Showing posts with label Concepts. Show all posts
Showing posts with label Concepts. Show all posts

Aug 8, 2016

இஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி!


இஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் அறிவு தேடும் வழிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்ல் (நீதி) ஆனது எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்களே (தீர்ப்புக்களே) என இறைச்சட்டங்களுக்கு மீள வரைவிலக்கணம் வழங்குதல் என்பன இந்த முயற்சியில் முக்கியமான கைங்கரியங்களாகும்.

இந்த தீய முனைப்பில் சில இயல்புகள் அடிக்கடி பளிச்சிடுகின்றன:

1. அறிவு தேடுதலை கட்டுப்படுத்தல். (பெரும்பாலும் அரசுகளால்) அங்கீகாரம் பெற்ற அறிஞர்கள் சிலரைக் கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்ஆவை நேரடியாக அணுகுவது ஆபத்தானது என்ற மனப்பதிவை முஸ்லிம்களின் மனதில் ஏற்படுத்தல். இந்த அழுத்தம் எந்தளவிற்கு பிரயோகிக்கபடுகிறது என்றால் சில சமயங்களில் ஒரு மார்க்கத் தீர்ப்பு மிகத் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களுடன் முரண்படுவதாகத் தெரிந்தாலும், முஸ்லிம்கள் அது சம்பந்தமாக மௌனம் காத்து அவ்விடயத்தை அறிஞர்களின் கைகளில் மாத்திரம் விட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை வளர்க்கப்படுகிறது. இந்நிலை முன்னைய யூத, கிருஸ்தவ சமூகங்கள் அறிவை மத அறிஞர்களின் ஏகபோக உரிமையாக சுருக்கிவிட்டதன் விளைவால், மார்க்க அறிஞர்கள் வழி பிறழ்ந்த மக்களினதும், ஆட்சியாளர்களினதும் மனோ இச்சையை திருப்திப்படுத்தும் வண்ணம் வேத வெளிப்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ததையொத்த கவலைக்கிடமான நிலையாகும்.

2. இஜ்திஹாத், என்ற தூய வழிமுறை இன்று “மார்க்கம் மௌனம் காக்கின்ற” விடயங்களில் “மனிதன் இயற்றுகின்ற சட்டங்கள்” என்ற பொருளை எட்டியிருக்கிறது.சில விடயங்களில் மார்க்கம் மௌனம் சாதிக்கிறது என்ற மிகப்பிழையான எடுகோளின் படி, தவறாகப் பயன்படுத்தப்படும் இஜ்திஹாத் வழிமுறை இன்றைய உலகை ஆள்கின்ற மனிதச் சட்டவாக்க பொறிமுறையுடன் நன்றாகவே ஒத்துப் போகின்றது. “எங்கெல்லாம் நீதி(அத்ல்) நிலைத்திருக்கிறதோ அதுதான் அல்லாஹ்(சுபு)வின் சட்டமாகும்” என்ற ஒரு புதுமையான வரைவிலக்கணத்தை அண்மையில் ஒரு ஷரீஆ துறை அறிஞர் என்னிடம் சொன்னது இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. இஸ்லாமல்லாத குப்ர் தேசங்களில் மில்லியன் கணக்கான இஸ்லாமியச் சட்டங்கள் அமூல்படுத்தப்படுகின்றன என அவர் கூறிய பொழுது, அதிர்ச்சியோடு இல்லை...அவையெல்லாம் குப்ர் தேசங்களல்லவா... என்று நான் சுட்டிக்காட்ட, அவர் என்னை வியந்து பார்த்து “இத்தக்கில்லாஹ்” (அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்) என்று எச்சரித்ததையும் இங்கே நினைவு கூறுகின்றேன்.

3. இஜ்திஹாத் என்பது “அத்தரூரா - இன்றியமையாத நிலை” மற்றும் “ஹஃபத் தரரைன் - தீயதில் சிறியது” என்ற இரு அடிப்படைகளை மாத்திரம் சுற்றிச் சுழலும் ஒரு பொறிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. நவீன கால பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்வாக்களில் ஏறத்தாழ அனைத்துமே நலன்களையும் (மஸ்லஹா), தீங்குகளையும் ஆராய்வதை மையம் கொண்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அத்தீர்ப்புகளுக்குள் ஒரு திருமறை வசனமோ அல்லது நபிமொழியோ சொல்லப்பட்டால் அது இந்த நலன் VS தீங்கு கணக்கை தீர்க்க முன்வைக்கப்படும் ஆதாரமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தை மறுபொதி பண்ண எடுக்கப்பட்ட முயற்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை இலகுவாக காலணித்துவம் செய்வதற்காக அவர்களை அமைதிப்படுத்தி, இயங்காது வைத்துக்கொள்ள கடுமையான பிரயத்தனம் எடுத்தனர். குலாம் அஹ்மத் போன்றோர்களை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை அமைதிகாக்க கற்றுக்கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதில் படு தோல்வியடைந்தனர். இதே நிகழ்ச்சி நிரலை “இஸ்மாயீலி” களைப் பயன்படுத்தி நிறைவேற்ற நினைத்தனர். அங்கேயும் மூக்குடைபட்டனர். காந்தியை பயன்படுத்தி அகிம்சையை போதித்த போது சில காலம் அது கைகூடினாலும் மேற்குலக மேலாதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் உம்மத்தை இயங்காது வைத்திருப்பதற்கு, எதிர்வினையாற்றாது அமைதி காக்கச் செய்வதற்கு அதுவும் நீண்ட காலம் வெற்றியளிக்கவில்லை. மேலும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும், பொருள் கொள்ளலுக்கும் ஏற்ப அல்குர்ஆனை மொழியாக்கம் செய்து முஸ்லிம்களின் கைகளில் தவழவிட்டுப் பார்த்தனர். எனினும் மூல அரபு மொழி குர்ஆனுடன் உம்மத்திற்கு இருந்த தொடர்பால் அவர்களின் சூழ்ச்சி பழிக்கவில்லை. ஹதீத்களை இஸ்லாத்திலிருந்து தொடர்பறுத்து இஸ்லாத்தை நடைமுறை ரீதியாக அமூலாக்கம் செய்வதை தடுக்க முயன்றனர். ஹதீத் கலையின் ஏற்புடமை பற்றி மக்களின் மனதில் ஐயப்பாடுகளை விதைக்கும் வண்ணம் தமது பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை ஏற்படுத்தி அதனைச் சாதிக்க நினைத்தனர். எனினும் ஒரு சிலரைத்தவிர ஏனையோரை அந்த முயற்சி வழிகெடுக்கவில்லை. இன்றும் பாகிஸ்தானிலே அல் கம்தி போன்ற தனிநபர்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தகைய ஆழமான முயற்சிகள் எல்லாம் பயனளிக்காத நிலையில் அவர்கள் பாவிக்கும் அண்மைக்கால யுக்திகளை இவ்வாறு சுருங்கக் கூறலாம்.

1) அறிவை குறித்த “அங்கீகாரம் பெற்ற அறிஞர்” களுக்கு மாத்திரம் மொத்தமாக குத்தகைக்கு வழங்குதல். அந்த அறிஞர்கள் கைமாறாக அரசாங்கங்களுக்கு கட்டுப்படும்படியும், தற்போதுள்ள (குஃப்ரான) வாழ்வொழுங்குடன் இரண்டரறக் கலந்து வாழும்படியும் மக்களுக்கு போதனை செய்தல்.

2) இஜ்திஹாத்தின் பொருளை “பலன்களையும், தீங்குகளையும் நிறுத்துப்பாக்கும் மனித மதிப்பீடு” என்பதாக மாற்றுதல்

3) “ஹுக்ம் ஷரீய்” இன் பொருளை அனைத்து “நீதி” ஆன சட்டங்களும் ஹுக்ம் ஷரீய்தான் என்பதாக மறுவிளக்கம் அளித்தல். அதன்படி மனிதன் இயற்றுகின்ற எத்தகைய நீதியான சட்டங்களும் அல்லாஹ்(சுபு)வின் அஹ்காம்கள்தான் என்ற நிலைப்பாட்டுக்கு வருதல்.

