May 8, 2011

கிலாபத் - الخلافة நோக்கி இயங்குவது கடமையா?

உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய தலைமைதான் கிலாபத்தாகும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்தின் செய்தியை உலகெங்கிலும் தவா மூலம் எடுத்துச் செல்வதும் அதன் பணியாகும், மேலும் அது இமாமத் என்றும் இமாரத் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களாகும், பல்வேறு ஸஹீஹ் ஹதீஸ்கள் இவற்றை இந்த அர்த்தத்தில்தான் பிரயோகித்திருக்கின்றன, ஷரியா உரைகளான குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) சுன்னா ஆகியவற்றில் இந்த சொற்களின் அர்த்தங்கள் ஒருபோதும் வேறுபட்டதில்லை, கிலாபத் அல்லது இமாமத் ஆகிய வார்த்தைகளை கட்டாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை மாறாக அவற்றின் அர்த்தங்களை கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உலகிலுள்ள முஸ்லிம்கள் கிலாபத்தை நிலைநாட்ட வேண்டியது கட்டாய கடமையாகும், அல்லாஹ்(சுபு) முஸ்லிம்கள் மீது விதித்துள்ள மற்ற கடமைகளைப் போலவே இந்த கடமையையும் துரிதமாக நிறைவேற்றுவது அவர்கள் மீது கட்டாயமாக இருக்கிறது. இதில் விருப்பு வெறுப்பு கொள்வதற்குகோ அல்லது அலட்சிப்படுத்துவதற்கோ இடம் கிடையாது, இந்த கட்டாய கடமையை நிறைவேற்றுவதை முஸ்லிம்கள் புறக்கணிக்கும் பட்சத்தில் அது அவர்கள் மீது மிக்பெரும் பாவமாக இருந்துவரும் என்பதோடு அதற்கு அல்லாஹ்(சுபு) விடம் கடுந்தண்டனை கிடைக்கும்.

குர்ஆன், சுன்னா மற்றும் இஜ்மாஅஸ்ஸஹாபா ஆகியவற்றில் முஸ்லிம்கள் ஒரு கலீபாவை கட்டாயம் நியமிக்கவேண்டும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.


குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஆதாரங்கள்:

அல்லாஹ்(சுபு) இறக்கியருளியதைக் கொண்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்யுமாறு அவன் தன் தூதருக்கு(ஸல்) கட்டளையிட்டுள்ளான், இந்த கட்டளை திட்டவட்டமானதாகவும் நிச்சயமானதாகவும் (Decisive - جازم) இருக்கிறது, அல்லாஹ்வின்தூதரை(ஸல்) நோக்கி கூறிய உரையில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ 5:48

ஆகவே அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் ஆட்சிசெய்வீராக. மேலும் உம்மிடம் சத்தியம் வந்த பின்னர் அவர்களின் மனஇச்சைகளை நீர் பின்பற்றக்கூடாது, ( அல்மாயிதா 5:48)

وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ 5:49

அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களிடையே ஆட்சிசெய்வீராக மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடக்கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக! (அல்மாயிதா 5:49)

அல்லாஹ்வின்தூதருக்கு(ஸல்) மட்டும் உரியது என்ற குறிப்பிட்ட ஆதாரம் இல்லாதவரையில் அல்லாஹ்(சுபு) அவனது தூதரை(ஸல்) நோக்கி கூறிய உரைகள் அனைத்தும் உம்மாவிற்கும் உரியவையாகும், இந்த வசனங்களில் அத்தகைய குறிப்பிட்ட ஆதாரம் எதுவும் இல்லை என்ற காரணத்தால் அல்லாஹ்(சுபு) வின் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற இந்த கட்டளை முஸ்லிம்களுக்கும் உரியதாகும், கிலாபத்தையும் இஸ்லாத்தின் அதிகாரத்தையும் நிலைநாட்டாமல் அல்லாஹ்(சுபு) வின் சட்டங்களை நிலைநிறுத்த முடியாது என்பதோடு அல்லாஹ்(சுபு) அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருப்பவர்களுக்கு கீழ்படியவேண்டும் என்பதை பர்லாக ஆக்கியிருக்கிறான், உம்மத்தின் விவகாரங்களை கவனித்துக் கொள்வதற்கு அதிகாரம் பெற்றவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கவேண்டியது வாஜிப் என்பதை குறிப்பிடும்போது அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ 4:59

ஈமான் கொண்டவர்களேõ அல்லாஹ்விற்கும் (இந்த) தூதருக்கும் கீழ்படியுங்கள் இன்னும் உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள், ( அந்நிஸா 4:59)


