இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்ற வெளிப்படையான வடிவம் 'அல்லாஹ்வின் கட்சி ' எனும் இந்த அமைப்பினருக்கு, முஸ்லீம் உம்மத்தினர் மத்தியில் அதீதமான ஈடுபாட்டை கொண்டு வந்த சிறந்த முகமூடி ஆகியது . கெரில்லா தந்திரங்கள் , அதிரடியான தாக்குதல் நடவடிக்கைகள் என, லெபனானை மையம் கொண்டு இயங்கிய இந்த இயக்கம் யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக , உணர்வு ரீதியாகவும் , பழிவாங்கும் வேகத்தோடும் இருந்த முஸ்லீம் உம்மாவின் கருத்தில் தனிப்பெரும் இடத்தையும் பெற்றுக் கொண்டது .
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டின் மீது மிகக் காரசாரமான கருத்துக்களையும் , இரண்டாம் பனிப்போர் பூச்சாண்டித் தர யுத்த இயங்கு விதிகளின் கீழ் ஈரான் சார் பகிரங்க பங்காளிகளாகவும்; தொழிற்பட்ட இந்த இயக்கம் தனது சுய ரூபத்தை புலப்படுத்தும் தெளிவான முகத்தை இன்று சூடு பிடித்துள்ள சிரியக் களத்தில் வெளிப்படுத்தியுள்ளது . அது தான் பசர் அல் அசாத் எனும் 'தாகூத்' படைகளுக்கு சார்பாகவும் , முஸ்லீம்களுக்கு எதிராகவும் நேரடியாகவே தனது 5000 கெரில்லா தர துருப்புக்களை களமிறக்கியுள்ளது .
இந்த செய்தி ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்த பழைய செய்தியாக இருந்தாலும் 'நேட்டோ ' வடிவிலோ , யூ .என் வடிவிலோ மேற்கு இங்கு களமிறங்கும் என காத்திருந்த எமக்கு, ஒரு பலத்த 'அம்புஸ் ' தாக்குதலாக இந்த நேரடி ஊடுருவல் அமைந்துள்ளது . தனது மத்திய கிழக்கு அரசியலின் அந்திம தருணம் புரிந்து விட்ட பின்பு ,இஸ்லாமிய போராளிகளின் அதி வேகமான முன்னகர்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது ? என கையை பிசைந்து கொண்டிருந்த அமெரிக்க தரப்பிற்கு ,இதுவரை தனது அரசியல் நாடகங்களுக்கு எதரி பாத்திரம் போட்டு சிறப்பாக நடித்த இரகசிய நண்பனான ஈரானை பயன் படுத்துவதில் மிகுந்த இலாபங்கள் காணலாம் என்ற இறுதி நப்பாசையின் வெளிப்பாடே இந்த களவிறக்கம் என்றால் அது மிகையான கருத்தல்ல .
மேலும் 200 அதி நவீன கவச வாகனங்கள் ,அதி நவீனஆயுதங்கள் மிக அவசரமாக லெபனானுக்கு அனுப்பப் பட்டதில் இருந்து , இந்த இராணுவ அரசியல் சதி வடிவம் உருத்தெரிய ஆரம்பித்தது . அதாவது லெபனான் அரசியலோ அதன் இராணுவமோ இந்த 'ஹிஸ்புல்லாக்கைளின் ' கட்டுப் பாட்டில் தான் இருக்கின்றது என்பது , மத்திய கிழக்கு அரசியலின் பாலர் பாடமாகும் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே ஈரான் சிரிய விவகாரத்தில் பசர் அல் அசாத் தரப்புக்கு சார்புக் கருத்துகளையே வெளியிட்டு
வந்துள்ளது .
மேலும் இது அமெரிக்க சதிகளின் பகிரங்க வடிவம் ஆகும் .அதாவது 1.பசர் அல் அசாதின் வீழ்ச்சியில் அமேரிக்கா திருப்தி காணவில்லை . 2. இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை அமெரிக்கா விரும்பவில்லை . 3. முஸ்லீம் உம்மத்தின் தொடர்ச்சியான அழிவுகளை தொடருதல் . 4. முஸ்லீம் உம்மத் தமக்குள் உடன்பாடான ஒரே தலைமையின் அரசியலில் வந்து விடக்கூடாது .போன்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த இறுதி முயற்சி .ஆனால் பகிரங்கமாக முஸ்லீம் உம்மத்திற்கு சார்பாக பேசுவது; என்ற அமெரிக்க இரட்டை வேடத்தை இப்போதாவது முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
இந்த 'ஹிஸ்புல்லாக்களின் ' உள் நுழைவு மூலம் இராணுவ ரீதியில் எதிர்பார்க்கப் படுவது என்ன ? அதற்கான விடை இதுதான் சிரிய இராணுவத்தின் முக்கியமான சில படைப்பிரிவுகள் மக்களோடு இணைந்து மரபு சார் சண்டைக் களங்களை திறந்து விட்டதும் , அதன் விளைவாக மிக அவசரமாக அரச படைகள் பின் வாங்கியதும் நீங்கள் அறிந்த ஒன்றே . இந்த கள வடிவத்தை அவசரமாக மாற்ற வேண்டுமானால் சிதறிய குழு முறையான கெரில்லா படையணிகளை களமிறக்க வேண்டும் . அவை சிதறிய நிலையில் ஓன்று குவிந்துள்ள இஸ்லாமிய படையணியின் பலத்தை பல்வேறு சிறு சிறு களங்களாக பிரிக்க முடியும்.
இந்த நடவடிக்கை மூலம் சிரிய மக்கள் இராணுவத்தை பலவீனப்படுத்த முடியும் .அதன் பின்னால் மரபு சார் சிரிய அரச இராணுவம் மீண்டும் கடுமையான தாக்குதல்களின் மூலம் இழந்த நிலைகளை கைப்பற்ற முடியும் என்பதே ஆகும் . அத்தோடு குழறுபடியான இந்த கள மாற்றத்தின் மத்தியில் அமைதி காத்தல் , மக்களுக்கான உதவி, நிவாரண உதவி என்ற அடிப்படையில் யூ .என் , நேட்டோ ,என்பவற்றையும் களமிறக்கக் கூடிய பௌதீக காரணங்கள் மேற்குலகுக்கு சாதகமாகிவிடும் .முஸ்லீம்களாகிய நாங்கள் எங்கள் தொடரான 'து ஆக்களின் 'மூலம் இஸ்லாமிய போராளிகளின் கரத்தை பலப்படுத்த வேண்டுவோம்.

No comments:
Post a Comment