமது சகோர சகோரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த வன்கொடுமை குறித்து கவலை கொள்ள வேண்டியதும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதும் நம்மீது கட்டாயக்கடமையாக இருக்கிறது.

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஒருவருக்கொருவர் பேணவேண்டிய நேசத்திலும் இரக்கத்திலும் கருணையிலும் மூஃமின்கள் (மனித) உடலுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்!‎காலில் ஒருகாயம் ஏற்பட்டால் முழு உடலும் காய்ச்சலுக்கு உட்பட்டு உறக்கமின்மை ஏற்படுகிறது (நூல் : முஸ்லிம்)

 
இக்காலகட்டத்தின் குறிப்பிட்ட வரலாற்று பாங்கின் பின்னணியில் தோன்றியுள்ள முஸ்லிம் உலகத்தின் இன்றைய தலைவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தங்கள் கடமையை பற்றிய எத்தகைய தார்மீக உணர்வையும் பெற்றிருக்கவில்லை! போஸ்னியா, மியான்மர், சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் இதுதான் எதார்த்த நிலையாக இருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக மேற்கத்திய அரசுகள் கட்டவிழ்த்துவிடும் அக்கிரம செயல்களை தடுப்பதற்குரிய அரசியல் துணிவு இல்லாத அவர்களின் நிலை மேற்கத்தியர்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டுள்ளதை பறைசாற்றுகிறது! சர்வதேச முஸ்லிம்களை பொறுத்த சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் அவர்கள் ஆழமாக பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் நிலப்பரப்புகளை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் கொடுங்கோலர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு துணிவில்லை என்பதையும் அது பறைசாற்றுகிறது!

 
 முஸ்லிம் சகோதர சகோதரிகளே!
முஸ்லிம் உலகம் ஆபத்தான பெருந்துயரத்தில் வீழ்ந்துகிடக்கும் இவ்வேளையில் உங்கள் இல்லங்களில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து முஸ்லிம்களின் நிலை குறித்து வருந்திக்கொண்டிருப்பதில் எத்தகைய பயனும் விளையப்போவதில்லை! மாறாக, நாம் எந்த நிலப்பரப்பில் இருந்தபோதும் ஒன்றிணைந்து இந்த பாதகமான நிலையை மாற்றுவதற்கு வழிவகை காணவேண்டும்!

 
ஒரு தலைமைக்கும் மனித இனம் முழுமைக்கும் நீதி வழங்குவதற்கு திறன்பெற்ற ஓர் அரசியல் கட்டமைப்பிற்கும் கீழ் முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவது மட்டுமே இதற்குரிய தீர்வாகும். மேற்கத்தியர்களின் அத்துமீறல்களுக்கும், நமது சகோதர சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், மாண்புமிக்க இஸ்லாமிய மண்ணில் காலனியாதிக்கவாதிகள் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளுக்கும், நமது வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கும், நமது அனைத்து பிரச்சினைகளுக்கும் இதுமட்டுமே ஒரே தீர்வாக இருக்கும்! நமது கரங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பு என்ற கிலாஃபா ராஷிதாவை மீண்டும் மறுநிர்மாணம் செய்வதற்கு அழைப்புவிடுப்பது மட்டுமே முஸ்லிம்களின் இந்த அவலநிலையை போக்குவதற்குரிய ஒரே வழியாக இருக்கிறது! கிலாஃபா அரசால் மட்டுமே முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதையும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாவதையும் தடுத்துநிறுத்த இயலும்!

 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இமாம் என்பவர் கேடயமாவார்! (முஸ்லிம்களாகிய நீங்கள்) அவருக்கு பின்நின்று போரிடுகிறீர்கள், அவரை கொண்டே பாதுகாப்பு அடைகிறீர்கள் (நூல் : முஸ்லிம்)

 
சுதந்திரமாகவும் நீதமாகவும் மேற்கத்திய ஆதிக்கத்தின் அடிமைத்தளைக்கு உட்படாமலும் செயலாற்றுவதற்கு திறன் பெற்றுள்ள கிலாஃபா ராஷிதாவின் தலைவரான கலீஃபாவின் இராணுவம் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்படும் நிலையில் செயலற்று நின்றிருக்காது!‎‎‎‎‎ கலீஃபா உஸ்மானின்(ரளி) ஆட்சிக்காலத்தில் இவ்வாறுதான் நிகழ்ந்தது. பைசாந்திய (ரோமானிய) சஸானிய (பாரசீக) வல்லரசுகளின் அடிமைத்தளையில் சிக்குண்டு பெரும் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த வடஆப்பிரிக்க நிலப்பரப்புகளை விடுவிப்பதற்கு முஸ்லிம் உலகத்தின் மாபெரும் வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி உஸ்மான்(ரளி) போரிட்டார்! முஸ்லிம் உலகத்தில் கிலாஃபா ராஷிதாவை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், அது ஒட்டுமொத்த உலகத்திலும் அடக்குமுறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சரணாலயமாக விளங்கும்!

 
இதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நம்மை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவை நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும், நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வை பெற்றுக்கொள்ளவேண்டும், இஸ்லாத்தின் எதிரிகள் முன்வைக்கும் தர்க்க வாதங்கள் பற்றியும் அவற்றிற்குரிய மறுப்புரைகள் பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். தீனுடைய அனைத்து விஷயங்களின் கருத்தாக்கங்கள் மற்றும் அவற்றை நடைமுறையில் பின்பற்றுவது குறித்த தெளிவான விளங்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை நாம் பெற்றிருக்க வேண்டும்.

 
இந்த நோக்கத்தை நிறைவுசெய்வதற்குரிய திறன்கள் அனைத்தையும் நாம் பிரயோகிக்க வேண்டும். இதன்பொருட்டு வன்முறையற்ற ஆர்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டும், முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு விபரமாக எழுதவேண்டும், நமது குரல்களை பதிவுசெய்வதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் அவர்களுடைய தீய செயல்பாடுகளை தடுக்கும் வண்ணம் அரசுகளின் மீது நாம் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்! இஸ்லாத்தின் தூதுவர்கள் என்ற முறையில் நாம் நமது நிலை குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்! ஷரீஆ சட்டங்களுக்கு முரண்படாத வகையில் நாம் நமது செயல்பாடுகளை வன்முறையற்ற வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும்.

 
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்(சுபு)விடம் துஆ மேற்கொள்ளவேண்டும், அவனுடைய நேசத்திற்குரிய தூதர்(ஸல்) அவர்களின் சமுதாயத்தின் மீது கருணையையும் சாந்தியையும் நல்கவேண்டும் என்று எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு)விடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த உலகவாழ்க்கையில் இஸ்லாமிய தீனை நிலைநிறுத்துவதற்கு அவன் முஸ்லிம் உம்மாவிற்கு பலத்தையும் கண்ணியத்தையும் அளிப்பானாக!

