Oct 2, 2015

⚡⚡ நீதி கதை ⚡⚡

ஒரு கிராமத்தில்
ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்துவந்தது.
ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்
"எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்" என்றது.
 
ஓநாய் அலைந்து திரிந்தும் மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை கொண்டுவந்து கொடுத்தது.
அதை முகர்ந்து பார்த்த குட்டி
"இது பன்றிக்கறி எனக்கு வேண்டாம்.
மனிதமாமிசம்தான் வேண்டும் என்றது.

மீண்டும் அலைந்துதிரிந்த ஓநாய் மனிதமாமிசம் கிடைக்காததால் மாட்டிறைச்சியை கொண்டுவந்து கொடுத்தது.
அதை உண்ண மறுத்த குட்டி
மனித இறைச்சிக்காக அடம்பிடித்தது.

அப்போது ஓநாய் மனதில் ஒரு திட்டம் தோன்றியது.
அன்றிரவு அங்குள்ள பள்ளிவாசலில் பன்றிக் கறியையும்
கோவிலில் மாட்டிறைச்சியையும் வைத்துவிட்டு வந்துவிட்டது.

மறுநாள் காலை சென்று பார்க்கும்போது ஊர் முழுவதும் மனித உடல்கள் சிதறிகிடந்தன.

ஓநாயும் குட்டியும் ஆசைத்தீர மனிதமாமிசத்தை உண்டு தங்களது பசியை தீர்த்துகொண்டன.

இது எப்படி சாத்தியமாயிற்று என்று குட்டி தன் தாயிடம் வினவியது.?

அதற்கு ஓநாய்
"90% முட்டாள்கள் வாழும் தேசத்தில் எல்லாமே சாத்தியம்தான்"
என்று சொல்லி சிரித்தது.

நன்றி:
 Ex. cheif justice.
Markandeya katju

No comments:

Post a Comment