அதிகாரம் பெற்றவர்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு கட்டுப்படவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கூறமாட்டான். ஆகவே அதிகாரஅமைப்பான கிலாபத் இருப்பது வாஜிப் என்பதும் இல்லையெனில் அதை உருவாக்குவது வாஜிப் என்பதும் இதன்மூலம் விளங்கிக் கொள்ளப்படுகிறது ஏனெனில் அதிகாரம் பெற்றவர்களுக்கு கட்டுப்படவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டிருப்பதால் அந்த அதிகார அமைப்பு இல்லாவிடில் அதைக் கொண்டுவரவேண்டும் என்பதை இந்த கட்டளை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது, இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலாபத் நிலைபெற்றிருக்குமாயின் ஹுகும்ஷரியா விதித்துள்ள பல பர்லுகள் நிறைவேற்றப்படும். கிலாபத் நிலைநாட்டப்படவில்லை எனில் ஹுகும்ஷரியா முஸ்லிம்களின் வாழ்வியலில் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும், ஆகவே இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலாபத் நிலைபெற்றிருப்பது வாஜிபாகும். அது இல்லாத நிலை ஏற்படுமாயின் பிறகு ஹராமான விஷயங்கள் வாழ்வியலில் நிலைபெற்று ஹுகும்ஷரியா இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுவிடும்.

சுன்னாவில் இடம்பெற்றுள்ள ஆதாரங்கள்:

நபி (ஸல்) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹிவின்தூதர்(ஸல்) கூறியதை செவியுற்றதாக இப்ன்உமர்(ரலி) என்னிடம் அறிவித்ததாவது.

من خلع يداً من طاعة لقي الله يوم القيامة لا حجة له، ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية

(கலீபாவின்) பைஅத்திலிருந்து எவரேனும் தமது கையை விலக்கிக் கொள்வாராயின் மறுமைநாளில் அவர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார், மேலும் எவரேனும் தமது கழுத்தில் (கலீபாவின்) பைஅத் இல்லாத நிலையில் மரணம் அடைவாரேயானால் அவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைந்தவர் ஆவார்.

ஆகவே கழுத்தில் பைஅத் (البيعة) இருப்பதை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கட்டாயமாக்கி இருக்கிறார்கள். மேலும் கழுத்தில் பையஅத் இல்லாதநிலையில் மரணம் அடைபவர் ஜாஹிலியத்தில் மரணம் அடைகிறார் என்றும் விவரித்துள்ளார்கள், கலீபாவையன்றி வேறொருவருக்கும் பைஅத் செய்யக்கூடாது என்பதோடு கலீபாவின் பைஅத்தை கழுத்தில் பெற்றிருப்பதை ஒவ்வொரு முஸ்லிமிற்கும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள், இருந்தபோதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் நேரடியாக கலீ*பாவிற்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்பதை அவர்கள்(ஸல்) கட்டாயம் ஆக்கவில்லை. மாறாக சட்டரீதியான தகுதியுடைய ஒவ்வொரு முஸ்லிமின் கழுத்திலும் பைஅத்தை நிலைபெற செய்யக்கூடிய கிலாபத் இருக்க வேண்டியதன் அவசியம் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ஒவ்வொரு முஸ்லிமும் கலீபாவிடம் நேரடியாக பைஅத் செய்யவேண்டும் என்று அது குறிப்பிடவில்லை.

ஆகவே அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) இந்த ஹதீஸ் கலீபாவை நியமனம் செய்வது கட்டாயம் என்பதற்குரிய ஆதாரமாக இருக்கிறதே ஒழிய கலீபாவுக்கு பைஅத் கொடுப்பது கட்டாயம் என்பதற்குரிய ஆதாரமாக இல்லை, இது ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) ஒரு முஸ்லிம் மரணம் வரும்வரை தமது கழுத்தில் பைஅத் இல்லாதநிலையில் இருப்பதை கண்டித்து இருக்கிறார்களே தவிர பைஅத் கொடுக்காதவரை அல்ல.

அபூஹுரைரா(ரலி) விடமிருந்து அல்அரஜ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹிவின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

إنما الإمام جُنة يُقاتَل من ورائه ويُتّقى به

அறிந்துகெள்ளுங்கள்õ இமாம் (மக்களுக்கு) கேடயம் ஆவார். அவர் பின்னால் நின்று (மக்கள்)போர்புரிவார்கள் அவரைக்கொண்டே தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

அபூஹிஸம்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பபட்டிருப்பதாவது.

