Showing posts with label முஸ்லிம் இராணுவங்கள். Show all posts
Showing posts with label முஸ்லிம் இராணுவங்கள். Show all posts

Jul 16, 2014

இன்று காலத்தின் கட்டாயம் எது ?


அநீதமான ஒரு உணர்வுத் தூண்டல் மூலம் ஏகாதிபத்திய எதரி தனது இலக்குகளையும் ,நிர்ணயங்களையும் அடைந்து கொள்கிறான் .எவ்வாறு ?அந்த உணர்வு எனும் பொறி வேகமாக தற்காப்பை வேண்டிய ஒரு கட்டாய வன்முறைக் கலாசாரத்தை கையில் எடுக்கும் .உச்ச தியாகத்தையும் அற்புதமான பல சாகசங்களையும் சுமந்து பிரமித்த போராட்டமாக பரிணமிக்கும் . பின் அதிலிருந்தும் சூழ்ச்சிமிகு எதிரி தனது சதிகளை , விலைபேசல்களை தொடங்கி இன்னொரு நிர்ணயத்தையும் ஏற்படுத்தி விடுகிறான் .

இன்று பாலஸ்தீன போராளிகளின் சுடு சக்தி பிரமிக்கத் தக்க அளவு அதிகரித்து இருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன .அதில் இருக்கும் உண்மைத் தன்மைகளை விட முஸ்லிம்களாகிய எமக்கு இருக்கும் ஆத்திரமும் , கவலையும் இத்தகு செய்திகள் மூலம் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி விடுகின்றன . ஆனால் நிலைமை எமது தரப்பில் அதி மிகை சேதத்தை ஏற்படுத்தி உள்ளது ;என்பதுதான் கசப்பான உண்மை .

எதிரியின் தேவைக்காக முஸ்லீம்களின் போராட்ட உணர்வு தூண்டப்படுவதும் , பின் அதையே சாக்காக வைத்து தனது திட்டமிட்ட அடைவுகளை சியோனிச இஸ்ரேல் அடைந்து கொள்வதும் காலம் காலமாக தொடரும் உண்மைகள் . முஸ்லீம் உம்மத்தின் இஸ்திரமான அரசியல் இராஜதந்திர பின்புலமற்ற நிலை இத்தகு ஏமாற்றங்களுக்கு பின்னால் சுலபமாக அவர்களை அணிதிரட்டி விடுகிறது .

ஏதோ திருப்பி அடித்தோம் என்ற ஒற்றை திருப்தி தவிர இங்கு குறிப்பிடத்தக்க அடைவுகள் என்று இதுவரை கூறக்கூடியது எதுவும் இல்லை . சிலநேரம் இடைக்கால சமரச தீர்வுகள் ஒரு சிறந்த அடைவாக சிலரால் முன்வைக்கப் படலாம் . ஆனால் அங்கு நடந்துள்ளது என்ன !? இஸ்ரேல் என்ற கள்ளப் பிறப்புக்கு தேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது தவிர !

அதே நேரம் முஸ்லீம் உலகம் தனது பலம் வாய்ந்த இராணுவத்தை மற்றும் தளவாடங்களை ,தேசிய காட்சி சாலைக்குள் வைத்து பூட்டி அழகு பார்க்கும் துரோக அரசியலை செய்யும் இன்றைய நிலையில் . இத்தகு பதில் நடவடிக்கைகளில் திருப்திப்படுவது தவிர வேறு வழியில்லை .

ஒரே உம்மத் ,ஒரே தலைமை என்ற இஸ்லாத்தின் தனிப்பெரும் கிலாபா அரசியலை நபிவழியில் மீள் கட்டமைக்காதவரை பலஸ்தீனுக்கோ முஸ்லீம் உம்மத் திற்கோ நிரந்தர விடிவு சாத்தியமில்லை . ஆனால் இன்று இத்தகு அரசியலின் பெயரில் வெறும் உணர்வு பூர்வமான உருவாக்கங்கள் உலாவிடப்பட்டிருப்பதும் ,இஸ்லாத்தின் தீர்வு தொடர்பில் ஒரு சலிப்புடன் கூடிய அதிருப்தியை விதைக்கும் நடவடிக்கையாக கூட இருக்கலாம் .

அதாவது இத்தகு தூர தரிசனமற்ற , உத்தரவாதமில்லாத பிரகடனங்களின் பின்னரும் தனது சண்டித்தனத்தை சியோனிஸ்டுகள் காட்டி நிற்பது எமக்கு தடியை தந்து இரும்பால் அடிக்க நினைக்கும் சங்கதி போல் தான் இருக்கின்றது . எதிரியின் இத்தகு சதிமுக அரசியலில் இருந்து எம்மை பாதுகாத்து உறுதியான அரசியல் பின்புலத்தை வேண்டி பிராத்திப்பதோடு அதற்கான முயற்சிகளில் வேகமாக ஈடுபடுவது இன்று காலத்தின் கட்டாயம் ஆகும்

Jul 4, 2014

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்.


