மறுமலர்ச்சி(Revival – النهضة) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகள்(thoughts), உணர்வுகள்(sentiments) , ஆட்சியமைப்பு (system)ஆகியவற்றை மாற்றியமைத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையான மறுமலர்ச்சி (النَّهضةِ الصحيحةِ) என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சிந்தனைகள், உணர்வுகள், செயலாக்க அமைப்பு ஆகியவற்றை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றியமைப்பது என்பதாகும்.
மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சி(الاحتفال الفكرية -Intellectual elevation) என்றும் அழைக்கப்படுகிறது. பொருளாதார முன்னேற்றத்தை மறுமலர்ச்சி என்று கொள்ளமுடியாது. குவைத் நாட்டை ஐரோப்பிய நாடுகளான சுவீடன், ஹாலந்து, பெல்ஜியம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது. இருந்தபோதிலும் இந்த ஐரோப்பிய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை குவைத் இன்னும் அடையவில்லை. ஒழுக்க மாண்புகள் உயர்ந்து நிற்பதும் மறுமலர்ச்சி என்று கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் மதீனா மாநகரம் இன்று உலகில் உள்ள எந்த இடத்தைவிடவும் நற்பண்புகளில் உயர்ந்து நிற்கிறது. இருந்தபோதும் இது முன்னேற்றம் என்று கொள்ளப்படமாட்டாது. ஆகவே மறுமலர்ச்சி என்பது அறிவாற்றலின் எழுச்சியாகும்.
சில சமயங்களில் மறுமலர்ச்சி (نهضة) தவறான அடிப்படையில் ஏற்படுவதும் உண்டு. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா போன்றவை முன்னேறிய நாடுகளாகும். எனினும் அவைகளின் முன்னேற்றம் மிகவும் பலவீனமானது. ஏனெனில் அந்த முன்னேற்றம் ஆன்மீக அடிப்படையில் ஏற்பட்டதல்ல. ஆகவே உண்மையான மறுமலர்ச்சி இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே ஏற்படவேண்டும். ஏனென்றால் இஸ்லாம் மட்டுமே ஆன்மீகமும் அரசியலும் இணைந்த அகீதாவை ( عقيدة) கொண்டதாகும்.
மறுமலர்ச்சி (نهضة) ஏற்படவேண்டுமெனில் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றை பற்றிய முழுமையான சிந்தனையின்( الفكرةِ الكُلِّيَةِ – comprehensive thought) அடிப்படையில் ஏற்படும் ஓர்ஆட்சிமுறையை நாம் நிறுவவேண்டும். மாறாக அது மனித சட்டங்களின் அடிப்படையிலான செயலாக்க அமைப்பு(نظام-system) மற்றும் சட்டவரைவுகள்(legislation) ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கக்கூடாது. மனித சட்டங்கள் மற்றும் அரசியல் சாசனங்களின் அடிப்படையில் நிறுவப்படும் அரசு மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்லாது. மாறாக அது மறுமலர்ச்சியை திசைதிருப்பி மக்களை கடுந்துயரிலும் ஆழ்த்திவிடும். அன்றாட வாழ்வியல் விவகாரங்களின் தீர்வுகள்..அதாவது; ஆட்சிமுறை, சட்ட வரைவுகள் ஆகியவை இந்த சிந்தனையிலிருந்து வெளிவரும்.
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி (نهضة) என்பது விடுதலை(liberty)மற்றும் சுதந்திரம்(freedom) ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாழ்வியல் விவகாரங்களிருந்து மதத்தை பிரிப்பது – فَصْل الدينِ عنِ الحياةِ -என்ற மதச்சார்பின்மை( علمانية- secularism)சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட தவறான மறுமலர்ச்சியாகும். ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிஸ புரட்சியானது இயற்பொருட்களின் பரிணாம வளர்ச்சி(materialistic evolution) பற்றிய கோட்பாட்டின்படி இயற்பொருட்கள்(matter -المادَّة ) பல்வேறு மாற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்து ஒரு குறைவற்ற நிறைபொருளாக (utopian position)மாறும் என்ற இயற்பொருள்வாத)ஜடவாத(அடிப்படையில் ஏற்பட்டதாகும். ஆகவே ரஷ்யாவில் 1917-ல் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஜடவாதிகளான(المادي) கம்யூனிஸ்டுகள் ஓர் அரசை நிறுவி தவறான மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஆனால் அரேபிய தீபகற்பத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது அல்லாஹ்سبحانه وتعالىவிடமிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள்கொண்டு வந்த இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். நபி صلى الله عليه وسلمஅவர்கள் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவி உண்மையான மறுமலர்ச்சியை(النَّهضةِ الصحيحةِ) ஏற்படுத்தினார்கள்.
