Mar 20, 2011

உலகின் பொருளாதார நெருக்கடியும் இஸ்லாமிய பொருளாதாரமும் - இறுதிப்பகுதி

இஸ்லாமிய பொருளாதாரம்தான் உண்மையானது இப்போது உலகில் காணப்படும் நிதிச்சந்தைகள் அனைத்தும் தவறானவை :

இஸ்லாமிய பொருளாதாரம் வளங்களைப் பெறுக்குவதை அடிப்படையாகக் கொண்டது, அதில் முதலீடு செய்வதிலும் நிர்வாகம்செய்வதிலும் வியாபாரகூட்டு(Partnership) வைத்துக்கொள்ள அனுமதியுண்டு, மேலும் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் உண்மையான பொருளாதாரமே தவிர வட்டியை அடிப்படையாக கொண்டதல்ல, முதலீட்டாளர்களின் நிதியை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படும் இரட்டைபொருளாதாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை, வேலைவாய்ப்பு. லாபம். மேலாண்மை. வளங்களைப் பயன்படுத்துதல். உற்பத்தி. சொத்துக்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் ஒருசிலர் மடடும் ஈடுபட்டிருந்தாலும் பொருளாதார நடவடிக்கைகளில் பங்குகொள்ளும் அனைவரையும் அவர் முதலீடுசெய்பவராக இருந்தாலும் அல்லது நிர்வாகம்செய்பவராக இருந்தாலும் அவர்கள் அனைவர்மீதும் இஸ்லாம் கவனம்செலுத்துகிறது, இன்றைய முதலாளித்தவ பொருளாதாரத்தில் உருவாக்கப்படும் பெரும்சொத்துக்கள் அனைத்தும் ஒருகுறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் குவிந்துகிடக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் உண்மையான பொருளாதாரத்தில் அதில் பங்குகொண்டிருக்கும் அனைத்து பிரிவினரிடமும் சொத்துக்கள் சுற்றிவந்துகொண்டிருக்கும்,இன்றைக்கு பொருளாதாரத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிதிச்சந்தையின் அனைத்து அமைப்புகளையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை, இத்தகைய அமைப்புகளில் உள்ள நிறுவனங்களின் பங்குப்பத்திரங்களை வைத்திருப்பவர் நிறுவனநடவடிக்கையில் பங்குகொள்ளாமல் அதில் நடக்கும் விவகாரங்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லாமல் தாங்கள் முதலீடுசெய்துள்ள பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளாமல் பங்குகளை வாங்குவதிலும் அவற்றை மாற்றிக்கொள்வதிலும் ஈடுபடுகிறார்கள், ஆனால் இஸ்லாத்தில் முதலீடுசெய்பவரின் உரிமை என்பது நிறுவனநடவடிக்கையில் பங்குகொண்டாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு லாபநஷ்டத்தில் பங்கு இருக்கிறது, முதலீடுசெய்பவர் விரும்பினால் நிறுவனநடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொள்ளலாம். ஆனால் முதலாளித்துவ நிறுவனங்களில் பங்குப்பத்திரம் மூலம் முதலீடுசெய்பவர்கள் நிறுவன நடவடிக்கைகளில் எந்தவிதமான தலையீடும் செய்யமுடியாது, நிறுவனநடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொள்ளாத நிலையினால் பெரும்பாலும் யூகவணிகமே (Speculation) நடைபெறுகின்றன, பொருட்களை நேரடியாக வாங்கி நேரடியாக விற்கும் உண்மையான பொருளாதாரத்திலிருந்து இன்றைய நிதிச்சந்தை முற்றிலும் மாறுபட்டது, முதலாளித்தவ பொருளாதாரக்கொள்கையின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் உலக நிதிச்சந்தையின் மொத்தமதிப்பு 51 டிரில்லியன் டாலராகும், ஆனால் டிரைவேட்டிவ் சந்தையின்(Derivative markets) மொத்தமதிப்பு 480 டிரில்லியன் டாலராகும், இந்ததொகை அமெரிக்காவின் பொருளாதாரத்தைவிட முப்பதுமடங்கு அதிகமாகும். உலகபொருளாதாரத்தைவிட பன்னிரண்டுமடங்கு அதிகமாகும்!
PLC எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் (public limited companies) பங்குச்சந்தை இஸ்லாத்தின் அடிப்படையில் ஹராம் என்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன, அவற்றில் பிரதான காரணம் முதலீடுசெய்பவர்கள் நிறுவனநடவடிக்கைகளிலும் லாபநஷ்டத்திலும் எந்தவித பொறுப்பும் ஏற்காதது. அதாவது ஒருவேளை நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது என்றால் பங்குப்பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்துள்ளவர்களிடமிருந்து எந்தவிதமான நஷ்டயீடோ அல்லது ஈட்டுத்தொகையோ கோரமுடியாது, அந்தமுதலீட்டாளர் எவ்வளவு சொத்துக்களைப் பெற்றவராக இருந்தாலும் சரியே! இது ஒவ்வொரு அம்சத்திலும் ஷரியாவிற்கு முரண்பாடானதாகும், ஆனால் கடன் கொடுத்தவரைப் பொறுத்தவரை அவருக்கு முழுத்தொகையையும் பட்டுவாடா செய்யவேண்டும் என்பதையும் அதில் எந்தவிதமான தள்ளுபடியும் செய்யமுடியாது என்பதையும் ஷரியா கட்டாயம் ஆக்கியிருக்கிறது,
அபூஹ{ரைரா(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

