Jun 28, 2013

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுதியில் தர்மமே வெல்லும் .

# அல்லாஹ் நாடியவரை உங்களிடையே நபித்துவம் இருக்கும் .அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
# பிறகு நபித்துவத்தின் வழியில் 'கிலாபா ' ஆட்சி முறையாக அது அமையும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
# பிறகு அது கடினமான மன்னராட்சி முறையாக அது அமையும் ;அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
# பிறகு அது அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சியாக அது அமையும் .அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
# பின்னர் (மீண்டும் ) நபித்துவ வழிமுறையில் கிலாபா ஆட்சி ஏற்படும் என்று கூறி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அமைதி காத்தார்கள் .
அறிவிப்பவர் :- ஹுதைபா (ரலி )
ஆதாரம் :- முஸ்னத் அஹ்மத்

முஸ்லீம்களைப் பொறுத்தவரை வரலாற்று நிகழ்வுகளை இரத்தினச் சுருக்கமாகவும் மிகத் துல்லியமான தீர்க்க தரிசனமாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் )குறிப்பிட்டிருக்கும் ஒரு முன்னறிவிப்பே இந்த செய்தியாகும் .

"அவர் தம் இச்சைப்படி எதையும் பேசுவதில்லை அது அவருக்கு 'வஹி ' மூலம் அறிவிக்கப் பட்டதே அன்றி வேறில்லை " என்ற அல்குர் ஆன் வசனப் பிரகாரம் முஸ்லீம் உம்மாவோடு, மனித சமூகத்தோடு அல்லாஹ்வின் தூதரது வார்த்தைகளால் அல்லாஹ் (சுப) சொல்லும் செய்தியானது , ஒரு தூய நிலையில் இருந்து படிமுறையாக கடந்து வந்த கசப்பான கடந்த காலத்தையும் ,எதிர்காலத்தின் மிகத் தெளிவான சுப சோபனமும் தான் என்றால் அது மிகையான கருத்தல்ல .அந்த வகையில் உண்ணிப்பாக நாம் அவதானித்தால் இந்தக் கால நகர்வுகளின் தொடரில் இன்று எஞ்சி இருப்பது தூய கிலாபத்தின் மீள் வருகையில் சுதந்திரமான வஹி வழிகாட்டலின் அமுலாக்கம் தான் .

வஹியின் முன்னறிவிப்பு என்பது முஸ்லிமின் முயற்சியை பிற்போடும் ,அல்லது நடந்தே தீரும் என்ற எதிர்பார்ப்போடு கைகட்டி காத்திருக்கும் ஒரு விடயமாக மாறி விடக் கூடாது .சத்தியத்தின் உயர்சிக்கான உயர்ந்த பட்ச முயற்சி என்ன ? தியாகம் என்ன ? என்பது பற்றி நாம் இறைவனால் கேள்வி கேட்கப் பட மாட்டோம் ! என இந்த நபி மொழி மூலம் ஒரு முஸ்லீம் முடிவெடுத்தால் அதைவிட மிகப்பெரிய அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது .

வஹியின் முன்னறிவிப்புகள் பற்றி அல்லாஹ்வின் தூதரோ (ஸல் ) எமதருமை சஹாபாக்கள் , தாபியீன்கள் , தபஹ் தாபியீன்கள் , இமாம்கள் ஆகியோரது நடவடிக்கைகள் இவ்வாறு அமையவில்லை . மாறாக குறித்த முன்னறிவிப்பில் தமது பங்களிப்பு ,அதற்கு இடைப்பட்ட கால சவால்களை எதிர்கொள்வது தொடர்பான ஆக்க பூர்வமான முயற்சி ,ஆவல் ,அதற்கான போட்டி , ஆழமான பிரார்த்தனை என்பவற்றை உள்ளடக்கியே அவர்களது வாழ்வு அமைந்திருந்தது .

