Apr 30, 2011

அனைத்தையும் தழுவியதோர் இயற்கை வாழ்க்கை நெறி

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 7

அனைத்தையும் தழுவியதோர் இயற்கை வாழ்க்கை நெறி

இஸ்லாம் தனது நம்பிக்கைகளையும் அந்த நம்பிக்கையின் வழியமைந்த வாழ்க்கையையும் ஓர் அடிப்படையின் கீழே தான் அமைத்திருக்கின்றது. அது இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதே. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற இந்த வாழ்க்கை நெறியின் நுணுக்கமான விளக்கம் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் தெளிந்து நிறைந்து நிற்கின்றது. இஸ்லாம் கூறும் உண்மைகளின் அடிப்படையில் இந்த அகிலமெல்லாம் படைத்தவன் அந்த அல்லாஹ் தான். அல்லாஹ் விரும்பிய போதே இந்த உலகம் உருவானது. இந்த உலகை உருவாக்கிய பின்னர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பின்னால் அவன் சில விதிகளை வகுத்துத்தந்தான். இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் அல்லாஹ் வகுத்துத் தந்த இந்த விதிகளை அணுவும் பிரளாமல் அப்படியே பின்பற்றுகின்றன. அந்த அல்லாஹ் வகுத்துத் தந்த விதிகளை இந்த அகிலத்தில் இருப்பவை அனைத்தும் அப்படியே அடியொற்றி இயங்குவதால் ஓர் அசாதரணமான ஒழுங்குமுறை செயலில் இருக்கின்றது. அருள்மறையாம் திருமறை கூறுகின்றது.

நான் யாதொரு பொருளை (உண்டு பண்ண)க் கருதினால் அதற்காக நாம் கூறுவதெல்லாம் ஆகுக என்பது தான் உடனேயே அது ஆகிவிடுகின்றது. (அல்குர்ஆன் 16:40)

..அவனே யாவையும் சிருஷ்டித்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன் (அல்குர்ஆன் 25:2)


இந்த அகிலத்தின் சீரான செயல்பாட்டின் பின் ஓர் இறைவிருப்பம் இயங்கிக் கொண்டிருக்கின்றது ஓர் அசாதாரணமான ஆற்றல் அதை அசைய வைத்துக் கொண்டிருக்கின்றது. ஓர் விதி அதை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் இந்தப் பிரபஞ்சம் இயக்கத்தில் எந்த முரண்பாடும் இல்லை. இந்தப்பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டிருப்பவை மோதிக் கொள்ளவில்லை. அது போல் அவற்றின் இயக்கத்தில் எந்தக் குளறுபடியுமில்லை. இவற்றின் இயக்கம் திடீரென நின்று விடுவதில்லை இறைவன் விரும்பினாலன்றி, இவற்றின் இயக்கம் இறைவன் விரும்புகின்றவரை தொடரும். இந்த முழு பிரபஞ்சமும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டே இயங்குகிறது. இறைவனின் விருப்பத்திற்கு எதிராக இவற்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவற்றால் செய்ல்படி இயலுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை அல்லாஹ்வின் விரு;பபத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதால் தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் எந்த முரண்பாடுகளுமில்லை. எந்த மோதலுமில்லை. அல்லாஹ் விரும்பினாலன்றி எந்த இடைய10யும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் தலையிட முடியாது.

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்து அர்ஷின் மீது தன் ஆட்சியை நிலைநாட்டினான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். (பகலால் இரவை மூடுகின்றான்)அது தீவிரமாகவே அதனைப் பின்தொடருகின்றது. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களு; அவன் கட்டளைக்கு உட்பட்டிருக்கின்றன. படைப்பும் (படைத்தலும்)அதன் ஆட்சியும் அவனுக்குடையதல்லவா? அகில உலகங்களையும் படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க மேலானவன் (அல்குர்ஆன் 7:54)

மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் மனிதனின் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கும் இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் ஏனையவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கும் இடையே எந்த வேறுபாடுமில்லை. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவனும் மனிதனைப் படைத்தவனும் இறைவன் தான். மனிதனின் உடல் மண்ணிலுள்ள பொருட்களால் ஆனது. ஆனால் அல்லாஹ் மனிதனுக்குச் சில பண்புகளைக் கொடுத்திருக்கின்றான். இந்தப் பண்புகள் தாம் அவனை உயர்ந்தவனாகவும் சிறந்தவனாகவும் ஆக்கிவிடுகின்றது. மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்படாத செயல்கள் அனைத்தும் இறைவனின் நியதிபடி செயல்படுகின்றன. இன்னும் சொன்னால் இறைவனின் விருப்பப்படியே மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன. மனிதன் இறைவன் வகுத்து வழங்கியுள்ள விதிகளின்படியே உலகில் பிறக்கின்றான். அவன் எத்தனை நாள் எத்தனை நிமிடம் தாயின் கருப்பையில் இருந்திட வேண்டும் என்பது முதல் அனைத்தும் அல்லாஹ் வகுத்து வழங்கியுள்ள முறைமையின் படியே நடக்கின்றன. மனிதன் இறைவனின் காற்றையே சுவாசிக்கின்றான். எவ்வளவு காற்றை சுவாசிக்க வேண்டும் என நியமித்துள்ளானோ அவ்வளவு காற்றையே சுவாசிக்கின்றான். அதையும் இறைவன் எப்படிச் சுவாசிக்க வேண்டும் என விதி வகுத்துள்ளானோ அப்படியே மனிதன் சுவாசிக்கின்றான். மனிதனால் உணர்வுபெற முடிகின்றது. அவனால் இன்பத்தையும் துன்பத்தையும் உணர முடிகின்றது. இவற்றில் அவனுக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. அவனால் வேதனைகளை உணர முடிகின்றது. பசி அவனுக்கு அவன் சொல்லாமலேயே வருகின்றது. தாகம் அவனைத் தண்ணீர் அருந்தத் தூண்டுகின்றது. இப்படி எத்தனையோ செயல்களில் அவன் அல்லாஹ்வின் சட்டங்களைப் பின்பற்றி வாழுகின்றான். இவற்றில் அவன் தன் விருப்பப்படி செயல்படலாம் என்றொன்று இல்லை. இவற்றில் அவன் கண்டிப்பாக ஏனைய உயிரினங்களைப் போல் இறைவன் வகுத்த விதிகளின்படி செயல்படுகின்றான். இப்படி மனிதனின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எப்படி நடந்திட வேண்டும் என எந்த இறைவன் விதிவகுத்துத் தந்தானோ அந்த இறைவனே மனிதனின் கட்டுப்பாட்டிற்குள்ளாலுள்ள செயல்களுக்கும் விதிகளை வகுத்துத் தந்துள்ளான். அதுவே ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களாகும். இந்த ஷாPஅத் சட்டங்களை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குட்பட்ட செயல்களிலும் பின்பற்றினால், அவனது இயற்கையோடு ஏற்புடைய சட்டங்களையே பின்பற்றுகின்றான். இதனால் அவன் தன் சொந்த இயல்போடு ஒத்துப்போகின்ற ஒரு வாழ்க்கையையே வாழுகின்றான். இந்த அடிப்படையில் மனிதனைக் கட்டுப்படுத்தும் ஷாPஅத் சட்டங்களம் இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களில் ஒரு பகுதியே ஏனெனில் மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. இறைவனின் ஒவ்வொரு சொல்லும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் விதியாகவே நின்று செயல்படுகின்றது. இறைவனின் சொல் என்பது சில நேரங்களில் நாம் நிறைவேற்றி வாழ்ந்திட வேண்டிய கட்டளைகளாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் நாம் ஒதுங்கியும் விலகியும் வாழ்ந்திட வேண்டிய விலக்கல்களாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் எச்சரிக்கைகளாக வந்திருக்கின்றன. சில நேரங்களில் அவை ஒரு விதி சில நேரங்களில் ஒரு வழி காட்டுதல். இப்படி பலவாறாகவும் வந்த இறைவனின் சொல் ஒவ்வொன்றும் இயற்கையின் விதி இவற்றைக் கொண்டு தான் இந்த உலகின் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் இயக்கமும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் வழங்கிய ஷாPஅத் சட்டங்கள் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தி இயற்கையோடு இயைந்து செல்லச் செய்கின்றன. மனிதன் தன் இயல்போடு ஒத்ததோர் வாழ்;க்கையை வாழ்ந்திடவும் இயற்கையின் இதர விதிகளோடு ஒத்ததோர் வாழ்க்கையை வாழ்ந்திடவும் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் எதுவுமில்லை. தன் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட விஷய்ஙகளிலும் அவன் ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றினால் மட்டுமே அவன் நிம்மதியும் அமைதியும் நிறைந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்திட இயலும். இந்தப் பிரபஞ்சத்;தை இறைவனின் அற்புதமான விதிகள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை துல்லியமாகவும் தெளிவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச்சட்டங்களை இந்த விதிகளை மனிதன் முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாத ஒன்றாகும். இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் பலவிதிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுவதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னும் சொல்வதானால் மனிதன், தன்னையே இயக்கிக் கொண்டிருக்கும் விதிகளில் பலவற்றை இன்னமும் புரிந்துக் கொள்ளவில்லை. மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத (அனிச்சை செயல்கள்)செயல்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை அவன் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது மட்டுமல்ல அவற்றை விட்டு மயிரிழை அளவுகூட அவனால் விலகி நின்று செயல்படவும் முடிவதில்லை.

