Aug 20, 2011

ரமதான் தக்வாவின் மாதம் மாத்திரமல்ல, பெற்றுக் கொண்ட தக்வாவைக் கொண்டு பல வெற்றிகளையும்; பெற்றுக் கொண்ட மாதம்

இஸ்லாமிய மார்க்கம் பூமியில் நிலை பெறுவதற்கும் தலைத் தோங்குவதற்குமான வெற்றிகள் பல, புனிதம் நிறைந்த இந்த ரமதான் மாதத்தில் தான் நிகழ்ந்துள்ளன என்பது இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து நாம் அறிகின்ற பேருண்மையாகும்.

• இஸ்லாத்தின் முதல் யுத்தமும் முதல் வெற்றியுமான 'பத்ரு'ப் போர் நிகழ்ந்தது ரமதான் 17ம் நாளிலாகும். 

• அரபு தீபகற்பம் முழுவதும் இஸ்லாம் செல்வாக்குச் செலுத்துவதற்கும் உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கம் பரவுவதற்குமான அதி முக்கிய நிகழ்வு மக்கா நகர வெற்றியாகும்.இந்த வெற்றியும் புனித ரமதான் மாதத்திலேயே நிகழ்ந்தது.

• முஸ்லிம்கள் ஐரோப்பா மீது படை யெடுத்தமையானது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.இது 'தாரிக் பின் ஸியாத்' தலைமையில் 'ஸ்பெயின்' வெற்றி கொள்ளப் பட்டதன் மூலம் சாத்தியமானது.இதுவே ஐரோப்பாவுக்கு இஸ்லாமிய தூதை எடுத்துச் சென்ற நிகழ்வாகவும் கருதப்படுகின்றது.இந்த வெற்றியும் புனித ரமதான் மாதத்திலேயே நிகழ்ந்தது.

• முஸ்லிம் சமூகம் சந்தித்த மிகப் பாரிய அழிவு மங்கோலியப் படையெடுப்பால் நிகழ்ந்ததாகும். இதே மங்கோலியருக் கெதிரான மிகப் பெரிய வெற்றி பலஸ்தீனுக் கருகில் உள்ள 'ஐனு ஜாலூத்' என்ற இடத்தில் கலீபா 'குத்ஸ்' தலைமையில் நிகழ்ந்ததுது.இந்த வெற்றியும் புனித ரமதான் மாதத்திலேயே நிகழ்ந்தது. 

எமது வரலாற்றைப் பார்க்கின்ற நாம், எமது வரலாற்றின் அதி முக்கிய நிகழ்வுகள், திருப்பு முனைகள் அல்லாஹ்வின் நாட்டப்படி இந்தப் புனித ரமதான் மாதத்தில் நிகழ்ந்திருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.
பசி,தாகம்,பாலியல் தேவை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவர்களாக மனோ இச்சைப் படி வாழ்வதை விட்டு விட்டு, இறைவனின் விருப்பப்படி வாழ்வதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாம், இறைவனின் சட்டதிட்டங்களை சம்பூரணமாக பூமியில் நிலை நாட்ட வேண்டும் என்ற உணர்வைப் பெறுவதும்; எமது மூதாதையர்கள் பெற்றுத் தந்த புகழையும் கீர்த்தியையும் மீளப் பெற்றுக் கொள்வதற்குரிய அம்சங்களை ஏற்றுக் கொண்டு அதனை நோக்கி மக்களையும் படைகளையும் நகர்த்துவதும் இன்றைய காலத்தில் விரைவாகச் செய்யப்பட வேண்டிய மார்க்கக் கடமையாகும்.

ரமதான் தக்வாவின் மாதம் மாத்திரமல்ல, பெற்றுக் கொண்ட தக்வாவைக் கொண்டு பல வெற்றிகளையும்; பெற்றுக் கொண்ட மாதம் என்பதை நினைவு படுத்தி அதில் மக்களின் கருத்தை வெல்வதனூடாக அல்லாஹ் விரும்புகின்ற இஸ்லாமிய கிலாபத்தை நிலைநாட்டுவது இன்று செய்யப்பட வேண்டிய முக்கிய உழைப்பாகும். 

ஆக்கம்: முஹம்மது இஸ்மாயில்

SOURCES FROM Ourummah.org

No comments:

Post a Comment