கலீபாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியம் என்ற விதத்தில் அவரது சொந்த விவகாரத்தின் சூழல் மாற்றம் அடையுமானால் உடனடியாக அவர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும், மேலும் சில சூழலில் அவர் சட்டரீதியாக கலீபாவாக பதவியில் தொடரமுடியாது என்றநிலை ஏற்பட்டாலும் அவர் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும், இந்த இரண்டு சூழலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால் முதல் விவகாரத்தில் அவர் பதவிநீக்கம் செய்யப்படும்போது அந்த விவகாரம் ஏற்பட்ட உடனேயே அவருக்கு கட்டுப்படும் கடமை முஸ்லிம்களை விட்டு நீங்கிவிடுகிறது. ஆனால் இரண்டாவது விவகாரத்தில் அவர் உடனேயே பதவிநீக்கம் செய்யப்பட்டாலும் பதவிநீக்கம் நிறைவேற்றப்படும்வரை அவருக்கு கட்டுப்படுவது கடமையாக இருக்கிறது, மூன்று விவகாரங்கள் அவரது சூழலை கடுமையாக பாதிக்கும்போது அதன் காரணமாக அவர் கலீபா பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.
முதலாவது விவகாரம்: இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்த்ததாக (مرتد ) ஆகிவிடுதல், இரண்டாவது விவகாரம்: புத்திசுவாதீனமற்ற நிலையை அடைந்த பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருத்தல்,மூன்றாவது விவகாரம்: கலீபாவை மிகைக்கக்கூடிய எதிரியால் அவர் பிடிக்கப்பட்டு அதிலிருந்து அவரை விடுவிக்க முடியாத நிலை ஏற்படுதல், இந்த மூன்று சூழல்களிலும் அவர் கலீபா பதவியிலிருந்து அகற்றப்படுவார், அவர் பதவிநீக்கம் செய்யப்படுவது பற்றிய முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் உடனே அவர் பதவிநீக்கம் செய்யப்படுவார்.
ஆகவே இத்தகைய சூழலில் அவருக்கு கட்டுப்படுவது கட்டாயமல்ல என்பதோடு இந்த மூன்று விவகாரங்களில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டதற்குரிய ஆதாரம் தென்படுமாயின் அவருடைய கட்டளையை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அதை செயல்படுத்த தேவையில்லை, இருந்தபோதிலும் அவரை பதவிநீக்கம் செய்வதற்கு காரணமாக உள்ள இந்த மூன்று விவகாரங்கள் ஏற்பட்டதற்குரிய ஆதாரங்கள் அநீதிசட்ட நீதிமன்றத்தில்(محكمة المظالم) நிரூபிக்கப்படவேண்டும், அநீதிசட்ட நீதிமன்றம் கலீபாவின் பதவிநீக்கம் பற்றி தீர்மானித்து அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டால் உடனேயே முஸ்லிம்கள் வேறொரு கலீபாவை நியமனம் செய்துகொள்ளவேண்டும்.
கீழ்கண்ட ஐந்து விவகாரங்கள் ஏற்படும்போது கலீபா பதவியிலிருந்து அவர் உடனடியாக விடுவிக்கப் படாவிட்டாலும் தொடர்ந்து அவர் பதவியில் நீடிக்கமுடியாது.
ஒன்று : வெளிப்படையான பாவச்செயல்களில் ஈடுபடுவதால் அவருடைய நீதிசெலுத்தும் தகுதிக்கு பங்கம் ஏற்படுதல்.
இரண்டு : அவர் பாலியல் மாற்றத்திற்கு உட்படுவதன் மூலம் பெண்ணாக மாறி இரட்டை பாலியல் பண்புகளை(bysexual) கொண்டவராக ஆகிவிடுதல்.
மூன்று : சில நேரங்களில் புத்திசுவாதீனமற்ற நிலைக்கு உட்படுதல், அவ்வப்போது இயல்புநிலைக்கு திரும்பினாலும் தொடர்ந்து பைத்தியம் பிடித்தநிலையில் இருத்தல், இந்நிலை ஏற்படும்போது அவருக்கு பாதுகாப்பாளரையோ அல்லது உதவியாளரையோ நியமிக்கமுடியாது ஏனெனில் கிலாபா ஒப்பந்தம் அவர் மீது தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தப் பட்டுள்ளது, எனவே இத்தகைய நிலை ஏற்படும்போது அவருக்கு பதிலாக மற்றொருவர் அவரது அதிகாரம் பெற்ற உதவியாளராக செயல்படுவதற்கு அனுமதியில்லை.
