முஸ்லிம்களின் ஆத்திரத்தை
தூண்டக்கூடிய பிரான்ஸ் வார இதழின் நடவடிக்கை பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல்வேறு
அறிக்கைகளை வெளியிட்டன. நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற ஃபிரான்ஸ் பத்திரிக்கை கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளது. கடந்தவாரம் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை
அலுவலக ஊழியர்களில் 12 பேர்கள் முகமூடி அணிந்த போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலளிப்பாக மீண்டும் கேலிச்
சித்திரம் வரையப்பட்டுள்ளது! கடந்த சில வருடங்களாக நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும்
வகையில் தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வரையும் நடவடிக்கைகளில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை
முன்னணியில் இருந்துவருகிறது.
சார்லி ஹெப்டோ பத்திரிக்கை
அலுவலக ஊழியர்களின் கொலை பற்றி உணர்ச்சி மேலிட விவாதம் மேற்கொண்ட பத்திரிக்கைகளும்
செய்தி ஊடகங்களும் பேச்சு சுதந்திரம் (Freedom of speech) தொடர்பான முஸ்லிம்களின் உடன்பாடற்ற
மனநிலை குறித்து கேள்வி எழுப்பின! முஸ்லிம்கள் எதிர்செயல்பாடு கொண்டவர்கள் என்றும்
உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்றும் சுதந்திரம்-(யீக்ஷீமீமீபீஷீனீ) என்ற சிந்தனையை
ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல என்றும் அவை குற்றம் சுமத்தின!
முஸ்லிம்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
மேற்குலகின் ஜனநாயக
மதச்சார்பின்மைவாதிகள்தான் முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் தூ£ண்டிவிட்டு வருகிறார்கள்
என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on
Terror) என்ற கோஷத்தை முன்வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும்
திட்டத்தில் மேற்குலகம் எத்தகைய நடிவடிக்கையையும் விட்டுவைக்கவில்லை.
செப்டம்பர் 11 க்கு பின்னர் முஸ்லிம்கள்
பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல்கள், அவமானங்கள், ஆக்கிரமிப்புகள் என்று பல்வேறு இடர்பாடுகளை தங்களுடைய ஈமானின் நிமித்தம் முஸ்லிம்கள்
சந்தித்து வருகிறார்கள். இஸ்லாமிய நிலப்பரப்புகளை வெறித்தனமாக ஆக்கிரமித்ததார்கள்!
அபூகுரைப் மற்றும் குவான்டனாமோ சிறைகளில் முஸ்லிம்களிலுள்ள ஆண்களையும் பெண்களையும்
அடைத்துவைத்து கொடூரமாக சித்ரவதை செய்தார்கள்! நபி(ஸல்) அவர்கள்மீது கேலிச்சித்திரம்
வரைந்து வெளியிட்டார்கள்! நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் கண்ணியமிக்க மனைவியரையும்
இழிவுபடுத்தும் வகையில் புத்தகங்களை வெளியிட்டார்கள்! புனிதமிக்க குர்ஆனை இழிவுபடுத்ததினார்கள்!
ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தார்கள்! ஸ்வீடன்
நாட்டில் மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டுவதற்கு தடைவிதித்தார்கள்! மேலும் இதுபோன்று இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் எதிரான எண்ணற்ற அநீத செயல்பாடுகளை கட்டவிழ்த்து வருகிறார்கள்.
முஸ்லிம்களாகிய நாம்
அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அனுப்பிய நபிமார்களில் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதித்தூதராக
இருக்கிறார்கள் என்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்கு முற்றிலும் முரண்பாடாக, மேற்குலக மதச்சார்பற்ற
ஜனநாயக அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அச்சுறுத்தல், இழிவுபடுத்துதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு
எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லிம்கள் சுதந்திரத்தை மதிப்பதில்லை என்று
மேற்குலகவாதிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.
மதச்சார்பின்மைக்கும் மக்களாட்சிக்கும் பாதுகாவலன் என்று பறைசாற்றிக்கொள்ளும்
ஃபிரான்ஸ் அரசு சமீபத்தில் முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமல் முஸ்லிம்
பெண்கள் ஹிஜாப் அணிவதற்கும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும் தடைவிதித்துள்ளது!
எனினும் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக கருதுகின்ற மாண்புமிக்க விவகாரங்களை காஃபிர்கள்
தொடர்ந்து இழிபடுத்துவதை எதிர்க்கும்வகையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால், முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்
படக்கூடியவர்களாகவும் எதிர்மறை செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்று
புலம்புகிறார்கள்! ஸவ்பான்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவருந்தும்போது ஒருவர்
மற்றொருவரை விருந்திற்கு அழைப்பது போல் உங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மக்கள்
விரைவாக மற்றவர்களை அழைப்பார்கள். ‘அந்நாட்களில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதின் காரணமாக இவ்வாறு நிகழுமா?’ என்று ஒருவர் வினவினார்.