# கந்தக் போரில் ஷாம், பாரசீகம் ,எமன் என்பன இஸ்லாத்தின் கொடியின் கீழ் வரும் என்ற முன்னறிவிப்பு அல்லாஹ்வின் தூதரால் (ஸல் ) விடப்பட்டது .
(பரா இப்னு ஆசிப் (ரலி ) , நசயி, அஹ்மத் )

எதிரியின் ஒரு கொடூரமான முற்றுகை நிலையில் பட்டினியோடும் , குறைந்த பட்ச ஆயுத வலிமையிலும் நின்று சொல்லப்பட்ட இந்த முன்னறிவிப்பு அந்த சஹாபாக்கள்மத்தியில் பரவியபோது அவர்களது பார்வை இது விடயத்தில் தம்மை பங்காளியாக்கும் போராட்ட உணர்வையே ஏற்படுத்தியது . சத்தியத்தின் கரங்களால் குறித்த பகுதிகளை தட்டித் திறக்கும் கடின முயற்சிக்கு தமது உள்ளக் கதவுகளை தெளிவோடு திறந்தார்கள் என்பதும் காலத்தின் பரிணாமத்தில் அந்த வெற்றிகள் காலம் கடந்தவையாகவே கிடைக்கவும் பெற்றுள்ளதை வரலாறு காட்டி நிற்கின்றது .

# இதே போல இஸ்லாத்தின் முதலாவது கடற்படை தொடர்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) சுபசோபனம் கூறியபோது அதில் தானும் பங்காளியாக வேண்டும் என ஒரு சஹாபிப் பெண்மணி பிரார்த்திக்க கேட்ட வரலாறும் எம்மால் மறக்க முடியாதது . காலத்தால் நீண்ட பிந்தைய அவ்வரலாற்றில் அப்பெண்மணி அந்த படையில் பங்களிப்பு
செய்ததையும் எம்மால் மறக்க முடியாது.

# கான்ஸ்தான்டிநேபல் வெற்றி பற்றிய சுப செய்தியின் முயற்சிகள் மிகத் தெளிவாகவே அமீர் மூஆவியா (ரலி ) அவர்களின் காலப்பகுதியில் தொடங்கப் பட்டாலும் அதன் வெற்றிச் செய்தி பைசாந்திய பேரரசு பலம் பொருந்திய நிலையில் இருந்த போது ஒரு பலத்த போராட்டத்தின் முடிவில் மாவீரர் முஹம்மத் அல் பாதிர் பெற்றுத் தந்ததை எம்மால் மறக்க முடியாது.(ஹிஜ்ரி 857, கி.பி 1453) அதுவரை இப்பாதையில் கொடுத்த இழப்புகள் சந்தித்த சோதனைகள் என்பது சொல்லில் வடிக்க முடியாதது .

# தாதாரியரால் இஸ்லாமிய சாம்ராஜ்யம் முற்றாகவே செயலிழக்கப் பட வைக்கப் பட்ட போதும் முஸ்லீம் உம்மா செயலற்றுப் போகவில்லை 'ஜன் ஜலூதில் ' அவர்களது இராணுவ வலிமை இஸ்லாமிய இராணுவத்தால் பதம் பார்க்கப் பட்டது . இன்னும் சில இஸ்லாமிய தா யிகள் துல்லியமான பிரச்சார நகர்வின் மூலம் அந்த மொங்கோலிய அதிகாரத்தை அசைத்து மீண்டும் இஸ்லாத்தின் கொடியை பாரினில் ஒரு சக்தி மிக்கதாக பறக்க விட முயற்சி செய்தனர் 'அல் ஹம்துலில்லாஹ் ' வென்றனர் .

வஹியை வார்த்தைகளாக நம்புவதை விட வாழ்க்கையாக்குவது தொடர்பில் எம் முன்னோர்ர்கள் தவறு விட்ட சந்தர்ப்பம் எப்போதும் ஒன்றே ஒன்று தான் அது 'உலகத்தை நேசிப்பதும் மரணத்தை வெறுப்பதும் என்ற அடிப்படையில் தம்மை மாற்றிய போதே நிகழ்ந்தது . தம்மை மறு சீரமைத்து இறைவனை திருப்தி பொருந்திய முகத்தோடு சந்திக்க திட சங்கற்பம் பூண்ட போது எதிரி அஞ்சினான் . இப்போது சுமைகள் சுகங்களாகியது. சுவனம் எல்லையாகியது .

