Showing posts with label காவிகள். Show all posts
Showing posts with label காவிகள். Show all posts

Jul 9, 2016

சங் பாரிவார சாத்தான்களின் சல்லித்தனமான செயல்கள்....!!

வாசியுங்கள்..பகிருங்கள்...

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் ...

ஆட்சியை பிடித்த பிறகும்கூட மதவெறியை தூண்டும் விதமாக பேசி ஊடகங்களின் வாயில் அரைபட சங் பரிவார கூட்டம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

சங் பரிவாரத்துக்கு இரண்டு வெளிப்படையான  முகம் உண்டு..ஒன்று இந்து மத காவலர்கள்..
இண்டாவது தேச பக்தர்கள்...
ஆனால் இரண்டுமே பொய் என்பது உலகறிந்த ரகசியம்..

இப்போது வளர்ச்சி அமைதி வளம் என்றெல்லாம் புளுகி ஆட்சியை பிடித்த பின்னர் மோடியை பிரதமராக்கிய கார்ப்பரேட்டுகளுக்கு பிரதிபலன் நிச்சயம் செய்தே ஆகவேண்டும்..
அதன் பலனாகத்தான் மோடி நாடுநாடாக சுற்றி இந்தியாவை விற்றுக்கொண்டும்,அம்பானி அதானிக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தரும் புரோக்கர் வேலையையும் செய்துகொண்டு இருக்கிறார்..

உள்ளூர் வியாபாரிகளில் தொடங்கி உலக வியாபாரிகள் வரை அத்தனை பேருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மோடியை ஆட்சியை விட்டு மாற்றவே மாட்டார்கள்...

நாம்தான் ஓட்டுப்போட்டு பிரதமரை தேர்ந்தெடுக்கிறோம் என நினைத்தால் நம்மை  விட முட்டாள்கள்  உலகில் இல்லை..

நாம் யாருக்காக அழவேண்டும்,யாருக்காக சிரிக்க வேண்டும்,யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கையில் தான் இருக்கிறது..

இந்தியாவின் 80% ஊடகங்கள் கார்ப்பரேட்டுகள் கைவசம்..அதன் வழியாகத்தான் யாரை தீவிரவாதி ஆக்கவேண்டும்,யாரை தேசியவாதி ஆக்கவேண்டும் என அவர்கள் நம்மை உளவியல் ரீதியாக ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்....

விசயத்துக்கு வருவோம்..

பாஜக இந்துமத காவலர்கள் கிடையாது என்பதையும்,தேசதுரோகிகளின் சங்கமம் என்பதையும் பாதிக்கு பாதியாக அறிந்து வைத்திருக்கிறோம்...

இது போன்ற மதரீதியான சர்ச்சைகளை கிளப்பிவிடுவதன் மூலமாக தாங்கள் இந்து மத காவலர்கள் தான் என்றும்,முஸ்லிம்& கிருஸ்துவர்களை ஒடுக்க வந்தவர்கள் என்றும் நிறுவ முயற்சிப்பதோடு, தேசத்தை மோடி பட்டா போட்டு விற்றுக்கொண்டும்,பொருளாதாரத்தை நாசம் செய்துகொண்டு இருப்பதையும் மறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்...

அவ்வளவு ஏன்??

முகநூலில் நாம் கூட பாஜகவை ஒரு மதவெறிக்கட்சியாகத்தானே உருவகப்படுத்துகிறோம்?

கம்யூனிச கொள்கை கொண்ட சிலர் மட்டுமே பாஜகவை கார்ப்பரேட்டுகளின் அடிமை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்...

தன்னுடைய மதவெறி முகத்தை மட்டும் முன்னால் நிறுத்திவிட்டு தேசத்தை மீண்டும் ஒருமுறை அடிமையாக்கும் டேஷ்பக்தி முகத்தை மறைக்க முயல்கிறது பாஜக...