எனவே இன்றைய சூழலில் உலகில் எந்த எல்லையில் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டாலும் அவர் இத்தகையதொரு ஆபத்தான திசை நோக்கி உம்மத்தை தள்ளுகின்ற முயற்சி இடம்பெற்று வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். உம்மத்தை சரியான சிந்தனை நோக்கி தொடர்ந்து விழிப்பூட்ட வேண்டும்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் கல்வி என்பது அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அது முன்னமே அங்கீகாரம் பெற்ற அறிஞர்களுக்கு மாத்திரம் தனியுரிமையாக வழங்கப்பட்டதல்ல. அதேபோல சத்தியத்தை உரைப்பதும், ஆட்சியாளர்களை தட்டிக்கேட்பதும் இஸ்லாத்தின் முக்கிய அங்கங்களாகும். அதன்படி குப்ர் சிந்தனைகள் அனைத்தையும், அதனை கட்டிப்பாதுகாக்கின்ற அரசுகள், முறைமைகள் அனைத்தையும் நாங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும். மேலும் நாங்கள் எங்களை நோக்கி வருகின்ற அனைத்து பத்வாக்களையும் கண்மூடிப் பின்பற்றக்கூடாது. அவற்றிலிருக்கும் குறைகளை, தவறுகளை கண்டு மௌனம் காக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய உலகை வழிநடாத்துகின்ற குப்ர் முறைமைகளுக்குள் இரண்டரறக் கலந்துவிடுவதற்காக அரசியல் நோக்கங்களுடன் வெளிவருகின்ற பத்வாக்களை ஒன்றுக்கு பலமுறை அவதானமாக அணுக வேண்டும்.

அல்குர்ஆனும், அஸ்ஸுன்ஆவும் சொல்கின்ற மிக நெருக்கமான பொருள் அல்லது சட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக எடுக்கப்படும் அதிகூடிய முயற்சியே இஜ்திஹாத் ஆகும். மாறாக முதலாளித்துவ, சடவாத, தாராண்மைவாத சட்டவாக்கப் பொறிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சில பரிதாபமான இலாப – நஷ்ட ஆராய்ச்சி அல்ல. இஜ்திஹாத்திலிருந்து எட்டப்படுகின்ற தீர்ப்புக்கள் அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்புக்கு மிக அண்மித்த தீர்ப்புகளாகும். மாறாக மனித மூளையை நீதிபதியாக்கி “நன்மை, தீமைகளை தர்க்க ரீதியாக அளந்து பார்த்து” எடுக்கப்படும் தீர்ப்புகளல்ல. இத்தீய முயற்சி இன்னொரு வடிவில் “மனோ இச்சையை” பின்பற்றுவது கூடும் என சொல்வதை ஒத்ததே.

அல்லாஹ்(சுபு)வின் தீர்ப்பு என்பது அல்லது சட்டம் என்பது குர்ஆன், ஸுன்ஆவிலிருந்து மாத்திரம் யாக்கப்படுவதாகும். அதுதவிர வேறு எங்கேனும் இருந்து எட்டப்படும் முடிவுகள் - அது அல்லாஹ்வின் முடிவுக்கு ஒத்ததாக தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்) நவின்ற இந்த நபிமொழியை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கூட அது இதற்கு சான்று பகரப் போதுமானதாகும்.

“எமது கட்டளையில் இல்லாத ஒரு செயலை ஒருவர் செய்வாரானால் அது நிராகரிக்கப்பட்டதாகும்.”

எனவே உலகை நீதியின் நிழலில் வழிநடாத்த இருக்கின்ற உம்மத்தின் எழுச்சியில் தாமதத்தை ஏற்படுத்த ஏவப்படும் இத்தகைய தீய அம்புகளிலிருந்து அல்லாஹ்(சுபு) எம்மைப் பாதுகாப்பானாக. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, சித்தாந்தத்தை சித்தாந்தத்தால் முறியடிக்க முடியாது அற்பத்தனமான காரியங்களினூடாக உம்மத்தை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கின்ற குப்பார்களினதும், முனாபிக்களினதும் முகத்தில் அவன் முன்புபோலவே இம்முறையும் கறியைப் பூசுவானாக!

DARUL AMAN

Jun 21, 2016

ரமழானும் உம்மத்தின் அதிமுக்கிய பொறுப்புக்கள் இரண்டும்!

       

 
அல்லாஹ்(சுபு) தனது நிறைவான ஞானத்திலிருந்தும், அதியுயர் அதிகாரத்திலிருந்தும் தனது அடியார்களில் சிலரை விட சிலரை மேன்மைப்படுத்தியிருக்கிறான். பூமியில் சில இடங்களை விட  சில இடங்களையும், சில சமூகங்களை விட சில சமூகங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அது போன்றே ரமழான் மாதத்தை ஏனைய அனைத்து மாதங்களையும் விடவும் சிறப்பான மாதமாக அறிவித்திருக்கிறான். அதற்கொரு முக்கிய காரணத்தையும் அவன் திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
(அல் பகறா:185)

எனவே ரமழானின் அடிப்படைச் சிறப்பு  என்னவென்றால் அது அகிலத்தாருக்கு வழிகாட்டியை கொண்டு வந்திருக்கிறது. அண்ட சராசரங்களை படைத்து கட்டியாளும் அந்த ரப்பின் நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இறுதித்தூதான புர்கானை மாத்திரமல்லாது, தவ்ராத்தையும், இன்ஜீலையும், சபூரையும் கூட ரமழான் மாதத்திலேயே அல்லாஹ்(சுபு) அருளியிருப்பது ரமழானின் தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

அத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமழானிலே திருக்குர்ஆனை அருளிய அல்லாஹ்(சுபு), அது யாருக்கு வழிகாட்டியாகப் பயன்படும்; என்பது பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; தக்வா பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல் பகறா:2)

உறுதியான இறைவிசுவாசமும், அனைத்து சந்தர்ப்பத்திலும் அவனது பிரசன்னத்தை மறந்திராத விழிப்புணர்வும், என்றும் அவனது விசாரணைக்கு அஞ்சி வாழ்கின்ற இறையச்சமும் உள்ள ஒருவருக்கே அல்லது ஒரு சமூகத்திற்கே அல்குர்ஆன் வழிகாட்டியாக தொழிற்படும் என்பதே இதன் பொருளாகும். ரமழானிலே மனித குலத்திற்கான வழிகாட்டலை வழங்கியதற்காக அந்த மாதத்தை ஏனைய மாதங்களை விட சிறப்பித்த அல்லாஹ்(சுபு), அந்த வழிகாட்டலால் பயன் பெறக்கூடிய ஒரு சமூகத்தின் முக்கிய பண்பான தக்வாவை வளர்ப்பதற்கான ஓர் பயிற்சியையும் அதே மாதத்திற்குள் பொதித்திருப்பது அவனது வழிகாட்டலின் பரிபூரணத் தன்மையை நிரூபிக்கிறது. ரமழானில் நோன்பை  அல்லாஹ்(சுபு) கடமையாக்கியிருப்பது அதற்காகத்தான். நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விபரிக்கும் இந்த திருமறை வசனம் இதனை தெளிவுபடுத்துகிறது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வாயுடையோர் ஆகலாம்.
(அல் பகறா:183)

எனவே ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற முஸ்லிம் உம்மத்தின் மீது குறைந்தது இரண்டு முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன. முதலாவது, மனிதகுலத்தின் வழிகாட்டியான அல்குர்ஆனை தனது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அமூல்படுத்த அது தயாராக வேண்டும். அல்லது அதற்காக முயற்சிக்க வேண்டும். இரண்டாவது, அந்த வழிகாட்டலை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடய மனோபாவமான தக்வாவை இந்த மாதத்தில் மிக ஆழமாக வளர்த்துக் கொள்ள அது எத்தனிக்க வேண்டும்.

முதலாவது அல்குர்ஆனை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது என்பதன் பொருள் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட அல் பகறாவின் 185 வசனத்தின் ஊடாக சுருக்கமாக பார்ப்போம்...

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்குர்ஆனை அல்ஹுதா என அல்லாஹ்(சுபு) அறிமுகப்படுத்துவது “ அது சத்தியத்தின்பாலும், ஸிறாத்தல் முஸ்தக்கீமின் பாலும் வழிகாட்டக்கூடியது என்ற பொருளிலும், கால, இட வேறுபாடுகளைக் கடந்த முழு மனதிகுலத்திற்குமான பூகோள வழிகாட்டி என்ற பொருளிலுமாகும்.

தொடர்ந்து பய்யினாத் மின் அல் ஹுதா என்று அல்லாஹ்(சுபு) தெரிவிப்பது, அந்த வழிகாட்டலுக்கான (அனைத்தையும் பற்றிய) மிகத்தெளிவான விளக்கமாக அது அருளப்பட்டிருக்கிறது என்பதையும், அது எதனுடனும் ஒப்பிடமுடியாத, இன்னொருவரால் கொண்டு வர முடியாத அல்லாஹ்(சுபு) வின் தீர்க்கமான அத்தாட்சி என்பதையும் தெளிவுபடுத்துவதாகும். இமாம் அல் மவர்தி இந்த வசனத்தில் வருகின்ற (பய்யினாத் மில் அல் ஹுதா மற்றும் அல் புர்கான்) என்ற சொல்லாட்சிகள் குறித்து குறிப்பிடும் போது “அது எது ஹலால், எது ஹராம் என்பதை விளக்குவதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய அளவுகோளாகவும் வந்திருக்கிறது” என விளக்குகிறார்கள்.

