Apr 17, 2011

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 04

பன்மைவாதம் (Pluralism)

மனித சமூக அமைப்பு பற்றி முதலாளித்துவவாதிகளின் சிந்தனையில் எழுந்தகருத்துதான் பன்வாதமாகும், அவர்கள் பார்வையில் சமூகம் என்பது பல்வேறு நம்பிக்கைகள்,கருத்துக்கள்,விருப்பங்கள்,தேவைகள் மற்றும் சமூக பின்னணி ஆகிய பல அடிப்படைகளிலுள்ள பல தனி நபர்களின் தொகுப்பு தான் சமூகமாக இருக்கிறது.இதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு வகுப்பார்கள் இருப்பது தவிர்க்கமுடியாதது, அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது குறிக்கோள்களின் அடிப்படையில் ஒரு கட்சியையோ,இயக்கத்தையோ அல்லது அமைப்பையோ சார்ந்தவராக இருப்பார்கள், இந்த பிரிவினர் அனைவரும் அங்கீகரிக்கப் பட்டு அரசிய−ல் பங்குகொள்ள அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும், ஆகவே ஒரே கட்சி அமைப்பு அல்லது ஒரே சமூகம் என்பதை பன்மைவாதத்துக்கு முரண்பாடானது என்று அவர்கள் எண்ணுகிறார்கள், எனினும் இந்த பன்மைவாதம் முதலாளித்துவசித்தாந்தத்திற்குள்தான் இருக்கிறது.

அந்த ஆட்சிமுறையில் தான்அமல்படுத்தப்படுகிறது, இந்த சித்தாந்தத்தையும் ஆட்சி அமைப்பையும் நம்பாத ஒரு குழுவோ அல்லது அதன் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு பிரிவோ இந்த சமூகத்தில் இருப்பதற்கு உரிமையில்லை என்பது நிறுவப்பட்ட உண்மை,பன்மைவாதத்தை விளக்கமாக சொல்வதென்றால். ஒரு ஆட்சி அமைப்பிலும் அதன்வடிவத்திற்குள்ளும் ஒரே கோட்பாட்டின் கீழ் அல்லது ஒரே அடிப்படையில்பல்வேறு பிரிவினர் இயங்கிக் கொள்ளலாம்,இஸ்லாமும் இத்தகைய பன்முக தன்மை கொண்டதுதான், ஆனால் அதன்அமைப்பும் தனித்தன்மையும் முதலாளித்துவ கோட்பாட்டிலிருந்து முற்றிலும்வேறுபட்டது, இஸ்லாத்திற்குள் பல்வேறு குழுக்களும் இயக்கங்களும் உண்டு,அவைகள் யாவும் இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்டவை,அவைகளின் கருத்துக்களும் சிந்தனைகளும் அபிப்ராயங்களும் இஸ்லாமாகஇருக்கும் வரை அதாவது இஸ்லாமிய ஷரியத் படியோ அல்லது அதன்அடிப்படையிலோ இருக்கும் வரை அவைகள் இஸ்லாமிய ஆட்சி அமைப்புக்கு குந்தகம் விளைவிக்க மாட்டா?

இருந்த போதிலும் இஸ்லாத்தில் கருத்துக்கள் அடிப்படையில் பல பிரிவுகள் இருப்பதற்கு அனுமதி உண்டு, இது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கோரும் முதலாளித்துவ கோட்பாட்டின் அடிப்படையில் உள்ள பன்மைவாதம் அல்ல,முதலாளித்துவ பன்மைவாதம் என்பது அதன் சித்தாந்தமான வாழ்விலிருந்து மதத்தை பிரிப்பது என்ற அடிப்படையிலிருந்து உருவானது, எனவே முதலாளித்துவ பன்மைவாத அடிப்படையில் கட்சி அல்லது ஒரு இயக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு.வாழ்வியலிருந்து மதத்தை பிரிப்பது என்ற குöப்ர் கோட்பாட்டை அல்லது அது போன்ற ஒரு கருத்தை கோருவதற்கும். இஸ்லாம் தடுத்துள்ள கொள்கைகளான தேசியவாதம்,இனவாதம்,குலப்பெருமை,குடிப்பெருமை,மொழிப் பெருமை,தேசப்பற்று ஆகியவைகளின் அடிப்படையில் இயங்குவதற்கும் அனுமதி உண்டு. இன்னும் அல்லாஹ்(சுபு) தடுத்தவைகளான பாலியல் வெறித்தனங்கள்,விபச்சாரம்,சூதாட்டங்கள்,மதுபானங்கள் அருந்துதல்,கருச்சிதைவு,பெண்களை போதைபொருளாக பயன்படுத்துதல்,ஆபாசம்,கலப்படம் இன்னும் இதுபோன்ற தீயவைகளை கோருவதற்கும் அனுமதி உண்டு.

ஆகவே அமெரிக்கா பிரச்சாரம் செய்யும் பன்மைவாதத்தை முஸ்−ம்கள்ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது, இதை ஏற்றுக் கொள்வது என்பதுஅல்லாஹ்(சுபு) தடுத்தவைகளை ஆகுமாக்கிக் கொள்வது என்று பொருளாகும், இதுஅல்லாஹ்(சுபு)வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் விஸ்வாசம்கொண்டுள்ள எந்த உண்மை முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒருவிஷயமாகும், ஏனெனில் அல்லாஹ்(சுபு) இதை அங்கீகரிப்பவரை மறுமையில்தண்டிப்பான் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்த விஷயமாகும்.

sources from warmcall.blogspot.com

No comments:

Post a Comment