அல் குர் ஆன் பேசுகிறது .
1. " (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரிந்த பூமியை நோக்கி எடுத்துச் செல்லும் ,மேலும் நாம் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக உள்ளோம் "(அல் குர் ஆன் )
இந்த வஹியுடைய வார்த்தைகள் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம் ) அவரகளின் ஆட்சிப் பிரதேசமாகிய ஷாம் எனும் பகுதியை பற்றியே குறிப்பிடுகின்றது .
2. மேலும் அவர்கள் அவர் விடயத்தில் சூழ்ச்சி செய்யவே நாடினார்கள் .எனவே நாம் அந்த சூழ்ச்சிகளில் இருந்து அவரை காப்பாற்றி அவர்களை இழிவடைந்தவர்களாக்கினோம் . மேலும் அகிலத்தாருக்கு நாம் அருளாகக் கொடுத்த பூமிக்கு அனுப்பப் பட்ட லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் காப்பாற்றினோம் .(அல் குர் ஆன் )
இங்கு இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களை பாதுகாத்ததாக குறிப்பிடும் அல்லாஹ் ,லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் அரபு தீபகற்பம் மற்றும் ஈராக் பகுதிகளில் இருந்து ஷாம் பிரதேசத்தின் பால்
அனுப்பப் பட்டு அவர்களையும் பாதுகாத்ததாக குறிப்பிடுகின்றான் .
3. " தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமில் இருந்து அருள் புரியப்பட்ட பிரதேசங்களால் சூழ்ந்த மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி 'இஸ்ரா ' எனும் நடுநிசிப் பயணம் மேற்கொள்ளச் செய்த இறைவன் மிகப் பரிசுத்தமானவன் .
அவருக்கு நமது அத்தாட்சிகளை காண்பிக்கவே (இவ்வாறு செய்தோம் ). நிச்சயமாக( உமது இரட்சகனாகிய ) அவன் மிக்க செவியேட்போனும் ,பார்ப்பவனுமாவான் .(அல் குர் ஆன் 17:01)
இங்கு மஸ்ஜிதுல் அக்ஸா என்பது பாலஸ்தீன பூமி என்றும் அதுவே ஷாம் தேசத்தை கட்டி எழுப்பக் கூடியது என்றும் கூறுகின்றான் . இதுபற்றி தப்ஸீர் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகையில் மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ உள்ள பகுதி என்பது ஷாம் பிரதேசமாகும் என்று கூறுகிறார்கள் .
' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும்
இஸ்லாத்தின் தெளிவான மாநபியின் (ஸல் ) முன்னறிவிப்புக்கள் இதோ.. .!
1. சலமா பின் நுபைல் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் ." மூமின்களின் சாம்ராஜியம் கட்டி எழுப்பப் படுவது ஷாமில் இருந்துதான் " (ஆதாரம் :- தபரானி )
2. ரசூல் (ஸல் ) சொல்லக் கேட்டதாக அலி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகின்றார்கள்
அல் புதலாஉ (அப்தால்கள் ) என்பவர்கள் ஷாமிலேயே இருப்பார்கள் அவர்கள் நாற்பது பேர்களை கொண்டவர்கள் அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை பகரமாக்குவான் . அவர்களுக்காகவே மழை பொழியும் , அவர்களுக்காகவே எதிரிகளுக்கெதிராக உதவி வழங்கப்படும் . அவர்கள் மூலமாகவே ஷாம் வாசிகளுக்குரிய வேதனை நீக்கப்படும் (ஆதாரம் :- அஹ்மத் )
இமாம் இப்னு தைமியா அவர்கள் கூறுகிறார்கள் :-
இங்கு இவர்களையே 'அல் அப்தால் ' என்று பேரறிஞ்சர்கள் கூறுவார்கள் .ஏனெனில் இவர்கள் நபிமார்களுக்கு பின் அவர்களது பணியை உண்மையாகவே நிறைவேற்ற வந்தவர்கள் . யதார்த்தம் புரியாது செயற்படக் கூடியவர்கள் அல்லர் . இவர்கள் ஒவ்வொருவரும் அறிவு , பேச்சாற்றல் ,மற்றும் இபாதத் ,சமயோசித ஆற்றல் என்பவற்றில் முழுமையானவர்கள் .