1. பத்ர் போர் :

இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள்
தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம்
செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் 
நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம்
ஆண்டு ரமலான் மாதம் பிறை 17இல்தான்.


2. மக்கா வெற்றி : 


குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள
சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த
இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.


3. அன்-ஜாலித் போர்:


உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய
கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள்
வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.


4. ஹைதீன் போர்:


உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான்
சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல்
முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும்
இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான்.


இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற
ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்…


5. குவாடிலட் போர்: 


ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக
மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க
நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.
இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை)
முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.


Sep 3, 2013

துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!!!

இன்று காலனித்துவ சக்திகளது பலம் ஓங்குவதில் எமது முஸ்லிம் தலைமைகள் அதீத அக்கறையுடன் செயற்படும் துர்ப்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உம்மத்!

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய இஸ்லாமிய அரசும் அதனைத் தொடர்ந்து வந்த குலபாக்களது ஆட்சிமுறையும் முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் உடைமைகள் காக்கப்படவும் தீனுல் இஸ்லாம் உலகில் சகல துறைகளிலும் அமுலாக்கப்படவும் வழிவகுத்தது. மேலும் “ரோம்” மற்றும் “பாரசீகப் பேரரசுகளை” தம்வசப்படுத்தி இஸ்லாத்தை பரவலாக்கம் செய்ய வழிவகுத்தது. உலகில் மூன்றில் இரண்டுபகுதியை தம்வசப்படுத்தி உலக தலைமைத்துவத்தை வழங்கியது.

1924 உதுமானிய கிலபா வீழ்ச்சியுடன் முஸ்லிம்களுக்கான ஒரே தலைமை அழிக்கப்பட்டதன் விளைவாக முஸ்லிம்கள் 57 தலைமைகளான பிரிந்து காலனித்துவ சக்திகளது அடிவருடிகளால் சர்வாதிகார முறையில் ஆட்சிசெய்யப்பட்டார்கள்.

இவர்கள் தேசிய எல்லைக்குள் முஸ்லிம்களது வளங்கள், இராணுவம் முடக்கப்பட்டு மதஒதுக்கல் சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டமுதலாளித்துவ நலன்களை காக்கும் ஜனநாயக ஆட்சிமுறைமூலமும் மன்னர் ஆட்சி முறைமூலமும் முஸ்லிம்கள் ஆட்சிசெய்யப்பட வழிவகுத்தார்கள்.

இவர்ளிடம் இஸ்லாம் மேலோங்கவேண்டும் குர்ஆன் சுன்னாவின்படி வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும் எனும் சிந்தனைப் போக்கோ அல்லது முஸ்லிம்களது நலன்கள் பேணப்பட்டு அவர்களது கண்ணியம் பேணப்படவும் இஸ்லாத்தினது பொது எதிரிகள் உரிய முறையில் நடத்தப்பட்டு தீனுல் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் எண்ணமோ இருக்கவில்லை.

இவர்கள் குப்பார்களான காலனித்துவ சக்திகளுடன் கைகோர்த்தபடி முஸ்லிம்கள் கருவறுக்கப்படுவதிலும் தங்கள் சுய நலன்களுக்காக முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு பலமிழக்கச்செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இத்தகைய இழிநிலைகளின் விளைவாக இலட்ச்சக்கணக்கான எமது முஸ்லிம் சகோரதர சகோதரிகளது உயிர்கள், உடைமைகள் அழிக்கப்பட்டதனை நாம் ஈராக், ஆப்கானிஸ்தான், காசா, மாலி, பர்மா, எகிப்து சிரியா,கஷ்மீர் போன்ற நாடுகளில் காணக் கூடிதாக உள்ளது.

இன்று முஸ்லிம்களுக்கான ஒரே தலைமையான கிலாபா அரசு இல்லாததனாலும் “முஸ்லிம்களது பாதுகாப்பு அரணாகிய இராணுவம்” தேசிய எல்லைக்குள் முடக்கப்பட்டு கூறுபோடப்படடுள்ளதாலும் பலம் குன்றிய நிலையில் முஸ்லிம் உம்மத் காணப்படுகிறது.