நான் ஐந்துவருடங்கள் அபூஹுரைராவுடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அவர் அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.

كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وأنه لا نبي بعدي، وستكون خلفاء فتكثر، قالوا: فما تأمرنا ؟ قال: فوا ببيعة الأول فالأول، وأعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم

பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீபாக்கள் வருவார்கள், அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், (அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள் அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாகõ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக இப்ன்அப்பாஸ்(ரலி) அறிவித்திருப்பதாவது.

من كره من أميره شيئاً فليصبر عليه، فإنه ليس أحد من الناس خرج من السلطان شبراً فمات عليه إلا مات ميتة جاهلية

எவரேனும் தமது அமீரிடம் அவர் விரும்பாதவற்றை காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும், ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள்õ எவரேனும் ஒருவர் தம்மை இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்து (சுல்தான்) ஒருமுழம் அளவு விலகிய நிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியாவில் மரணம் அடைந்தவர் ஆவார்.

முஸ்லிம்களின் விவகாரங்களை கலீபாக்கள் நடத்திச் செல்வார்கள் என்று இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அறிவித்திருக்கிறார்கள். மேலும் கலீபாவை பாதுகாக்கும் கேடயம் என்றும் விவரித்துள்ளார்கள், இமாமை கேடயம் என்று அறிவித்துள்ளது இமாம் இருப்பதால் ஏற்படும் நன்மையை குறித்த அறிவிப்பாக இருக்கிறது. இதனடிப்படையில் இது செயலாற்றுவதற்குரிய கட்டளையாக (Command for action) இருக்கிறது. ஏனெனில் அல்லா,ஹ்(சுபு) அருளியவற்றில் (சுன்னாவில்) இறைத்தூதரின்(ஸல்) கண்டனத்தை பெற்றுள்ளவை இருக்குமானால் அவை தடை செய்யப்பட்தற்குரிய (command for prohibition) கட்டளையாகும். இறைத்தூதரின்(ஸல்) புகழ்ச்சியை பெற்றிருக்குமானால் அது செயல்படுவதற்குரிய கட்டளையாகும், கட்டளையிடப் பட்டவை ஹுகும்ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான செயலாக இருக்குமானால் அல்லது அதை செயல்படுத்தாமல் விட்டுவிடும் பட்சத்தில் ஹுகும்ஷரியாவை புறக்கணித்துவிடும் நிலை இருக்குமானால் பிறகு அது திட்டவட்டமான கட்டளையாகும் (Decisive command), முஸ்லிம்களின் விவகாரங்களை நடத்திச் செல்பவர்கள் கலீபாக்கள் என்ற செய்தி இந்த ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கிறது என்பதால் இவை கலீபாக்களை நியமனம் செய்யும் கடமையை சுட்டிக்காட்டுகின்றன, மேலும் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமிருந்து விலகிச்செல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியும் இவற்றில் இடம்பெற்றிருக்கிறது என்ற காரணத்தால் முஸ்லிம்கள் தாங்களாகவே ஆட்சியாளர்களை நியமனம் செய்யவேண்டும் என்ற கட்டளையையும் இந்த ஹதீஸ்கள் சுட்டிக்கட்டுகின்றன, மேலும் முஸ்லிம்கள் கலீ*பாவுக்கு கட்டுப்படவேண்டும் அவரது அதிகாரத்தில் சர்ச்சை செய்பவர்களுக்கு எதிராக போர் செய்யவேண்டும் என்ற இறைத்தூதரின்(ஸல்) கட்டளை கலீபாவை நியமனம் செய்வதற்குரிய கட்டளையாகவும் அவரது அதிகாரத்தில் சர்ச்சை செய்பவர்களுடன் பேரிடுவதன் மூலம் கிலாபத்தை பாதுகாப்பதற்குரிய கட்டளையாகவும் இருக்கிறது,

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக முஸ்லிமில் இடம்பெகற்றுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.

ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر

"'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு (முஸபா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்,

ஆகவே இமாமுக்கு கட்டுப்படவேண்டும் என்ற கட்டளை அவரை(அவரின் அதிகாரத்தை) பாதுகாக்கவேண்டும் என்பதற்குரிய கட்டளையாகும். மேலும் அவரது அதிகாரத்தில் சர்ச்சை செய்பவர்களுடன் போரிடவேண்டும் என்ற கட்டளை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு கலீ*பா மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்குரிய கட்டளையாகும்,


இஜ்மாஅஸ்ஸஹாபாவில் இடம்பெற்றுள்ள ஆதாரங்கள்:

இறைத்தூதர்(ஸல்) மரணத்திற்குப் பின்னர் அவர்களின் இடத்திற்கு ஒருவரை ( நியமிக்கவேண்டும் என்பதில் அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள், இதனடிப்படையில் அவர்கள்(ஸல்) இடத்தில் அபூபக்கரை(ரலி) தோர்வு செய்தாôகள், அவருடைய மரணத்திற்குப் பின்பு உமரையும்(ரலி) அவரது மரணத்திற்குப் பின்பு உஸ்மானையும்(ரலி) தேர்வுசெய்தார்கள், இறந்தவர்களை தாமதமின்றி அடக்கம் செய்வது பர்லு என்றபோதும். இறைத்தூதரின்(ஸல்) தபனுக்கு தயாரிப்பு செய்யவேண்டியவர்கள் அந்தப்பணி முழுமையாக முடிவடைவதற்குள் வேறுபணியில் ஈடுபடுவது ஹராம் என்றபோதும். கலீபாவை தேர்வுசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு அவர்களின்(ஸல்) உடலை தபன் செய்வதை தாமதப்படுத்தியபோது ஒரு கலீபாவை நியமனம் செய்வது கட்டாயம் என்ற ஸஹாபாக்களின் இஜ்மா (ஒருமித்த முடிவு) அழுத்தமான முறையில் வெளிப்பட்டது, இறைத்தூதரின்(ஸல்) தபனுக்கு தயாரிப்பு செய்வதற்கு ஸஹாபாக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்ற நிலையில் அவர்களில் முக்கியமானவர்கள் த*பனுக்கு ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக ஒரு கலீ*பாவை நியமனம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மற்ற ஸஹாபாக்கள் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவிக்கும் வகையில் அமைதியாக இருந்தாôகள்õ இந்த செயலை தடுப்பதற்கும் அல்லது இறைத்தூதரின்(ஸல்) தபனை துரிதமாக நடத்துவதற்கும் ஆற்றல் இருந்தும் இரண்டு இரவுகள் அதை தாமதப்படுத்தியதற்கு அவர்கள் அனுமதித்தார்கள், ஆகவே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதைவிட ஒரு கலீபாவை நியமனம் செய்வது முக்கியமானது என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவின் மூலம் நிரூபிக்கப்ட்டிருக்கிறது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதைவிட ஒரு கலீ*பாவை நியமனம் செய்வது மிகக்பெரிய கடமையாக இல்லாவிடில் இந்த செயல் சட்டத்திற்குப் புறம்பானதாக ஆகியிருக்கும். மேலும் ஸஹாபாக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கலீபாவை நியமனம் செய்வது கட்டாயகடமை என்ற விஷயத்தில் கருத்து உடண்பாடு கொண்டிருந்தார்கள், கலீபா பதவிக்கு யாரை நியமிக்கவேண்டும் என்பதில் அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்த போதிலும் கலீபாவை நியமிக்கவேண்டும் என்ற கடமையில் அவர்கள் ஒருபோதும் கருத்துவேற்றுமை கொண்டது கிடையாது, இறைத்தூதர்(ஸல்) மரணமடைந்தபோதும் நேர்வழி காட்டப்பட்ட கலீபாக்கள் மரணமடைந்தபோதும் ஸஹாபாக்கள் ஒருபோதும் கலீபாவை நியமனம் செய்யும் கடமையில் கருத்து வேற்றுமை கொண்டதில்லை, ஆகவே ஒரு கலீபாவை முஸ்லிம்கள் கட்டாயம் நியமனம் செய்யவேண்டும் என்பதற்கு இஜமாஅஸ்ஸஹாபாவில் உறுதியான முறையிலும் தெளிவான முறையிலும் ஆதாரம் இருக்கிறது.

வாழ்வியலின் அனைத்து விவகாரங்களிலும் ஷரியத்தை நிலைநாட்டுவதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறை வாழ்வில் நிலைநிறுத்தவேண்டும், இது முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய கட்டாயகடமை என்பது திட்டவட்டமான ஆதாரங்கள் மூலம் உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது, அதிகாரம் பெற்ற ஒரு ஆட்சியாளர் இல்லாவிடில் இதை நிறைவேற்றமுடியாது,

ஷரியாவின் விதிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது.

