Jan 23, 2013

வெற்றியாக வர்ணிக்கப் படும் வரலாற்றுப் படுகொலைகளில் இதோ ஒரு துளி!

'கிலேட்டின் 'எனும் தலையை வெட்டி வேறாக்கும் கொலைக்கருவிகள் அந்த அந்தலூசிய (ஸ்பெயின் ) முஸ்லீம்கள் முன் வைக்கப் பட்டுள்ளன .இந்த சம்பவம் நடப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வரலாற்றின் ஒரு காலப்பகுதியில் முஸ்லீம்களால் அந்தப் பகுதி வெற்றி கொள்ளப்பட்ட போது தங்களது வீடுகளுக்குள் இருந்து தங்கள் பெண்களோடும் குழந்தைகளோடும் அடுத்து என்ன நடக்கும் என அஞ்சியவர்களாக இருந்தனர் ,தங்கள் மரணத்தில் இருந்து தப்புவதற்கு எதையும் விலைகொடுக்கவும் அவர்கள் தயாராய் இருந்தார்கள் .
அதே போல அதே கிறிஸ்தவ மேலாதிக்கத்தில் அந்தலூஸ் மீண்டும்
வந்தபோது முஸ்லீம்கள் மரணத்தின் முன் விலை பேசப் பட்டார்கள் . அந்த விலை இஸ்லாத்தை விடுவது அல்லது
தலை வெட்டி வேறாக்கப் பட்டகொடூர மரணம் ! இவ்வளவிற்கும் அவர்கள் அரேபியாவில் இருந்து வந்த அரபிகளாக
இருக்க வில்லை .அதே நிலத்தில் இஸ்லாத்தை தழுவிய முன்னாள் கிறிஸ்தவர்கள் .
இந்த நிலையில் இருந்து வரலாற்றை சற்று பின்னோக்கிச் சென்றால் இஸ்லாம் இந்த ஸ்பெயினில் நுழைந்ததே சற்று விசித்திரமான சம்பவம் தான் கிலாபா ஆட்சியின் தொடு தூரத்தில் ஸ்பெயின் இருக்கவில்லை .அவசரமாக அங்கு நுழையும் தேவையும் இருக்கவில்லை . அத்தோடு ஸ்பெயினை பிடித்து பாதுகாப்பதென்பதே அந்த சூழ்நிலையில்' ஹை ரிஸ்க் '' டிபென்ஸ் லைன் கட்டவுட் ' என்பதே அங்கு போடமுடியாது !
அப்படி அவசரமாக நுழையும் தேவை என்ன ?
சம்பவம் கிறிஸ்தவத்தின் இரண்டு பிரிவுகளுக்கிடையே நடந்த சச்சரவில்
ஒரு பிரிவு இன்னொரு பிரிவின் மீது அத்துமீறி அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டது . நசுக்கப் பட்டவர்கள் இஸ்லாமிய கிலாபா அரசிடம் உதவி கேட்டனர் . அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவே அந்த அவசர
படையெடுப்பு ; அதாவது மனித நேயம் .சரி பிடித்தபின் அநியாயம் செய்தவர்களை தண்டித்தார்களா ? அதுவும் இல்லை
ஒரு சிறந்த அமைதி காப்பு நடவடிக்கையாகவே அது அமைந்தது . இன்றைய U .N ஒரு குப்பை என தனது செயலின் மூலம் இஸ்லாம் என்றோ செயலில் காட்டிவிட்டது .கட்டாய ,நிர்ப்பந்த மத மாற்றங்கள் அங்கு நடக்கவே இல்லை .
இஸ்லாமிய படை அந்தலூசியாவில் (ஸ்பெயினில் ) நுழைந்தபோது எதிர் தரப்பின் குடும்பங்கள் அஞ்சி நடுங்கியவர்களாக இருந்தார்கள் குறிப்பாக பெண்கள் . . காரணம் வழமையான இராணுவங்கள் போல் இஸ்லாமிய இராணுவமும் தம் மீது அத்து மீறும் என்ற அச்சமே .ஆனால் நடந்த கதை வேறு
அந்த சத்தியத்தின் காவல் படை ஒழுக்கத்தின் உருவமாகவே அங்கு நுழைந்தது .அந்த கவர்ச்சியின் ஈர்ப்பே வகை தொகை இன்றி பலரை இஸ்லாத்தின் மீது பார்வை ஏற்படுத்த வைத்தது .
அவ்வாறு இஸ்லாத்தில் நுழைந்தவர்களின் சந்ததியே 'கிலட்டின்' கொலை
கருவி முன் இஸ்லாத்தை விடுவதா ? மரணத்தை தேர்வதா ? என்ற இரு தேர்வுகளுக்கு மத்தியில் கிறிஸ்தவ திருச் சபை நீதி மன்றத்தால் தீர்பளிக்கப் பட்டிருந்தார்கள் . அந்த உறுதி மிக்க முஸ்லீம்கள் தேர்வு செய்தது இஸ்லாத்தோடு
மரணத்தையே . அந்த சம்பவம் ஒரு படுகொலையாக கிறிஸ்தவ உலகம் இன்று வரை ஏற்றுக்கொள்ள வில்லை .
அப்படி இருக்க இந்த' சீசனல் ' யூதப் படுகொலைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுமா என்ன .

No comments:

Post a Comment