மக்கள் விரும்பினால் மட்டுமே பதவி விலகுவேன்: சிரிய அதிபர்

சிரியாவில் இருந்த மக்களை எல்லாம் கொன்று குவித்த பிறகு எந்த மக்களாக இந்த ஆட்சி மாற்றம்.
 
 
மக்கள் விரும்பினால் மட்டுமே பதவியை விட்டு விலகுவேன் என சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் தெரிவித்திருக்கிறார்.
 
 
 
பயங்கரவாதத்திற்குப் பயந்தே மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக அதிபர் அஸாத் கூறியிருக்கிறார்.

ரஷ்ய ஊடகம் ஒன்றிடம் பேசிய அஸாத், மேற்கு நாடுகள் அழுத்தம் தருகின்றன என்பதற்காக பதவி விலகமுடியாது என்றும் கூறியிருக்கிறார்.

பயங்கரவாதத்திலிருந்து தப்ப விரும்புவதாலயே பெரிய அளவில் மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறுகிறார்களே தவிர, சிரிய ஆட்சியின் காரணமாக அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.

டமாஸ்கஸில் இருக்கும் அஸாத் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதில் ரஷ்ய உதாரணத்தை மேலும் பல நாடுகள் பின்பற்ற வேண்டும் என ரஷ்ய அதிபர் கூறியதற்கு அடுத்த நாள், அஸாத் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா அஸாதிற்கு அளிக்கும் ஆதரவைத் தொடர்வதன் மூலம் சிரியாவில் நடக்கும் மோதல் நீடிக்கக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.
 
BBC News
 
 
பஷாருல் அஸாத் அரசை சேர்ந்த கோஷ்டிகள் உம்மத்திற்கெதிராக இழைத்த குற்றங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அவர்களின் கரங்களால் நசுக்கப்பட்டு வாழ்விழந்த இலட்சக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்படவேண்டும்.மேற்கத்திய அரசுகளின் கைப்பாவையான சிரிய தேசிய கூட்டமைப்பை ( Syrian National Council ) சிரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்படகூடாது.மேலும் அவர்களது புதிய சிரியாவுக்கான விசுவாசம்(loyalty) என்பதை நம்பவும் கூடாது.
 
உம்மத்துடைய பலமான தற்காப்பு என்பது,முஸ்லிம் உலகத்தை மறுபடியும் ஒன்றுபடுத்துவதில்தான் இருக்கிறது. முஸ்லிம் உலகத்தை விரைவாக ஒன்றுபடுத்தி விரிவாக்கம் செய்யும் பொழுது அந்நிய ஏகாதிபத்தியங்கள் தங்களை எதிர்க்கக்கூடிய பாரிய மனிதவளம், இயற்கைவளம் மற்றும் இராணுவ வலிமை கொண்ட பரந்த நிலப்பரப்பை சந்திக்க நேரிடும்.மேலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்கா,முஸ்லிம் உலகில் அதன் ஆட்சியாளர்கள் தனக்கு ஏற்படுத்திக்கொடுத்த ராணுவத்தளங்களை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது. இத்தகைய போக்குவரத்து இணைப்புகளை (supply lines) துண்டித்து விடுவதன் மூலம் அமெரிக்க வலிமையை தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
 
 “அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான்..பிறகு நபித்துவத்தின் வழியிலான   கிலாஃபா அரசு அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும். அதன் பிறகு அல்லாஹ் நாடும்போது அதை உயர்த்திவிடுவான் அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் நாடியவரை இருக்கும். அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபித்துவத்தின் வழியிலான  கிலாஃபா தோன்றும் என்றுகூறி அமைதிகாத்தார்கள்”                                                                   (முஸ்னத் அஹ்மத்)
 
 
யா அல்லாஹ்! உன்னிடமே வேண்டுகிறோம்!
 
கொலைகாரன் பஷாரும் அவனுக்கு ஷாமின் முஸ்லிம்களை கொல்ல உதவுபவர்களும் உன்னுடைய தண்டனைக்கு தகுதியானவர்களே… அவர்களை தண்டிப்பாயாக!  அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஏற்கெனவே உள்ள இவ்வுலகின் அழிவுகளை இறக்குவாயாக. உன்னிடமே கேட்கிறோம்! அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கு உதவுபவனே! உண்மையானவனே! ஞானம் மிக்கவனே! ஷாமில் நிலை பெற்றுவரும் புனித புரட்சிக்கு எதிராக மேற்குலகு செய்யும் சதிகளை அழித்து அருள் புரிவாயாக! எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனே! அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவனே! இந்த கொடுங்கோல் ஆட்சியை விரைவில் கவிழச்செய்து உம்மத்தின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டு வரும் இரண்டாவது தூய கிலாபத்தை ஏற்படுத்த அருள் புரியுமாறு உன்னிடமே உதவி  கேட்கிறோம்! ஆமீன்.