மற்றவர்களிடமிருந்து வாங்கும் கடன்தொகையை நிச்சயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குகிறவர்களுடைய கடனை அல்லாஹ்வே திருப்பிக்கொடுப்பான், ஆனால் மற்றவர்களிடமிருந்து கடன் பெறும்போது விரயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குகிறவர்களை அல்லாஹ் விரயம்b செய்வான்,அபூஹ{ரைரா(ரளி) அறிவித்ததாக அஹமதில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

உரிமை பெற்றுள்ளவர்களின் உரிமைகளை நீங்கள் மறுமைநாளில் திருப்பித்தந்துவிடுவீர்கள், கொம்பு இல்லாத பெண்ஆடு கொம்புள்ள பெண்ஆட்டை முட்டித்தள்ளிவிடும்,
ஆகவே வாழ்வியல் விவகாரங்களில் ஒருவருக்குரிய உரிமைகளை முழுமையாக கொடுக்கவேண்டியது கட்டாயக்கடமை என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) உறுதியாக கூறியுள்ளார்கள், மேலும் அவ்வாறு செய்யாதவர் அதை மறுமையில் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள், மக்களுக்கு உரிமையானவற்றை எடுத்துஉண்ணும் மனிதர்களுக்கு இது மிகப்பெரிய எச்சரிக்கையாகும்,
இஸ்லாத்தைப் பொறுத்தவரை தனித்தன்மை உடைய நிறுவனசட்ட விதிமுறைகளை கொண்டிருக்கிறது, அவற்றில் நிறுவனத்திற்கும் அதன் முதலீட்டாளர்களுக்கும் இடையிலுள்ள உண்மையான வியாபாரக்கூட்டில் (partnership) ஐந்துவகையான அமைப்புகள் இருக்கின்றன, அவையாவன. 

1,அல்இனான்(Al Inaan)
2,அல்அப்தான்(Al abdan) 
3, அல்முதாரபா(al mudharabah)
4,அல்உஜஜ__(al wujooh)
5,அல்மு*பவாதா(al mufawadha) ஆகியவையாகும்,

1) அல்இனான்(al inan) என்ற நிறுவனஅமைப்பில் (al inan) இருநபர்கள் ஒன்றுசேர்ந்து முதலீடுசெய்து நிர்வாகம் செய்வார்கள் இருவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,

2) அல்அப்தான்(al abdan) என்ற நிறுவனஅமைப்பில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் முதலீடுசெய்யாமல் உடல்ரீதியாகவோ அல்லது அறிவுரீதியாகவோ உழைப்புசெய்வதன் மூலம் வியாபாரகூட்டில் பங்குகொள்வார்கள், அதேபோல லாபநஷ்டத்திலும் பங்குகொள்வார்கள்,

3) அல்முதாரபா(al mudharabah) என்ற நிறுவனஅமைப்பில் ஒருநபர் முதலீடுசெய்வார் மற்றொருநபர் உழைப்புசெய்வார். முதலீடுசெய்பவர் எந்தவித உழைப்பும் செய்யமாட்டார். இருவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,

4) அல்உஜஜ(al wujooh) என்ற நிறுவனஅமைப்பில் ஒருவர் முதலீடுசெய்வார் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களோ உழைப்புசெய்வார்கள், அனைவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,