இதனால்தான் இந்த மனிதனால் தன்னை வழி நடத்திடும் கொள்கைகளையும் விதிகளையும் வகுத்திட இயலாது எனக்கூறுகின்றோம். அப்படி அவன் சில விதிகளைத் தான்தோன்றித்தனமாக யாத்திடுவானேயானால் அவை அவனுடைய இயல்போடு இடிக்கும். முன்னுக்குப்பின் முரண்பட்டு நிற்கும். மனிதனால் ஒருபோதும் அவனது உலகியல் தேவைகளுக்கும் (பௌதீக தேவைகளுக்கும்)ஆன்மீகத் தேவைகளுக்கும் ஒழுக்க மேம்பாடுகளுக்கும் தேவையான நிறைவான சட்டங்களை வகுத்திட இயலாது. அவனது இத்தனை தேவைகளையும் நிறைவேற்றிட நிறைவான விதிகளை இயற்றிட அவனைப்படைத்த அனைத்தும் அறிந்த இறைவனால் மட்டுமே முடியும். இந்த அகிலத்தையும் மனிதன் உட்பட அதிலிருப்பவை அனைத்தையும் படைத்திட்ட இறைவனால் மட்டுமே இயற்கையோடு மோதாத முரண்படாத விதிகளை வகுத்து வழங்கிட இயலும். அந்த இறைவன் தான் இந்த உலகிலுள்ளவற்றையும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவற்றையும் மனிதனின் வாழ்வையும் கட்டுப்படுத்தி ஆட்டிப்படைத்து வருகின்றான். இவை அனைத்தும் அவன் விருப்பப்படியே நடக்கின்றன. ஆக ஷாPஅத் என்ற இறைவனின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து வாழ்வது எல்லா நிலைகளிலேயும் அவசியமும் பயன்பல பயப்பதாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நம்பிக்கைகளும் போதனைகளும் இதையே வலியுறுத்துகின்றன. ஷாPஅத் என்ற இந்தச் சட்டங்களை மட்டும் எல்லா நிலைகளிலேயும் பின்பற்றி வாழும் சமுதாயமே இஸ்லாமிய சமுதாயம் எனப்படும். இந்த ஷாPஅத் சட்டங்களை இறைவனின் சட்டங்களைப் பின்பற்றுவது என்பதன் நுணுக்கமான விளக்கங்களை பெருமானார்(ஸல்)அவர்களின் விளக்கமான வாழ்க்கையிலிருந்து விளங்கிடலாம். இந்த ஷாPஅத் சட்டங்களைப் பின்பற்றி இயற்கையோடு இயைந்து வாழ்ந்திடும் போது மட்டுமே மனிதன் முரண்படாத நிம்மதியானதோர் வாழ்க்கையை வாழ்ந்திட இயலும். மனிதன் இந்த இறைவனின் ஷாPஅத் சட்டங்களின் வழி வாழ்ந்திடும் போது மட்டுமே உள்ளும் புறமும் அலைமோதாத ஓர் வாழ்வைப் பெற முடியும். ஒரு மனிதன் தனது இயல்புகளோடும் இயற்கையின் நியதிகளோடும் ஒத்துப் போகின்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்திடும் போது அவன் ஏனைய மனிதர்களிடமிருந்தும் ஏற்புடையதோர் உறவு வெளிப்படுவதைக் காண்கின்றான். இப்படி மனிதர்கள் அத்தனை பேரும் அவர்களைப் படைத்த அல்லாஹ்வின் ஷாPஅத்தைப் பின்பற்றி வாழ்ந்திடும் போது உலகில் மனிதர்களுக்கிடையே நிலையானதோர் அமைதி நிலவுகின்றது. இந்த அமைதி இயற்கையோடு முழுக்க முழுக்க ஒத்துப்போகும் நிலையானதோர் அமைதி நிம்மதி. இப்படி மனித இனம் நிலையான நிம்மதியை அடைகின்றது. மனிதன் இயற்கையோடும் தனது இயல்போடும் மோதாமல் இயைந்து போகும் ஓர் வாழ்வை வாழும் போது அவனால் இயற்கையின் விதிகளை நெறிகளைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இயற்கையில் அமிழ்ந்து கிடக்கும் ஆயிரமாயிரம் விதிகளை அற்புதங்களைக் கண்டு அவன் அகம் மகிழ்கின்றான்.

