May 21, 2010

உலகில் கிலாபத் ஏற்படுத்துவதை தடை செய்வதுதான் ஆப்கான் போரின் நோக்கம்




பாகிஸ்தான் இராணுவ தளபதியுடன் றிச்சர்ட்

போரின் உண்மையான நோக்கத்தை உறுதிப் படுத்தியுள்ளார்:

கடந்த வருடம் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட் டன்னத்ட் General Richard Dannatt – ஆப்கான மீதான போர் கிலாபத்- இஸ்லாமிய ஆட்சிமுறை – மீண்டும் ஏற்படுத்தப்படாமல் தடுக்கும் போர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் இவர் BBC’s Today program இக்கு கடந்த 14ஆம் திகதி வழங்கிய செவ்வியில் ‘ இஸ்லாமிய திட்டமுறை Islamist agenda ஒன்று இருக்கிறது அதை நாம் தென் ஆப்கானிஸ்தானில் அல்லது ஆப்கானிஸ்தானில் அல்லது தெற்கு அசியாவில் அவற்றை எதிர்க்காவிட்டால் , அதன் செல்வாக்கு வெளிப்டையாக வளரும் அது நன்றாக வளரக்கூடியது அது தெற்கு அசியாவில் இருந்து மத்திய கிழக்கு , வட ஆபிரிக்கா நோக்கி 14 ஆம் , 15 ஆம் நூற்றாண்டு கிலாபத்தின் பதிவுகளை கொண்டிடு நகர்வதை நாம் காணமுடியும்’ என்று கூறியுள்ளார்

இந்த ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட் டன்னத்ட் General Richard Dannatt பிரிட்டிஷ் புதிய பிரதமரான கமிரோனின் – Prime Minister Cameron-தற்போதைய ஆலோசகர் என்பதும் இஸ்லாமிய கிலாபத் முறைமையை கடுமையாக எதிர்ப்பவர் என்பதும் குறிபிடதக்கது. இவர் BBC’s Today program க்கு வழங்கிய செவ்வியை கேட்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

Sources Ourummah.org