இறுதியாக அல்குர்ஆன் தன்னை அல் புர்கான் அதாவது அளவுகோல் என்று அழைக்கும் சொல்லாட்சி அது சத்தியத்தையும், அசத்தியத்தையும், நல்லதையும், கெட்டதையும், நல்ல செயலையும், கெட்ட செயலையும் வேறு பிரிக்கக் கூடியது என்ற பொருளை விளக்குவதாக அமைந்துள்ளது. இமாம் அல் பைதாவி அல்குர்ஆன், தன்னை “பய்யினாத் மின் அல் ஹுதா மற்றும் அல் புர்கான் - என இரு விதமாக அறிமுகப்படுத்துவதன் ஊடாக சொல்லவருவது, அல்லாஹ்(சுபு), அல்குர்ஆனை அற்புதத்தன்மை பொருந்திய, மனிதகுலத்திற்கான வழிகாட்டியாக அருளியுள்ளதுடன் அது சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடிய மிகத்தெளிவான வசனங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது. மேலும் அது தனக்கும்; ஏனைய பிழையான சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் இடையான வித்தியாசத்தை பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

ரமதான் மாதத்திலே அல்குர்ஆனின் மகிமை பற்றி மஸ்ஜித்கள், குத்பாக்கள், வெகுசன ஊடகங்கள் என அனைத்திலும் ஞாபகமூட்டப்படுவதைப் பார்க்கிறோம். இம்மாதத்தில் அதனை ஓதுவதன் சிறப்புப்பற்றியும், அது தரக்கூடிய அதியுயர் வெகுமதி பற்றியும் நாம் தொடர்ந்து நினைவு படுத்தப்படுகிறோம். எனினும் நாம் மேலே சுட்டிக்காட்டியதைப்போல அதனை முழுமையான அந்தஸ்த்துடன் அணுகுகிறோமா? அல்லது அது வெறுமனவே பாராயணம் செய்வதற்கும், ஒரு சில கிரிகைகளில் ஓதுவதற்கும் மாத்திரம் பயன்படுகிறதா? ஏன் அல்குர்ஆனை ஹுதாவாவும்(வழிகாட்டி), அல் புர்கானாகவும்(அளவுகோல்) நாம் பயன்படுத்துவதில்லை? ஏன் முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களை அல்குர்ஆன் தீர்மானிப்பதில்லை?  இவை போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்தால் எமது அணுகுமுறையின் ஆபத்து புலப்படுவதுடன் இன்று உம்மத் அடைந்துள்ள இழிநிலை ஏற்பட்டதற்கான காரணிகளும் தெளிவாகும்.

இன்று தராவீஹ் தொழுகைகளிலே அல்குர்ஆன் அதிகமதிகம் பாராயணம்  செய்யப்படுவதும், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்(சுபு) திருப்த்தியைப் நாடி இந்த மாதத்திலே ஒருமுறையேனும் முழு குர்ஆனையும் ஓதி முடிக்க முயன்று வருவதும் சந்தோசமான விடயங்கள்தான். எனினும் அந்த அல் குர்ஆன் எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்தை இன்று வரை எம்மால் நிறைவேற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது? எமது சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நீதித்துறைகள் அனைத்தும் அல்குர்ஆன் வழிகாட்டாத, இஸ்லாம் சொல்லாத அந்நிய சட்டங்களாலும், கொள்கைகளாலும் அல்லவா வழிநடத்தப்படுகின்றன? எமது அகீதாவுக்கும், பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும், வரலாறுக்கும் மாற்றமாக மனித மூளைகளிலிருந்து உதித்த சடவாத சிந்தனைகளினால் அவை கட்டுப்படுத்தப்படுவதையும், முதலாளித்துவ சிந்தனைகளாலும், முறைமைகளாலும் நாம் ஆளப்பட்டு வருவதையும் அல்லவா நாம் அனுபவித்து வருகிறோம்? காலத்திற்கு காலம் சீர்திருத்தம் என்ற வேடம் தரித்து வந்த அந்நிய சிந்தனைகள் அல்குர்ஆனை எமது நடைமுறை வாழ்விலிருந்து படிப்படியாகப் பறித்து விட்ட பிறகு நாம் இந்த இழிநிலையை அடைந்திருப்பது தவிர்க்க முடியாததுதான்.

இஸ்லாமிய அரசியல் அதிகாரம் சுமார் ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்ட பின்னர் உம்மத்தின் விவகாரங்களை ஆளுகின்ற சட்டங்களும், முறைமைகளும் இஸ்லாம் அல்லாத மூலங்களிலிருந்தும், பெறுமானங்களிலிருந்தும் பெறப்பட்டு மோசடியான கொடுங்கோலர்களின் கரங்களினால் எம்மீது அமூல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடருகின்ற இந்த அரசியல் சாபத்தின் விளைவு சர்வாதிகாரமும், கொடுங்கோலும், வறுமையும், வன்முறையும், பலகீனமும், பாரபட்சமும் கொண்ட தேசமாக எமது தேசம் மாறியிருக்கிறது. அனைத்து வளங்களையும் பெருமளவில் கொண்ட எமது நிலங்கள் தற்போது பொருளாதார மேம்பாடற்ற, கைத்தொழில் முன்னேற்றமற்ற பிராந்தியங்களாகவும், மேற்குலகின் சுரண்டல் சந்தைகளாகவும்  உருமாறியிருக்கின்றன.

ஆனால் நம்பிக்கை தருகின்ற விடயம் என்னவென்றால் எமது மிக அண்மிய வரலாறு மாற்றத்திற்கான வேட்கை உம்மத்தில் மீண்டும் ஓங்கி வருவதை காட்டுகிறது. மக்கள் அதற்காக எவ்விலையையும் தர தயாராகி வருகிறார்கள் என்பதை தெரிவிக்கிறது. அரபுலகில் வெடித்த புரட்சிகள் மக்கள் மத்தியில் பலமான சிந்தனை அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. சிரியாவிலே அரை தசாப்த்தங்களையும் தாண்டி இன்று வரை பஷாருக்கு எதிரான புரட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அது குறைத்து மதிப்பிடமுடியாத நல்ல சமிஞ்ஞையே. அல்ஹம்துலில்லாஹ்!

உம்மத்தில் தோன்றியிருக்கின்ற இந்த மாற்றம் ஆறுதல் அளித்தாலும் எப்போது அல்குர்ஆன் எமது அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மாறுகிறதோ, எமது வாழ்வியல் விவகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட ஆரம்பிக்கிறதோ அப்போது மாத்திரமே உண்மையான மாற்றம் சாத்தியமாகும். எமது துயரங்களும், கஷ்டங்களும் அது வரையில் அகழப் போவதில்லை. அந்த உண்மை மாற்றத்தை அடைவதற்கு அல்குர்ஆன் தன்னைத்தான் அறிமுகப்படுத்துவதைப்போல அல்குர்ஆனை உம்மத் பூரண வழிகாட்டியாகவும் (ஹுதாவாகவும்), அந்த வழிகாட்டலின் விளக்கமாகவும், தனது வாழ்வுக்கான ஒரேயோரு அளவுகோலாகவும்(புர்கானாகவும்) முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே மறுமலர்ச்சியின் பாதையில் அதனால் பயணிக்க முடியும்.

அல்குர்ஆனை முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இவ்வாறு எடுத்துக்கொண்டதன் விளைவுதான் அவர்களால்; முழுக்க முழுக்க அல்குர்ஆனிய ஆளுமைகளாக நடமாட முடிந்தது. அல்குர்ஆனிய சமூகமொன்றை முதன்முறையாக மதீனாவில் நிலைநாட்ட முடிந்தது. இதேபோன்றதொரு ரமழான் மாதத்திலே பத்ர் களமானது, யவ்முல் புர்கானாக - (சத்தியவான்கள் யார்?, அசத்தியவான்கள் யார்? எனத் தீர்மானிக்கும் நாளாக) மாறியதென்றால் அதற்கு காரணம் அல்குர்ஆனை அவர்கள் அல்புர்கானாக ஏற்றுக்கொண்டதே. அதேபோல அவர்கள்  அல்குர்ஆனை ஒரு பாரிய சமூகப்புரட்சியின் ஆயுதமாக எடுத்துக்; கொண்டதன்; விளைவுதான் மீண்டும் ஒரு ரமழானில் மக்காவை வெற்றி கொண்டு முழு அரேபிய தீபகற்பத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு அல்குர்ஆன் தம்மீது சுமத்திய பொறுப்பின் பரப்பை ஸஹாபாக்கள் மாத்திரம் புரிந்திருக்க வில்லை. அதற்கு பின்னர் வந்த இஸ்லாமிய சமூகமும் பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருந்தது. அதனால்தான் எவ்வாறு ரமழான் மாதம் ஸஹாபாக்களுக்கு வெற்றியின் மாதமாக அமைந்ததோ, அவர்களுக்கு பின் வந்தவர்களுக்கும் அது வெற்றியின் மாதமாக திகழ்ந்தது. சலாஹ}த்தீன் அய்யூபி ஹித்தீன் சமரில் சிலுவை யுத்தக்காரர்களுக்கு முடிவு கட்டியதும், ஐன்ஜாலூத் போரில் சைப்புத்தீன் குத்ஸ் தாத்தாரியர்களை முறியடித்ததும் இந்த மாதத்தில்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே அல்குர்ஆனை முழுமையான வழிகாட்டியாக, நிரந்தரமான அளவுகோலாக கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை இன்றைய முஸ்லிம் உம்மத் ஏற்றாக வேண்டும். அதனை இந்த ரமழான் மாதம் அவர்களுக்கு ஞாபகப்படுத்துமாக இருந்தால் அது விமோசனத்தின் முதற்படியாக அமையும்.

