Apr 28, 2011

இஸம்கள் ஒழிய.. கிலாபத் வேண்டுமே!

ஹாரூன் மூஸாவின் கவிதை: மனிதனே! ஒரு காசு தந்தவனையும், ஒரு போதும் மறக்காத நீ.. எண்ணிலா அருள் தந்தவனைஎங்ஙனம் மறக்கின்றாய். அழுகின்ற பிள்ளையை அணைக்கின்ற நீ, அல்லல் படுவோரை அழிப்பது சரிதானா? பயிர்ச்செய்கையில் களையகற்றும் நீ, நன்மையை ஏவிக் கொண்டே தீமையைப் புரியலாமா? இறைவன் தந்த வாழ்வை இயற்கை மறுப்பதில்லை. இலக்கு இல்லாத வாழ்வை இறைவன் ஏற்பதில்லை.நீரில்லாமல் உயிர் வளருமா? காற்றில்லாமல் உயிர் வாழுமா? அழைப்பில்லாமல் சமூகம் மாறுமா?..ஆட்சியில்லாமல் இஸ்லாம் பூரணமாகுமா?. இருள்கள் நீங்க.. ஓளி வேண்டுமே! இஸம்கள் ஒழிய.. கிலாபத் வேண்டுமே! விரிவாக



ஹாரூன் மூஸா

பயிர்களுக்கு மட்டும்
நல்ல சூழலைக்
கொடுக்கின்றோம்.
மனிதர்களுக்கோ மறுக்கின்றோம்.

நாய்களுக்கு மட்டும்
நல்ல வளர்ப்பைத்
தருகின்றோம்.
மனிதர்களுக்கு மறுக்கின்றோம்.

விளையாட்டில்
முழுக்காலத்தையும் கழிக்கின்றோம்.
கேளிக்கையில்
முழுக் கவனத்தையும் கொடுக்கி;றோம்.

மார்க்கம் என்றால்
சில நிமிடமும் இல்லை.
மறுமை பற்றி
சிறு நினைவும் இல்லை.

குணமுள்ள குடிமகனை
கூட்டில் அடைக்கின்றோம்.
பணமுள்ள பாவிக்கு
கம்பளம் விரிக்கின்றோம்.

மனித உடலோ
உணவோடும்
உடற்பயிற்சியோடும்
செழிப்பில் வாழ்கின்றது.

மனித மனமோ
எந்தத் தீனும்
ஏந்தப் பயிற்சியும் இல்லாமல்
ஆன்மீக வறுமையில் சாகின்றது.

ஹலால், ஹராம் அற்றுப் போன
தொழில்களை அமைத்தோம்.
பண்பு பாசம் அழிந்து போன
பாலியலை வளர்த்தோம்;;.

ஆடையின் அளவைக்
குறைத்துக் கொள்கிறோம்.
போதையின் அளவைக்
கூட்டிக் கொள்கிறோம்.

குற்றங்கள் கூடுதே
என அழுகின்றோம்.
தீமைகளை
மூடி வைக்க மறுக்கின்றோம்.

வீதியில்
ஆபாச விளம்பரங்கள்.
டீவியில்
நா கூசும் நிகழ்ச்சிகள்.

பத்திரிகையில்
ஆன்மீகமற்ற ஆக்கங்கள்.
சஞ்சிகையில்
அறுவறுப்பான அம்சங்கள்.

பதாகையில்
பண்பற்ற படங்கள்.
இணையத்தில்
இனியில்லாத குழப்பங்கள்.

பாலர் வகுப்பிலேயே
பாலியலைக் கற்பித்தோம்.
கல்லூரி வயதிலேயே
உடலுறவை ஊக்குவித்தோம்.

பயிரை மேயும் வேலிகளாக
போதகர்களும் சில உறவினர்களும்.

நாளாந்த செய்திகளோ
நல்லதாக இல்லை.
பிரபல்யம் நாடி,
படு கொலைகள் செய்தான்.

போதை வெறியில்
பாதகங்கள் புரிந்தான்.
ஆடம்பர ஆசையில்
மோசடிகள் செய்தான்.

சகலதை இழந்தும்
சூதாட்டமே என்றான்.
உள்ளாச மோகத்தில்
பெற்றோரை மறந்தான்.

குழம்பிய குடிமகனாலும்
சிதறிய குடும்பத்தாலும்
சீரழிந்த சிந்தனைகளாலும்
அர்த்தமில்லா உணர்வுகளாலும்
சமூகம் சரிகின்றது.

சத்திய மார்க்கத்தோடு
சான்று சொல்ல வந்தவனே
இத்தனையான பின்னும்
எதுவரை தான் காத்திருப்பாய்?

சரிகின்ற சமூகத்திலே
வாழ்ந்து சாகாமல்,
புரிகின்ற புரட்சியிலே
செத்து வாழலாமே!