மேற்கண்ட உதாரணங்களின் மூலம் மறுமலர்ச்சி என்பது அடிப்படை சிந்தனையான(القاعدة الفكرية) அகீதாவின் அடிப்படையில் நிறுவப்படும் ஓர் ஆட்சிமுறையை கொண்டுதான் ஏற்படும் என்பதற்கு தெளிவான சான்றுகளாகும்.
1924ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா இஸ்லாமிய அரசான கிலாஃபத்தை பிரிட்டனின் உதவிகொண்டு அழித்த பின்னர் மனிதசட்ட வரைவுகளையும், ஆட்சிமுறையையும் கொண்டு ஏற்படுத்திய துருக்கிய தேசியவாத அரசு துருக்கியில் எந்தவிதமான மறுமலர்ச்சியையும் கொண்டுவரவில்லை என்ற பேருண்மை, மனித சிந்தனையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களும் ஆட்சிமுறைகளும் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டுவராது என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இத்தகைய ஆட்சிமுறையில் துருக்கி எந்தவித மறுமலர்ச்சியையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக பொருளாதாரம், சமூகம் மற்றும் சர்வதேச அந்தஸ்து ஆகிய அனைத்து துறைகளிலும் அது ஆழமாக பின்தங்கியது. மேற்கத்திய ஆட்சிமுறையும் சட்டங்களும் முஸ்லிம் நாடுகளில் பலவந்தமாக குஃப்ஃபார்களின் ஏஜெண்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் பலவந்தமாக அமல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக முஸ்லிம் உம்மா இழிநிலைக்கு ஆட்பட்டதோடு அவ்வளவு வளங்கள் இருந்தும் அனைத்திற்கும் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கம்யூனிச வீழ்ச்சிக்கு முன்னர் சோவியத் ரஷ்யாவை நாம் நோக்குவோமானால், தவறான சிந்தனையான இயற் பொருள்வாத)ஜடவாத( அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பெற்றாலும், அது மக்களை ஒன்றிணைத்தது. மேலும் மகா வல்லரசு என்ற நிலையை அடையும்வரை அதன் மறுமலர்ச்சி பலவருடங்கள் நீடித்தது. கம்யூனிச சிந்தனையின் அடிப்படையில் லெனின் 1917ல் நிறுவிய இந்த அரசு ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தது. ஆனால் 1924ல் முஸ்தபா கமால் பாஷாவால் மேற்கத்திய ஆட்சிமுறை சட்டங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரசு தோல்வி கண்டது. 1952ல் எகிப்து நாட்டில் ஜமால் அப்துல் நாஸர் மனித சட்ட வரைவுகள் கொண்ட ஆட்சிமுறையை நிறுவியதையும் உதாரணமாக குறிப்பிடலாம். ஆரம்பத்தில் மன்னராட்சிக்கு பதிலாக மக்களாட்சிமுறையை கொண்டுவந்து அதனடிப் படையில் விவசாய நிலங்களை விநியோகம் செய்தார். பிறகு பொதுவுடமை(اشتراكية – Socialism) தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்தினார். ஆனால் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்கு அவரால் இயலவில்லை. மாறாக அறிவாற்றல், பொருளாதாரம் மற்றும் அரசியல் பகுப்பாய்வு ஆகிய விசயங்களில் 1952க்கு முன்பு எகிப்து இருந்த நிலையைவிட பின்தங்கவே நேரிட்டது.