إن ما لا يتم الواجب إلاّ به فهو واجب
"'ஒரு வாஜிபை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் அனைத்தும் நிச்சயமாக வாஜிபே ஷரியாவின் இந்த விதிமுறையின்படி ஒரு கலீபாவை நியமனம் செய்யவேண்டியது கட்டாய கடமையாகும்,

ஆகவே கிலாபத்தை நிலைநாட்டவேண்டும் என்பதும் முஸ்லிம்களிடம் அதிகாரம் இருக்கவேண்டும் என்பதும் கட்டாயம் (பர்லு) என்பதற்கு இவை தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன. மேலும் ஆட்சிப்பொறுப்பை வகிக்கக்கூடிய கலீபா ஒருவரை நியமனம் செய்வது அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கே தவிர ஆட்சிஅதிகாரத்தை அடைந்துகொள்வதற்கு அல்ல,

அவ்ப் இப்ன் மாலிக்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.


அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم ويصلون عليكم وتصلّون عليهم، وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم. قيل يا رسول الله أفلا ننابذهم بالسيف، فقال: لا، ما أقاموا فيكم الصلاة، وإذا رأيتم من ولاتكم شيئاً تكرهونه فاكرهوا عمله ولا تنزعوا يداً من طاعة

"'தீனின் சிறந்த தலைவர்கள்(இமாம்கள்) உங்களை நேசிப்பார்கள் நீங்களும் அவர்களை நேசிப்பீர்கள். அவர்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள் நீங்களும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீர்கள், தீனின் மோசமான தலைவர்கள் உங்களை வெறுப்பார்கள் நீங்களும் அவர்களை வெறுப்பீர்கள். அவர்கள் உங்களை சபிப்பார்கள் நீங்களும் அவர்களை சபிப்பீர்கள், அல்லாஹ்வின்தூதரே(ஸல்) அவர்களை அகற்றுவதற்கு நாங்கள் வாளேந்த வேண்டாமா? என்று (ஸஹாபாக்கள்) வினவினார்கள், இல்லை. உங்கள் மத்தியில் அவர்கள் தொழுகையை (இஸ்லாத்தை) நிலைநிறுத்தும்வரை (அவ்வாறு செய்யவேண்டாம்) நீங்கள் வெறுக்கக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் உங்கள் ஆட்சியாளரிடமிருந்து நீங்கள் கண்டால் அவர்களின் செயலை வெறுத்துவிடுங்கள் ஆனால் அவர்களுக்கு கட்டுப்படுவதிலிருந்து உங்கள் கைகளை நீங்கள் விலக்கிக் கொள்ளவேண்டாம்,

இந்த ஹதீஸ் நல்ல தலைவர்கள் பற்றியும் மோசமான தலைவர்கள் பற்றியும் அறிவுறுத்துகிறது. மேலும் தொழுகையை அதாவது இஸ்லாத்தை அவர் நிலைநிறுத்தும்வரை அவரின் அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவது ஹராம் என்பதையும் தெளிவாக குறிப்பிடுகிறது, ஆகவே இஸ்லாத்தின் திட்டவட்டமான உரைகளின் அடிப்படையில் அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்தி இஸ்லாத்தின் செய்தியை தவா மூலம் உலகிற்கு எடுத்துச்செல்லக்கூடிய கலீ*பாவை நியமனம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது, மேலும் இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலா*பத்தை நிர்மாணிப்பதையும் முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாப்பதையும் அல்லாஹ்(சுபு) *பர்லாக ஆக்கியிருப்பதால் இது முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய கட்டாய கடமையாக இருக்கிறது, எனினும் இது ஒரு கூட்டுக்கடமையாகும் (*பர்லுல் கி*பாயா) ஆகவே உம்மத்திலுள்ள ஒரு கூட்டத்தினர் இந்த கடமையை நிறைவேற்றிவிடும் பட்சத்தில் *பர்ல் நிறைவேறிவிடும், இதன்பின்னர் உம்மத்திலுள்ள மற்ற முஸ்லிம்கள் மீதுள்ள பொறுப்பு தானாகவே இறங்கிவிடும், மாறாக உம்மத்திலுள்ள ஒரு கூட்டத்தினர் இதை நிறைவேற்றுவதற்கு பணியாற்றியும் *பர்லை நிறைவேற்ற முடியவில்லை என்றால் பிறகு அனைத்து முஸ்லிம்கள் மீதும் இந்த பொறுப்பு ஏற்பட்டுவிடும் மேலும் ஒரு கலீ*பாவை நியமனம் செய்யும்வரை ஒவ்வொரு முஸ்லிம் மீதும் இந்த *பர்ல் இருந்து கொண்டிருக்கும் அதாவது இந்த பர்லை நிறைவேற்றாத பாவத்தை அனைத்து முஸ்லிம்களும் சுமக்கவேண்டியிருக்கும்,

