Jun 27, 2010

பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் நூல் ஆசிரியருமான Jeremy Scahill


M.ரிஸ்னி முஹம்மட்

பிளக் வேட்டர் -Blackwater Worldwide- பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் -Blackwater: The Rise of the World’s Most Powerful Mercenary Army -என்ற மிகவும் பிரபல்யமான நூலை எழுதியவருமான ஜெர்மி இஸ்காஹில் -Jeremy Scahill- வழகியுள்ள பேட்டி

இவரின் பேட்டியை பார்பதற்கு முன்னர் இங்கு தரப்படும் Blackwater Worldwide சமந்தமான விபரங்களை படித்து விட்டு பார்க்கவும் விளங்குவதற்கு இலகுவாக அமையும்

பிளக் வேட்டர் 1997 இல் எரிக் பிரின்ஸ் – Erik Prince- என்பவனால் உருவாக்கபட்ட அமெரிக்க தனியார் இராணுவ கம்பனி. இது Xe Services LLC என்றும் அழைக்கபட்டது இந்த நிறுவனம் 2007 இல் Blackwater Worldwide என்று பெயர்மாற்றம் பெற்றது இந்த தனியார் இராணுவ அமைப்பு ஒரு வருடத்துக்கு 400,00 உறுபினர்களை பயிற்சி வித்து வருகின்றது. இது இரண்டு பிரதான பிரிவாக இயங்கி வருகின்றது ஒன்று அமெரிக்க தேசிய பாதுகாப்புகான வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு இரண்டாவாது அமெரிக்க தேசிய பாதுகாப்புகான இருண்ட அல்லது இரகசிய பிரிவு இந்த அமைப்பின் வெளிப்பாட்டையான நடவடிக்கை பிரிவு பொதுவாக அமெரிக்காவிலும் அமெரிக்கா தளம் அமைத்துள்ள 75 நாடுகளிலும் செயல் படுகின்றது இருண்ட அல்லது இரகசிய பிரிவு குறிப்பாக ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , யமன் போன்ற நாடுகளில் இயங்கு கின்றது இந்த இருண்ட அல்லது இரகசிய பிரிவு அமெரிக்க CIA உளவு அமைப்புடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டுள்ளது ,இந்த பிரிவு கொலை , கடத்தல் , அழிவு நாசவேலை போன்றவற்றை செய்து வருகின்றது இதை செய்வதற்கு அமெரிக்க ஒபாமா நிர்வாகம் முழு அனுமதி வழங்கிவருகின்றது என்று குற்ற சாட்டுகள் உள்ளன.விரிவாக பார்க்க

இந்த அமைப்பு ஈராக்கில் நடத்திய மக்களால் அறியப்பட்ட படுகொலைகள் காரணமாக ஈராக்கிள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனிலும் இரகியமாக இயங்கி வருவதாக ஈராக் போராளிகள் தெரிவிக்கின்றனர் இந்த Blackwater Worldwideதான் ஈராக்கில் ஷியா சுன்னாஹ் என்ற முரண்பாட்டை தினமும் ஓட்டப்படும் இரத்த ஆறாக விரிவாக்கினார்கள் என்ற குற்றசாட்டு மிக பலமாகவுள்ளது இந்த ஷியா சுன்னாஹ் என்ற பலமான இரத்த முரண்பாட்டின் பின்னர் இஸ்லாமிய போராளிகளை இலகுவாக அமெரிக்க ஆக்கிரமிப்பு படை ஒடுக்க வழி கிடைத்தது தற்போது அந்த வேலையை ஆப்கானிஸ்தானிலும் , பாகிஸ்தானிலும் , யமனிலும் இந்த அமைப்பு செய்து வருகின்றது

2007 ஆண்டு ஈராக்கில் நிசூர் சதுக்கம் என்ற இடத்தில் பிளக் வேட்டர் நடத்திய கொலை வெறியாட்டம் ஒரு வழக்காக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் பதிவாகியது எனிலும் போதுமான ஆதாரங்கள் இருந்தும் வழக்கின் நீதிபதி கடந்த வருடம் பிளக் வேட்டரை வழக்கில் இருந்து விடுவித்தார் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தத்தால் தற்போது இந்த வழக்கு மீட்டும் நீதிமன்றம் வளரவுள்ளது அமெரிக்க நீதித்துறை இந்த வழக்கை நடாத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பால் சிக்கலில் மாட்டியுள்ள எரிக் பிரின்ஸ்- Erik Prince- என்ற அமெரிக்க தனியார் பயங்கரவாத – Blackwater Worldwide- அமைப்பின் தலைவன் துபாய்க்கு சென்றுவிட தீர்மானிதுள்ளதாக தெரிவிக்க படுகின்றது துபாய் சென்றால் இவனை துபாய் அரசால் திரும்பவும் அமெரிக்கா அனுப்பதேவையான ‘தேடப்படுவோர் பரிமாற்ற ஒப்பந்தம்’ எதுவும் இல்லை என்று தெரிவிக்க படுகின்றது

இந்த விடையங்கள் பற்றி சுதந்திர ஊடகவிலாளரும் Blackwater: The Rise of the World’s Most Powerful Mercenary Army என்ற மிகவும் பிரபல்யமான நூலை எழுதியவருமான ஜெர்மி இஸ்காஹில் -Jeremy Scahill- வழகியுள்ள பேட்டியை பார்க்கவும்.

sources from ourummah.org