5) அல்முபவாதா(al mufawadha) என்ற நிறுவனஅமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் பலநபர்கள் முதலீடுசெய்யாமல் வியாபாரகூட்டில் பங்குகொள்வார்கள், அவர்கள் தொழில்நுட்ப அறிவுவுடையவர்களாகவோ அல்லது தொழில்த்திறன் கொண்டவர்களாகவோ இருப்பார்கள், அனைவரும் லாபநஷ்டத்தில் பங்குகொள்வார்கள்,

அபூஹ{ரைரா(ரளி) அறிவித்ததாக அத்தரகந்தி பதிவுசெய்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.
எல்லாம்வல்ல அல்லாஹ் கூறுகிறான் . தனது கூட்டாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதவரை இருகூட்டாளிகளுக்கு மத்தியில் மூன்றாவதாக நான் இருக்கிறேன், அவர்களில் ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்தால் நான் அவர்களைவிட்டு விலகிவிடுவேன்,
ஏகபோகவர்த்தக உரிமையை இஸ்லாம் எதிர்க்கிறது வியாபாரத்தில் போட்டி இருப்பதை வரவேற்கிறது :

PLC பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு இன்று பெரியஅளவில் சொத்துக்கள் குவிந்துகிடக்கின்றன. அவற்றில் சிலநிறுவனங்கள் வைத்திருக்கும் சொத்து சிலநாடுகளின் மொத்த சொத்துக்களைவிட பெரியது, இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் இவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பொதுமக்களிடம் பங்குப்பத்திரங்களை(share certificates) விற்பதின்மூலமாக கணிசமான சொத்துக்களை குவிக்கும் PLC நிறுவனங்கள் இருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது, மைக்ரோஸô*ப்ட் (microsoft) கோகோகோலா (coca cola) பெப்ஸி (pepsi) போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ஏகபோக வர்த்தகஉரிமை (monopolies) பெற்ற நிறுவனங்களாகவும். இருபோக வர்த்தகஉரிமை (duopolies) பெற்ற நிறுவனங்களாகவும். பெரும்போக வர்த்தகஉரிமை (oligopolies)பெற்ற நிறுவனங்களாகவும் இருந்து கொண்டு உலகசந்தையில் (world markets) ஆதிக்கம் செலுத்திவருகின்றன, இத்தகைய பொருளாதார ஆதிக்கங்கள் அனுமதிக்கப்படாவிட்டால் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படும், ஏகபோக வர்த்தகஉரிமை என்பது எதிர்மறையான விளைவுகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடியது என்று முதலாளித்துவவாதிகளே ஒப்புக்கொள்கிறார்கள், தாராளவர்த்தக கொள்கையின் தீய விளைவின் காரணமாக முதலாளித்துவ கோட்பாட்டை உருவாக்கிய ஆதம்ஸ்மித்(Adamsmith) கண்ட கனவான முழுமையான போட்டி நிறைந்த உலகசந்தையை முதலாளித்துவவதிகளால் உருவாக்கவே இயலவில்லை, எனினும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான விளைவை உருவாக்கமுடியும், ஒவ்வொரு சந்தைகளிலும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடுமையான போட்டி இடம்பெறுவதால் வர்த்தகசந்தையில் ஆரோக்கியமான சூழல் உருவாகும். ஏனெனில் கடுமையான போட்டியினால் விலைவாசிகள் குறைவதோடு பொருட்களின் தரமும் அதிகரிக்கும்,
 
உதாரணமாக. இன்று குளிர்பானங்கள் தயாரிப்பில் உலகசந்தையில் மூன்றேமூன்று நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றன, உலகசந்தையில் இவை முழுமையான ஆதிக்கத்தைப் பெற்றிருப்பதால் அவைகளுடன் போட்டியிட வாய்ப்புள்ள எந்த நிறுவனங்களையும் விலைக்குவாங்கும் அளவு அவற்றிடம் சொத்துக்கள் இருக்கின்றன, இந்திய நிறுவனமான தம்ஸ்அப்(Thumbs Up) நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனமான கோக்(Coke) விலைக்கு வாங்கிவிட்டது அனைவரும் அறிந்ததே, சந்தையில் போட்டியில்லாத காரணத்தால் ஏகபோகவர்த்தக நிறுவனங்களால் தரம்குறைந்த பொருட்களைக்கூட எளிதாக விற்பனை செய்யமுடிகிறது, குளிர்பானங்களில் பூச்சிக்கொள்ளி மருந்துகளும் மற்ற விஷத்தன்மையுள்ள வேதியல் பொருட்களும் கலக்கப்பட்டிருப்பது ஆய்வறிக்ககை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அது விவாதிக்கப்பட்டும் மக்கள் உடல்நலத்தோடு தொடர்புடைய இந்தவிஷயம் அப்படியே அமுக்கப்பட்டு மறைக்கப்பட்ட செய்தியை நாம்அனைவரும் அறிவோம்.