 
இந்த பிரச்சாரம் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுங்கோண்மை மிக்க இஸ்ரேலிய யூதவெறியர்கள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிராக உங்கள் குரல்களை பதிவுசெய்வதற்கும் கீழ்க்கண்ட இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்,


 
Facebook  : https://www.facebook.com/vaomuslims
Twitter : https://twitter.com/vaomuslims
உங்கள் கருத்துக்களை மின்னஞ்கல் மூலம் பதிவுசெய்யவும்‎‎ ‎‎‎‎‎  – mif.sindhanai@gmail.com

Oct 26, 2015

இந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்தில் அரபு நாடுகளின் மையப் பகுதியில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக திணிக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வல்லரசுகளின் இந்த அடாவடித்தனத்தை அந்த நேரத்தில் புதிதாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அரபு நாடுகளோடு பாரம்பரிய தொடர்பு வைத்துள்ள இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து யூதர்களுக்கென்று மத ரீதியாக உருவாக்கப்படுவதை கொள்கை ரீதியாக எதிர்த்தது.
 
தேசத் தந்தை காந்தியடிகள் யூதர்களோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தாலும் மத அடிப்படையில் ஒரு நாடு உருவாவதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அந்த நேரத்தில் மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அது மட்டுமல்லாமல் வேறொரு வேறொரு வலுவான காரணமும் இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு இந்தியாவிற்கு இருந்தது. இந்திய நாடு பிரிவினையின் போது முறையாக தீர்க்கப்படாமல் விடப்பட்ட கஷ்மீர் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்து சுதந்திரம் பெற்ற உடனேயே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதனால் கஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு இந்தியா எடுத்துச் சென்றது.
 
கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் என்பதால், இதில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அரபு நாடுகள் அனைத்தும் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று இந்திய அரசியல் வல்லுனர்கள் கருதியதால் இஸ்ரேல் உருவாக்கத்தை தொடக்கத்தில் இந்தியா எதிர்த்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் உருவாவதை இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், அந்த அமைப்போடு சிந்தாந்த ரீதியாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் ஆதரித்தனர் வரவேற்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்து பம்பாயில் இஸ்ரேல் நாட்டின் துணை துதரகம் அமைத்திட ஒப்புதல் அளித்தது.
 
ஜவஹர்லால் நேரு அவர்கள் 1954ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில்; “இஸ்ரேலின் உருவாக்கம் என்பது ஒரு சர்வதேச விதிமீறல் என்ற சட்ட முன்வடிவை ஒரு கட்சி என்ற முறையில் ஆதரிக்கமாட்டோம்” என்று பகிரங்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் இந்திய வெளியுறவுக்குறித்த தெளிவான கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன் பிறகு உருவானது தான் முதலாளித்தும் வல்லரசு சாராத சுதந்திரமான அணி சேராக் கொள்கை. கட்சியிலும் நாட்டிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டதிற்கு இந்தியா பகிரங்க ஆதரவு தெரிவித்து வந்தாலும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுடன் மறைமுகமான தொடர்புகளை வைத்திருந்தனர்.
 
இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் பகிரங்கமாகவே தொடர்பு வைத்து வந்தனர் என்பதும் வெளிப்படையாக தெரிந்த செய்தி தான். வல்லரசுகளுக்கு மத்தியில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் ஆதரவு நிலையை எடுத்திருந்த இந்தியா தனது அண்டை நாடுளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள சோவியத் ரஷ்யாவிட மிருந்து தனது இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை பெற்று வந்தது. இன்றைக்கும் இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் ஏற்றக்குறைய 70 விழுக்காடு ஆயுதங்கள் சோவியத் ரஷ்யா தயாரிப்பு தான்.
 
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அந்நாட்டில் நவீன ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் சீர் கெட்டு போர் அபாயம் அதிகரித்தது. சோவியத் ரஷ்யா எந்த அளவிற்கு இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானுக்கும் சற்று கூடுதலாக சீனாவிற்கும் வழங்கியது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் அதன் ஆயுதங்களுக்கு மாற்றாகவும் அதைவிட நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாட்டின் உறவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது.
 
சோவியத் யூனியனோடு இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்கள் கொடுப்பதற்குத் தயங்கிய நிலையில் அமெரிக்காவின் தயவால் பல நவீன ஆயுதங்களை வைத்துள்ள இஸ்ரேலின் பக்கம் இந்தியாவின் கவனம் திரும்பியது. ஏற்கனவே இஸ்ரேல் அரசுடன் இரகசிய உறவு வைத்திருந்த இந்தியாவிற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது.
 
இஸ்ரேலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தயவு கிடைப்பதின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு அரபு நாடுகளுடனான இந்திய உறவில் விரிசல் ஏற்படுத்த முடியும் என்று திட்டமிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இந்தியாவிற்கு பெருகி வரும் ஆபத்துகள் என அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது இஸ்ரேல்.
 
அதன்பிறகு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக இன்றைய நிலையில் இந்தியாவிற்கு இராணுவ தளவாடங்கள் விற்பதில் உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. இதை துறை வாரியகப் பார்ப்போம்.
 
இரகசிய தொடர்பு:
 
1969-ல் “ரா” என்ற உளவு அமைப்பை தொடங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ராமேஷ் வர் நாத் காவோ என்ற அதிகாரியை அதற்கு தலைவராக நியமித்தார். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் உடன் இரகசிய உறவுகளை உருவாக்கிட காவோ விற்கு பிரதமர் இந்திரா உத்திரவிட்டார். “ரா”-மொஸாத் கூட்டணி சீனா, பாகிஸ்தான் வட கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இரகசியமாக தொடர்ந்த இந்த “ரா” – மொஸாத் உறவு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த நேரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது.
 
பாகிஸ்தான் அரசு கட்டா என்ற இடத்தில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றி வந்தது. இதை அறிந்த அன்றைய அமெரிக்க ஜிம்மி கார்டர் அரசு பிரான்ஸ் உதவியை தடுத்துவிட்டது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு இதை இரகசியமாக வைத்திருந்தது. இந்தச் செய்தியை மோப்பம் பிடித்த மொஸாத் “ரா” காதில் போட அது நேராக மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வர அவர் நேரிடையாக பாகிஸ்தான் அதிபர் ஜியா-வுல் ஹக்கிடம் “நீங்கள் கட்டா நகரில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று எனக்கு தெரியும். எங்களது “ரா” அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று வெளிப்படையாக தெரிவித்ததற்கு பிறகு தான் “ரா” மொஸாத் உளவு அமைப்புகளின் கள்ளக் கூட்டு வெளி உலகிற்கு தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு மொஸாத்தோடு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் உறவு ஏற்படுத்திக் கொண்டது வேறுகதை.
 
