Mar 8, 2011

நாங்கள் எங்கே செல்கிறோம்?

எப்போதும் நடைமுறை உலகம் எனும் மாயை சில உண்மைகளையும், நியாயங்களையும் புறந்தள்ளி பயணிக்க தலைப்படுகின்றது. அதன்போது பல புதிய பிரச்சனைகளையும், தீர்வுகளற்ற விளைவுகளையும் கொடுத்து இயல்பு வாழ்க்கையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகமும், அது எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சிகளும் இதற்கொரு சிறந்த உதாரணங்களாகும்.

1924ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி முஸ்லிம் சமூகத்தின் இன்றைய இருண்ட வரலாற்றிற்கான உத்தியோக பூர்வ அத்தியாயம் புரட்டப்பட்ட நாளில், தனது அரசியல் இராஜதந்திர பின்புலத்திற்கும், தனது ஒரே தலைமைக்கு கட்டுப்படும் அடிப்படையான வரலாற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டபோது முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதி அறிந்தோ, அறியாமலோ அந்த சதிகளிலே பங்களிப்புச் செய்ய, இன்னொரு பகுதி மௌனித்து அவதானித்துக் கொண்டிருந்தது! துருக்கியில் இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. அரபி - அஜமி என்ற பாகுபாடும், நாடு – தேசியம் என்ற வரையறைகளும் புதிய ஜாஹிலியத்தாக முஸ்லிம் சமூகத்தில் (மேற்கத்தேயம் முன்பே விதைத்த விதை) ஆல விருட்சமாகி எதிரிகளுக்கு கனிகொடுக்க ஆரம்பித்தது. இருளடைந்த அந்த நாட்களுக்குப்பின்னால் எதிர்நோக்கப்போகும் ஓர் கசப்பான வரலாறு அன்று மிகச்சரியாக பலரால் எதிர்கூறப்படவுமில்லை, எதிர்பார்க்கப்படவுமில்லை.

ஒருவகையில் பிந்தைய இஸ்லாமிய கிலாபத் அதிகாரம் பக்கச்சார்பான ஆளும் கொள்கைகளாலும், அதிகார துஸ்பிரயோகங்களாலும் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்திருந்தமை இதற்கொரு காரணமாக இருப்பினும், மேற்கத்தேய வாழ்க்கையின் வெளிக்கவர்ச்சியும், மாயையும் காலத்தின் தேவையாக, யதார்த்தம் எனும் போர்வையால் போர்த்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டபோது தனது இயல்பான அறிவுக் கண்களை மூடிய நிலையில் முஸ்லிம்கள் அதனுள் நுழைந்து கொண்டார்கள். கிழக்கும், மேற்கும் கொடுத்த கம்யூனிசம், முதலாளித்துவம் என்ற தத்துவங்கள் மாறும் புதிய உலகுக்கான தீர்வாக எடுத்து வைக்கப்பட்டது. ‘சுதந்திரம்’, ‘விடுதலை’ ‘ஜனநாயம்’ எனும் வார்த்தைகள் புதிய உலக ஒழுங்கு எனும் தலைப்பின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்பட்டது. அல்குர்ஆன் மத அனுஷ்டானங்களுக்கான மந்திரப்புத்தகமானது.

ஓர் நல்ல கொள்கையானது தவறான பாதையூடாக பயணிக்கின்ற போது அதன் அடிப்படை எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக தவறான விளைவுகளை அது ஏற்படுத்தி விடும். அதேபோல் ஓர் தீய கொள்கையானது யதார்த்தமான பதையை தேர்ந்தெடுத்து பயணித்தாலும், சரியான விளைவுகளை அதனால் தர முடியாது என்ற யதார்த்தத்தை நாம் மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சரியானது சரியான பதையில் பயணித்து நன்மைகளை அறுவடை செய்வதும், தவறானது எந்நிலையிலும் புறந்தள்ளப்படுவதும்தான் உண்மையிலேயே யதார்த்தமானதாகும். முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