மனித வாழ்வின் இலட்சியமோ
சொத்துச் சேர்ப்பதல்ல..
சொகுசாய் வாழ்வதுமல்ல.
சுவனம் சேர்வதென்போமே.

இரவின் இருளகற்றும்
பௌர்ணமியை நேசிப்பது போல்
இஸம்களின் இருளகற்றும்
இஸ்லாத்தை ஏற்போமே.

இருளில் தடுமாறுகிறார்கள்.
ஓளி கொடுப்போமே.
வழிகேட்டில் வாழ்கிறார்கள்
வழிகாட்டுவேமே.

இயந்திரத்தை இயக்க
‘கெடலொக்கைப்’ படிப்போம்.
அதே போல் நடப்போம்.
வழிகாட்டும் வான்மறையை
நாளெல்லாம் படிப்போமே.
அதன் வழியில் நடப்போமே.

முகக் கண்ணாடியில்
அழகு பார்ப்போம்
அழுக்கை அகற்றுவோம்
இது போல்..
நபி வழியை நன்றாய்ப் பார்த்து
நம் பணியை இன்றே செய்வோமே.

பொழிகின்ற மழையைத்
தாங்கும் பூமி போல,
உபதேசங்களை
உள்வாங்க வாருங்களேன்.

மனிதனே!
ஒரு காசு தந்தவனையும்,
ஒரு போதும் மறக்காத நீ..
எண்ணிலா அருள் தந்தவனை
எங்ஙனம் மறக்கின்றாய்.

அழுகின்ற பிள்ளையை
அணைக்கின்ற நீ,
அல்லல் படுவோரை
அழிப்பது சரிதானா?

பயிர்ச்செய்கையில்
களையகற்றும் நீ,
நன்மையை ஏவிக் கொண்டே
தீமையைப் புரியலாமா?

தடுக்கி விழுந்தவனைத்
தூக்கி விடும் நீ,
வீழ்ந்த சமூகத்தை
மிதிப்பது சரி தானா?

இறைவன் தந்த வாழ்வை
இயற்கை மறுப்பதில்லை.
இலக்கு இல்லாத வாழ்வை
இறைவன் ஏற்பதில்லை.

முஸ்லிமே!
சொல்லிலும் செயலிலும்
இஸ்லாத்தைக் கலப்போமே.
சமூக உறவிலே,
சகோதரத்துவத்தை வளர்ப்போமே
.
மனித சட்டங்களின் இடத்திலே,
இறை சட்டங்களை வைப்போமே..
இஸம்களின் ஆட்சியை விட்டு விட்டு
இஸ்லாமிய கிலாபத்தை நட்டுவோமே.

மக்களே!
நீங்;கள் கட்டுப்படும் சட்டங்கள்
இஸ்லாமான பின் பாருங்கள்..
இருள்கள் நீங்கி, ஒளி பரவியதை..
தீமைகள் மங்கி , நன்மைகள் ஓங்கியதை..
குழப்பங்கள் குறைந்து,அமைதி கூடியதை..
தீய சமூகம் மறைந்து,
தூய சமூகம் உதிப்பதைக் காண்பீர்கள்.

நீரில்லாமல் உயிர் வளருமா?
காற்றில்லாமல் உயிர் வாழுமா?
அழைப்பில்லாமல் சமூகம் மாறுமா?..
ஆட்சியில்லாமல் இஸ்லாம் பூரணமாகுமா?.

இருள்கள் நீங்க.. ஓளி வேண்டுமே!
இஸம்கள் ஒழிய.. கிலாபத் வேண்டுமே!

வாருங்கள் நண்பர்களே வாருங்கள்..
வல்லவன் அல்லாஹ்வின் பால்
அழைப்போம் வாருங்கள்..
வள்ளல் நபியின் வழியில்
அழைப்போம் வாருங்கள்..

மயிலாடக் கண்டு
மகிழ்வதைப் போல்..
சமூகத்தைப் பார்த்து
சந்தோஷப்படும் நாளை..
.
குயில் பாடக் கேட்டு
குதூகளிப்பதைப் போல்..
தினச் செய்தியால்
சந்தோஷப்படும் நாளை,

நம் வாழ்விலேயே
நஸீபாக்கு நாயனே!

முற்றும்.
ஹாரூன் மூஸா
25 -04 -2011

soruces ourummah.org

1 comment:

  1. இசம் என்றால் மனிதர்கள் பின்பற்றுகின்ற வாழ்வு முறைகளைக் குறிக்கும்.
    உதாரணமாக: சோசலிசம், கம்யுனிசம்,கேபிடலிசம்,பாசிசம், இறைவன் தந்த வாழ்வு முறையான இஸ்லாத்தை தவிர எனைய அனைத்து வாழ்வு முறைகளைக் குறிப்பிட இந்த சொல்லைப் பயன்படுத்தினேன்.

    நன்றி Brother Harun Moosa

    ReplyDelete