திருப்பு முனை:
 
Organaisation of Islamic Conference (OIC) என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய – இஸ்ரேல் உறவுகளில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து ளிமிசி அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ளிமிசி குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு.
 
துதரக தொடர்பு:
 
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக 1992 ஜனவரியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இஸ்ரேலோடு முழுமையான துதரக உறவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்து வந்த அரசுகள் இஸ்ரேலோடு பல்வேறு துறைகளில் பல உடன்படிக்கைகளை செய்துள்ளன.
 
இஸ்ரேல் பிரதமர் வருகை:
 
1997 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதர் ஐஸர் வைஸ்மென் இந்தியா வந்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர் தான். முதன் முறையாக ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பராக் – 1 என்ற நவீன ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் கப்பலில் இருந்து பாயும் ஹார்ப்பூன் என்ற ஏவுகணையை இடை மறித்து தாக்கும் வல்லமை பெற்றது இந்த பராக் – 1 ஏவுகணை. இந்திய – இஸ்ரேலின் இந்த ஒப்பந்தத்தை கண்டு கதி கலங்கிய பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து றி3-சிமிமி ளிக்ஷீவீஷீஸீ என்ற போர் விமானத்தையும், மேம்படுத்தப்பட்ட ஹார்ப்பூன் ஏவுகணைகள் 27 ஐயும் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பலமுறை இஸ்ரேலிற்கு பயணம் செய்து புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்து வந்து உருவாக்கப்பட்ட பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டது.
 
கடற்படை:
 
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டி தங்களது நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல் வழி போக்கு வரத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்திட இந்திய கடற்படையோடு சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் இஸ்ரேலிய கடற்படை சுதந்திரமாக ஈடுபட்டு வருகிறது. காரணம், மத்திய தரைக் கடல் பகுதியில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அங்கே, இஸ்ரேலால் சுதந்திரமாக செயல்பட முடியலவில்லை. சமீப காலமாக இந்திய பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணைச் சோதனைகளை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
 
விமானப் படை:
 
1997 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 32 ஆளில்லா உளவு விமானங்கள் வாங்கப்பட்டன. றிலீணீறீநீஷீஸீ கிணிகீமிசி என்ற அதி நவீன ராடார்கள் வாங்கப்பட்டன. இவை பாகிஸ்தான் உடனான கார்கில் போரின் போது இந்திய இராணுவத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தது. ரஷ்யாவின் மிக் 32 ரக விமானங்களை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பமும் பெறப்பட்டன. இந்திய வான் எல்லையிலிருந்தே பாகிஸ்தான், மற்றும் சீனாவின் 400 கிலோ மீட்டர் து£ரத்தில் இருக்கும் இடங்களை மிக துல்லியமாக கண்காணிக்கும் அதி நவீன கிகீகிசிஷி என்ற 6போர் விமானங்களை இந்தியா இஸ்ரேலிடமிருந்து பெற்றுள்ளது.
 
உளவு சாட்டிலைட்:
 
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் சந்திராயன் விண்கலம் ஏவுவதில் உதவி செய்வது மேலும் இஸ்ரேலின் Tec SAR என்ற உளவு சாட்டிலைட்டை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO கடந்த 2008 ஜனவரி 22 அன்று விண்ணில் ஏவியது. இஸ்ரேலில் ராக்கெட் ஏவுதளம் இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஏவுவது பாதுகாப்பானதும் செலவு குறைவானதுமாக கருதப்படுகிறது. 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT – 2 அதி நவீன சாட்டிலைட்டை இந்தியா ஏவியது. இந்த சாட்டிலைட்டிலிருந்து இரவு நேரத்தில் கூட அடர்ந்த மேக மூட்டம் காணப்பட்டாலும் அவற்றையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
 
இந்துத்துவ தொடர்பு:
 
2007ல் உலக யூத – இந்து மத தலைவர்கள் சிந்திப்பு என்ற பெயரில் யூத – பிராமணர்கள் சந்திப்பு நடைபெற்றது. 2007 பிப் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற இச்சந்திப்பில் இஸ்ரேலின் தலைமை ராபி யோனா எட்ஸ்கர் மற்றும் பிராமண சாமியார் தயானந்த சரஸ்வதி ஆகியோர் தலைமையில் யூதர்களும் பிராமணர்களும் சந்தித்து. யூத மதம் மற்றும் பிராமணர்களின் ஆரிய மதம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். விடுதலை பெற்ற இந்தியாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடக்க காலத்தில் ஜவஹர்லால் நேரு வகுத்து தந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் முதலாளித்துமும் சோசலிசமும் கலந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றி வந்தது. பின்னர் அந்த வழிமுறைகளிலிருந்து மாறி சோசலிஸ ரஷ்யா சார்பு வெளியுறவுக் கொள்கைகையும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றி வந்தது.
 
பின்னர் 1992ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையையும் உலக மயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே இந்திய அரசின் கொள்கையாகவும் மாறிப்போய் விட்டது. இந்தியாவின் துவக்ககால கொள்கை நிலைப்பாடுகளால் உலகின் பல நாடுகளிடம் பாரம்பர்யமாகக் கொண்டிருந்த தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டது இந்தியா. ஆனால் பிற்காலத்தில் அந்தக் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதால் உலக நாடுகளிடம் கொண்டிருந்த பாரம்பர்யத் தொடர்புகளை இழந்தது மட்டுமல்லாமல் சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டுவிட்டது. அந்த எதிர்ப்புகளில் தீவிரவாதமும் அடங்கும். மேலும் துவக்க காலத்தில் அமெரிக்க, ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் இஸ்ரேலின் உருவாக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த இந்தியா, பிற்காலத்தில் அவற்றோடு சமரசம் செய்து கொண்டது.
 
குறிப்பாக உலக சமுதாயத்தாலும் 180 கோடி முஸ்லிம்களாலும் கடுமையாக வெறுக்கப்படுகிற பயங்கரவாத இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும். நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டுமே தவிர வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக வல்லரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதால் உண்மையான வளர்ச்சி ஏற்படாது. நம் நாட்டின் பாரம்பரியத்தன்மைக்கும் மரபு சார்ந்த உறவுகளுக்கும் ஒவ்வாத சிந்தனை உள்ளவர்களோடு கூட்டு சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல…
 
இன்றைக்கும் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தந்து அதன் மூலமாக அதிக அளவிற்கான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரபு நாடுகள்தான் இந்தியாவின் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன. அத்தகைய அரபுநாடுகளின் அதிருப்தியையும் இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களின் வெறுப்பையும்தான் இந்தியஇஸ்ரேல் உறவு வெளிப்படுத்தி உள்ளது.