முஸ்லிம்களுக்கு உரிய கலீபா ஒருவரை நிலைநிறுத்தும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வது மிக்பெரிய பாவமாகும் ஏனெனில் அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்டுத்துவதும் முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துவதும் எதைச்சார்ந்து இருக்கிறதோ அத்தகைய முக்கியமான *பர்லை நிறைவேற்றுவதிலிருந்து இது விலகி இருக்கும் செயலாகும், ஆகவே முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய ஒரு கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியிலிருந்து விலகியிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளும் பாவமான செயலாகும், கலீ*பா இன்றி இருப்பதற்கு முஸ்லிம்கள் உடண்பட்டு இருந்தாôகள் என்றால் பிறகு இந்த பாவம் ஒட்டுமொத்தமாக முழுஉலகத்திற்கும் பரவிவிடும், மற்றவர்கள் இதை செய்வதற்கு முன்வராதபோதும் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் கலீ*பாவை நிலைநிறுத்துவதற்கு கடும்முயற்சி மேற்கொள்வார்களேயானால் அவர்களின் தோள்களிலிருந்து *பர்லை நிறைவேற்றாத பாவம் நீங்கிவிடும் அதேவேளையில் கலீ*பா ஒருவர் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும்வரை இந்த *பர்லை நிறைவேற்றாத பாவம் மற்றவர்கள் மீது நிலைகொண்டிருக்கும்õ *பர்லை நிறைவேற்றுவதிலிருந்து விலகியிருப்பவரைப் பொறுத்தவரை முந்தைய கலீ*பா சென்றதற்குப் பின்னர் மூன்று நாட்கள் (கலீ*பா இல்லாதநிலையில்) கடந்துவிட்டால் பிறகு கலீ*பா நியமனம் செய்யப்படும்வரை அந்த பாவம் அவர்மீது நிலைகொண்டிருக்கும் ஏனெனில் அல்லாஹ்(சுபு) அவரிடம் ஒப்படைத்த *பர்லை அவர் நிறைவேற்றவுமில்லை நிறைவேற்றும் பணியில் ஈடுபடவுமில்லை, ஆகவே அவர் இம்மையிலும் மறுமையிலும் இழிவிற்கும் அல்லாஹ்வின் கடும் தண்டனைக்கும் உரியவராவார், கலீ*பாவை நிலைநிறுத்தும் கடமையிலிருந்தோ அல்லது அதை நிறைவேற்றும் செயல்பாடுகளிலிருந்தோ எவரேனும் விலகிக்கொண்டதால் அவர் பாவம் செய்தவர் ஆவார், ஒரு முஸ்லிம் மீது அல்லாஹ்(சுபு) ஏவியுள்ள *பர்லை நிறைவேற்றாமல் அதை அவர் புறக்கணிக்கும் பட்சத்தில் குறிப்பாக மற்ற *பர்ல்களை நிறைவேற்றுவதற்கும் அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கும் இஸ்லாத்தை உயர்நிலைக்கு கொண்டுசெல்வதற்கும் முஸ்லிம்கள் மத்தியிலும் உலகிலுள்ள மற்ற மனிதர்கள் மத்தியிலும் அல்லாஹ்(சுபு) வின் கலிமாவை மேலோங்கச்செய்வதற்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் உள்ள *பர்லை நிறைவேற்றாமல் புறக்கணிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர் அல்லாஹ்(சுபு) வின் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்,

மக்களிடமிருந்து விலகி தனித்திருப்பதைப் பற்றி கூறும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை தனிநபர் மேற்கொள்ளும் வணக்கவழிபாடுகளில் ஒருவர் பின்பற்றுவதற்காக கூறப்பட்டவையாகும், கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியிலிருந்து விலகிக்கொள்வதற்கோ அல்லது இந்த *பர்லை நிறைவேற்றும் கடமையிலிருந்து விலகிக்கொள்பவரின் பாவம் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதற்கோ இவைகளை ஆதாரமாக கொள்ளமுடியாது, ஒருவர் இந்த ஹதீஸ்களை முறையாக ஆய்வு செய்வாரானால் இவை வணக்கவழிபாடுகளில் பின்பற்றவேண்டிய விஷயங்களுடன் தொடர்புடையவை என்றும் இவை முஸ்லிம்களுக்கு மத்தியில் கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியிலிருந்து விலகிக்கொள்வதற்கு உரிய அனுமதி இல்லை என்றும் விளங்கிக்கொள்வார், உதாரணமாக.

