Jun 5, 2011

தவ்ஹீத் அல் அஸ்மா வஸ் ஸிஃபத்

· அல்லாஹ்வின் பெயர்கள், குணங்கள் இணைவைக்காமல் இருத்தல்.

· அல்லாஹ்வின் திருநாமங்கள், குணங்கள் குர் ஆன் மற்றும் ஹதீஸில் சொல்லப்பட்டவாறு முழுமையாக நம்புதல் வேண்டும்.

· அல்லாஹ்வின் தன்மைகளை எப்படைப்புக்கும் இணையாக்கமல் இருத்தல்

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று குர் ஆன் சொன்னால் இருக்கிறது என்று நம்ப வேண்டும். எப்படி இருக்கும், நம்முடைய கையை போல் இருக்குமா என்றெல்லாம் ஆராயக் கூடாது. ஏனென்றால் நிச்சயமாக அவை நாம் நினைப்பது போல் அல்லது நம்மை போல் இருக்காது. அல்லாஹ் தன்னை பற்றி திருமறையில் அவ்வாறு தான் கூறுகிறான் : “அவனைப் போன்று எப்பொருளும் இல்லை” (திருக்குரான் 42 :11)

அல்லாஹ்வுக்கு அர் ரவூப் (கருணை மிக்கவன்), அர்ரஹீம் (கிருபை மிக்கவன்), அஸ்ஸமது (தேவையற்றவன்) என 99 பெயர்கள் உள்ளன. இப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவனது பண்பை எடுத்துக் காட்டுகின்றன. எனவே இறைவனின் பெயர்களை இறைவனின் அடிமைகளுக்கு சூட்டும் போது அப்து என்ற பெயருடன் சேர்த்து சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு ரஹ்மான் என்று வைக்காமல் அப்துர் ரஹ்மான் என்று பெயர் வைப்பதின் மூலம் பெயரிலும் ஷிர்க்கின் வாடை இல்லாமல் காப்பாற்றப்படுகிறோம். அது போல் அல்லாஹ் அல்லாத வேறு பெயர்கள் வைக்கும் போது அதற்கு முன்னால் அடிமை என்று பொருள்படும் அப்து சேர்த்து வைக்க கூடாது. முஸ்லீம்களிடையே புழக்கத்தில் இருக்கும் அப்துன் நபி, அப்துர் ரஸீல், அப்துல் ஹுசைன், நாகூர் பிச்சை  போன்ற பெயர்கள் வைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.


SOURCES FROM ISLAMIYAKOLGAI.COM

No comments:

Post a Comment