Mar 6, 2011

கால இட மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சட்டங்களும் மாற்றம் பெறுமா?

இன்று பெறும்பாலான முஸ்லிம்களின் உள்ளத்தில் இருக்கின்ற நம்பிக்கை இஸ்லாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது என்பதாகும். இன்னும் இஸ்லாம் எப்போதும் எந்த இடத்திலும் சமூக பொருளாதார, அரசியல் நிகழ்வுகளோடு ஒத்துப்போகக்கூடியது என்றும் கருதுகின்றனர். இன்னும் நவீன கால ஒழுங்குகளுக்கு ஏற்பவும், மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட தேவைகள் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவும் இஸ்லாம் தனது சட்டங்களை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துகின்ற மார்க்கம் என்றும் நம்புகின்றனர். இவர்கள் தமது வாதத்திற்கு பின்வரும் அடிப்படைக் காயிதாவை ஆதாரமாகக் கொள்ளுகின்றனர்.

கால மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மாறுவது மறுக்கப்படமாட்டாது
இந்த அடிப்படையில் அவர்களுடைய நடத்தைகளில் தற்கால யதார்த்த உலகிற்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுப்பதைக் காண்கிறோம். இன்னும் பழக்கவழக்கங்களிலும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வதையும் காண்கிறோம்.

அவர்களிடம் இஸ்லாமிய ஷாPஆ சட்டம் தொடர்பாக வினவப்பட்டால் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதாக இருந்ததாக கூறுவார்கள். இஸ்லாம் கால ஓட்டத்திற்கு ஏற்ப இயங்குவதைக் கடமையாக்கியுள்ளது என்பார்கள். கால மாற்றம் இட மாற்;றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே செயற்படவேண்டும் என்றும் சொல்வார்கள். இவர்கள் வட்டியோடு தொடர்புடைய வங்கிகள், வட்டியோடு தொடர்புடைய நிலையங்கள் இருப்பதையும் நியாயப்படுத்துவார்கள்.

இவை யாவும் யதார்த்தத்தில் முஸ்லிம்ளுக்கு பயனளிக்கக்கூடியவை, எனவே இவற்றை ஏற்றுக்கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்காது. இஸ்லாம் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய மார்;க்கம் என்றெல்லாம் இல்லாத அம்சங்களை இட்டுக்கட்டிக் கூறுவார்கள். இதேபோல் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிவதையும், இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாத தேவையற்ற அம்சங்களையும், அந்நியர்களோடு கலப்பதையும் அவை இன்றைய காலத்தின் தேவைகள், எனவே ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கூறுவதையும் நாம் காணமுடிகிறது.

இதுபோன்று பலதாரமணம் காலம் கடந்துவிட்ட சட்டம் என்கின்றனர். அச்சட்டம் இன்று தேவை இல்லை என்கின்றனர். அதுமட்டுமன்றி திருடனின் கையை வெட்டுவது, விபச்சாரத்தில் ஈடுபடுவோரை கல்லடி கொடுத்துக் கொல்வது போன்றவை நவீன கால ஒழுங்கிற்கு பொருத்தமற்றவை, இது பற்றிய ஆய்வே அவசியமில்லை என்கின்றனர்.
இதைப்போன்ற அடிப்படை எண்ணங்கள் முஸ்லிம்களின் உள்ளங்களில் முற்றும் தவறான கருத்துக்களை ஆழமாக விதைத்திருப்பதைக் காணமுடிகிறது. இந்தக் கருத்துக்கள் யாவும் முழுமையாகவே இஸ்லாத்திற்கு முரணானவையாகும். இஸ்லாத்தின் அடிப்படைகளையும் விளக்கங்களையும் பாதிக்கக்கூடிய கருத்துகளாகும். உண்மையில் இவைகள் 19ம் நு}ற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கடுமையான சிந்தனைத் தாக்கத்தின் அடையாளங்களாகும். பிறகு மேற்குலக ஏகாதிபத்தியம் இப்படியான கருத்துக்களை வளர்த்துவிட்டது.

இப்படியாக முஸ்லிம் உலகம் மிகக்கடுமையான சிந்தனை வீழ்ச்சிக்கு ஆழாகியிருப்பதைக் காண்கிறோம். இஸ்லாம் எப்படி நவீன காலத்திற்கு முரண்படுகிறது என்பதையும் மேலே கூறப்பட்ட காஇதாவின் யதார்த்த விளக்கம் என்ன என்பதையும் நாம் கட்டாயம் விளங்க வேண்டியுள்ளது. அதாவது அவர்கள் வாதிடுவது போன்று கால இட மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமும் மாறுகிறதா? உண்மையில் இஸ்லாத்தின் சட்டங்கள் யாவும் மனிதனின் உடலியல் மற்றும் பாலியல் தேவைகளை தீர்த்து மனிதனுக்கு முழுமையான தீர்வைக் கொடுக்க வந்த சட்டங்களாகும்.

இஸ்லாமிய ஷாPஆ சட்டம் என்பது மனிதனின் செயற்பாடுகள் தொடர்பாக சட்டமியற்றக்கூடிய அல்லாஹ்வின் கட்டளைகளாகும். ஒவ்வொரு மனித செயலுக்கும் இது அல்லாஹ்வின் கட்டளை என்பதற்கான ஆதாரம் அவசியமாகும். அதாவது குர்ஆனிய வசனத்திலிருந்து, நபிகளாரின் ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சட்டம் மனித செயல் ஒவ்வொன்றிற்கும் அவசியமாகும். அதேபோன்று ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தாக (இஜ்மாவுஸ்ஸஹாபா) இருப்பதும் ஷாPஆ சட்டத்திற்கு போதுமானதாகும். எனவே ஷாPஆ சட்டங்களின் அடிப்படை ஒன்றுதான், வேறு இல்லை.

அது குர்ஆனும் அல்ஹதீஸ{ம் ஆகும். இவை இரண்டினின்றே மனிதர்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய தீர்வுகள் பெறப்படுகின்றன. காலமோ இடமோ குர்ஆனுடைய, ஹதீஸ{டைய இடத்திற்கு ஒருபோதும் வரமுடியாது.
எனவே ஒரு மனிதன் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா-அஸ்-ஸஹாபா, கியாஸ் ஆகியவற்;றின் அடிப்படையில்தான் தனது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஒழுங்குபடுத்தவேண்டும்.


இதேபோல் ஒரு இஸ்லாமிய சமூகம் இவற்றின் மூலமே தமது பிரச்சினைகளுக்;கான தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவே கூடாது.
குர்ஆன் மற்றும் து}தருடைய ஹதீஸ் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட சட்டங்களைக் கொண்டே எத்தகைய சூழலுக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்பதை அல்லாஹ{த்தஆலா கடமையாக்கியுள்ளான்.


ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமை யாதெனின் சமூகத்தில் ஷாPஆ சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது முதலில் சமூகத்தை மிக நுணுக்கமாக ஆராய்வது அவசியமாகும். பிறகு அல்லாஹ்வுடைய ஷாPஆ சட்டப்படி அதற்கு தீர்வைக்காணவேண்டும். இதன்படி இஸ்லாமிய அடிப்படைக்கு ஏற்ப சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஷாPஆவிற்கு மாறாக சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இஸ்லாத்தை நிலைநாட்டுவது பிழையான, பாவமான காரியமாகும். இஸ்லாத்திற்கு முரண்படுகின்ற அத்தனையையும் நீக்குவது அவசியமாகும்.


இஸ்லாம் ஏவுகின்ற அத்தனையையும் நிலைநாட்டுவதும் நடைமுறைபடுத்துவதும் கடமையாகும். சமூகத்தின் யதார்த்தம் என்பது அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கும் விலக்கல்களுக்கும் ஏற்பவே இருக்கவேண்டும். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப வாழ்வதோ தம்மை மாற்றிக்கொள்வதோ முஸ்லிம்களுக்கு ஒருபோதும் ஆகுமானதல்ல. மாறாக அல்லாஹ்வுடைய வேதத்திற்கும் அவனது து}தரின் சுன்னாவிற்கும் ஏற்ப தீர்வுசொல்வதே அவர்களின் கட்டாயக் கடமையாகும்.

No comments:

Post a Comment