நன்றி
ஹந்தக் களம்

Oct 8, 2015

பிரிவினை ஷிர்கின் அடையாளம் !!

உலக அக்கிரமக்காரகளின் கூட்டுச் சதியால் உலகைத் தொழும் வஞ்சகர்களால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து கழுத்தறுக்கும் முனாஃபிக்குகளால் முஸ்லிம்களின் முதுகில் ஏறி வெட்டி எறியப்பட்ட கிலாஃபத் எனும் இஸ்லாமியத் தலைமையை இழந்து நூற்றாண்டு கடந்து விட்டது .தலையில்லா முண்டமாய் உயிரற்ற ஜடமாய் முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது.

  இஸ்லாத்தின் தலைமையை விட்டு விலகி நிற்கவும் அனுமதியில்லை பிணங்கினால் பிளவு பட்டால் வீரம் வீணாகும் .சோரம் போய்விடுவீர்கள் எச்சரிக்கை என்கிறது அல்குர்ஆன் (8:46) 

  தலைமையில்லா இந்த முஸ்லிம் உம்மா நூற்றாண்டாய் இலக்கின்றி வாழ்கின்றது .இக்கால கட்டத்தில் பட்ட துன்பங்கள் படும் அவதிகள் சொல்லி மாளாது .

 ஆப்கான் வீதிகளிலும் ஈராக்கின் நகரங்களிலும் சிரியாவிலும் லிபியாவிலும் அமெரிக்கா குண்டு மழை பொழிகின்றது .

  ஈமானின் விளிம்பில் நிற்கும் முனாஃபிக்குகளோ இன்னும் வீரியமாய் முஸ்லிம்களை காரிஜியாக்கள் என்கிறார்கள் .
 
முஸ்லிம்களை பிரிக்க முஸ்லிம்களை காஃபிராக்க தனிப் பள்ளிவாசலைக் கட்டக் காசு கொடுக்கிறார்கள் .

அமெரிக்க எஜமானிய யூத கிறித்தவ ஷிர்க்கின் கூட்டுப் படையினரின் நோக்களிந்து முஸ்லிம்களை எகிப்திலும் காஸாவிலும் கொல்கிறார்கள் இந்த முனாஃபிக்குகள் !

   அன்று நபி (ஸல்) அவர்களைக் கொல்லத் துடித்த முஷ்ரிக்குகளின் முனாஃபிக்குகளின் கூட்டுப் பட்டாளம் இன்று தலைமையில்லா முஸ்லிம்களைக் கொல்கின்றது .கேட்க நாதியில்லை .

முஸ்லிம்களின் இறைச்சியை விற்கிறான் பர்மாக்காரன் என்றால் முஸ்லிமை மாட்டு இறைச்சிக்காக  கொல்கிறார்கள் பாரத நாட்டினர் .

  நபி (ஸல்) கூறினார்கள் ஒரு முஸ்லிம் அநியாயமாகக்
கொல்லப்படுவதை அல்லாஹ் ஒருபோதும் சகிப்பதில்லை .அதை விட இந்த உலகம் முழுவதும் அழிந்து போவதை அல்லாஹ் பொருட்டாய் கருதுவதுமில்லை .( திர்மிதி)

  தலைமையில்லா இன்றைய உலகில் முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிமைக்கும் எந்த மதிப்புமில்லை .மரியாதையுமில்லை .அத்தோடு முஸ்லிம்களை ஒன்றிணைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை .

   புரட்சி மின்னலாய் ஆயிரமாயிரம் குட்டித் தலைவர்கள் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள் .புற்றீசல்கள்போல்!!

  பிரிவினை எனும் ஷிரிக் அவிழ்க்க முடியாத முடிச்சாகி விட்டது .பெரும் பிரச்சனையாகி விட்டது .முஸ்லிம்களை முடக்கியும் விட்டது .

  ஒற்றுமையாய் ஒருடலாய் ஒரே சுவராய் கீறிலில்லா ரசம் போகாத கண்ணாடியாய் வாழ வேண்டிய முஸ்லிம்கள் இன்று வகை தொகையின்றி பிரிந்து கிடக்கின்றார்கள் .

அதே முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கருத்து முரண்பட்டு மோதிக் கொண்டபோது , அந்தலுசியா எனும் ஸ்பெயினிலிருந்து துரத்தப்பட்டார்கள் .அதுபோல இந்தியாவிலும் பிரித்தாளப்பட்டு அரசியல் அடிமைகளாக்கப் படுகிறார்கள் .

பிரிந்து கிடப்பது நரகின் விளிம்பின் மீது மனிதர்களை நிறுத்தி அழகு பார்க்கும் ஷைத்தானின் கோர விளையாட்டு .சாத்தானின் சூழ்ச்சி ! ஷிர்க் என்பதே ஏகத்துவத்தை மறுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை பங்கிட்டுக் கொள்ளும் பிரிவினை !

  அருளுக்கொரு கடவுள் , அன்புக்கொரு கடவுள் , அறிவுக்கொன்று , அழிவுக்கொன்று , எனக்கு உனக்கு என எண்ணிலடங்கா கடவுள்களை உருவாக்கும் தனித்தனி கடவுள்களின் பிரிவுதான் ஷிர்க் .பிரிவு என்பதே ஷிரிக்கின் அடையாளம் .

  தீனை நிலைநாட்டுகள் ! அதில் பிரிந்து விடாதீர்கள் !   அல்குர்ஆன் (42:13)

ஷைத்தானின் சூழ்ச்சியால் பிரிந்து கிடந்த மனித குலத்தை மீண்டும் ஒரே குலமாய் உருவாக்க அனுப்பபட்டவர்கள் தான் நபிமார்கள் .அதில் இறுதியானவரே முஹம்மது (ஸல்) 

   நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பிரித்து விடாதீர்கள் .சேர்ந்து வாழுங்கள் .பிறர் பற்றி நல்லெண்ணம் கொள்ளுங்கள் .

ஒருவர் மற்றொருவரின் கழுத்தை அறுக்கும் காஃபிராகி விடாதீர்கள் .பிரிந்து நிற்பவர்கள் , தனித்தனி அடையாளங்களோடு தனித்து நிற்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் .

 நாம் பிரிந்து விட வேண்டாம் .
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றுவோம் .இழந்த இஸ்லாத்தின் தலைமையை கிலாஃபத்தை மீட்டெடுப்போம் !


சகோ. எஸ்.எம்.புஹாரி.


Oct 3, 2015

உ.பி. படுகொலை: பின்னணி தகவல்கள்

ஜனநாயகத்தின் பெயரில் காவு கொடுக்கப்படும் இந்திய முஸ்லிம் சமுகம்

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது.

