Sep 9, 2010

இறை சிந்தனை + இஸ்லாமிய எழுச்சி = இஸ்லாமிய இயக்கங்கள்- பாகம்-1

 M.ஷாமில் முஹம்மட்

இன்று மீண்டும் இஸ்லாம் உலகில் எழுச்சி பெரும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம் , இந்த எழுச்சி உலகில் எதிர் வினை ஒன்றின் எதிர் விளைவாக மட்டும் தோன்றவில்லை, இறை மறுப்பாளர்களின் இறை நிராகரிப்பு தொழில்பாடுகள், ஒரு இறைவனை விசுவாசிகின்ர மனிதர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் என்பன, ஒடுக்கப்பட்டும் சமுகம் எதிர் மறையாக தொழில் படும் தமக்குள் விரைவாக ஒன்றிணையும் . இந்த ஒன்றிணைப்பு ஒரு எதிர் தொழில் பாட்டை உருவாக்கி விடும் என்ற அணுகு முறைகளின் ஊடாக மட்டும் உலகளாவிய இஸ்லாமிய எழுச்யை அணுக முடியாது.

இதனுடன் முற்றிலும் மனித வளர்ச்சியுடன் இயல்பாக இருக்கும் மும்முனை முனைப்பு தான் உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியை இயக்குகிறது இதன் முதல் இயக்கியாக இறை சிந்தனை அமைகிறது இறைவன் பற்றிய மனிதனிடம் இருக்கும் இயற்கையான உணர்வின் வெளிப்பாடு இன்றைய உலகளாவிய இஸ்லாமிய எழுச்சி என்றுதான் குறிபிட வேண்டும் மனிதனுக்கு இறைவன் பற்றிய சிந்தனை இருமுனைகளில் உருவாகின்றது ஒன்று இறைவன் பற்றிய சிந்தனை இது மனிதனின் பிறப்பியல் இயல்பூக்கதுடன் தொடர்பு படுகிறது மனித உள்ளத்தில் இறைவன் இருக்கின்றான் என்ற இயல்பூக்கம் குறித்து பிரபல்யமான தத்துவ அறிஞர் ‘டெகாட்’ இவ்வாறு கூறகின்றார். “என்னில் குறைபாடுள்ளது என்பதை நான் உணரும் அதேவேளை பூரணத்துவமிக்க ஒன்று உள்ளது என்பதை நான் உணர்கிறேன். பூரணத்துவத்தின் அனைத்துப் பண்புகளையும் கொண்ட இறைவனே இவ்வுணர்வை என்னில் வைத்துள்ளான் என நம்பாதிருக்க முடியவில்லை”.வரலாற்றுத் தொடராக ஏதோவொரு வகையில் மனித உள்ளம் இறைவன்பால் நாட்டம் கொண்டுள்ளது. “தத்துவமோ, அறிவியலோ, கலைகளோ காணப்படாத மனிதக்; கூட்டங்கள் வாழ்ந்துள்ளன என்றால் நம்ப முடியும். ஆனால் மார்க்கமே இன்றி மனிதன் வாழ்ந்தான் என்றால் அதை ஒருக்காலும் ஏற்கமுடியாது” என பிரான்ஸியத் தத்துவ ஞானி ஜெபர்ஸன் கூறுகின்றார். அதேபோன்று பழம் கிரேக்க வரலாற்றாசிரியர் புலூடாக் மனித இயல்பை இவ்வாறு விளக்ககின்றார். “வரலாற்றில் கோட்டைகள், பாடசாலைகள், மாடமாளிகைகள் அற்ற நகரங்கள் காணப்பட்டன. ஆனால் மத வழிபாட்டுத் தளங்கள் இல்லாத நகரங்கள் ஒரு போதும் இருக்கவில்லை”. இது இடையில் ஏற்படுத்த படும் சிந்தனையல்ல ஒரு பறவை தனது கூட்டை எப்படி கட்டவேண்டும் என்ற உணர்வு எப்படி பிறப்பியல் இயல்பூக்கதுடன் தொடர்பு படுகிறதோ அதே போன்று இறைவன் பற்றிய சிந்தனை மனிதனின் பிறப்பியல் இயல்பூக்கமாகிறது.

இரண்டாவது மனிதனுக்கு மட்டும் இருக்கும் ஆறாவது அறிவு நம் மூளைக்குள் சிக்காத அல்லது அறிந்து கொள்ளமுடியாதவற்றால் ஏற்படும் வியப்பு இறைவனின் பற்றிய சிந்தனையை தூண்டுகிறது சூரியன் ஏன் உதிக்க வேண்டும் பூமி ஏன் சுற்றவேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத போது. மனித புலன்களுக்கு எல்லை உண்டு, எல்லைக்கு அப்பாற்பட்டவற்றின் முழுக்காரணத்தையும் அறிந்து கொள்ளவே முடியாது. ஓரளவுதான் விஞ்ஞான உதவியுடன் புலன்களின் திறனில் பலத்தை கூட்டி பூமிக்கு அப்பால் உள்ளவற்றை அறிவியல் சாதங்கள் போன்றவற்றின் உதவியுடன் பார்க்கிறோம், கேட்கிறோம்.

புலன்கள் -கண், காது, முக்கு, உணர்வு- எல்லையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதனால் பிரபஞ்சம் இயங்கவதற்கான நோக்கம் அறிய முடியாத ஒன்று. நோக்கத்திற்கான தேடல் தொடர்ந்து கொண்டு இருக்கும் போது . மனித மனங்களில் இறைவன் பற்றிய உணர்வு வலுவடைகிறது .இதக்கு காரணம் மனிதனின் இயலாமையும் ஆறாவது அறிவும் .

பிரபஞ்சத்தை பின்னியுள்ள இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டவையா ? இல்லையா என்ற கேள்விக்கு விடை காணமுடியாத மனிதனின் ஆறாவது அறிவு இறைவனிடம் சரண் அடைகிறது கணக்கு அறிவே இல்லாத கற்காலத்திலும் 5 + 5 = 10 ஆகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம்இல்லை , கண்டுபிடிக்கவில்லை என்பதால் கற்காலத்தில் 5 + 5 = 12 என்றிருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அது போல் இறைவனை காணமுடியவில்லை என்பதால் அல்லாஹ் இல்லை என்ற முடிவுக்கு மனிதனின் ஆறாவது அறிவால் வரமுடியாது . எந்த ஒரு இயற்பியல் , வேதியல் விதியும் ஏற்படுத்தப்பட்டவை தான் . அதைப் பற்றி ஆராய்சி செய்யும் போதுதான் அதைப்பற்றி அறிந்து கொள்கிறோம். எனவே வேதியல் , இயற்பியல் வினைகள் இதற்கு முன்பு இவ்வாறு இல்லை என்று சொல்ல முடியாது, அறிந்தபிறகே இப்பொழுதுதான் கண்டுகொண்டோம் என்று சொல்லவதே சரி.அதே போன்றுதான் இறை இருப்பு சிந்தனை மனிதனின் ஆறாவது அறிவால் மறுக்கமுடியாத சிந்தனையாகிறது.



தொடரும்……

soures ourummah.org