இன்று போலவே சதிமுகங்கள் சூழ இருந்தன யூதர்கள் ,முனாபிக்குகள் என முடிச்சி மாறி கூட்டங்கள் பசப்பு வார்த்தைகளாலும் , உதவும் கரங்கள் போலவும் காட்டி நின்று கழுத்தறுக்கப் பார்த்தனர் .இந்த சில்லறை சித்தாந்திகளை பெரிது படுத்தி இஸ்லாமிய சுடர் முன் நாளை எப்படியும் விழப் போகும் விட்டில் பூச்சிகளுக்கு தமது கருத்து வீட்டில் கௌரவ தொட்டில் கட்டி எதோ பூதம் போல் கட்டும் ,அச்சத் தாலாட்டுப் பாடும் தளங்களை உடையோர் சற்று இது விடயத்தில் சிந்திப்பது நலம் .

யூதனின் கொப்பி, கிறிஸ்தவனின் பேனா , படிப்பது இஸ்லாமா !? என சாதனங்களையும் , சித்தாந்த நடத்தைகளுக்கும் இடையில் வித்தியாசம் காணத் தெரியாத சிலருக்கு இன்றைய மத்திய கிழக்கின் நிகழ்வுகள் குறிப்பாக சிரிய நிகழ்வுகள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை . மஜூசிகளின் மஞ்சனீக்கை எடுத்து பாரசீக கோட்டையை தாக்கினார்கள் என்பதற்காக முஸ்லீம்களை நெருப்பு வணக்கிகளாக சித்தரிப்பது மிகத் தவறானது . மேலும் மேற்கின் உதவி என்ற போலி நாடக பிரச்சார யுத்தத்தை அவன் காட்டும் போலி ஆதாரங்களோடு மீடியாக்கள் வெளியிட கிளிப்பிள்ளை பாடமாக அதை எடுத்தாள நினைப்பதும் மிகத் தவறானது . சர்வதேச முஸ்லீம் உம்மாவின் சகோதரப் பார்வை சந்தேகப் பார்வையாக மாறவேண்டும் என்பதே சியோநிசத்தினதும் , எல்லா குப்ரிய ஆதிக்க சக்திகளதும் ஒரே எதிர்பார்ப்பாகும் .

Jun 21, 2013

அந்நாள் வெகு தூரமில்லை .........


அறியாமையை அகற்றி சத்திய ஒளி கொடுத்தது தாருல் இஸ்லாம். இருளை வெளிச்சமாக்கி சூனியத்தை பூரணமாய் காட்டும் அசத்திய எதிரி அவன் சாக்கடை அகீதாவை சிந்தனாயுதம் கொண்டு சந்தனமாய் ஏவிய போது அதன் கீழ் ஒரு கொத்தடிமை போல வாழ்ந்தான் முஸ்லிம் ! காலத்தால் அந்த அநாகரீகம் நாகரீகமாய் வாழ்வை ஆக்கிரமிக்க அதில் நியாயம் கண்டான் !

'ஜாஹிலியா ' வரைந்த சித்தாந்த வரிகளில் சுதந்திரம் எனும் சிறைச்சாலை தேசிய வேலியோடு பக்குவமாய் சகோதரத்துவத்தை சிதறடித்து முஸ்லிமை சிறைப்படுத்தியது . மறுபக்கம் இறுமாப்போடு இஸ்ரேலை பலப்படுத்தியது .

எடுபிடிகள் ,கங்கானிகள் என ஏகாதிபத்தியங்களுக்கு தொண்டர் அரசியலை உள்வீட்டு குண்டர்கள் சிலர் பொறுப்பெடுக்க இரத்தம் குடிக்கும் அதிகாரங்கள் முகமூடி போட்டு அடக்குமுறைக்கு ஆட்சி என பெயரிட்டனர் .