நமார்களது பணியை மாற்றமில்லாத வகையில் அவர்களுக்கு பகரமாக செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் . இதன் காரணமாகவே அறிஞ்சர்கள் இவர்களையே " மறுமை வரை சத்தியத்தின் காவலர்களாக நின்று வெற்றி பெறும் கூட்டம் " எனக் கூறுகின்றார்கள் . (ஆதாரம் :- பதாவா இப்னு தைமியா )
அல்லாஹுத்தஆலா பூமியில் நபிமார்களுக்கு பொறுப்பாக கொடுத்தது முற்று முழுதாக அவனுடைய தீனை நிலை நாட்டி ,மனிதர்களுக்கிடையே அவனின் சட்டத்தை அமுல் படுத்துவதாகும் . நபிமார்களின் வருகை
ரசூல் (ஸல் ) அவர்களுடன் பூர்த்தியானதன் பின் இப்போது அந்தப் பணியை இந்த 'அல் அப்தால் ' கள் தாம் செய்வார்கள் என்பதையும் ,காலத்தின் கரங்களில் ஷாம் பகுதியை நோக்கி முன்னறிவிப்பு எனும் சுபசோபனம் சொல்லப் பட்டதற்கும் நடப்பு நிலவரங்களுக்கும் இடையில் தூய இணக்கம் காண வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது .
பசர் அல் அசாத் எனும் கொடியவன் வீழ்த்தப் படுதல் மட்டுமே ஷாமின் கள நிலவரமல்ல , இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் நபிமார்களின் பணியை தொடரக்கூடிய 'அல் அப்தால் ' களின் பாசறையும் ஷாம் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது . அங்கு நடப்பது சர்வ நிச்சயமாக கிலாபத்தின் மீள் வருகைக்கான போராட்டமே .
அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அறிவிக்கிறார்கள் ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்
மிக உக்கிரமான இரத்தம் சிந்தும் போர் ஏற்படும் போது 'மவாளிகளில்' ஒரு படையணி ' டமஸ்கஸில் ' இருந்து புறப்படும் அவர்களே அரபிகளில் மிகச் சிறந்த குதிரை வீரர்கள் ஆவார்கள் , தேர்ச்சி பெற்ற யுத்த வீரர்களாகவும்
இருப்பார்கள் . அவர்களைக் கொண்டே அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலமிக்கதாக்குவான் .(ஆதாரம் :- ஹாகிம் )
இன்று உண்மையில் ஷாம் வாசிகள் தாம் உக்கிரமிக்க போர்க்களத்தில் இறங்கி நின்று அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக குப்ரிய சிந்தனை வழி வந்த அரசுக்கெதிராக உறுதியாக தங்களை அர்ப்பணித்து போர் புரிபவர்கள் ஷாம் வாசிகளே . இது ஒரு வியக்கத் தக்க விடயமே.ஏனெனில் உண்மையில் அவர்கள் தாம் இத்தகு கடினமான தருணங்களிலும் , சூழ் நிலைகளிலும் அல்லாஹ்விற்காக பொறுமை காத்து தங்களது உயிர் ,உடமை ,உறவுகள் அனைத்தையும் இழந்து அல்லாஹ்வின் பாதையில் போராடும் மிகச் சிறந்த போர் வீரர்கள் . மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று மிக்கவர்கள் .
இன்ஷா அல்லாஹ் இத்தகைய சிறப்பு மிக்க ஷாம் வாசிகளின் அணியில் இருந்து தான் அல்லாஹ்வின் மார்க்கத்தை பலப் படுத்துகின்ற 'அல் அப்தால் ' களின் கூட்டமும் உள்ளடங்கி இருக்கும் . இப்போது இந்த முஸ்லீம் உம்மத்தின் அங்கத்தவர்களான எமக்கு முன்னிருக்கும் கேள்வி , இது தான் . ஷாமின் சிறப்பு பற்றிய அறிவிப்புகள் தெளிவானவை எனவே நாம் இந்த தூய பணியில் பார்வையாளர்களா ? பங்காளர்களா ?
அகிலங்கள் அனைத்தினதும் உரிமையாளனே உனது மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக எமது ஈமானிய உறவுகள் ஷாமிலும் முழு உலகிலும் உனக்காக ஆற்றுகின்ற தூய அர்ப்பணிப்புகளை ஏற்று அவர்களின் பாதங்களை உனது மார்க்கத்தில் உறுதியாக்குவாயாக . மேலும் அருள் பெற்ற 'அல் அப்தால் ' களின் அணியில் எம்மையும் பங்காளர்களாக ஆக்குவாயாக .

via FB Mohideen Ahamed Lebbe Bro
No comments:
Post a Comment