அதிலும் நாம் கைசேதப்படும் துர்பார்க்கியமான நிலையாதெனில் எமது முஸ்லிம் இராணுவத்தினரையே எமது சிறுவர்களை, முதியோர்களை, சகோதர சகோதரிகளை கொன்று குவிக்குமளவுக்கு காலனித்துவ சகதிகள் திட்டமிட்டு இன்றைய முஸ்லிம் தலைமைகளை வழிநடாத்துவதனை காணமுடிகிறது.

அதன் ஒரு மெகா வடிவமாக இன்று அமெரிக்கா தலைமையில் காலனித்துவ சக்திகள் அணிதிரண்டு சிரியாவில் முஜாஹிதீன்களை கருவறுக்க களமிறங்கியுள்ள நிலையில் எமது முஸ்லிம் தலைமைகள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து எகிப்தில் இஸ்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்கு “அல்-சிசியை” பயன்படுத்தி ஆட்சிகவிழ்ப்பை செய்தது போல் சிரியாவில் “முஜாஹிதீன்களது கை மேலோங்கி” அங்கு மக்கள் கோரும் ஆட்சிமுறையான கிலாபா அரசு நிறுபவப்பட்டுவிட்டால் தங்களது ஆட்சி பீடங்களுக்கு கதிரைகளுக்கு பேராபத்து என்பதனை உணர்ந்து குப்பார்களது அணியினைப் பலப்படுத்துவதனைக் காணலாம்.

ஆனால் அ
ல்லாஹ் இவர்களது அனைத்து சதிகளையும் முறியடிக்கும் மிகப்பெரிய சதிகாரன் என்பதனை வெகுவிரைவில் இவர்கள் உணர்வார்கள்.

“முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

“எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். “(61:8)

Aug 31, 2013

இன்றைய அமெரிக்க யூத இராணுவ முன்னெடுப்புகளில் எமது முஸ்லிம் இராணுவங்கள் கற்றவேண்டிய பாடங்கள்!


இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் கேடயமாக இருந்தது முஸ்லிம்களது இராணுவம். அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றில் மேற்கொண்டதன் பயனாகவே மதீனாவில் நிறுவிய இஸ்லாம் மிகப்பெரும் இரு பேரரசுகளான ரோம் மற்றும் பாரசீகத்தை தோற்கடிக்கும் சக்தியை பெற்று இஸ்லாத்தை நிலைநிறுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கியது என்பது எமது வீரவரலாறு.

ஆனால் இன்று எமது உம்மத்தினது இராணுவம் 4.7 மில்லியனாக அமெரிக்க ரஷ்ய மற்றும் இந்திய இராணுவங்களின் தொகையிலும் அதிகமாக இருந்தும் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது? அது இஸ்லாத்தின் எழுச்சியிலும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் இன்று நாம் இழந்துள்ள கிலாபத அரசை நிறுவுவதிலும் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

நிச்சயமாக, இன்றைய எமது முஸ்லிம் இராணுவம் தமது தேசிய எல்லைக்கு அப்பால் இணைந்து தமது அமானிதமான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்து இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுவுவதில் பங்களிப்பு செய்யும் அதி உன்னத காலத்தில் உள்ளது.

இன்றுள்ள துர்பாக்கியமான நிலை யாதெனில் இன்றுள்ள முஸ்லிம் தலைமைகளால் தங்களது சொந்த நலனுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் தொழிற்பட்டு இன்று முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய முஸ்லிம் இராணுவங்கள் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களையும் கொன்று குவிக்கும் கொடூர நிலைக்கு அவர்களது போக்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து எமது சகோதர இராணுவத்தினை மீட்டெடுப்பதற்கு நாம் பொறுப்புடனும் பக்குவமாகவும் தஃவத் கொடுத்து அவர்களை இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலன்களின் பக்கம் மீட்கவேண்டும்.

அத்துடன் இஸ்லாம் மீண்டும் ஒரு வல்லரசாக மாற்றப்படுவதிலும் குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்து துறைகளில் அமுலாக்கப்படுவதிலும் பாரிய பங்களிப்பை கோரி அவர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இன்றைய முஸ்லிம் சகோதர சகோதரிகளிக்கு பாரிய பொறுப்புள்ளது.

சிந்திப்போம்! எமது முஸ்லிம் இராணுவ துஸ்பிரயோகத்தைக களைய ஆக்கபூர்வமான தஃவா முன்னெடுப்புக்களை முஸ்லிம் நாடுகளில் வழங்க உழைப்போம்! இஸ்லாம் ஒரு சுபபவராக இன்றைய முதலாளித்து தலைமைத்துவத்தின் மாற்றீடாக உலக மக்களது மீட்சியாக மலர உழைப்போம்!