புறவாழ்வால் அவற்றைத் தொட்டுப் பார்க்கின்றான். புதிர்களை அவிழ்க்கும் பொக்கிஷமாக அவன் தன்னைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றான். இந்த இறைவழியில் அவன் முன்னேற முன்னேற அவன் இயற்கையின் விந்தைகள் தன் சிந்தைக்குத் தெளிவதை உணர்கின்றான். இந்தப்புதிய அறிவை புதிய தெளிவை அவன் மானும் வாழ வழங்குகின்றான் அல்லாஹ்வின் சட்டங்களின் வழியில். இயற்கையோடு இணைந்து போகும் இந்த வாழ்க்கை நெறியை ஷாPஅத்தை மனிதன் ஏற்றுக் கொண்டு வாழவில்லையென்றால் தனது வாழ்க்கை இயற்கையோடு அடிக்கடி மோதுவதைக் காண்கின்றான். அவனுடைய மிருக இச்சைகள் இந்த இறை நெறியிலிருந்து அவனை மெல்ல மெல்ல தடம் பிறழச் செய்வதைக் காண்கின்றான். இதையே இறைவன் இப்படிக் குறிப்பிடுகின்றான்.

சத்தியம் அவர்களுடைய (தப்பான)விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் ப10மியும் அவற்றிலுள்ளவைகளும் அழிந்தேவிடும். ஆகவே அவர்களுக்கு நல்லுபதேசத்தையே அனுப்பினோம். எனினும் அவர்களோ தங்களிடம் வந்த அந்த நல்லுபதேசத்தையே புறக்கணித்துவிட்டனர் (அல்குர்ஆன் 23:71)

இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. உண்மை என்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் இஸ்லாம் என்ற இந்த இயற்கை மார்க்கத்தின் அடிப்படை. இந்த வானமும் பூமியும் இந்த அடிப்படையில்; தான் நின்று கொண்டிருக்கின்றன. இந்த உலகின் விவகாரங்களும் இறப்பிற்கு பி;ன்னால் வரும் வாழ்க்கையும் இந்த அடிப்படையை அடியொற்றியே நிற்கின்றன. இந்த அடிப்படையின் அடிப்படையில் தான் மனிதன் அந்த இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் முன் பதில் சொல்லிட வேண்டியவனாக இருக்கின்றான். இந்த அடிப்படையிலிருந்து பிறழ்ந்து வாழ்ந்ததற்காகத்தான் மனிதன் தண்டிக்கப்படுகின்றான். இந்த அடிப்படையைக் கொண்டு தான் மனிதன் அந்த இறுதித் தீர்ப்பு நாளில கணிக்கவும் கணக்குக் கேட்கவும் படுகின்றான். இந்த அடிப்படை அல்லாஹ்வின் சட்டங்கள் தாம் இந்த அகிலம் அனைத்தையும் ஆண்டு வருகின்றது. இந்த அல்லாஹ்வின் சட்டங்களையே ஷாPஅத்தை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இயற்கையின் தேவை. இறைவன் கூறுகின்றான் : உங்களுக்கு(ம் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக நாம் உங்களுக்கு அருளி இருக்கின்றோம் (இனியாவது)நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? அக்கிரமக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்)வேறு ஜனங்களை உற்பத்தி செய்தோம். அவர்களும் வேதனையின் அரவததைக் கேட்ட மாத்திரத்தில் (தங்கள் ஊரைவிட்டு)ஓட ஆரம்பித்தார்கள். (அது சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் ஓடாதீர்;கள் நீங்கள் மிக்க ஆடம்பரமாக (ச் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டு)வசித்திருந்த உங்கள் வீடுகளுக்கே நீங்கள் திரும்புங்கள் அங்கு நீங்கள் நன்கு உபசரிக்கப்படலாம் (என்று கூறினோம்). அதற்கவர்கள் எங்களுடைய கேடே நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறி (ப் பாவிகளாகி)விட்டோம் என்று கூக்குரலிட்டார்கள். அவர்களுடைய அந்தக் கூக்குரல் அறுவடை செய்யப்பட்ட வயலைப்போல (அவர்களை அழித்து)அசைவின்றி அமர்த்தும் வரை நீடித்திருந்தது. வானங்களையும் ப10மியையும் அவற்றின் மத்தியிலுள்ளவைகளையம் (வீண்)விளையாட்டுக்காக நாம் சிருஷ்டிக்கவில்லை. நாம் (வீண்)விளையாட்டுக்காரனாக இருந்து (விளையாட வேண்டும் என்று)நாம் கருதியுமிருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்துக்கொண்டிருப்போம். அவ்வாறன்று மெய்யாகவே பொய்யின் மீது எறிகின்றோம். அது (அதன் தலையை)உடைத்து விடுகின்றது. பின்னர் அது அழிந்தும் விடுகின்றது. (இவ்வாறு இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும் சந்ததி உண்டென்றும் )நீங்கள் கூறுவதன் காரணமாக உங்களுக்குக் கேடுதான். வானங்களிலும் ப10மியிலும் உள்ள யாவும் அவனுக்குரியவையே அவனுடைய சந்ததியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி அவர்களும் அவனுடைய அடியார்களே அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவோ சோர்வுறவோ மாட்டார்கள். அவர்கள் இரவு பகல் இடைவிடாது (எந்நேரமும்)அவனைத் துதிசெய்து போற்றிக் கொண்டேயிருக்கின்றனர். (அல்குர்ஆன் 21: 10-20) இந்த உலகம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டது. அவனுடைய விருப்பம் அவன் அமைத்துத்தந்த நியதி, சட்டங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டே இயங்குகின்றது. இந்த உண்மைக்கு உட்பட்டே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது. மனிதனின் இயல்பும் இயற்கையும் இதற்கு உட்பட்டதே. மனித இயல்பும் இயற்கையும் இந்த உலகம் அந்த ஏக இறைவனின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றது என்ற உண்மையை விளம்பிக் கொண்டே இருக்கின்றன. இதனால் தான் இந்த