முஸ்லிம் உலகை மறுமலர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 84 வருட காலமாக தொடரும் முயற்சிகள் சமூகப் புனர்நிர்மாணத்திலோ, தனித்துவமான எம் வரலாற்றை மீள் கொண்டு வருவதிலோ காத்திரமான இலாபங்களை பெற்றுத்தரவில்லை. மாற்றமாக அவற்றினால் குழப்பமான கள நிலவரங்களையும், விகாரமான விளைவுகளையும் மிக அதிகமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், பொஸ்னியா, துருக்கி, அல்ஜீரியா, சூடான், செச்னியா, காஸ்மீர், ஈராக், பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான், பாக்கிஸ்தான்; என்று தொடர்ந்து கொண்டே போகக்கூடிய படிப்பினைகளையும், வரலாறுகளையும் சுமக்கமுடியாத சோகச் சுமைகளாக சுமந்த நிலையிலும் தொடர்ந்து கண்கள் கட்டப்பட்ட கழுதைபோல் அதே பாதையில் பயணிப்பது என்பதுதான் முட்டாள் தனமானதும், ஜீரணிக்க முடியாததுமாகும்.

மேற்கூறிய இந்த கருத்தானது விரக்தி நிலையிலோ, தோல்வி மனப்பாங்கிலோ சொல்கின்ற ஒரு கருத்தல்ல. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் போராட்டப்பாதை தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தவறாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடேயாகும். இன்றுவரை எமது மனோநிலை தேசம், தேசியம், பிரதேசம் எனும் குறுநிலை வாதங்களினால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை மிக ஆபத்தானது. இந்த உளப்பிரிகோடுதான் எதிரிகள் எம்மை ஆள்வதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் ஏதுவாக அமைந்து விட்டது. பலஸ்தீனைப் பற்றியும், ஈராக்கைப் பற்றியும், ஆப்கானைப்பற்றியும் நாமும் சிந்திக்கின்றோம் என்கிறோம், எனினும் எமது தேசிய வரையறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பட்சமாக! போராட்டத்திற்குள் வாழும் பலஸ்தீனியனும், ஈராக்கியனும், ஆப்கானியனும் கூட தமது தேசிய எல்லைகளுக்குள் நின்றுகொண்டுதான் சிந்திக்க பழக்கப்பட்டுள்ளான். இந்த நிலை மாறாத வரை எதிரிக்கு வெற்றியை நாம் அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டே இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய எமது தேவை என்ன? அதற்கான மிகச்சரியான பாதை என்ன? இதுகுறித்து மிகச் சரியாக நாம் சிந்திக்கத்தளைப்படவேண்டும். இதுதான் இன்றைய முஸ்லிம் உலகத்தின் மிகப்பெரிய சவால். அரசியல் இராஜதந்திர பின்புலத்தை இழந்து நிற்பதும் அதனை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் இருப்பதும்தான் அந்த சிக்கலின் பிரதான காரணி. உதாரணமாக ரஷ்யர்களுக்கு எதிரான ஆப்கான் போரிலே நடந்தது என்ன? ஆப்கான் சகோதரர்களின் வீரத்தை, தியாகத்தை குறைசொல்ல முடியாது. மாற்றமாக ஆப்கான் விடுதலைப்போரில் பின்புல உதவியில் அமெரிக்கா இருந்ததை எம்மால் மறுக்க முடியாது.

