Apr 15, 2013

எது சமூக மாற்றம் ?

உண்மையில் சமூக மாற்றம் என்பதுதான் ஒரு சமூகத்தின் அரசியல் மாற்றமாகும். தான் எவ்வாறு வாழ வேண்டும், தனக்கான தலைமை மற்றும் அதிகாரம் அந்த தலைமை மற்றும் அதிகாரத்தின் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப்
பற்றிய தெளிவான முடிவின் அடிப்படையிலேயே சமூக மாற்றம் தோற்றம் பெறமுடியும்.

அல்லது மேற் சொன்ன காரணிகளை உச்சக்கட்ட விளை பொருளாக கருத்தில் கொண்டு தெளிவோடு சமூகம் எழுவதே சமூக மாற்றம் எனலாம்.இவ்வாறான ஒரு சமூகத்தின் அரசியல் என்பதையும் அதன் இராஜதந்திர பாதையையும் மறுத்து சுதந்திரமான சமூக மாற்றம் தோற்றம் பெற முடியாது .

அரசியல் என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கைப்போக்கையும் நடத்தையினையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய விடயம் .அது தனது உள்ளார்ந்த உறவுகளையும் 'சிவில் ,கிரிமினல் சட்டங்களையும் ,பிற சமூகங்களுடனான உறவுகள் , ஏனைய அதிகாரங்களோடு ,அரசியலோடு கொண்டுள்ள தெளிவான நிலைப்பாடு என்பவற்றில் ஒரு தெளிவற்ற சமூக எழுச்சியின் விளைவு ஒரு சிறந்த சமூக மாற்றத்தை நோக்கியதாக கருத முடியாதது .

அநேகமான மத்திய கிழக்கின் இன்றைய சமூக எழுச்சிகள் ஏறத்தாள இவ்வாறானதுதான் .ஆனால் முஸ்லிம் சமூகம் மிகச்சரியாக சிந்தித்தால் தான் சுமந்திருக்கும் இஸ்லாம் எனும் கொள்கை இது விடயத்தில் உறுதியான அரசியலையும்
இராஜதந்திர பாதையையும் உள்ளார்ந்த உறவுகளையும் 'சிவில் ,கிரிமினல் சட்டங்களையும் ,பிற சமூகங்களுடனான உறவுகள் , ஏனைய அதிகாரங்களோடு ,அரசியலோடு கொண்டுள்ள தெளிவான முடிவுகளையும் வைத்துள்ளது .

ஆனால் அந்த அரசியல் மறைக்கப்பட்டிருக்கின்றது , மறக்கப்பட்டிருக்கின்றது , மறுக்கப்படுகின்றது
களங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது !!!
(தொடரும்.. ..)

No comments:

Post a Comment