அதை அப்படியே கார்ப்பரேட் ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன...
ஊடகங்களில் கூட ரயில் கட்டண உயர்வு,பெட்ரோல் டீசல் விலை உயர்வு,அந்நிய முதலீடு,தனியார்மயமாக்கல்,தாராளமயமாக்கல் குறித்து விவாதிப்பதில்லை...பாஜகவின் மதவெறி முகத்தை மட்டுமே விவாதப்பொருளாக கொண்டு "என்னதான் பாஜக மதவெறி பிடித்த கட்சியானாலும் நமக்கு நல்லது செஞ்சிருக்காங்கப்பா" என்பதை போன்ற மாயையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்....

இதே நிலை நீடிக்குமானால் பாஜக இந்த ஆட்சியில் செய்த அயோக்கியத்தனங்கள் எதுவுமே வெளியே வராமல் அமிழ்ந்து விடும்...

பெட்ரொல் டீசல் விலை கூடும்போது பாகிஸ்தானை திட்டுவதும், ராணுவம் மற்றும் ஆயுதத்துறையில் 100% அந்நிய முதலீட்டுக்காக தலித்துகளை கொல்வதும், அம்பானி,அதானிகளுக்கு நாட்டை கூட்டிக்கொடுக்கும்போது முஸ்லிம்களுக்கு எதிரான விஷத்தை கக்குவதுமாக தங்களின் வலியோன் காலை நக்கும்போது எளியோனை எட்டிமிதித்து பார்வைகளை திசைதிருப்பும் முயற்சியில் வெற்றி பெற்ற ஆரிய சதிக்கும்பல் இது...

இப்போதும் கூட மோடி என்னும் கார்ப்பரேட் புரோக்கர் அயோக்கிய ஆட்சியின் 45 ஆயிரம் கோடி ரூபாய் மெகா ஊழலை மறைக்க உலகறிந்த இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர்.ஜாகிர் நாய்க் அவர்களின் பேச்சு தீவிரவாதத்தை தூண்டுவதாக கொழுப்பெடுத்த ஊடக பன்றிகள் உளறிக்கொண்டு திரிகின்றன...

எப்போதெல்லாம் இந்த சங் பரிவார கும்பலின் ஊழல்,பொருளாதார குற்றங்கள், கார்ப்பரேட் பொறுக்கித்தனங்கள் ஆகியவை வெளியே வருகின்றனவோ அப்போதெல்லாம் மக்களின் முன்னே இந்த சாத்தான் கூட்டத்தின் சங் பரிவார முகத்தை மட்டுமே காட்டி பிரச்சினையை திசை திருப்பும் திருகுதாள வேலைகளை திறம்பட செய்கின்றன புரொக்கர் ஊடகங்கள்...

காரணம்???

தேசிய அளவிலும், மாநில அளவிலும்
இருக்கும் ஊடகங்களின் முதலாளிகள் அல்லது பினாமிகள் பாஜகவின் எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமான சொறிபிடித்த நாய்கள் என்பதே பிரதான மற்றும் புரதான காரணம்...

நான் முன்னரே சொன்னது போல இன்னும் 20 ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சி செய்யும் நிலை உருவாகும்...

ஆகவே பாஜகவின் மதவெறி முகத்தோடு சேர்த்து கார்ப்பரேட் அடிமை முகத்தையும் உலகிற்கு காட்டியாக வேண்டும்...

நம்மிடம் இருக்கும் மிகச்சிறந்த ஆயுதமான வலைத்தளங்களை சரியாக பயன்படுத்துவோம்...

சங் பாரிவார சாத்தான்களின் சல்லித்தனமான செயல்களை சந்திசிரிக்க வைப்போம்...

அன்புடன் :- மாணிக் வீரமணி. ...

www.udagam.com

Jun 4, 2014

பள்ளிவாசலுக்குள் புகுந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்!

இன்ஷா அல்லாஹ்!! இனியாவது இந்தியாவில் நடத்தப்படும் போராட்டங்களில் கிலாபத்தை உச்சயரிக்க வேண்டும்!! இது இந்தியாவின் இஸ்லாமிய மறுமலர்ச்சி நேரம்.....


