Sep 5, 2013

ஒரு முஸ்லிமின் தனித்துவம்:



ஒரு மனிதனின் தனித்துவம் என்பது அவனது அறிவு மற்றும் பண்பு ஆகியவற்றால் உருவாகிறது. அதாவது மனிதனின் மனப்பாங்கும் நடத்தைப் பண்பும் சேர்ந்து உருவானதுதான் அவனது தனித்துவம்.

இதனடிப்படையில் இஸ்லாமிய மனப்பாங்கு மற்றும் நடத்ததைப் பண்பு ஆகியவற்றை ஒரு மனிதன் கொண்டிருந்தால் அவர் இஸ்லாமிய தனித்துவத்தைக் கொண்டவராக கருதப்படுவார்.

அதாவது மனித வாழ்வியலில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கருத்துக்களுக்கும் கண்ணோட்டங்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் சிந்தனைகளுக்கும் “இஸ்லாத்தை அளவு கோலாக” ஆக்கிக்கொள்ளும் “மனப்பான்மையும்” “இஸ்லாத்தின் வரம்புகளுக்குள் கட்டுப்பட்டு நடக்கும் நடத்தைப்பண்புகளும்” ஒரு மனிதரிடம் இணைந்திருக்குமானால் அவர் இஸ்லாமிய தனித்துவத்தைப் பெற்ற மனிதராகக் கருதப்படுவார்.

இத்தகைய மனிதர் தனது “உள்ளாரந்த உணர்வுகளையும்” “உயிரியல் தேவைகளையும்” “இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் மாத்திரம் பூர்த்திசெய்து கொள்வார்.” அவர் இஸ்லாத்தின் அடிப்படையில் சிந்தித்து இஸ்லாத்தின் அடிப்படையில் தனது செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் மனிதராக இருப்பார்.

No comments:

Post a Comment