மாட்டின் மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட முஹம்மது அக்லாக்.
அக்லாக்கின் குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று இரவு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அன்று இரவு அதாவது, அக்டோபர் 28ஆம் தேதி முஹம்மது அக்லாக் என்ற அந்த ஐம்பது வயது நபரின் வீட்டில் மாட்டின் மாமிசம் இருந்தது என்று ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றது.

அன்று இரவு பத்தரை மணியளவில், விவசாயக் கூலியான முஹம்மது அக்லாக்கின் குடும்பம் வழக்கம்போலவே, சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லும்போதுதான் அந்த தாக்குதல் நடந்தது.

முஹம்மது அக்லா தனது மகன் படுத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பெரும் ஆவேசத்துடன் ஓடிவந்த கும்பல் ஒன்று கம்பு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் அவர்களுடைய வீட்டில் நுழைந்தது.




இந்துக்களுக்கு நடுவில் வாழும் அக்லாக்கின் குடும்பத்தினர் இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

அக்லாவின் குடும்பம் ஒரு பசுவைக் கொன்று சாப்பிட்டுவிட்டதாக கும்பலைச் சேர்ந்தவர்கள் கூச்சலிட்டனர்.

"எல்லாப் பக்கமிருந்தும் அவர்கள் வந்தார்கள். சுவரின் மீது ஏறினார்கள். வாசல் வழியாக வந்தார்கள். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டினார்கள் என்கிறார் அக்லாக்கின் 75 வயதுத் தாயான அஷ்கரி அக்லாக்.

"அந்தப் பகுதியில் இருக்கும் யாரும் பார்க்காமல் நாங்கள் எப்படி வீட்டிற்குள் பசுவைக் கொண்டுவர முடியும். இந்தப் பகுதியில் நாங்கள் மட்டும்தான் இஸ்லாமியக் குடும்பம்" என்கிறார் அவர்.

வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசத்தை காட்டி கேள்வியெழுப்பியது. ஆனால், அது ஆட்டின் மாமிசம் என்று அக்லாக்கின் கூடும்பத்தினர் கூறினர். ஆனால், அந்தக் கும்பல் அதனை ஏற்கவில்லை.

அக்லாக்கின் குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிக்க ஆரம்பித்தது அந்தக் கும்பல்.

சிலர் அக்லாக் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.




யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் மாட்டை எப்படி அழைத்துவர முடியும் என்கிறார் அக்லாக்கின் 75 வயது தாயார்.

அவருக்கு அருகில் இருந்த தையல் எந்திரத்தைத் தூக்கி அவர் தலையில் போட்டனர். பக்கத்து அறையில் இருந்த அவரது மகனையும் வெளியில் இழுத்துவந்தனர். அதற்குப் பிறகு கொடூரமாக இருவரையும் கும்பல் தாக்கியது.

அந்தக் குடும்பத்திற்கு அருகில் இருந்த இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதனைத் தடுக்க முயன்று முடியாமல் போகவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து காவல்துறை அங்கு வந்தபோது, அக்லாக் இறந்துபோயிருந்தார். அக்லாக்கின் மகனான தானிஷ் மிக மோசமாக காயமடைந்திருந்தார்.


நன்றி  BBC

Sep 16, 2015

ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஆப்கானியர்கள் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய அகதிகள்


ஹெலினா மாலிக்யர்

இவர் ஆப்கான் அரசியல் ஆய்வாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.

கடந்த ஆண்டு வரை, ஆப்கானியர்கள் தான் உலகின் பெரிய அகதி மக்கள்காக இருந்தனர் என்று எழுதி இருக்கிறார்.

மேலும் அவர் இதை பத்தி கூறும் போது ஏன் நாம் ஆப்கான் பற்றி பேசவில்லை? என்று வினாவை தொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை நாட்டின் முழு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆப்கானியர்கள் அகதி மக்கள்காக இருந்தன. கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மக்கள்களை  அகதியாக்கி உள்ளனர். இன்று 12 சதவிகித்தை தாண்டிய சிரியா மக்களால் இவர்கள் இரண்டாவது மிகப் பெரிய அகதிகள் குழுவாக ஐரோப்பிய கடற்கரையும் மற்றும் எல்லையும் கடந்து வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம், அறிக்கையின்படி, 40,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஐரோப்பாவில் தஞ்சம் முயன்று வருகின்றன.

பல தசாப்தங்களாக ஆப்கான் அகதிகள் நேரிட்டதே துன்பியல், பல பயங்கரமான மரணம்  மேற்கத்திய மற்றும் சொல்லப்படாத கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்கள். இன்னும் பல குடும்பங்கள்  எளிமையாக ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் செய்திய கேட்க காத்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் நிலைமை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக  இன்னும் மாறவில்லை.

கடந்த வாரம் ஆஸ்திரிய காவல்துறை தனியாக இருந்த ஒரு சிறிய வேன் பின்புறம் அடைக்கப்பட்டு இருந்த  24 இளம் ஆப்கானியர்கள் மீட்கப்பட்டனர். இது போலவே ஆஸ்திரியாவில் ஒரு லாரியில் 71 பேர் இறந்து கிடந்தனார்.

Source: Al Jazeera

குடியேறிகள் விவகாரம்: ஹங்கேரியில் நெருக்கடி நிலை அறிவிப்பு

செர்பிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள தென் மாவட்டங்களில் ஹங்கேரி நெருக்கடி நிலையை   அறிவித்துள்ளது.
 
 
 
தடுப்பை மீறி நுழைய முயன்ற 60 பேரை கைதுசெய்திருப்பதாக ஹங்கேரி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

செர்பியா வழியாக குடியேறிகள் பெரிய அளவில் தங்களது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் ஹங்கேரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புகளை மீறி உள்ள வர முயன்ற அறுபது பேரை கைதுசெய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருநூறுக்கும் மேற்பட்ட குடியேறிகள், இரு நாட்டு எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருவதாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

செர்பியாவின் ஹோர்கோ பகுதியில் அமர்ந்திருக்கும் அவர்கள், தங்களை உள்ளே அனுமதிக்கும்படி கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

தாங்களை எல்லை கடக்க அனுமதிக்கும்வரை சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ போவதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

 
BBC News

Sep 10, 2015

அய்லான் குர்ஷிக்கான பதிவு...

 
நீண்ட பதிவு தான்...

அய்லான் குர்ஷிக்கான பதிவு...

ஸன்ஆ முதல் ஹழரல் மவ்த் வரை பாதுகாப்பு வழங்கியவர்களின் வாரிசுகள்.... பாதுகாப்பு என்றால் என்ன? அதை நாங்கள் உயிருடன் உள்ள போதே அனுபவிக்க முடியுமா? என கேட்கிறது.