செங்கரடியின் நிழலில் 'பச்சைப் புத்தகமும் ' சியோனிச தயவில் சந்தர்ப்ப பொலிடிக்ஸ் என பிர் அவுன்களும் ,நும்ரூத்களும் மீண்டும் தொடராக அரியணை ஏறினர் .நவ காலனித்துவம் விழாக்கோலம் பூண்டது ! சுரண்டல் தத்துவங்கள் 'பொரின் பொலிசியாக ' கொள்ளை இலாபங்களுக்காக அவலக் கொடூரங்கள் முஸ்லீம் பூமிகளில் சாதாரண நிகழ்வாகியது .

காமப் பந்தியில் கண்ணுக்கு விருந்தாக முஸ்லீம் மாதர் நடைபோட வெட்கமும் ,தூய்மையும் பெண்ணுரிமை என்ற மேடையில் தூக்கிலேற்ற தீர்ப்பளிக்கப் பட்டது .கிரெம்ளின் மந்திரமும் வைட் ஹவுஸ் தந்திரமும் என தாகூதிய தாண்டவத்தில் முஸ்லிமில் ஒரு தரப்பு விசுவாசமான பங்காளிகள் ! இன்னும் சிலர் சந்தர்ப்ப கூத்தாடிகள் !

முன்னே தெரியும் 'சத்துருவை ' சந்திக்க பின்னால் நிற்கும் பிசாசை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொடரும் களங்களில் நடக்கும் கதைகளில் வஹி சுமந்த உம்மத் பரிதாபமான பலிக்கடாக்கள் தானா ?

மொஸ்கோ சித்தாந்தம் மூச்சடங்கிப் போக வாசிங்டன் வைத்ததுதான் உலக மயமாக்கல் இஸ்லாத்தின் பூமியில் என்ன அது மயான மயமாக்கலா !? ஒத்து வராததால் ஓரம் கட்டும் முயற்சியா ?இன்று நீ ஓதும் மரண வேதங்கள் நிரந்தர வரலாறாகும் எனும் நப்பாசை நிராசையாகும் நாள் வெகு தூரமில்லை இன்ஷா அல்லாஹ் ........

அல்லாஹ்வின் மார்க்கம் போராட்டம் ,இறப்புக்கள் ,இழப்புக்கள் ,சிதைவுகள் என்பவற்றை சந்திக்காமல் மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே ! 'அல்லாஹு அக்பர் '

Jun 1, 2013

அஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் ?

அஹிம்சை தொடர்பான பார்வைகளில் அதன் வெளிப்பாடுகள் சில நியாயங்களை மறந்த வன்முறைத் தூண்டல்கள் மூலம் சமூக ஆதரவு மற்றும் ,அரசியல் எதிர்பார்ப்புகளை நோக்கியதாகவே காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது . அனேகமாக அஹிம்சை
சுய சுத்தப்படுத்தலுடன் கூடிய இலக்கு நோக்கிய தற்காலிக கருவியாகவே அநேகமான அரசியல், இராணுவ இயக்கங்களால் இன்று பயன்படுத்தப் படுகின்றன .

ஒரு தனிமனிதன் அல்லது குழு தனது இலட்சியத்துக்காக ,கோரிக்கைகளுக்காக முரண் சக்திகளுக்கு முன் ,முரண் கருத்தியலுக்கு முன் கடுமையான எதிர்ப்பையும் தாங்கி தற்காப்பு அல்லது தாக்குதல் நோக்கமற்று போராடும் வழிமுறையே அஹிம்சை ஆகும் .

உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் இப்படி பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் ,சுய அழிப்புடன் கூடிய கொடூரமான தற்கொலைகளும் இன்று கோரிக்கை அரசியல் வழி அஹிம்சா வழிமுறையாக நடைமுறைப் படுத்தப் படுகின்றன . அனுதாபப் பார்வையின் மூலம் தனது கோரிக்கை சார் ஆதரவு வட்டத்தை அதிகரித்தல் எனும் முதற் கோணம் காரணமாக இங்கு பின்னூட்டல்கள் மூலமான வன்முறை அரசியலை தூண்டும் என்ற இன்னொரு கோணம் நுணுக்கமாக அவதானிக்கப் படுவதில்லை .