ஹுதைபா இப்ன் எமான் (ரலி) அறிவிப்பிலிருந்து அபூஇத்ரிஸ் அல்கூலானி அறிவித்ததாக பஸ்ர் இப்ன் உபைத்துல்லாஹ் அல்ஹல்ரமி அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரியில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.

كان الناس يسألون رسول الله عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني، فقلت يا رسول الله إنّا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر ؟ قال نعم، قلت وهل بعد ذلك الشر من خير ؟ قال نعم، وفيه دخن، قلت وما دخنه ؟ قال قوم يهدون بغير هديي تعرف منهم وتنكر، قلت فهل بعد ذلك الخير من شر ؟ قال نعم، دعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها، قلت يا رسول الله صفهم لنا، قال هم من جلدتنا، ويتكلمون بألسنتنا، قلت فما تأمرني إن أدركني ذلك ؟ قال تلزم جماعة المسلمين وإمامهم، قلت فإن لم يكن لهم جماعة ولا إمام، قال فاعتزل تلك الفرق كلها، ولو أن تعض بأصل شجرة حتى يدركك الموت وأنت على ذلك

"'அல்லாஹ்வின்தூதரிடத்தில்(ஸல்) மக்கள் நன்மையைப் பற்றி வினவிக் கொண்டிருந்தார்கள். தீமை என்னை பீடித்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் அது பற்றி நான் அவர்களிடம் வினவினேன், ஆகவே. அல்லாஹ்வின் தூதரே(ஸல்) நாங்கள் ஜாஹிலியத்தில் இருந்துவந்தோம் பின்னர் அல்லாஹ் (இஸ்லாம் என்ற) நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். ஆகவே இந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் கேட்டேன். ஆம்õ என்று அவர்கள்(ஸல்) பதிலுரைத்தார்கள், அந்த தீமைக்குப் பிறகு ஏதேனும் நன்மை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம். அதில் புகைமூட்டம் இருக்கும்õ என்று அவர்கள்(ஸல்) கூறினார்கள், புகைமூட்டம் என்றால் என்ன? என்று நான் வினவினேன், ஒருகூட்டத்தினர் நேர்வழியின்றி (மக்களுக்கு) நேர்வழி காட்டுவார்கள் அவர்களில் சிலரை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு மறுப்பீர்கள் என்று கூறினார்கள், அந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம். ஒருகூட்டத்தினர் நரகத்தின் வாயிலில் நின்றவாறு (மக்களை) அழைப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டவர்கள் அதில்(நரகத்தில்) எறியப்படுவார்கள்õ என்று கூறினார்கள், அல்லாஹ்வின்தூதரே(ஸல்) அவர்களைப் பற்றி எங்களுக்கு விவரியுங்கள் என்று நான் கூறினேன், அவர்கள் நமது தோலில்(இனத்தில்) உள்ளவர்களாகவும் நமது மொழியை பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறினார்கள், அது என்னை பீடித்துக் கொள்ளும் பட்சத்தில் எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?என்று நான் கேட்டேன், முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களின் இமாமையும் பற்றிப் பிடிப்பீராக என்று கூறினார்கள், அவர்கள் மத்தியில் ஜமாஅத்தும் இமாமும் இல்லை என்றால்?என்று நான் வினவினேன், மரத்தின் கிளையை உமது பற்களால் கடித்தவாறு நீர் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உமக்கு மரணம் ஏற்பட்டாலும் இந்த பிரிவினர்கள் அனைவரையும் விட்டு விலகியிருப்பீராகõ என்று கூறினார்கள்,

முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களின் இமாமையும் பின்பற்றவேண்டும் என்றும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களை விட்டும் விலகவேண்டும் என்றும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) முஸ்லிம்களுக்கு கட்டளை இட்டிருப்பதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது, முஸ்லிம்கள் ஜமாஅத்தையும் இமாமையும் பெற்றிராதபோது என்ன செய்வது என்பது பற்றியும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களைப் பொறுத்து என்ன செய்வது என்பது பற்றியும் கேள்விகேட்ப்பவர் வினவியபோது இத்தகைய கூட்டத்தினரை விட்டு விலகவேண்டும் என்று அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கட்டளை இட்டுள்ளார்களே ஒழிய முஸ்லிம்களைவிட்டு பிரிந்துவிடவேண்டும் என்றோ அல்லது இமாமத்தை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்றோ கட்டளையிடவில்லைõ ஆகவே வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகிக்கொள்ளவேண்டும் என்ற இறைத்துதரின்(ஸல்) கட்டளை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது, மரத்தின் கிளையை தமது பற்களால் கடித்தவாறு தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமக்கு மரணம் நேர்ந்தாலும் வழிகெடுக்கும் கூட்டத்தினருடன் இணையாமல் விலகியிருக்கவேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அழுத்தமாக கூறியுள்ளார்கள், நரகத்தின் வாயிலில் நின்றுகொண்டிருக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகியிருந்தவாறு ஒருவர் தமது தீனை பின்பற்றவேண்டும் என்பது இதன் பொருளாகும், இந்த ஹதீஸ் அறிவிப்பில் கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியை விட்டு விலகியிருப்பதற்கு அனுமதியோ அல்லது விதிவிலக்கோ எவருக்கும் அளிக்கப்படவில்லை மாறாக. தீனை பின்பற்றவேண்டும் என்ற கட்டளைக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களை விட்டு விலகியிருக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது, அந்நிலையில் கூட கலீ*பாவை நிலைநிறுத்தும் பணியில் அவர் ஈடுபடாவிடில் அவர்மீது பாவம் நிலைகொண்டிருக்கும், ஆகவே அவர் மரத்தின் கிளையை தமது பற்களால் கடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மரணம் நேர்ந்தாலும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகியிருந்து தன்னுடைய தீனை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமே ஒழிய முஸ்லிம்களின் ஜமாஅத்திலிருந்து விலகிக்கொள்வதற்கோ அல்லது தீனின் சட்டங்களை நிலைநாட்டும் பணியை மேற்கொள்ளாமல் புறக்கணிப்பதற்கோ அல்லது முஸ்லிம்களுக்கு இமாமை ஏற்படுத்தும் கடமையை விட்டு ஒதுங்கியிருப்பதற்கோ அவருக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது,

மற்றொரு உதாரணம்:

அபூஸயீது அல்குத்ரி(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن

"'ஆடு ஒரு முஸ்லிமின் சிறந்த சொத்ததாக ஆகும்நிலை ஏற்படும்போது அவர் அதனுடன் மலையின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். அவருடைய தீனை அழிவிலிருந்து காக்கும் விதத்தில் (அங்கு) மழை பெய்கிறது,

ஒருவர் முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டு விலகியிருக்கவேண்டும் என்பதையோ அல்லது இறைசட்டங்களை செயல்படுத்துவதிலிருந்து நீங்கியிருக்கவேண்டும் என்பதையோ அல்லது பூமியில் கிலாபத் இல்லாதபோது முஸ்லிம்களுக்கு ஒரு கலீபாவை நிலைநிறுத்தும் பணி மேற்கொள்வதை புறக்கணிக்கவேண்டும் என்பதையோ இந்த ஹதீஸ் குறிப்பிடவில்லை மாறாக. சிந்தனைத்திறன் இல்லாத உணர்ச்சிப்பூர்வமான பாமர முஸ்லிம் ஒருவருக்கு எது சிறந்த சொத்தாக இருக்கும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது என்பதையும் முஸ்லிம்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் ஒருவர் தன்னை தூரமாக்கிக்கொள்வதற்கு இது ஆர்வமூட்டவில்லை என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்,

இதனடிப்படையில் இந்த பூமியின் மேற்பரப்பில் வாழும் எந்த முஸ்லிமிற்கும் அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ள தீனை நிலைநாட்டும் கடமையை விட்டு விலகிக்கொள்வதற்கு அனுமதியில்லை, அதாவது பூமியில் முஸ்லிம்களுக்கு கலீபா ஒருவர் இல்லாதபோது. அல்லாஹ்(சுபு) வின் ஹுதூதை (வரம்புகளை) நிலைநிறுத்தும் இமாம் ஒருவர் இல்லாதபோது. அல்லாஹ்(சுபு) புனிதமாக ஆக்கியவைகளை பாதுகாக்கும் அமீர் ஒருவர் இல்லாதபோது. இஸ்லாமிய தீனின் சட்டதிட்டங்களை நிலைநாட்டி முஸ்லிம்களை லா இலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரஸþலுல்லாஹ் என்ற கலிமாவின் கீழ் ஒன்றிணைக்கும் தலைவர் ஒருவர் இல்லாதபோது. அத்தகைய ஒருவரை கொண்டுவரும் கடமையிலிருந்து விலகிக்கொள்வதற்கு எந்த முஸ்லிமிற்கும் நிச்சயமாக அனுமதி கிடையாது, இந்த மாபெரும் பணியை நிறைவேற்றி முடிக்கும்வரை அதை கைவிட்டுவிடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி என்பது அறவே கிடையாது.

sources from warmcall.blogspot

No comments:

Post a Comment