எனினும் தாஹுத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்தின் கீழும், கொடுங்கோண்மையான குப்ரிய ஆட்சிகளுக்கு கீழும் பல இருண்ட யுகங்களை கடந்து வருகின்ற உம்மத்திற்குள் இந்த தலைகீழ் மாற்றம் தோன்றுவது இலகுவான காரியமல்ல. அந்த மாற்றம் மிக உறுதியான ஈமானும், துடிப்புள்ள தக்வாவும் இருக்கின்ற ஒரு உம்மத்தில் மாத்திரமே தோற்றம் பெறும். இந்தக்கருத்து நாம் இந்தக் ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டாவது பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது. அதுதான் தக்வாவை அடைந்து கொள்வது பற்றியது.  அல்லாஹ்(சுபு) நோன்பை கடமையாக்கியிருப்பதும், இராப்பொழுதுகளில் நின்று வணங்கச் சொல்லியிருப்பதும் அல்லாஹ்(சுபு)வின் பிரசன்னத்தை கனப்பொழுதும் மறவாத ஓர் உயர்ந்த உம்மத்தை தோற்றுவிக்கவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரமழானிலே இரவு பகலாக வளர்க்கப்படும் இந்த மனோபாவம் அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலை உம்மத்தின் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமூல்படுத்துவதற்கு இன்றியமையாதது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளை கடக்க வேண்டி ஏற்பட்டாலும் அவனது தீனை இந்த உலகத்திலே நிலை நாட்டுவதற்கு தக்வா எனும் இந்த மனோநிலையே அடிப்படையான ஆயுதம். எப்போது தக்வா என்னும் இந்த மனோநிலை உம்மத்திடம் வலுவிழந்து போனதோ, எப்போது அல்லாஹ்(சுபு)விற்கு மாற்றாக அவனது சிருஷ்டிகளின் பால் அதனது அவதானமும், அச்சமும் தோன்றியதோ அப்போதே அழிவின் பாதையை அது திறந்து விட்டது. அந்த அழிவின் பாதையில் மிக நீண்ட தூரம் பயணித்தது. தக்வாவுடையவர்களுக்கு மாத்திரம்தான் இந்த அல்குர்ஆன் வழிகாட்டும் என அல்லாஹ்(சுபு) கூறியதை மெய்ப்படுத்தும் விதமாக தக்வா இல்லாத நிலையில் அல்குர்ஆன் அணுகப்பட்டபோது உம்மத்தின் வழிகாட்டலுக்கும், வளர்ச்சிக்கும் அது வடிகாலாக அமையவில்லை. உம்மத் தக்வாவின் வீழ்ச்சியால் அல்குர்ஆன் வசனங்களுக்கு தனது ஆசாபாசங்களுக்கு ஏற்ப விளக்கம் அளிக்க முற்பட்டது. கிரேக்க தர்;க்கத்தின் அடிப்படையிலும், இந்திய தத்துவங்களின் அடிப்படையிலும் அதனை வியாக்கிஞானம் செய்தது. பிற்காலத்தில் அதிகளவில் மேற்குலக சிந்தனைகள் அவற்றின் இடத்தை பிடித்தன. சத்தியமும், அசத்தியமும் கலந்த, இஸ்லாமும், குப்ரும் குலைந்த ஒரு கலவையை நவீன கால இஜ்திஹாத், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் என்று அது பெருமிதத்துடன் அறிமுகம் செய்தது. இவ்வாறு உம்மத் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே அதனது வாழ்விலிருந்து அல்குர்ஆன்; பறிக்கப்பட்டது. அது வெறுமனவே மனனமிடுதலுக்குள்ளும், அழகான பாராயணத்துக்குள்ளும், அலங்காரமான பிரதிகளுக்குள்ளும் முடங்கிப்போனது. எதனால் இந்த உம்மத்திற்கு வெற்றியும், கண்ணியமும் கிட்டியதோ அந்த ஆற்றல் சக்தி அதனிடமிருந்து பறிபோனது.

அதனால் அன்று முஃமீன்களைக் கண்டால் குலைநடுங்கிய குஃப்பார்கள்; இன்று முஃமீன்களின் முதுகுகளில் ஏறி சவாரி செய்யும் நிலை தோன்றியிருக்கிறது. உம்மத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதனது வளங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. சுயமரியாதையும், கண்ணியம் இழந்த நிலையை அது அடைந்து நிற்கிறது. அதனது பிரச்சனைகளுக்கு அந்நியர்கள் பஞ்சாயத்து சொல்கிறார்கள். அல்குர்ஆன் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் குஃப்ரிய சிந்தனைகள் அமர்ந்துள்ளன. மொத்தத்தில் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் வீழ்ந்திடாத அதலபாதாளத்தில் இன்றைய உம்மத் வீழ்ந்து கிடக்கிறது.

எனவே உம்மத் இந்த மாபெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டு, மீள வரலாறு படைக்க வேண்டுமென்றால் இந்த  ரமழானில் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதிலும், அவனுக்கு கட்டுப்படுவதிலும் தனது உட்சாகத்தையும், விருப்பத்தையும் வெளிக்காட்டுகின்ற உம்மத் ரமழானுக்கு இந்தச் சிறப்பு எங்கிருந்து வந்தது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ரமழான் அல்குர்ஆன் அருளப்பட்டதால்தான் சிறப்பிக்கப்பட்டதென்றால் அந்த அல்குர்ஆன் இந்த உலகில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற வந்தது என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ்(சுபு)வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கான வழிகாட்டல் அல்குர்ஆனிலிருந்து மாத்திரம்தான் ஊற்றெடுக்க முடியும் என்பதை அது முழுமையாக நம்ப வேண்டும். தனது வாழ்விற்கான ஒரேயொரு அளவுகோல் அல்குர்ஆன் மாத்திரம்தான் என்பதில் அது உறுதியாக நிற்க வேண்டும். அத்தகைய ஒரு சூழல் உலகில் தோற்றம் பெறவேண்டுமென்றால் அது அல்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியால் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதையும் அது உறுதியாக நம்ப வேண்டும். எனவே இந்த ரமழான் அத்தகையதோர்; தூய இஸ்லாமிய அரசியற் தலைமையை நிலைநாட்ட உழைக்கின்ற உம்மத்தை தயார்படுத்துமானால் அது ரமழானின் நோக்கத்தையும், அதிலே அருளப்பட்ட அல்குர்ஆனின் நோக்கத்தையும் ஒருசேர நிறைவேற்றிய பெருமையைப் பெறும். இன்ஷா அல்லாஹ்!
 

Jun 20, 2016

பள்ளிவாசல் பரிபாலனம்

இறை இல்லங்களை பரிபாலனம் செய்வது பொறுப்பான ஒரு பணியாகும். மஸ்ஜிதுகளை நிர்மாணிப்பதும் பரிபாலிப்பதும் நேர்வழி பெற்ற சிறந்த முஃமின்களின் பண்பாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 9: 18)



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒரு கறுப்பினப் பெண் இருந்தாள். பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்வது அவளது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் அவளைக்காண முடியவில்லை. இதனை அவதானித்த நபியவர்கள் அவளைப் பற்றி விசாரித்தார்கள். அவள் இறந்து விட்டதாக அன்னாருக்கு தெரிய வந்தது. “அவள் இறந்த செய்தியை அப்போதே நீங்கள் எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?” என்று தோழர்களை விழித்துக் கூறிய நபியவர்கள், அவளது கப்ரை தரிசித்து அவளுக்காக தொழுகையையும் நிறை வேற்றினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)



இது மஸ்ஜிது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமான ஆதாரமாகும். மஸ்ஜித்களை நிர்வகிப்பது ஓர் உயர்ந்த அமலாக இருப்பது போலவே ஒரு பெரிய பொறுப்புமாகும். இந்த வகையில் தகுதியுடையவர்கள் பரிபாலன சபையில் இருக்கின்றபோதே ஒரு பள்ளிவாசல் அதன் பணியை செவ்வனே நிறைவேற்ற முடியும். பரிபாலன சபைக்கு நியமிக்கப்படுவோர் அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் பரிபாலனத்திற்குரிய தன்மைகளையும் தகைமைகளையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.



“அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலனம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழி பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே.” (அல்குர்ஆன் 9: 18)


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

இமாமின் வகிபங்கு

பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இமாம் மிகச் சிறந்த ஒருவராக, நன்கு கற்றுத் தேர்ந்த, மார்க்க விவகாரங்களில் ஆழமான விளக்கமுடைய சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்த, பல கோணங்களிலும் சிந்தித்து செயலாற்றக்கூடிய செயற்திறனுடையவராக, சாணக்கியமிக்கவராகத் திகழ வேண்டும். மக்களால் புரிந்து கொள்ள முடியாத விடயங்களை இமாமினால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு விடயத்தையும் ஷரீஆ கண்னோட்டத்திலும் அறிவியல் பூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் நோக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். நல்ல மனப்பாங்கும் நுண்ணறியும் திறனும் அவரிடம் குடிகொண்டிருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது சிறந்த, பொருத்தமான தீர்வை முன்வைக்கும் நோக்கில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

குலபாஉர் ராஷீதீன்கள் காலப் பகுதியில் ஆட்சியாளரே (கலீபா) பள்ளிவாசல் இமாமாகவும் கடமையாற்றினார். உமைய்யா, அப்பாஸிய காலப் பகுதியில் ஆட்சியாளர் மார்க்கத்தின் தலைவராக, இமாமாக கடமையாற்ற வில்லை. இதன் விளைவாக மத்ஹப்கள் தோற்றம் பெற்றன. ஆட்சியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இன்று பள்ளிவாசல் நிர்வாகமே குறித்த பிரதேசத்தை அல்லது ஊரைக் கட்டுப்படுத்துகிறது. இந்நிலை மாறி இமாம் முழு ஊரையும் பகுதியையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்குமளவு ஆளுமை பெற்றவராகத் திகழ வேண்டும்.

பள்ளிவாசல் இமாம் ஷரீஆத் துறையில் முதமானி அல்லது முதுகலைமானிக் கற்கைகளை நிறைவு செய்தவராக அல்லது ஷரீஆத் துறை உட்பட்ட பல்வேறு துறைகளிலும் தேர்ச்சிமிக்கவராக நவீன தொழில்நுட் பங்களைக் கற்றறிந்தவராக திகழ்ந்தால் ஊர் மக்கள் இமாமைத் தேடி வருவார்கள். ஊரில் இடம்பெறும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றல், ஆளுமை அல்லது பிரச்சினையை இனங்கண்டு எத்தகைய துறைசார்ந்தோரைக் கொண்டு இதற்குத் தீர்வு காணலாம் என்று வழிகாட்டக் கூடிய ஓர் இமாம் பள்ளிவாசலுக்கு தலைமை தாங்கினால் அந்த இமாமைத் தேடி மக்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள். அப்போது அந்த இமாமினால் மக்களுக்கு கட்டளை பிறப்பித்து அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். அப்போதுதான் சமூக மாற்றம் சாத்தியப்படும்.

சமூகத்தை வழிநடத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் பங்கை விட இமாமின் பங்கு மகத்தானது. உமைய்யா, அப்பாஸிய காலத்தில் இமாம்களே சமூகத்தை வழிநடத்தினார்கள். இமாம்கள் ஆட்சியாளரின் தீர்ப்புக்கு முரணாக நேர்மையான தீர்ப்புக்களை வழங்கினர்.

தொழுகை ஒரு முஸ்லிமின் தக்வாவை அதிகரிப்பது போல பள்ளிவாசல் சமூகத்தின் தக்வாவை அதிகரிக்க வேண்டும்.


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

கடந்தகால மற்றும் நிகழ்கால இறையில்லங்களின் நிலைமைகள்:

நமது காலங்களில் உள்ள இறையில்லங்களையும், நமது கடந்தகால நேர்வழி பெற்ற முன்னோர்கள் காலத்து இறையில்லங்களையும் நாம் ஒப்பு நோக்குவோமானால் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. நமது முன்னோர்கள் சத்தியத்தை (ஹக்) கவனமாக எடுத்துக் கொண்டார்கள். வெளித்தோற்றத்தையல்ல. ஆனால் நாம் வெளித்தோற்றத்தை எடுத்துக் கொண்டு சத்தியத்தை விட்டு விட்டோம். எல்லாமே தலைகீழாக ஆகிவிட்டது. இறையில்லங்கள் ஜங்கால தொழுகை நிறைவேற்றிப்பட மட்டும், பயன்படுத்தப்பட்டு பிறகு முடப்பட்டுவிடுகின்றன. இதன் முடிவு இறையில்லங்கள் முஸ்லிம்கள் வாழ்வியல் விவகரங்களிருந்து முற்றிலும் புறக்கணிக்கபட்டுவிட்டது. மார்க்கத்திலிருந்து நடைமுறை வாழ்கையை பிரிக்கும் நோக்கத்தோடு அரசியல் பேச்சாளர்களும் ஆலோசனை கர்த்தாக்களும் மதத்தை அரசியலுடன் கலக்கக்கூடாது என்ற ஆட்சியாளர்களின் கருத்தை ஓங்கி ஒழிப்பதற்காக தங்கள் கோஷங்களை நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மத புரோகிதர்களுக்கு அரசியலில் எந்த வேலையுமில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் முடியாது இஸ்லாம் என்பது அரசியல் , பொருளாதாரம், சமூகம், நீதி நிர்வாகம்  ஆகிய அனைத்து
துறைகளையும் உள் அடக்கிய ஒரு முழுமையான மார்க்கம். இதில் எந்த ஒன்றையும் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்தால் முழுமையான இஸ்லாமாக இருக்காது.

 இறுதியாக இறையில்லம் என்பது இஸ்லாம் என்ற மார்கத்தின் செய்திகள் உருவாக்கப்பட்ட இடம். இந்த இடத்திலிருந்துதான் இஸ்லாமிய மாபெரும் தலைவர்கள் தங்களது ஒளிமயமான பயணித்தை ஆரம்பித்தார்கள். உலகம் எங்கிலும் இஸ்லாத்தின் சங்க நாதத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். ஆம் அந்த மதினாவின் இறையில்லம் மிகமிக எளிமையானதாகும். அதன் தரை பாகம் கூலன்ங்கற்களை கொண்டு பரப்பப்பட்டது. அதன் விளக்குகள் இரவில் மட்டும் ஏற்றப்பட்டது. அதன் கூரைகள் ஈத்த மர ஓலை கொண்டு வேயப்பட்டது.

முஸ்லிம்களே! அறிந்துகொள்ளுங்கள்.நாம் சத்தியத்தை விட்டுவிட்டு வெளிதொற்றதை மட்டும் தக்கவைத்து கொண்டு துர்பாக்கியசாலிகளாக இருக்கிறோம்.உயர்ந்து நிற்கும் மினாரக்களையும்,எழில் கொஞ்சம் இறை இல்லங்களையும் அமைத்து பெருமை பாராட்டி கொள்ளும் நாம் இஸ்லாத்தின் உயிர துடிப்பான செயல்களை செய்வதுமில்லை நினைத்து பார்ப்பதும் இல்லை ஆகவே இறை இல்லங்களை அலங்கரிக்கும் செயல்களில் நம்மை நாம் உட்படுத்தி கொண்டு இறை இல்லங்களின் தனித்தன்மையும் அதன் முக்கியத்துவத்தையும் பாழ்படுத்திவிட்டு அங்கு சச்சரவையும் இனபாகுபாடுகளையும் கொண்டுவரவேண்டாம் இப்போது நம்மிடம் பாகிஸ்தானிய பள்ளி, சிரியா பள்ளி, பாரசிக பள்ளி, குர்திஸ் பள்ளி, துருக்கி பள்ளி என்று எண்ணில் அடங்காத பிரிவு இறை இல்லங்கள் இருக்கிறது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிகும் சொந்தமான இறை இல்லங்களும் கட்சிகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் மத்ஹபுகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் இருக்கின்றன அவைகள் ஒன்றில் மற்றொரு பிரிவுகள் சொல்வதை தடுத்துக் கொள்கின்றன. இஸ்லாத்தின் செய்திகள் அவைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.தலைமைதுவதிற்கும், அதிகாரத்திற்கும் பிழைத்திருக்கும் தந்திரத்திற்கும் தான் முதலிடம். இவையெல்லாம் இன்று நமது இறையில்லங்களில் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இறையில்லம் அல்லாஹ்(சுபு)விற்கு சொந்தமானது என்று இஸ்லாம் கூறியபோதும் இவ்வாறு நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்-குர்ஆன் 72:18)