இருப்பில் இல்லாத பொருட்களை விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது: 

இன்றுள்ள வியாபார நடவடிக்கைகளில் தங்களிடம் இருப்பிலில்லாத பொருட்களை forward selling அல்லது short selling என்றமுறையில் விற்பனைசெய்வதை காண்கிறோம், வியாபாரம் செய்வதற்கு பொருட்கள். நாணயங்கள். வியாபாரத் தளவாடங்கள் ஆகியவை இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது,

ஹக்கீம் இப்னு ஹாஸம் (ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதரே(ஸல்) என்னிடம் இல்லாத பொருட்களை விற்பனைசெய்யுமாறு ஒருமனிதர் என்னிடம் கூறுகிறார் என்று நான் கூறினேன். உம்மிடம் இல்லாதபொருட்களை நீர் விற்பனைசெய்வது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள், (நூல்: அஹமது)


தாராளவர்த்தக சந்தை மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஆகியவற்றை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை :

இஸ்லாமிய பொருளாதாரம் என்பது உலகவர்த்தக சந்தையில் அழிவை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற முதலாளித்துவ பொருளாதாரமும் அல்ல. அனைத்து வர்த்தக அமைப்புகளையும் அரசுடமையாக்கி அரசின் முழுகட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கம்யூனிஸ பொருளாதாரமும் அல்ல, அரசுசொத்து. பொதுசொத்து. தனியார்சொத்து ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றிற்குரிய தனித்தன்மையான விதிமுறைகளை இஸ்லாம் வரைந்திருக்கிறது, எண்ணெய்வளங்கள். கனிமவளங்கள். நிலவாயு போன்ற பெரும் இயற்கைவளங்களை மேற்கத்திய முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றன, இயற்கைவளங்கள் என்பது பொதுமக்களின் சொத்தாகும் அவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏகபோகமாக உரிமையாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது, இன்று முஸ்லிம் உலகத்திலுள்ள இயற்கைவளங்களை கொள்ளையிடுவதற்காக மேற்கத்தியநாடுகள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன,

அபூதாவூதில் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

பசுமைவளங்கள்(காடுகள்) நீர்வளங்கள்(கடல்.ஆறு போன்றவை) நெருப்பு(எரிவாயு போன்ற ஆற்றல்வளங்கள்) ஆகியமூன்றின் பலன்களை மக்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள்,
இப்னுஅப்பாஸி(ரளி)யிடமிருந்து அனஸ்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பசுமைவளங்கள். நீர்வளங்கள். ஆற்றல்வளங்கள் ஆகியமூன்றையும் மக்கள் பங்கிட்டுக்கொள்வார்கள் அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது, 

மேலும் உப்பளங்கள் போன்ற இயற்கைவளங்கள் நிறைந்த நிலங்களை அளவுக்கு அதிகமாக வைத்திருந்தவர்களிடமிருந்து அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நிலங்களை திரும்பப்பெற்றிருக்கிறார்கள்,
இன்று வளைகுடா நாடுகளில் ஆட்சியாளர்களாக இருக்கும் மனிதர்கள் எண்ணெய்வளம் எரிவாயுவளம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பெரும்பணத்தை தங்கள் சொந்தநலன்களுக்கு வரம்புமீறி பயன்படுத்துவதோடு கோடிக்கணக்கான பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டுவைத்திருக்கிறார்கள், ஆனால் இஸ்லாமியஅரசு இருக்கும்பட்சத்தில் இயற்கைவளங்களிலிருந்து கிடைக்கும் அபரிதமான வருமானத்தை பொதுமக்களின் நலப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும். ஏனெனில் இஸ்லாத்தின் விதிமுறைகள் அவ்வாறுதான் கூறுகின்றன,
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

