' மாலி ' இன்று மீடியாக்களின் பார்வையில் அதிகம் உச்சரிக்கப்படும
பொதுவாகவே அநேகமான ஆபிரிக்க தேசங்கள் முதலாளித்துவ காலனித்துவ ஏகாதிபத்தியத்தி
ஒவ்வொருவரும் தமது மனதை தொட்டு பேசவேண்டும் எமக்குத் தெரிந்தவரை ஆபிரிக்க மக்கள் தொடர்பில் அவர்களது சமூக ,கலாச்சார ,அரசியல் ,பொருளாதார, நிலைகள் எவ்வாறு இனம் காட்டப் பட்டுள்ளன ?
#மிகக் கடுமையான வறுமையும் , பஞ்சமும் .
#உள்நாட்டு யுத்தங்கள் , கோத்திர வாத சண்டைகள் .
#பழங்குடி வாழ்க்கை .
#போசாக்கற்ற மக்கள் .
#அச்சகரமான சூழல் .
என்ற உருவங்களே மனக்கண் முன் வரும் . ஆனால் இவை யாவும் அதன் பூமிக்கு மேல் உள்ள உருவாக்கப் பட்டு சித்தரிக்கப் படும் வடிவமாகும் . ஆனால் இந்த உலகத்தையே விலை பேசும் செல்வங்கள் அதன் பூமிக்கு கீழேதான் இருக்கின்றன . அது ஆபிரிக்காவின் இயற்கை வளங்கள் . இன்னும் இந்த வல்லரசுகள் அஞ்சும் யுரேனியம் , புளுட்டோனியப் படிமங்களையும் அதிகமாகவே ஆபிரிக்கா கொண்டுள்ளது .
முதலாளித்துவ சுரண்டல் வர்க்கத்தின் அழுத்தமான பார்வை பதிந்த இடமும் இதுதான் .அதன் காரணமாக ஆபிரிக்க மக்கள் ஒரு மோசமான சித்தரிப்பு நோக்கி நகர்த்தப் பட்டார்கள் . தம்மைப் பற்றியும் ,தமது நிலத்தைப் பற்றியும் அவர்கள் சிறிதும் சிந்திக்க அவகாசம் கொடுக்கப் படவில்லை . முதலாளித்துவ காலனித்துவத்தின
# காலனித்துவம் .
# நவ காலனித்துவம் .
# நாடுகளை அரசற்ற நிலைக்கு (அனார்க்கி ) ஆக்கி உள்நாட்டு கலவரங்களை தூண்டி யுத்தப் பிரபுக்களை ஏற்படுத்தி ஆயுத விற்பனைக்கு பதிலாக கனிய வளங்களை பரிமாறுதல் .
போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்து அதன் வளங்களின் ஆதிக்கத்தை தமது கையில் வைத்திருப்பதே உண்மையில் இந்த (பிரான்ஸ் உட்பட ) முதலாளித்துவம் ஆபிரிக்க விவகாரத்தில் கவனத்தை குவிக்கும் பிரதான நோக்கமாகும் . இந்த பின்னணியை உணர்ந்தவர்களாகவ
No comments:
Post a Comment