ஆகவே நாம் வலியுறுத்துவது என்னவெனில் முக்கியமாக இஸ்லாமிய குழுக்களுக்கும், கட்சிக்களுக்கும், இமாம்களுக்கும், இறையில்லங்களில் அவர்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும் அதன் கதவுகளை உண்மையான முஸ்லிம்களுக்கும் என்றும் திறந்து வைத்திருக்க வேண்டும். அறிஞர்களுக்கும் சுஜூத் செய்பவர்களுக்கும்,மார்க்கத்தை போதிப்பவர்களுக்கும்,இஸ்லாம் மார்க்கதின்ம்படி முஸ்லிம்களின் அனைத்து  வாழ்வியல் விவகாரங்களும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக பணிபுரிபவர்களுக்கும் அது எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.அப்போது மட்டும்தான் அல்லாஹ்வின் திருநாமம் இறை இல்லங்களில் உயர்ந்து ஒலிக்கும். அப்போது மட்டும்தான் முஸ்லிம்கள் நல்லக்காரியங்களில் பங்கு கொள்வார்கள்.தீயவற்றில் இருந்து தங்களை காத்து கொள்வார்கள் தங்களின் சமூகத்திற்காக அவர்கள் பொறுப்பெடுத்து சிந்தனை செய்வார்கள். இந்தநிலை மீண்டால்தான் இறை இல்லங்கள் தனது பழைய அசலான நிலைக்கு வந்துவிட்டது என்று கூறமுடியும்.அங்கு இஸ்லாமிய தீனும்,அல்லாஹ்வின் திருநாமமும் மறுபடியும் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

இறை இல்லங்களில் அல்லாஹ் தனது திருநாமங்கள் துதி செய்யப்படுவதையும். உயர்த்தப்படுவதை அனுமதித்து இருக்கிறன் (குர்ஆன்)

இறையில்லங்களின் பக்கம் உங்கள் முகங்களை திருப்பியவர்களாக அல்லாஹ்விடம் அவனுடைய மார்கத்தை (மேலோங்குவதற்காக) பணிந்து வேண்டுங்கள்.


Source - இஸ்லாத்தில் இறை இல்லத்தின் பங்களிப்பு

Jul 23, 2015

நபி(ஸல்) அவர்களை அவமதிப்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!


முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டக்கூடிய பிரான்ஸ் வார இதழின் நடவடிக்கை பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற ஃபிரான்ஸ்‎ பத்திரிக்கை கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளது. கடந்தவாரம் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களில் 12 பேர்கள் முகமூடி அணிந்த போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலளிப்பாக மீண்டும் கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது! கடந்த சில வருடங்களாக நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வரையும் நடவடிக்கைகளில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முன்னணியில் இருந்துவருகிறது.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்களின் கொலை பற்றி உணர்ச்சி மேலிட விவாதம் மேற்கொண்ட பத்திரிக்கைகளும் செய்தி ஊடகங்களும் பேச்சு சுதந்திரம் (Freedom of speech) தொடர்பான முஸ்லிம்களின் உடன்பாடற்ற மனநிலை குறித்து கேள்வி எழுப்பின! முஸ்லிம்கள் எதிர்செயல்பாடு கொண்டவர்கள் என்றும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்றும் சுதந்திரம்-(யீக்ஷீமீமீபீஷீனீ) என்ற சிந்தனையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல என்றும் அவை குற்றம் சுமத்தின!

 

முஸ்லிம்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

மேற்குலகின் ஜனநாயக மதச்சார்பின்மைவாதிகள்தான் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தூ£ண்டிவிட்டு வருகிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on Terror) என்ற கோஷத்தை முன்வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் திட்டத்தில் மேற்குலகம் எத்தகைய நடிவடிக்கையையும் விட்டுவைக்கவில்லை.

செப்டம்பர் 11 க்கு பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஆக்கிரமிப்புகள் என்று பல்வேறு இடர்பாடுகளை தங்களுடைய ஈமானின் நிமித்தம் முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். இஸ்லாமிய நிலப்பரப்புகளை வெறித்தனமாக ஆக்கிரமித்ததார்கள்! அபூகுரைப் மற்றும் குவான்டனாமோ சிறைகளில் முஸ்லிம்களிலுள்ள ஆண்களையும் பெண்களையும் அடைத்துவைத்து கொடூரமாக சித்ரவதை செய்தார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டார்கள்! நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் கண்ணியமிக்க மனைவியரையும் இழிவுபடுத்தும் வகையில் புத்தகங்களை வெளியிட்டார்கள்! புனிதமிக்க குர்ஆனை இழிவுபடுத்ததினார்கள்! ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தார்கள்! ஸ்வீடன் நாட்டில் மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டுவதற்கு தடைவிதித்தார்கள்! மேலும் இதுபோன்று இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எண்ணற்ற அநீத செயல்பாடுகளை கட்டவிழ்த்து வருகிறார்கள். 

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அனுப்பிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக இருக்கிறார்கள் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்கு முற்றிலும் முரண்பாடாக, மேற்குலக மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல், இழிவுபடுத்துதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லிம்கள் சுதந்திரத்தை மதிப்பதில்லை என்று மேற்குலகவாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

மதச்சார்பின்மை‎‎க்கும் மக்களாட்சிக்கும் பாதுகாவலன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஃபிரான்ஸ் அரசு சமீபத்தில் முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும் தடைவிதித்துள்ளது! எனினும் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதுகின்ற மாண்புமிக்க விவகாரங்களை காஃபிர்கள் தொடர்ந்து இழிபடுத்துவதை எதிர்க்கும்வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால், முஸ்லிம்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும் எதிர்மறை செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்! ஸவ்பான்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவருந்தும்போது ஒருவர் மற்றொருவரை விருந்திற்கு அழைப்பது போல் உங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மக்கள் விரைவாக மற்றவர்களை அழைப்பார்கள். ‘அந்நாட்களில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாக இவ்வாறு நிகழுமா?’ என்று ஒருவர் வினவினார். ‘இல்லை! அப்போது நீங்கள் திரளான எண்ணிக்கையில் இருப்பீர்கள், எனினும் கடல்நீரில் அடித்துச் செல்லப்படும் நுரை போன்று இருப்பீர்கள்! உங்கள் எதிரிகளின் உள்ளங்களில் உங்கள் மீதுள்ள அச்சத்தை அல்லாஹ் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் ‘வஹ்னை’ போட்டுவிடுவான்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று ஒருவர் வினவினார். ‘உலகத்தின் மீதுள்ள பற்று மற்றும் மரணத்தின் மீதுள்ள வெறுப்பு’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (அபூதாவூது, அஹ்மது)‎‎‎‎‎‎‎‎

இன்றைய முஸ்லிம்களின் உண்மைநிலை குறித்து இந்த ஹதீஸ் தெளிவாக விவரிக்கிறது, 170 கோடி மக்கள் தொகையையும் பெட்ரோலியம், நிலவாயு போன்ற அரிய இயற்கை வளங்களையும் பெருங்குவியலாக பெற்றிருந்தபோதும் இன்றைய முஸ்லிம்களுக்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை! அவர்கள் கடலின் நுரையைப் போன்ற சிறுமையடைந்து கிடக்கிறார்கள்!

 

இதற்குரிய தீர்வுதான் என்ன?

ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமாகவோ அல்லது ஃபிரான்ஸ் அரசுத்தூதருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலமாகவோ இந்த விவகாரத்திற்கு தீர்வு ஏற்படுத்தமுடியாது; மாறாக இத்தகைய விவகாரங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டபோது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அவற்றிற்கு எவ்வாறு தீர்வுகண்டார்கள் என்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும். சத்தியத்திற்கும் & அசத்தியத்திற்கும், இஸ்லாத்திற்கும் & குஃப்ருக்கும் எதிரான இப்போர் புதிதானதல்ல! இந்த தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக நடத்தப்படும் போரின் வெளிப்பாடாகவே இருக்குகிறது. கடந்த 19 ம் நூற்றாண்டில் முஸ்லிம்களுடைய ஈமானுக்கு எதிராக காஃபிர்கள் தாக்குதல் நடத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களுடைய கண்ணியமிக்க மனைவி ஆயிஷா(ரளி) அவர்களையும் கேலி செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சித்தார்கள்! இதற்கு பதிலளிப்பாக அன்றைய முஸ்லிம்களின் கலீஃபாவாக இருந்த அமீருல் மூஃமினீன் இந்த இழிசெயலை மேற்கொண்ட நாடுகளின் அரசுத்தூதர்களை அழைத்து அந்த நாடகத்தை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தார், உடனடியாக அவை கலீஃபாவின் எச்சரிக்கைக்கு அஞ்சி தங்களுடைய நடவடிக்கையை நிறுத்திவிடுவதாக கூறிவிட்டன! அந்நாடுகள் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகியவையாகும்!