நான்கு : உடலில் ஊனம் ஏற்படுவதின் முலமோ அல்லது குணப்படுத்தமுடியாத நோய் ஏற்பட்டு செயல்படமுடியாத நிலைக்கு உட்படுவதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ அவர் கலீபாவின் கடமைகளை சரியாக நிறைவேற்ற திறனற்ற நிலைக்கு உட்படுதல், தீனுடைய விவகாரங்களிலும் முஸ்லிம்களின் நலன்களை பேணும் விவகாரத்திலும் கலீபா மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகளை நிறைவேற்றாமல் விட்டுவிடும் நிலை ஏற்படுதல், அதாவது நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணியை நிறைவேற்றாமல் இருத்தல், தற்போதைய கலீபாவை நீக்கிவிட்டு புதிய கலீபாவை நியமிப்பதன் மூலம்தான் இந்த பணியை நிறைவேற்றமுடியும் என்ற நிலை ஏற்படும்போது அவரை பதவிநீக்கம் செய்வது வாஜிபாகும்.
ஐந்து : கலீபா மீது மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் ஷரியா அடிப்படையில் அவர் முஸ்லிம்களின் விவகாரங்களை நடத்திச்செல்ல முடியாத நிலை ஏற்படுதல், இந்நிலை ஏற்படும்போது கலீபாவின் பொறுப்புகளை நிறைவேற்றும் ஆற்றலை அவர் சட்டரீதியாக இழந்துவிடுகிறார். எனவே நிச்சயமாக அவர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும், இரண்டு சூழல்களில் கலீபாவுக்கு இந்நிலை ஏற்படுகிறது.
முதலாவதாக : கலீபாவின் பரிவாரத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கலீபா மீது ஆதிக்கம் செலுத்தி அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை ஏற்படுதல், இவ்வாறு ஏற்படும்போது அவர்கள் தங்கள் விருப்பப்படி விவகாரங்களை நடத்திச் செல்வதோடு கலீபாவை வற்புறுத்தி தங்கள் அபிப்ராயத்திற்கு ஒப்புக்கொள்ள வைப்பதன் மூலம் அவருடைய சொந்த அபிப்ராயத்தை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்ராயத்திற்கு செயல்படக்கூடும், இத்தகைய நிலை ஏற்படும்போது சூழல் ஆய்வுசெய்யப்படவேண்டும். மற்றவர்களின் ஆதிக்கத்திலிருந்து கலீபா மீட்சிபெறக்கூடும் என்ற நிலை இருந்தால் அதிலிருந்து மீள்வதற்கு அவருக்கு குறுகிய அவகாசம் கொடுக்கப்படவேண்டும். அதிலிருந்து அவர் மீண்டுவிட்டால் பிறகு அவர்மீது ஏற்பட்ட குறைபாடு நீங்கிவிடும் அவ்வாறு அவர் மீளவில்லை என்றால் அவரை உடனே பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்.
இரண்டாவதாக : ஆற்றல்மிக்க எதிரி ஒருவரால் கலீபா பிடிக்கப்பட்டுவிடுதல், இத்தகைய நிலை ஏற்படும்போது சூழல்கள் ஆய்வுசெய்யப்படவேண்டும், கலீபா அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அவருக்கு அவகாசம் அளிக்கப்படவேண்டும். எதிரியின் பிடியிலிருந்து அவர் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை இருக்குமாயின் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்துவிடவேண்டும்.
மேற்கண்ட ஐந்து விவகாரங்களில் எந்தவொன்று ஏற்பட்டாலும் கலீபா பதவிநீக்கம் செய்யப்படுவார், குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் ஆதாரத்துடன் அநீதிசட்ட நீதிமன்றத்தில்(محكمة المظالم) சமர்ப்பிக்கும் பட்சத்தில் புதிய கலீபாவை மூன்று நாட்களுக்குள் முஸ்லிம்கள் நியமிப்பதற்கு ஏதுவாக நீதிமன்றம் அவர்மீது செய்யப்பட்ட கிலாபா ஒப்பந்தத்தை ரத்துசெய்து அவரை பதவிநீக்கம் செய்ய தீர்மானிக்கவேண்டும்.

sources warmcall.blogspot.com