‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை
l

‘மாற்றம் தேடும் புரட்சி’
.ஹாரூன் மூஸா.02-02-2011
.ஹாரூன் மூஸா.02-02-2011
நாடுகளை மாற்றினோம்.
நாடாளுமன்றங்களை மாற்றினோம்.
நபர்களை மாற்றினோம்;.
நாமங்களையும் மாற்றினோம்.
நாடாளுமன்றங்களை மாற்றினோம்.
நபர்களை மாற்றினோம்;.
நாமங்களையும் மாற்றினோம்.
நம் நிலை மாறியதா?
மதங்களை மறைத்தோம்.
சர்வாதிகாரத்தை சரித்தோம்.
கம்யூனிஸத்தைக் கவிழ்த்தோம்.
மன்னராட்சியை அழித்தோம்.
ஒரு கட்சியாட்சியையும் ஒழித்தோம்.
சர்வாதிகாரத்தை சரித்தோம்.
கம்யூனிஸத்தைக் கவிழ்த்தோம்.
மன்னராட்சியை அழித்தோம்.
ஒரு கட்சியாட்சியையும் ஒழித்தோம்.
நம் நிலை மாறியதா?
சுதந்திரங்கள் பெற்றோம்.
சுயாட்சிகள் புரிந்தோம்.
மாடிகள் அமைத்தோம்.
கோடிகள் குவித்தோம்.
சுயாட்சிகள் புரிந்தோம்.
மாடிகள் அமைத்தோம்.
கோடிகள் குவித்தோம்.
நம் நிலை மாறியதா?
மாற்றம் நாடி..
புரட்சிகள் புரிந்தோம்.
புரட்சிகள் புரிந்தோம்.
நம் நிலை மாறியதா?
புரட்சியில்லாத பறவை உலகின்;
சுதந்திரம் கிடைக்கவுமில்லை.
புரட்சியில்லாத விளங்குகளின் தேசத்தின்
புழகாங்கிதம் கிடைக்கவுமில்லை.
புரட்சியில்லாத தாவர வர்க்கத்தின்
நிம்மதி கிடைக்கவுமில்லை.
புரட்சியில்லாத விண்ணுலகின்
பாதுகாப்பு கிடைக்கவுமில்லை.
சுதந்திரம் கிடைக்கவுமில்லை.
புரட்சியில்லாத விளங்குகளின் தேசத்தின்
புழகாங்கிதம் கிடைக்கவுமில்லை.
புரட்சியில்லாத தாவர வர்க்கத்தின்
நிம்மதி கிடைக்கவுமில்லை.
புரட்சியில்லாத விண்ணுலகின்
பாதுகாப்பு கிடைக்கவுமில்லை.
தனிப்பட்ட வாழ்வில் தார்மீகம் இல்லை.
தாம்பத்ய வாழ்விலே திருப்தி யில்லை.
குடும்ப வாழ்விலே குதூகலம் இல்லை.
குடிமக்கள் வாழ்விலே ஈடேற்றம் இல்லை.
சமூகத்திலே சௌபாக்கியம் இல்லை.
பொருளியலில் பொழிப்பும் இல்லை
அரசியலில் அழகேயில்லை.
தாம்பத்ய வாழ்விலே திருப்தி யில்லை.
குடும்ப வாழ்விலே குதூகலம் இல்லை.
குடிமக்கள் வாழ்விலே ஈடேற்றம் இல்லை.
சமூகத்திலே சௌபாக்கியம் இல்லை.
பொருளியலில் பொழிப்பும் இல்லை
அரசியலில் அழகேயில்லை.
காலத்துக்குக் காலம் மாற்றம் நாடி
புரட்சிகள் புரிந்தோம்.
நம் நிலை மாறியதா?
புரட்சிகள் புரிந்தோம்.
நம் நிலை மாறியதா?
பறவைகள்.. இயல்பை மாற்றவில்லை.
விளங்குகள்.. இயற்கையை மாற்றவில்லை.
தாவரங்கள்.. படைத்தவனை மாற்றவில்லை.
நாங்களோ…… அனைத்தையும் மாற்றினோம்.
விளங்குகள்.. இயற்கையை மாற்றவில்லை.
தாவரங்கள்.. படைத்தவனை மாற்றவில்லை.
நாங்களோ…… அனைத்தையும் மாற்றினோம்.
மனிதா!…….
நிரந்தர மாற்றம் என்பது..
மனோ இச்சையின் மற்றுமோர் வடிவமல்ல.
நிரந்தர தீர்வு என்பது..
மேற்கு திணிக்கும் மற்றுமோர் தீர்மானமல்ல.
நிரந்தர தீர்வு என்பது..
மேற்கு திணிக்கும் மற்றுமோர் தீர்மானமல்ல.
நிரந்தர மாற்றமா?
தூய அல்லாஹ்வின் வேதம் என்போமே..
நிரந்தர தீர்வா?
தூதர் முஹம்மதின் வாழ்வு என்போமே..
நிரந்தர தீர்வா?
தூதர் முஹம்மதின் வாழ்வு என்போமே..
மனிதா!
உனது உடம்பில் சகதி பூசாத நீ..
உனது வாழ்வில் மனோ இச்சை சேர்க்கலாமா?
உனது உணவில் விஷம் கலக்காத நீ..
உனது வாழ்வில் மனோ இச்சை சேர்க்கலாமா?
உனது உணவில் விஷம் கலக்காத நீ..
உனது புரட்சியில் ஜனனாயகம் சேர்க்கலாமா?
வழிகெட்ட மனிதனின் வழிமுறைகளை விட்டும்
வல்லவன் அல்லாஹ்வின் வழியில் நடப்போமே..
சத்திய கிலாபா ஆட்சியை நட்டி
நிலையான புரட்சியை இன்றே செய்வோமே..
சத்திய கிலாபா ஆட்சியை நட்டி
நிலையான புரட்சியை இன்றே செய்வோமே..
முற்றும்
Sources: OurUmmah