கிலாஃபா ஆட்சியின்கீழ் பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் ஒன்றாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள், அதில் சிறுபான்மையினர் நசுக்கப்படவில்லை, ஏழைகள் கவனிப்பின்றி விட்டுவிடப்படவில்லை! உண்மையாகவே முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிருஸ்த்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் ஆகியோர் கிலாஃபா அரசின்கீழ் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு வரலாறே சான்றாக திகழ்கிறது.

பிரிட்டன் மற்றும் காலனியாதிக்க மேற்கத்திய அரசுகளின் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில்தான் முஸ்லிம்களின் நிலப்பரப்புகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டன! ஒற்றுமையாக வாழ்ந்துவந்த பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் மத்தியில் பரஸ்பர வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு ஓரிரவில் அவர்கள் எதிரிகளாக ஆக்கப்பட்டர்கள்!

 

கண்ணியமிக்க முஸ்லிம்களே!

நாம் மிகச்சிறந்த சமுதாயம் என்பதை நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும், மேற்கத்தியர்கள் நிச்சயமாக இதை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பெரும் திட்டங்களை தீட்டி செயலாற்றியபோதும் நம்மை சிறிதும் பலவீனப்படுத்த முடியவில்லை! எனவே நாம் உயிரினும் மேலாக கருதுகின்ற நமது இந்த விவகாரத்தில் இப்போது அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! ஆம்! நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் அல்லாஹ்வின் வேதத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த துணிந்துள்ளார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம் தீட்டுவதை நாம் கண்டித்தால் அவர்கள் மேலும் அதுபோன்ற கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டு வருகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை கழிவறையில் வீசியெறிகிறார்கள்! அதை தீயிட்டு கொளுத்துகிறார்கள்! இந்த இழிவான நடவடிக்கைகள் வாயிலாக நம்முடைய இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும் இறை வேதத்தின் மீதும் நாம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

கிலாஃபா எனும் உண்மையான தலைமை இல்லாவிடில் நாம் மிகநெருக்கடியான சூழலில் தள்ளப் பட்டுவிடுவோம் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபாதான் நம்முடைய கண்ணியத்தையும், சிறைபட்டுக் கிடக்கும் நம்முடைய சகோதரர்களையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது நிலங்களையும் நமது மஸ்ஜிதுகளையும் திரும்பவும் மீட்டுக்கொடுத்து இஸ்லாமிய மாண்புகளை அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை அமைப்பதற்கு ஆற்றல்பெற்றது. இஸ்லாத்தின் கண்ணியத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க அது போராடும்!

 

இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும்!

நமது இருப்பிடங்களில் அமர்ந்துகொண்டு முஸ்லிம் உலகத்தின் இக்கட்டான நிலையை செய்திஊடகங்களில் பார்த்து துயரங்கொள்வதால் மட்டும் எத்தகைய பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக எந்த நிலப்பரப்பில் நாம் இருந்தபோதும் இணைந்து செயலாற்றி நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

மேற்கத்தியர்களின் அச்சுறுத்தல்கள், நமது சகோதரர்களும் சகோதரிகளும் எதிர் கொண்டுள்ள இன்னல்கள் துயரங்கள், நமது இஸ்லாமிய நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்புகள், வாழ்வியலில் நாம் அடைந்துள்ள பின்னடைவு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரேயொரு தீர்வுதான் நமக்கு முன்பாக இருக்கிறது! ஆம்! ஒரே தலைமையின்கீழ் நாம் ஒன்றிணைய வேண்டும்! மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி செலுத்துவதற்கு திறன்பெற்ற செயலாக்க அமைப்பின்பால் நாம் ஒன்றிணையவேண்டும்! நமக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும் கீழ்நிலையிலிருந்தும் விடுபட வேண்டுமென்றால் நாம் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்! ஆம்! கிலாஃபத்திற்காக விடுக்கப்படும் அழைப்பில் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்!

எனவே நமது கட்டாயக்கடமை என்னவென்றால்,

·நமது உம்மத்தை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவையும் அது பற்றிய விழிப்புணர்வையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

·இந்த குறிக்கோளுக்கான ஹுகும்களையும் தீர்வுகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

·அல்லாஹ் அருளியுள்ள ஷரீஆவை நிலைநாட்டுவதற்காகவும் முஸ்லிம்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அழைப்புவிடுக்கும் உலக முஸ்லிம் சகோதரர்களுடன் நாம் இணைந்து நிற்கவேண்டும்.

·நமது சகோதர சகோதரிகளுக்காகவும் அல்லாஹ்வின் உதவிக்காகவும் நாம் துஆ செய்யவேண்டும்.

·இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்குரிய தீர்வு என்பது நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபா எனும் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதுதான் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அது முஸ்லிம்களின் கேடயமாகும்! அதுவே தீனுடைய பாதுகாப்பாகும்! அதுதான் இஸ்லாத்தின் சின்னமாகவும் அதன் அச்சாணியாகவும் விளங்குகிறது! இன்னும் முஸ்லிம்களின் வாழ்வாகவும் அவர்களுடைய கண்ணியமாகவும் உடமையாகவும் விளங்குகிறது!

 

ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு உங்களுக்கு வாழ்வளிக்கும் விஷயத்தை நோக்கி அழைப்பு விடுத்தால் அதற்கு பதிலளியுங்கள்!    (அல்அன்ஃபால் : 24) 

 

 

www.sindhanai.org‎

Jul 17, 2014

இன்றைய முஸ்லிம்களுக்கும் சஹாபாக்களுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?


1.இன்றைய முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாக்களை சுன்னத்துத்தானே என எண்ணி அமல் செய்கிறார்கள். ஆனால் சஹாபாக்கள் அவற்றை பர்ளுடைய அந்தஸ்த்தில் வைத்து அமல் செய்தார்கள்.
2.இன்றைய முஸ்லிம்கள் மக்ருஹான விடயங்களை அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால் சஹாபாக்கள் அதனை ஹறாம் எனும் அந்தஸ்தில் அமுல்படுத்தினார்கள்.
3.இன்றைய முஸ்லிம்கள் ஹலால் ஹறாம் என்பதில் பாரிய அக்கறை செலுத்துவதில்லை. ஆனால் ஹறாம் ஹலால்தான் அவர்களின் வாழ்வின் அடிப்படையாக என்றும் மிளிர்ந்தது.
4.இன்றைய முஸ்லிம்கள் சுவர்க்கத்தை ஆசிப்பதனைவிட உலகினை அதிகம் ஆசிக்கிறார்கள். நரகத்திற்கு அஞ்சுவதில்லை. மறுமையினது கேள்வி கணக்கை உதாசீனம் செய்த நிலையில் மனம்போன போக்கில் வாழ்கிறார்கள். ஆனால் சஹாபாக்களோ சுவர்கத்தை கண்முனே நிறுத்தி அதன் இன்பங்களை ஆசித்து அதனை அடைய முயற்சித்தார்கள். அத்துடன் நரகத்தை கடுமையாக அஞ்சிய படி தமது அனைத்து காரியங்களையும் ஒழுங்குபடுத்தினார்கள். தமது ஒவ்வொரு செயலுக்கும் மறுமையில் பதில் சொல்லவேண்டிவரும் என்பதனை எல்லாச் சந்தர்ப்பத்திலும் உணர்ந்து வாழ்வை ஒழுங்குபடுத்தினார்கள்.
இவை யாவற்றிற்கும் காரணமாக உத்தம சஹாபாக்களது இஸ்லாமிய அகீதாவின் உறுதியும் தெளிவும் இருந்தது. ஆனால் இன்றைய முஸ்லிம்களது அகீதா மேற்கினது அகிதாவில் கட்டியெழுப்பப்பட்ட சிந்தனைகளான “மதஒதுக்கல் சிந்தனை, தாராண்மைவாதச் சிந்தனை, ஜனநாயகம், முதலாளித்துவம்” போன்ற குப்பரிய சிந்தனைத் தாக்கத்திற்கு உட்பட்டு தமது வாழ்வின் இலக்கும் இஸ்லாம்பற்றி தெளிவும் இல்லாத நிலையில் வாழ்கிறார்கள்.