இமாம்(இஸ்லாமியஅரசின் கலீபா) மேய்ப்பர் ஆவார் அவரே உங்களுக்குப் பொறுப்பு ஆவார், (நூல்: புஹாரி. அஹமது. பைஹாகி)
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை நாணயத்திற்கு ஏற்புநிறை (standard) யாக கொள்ளுதல்:

இன்றைய அரசுகளால் வெளியிடப்படும் நாணயங்கள் அரசின் ஆணைகளை அடிப்படையாகக் கொண்டு அச்சடிக்கப்படுகின்றன. ஆனால் அவைகளுக்கு உத்திரவாதம் கொடுப்பதற்குரிய சொத்துக்கள் அரசிடம் கிடையாது, அரசின்மீதுள்ள நம்பிக்கையைத் தவிர தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு அடிப்படையில் நாணயம் அச்சடிக்கப்படுவதில்லை, ஒருஅரசு நேர்மையானஅரசாக இருக்கும் பட்சத்தில் தன்னிடமுள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு எவ்வளவோ அந்த மதிப்புக்கு ஏற்பத்தான் நாணயத்தை அச்சடிக்கும், பணவீக்கம் உலகில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் மேற்கூறிய விதிமுறையை எந்தஅரசுகளும் கடைபிடிப்பதில்லை, நாணயம் அச்சிடும்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கையிருப்பு அளவை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றும் தேவைப்படும்போது மக்கள் நாணயத்தை அரசுகருவூலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றோடு செலாவணி(ங்ஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங்) செய்துகொள்ள அனுமதியுண்டு என்றும் வலியுறுத்தும் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படத்துவதன் மூலம் இன்றைக்கு விலைவாசிகள் கட்டுப்பாடற்று உயர்ந்து கொண்டிருப்பதற்கு காரணமான பணவீக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்திவிடலாம்,
உண்மையான மதிப்பை பெற்றுள்ள திர்ஹம் மற்றும் தினார் ஆகியவற்றை இஸ்லாமியஅரசின் நாணயத்திற்கு அடிப்படையாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) ஆக்கினார்கள், அவைகளுக்கு நிலையான மதிப்பு இருந்துவந்தது, ஸகாத் கொடுப்பதற்குரிய அளவை (nisab of zakat) நிர்ணயித்திருப்பது போல குர்ஆன் சுன்னா ஆகியவற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை ஏற்புநிறையாக (standard) இஸ்லாம் நிர்ணயித்திருக்கிறது,
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு அடிப்படையில் காகிதநாணயம் அச்சடிப்பதற்கு அனுமதியுண்டு, ஆகவே இஸ்லாமியஅரசு இருக்கும்பட்சத்தில் ஒருவர் காகிதநாணயத்தை அரசு கருவூலகத்தில் தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ எளிதாக மாற்றிக்கொள்ளலாம், ஆகவே தங்கம் மற்றும் வெள்ளிஆகியவற்றின் மதிப்பு நிலையாக இருப்பதால் பணவீக்கம் அறவே நீக்கப்பட்டுவிடுகிறது, இன்றைய அரசுகள் செய்வதைப்போல கட்டுப்பாடு இல்லாமல் காகிதநாணயங்களை அச்சடிப்பதும் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் கையிருப்பை நாணயஅச்சடிபுக்கு அளவுகோலாக ஆக்கிக்கொள்ளாததும் இஸ்லாமியஅரசின் ஆட்சியில் ஒருபோதும் நடைபெறாது, பணவீக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நிதிநெருக்கடி. விலைவாசிஏற்றம் ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டிருப்பதால் தங்கள் முதலீட்டை பொருட்களில் முதலீடுசெய்வதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடுசெய்கிறார்கள் ஏனெனில் அதற்கு நிலையான மதிப்புஇருக்கிறது,


முடிவுரை: 

இப்போதுள்ள இஸ்லாமிய வங்கியமைப்பு இஸ்லாமிய நிதியியல் ஆகியவற்றிற்கு மேலாக இஸ்லாமிய பொருளாதாரம் என்பது முழுமையான இஸ்லாமிய செயலாக்கஅமைப்பாகும் (Islamic system) அவற்றை தெளிவாக விளக்கியிருக்கிறோம். மேலும் பொருளாதாரம் தொடர்பான முக்கியமான விஷயங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறோம், இஸ்லாமிய பொருளாதாரஅமைப்பை (Islamic economic system)முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஷரியாசட்டங்களின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமியஅரசு இருக்கவேண்டும், ஆனால் இன்று முஸ்லிம் உலகத்திலள்ள அரசுகள் மேற்குலகின் கைப்பாவை அரசுகளாக தன்னிச்சையாக இயங்குகின்றன, நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவும் பிரிட்டனும் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிகோடியாக வாரியிறைக்க தணிந்துவிட்டன, அவர்கள் எவ்வளவு டாலர்களை கொட்டிஅணை போட்டாலும் இந்தநெருகடியிலிருந்து மீளவேமுடியாது. ஏனெனில் முறையற்ற அடித்தளத்தில் அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள், இந்தநேரத்தில் இஸ்லாம் மட்டுமே உண்மையான நடைமுறைக்கு ஏற்றதான ஒரு மாற்றுவழியாக இருக்கிறது என்பதை நாம் மக்களுக்கு உணர்த்தவேண்டும், பொருளாதாரஅமைப்பை மட்டுமல்லாமல் இஸ்லாத்தை முழுமையான அமைப்பில் அதன் ஆட்சிமுறை அதன் குற்றவியல்சட்டம் போன்ற அனைத்து செயலாக்கஅமைப்புகளையும் அதன் சரியான சட்டவிதிமுறைகளையும் (system of Islam) மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும்,
அறிவியல். தொழில்நுட்பம் மற்றுமுள்ள அனைத்துதுறைகளிலும் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் உண்மையான முன்னேற்றத்தை இந்தஉலகம் கண்டது என்பதை முஸ்லிமல்லாத சிந்தனையாளர்கள் கூட உணர்ந்திருக்கிறார்கள், short history of Arabs என்றநூலில் பிலிப்ஹிட்டி என்பவர் கூறியிருப்பதாவது:
வரலாற்றின் மத்தியகாலகட்டத்தின் முதல்பாகத்தில் மனிதசமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அரபுமக்கள் பங்களிப்பு செய்ததைப்போல வேறொருவரும் செய்யவில்லை, அரபியதீபகற்பத்தில் வாழும் மக்களைமட்டுமல்லாமல் அரபுமொழியை தாய்மொழியாகக் கொண்ட அனைத்துமக்களையும் இதில் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும், தூரகிழக்கு (far east) நாடுகளைத்தவிர்த்து மற்ற அனைத்து நாகரீகஉலகத்திலும் பலநூற்றாண்டுகளுக்கு கல்வி. கலாச்சாரம். மற்றும் அறிவுரீயான முன்னேற்றம் ஆகியவற்றில் அரபுமொழியே அடித்தளமாக விளங்கியிருக்கிறது, ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை மற்றறெந்த மொழிகளிலும் எழுதப்பட்ட நூல்களைவிட அதிகமான நூல்கள் தத்துவம். மருத்துவம். வரலாறு. மதம். வானவியல். புவியியல். அரசியல் ஆகியதுறைகளில் எழுதப்பட்டிருக்கின்றன,
இஸ்லாமிய செயலாக்கஅமைப்பு(system of Islam) முழுமனித சமுதாயத்திற்கும் உரியதாக அருளப்பட்டிருக்கிறது, 

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

(முஹம்மதே!) நாம் உம்மை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக அனுப்பியிருக்கிறோம், (21:107) 

இந்த செயலாக்கஅமைப்பு(system of Islam) மனிதஅறிவிலிருந்து தோன்றியதில்லை மாறாக மனித இனத்தைப் படைத்த அல்லாஹ்(சுபு) விடமிருந்து வந்திருக்கிறது, அதுமனிதசமுதாயத்திற்கு முழுமையாக பொருந்தக்கூடிய சத்தியமார்க்கமாக இருக்கிறது, நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு மறுபடியும் இந்தஅமைப்பைக் கொண்டுவரவேண்டும்,

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக ஹஸன் அல்பஸரி(ரஹ்) அறிவித்திருப்பதாவது.

இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைப்பதற்கு உதவும் என்று எண்ணி ஒரு இல்மைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியின்போது எவருக்கு மரணம் ஏற்படுகிறதோ அவர் சுவனத்தில் இறைத்தூதர்களின் அந்தஸ்த்தில் இருப்பார், (நூல்: திர்மிதி)

முற்றும். 

No comments:

Post a Comment