‘இல்லை! அப்போது நீங்கள்
திரளான எண்ணிக்கையில் இருப்பீர்கள், எனினும் கடல்நீரில் அடித்துச் செல்லப்படும் நுரை போன்று இருப்பீர்கள்! உங்கள் எதிரிகளின்
உள்ளங்களில் உங்கள் மீதுள்ள அச்சத்தை அல்லாஹ் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் ‘வஹ்னை’ போட்டுவிடுவான்!’ என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். ‘அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களே! வஹ்ன் என்றால் என்ன?’ என்று ஒருவர் வினவினார்.
‘உலகத்தின் மீதுள்ள
பற்று மற்றும் மரணத்தின் மீதுள்ள வெறுப்பு’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூது, அஹ்மது)
இன்றைய முஸ்லிம்களின்
உண்மைநிலை குறித்து இந்த ஹதீஸ் தெளிவாக விவரிக்கிறது, 170 கோடி மக்கள் தொகையையும்
பெட்ரோலியம், நிலவாயு போன்ற அரிய இயற்கை வளங்களையும் பெருங்குவியலாக பெற்றிருந்தபோதும் இன்றைய
முஸ்லிம்களுக்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை! அவர்கள் கடலின் நுரையைப் போன்ற சிறுமையடைந்து
கிடக்கிறார்கள்!
இதற்குரிய தீர்வுதான் என்ன?
ஆர்ப்பாட்டம் நடத்துவதன்
மூலமாகவோ அல்லது ஃபிரான்ஸ் அரசுத்தூதருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் கடிதம் எழுதுவதன்
மூலமாகவோ இந்த விவகாரத்திற்கு தீர்வு ஏற்படுத்தமுடியாது; மாறாக இத்தகைய விவகாரங்கள்
கடந்த காலத்தில் ஏற்பட்டபோது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் அவற்றிற்கு எவ்வாறு தீர்வுகண்டார்கள்
என்ற முன்னுதாரணத்திலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும். சத்தியத்திற்கும் & அசத்தியத்திற்கும், இஸ்லாத்திற்கும் & குஃப்ருக்கும் எதிரான
இப்போர் புதிதானதல்ல! இந்த தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக நடத்தப்படும்
போரின் வெளிப்பாடாகவே இருக்குகிறது. கடந்த 19 ம் நூற்றாண்டில் முஸ்லிம்களுடைய ஈமானுக்கு எதிராக காஃபிர்கள் தாக்குதல் நடத்தும்
பொருட்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களுடைய கண்ணியமிக்க மனைவி ஆயிஷா(ரளி) அவர்களையும் கேலி செய்யும் நாடகம் ஒன்றை
அரங்கேற்ற முயற்சித்தார்கள்! இதற்கு பதிலளிப்பாக அன்றைய முஸ்லிம்களின் கலீஃபாவாக இருந்த
அமீருல் மூஃமினீன் இந்த இழிசெயலை மேற்கொண்ட நாடுகளின் அரசுத்தூதர்களை அழைத்து அந்த
நாடகத்தை நிறுத்தும்படி எச்சரிக்கை செய்தார்,
உடனடியாக அவை கலீஃபாவின் எச்சரிக்கைக்கு அஞ்சி தங்களுடைய நடவடிக்கையை
நிறுத்திவிடுவதாக கூறிவிட்டன! அந்நாடுகள் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகியவையாகும்!
கிலாஃபா ஆட்சியின்கீழ்
பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் ஒன்றாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள், அதில் சிறுபான்மையினர்
நசுக்கப்படவில்லை, ஏழைகள் கவனிப்பின்றி விட்டுவிடப்படவில்லை! உண்மையாகவே முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிருஸ்த்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் ஆகியோர்
கிலாஃபா அரசின்கீழ் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு வரலாறே சான்றாக திகழ்கிறது.
பிரிட்டன் மற்றும்
காலனியாதிக்க மேற்கத்திய அரசுகளின் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில்தான் முஸ்லிம்களின்
நிலப்பரப்புகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டன! ஒற்றுமையாக வாழ்ந்துவந்த பல்வேறு
மதத்தை சார்ந்தவர்கள் மத்தியில் பரஸ்பர வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு
ஓரிரவில் அவர்கள் எதிரிகளாக ஆக்கப்பட்டர்கள்!
கண்ணியமிக்க முஸ்லிம்களே!
நாம் மிகச்சிறந்த சமுதாயம்
என்பதை நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும், மேற்கத்தியர்கள் நிச்சயமாக இதை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக
பெரும்பெரும் திட்டங்களை தீட்டி செயலாற்றியபோதும் நம்மை சிறிதும் பலவீனப்படுத்த முடியவில்லை!
