Mar 22, 2010

வாருங்கள் மாற்றலாம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹீ


அழிவின் விளிம்பில் மனித குலம் நிற்கிறது. மனிதர்களை மனிதர்களே கொன்று வயிறு நிரப்புகிறார்கள். ஆளும் வர்க்கம் மனிதனின் இரத்தத்தை உருஞ்சி தனது அரச இயந்திரத்தை இயக்குகிறது. அஃறினைகள் கூடச் செய்யத்தயங்கும் அசிங்கங்களை மனிதன் அன்றாடம் செய்து வருகின்றான். நாசங்களையெல்லாம் நாகரிகம் என்கிறார்கள். சத்தியத்தின் வாய்களை அசத்தியத்தின் கரங்கள் கிழித்து விடுகின்றன. நீதியின் நிழல் பூமியின் ஒரு அங்குலத்திலேனும் நிலைபெறாமல் நகர்ந்து விடுகிறது. அழிவின் பாதையை அகலத்திறந்து ‘சுதந்திரம்’ என அழைக்கிறார்கள். ஒரு கண்டத்தின் வருவாயை ஒரு கம்பனியின் முதலாளி விழுங்கி ஏப்பம் விடுகிறான். விலங்கிடுபவர்களே ‘விடுதலை’ பற்றி பேசுகிறார்கள். இதுதான் இன்றைய (அ)நாகரிக உலகம். இது தான் மானிடன் இயற்றிய சட்டத்தின் (அவ)லட்சணம்.

அப்படியானால் அந்தோ கதி! மனித குலத்திற்கு தீர்வில்லையா? சத்தியத்திற்கு வாய்ப்பில்லையா? மானிடருக்கு விடுதலை கிட்டாதா? கிட்டும். நிச்சயமாக கிட்டும். இவ்வுலகில் மாத்திரமல்ல; மறுமையிலும் கிட்டும். ஆனால் அதற்கொரு விலை இருக்கிறது. அதுதான் மனிதன் மீதான மனிதனின் ஆட்சியை இல்லாதொழித்து மனிதன் மீதான இறைவனின் ஆட்சியை நிலை நிறுத்துவது. அந்த விலையை செலுத்த நீங்கள் தயாரா? வாருங்கள் அந்த இலக்கை நோக்கி ‘விடுதலை’ உங்களை அழைத்து செல்லும் இன்ஷா அல்லாஹ்.

sources from warmcall.blogspot.com

No comments:

Post a Comment