எனவே எமது சக்திமிக்க அரசியல் இராஜதந்நிர பின்புலம் கிலாபத்தான் என்பதை மையப்படுத்திய சிந்தனை சரியான அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டும். அந்த கிலாபத்தை அடைவதற்கான பாதையில் தவறான வழிமுறைகள் களையப்பட்டு சரியான அடிப்படை எல்லைப்படுத்தப்பட வேண்டும். தேசம், தேசியம், பிரதேசம் என்ற எல்லைகள் உள hPதியாகவும், உணர்வு hPதியாகவும் கைவிடப்பட வேண்டும். இந்நிலை ஏற்படாதவரை எமது முயற்சிகள் அர்த்தமற்றவை. அடிப்படை இல்லாதவை. உதாரணமாக கிலாபத்தை நோக்கிய எமது பாதையில் ஜனநாயகம் எனும் ஜாஹிலியத்தை எம்மால் பயன்படுத்த முடியாது. (மறுபுறம் அவ்வாறு பயன்படுத்தி பெரும்பான்மையை நிரூபித்தாலும் இஸ்லாத்தை நிலைநாட்ட அதன் எதிரிகள் விடவே மாட்டார்கள்;. அல்ஜீரியா, துருக்கி, பலஸ்தீன் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்) அதேபோல் இஸ்லாமிய இராணுவ குழுக்களின் போராட்டங்களினாலும் நாம் கிலாபத்தை காண முடியாது. ஏனெனில் ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்;;டலில் கிலாபத் நிலை நாட்டப்பட இத்தகு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இன்றைய யதார்த்தத்திலும், குப்ரிய அரசியலும், ஆயுத வழிமுறைகளும் தோல்வியடைந்த பாதைகள் என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் ஏற்றுக்கொள்வார்கள். எனவே நாம் மேற்கூறிய கருத்துக்களின் மூலம் பின்வரும் விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1. முஸ்லிம் சமூகம் தவறாக வழிநடாத்தப்படுகின்றது

2. முஸ்லிம் சமூகம் தவறாக சீர்திருத்தப்படுகின்றது

3. முஸ்லிம் சமூகம் தவறாக களமிறக்கப்பட்டுள்ளது

ஒரு விடயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த பின்னாலும், ஏன் இவர்கள் தமது வழிமுறை பற்றி சீர்து}க்கிப் பார்க்கவில்லை, சிந்திக்கவில்லை. 84 வருடங்களில் நாங்கள் தேசியவாத சிந்தனையை மையப்படுத்தியோ, மன்னர் மரபை பயன்படுத்தியோ எத்தகைய அபிவிருத்தியை, முன்னேற்றத்தை கண்டு கொண்டோம்! சிந்திக்க வேண்டும், குறிப்பாக ‘ஜனநாயகத்தையும்’ தேசியவாதத்தையும் நம்பி இஸ்லாத்தை ஓர் சக்தியாக்க நினைப்பவர்கள் மிக அவசியமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக இத்தகு பணிக்காக தமது வாழ்நாளை தியாகம் செய்து குப்ரிய அரசியல், பொருளாதார சிந்தனைகளுக்கும், சிறுபான்மை சமூக இலகுவாக்கல் பிக்ஹ் நிலைப்பாட்டுக்கும் இஸ்லாமிய சாயம் பூசி எழுதிவரும் தொடர் சுற்று தோட்டா எழுத்தாளர்களும், பீரேங்கிப்பேச்சாளர்களும் தம்மை மறுபரிசீலனை செய்து சிந்திக்க வேண்டும்.

இனியும், தாமதிக்கவோ, தவிர்ந்து கொள்ளவோ முடியாத ஓர் அவசியமான கடமை எமக்கு முன் உள்ளது. அது எமது ஒரே தலைமை(கிலாபத்) கோட்பாட்டை முன்னிறுத்தி, அதனை நிறுவும் விடயத்தில் அதற்கே உரிய சுன்னாவை அமுல்படுத்தி போராடுவதாகும். வெற்றிக்கான ஒரே வழிமுறை இதுதான். இந்த அரசியல் இராஜதந்திர பின்புலமற்ற நிலை (கிலாபத் அற்ற நிலை) மீண்டும் மீண்டும் ஓர் கசப்பான வரலாற்றை மீட்டுத்தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே எம் அறிஞர்களே! சகோதரர்களே! தேச, தேசிய, நிற, இன, வர்க்க வேறுபாடுகளை கடந்து நமது அழைப்பை ஓர்முகப்படுத்தும் அவசியப்பாட்டை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்காக பாடுபடுவதற்கும் எல்லைகளற்ற உம்மாவை முதல் சிந்தனையாக பிரகடனப்படுத்த முன்வாருங்கள். இம்மை மறுமை வெற்றிக்கான ஒரே பாதை அதுதான். மேலும் அல்லாஹ் யாவற்றையும நன்கறிந்தவன். மிக்க கிருபையுடையவன்.

No comments:

Post a Comment