எனவே நாம் உயிரினும் மேலாக கருதுகின்ற நமது இந்த விவகாரத்தில் இப்போது அவர்கள் தொடர்ந்து
தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! ஆம்! நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதும்
அல்லாஹ்வின் வேதத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த துணிந்துள்ளார்கள்! நபி(ஸல்)
அவர்கள்மீது கேலிச்சித்திரம் தீட்டுவதை நாம் கண்டித்தால் அவர்கள் மேலும் அதுபோன்ற கேலிச்சித்திரங்களை
வரைந்து வெளியிட்டு வருகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தை கழிவறையில் வீசியெறிகிறார்கள்!
அதை தீயிட்டு கொளுத்துகிறார்கள்! இந்த இழிவான நடவடிக்கைகள் வாயிலாக நம்முடைய இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் மீதும் இறை வேதத்தின் மீதும் நாம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிடலாம்
என்று நம்புகிறார்கள்.
கிலாஃபா எனும் உண்மையான
தலைமை இல்லாவிடில் நாம் மிகநெருக்கடியான சூழலில் தள்ளப் பட்டுவிடுவோம் என்பதை முஸ்லிம்கள்
உணர்ந்துகொள்ளவேண்டும். நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபாதான் நம்முடைய கண்ணியத்தையும், சிறைபட்டுக் கிடக்கும்
நம்முடைய சகோதரர்களையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது நிலங்களையும் நமது மஸ்ஜிதுகளையும்
திரும்பவும் மீட்டுக்கொடுத்து இஸ்லாமிய மாண்புகளை அடித்தளமாகக் கொண்ட சமூகத்தை அமைப்பதற்கு
ஆற்றல்பெற்றது. இஸ்லாத்தின் கண்ணியத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்ணியத்தையும்
முஸ்லிம்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க அது போராடும்!
இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும்!
நமது இருப்பிடங்களில்
அமர்ந்துகொண்டு முஸ்லிம் உலகத்தின் இக்கட்டான நிலையை செய்திஊடகங்களில் பார்த்து துயரங்கொள்வதால்
மட்டும் எத்தகைய பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக எந்த நிலப்பரப்பில் நாம் இருந்தபோதும்
இணைந்து செயலாற்றி நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
மேற்கத்தியர்களின்
அச்சுறுத்தல்கள், நமது சகோதரர்களும் சகோதரிகளும் எதிர் கொண்டுள்ள இன்னல்கள் துயரங்கள், நமது இஸ்லாமிய நிலப்பரப்புகளின்
ஆக்கிரமிப்புகள், வாழ்வியலில் நாம் அடைந்துள்ள பின்னடைவு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும்
ஒரேயொரு தீர்வுதான் நமக்கு முன்பாக இருக்கிறது! ஆம்! ஒரே தலைமையின்கீழ் நாம் ஒன்றிணைய
வேண்டும்! மனித சமுதாயம் முழுமைக்கும் நீதி செலுத்துவதற்கு திறன்பெற்ற செயலாக்க அமைப்பின்பால்
நாம் ஒன்றிணையவேண்டும்! நமக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்தும் கீழ்நிலையிலிருந்தும்
விடுபட வேண்டுமென்றால் நாம் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்! ஆம்! கிலாஃபத்திற்காக
விடுக்கப்படும் அழைப்பில் நமது கரங்களை ஒன்றிணைக்க வேண்டும்!
எனவே நமது கட்டாயக்கடமை
என்னவென்றால்,
·நமது உம்மத்தை பாதிக்கும் விவகாரங்கள் பற்றிய அறிவையும் அது பற்றிய விழிப்புணர்வையும்
நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
·இந்த குறிக்கோளுக்கான ஹுகும்களையும் தீர்வுகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில்
நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
·அல்லாஹ் அருளியுள்ள ஷரீஆவை நிலைநாட்டுவதற்காகவும் முஸ்லிம்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும்
அழைப்புவிடுக்கும் உலக முஸ்லிம் சகோதரர்களுடன் நாம் இணைந்து நிற்கவேண்டும்.
·நமது சகோதர சகோதரிகளுக்காகவும் அல்லாஹ்வின் உதவிக்காகவும் நாம் துஆ செய்யவேண்டும்.
·இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துவதற்குரிய தீர்வு
என்பது நேர்வழிகாட்டப்பட்ட கிலாஃபா எனும் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதுதான் என்பதை
நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அது முஸ்லிம்களின் கேடயமாகும்! அதுவே தீனுடைய பாதுகாப்பாகும்!
அதுதான் இஸ்லாத்தின் சின்னமாகவும் அதன் அச்சாணியாகவும் விளங்குகிறது! இன்னும் முஸ்லிம்களின்
வாழ்வாகவும் அவர்களுடைய கண்ணியமாகவும் உடமையாகவும் விளங்குகிறது!
ஈமான்கொண்டவர்களே!
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு உங்களுக்கு வாழ்வளிக்கும் விஷயத்தை நோக்கி
அழைப்பு விடுத்தால் அதற்கு பதிலளியுங்கள்!
(அல்அன்ஃபால் : 24)
www.sindhanai.org