உலகுக்கே 1300 வருடம் பாதுகாப்பு வழங்கிய உம்மத்தின் வாரிசுகள்...

தன் எல்லைப்பகுதியில் ஒரு ஆடு அநியாயமாக உயிரிழந்தால் அதற்கும்
நான் இறைவனிடம் பதில் சொல்லணும் என்று மிருகங்களிடம் கூடஇரக்கம் காட்டிய தலைவர்களின் வாரிசுகள்.
 
இன்று எங்கள் மீது இரக்கம் காட்ட யாராவது இருக்காங்களா எனறு கேட்கிறது..
 
பிறக்காமலேயே இறப்பது தானே நியாயம், நீதான் பிறந்து இரண்டு வருடம்ஆயிற்றே..இதுவே அதிகம் இனி நீ உயிருடன் இருப்பது தான் அநியாயம் என்று கூறி அய்லானை கொன்று தங்கள் இரக்கத்தை காட்டி உள்ளார்கள் இன்றைய கொடுமைக்கார ஆட்சியாளர்கள் எங்கள் பிணங்களை புதைக்கவாவது இடம் தாருங்கள் என்று கேட்டு இன்றைய கொடுமைக்கார ஆட்சிக்காரர்களை கஷ்டப்படுத்தாமல் செத்தே பிணமாய் கரை ஒதுங்கி செத்து மடிகிறது உலகை 1300 வருடம் உலகை ஆண்டு உயிர்களின் மீது இரக்கம் காட்டியவர்களின் வாரிசுகள்....
 
#அன்று...
மிகப்பெரும் தேசத்துக்கு ஆட்சியாளனாக இருந்து.. தன் ஆட்சியில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று அறிய... நகர்வலம் வருகிறார் அவர். பசியால் அழும் குழந்தையை உணவு தயாரிப்பது போல் ஏமாற்றி தூங்க வைக்க முயல்கிறார் தாய்...அருகில் சென்ற அவர் ஏன் குழந்தை அழுகிறது என்கிறார்..
 
நிலைமையை சொல்கிறார் அந்த பெண்...உடனடியாக அரசு கஜானாவுக்கு சென்று அப்பெண்மணிக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு தள்ளாத வயதில் தன் தோள் மீது சுமக்க முற்பட்ட போது...அருகில் இருந்த காவலாளி.. அமீருல் மூஃமினே ..நான் இருக்கும்போது நீங்கள் சுமப்பதா கொடுங்கள் என கேட்க...இன்று இந்த சுமையை நீ சுமந்துவிடுவாய்
நாளை மறுமையில் இறைவன் இந்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைக்காக எனக்கு தரும் பாவச்சுமையை உன்னால் சுமக்க முடியுமா என்று கூறிவிட்டு தானே தூக்கிக் கொண்டு போய்.. அங்கிருந்து சமைக்க உதவி செய்து குழந்தைகள் பசியாறி திருப்தியடைந்த பின்னரே உலகின் மூன்றில் ஒரு பகுதியை ஆட்சி செய்து ஜகாத் பணத்தை கூட வாங்க ஆள் இல்லாத நிலையை உருவாக்கிய அந்த மாபெரும் ஆட்சியாளர் கலீபா உமர் ரழி அங்கிருந்து சென்றார்.......
 
#ஆனால்_அவரின்_வாரிசுகள்_இன்று ஒரு வேளை உணவுக்காக ஹிஜ்ரத் செய்கிறார்கள்.உணவில்லாமல் பிணந்தின்னும் கழுகுக்கு உணவாகிறார்கள்...
 
சில காலங்களுக்கு முன்பு சோமாலியாவில்....ஒரு தாய் இளைய மகனை தான் தூக்கிக்கொண்டும் அவளின் மூத்த மகன் இன்னொரு இளைய மகனை தூக்கிக் கொண்டும் உணவுக்காக இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள்....
 
குறிப்பிட்ட தூரம் சென்ற பின்பு மூத்த மகனால் குழந்தையை தூக்க முடியாமல் போகவே...தாய் இரண்டு குழந்தையையும் தூக்க முயற்சிக்கிறார்...முடியவில்லை.....மிகச்சிரத்தை எடுத்தும் முடியாமல் போகவே அந்த குழந்தையை அங்கேயே இறக்கிவிட்டு  அந்த தாய் குழந்தையை நோக்கி சொல்கிறார்...மகனே... உன்னை நான் மறுமையில் படைத்தவன் முன்னிலையில் சந்திக்கிறேன் என்று நற்செய்தி கூறிவிட்டு கண்ணீர் மல்க அங்கிருந்துசெல்ல ஆரம்பிக்கிறார் அந்த தியாகத் தாய்....நாம் பசியோடு இருப்பது போலத்தானே மற்ற உயிரினங்களும் இருக்கும் என்று பிற உயிரினங்களின் பசியுணர்ந்து கழுகுகளுக்கு இரையாக்கிவிட நினைத்துவிட்டாலோ என்னவோ....தன் குழந்தையின் உயிரை கொடுத்து கழுகுகளின் பசியை போக்கி அந்த மாபெரும் ஆட்சியாளன் உமர் ரழியின் பசி போக்கிய நிகழ்வையே பின்னுக்கு தள்ளிவிட்டார்கள் அவரின் வாரிசுகள்...
 
காக்கா குருவிகள் கூட தன் குஞ்சுகள் மீது இரக்கம் காட்டி உணவளித்து உயிராய் வளர்த்து பாதுகாக்கும் போது....பத்து மாதம் வயிறறில் சுமந்து ...
சில காலம் பாசமாய் வளர்த்து...அந்த குழந்தையை அநாதையாய் விட்டுவிட்டு  குழந்தையை பார்த்துக் கொண்டே பிரிந்த அந்த தாயின் வலிமிகுந்த அந்த நொடிகள் அந்த விநாடிகள் எவ்வளவு வேதனைமிக்கதாக கொடியதாக இருந்திருக்கும்..
 
தன் தாய்,சகோதரன் இருவரும் தன்னை இப்படி விட்டு செல்கிறார்களே ...
என்னை யார் காப்பாற்றுவார்கள், யார் உணவளிப்பார்கள் என்று சிறிது நேரத்தில் நாம் ஒரு கழுகுக்கு உணவாக போகிறோம்  என அறியாமல் வெற்றுப் பார்வையை தன்னை பெற்றெடுத்த தாயை நோக்கி பார்த்த வேதனைமிக்க அந்த நொடிகள் எப்படி இருந்திருக்கும் அந்த குழந்தைக்கு....
இந்த காட்சியை,வலியை கற்பனையில் யோசித்து பாருங்கள்...
 
ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் பலஸ்தீனத்தை கைப்பற்றிய பின்னர் யூதர்கள் அகதிகளாய் பிடிக்கப்பட்டார்கள்.அதில் ஒரு தாய் தன் குழந்தையை காணாமல் பரிதவிப்புடன் அங்குமிங்கும்தேடிக்கொண்டிருக்கிறார்.. அதைக்கண்ட அய்யூபி கட்டளை இடுகிறார் தன்படை வீரர்களுக்கு அந்த குழந்தையை தாயுடன் சேர்க்குமாறு...
அப்பேர்பட்ட சமூகத்தின் வாரிசுகள் அகதிகளாய்
உதவ ஒருவருமின்றி கடலில் பிணங்களாய்....
உயிருடன் வந்த அகதிகளை கண்ட உலகம்
முதல் முறையாக பிணமாய் வந்த அகதிகளை பார்க்கிறது..
 
மீன்களுக்கு இரையாகாமல்
நீ கரை ஒதுங்கியது எதற்காக...அய்லானே
உலகில் மனிதம் கொஞ்சமாவது இருக்கிறதா என்று அறியவதற்காகவா
அல்லது மக்களின் கொடுமையை பிறருக்கு உணர்த்துவதற்காகவா....
 
ஆயிரக்கண்ககான என் சகோதர குழந்தைகளை விமான நிலையத்தில் உணவு,உடை பொம்மைகளுடன் இன்முகத்துடன்
வரவேற்றவர்கள் ரூபத்தில் மனிதம் மிச்சமுள்ளது மகனே....
(அமைய இருக்கும் கிலாபா அரசு என் மக்களுக்கு உதவிய
அந்த மக்களை நன்றியுடன் நினைவுகூறும் இன்ஷா அல்லாஹ்)
 
அகதிகளை உள்ளே விடக்கூடாது என்று மின்வேலியிட்ட ஆட்சியாளர்களின் முடிவை மாற்றியமைக்க உன் உயிரை விலையாய் கொடுத்து
உணரவும் வைத்து விட்டாய் மகனே....
 
எந்த குற்றத்திற்காக நீங்கள் கொலை செய்யப்பட்டீர்கள் என்று வினவப்படும்(போது)
அல்குர்ஆன்-81:9
உலகமே கண்ணீர் வடித்த போதும்
பிரான்ஸில் உல்லாசம் அனுபவிக்கும் அநியாயக்கார #ஸல்மான் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.
 
அய்லானே..
நீ கிடந்த கோலத்தால்...
நரம்புகள் வரம்பு மீறி துடித்தும்
சிந்தனையில் எரிமலை ஒன்று வெடித்தும்
கொடுமைகளால் உம்மத் பாடம் படிக்கும் போது
இறை ஆட்சியால் கொடுமைக்காரர்கள் ஒழிக்கப்படும் போது
உலக முஸ்லிம்களின் அங்கமான ஷாம் தேசத்து முஸ்லிம்களே...
வலிகளை தாங்கி வாழ்ந்தீர்கள் இவ்வுலகில்...........................அகதிகளாய்
விரைவில் கொடுமைகளை தாண்டி ஆள்வீர்கள் உலகை.....ஆட்சியாளர்களாய்.
இன்ஷா அல்லாஹ்..
 
#தீர்வு
ஒரு இடத்தில் நிலவும் அசாதரணமான சூழல்
நம்மீது #தனிநபர் ஜிஹாதை கடமையாக்கும்...
ஆனால் அது தற்காப்பும், தற்காலிகமானதும் தானே தவிர
நிரந்தரப் பாதுகாப்புக்கான தீர்வு அது அல்ல...
நபிஸல் அரசு அல்லாத 13வருட மக்கா வாழ்க்கையில்
சுமையா ரழி ,யாசிர் ரழி அவர்களின் மரணத்திற்கு ஆயுதவழி தீர்வை எடுக்காமல் பொறுமையுடன் சிந்தனை ரீதியான
அரசியல் போராட்டத்தை நோக்கி,
ஆட்சியை நோக்கி இலக்கு மாறாமல் முஸ்லிம்களை
சரியான கோணத்தில் அழைத்துச் சென்றது இதற்கு நல்ல உதாரணம்...
 
ஆனால்..
மதீனாவில் ஆட்சியை நிறுவியதும்..
ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நபி ஸல் எடுத்த நடவடிக்கை வரலாறு அறிந்த ஒன்று... அது தான் நிரந்தர தீர்வும் கூட...
ஒரு அரசாக இருந்து தலைமையேற்று செய்யும் ஜிஹாத் மட்டுமே தீர்வு தரும் ,நிரந்தர பாதுகாப்பு தரும் எனபதே நபிவழி..
 
தனிநபர் ஜிஹாத் - தற்காலிகமானது - தீர்வல்ல
அரசு ஜிஹாத் - நிரந்தரமானது - தீர்வு
 
இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும்
குர்ஆன் சுன்னாவில் இருந்து பதிலளிக்கும் இந்த சமூகம்...
முஸ்லிம்களுக்கான பாதுகாப்புக்கு மட்டும் தன் அறிவை
கொண்டு பதில் சொல்வதை என்னவென்று சொல்வது....
 
நெஞ்சை உருக வைக்கிறது முஸ்லிம்களின் அலங்கோலக் காட்சி..
உடனடி தேவை உம்மத்தின் மீட்சி...
இந்நிலையை கண்டிப்பாக மாற்றும் இறைனின் ஆட்சி..
அதற்கு தூதரின் இந்த வரிகளே சாட்சி...
 
இமாம்(கலீபா) ஒரு கேடயமாவார்..
மக்கள் அவர் பின்னே நின்றே பாதுகாப்பு தேடுவார்கள்- நஸயீ திர்மிதி
நபி வழியை மீறி, நபி வழிக்கு மாற்றமாக இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று
இட ஒதுக்கீடையும் , தனிநபர் ஜிஹாதையும் நோக்கி விடுக்கும் சில அமைப்புகளின் அழைப்பானது ஒரு செய்தியை சொல்லாமல் சொல்கிறது,
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களை மிஞ்சி நாங்கள் சிந்திப்போம் என்று
ஒரு போதும் அதில் வெற்றி கிடைக்காது....
 