உலகின் இயக்கத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை. நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்திலிருப்பவை எந்தத் திட்டமுமில்லாமல், எந்த நெறியுமில்லாமல் இயங்கிக் கொண்டோ சுழன்றுகொண்டோ இருக்கவில்லை. ஏதோ இயங்க வேண்டுமே இயங்குவோம் என்றும் அவை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அவற்றிற்கென ஒரு திட்டமும் சட்டமும் இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை விளையாட்டாகப் படைக்கபட்டவையுமில்லை. அவற்றோடு யாரும் விளையாடிக் கொண்டும் இருக்கவில்லை. அவை அவற்றிற்கென விதிக்கப்பட்ட வரையறைக்குள் தரப்பட்ட தெளிவான நீண்டதிட்டத்தின் கீழ் முறையாகவும் சீராகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் வரையறைகளை வகுத்துத்தந்த இறைவன் தான் இவற்றிற்குத் திட்டங்களையும் தெளிவான பாதைகளையும் வகுத்து வழங்கிய இறைவன் தான் மனிதனுக்கும் வரையறைகளையும் விதிகளையும் அருளி இருக்கின்றான். இதில் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் எங்கே ஆரமபிக்கின்றன என்றால் மனிதன் இந்த இறைநெறிகளை வரையறைகளை மீறிடும் போதுதான். மனிதன் தானே தோன்றியவன் தானே எல்லாம் என்ற மமதைகளுக்குட்பட்டு தனது விருப்பம் தனது கருத்து என்பனவற்றிற்குக் கீழ்ப்படிந்து இறைவனை எதிர்க்கும் போதே மோதல்கள் ஏற்படுகின்றன. மனிதன் தனக்கும் இன்னும் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவைகளுக்கும் உணவளித்து வாழவைத்துவரும் இறைவனின் வழிகாட்டுதல்கள் வழி வாழாமல் அவற்றிற்கு நேர் எதிரான விதிகளைப் பின்பற்றிடும் போதே இந்த உலகில் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன. மனிதன் இறைவனின் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படியாமல் அவற்றிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்திடும் போது அவன் இயற்கைக்கு எதிராகவும் கிளர்ந்து விடுகின்றான் என்பதே உண்மை இஃதோடு மட்டுமல்லாமல் அவன்தன் இயல்புக்கும் இயற்கைக்கும் எதிராகக் கிளர்ந்து விடுகின்றான் என்று பொருள். இப்படி இயற்கைக்கும் தனது இயல்புகளுக்கும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளுக்கும் எதிராக மனிதன் கிளர்ந்து விடுவதால் மனிதர்களுக்குள் சண்டையும் சச்சரவுகளும் போர்களும் நிரந்தர நடப்புகாளகி விடுகின்றன. மனிதன் சொந்த இனத்தை அழிப்பதற்கே வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றான். இதற்காகவே தனது ஆற்றல்களையெல்லாம் பயன்படுத்துகின்றான். முடிவில் மனிதனின் வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட்டிட வேண்டிய இயற்கை வளங்களும் அவனது அறிவும் அவனது அழிவுக்கே பயன்படுகின்றன. இங்கே நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அல்லாஹ்வின் சட்டங்களை அடிபணிந்து வாழ்வதென்பது இறப்பிற்குப் பின்வரும் மறுமை என்ற மறுவுலக வாழ்;க்கைக்கு மட்டுந்தான் எனச் சிலர் கருதுகின்றனர். இந்த உலக வாழ்க்கை மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரும் வாழ்க்கை. இவை இரண்டும் வேறு வேறானவையல்ல. இவை இரண்டும் மனிதனின் மொத்த வாழ்க்கையில் இரண்டு பகுதிகள். ஒன்றுக்கு ஒன்ற துணை நிற்பது. ஒன்றோடொன்று இணைந்து நிற்பது. இறைவன் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் இந்த இரண்டு வாழக்க்கைகளுக்கும் இணைந்தே வழிகாட்டுகின்றன. இந்த உலகை அந்த மறுவுலக வாழ்க்கையைச் சுபிட்சமாக ஆக்கிடும் வகையில் நெறிப்படுத்தி வகைப்படுத்தித் தருகின்றன அல்லாஹ்வின் வழி காட்டுதல்கள். இந்தப் பிரபஞ்சம் அதில் சஞ்சரிக்கும் மனிதனின் வாழ்க்கை அந்த மனித வாழ்வின் இன்னொரு பகுதியாம் மறுமை வாழ்க்கை இவையனைத்தையும் சீராகவும் சிலாக்கியமாகவும் இயற்கையோடும் மனித இயல்போடும் இயைந்து போவதாக அமைத்துத் தருகின்றன அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள். இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு இப்படியோர் அலாதியான அற்புதமான சிறப்பும் தனித்தன்மையும் உண்டு. இந்தச் சிறப்பு இந்த அற்புத ஆற்றல் வேறு எந்த வழிகாட்டுதலுக்குமில்லை. மனித மூளையில் உருவாகும் வழிகாட்டுதல்களுக்கும் இல்லை. இந்தச் சிறப்புத் தன்மைகளால்தான் இந்த இறைவனின் வழிகாட்டுதல்களுக்குச் சில சிறப்பான தனிப் பொறுப்புகள் இருக்கின்றன. இதேபோல் இன்னும் சில கடமைகளும் இருக்கின்றன. வேறு எந்த வழிகாட்டுதல்களுக்கும் இந்தப் பொறுப்பும் கடமையுமில்லை. இந்த விளக்கங்களை மனதில் வைத்துப் பார்த்தால், ஷாPஅத் சட்டங்களை அல்லாஹ்வின் சட்டங்களைக் கீழ்ப்படிந்து நடப்பது மனித வாழ்க்கையை மனிதனின் இயற்கையோடும் நம்முன்னே விரிந்து நிற்கும் இயற்கையின் இதர விதிகளோடும் இணைந்து செல்ல வைப்பது என்றாகிவிடுகின்றது. இதனால் தான் மனிதன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் எந்த நிலையிலும் கீழ்ப்படிந்திடக் கூடாது எனப் பணிக்கப்பட்டுள்ளான். இதனால் தான் மனிதன் இதர மனிதர்களை அடிபை;படுத்தித் தனது விதிகளைத் திணித்திடக்கூடாது எனத் தடுக்கப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்தின் இதர விதிகளை வகுத்து இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனின் விதிகளையே மனிதன் பின்பற்றிட வேண்டும். இந்த உண்மையை நபி இப்ராஹீம்(அலை)அவர்களுக்கும் நம்ரூத் என்ற ஆட்சியாளனுக்கும் இடையே இடம் பெற்ற வாதம் ஊர்ஜிதப்படுத்துகின்றது. நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் இறைவனுக்கு முற்றாக வழிப்பட்டவர்கள். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் தந்தை எனப் பெருமையோடு அழைக்கப்படுபவர்கள். நம்ரூத் தனது மக்களின் மேல் தனக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கின்றன என அதிர்ந்தவன். அந்த அப்பாவி மக்கள்மேல் அதிகார போதையில் அத்தனை அநியாயங்களையும் அவிழ்த்து விட்டவன். அவன் தனது அதிகாரத்தின் எல்லைக்குள் இல்லை என்று ஒத்துக்கொண்டவை வானமும் விண்மீன்களும் தாம். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வானத்தின் மீதும் அதில் நீந்தும் விண்மீன்கள் மீதும் யாருக்கு அதிகாரம் இருக்கின்றதோ அவனே மனிதர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் பெற்றவன் என்று வாதித்தபோது நம்ரூத் வாயடைத்துப் போனான். இந்த விவாதம் பின்வருமாறு:

(நபியே) நீர் ஒருவனைக் கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சிக் கொடுத்ததற்காக அவன் (கர்வங் கொண்டு)இப்ராஹிமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கஞ் செய்தான். அது சமயம் இப்றாஹீம் எவன் உயிர்ப்பிக்கவும் மரிக்குமாறும் செய்கின்றானோ அவன் தான் என்னுடைய இறைவன் என்று கூறியதற்கு அவன் நானும் உயிர்ப்பிப்பேன் மரிக்குமாறும் செய்வேன் என்று கூறினான். (அதற்கு)இப்ராஹீம் அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்குத் திசையில உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு எனக் கூறினார். ஆகவே (அல்லாஹ்வை)நிராகரித்த அவன் (எவ்வித விடையும் அளிக்க வகையறியாது திகைத்து)வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார ஜனங்களுக்கு (விடையளிக்க)வழிகாட்டுவதில்லை. (அல்குர்ஆன் 2:258)

அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி வேறு மார்க்கத்தையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் ப10மயிலும் உள்ளவை யாவுமே (அவை)விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையாவும்)அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படும் (அல்குர்ஆன் 3:83)


தொடர்ந்து வரும்...

Sources From warmcall.blogspot.com

No comments:

Post a Comment