வேலூர் மாவட்டம் கே.கே.நகர்பகுதியில் உள்ள ஆர்.என்.பாளையம் “மஸ்ஜிதே சுபானியா “03-06-2014 இன்று மாலை மக்ரீஃப் தொழுகைக்கு பின் ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி. பாசிச சக்திகள் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தீடீரென பள்ளிவாசலுக்குள் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த திடீர் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் மோதினார் பலத்த காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் .

பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள வீடுகள் என பயங்கரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். முஸ்லீம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தவுடன் தாங்கள் வந்த பைக்கை விட்டுவிட்டு வன்முறையாளர்கள் தப்பி ஓடினர் ..

கயவர்கள் வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர் (அந்த பைக்கை மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்). காவல்துறைக்கு தகவல் கொடுத்தபின் வந்த போலிசார் ஓன்று கூடியிருந்த மக்களை விரட்டி அடித்தனர்

Sources From http://www.adiraipirai.in/

மகாராஷ்டிராவில் காவிகள் வெறியாட்டம் : முஸ்லிம் இஞ்சீனியர் அடித்துக்கொலை !


பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; 500 குர்ஆன் எரிப்பு.... கடும் அச்சத்தில் முஸ்லிம்கள்!! 

116 காவி குண்டர்கள் கைது !!! 

மகாராஷ்டிர மாநிலம் முழுவதிலும், கடந்த 5 நாட்களாக, 30 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, முஸ்லிம்களின் உயிர்-உடமைகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (03/06) 'முஹ்சின் சாதிக் ஷேக்' என்ற 24 வயது 'ஐடி இஞ்சீனியர்' அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார், பள்ளியின் இமாம் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறைந்த மும்பை ரவுடி பால்தாக்கரே குறித்தும் சத்ரபதி சிவாஜி, மற்றும் சில ஹிந்து தலைவர்கள் குறித்தும் யாரோ ஒரு விஷமி, 'பேஸ்புக்'கில் மார்பிங் செய்து படம் போட்டுள்ளான் எனக்கூறி, கடந்த சனிக்கிழமையன்று, காவிகள், கலவரத்தில் ஈடுபட்டனர்.

200 க்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

குறிப்பாக 'புனே' நகரை சுற்றிவளைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மஸ்ஜிதுல் தன்சீமுல் முஸ்லிமீன், தாருல் உலூம் அஷ்ரபிய்யா, லாண்டேவாடி, பூசரியா போன்ற பள்ளிவாசலுக்குள் நுழைந்த 500 க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள், பள்ளியின் திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

50 க்கும் அதிகமான 'குர்ஆன்' பிரதிகளை கிழித்தெறிந்தும், தீவைத்துக் கொளுத்தியும் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

பீர்ஷா ஜலாலுத்தீன் காதிரி 'தர்கா'வும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நூர் முஹல்லா பள்ளிவாசலுக்குள் வீச்சறுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் நுழைந்த கும்பல், கப்ருஸ்தானை சேதப்படுத்தியும், தண்ணீர் டாங்கிகளை உடைத்தும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது.

ஆயிஷா பள்ளிவாசலின் இமாம், மவுலவி அஷ்பாக் மிஸ்பாஹி, கடுமையாக தாக்கப்பட்டு 'இனாம்தார்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹன்டேவாடி பகுதியில் உள்ள 5 மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், 'மதரசா ஷப்னம் கரீப்நவாஸ்' பாடசாலயில் அரபி பயில வந்த 20 சிறுவர்களையும் தாக்கி, அவர்கள் வைத்திருந்த குரான் உள்ளிட்ட புத்தகங்களை கிழித்துள்ளனர்.

குர்வே ரோடு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 20 பேக்கரிகள் சேதப்படுத்தப்பட்டுள்ள அழிவின் மதிப்பீடு மட்டும் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும், மகாராஷ்டிர மாநிலத்துக்கு, விரைவில் நடக்கவுள்ள தேர்தலில், பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றிப்பெறவே, இக்கலவரங்கள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Maruppu