அதாவது ஒரு இராணுவ வழி தற்கொலைப் படையாளியின் தாக்குதலின் மூலம் ஏற்படும் சேதத்தை விட, ஒரு குறிப்பிட்ட விடயம் சார் கருத்தியலில் ஆழமான வன்முறை நோக்கு விதைப்பை இத்தகு (அஹிம்சா ரீதியான) சுய அழிப்பு ஏற்படுத்தலாம் . அந்த வகையில் இத்தகு நடவடிக்கைகள் தண்டனைக்குரிய கருத்தியல் வன்முறைத் தூண்டலாகவே பார்க்கப் பட வேண்டும் .

சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .


மேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவும் .


படுத்தப் பட்டுள்ளது . 'லெபனானை மையம் கொண்டு இஸ்ரேலுக்கு சவால் விடும் புயல் 'என வர்ணிக்கப் பட்ட இந்த பிரிவு சிரியப் போராளிகளுக்கு எதிராக பசர் அல் அசாத்துக்கு சார்பாக களத்தில் இறங்கியது யாவரும் அறிந்த உண்மை . அந்தப் பலம் பற்றி ஈரான் மட்டுமல்ல NATO கூட ஒரு பாரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்ததும் மறுக்க முடியாத உண்மை .

அதாவது இராணுவ பாசையில் சொன்னால் சிரிய அரச படையான மரபுசார் அணியையும் ,கெரில்லா அனுபவம் சார் ஹிஸ்புல்லாஹ் அணியையும் வைத்து சிரியப் போராளிகளின் 'பல்லைப் பிடுங்கி தமது சொல்லைக் கேட்க வைத்தல்' என்பதே எதிர்பார்க்கப் பட்ட இலக்காகும் . இந்த இராணுவ அரசியல் மூலம் களத்தின் வலுச் சமநிலையை தமது கட்டுப்பாட்டின் மூலம் ஆதிக்கப் படுத்தலாம் என்பதே' NETO' வின் எதிர்பார்ப்பாகும் .

ஆனால் இந்த 'லெபனானின் புயல்கள்(ஹிஸ்புல்லாக்கள் ) சிரியப் போராளிகளின் தாக்குதல்களில் தூசியாக சிதறடிக்கப் பட்டபோது அது அதிர்ச்சி கரமான ஆச்சரியத்தை பசர் அல் அசாத்துக்கு மட்டுமல்ல NETO விற்கும் ஏற்பட்டது . பசர் அல் அசாத் அர்ஜென்டீன
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உண்மையில் ஒப்புக் கொண்டது இந்த விடயத்தை தான் .

அதில் குறிப்பிட்ட முக்கிய விடயம் '29 நாடுகளின் பயங்கர வாதிகள் சிரியாவில் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள் என்பது பசர் அல் அசாதின் வார்த்தைகள் மட்டுமல்ல ,NATO ,மற்றும் ரஷ்யா போன்றவைகளின் தெளிவான உளவு அறிக்கையே .. 'அரேபிய வசந்தத்தில் ஆட்சிமாற்ற அரசியல் ஊடாக 'நவ காலனித்துவத்தின் நியூ வெர்சனை ' சிரியாவிலும் வெளியிடலாம் என்ற நம்பிக்கைக்கு ஆப்பு வைத்துள்ள 'இஸ்லாமிய சர்வதேசத்தின் போராளிகள் கூட்டு ' என சூழ்நிலையை மறுதலையாக எம்மால் கூற
முடியும் .


முஸ்லீம் உலகின் போராளிகள் நிகழ்கால வரலாற்றில் பயங்கரவாதிகள் என பட்டம் கொடுக்கப் படுவது ஒன்றும் புதுக்கதை அல்ல . ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே இலக்கை நோக்கி இணைவது சற்று புதுக்கதை தான் . மீண்டும் ஒரு சித்தாந்த மாற்றத்தின் மைய்யப்புள்ளியாக சிரியா அமையப்போகின்றதா? எனும் வினாவிற்கு பதிலாக அங்கிருந்து கேட்கும் 'இஸ்லாமிய கிலாபா வேண்டும் 'என்ற அழுத்தமான வார்த்தைகளில் ஒலிப்பதை யாரும் மறுப்பதற்கில்லை .