Jul 15, 2014

முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கிய அமீருல் முஃமினீன்களின் பட்டியல்


கிலாஃபா ராஷிதா (11-40 ஹிஜ்ரி;632-661 கி.பி)
632–634      அபுபக்கர் சித்தீக் (ரலி)
634-644       உமர் இப்னு கத்தாப் (ரலி)
644-656       உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி)
656-661       அலீ இப்னு அபீ தாலிப் (ரலி)
661-661       ஹஸன் இப்னு அபீ தாலிப் (ரலி)
உமைய்யா கலீஃபாக்கள் (41-132 ஹிஜ்ரி; 661-750 கி.பி)
661-680       முஆவியா இப்னு அபு சுஃப்யான் (ரலி)
680-683       யஜீத் இப்னு முஆவியா
683-683       முஆவியா  இப்னு யஸீத்
683-692       அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி)
683-692       மர்வான் இப்னு ஹகம்
692-705       அப்துல் மலிக் இப்னு மர்வான்
705-715       வலீது இப்னு அப்துல் மலிக்
715-717       சுலைமான் இப்னு அப்துல் மலிக்
717-720       உமர் இப்னு அப்துல் அஜீஸ்
720-724       யஜீத் இப்னு அப்துல் மலிக்
724-743       ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்
743-744       வலீத் இப்னு யஜீத் இப்னு அப்துல் மலிக்
744-744       யஜீத் III
744-744       இப்ராஹீம் இப்னு வலீத்
744-750       மர்வான் இப்னு முஹம்மது
அப்பாஸிய கலீஃபாக்கள் (132-923 ஹிஜ்ரி;  750-1517 கி.பி)
அப்பாஸியாக்கள் I பக்தாத் தலைநகரம்
750-754       அபுல் அப்பாஸ் ஸஃப்ஃபாஹ்
754-775       அபூஜஃபர் மன்சூர்
775-785       மஹ்தீ
785-786       ஹாதீ
786-809       ஹாரூன் ரஷீத்
809-813      அமீன் இப்னு ஹாரூன் ரஷீத்
813-833       மஃமூன் இப்னு ஹாரூன் ரஷீத்
833-842       முஃதஸிம் பில்லாஹ்
842-847       வாஸிக் பில்லாஹ்
847-861       முத்தவக்கில் அலல்லாஹ்
861-862       முன்தஸிர்       பில்லாஹ்
862-866         முஸ்தயின் பில்லாஹ்
866-869        முஃதஸ்  பில்லாஹ்
869-870        முஹ்த்ததீ       பில்லாஹ்
870-892        முஃதமித்          அலல்லாஹ்
892-902        முஃததித்           பில்லாஹ்
902-908       முக்தஃபி பில்லாஹ்
908-932         முக்ததிர் பில்லாஹ்
932-934           காஹிர் பில்லாஹ்
934-940          ராதிபில்லாஹ்
940-944          முத்தகீ லில்லாஹ்
944-946           முஸ்தக்ஃபி பில்லாஹ்
946-974           முத்தீ லில்லாஹ்
974-991             தாயீ லில்லாஹ்
991-1031           காதிர் பில்லாஹ்
1031-1075         காயிம் பி அம்ரில்லாஹ்
1075-1094          முக்ததீ பி அம்ரில்லாஹ்
1094-1118           முஸ்தஷீர் பில்லாஹ்
1118-1135            முஸ்தர்ஷித் பில்லாஹ்
1135-1136            ராஷித் பில்லாஹ்
1136-1160            முக்தஃபி லி அம்ரில்லாஹ்
1160-1170            முஸ்தன்ஜித் பில்லாஹ்
1170-1180            முஸ்ததி பி அம்ரில்லாஹ்
1180-1225            நாஸிர் லி தீனில்லாஹ்
1225-1226            ஸாஹிர் பி அம்ரில்லாஹ்
1226-1242            முஸ்தன்ஸிர் பில்லாஹ்
1242-1258            முஸ்தஃஸிம் பில்லாஹ்
தார்த்தாரியர்களின் கோரத்தாக்குதலால் கிலாஃபத்தின் தலைநகரான பக்தாத் நிர்மூலமாக்கப்பட்டது.தார்த்தாரியர்கள் கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் அவர்களை கொண்றனர். கிலாஃபா மிகவும் பலவீனமான இருந்ததால்  மூன்றரை ஆண்டுகள் கலீஃபா நியமிக்கப்படவில்லை.கலீஃபா கொல்லப்பட்டாலும் கிலாஃபத்தின் கட்டமைப்பு அப்படியே இருந்தது.கலீஃபாவால் நியமிக்கப்பட்டிருந்த மற்ற மாகாண ஆளுநர்களும் இதர துறையினரும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். அய்ன் ஜாலூத் என்ற பகுதியில் வைத்து தார்த்தாரியர்கள் முறியடிக்கப்பட்ட பிற்கு கெய்ரோவில் உலமாக்கள் முயற்சியால் முஸ்தன்ஸிர் பில்லாஹ் அவர்களுக்கு  பைஆ  செய்யப்பட்டு கலீஃபாவாக நியமிக்கப்பட்டார்.
அப்பாஸியாக்கள் II கெய்ரோ தலைநகரம்
1261-1262            முஸ்தன்ஸிர் பில்லாஹ்
1262-1301            ஹாகிம் பி அம்ரில்லாஹ்       I
1301-1339            முஸ்தக்ஃபி பில்லாஹ்       I
1339-1341            வாஸிக் பில்லாஹ்           I
1341-1352            ஹாகிம் பி அம்ரில்லாஹ்        II
1352-1362            முஃததித் பில்லாஹ்
1362-1377            முத்தவக்கில் அலல்லாஹ்         I   (First Reign)
1377-1377         முஸ்தஃஸிம் பில்லாஹ் I    (First Reign)
1377-1383          முத்தவக்கில் அலல்ல்லாஹ் I (Second Reign)
1383-1386            வாஸிக் பில்லாஹ்       II
1386-1389         முஸ்தஃஸிம் பில்லாஹ் I  (Second Reign)
1389-1406        முத்தவக்கில் அலல்ல்லாஹ்  I  (Third Reign)
 1406-1430       முஸ்தயின் பில்லாஹ்
1430-1441        முஃததித் பில்லாஹ்  II
1441-1450        முஸ்தக்ஃபி பில்லாஹ்  II
1450-1459      காயிம் பி அம்ரில்லாஹ்
1459-1479      முஸ்தன்ஜித் பில்லாஹ்
1479-1497      முத்தவக்கில் அலல்ல்லாஹ்   II
1497-1508      முஸ்தன்ஸிக் பில்லாஹ்  (1st Reign)
1508-1516      முத்தவக்கில் அலல்ல்லாஹ்  III (1st Reign)
1516-1517     முஸ்தன்ஸிக் பில்லாஹ்  (2nd Reign)
1517-1517     முத்தவக்கில் அலல்ல்லாஹ்  III (2nd Reign)
 கலீஃபா முதவக்கில் அல்லாஹ் III அவர்களிடமிருந்து உஸ்மானிய சுல்தான் சலீம்  I அவர்களுக்கு கிலாஃபா பொறுப்பு மாறியது.
உஸ்மானிய கலீஃபாக்கள் (923-1349ஹிஜ்ரி;  1517-1924கி.பி)
1517-1520            சலீம்  I
1520-1566            சுலைமான் I
1566-1574            சலீம் II
1574-1595            முராத் III
1595-1603             முஹம்மது III
1603-1617            அஹ்மது I
1617-1618            முஸ்தஃபா I (1st Reign)
1618-1622            உஸ்மான் II
1622-1623            முஸ்தஃபா I  (2nd Reign)
1623-1640            முராத்  IV
1640-1648            இப்ராஹீம் I
1648-1687            முஹம்மது  IV
1687-1691            சுலைமான் II
1691-1695            அஹ்மது II
1695-1703            முஸ்தஃபா II
1703-1730            அஹ்மது III
1730-1754            மஹ்மூது I
1754-1757            உஸ்மான் III
1757-1774            முஸ்தஃபா III
1774-1789            அப்துல் ஹமீது I
1789-1807            சலீம் III
1807-1808            முஸ்தஃபா IV
1808-1839            மஹ்மூது II
1839-1861            அப்துல் மஜீத் I
1861-1876            அப்துல் அஜீஸ்
1876-1876            முராத் V
1876-1909            அப்துல் ஹமீது II
1909-1918             முஹம்மது V
1918-1922            முஹம்மது VI (வஹீதுத்தீன்)
1922-1924           அப்துல் மஜீத் I
- READ FULL ARTICLE இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா?