Mar 1, 2011

அதிமுக்கிய பிரச்சினை!

தனது இறையாண்மையை பாதுகாக்கும் தற்காப்பு உணர்வு உலகின் அனைத்து நாடுகட்கும் அதன் மக்கட்கும் உண்டு. அதன்படி ஒவ்வொரு தேசத்திற்கும் சில விவகாரங்கள் முக்கியமாகின்றன. அதற்காக எந்த கேள்வியுமின்றி இரத்தம் சிந்தவும் மக்கள் தயாராகின்றனர். அத்தகைய விவகாரங்கள் உயிர்வாழ்வையோ, அல்லது தனது நிலையின் பாதுகாப்பையோ சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன.

எனவே பெரும்பலும் அவை அனைத்து மக்கட்கும் ஒன்றுபோலவே உள்ளன. ஆனால் அவை முக்கிய விவகாரங்களே அல்ல. மேலும் முக்கிய விவகாரங்கள் அனைத்தும் தற்காப்பு மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. மற்ற விவகாரங்களும் உண்டு. "வழிபாட்டுணர்வு" சம்பந்தமாகவோ அல்லது "பாலுணர்வு" சம்பந்தமாகவோ மேலும் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன. ஆனால் அவையோ மனிதர்களைப்பொறுத்து மாறுபடுகின்றன. ஏனென்றால் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை அணுகும் முறை மாறுபடுகிறது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரு உம்மத்தை சார்ந்தவர்கள். அவர்கட்கும் தத்தம் வாழ்க்கையை பொறுத்து முக்கிய விவகாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர்கள் வாழ்வை அணுகும் முறை இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதால் அம்முக்கிய விவகாரங்களும் இஸ்லாத்தாலேயே வரையறுக்கப்படுகின்றன.

இஸ்லாம் மக்கட்கு முக்கிய விவகாரங்கள் எவை என விவரித்துள்ளது. மேலும் அவற்றை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருத கடமையாக்கியுள்ளது. எனவே முஸ்லிம்கள் முக்கிய விவகாரங்கள் எவை என தாமாக முடிவெடுக்கமுடியாது. இஸ்லாம் எவற்றை முக்கிய விவகாரமாக வரையறுத்துள்ளதோ அவையே முஸ்லிமுக்கும் முக்கிய விவகாரமாகும். அவை எந்த அளவிற்கு வாழ்வா? சாவா? பிரச்சனை என்பதையும் இஸ்லாம் விவரித்துள்ளது. அதன்படியே செயல்படுவது முஸ்லிமிற்கு கடமையாகும். எந்த ஒரு இயக்கத்திற்கும் இஸ்லாமின் இறையாண்மையை பாதிக்கும் பிரச்சனை. வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். இஸ்லாமும் தனது நிலைக்கு அச்சுருத்திய வந்த எண்ணற்ற விவகாரங்களை சந்தித்துள்ளது. மேலும் அச்சமயங்களில் முஸ்லிம்கள் அந்த அச்சுருத்தல்களை சந்தித்து அகற்றியுள்ளனர்.

இஸ்லாம் மலர்ந்த பிறகு இஸ்லாத்திற்கும் "குப்ர்" க்கும் இடையேயான போராட்டம் உச்சத்தில் இருந்தது. அறிவு சார்ந்த போராட்டமாக இருந்தது, பின்னர் இஸ்லாமிய அரசு மதீனாவில் ஏற்படுத்தப்பட்ட பிறகு போராக உருவெடுத்தது. இவை அனைத்தும், இஸ்லாத்தை, அதன் முக்கிய விவகாரங்களை பாதுகாப்பதற்கே. எனவே முக்கிய விவகாரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. ஆகவே அவற்றை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவது மிக முக்கியமாகிறது. "ஜிஹாத்" ஒரு முக்கிய கடமையாக கருதப்பட்டதும் அதற்காகவே. ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறினார்கள்...

"இஸ்லாத்தை பாதுகாப்பது தலையாய கடமை. தொழுகை அதன் துண்களாகும். ஜிஹாத் அதன் கூரையாகும்.மேலும் கூறுகிறார்கள், "அல்லாஹ்(சுபு) எனை அனுப்பியதிலிருந்து, உம்மாவின் கடைசி சந்ததியினர் தஜ்ஜாலுடன் போரிடும் வரை ஜிஹாத் மாறாது".

எனவே முஸ்லிம்கள் அம்முக்கிய விவகாரங்களைவிட்டும் ஒரு போதும் தளரவில்லை. அவற்றை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதத் தயங்கவில்லை. சிலுவைப்போரின் மூலம் இஸ்லாத்திற்கும் அதனது இஸ்லாமிய அரசிற்கும் ஆபத்து வந்த பொழுது, அதனை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதிய உம்மா, அவர்களுடன் ஓர்நுற்றாண்டுக்கும் மேலாக கடும் போர் புரிந்தது. அந்த ஆபத்தை சமாளிக்க முடிந்தது. அதேபோல் மங்கோலியர்களால் இஸ்லாத்திற்கு ஆபத்து வந்தபோது, இவ்வுலக இன்பத்தை கருதாத முஸ்லிம் உம்மா, அதனை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதி கடும் போர் புரிந்தது. அந்த ஆபத்தினின்றும் தவிர்த்தது.

ஆகவே முஸ்லிம்கள், இஸ்லாம் கூறிய முக்கிய விவகாரங்கள் எவை என்பதை அறிந்து அவற்றை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதி அதன்படி நடந்தனர். ஏனென்றால் அவை அனைத்தும் இஸ்லாத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்றுக்கொள்ளாவிடில் வரும் பெரும் ஆபத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் எப்பொழுது அவர்களது இஸ்லாமிய நாட்டம் குறையத்தொடங்கியதோ அதினின்றும் ஆபத்தும் தொடங்கியது. ஆதலால் "குப்ர்" யின் இஸ்லாமிய எதிர்ப்பும் வலுவடைந்தது. அவற்றை எதிர்த்து போராடாது அமைதிகாத்தனர். அந்நிலையில் முக்கிய விவகாரங்கள் எவை என்பதையும் மறந்தனர். அவற்றை வாழ்வா? சாவா? பிரச்சனையாக கருதுவதினின்றும் தளர்ந்தனர். அதனால் இஸ்லாமிய அரசு வீழ்த்தப்பட்டது. இஸ்லாம் வாழ்க்கை நடைமுறைகளினின்றும் மறைந்து மசூதிகளில் மட்டுமே பாதுகாக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இஸ்லாம் வாழ்க்கையினின்றும் மறைந்துவிடும் இந்நிலையிலாவது, முஸ்லிம்கள் விழித்தௌவேண்டும். குர்ஆனிலும், சுன்னாவிலும் எவை முக்கிய விவகாரங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவற்றை ஏற்று அதன்படி செயல்படவேண்டும். இஸ்லாம் குறிப்பிட்டபடியே அவற்றை வாழ்வா?சாவா? பிரச்சனையாக கருதுவனின்றும் விலகிவிடக்கூடாது. இஸ்லாத்தின் இறையாண்மையை(தற்காப்பை) காப்பதினின்றும் நாம் தவறிவிடக்கூடாது.

No comments:

Post a Comment