எனினும் ஒரு சிந்தனையின் மீது அல்லது குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் அரசை நிறுவது என்பது வெறும் இராணுவ புரட்சி மூலமாகவோ அல்லது கிளர்ச்சியின் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்றுவது என்று பொருள் அல்ல. ஏனெனில் இது மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவும் செய்யாது; ஒருபோதும் வெற்றி பெறவும் முடியாது. இதன் பொருள் என்னவெனில், அடிப்படை சிந்தனையான அகீதாவின் அடிப்படையில் நம்பிக்கை ஏற்படுத்துவது, அதுகுறித்த உறுதியான வெகுஜனகருத்தினை(Public opinion) உருவாக்குவது, மற்றும் வாழ்க்கை போராட்டத்தை இந்த கருத்தின்படியே நடத்தி செல்லுவது, பிறகு இந்த உறுதியான சிந்தனையின் அடிப்படையில் ஒர் அரசு நிறுவப்படுவது என்பதாகும். ஆகவே ஒரே சிந்தனையின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைப்பதும், இதன் அடிப்படையிலேயே அதிகாரம் நிறுவப்படுவதும் நோக்கமாகும். அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது இங்கு உண்மையான நோக்கம் அல்ல. மாறாக அகீதாவின் அடிப்படையில் ஒர் அரசை நிறுவி மறுமலர்ச்சியை கொண்டு வருவதேயாகும். இதற்கு மிகச்சரியான உதாரணம், நபி صلى الله عليه وسلمஅவர்களுக்குஅல்லாஹ்سبحانه وتعالى விடமிருந்து வஹீ வந்தபோது, அவர்கள் மக்களை இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் அழைத்தார்கள். பிறகு அந்த அடிப்படையிலேயே வெகுஜனகருத்தையும்(Public opinion) மக்களிடத்திலே ஏற்ப்படுத்தி அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திர தலைவர்களின் உதவியைப்(نصرة)பெற்று மதீனாவில் ஒர் அரசை நிறுவினார்கள். பிறகு அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ الله،… فَإِذَا فَعَلُوا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ، وَأَمْوَالَهُمْ
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற கலிமாவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்களுடன் போர் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்…. அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் என்னால் எந்தவித தீங்கும் ஏற்படாது. (புஹாரி)
இவ்வாறே அவர்கள் இந்த கருத்தின் அடிப்படையிலேயே மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். பிறகு மதீனாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. பிறகு, அரேபிய தீபகற்பம் முழுவதிலும் ஏற்பட்டது. பிறகு இஸ்லாமிய நிலப்பரப்பு விரிவடைந்த காலமெல்லாம் இஸ்லாத்தில் இணைந்து இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்ந்த மக்கள் சமுதாயம் அனைத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
இன்று அனைத்து துறைகளிலும் முஸ்லிம் உம்மா வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக அது தன்னை மறுசீரமைக்க முயன்று வருகிறது. முஸ்லிம் நாடுகளில் இஸ்லாம் அல்லாத குஃப்ர் சட்டங்கள் மற்றும் ஆட்சிமுறைகளின்படி ஆட்சி நடைபெறுகிறது. சில இடங்களில் இஸ்லாமிய ஆட்சிமுறையில் அரசு அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் சில இறைசட்டங்களோடு குஃப்ருடைய சட்டங்களும் இணைக்கப்பட்ட குஃப்ர் ஆட்சிமுறைதான் நடைபெற்று வருகிறது.
ஆகவே இஸ்லாமிய அகீதாவான லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்– -لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில் அமைக்கப்படும் அரசே மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியும். இஸ்லாமிய ஆட்சிமுறை, இஸ்லாமிய சட்டங்கள் இவைகள் எல்லாவற்றுக்கும் உயிரோட்டமான لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் உயிரோட்டம் இல்லையெனில் இவையாவும் உயிரற்ற உடல் போன்றதாகிவிடும்.
வெறுமனே சில சீர்திருத்த (reform) பணிகளை செய்வதால் ஒருபோதும் மறுமலர்ச்சி –(نهضة – revival) ஏற்படாது. இமாம் அபூஹனீஃபா رحمه الله அவர்களுடைய மத்ஹபின் சட்டங்களை மட்டும் கொண்டு ஆட்சியை நிறுவினாலும் மறுமலர்ச்சி வந்துவிடாது. மாறாக لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّد رَسُولُ اللهِ என்ற கலிமாவின் அடிப்படையில்தான் அரசு அமைக்கப்பட வேண்டும். பிறகு அல்லாஹ்سبحانه وتعالى அருளிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறு ஃபிக்ஹு சட்டங்களை ஏற்புஅமலாக்கம்(تبني – adoption)செய்யவேண்டும். இவற்றை அல்லாஹ்سبحانه وتعالى வின் ஏவல்–விலக்கல் பற்றிய கட்டளைகளாக அமல்படுத்தப்பட வேண்டுமே தவிர அவைகளின் நன்மைகள் மற்றும் அவைகளின் உலகப் பயன்கள் பற்றிய கண்ணோட் டத்துடன் அமல்படுத்தப்படக்கூடாது.
ஆகவே இன்று உம்மத்தில் மறுமலர்ச்சி (نهضة) ஏற்பட வேண்டுமெனில் அந்த சமூகம் கலிமாவின் அடிப்படையில் தமது வாழ்வை சீரமைத்துக் கொண்டு, ஆட்சியையும் அதிகாரத்தையும் அந்த கலிமாவின் அடிப்படையில் நிறுவி, அனைத்து வாழ்வியல் விவகாரங்களையும் அந்த கலிமாவின்படி அதாவது அல்லாஹ்سبحانه وتعالىமுஸ்லிம்களுக்கு இந்த சட்டங்களை அருளி இருக்கிறான் என்ற ஒரே அடிப்படையில் செயல்பட்டால் மறுமலர்ச்சி நிச்சயமாக வரும். முஸ்லிம் உம்மா முன்பிருந்த உன்னதமான நிலையை நிச்சயமாக மீண்டும் அடையும்.
No comments:
Post a Comment