நபி ஸல் இந்த உம்மத்தை கொடுக்கும் நிலையில்
அமானிதமாக விட்டுச் சென்றார்கள்...
இன்றைய பாலாய் போன அறிவுகெட்ட அறிஞர்கள்
அந்த அமானிதத்தை பாழடித்து வாங்கும் நிலைக்கு மாற்றியது உட்பட
இன்றைய அனைத்து பிரச்சினைகளையும் பட்டியலிடுங்கள்...
அது அனைத்தையும் தனிநபரால் தீர்க்க முடியுமா
அல்லது ஒரு அரசால் தீர்க்க முடியுமா என பாருங்கள்..
அரசு என்று வந்தால்
அது மனித சட்டங்களை கொண்டு இயங்கும் அரசு தீர்க்குமா...
அல்லது இறைச்சட்டங்களால் இயங்கும் அரசு தீர்க்குமா என முடிவெடுங்கள்..
(தமிழகமே போராடிய போதும் , முதல்வரின் ஒற்றை கையெழுத்து தான் தீர்வை தர முடியும்... நீ தீர்வை கேட்கும் இடத்தில் இருக்கப் போகிறாயா,
கொடுக்கும் இடத்தில் இருக்கப் போகிறாயா...சிந்தி)
 
#கிலாபா..
30 நாள் வேலை செய் 31வது நாள்
சம்பளம் தருகிறேன் என்றால் முதலாளியின் வார்த்தையை #நம்புவோம்...
உன் சமூகத்து ஓட்டை வாங்கித்தா,
தேர்தலுக்குப் பின் இடஒதுக்கீடு தர்ரேன் என்றால்
இன்றைய நயவஞ்சக ஆட்சியாளர்களை #நம்புவோம்....
ஆனால் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வின் திருத்தூதர் நபிஸல்
அவர்கள் கிலாபா வரும் என்று சொன்னால் நம்ப மாட்டோம்...
 
ஸும்ம தகூனு கிலாபாஅலா மின்ஹாஜ் நுபுவ்வா-அஹமத்
நபிவழியில் மீண்டும் கிலாபா வரும்...
 
ஓ ... நீ....அது தானாக வரும் என்று கூறும் அறிவாளியா..
மரணமும் இறைவனின் புறத்திலிருந்து வருவது தான்
உனக்கான உணவும் இறைவனின் புறத்திலிருந்து வருவது தான்
இண்டுக்கும் முயற்சிப்பாயா?
அல்லது இரண்டுக்கும் முயற்சிக்க மாட்டாயா?
அல்லது ஒன்றில் அதை அடைய முயற்சி செய்யாமலும் ,
இன்னொன்றில் அதை அடைய முயற்சி செய்து பெறுவாயா?
 
உன் அறிவை ஒதுக்கிவிட்டு...
அழகிய முன்மாதிரியின் மக்கா வாழ்வையும்,
மேலே சொன்ன வார்த்தையையும்பார்..
மரணத்தை அடைய எந்த முயற்சியையும் நபிஸல் காட்டித்தரவில்லை..
ஆனால் ஆட்சியை அடைய முயற்சித்து ஒரு வழியை காட்டித் தந்து...
அந்த வழியில் தான் மீண்டும் ஆட்சி வரும் என்ற செய்தியை சொன்னது முயற்சிக்கவா அல்லது எதற்காக என்று சிந்தி என் சகோதரனே....
 
இன்னொரு கழுகு உன் சகோதரனை தின்னக் கூடாது என்றால் சிந்தி..
இன்னொரு அய்லான் உடல் ஒதுங்க கூடாது என்றால் சிந்தி...
முதல் அகபா, இரண்டாம் அகபா எதற்காக என்று சிந்தி...
நீங்கள் அரபுகளையும், அரபு அல்லாதவர்களையும்
ஆட்சி செய்யலாம் என்று நபிஸல் சொன்னதை சிந்தி...
கிலாபாவுக்காக முயற்சி செய்....காப்பாற்று இந்த உம்மத்தை
இறைத்தூதரின் வாக்கை கொண்டு...
 
#ஹிஸ்புத்தஹ்ரீர்
அமைதிவழியில் , நபி ஸல் வழியில் ஆட்சியை அடைவதற்கான முயற்சியில்
ஈடுபட்டு பலர் தஙகள் இன்னுயிரை நீத்தது எதற்காக என்று சிந்தி சகோதரனே...
உலகிலேயே நபி ஸல் வழியில் ஆட்சியை அடைவதற்கான் வழிமுறையை கொண்ட ஒரே இயக்கமும், நபிவழி ஆட்சிமுறையை தெளிவாக்கி கொண்ட இயக்கமும் ஹிஸ்புத்தஹ்ரீர் மட்டுமே.....
 
நபி ஸல் தொழுதுள்ளார்கள் எனவே நாம் நபிவழியில் தான் தொழணும் என்று நபிவழி தொழுகையை காட்டித்தந்தவர்கள்,
நபி ஸல் நோன்பு வைத்துள்ளார்கள் எனவே நாம் நபிவழியில் தான் தொழணும் என்று கூறிய நபிவழி நோன்பை காட்டித்தந்தவர்கள்...
ஏன் நபிவழி ஆட்சி இப்படி தான் என்று காட்டித்தரவில்லை?
அதில் மட்டும் சுதி குறைவது ஏன்?
ஒரு மாபெரும் நபிவழியை புறக்கணிப்பதாக உன் அறிவு சொல்லவில்லையா....சிந்தி....
 
ஹிஸ்புத்தஹ்ரீர் எழுப்பிய இந்த இயக்கம்
சுன்னாவுக்கு மாற்றமான கல்லறை இயக்கம் #அல்ல....
நபிவழியில் தாவா சிறப்பாய் போனால்
இறை உதவியுடன் கிலாபா வரும் #மெல்ல....
வல்லரசாய் இருந்து படைதிரட்டி
போவோம் எதிரிகளை #வெல்ல....
கிலாபா படையின் முன்னே
US இஸ்ரேல் படை #பெரிதல்ல
 
மின்னல் போன்று சிந்தனை வாள் ஒன்றை எடுத்து
இன்னல் தீர #அரசியல் போராட்டம் நடத்து....
 
இரத்தக்கறை படிந்த ஷாம் மக்களின் லட்சியம்(கிலாபா)
இறை ஆட்சியை கொண்டு நிறைவேறுவது நிச்சயம்...
 
சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது
நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே...
ஒரு அரசாங்கமாக இராணுவ பலத்துடன்
எதிரிகள் அச்சத்துடன் இருக்கும் நிலையில்
மக்காவில் இஸ்லாமிய படை நுழைந்த போது இறங்கி வசனம் இது...
(இன்று பள்ளிவாசலை பிடிசிசதுக்கெல்லாம் இத போடறாங்க)
சத்தியம் வரும்..
அசத்தியம் அழியும்...
நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே...
ஷாம் தேசமும் விரைவில் அது போல் ஒரு சம்பவத்தை எதிர் நோக்கியுள்ளது..
 
முஸ்லிம்களுக்கெதிராக முதலாளித்துவம் நடத்தும்
மூன்றாம் உலகப்போரை இறை ஆட்சி முடிவுக்கு கொண்டு வரும் ...
இன்ஷா அலலாஹ்...
 
அன்புடன்
அபூகிலாபா ராஷிதா
மேலப்பாளையத்திலிருந்து...