அது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் வாழும் மனிதர்களை தூய்மைப் படுத்த தனது எல்லைகளை விரிவு படுத்திச் சென்றது . அன்றைய வல்லரசு அந்தஸ்தில் இருந்த சாம்ராஜ்யம் பாரசீகம் ;அதன் ஏகபோக அதிபதியாக தன்னை பிரகடனப் படுத்திய ஒரு மன்னனாக கிஸ்ரா வீற்றிருந்தான் . இஸ்லாத்தின் தூதை அவன் முற்றாக புறக்கணித்தான் .
அதாவது அவனும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல , ஜிஸ்யா கோட்பாட்டுக்கும் அவன் உடன் படவில்லை .அதன் அர்த்தமாவது இஸ்லாத்தின் தூது பூரணமாக அவன் கீழ் இருந்த மக்களுக்கு செல்வதிலும் அவன் தடையாக இருந்தான் . பதிலாக தனது படைபலத்தின் வலிமை பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக போர்ப் பிரகடனம் செய்தான் .
கிலாபா அரசும் போருக்கு தயாரானது . சத்தியத்துக்கு எதிரான சவால்களில் போர் வாளின் நிழலில் சுவனத்தை கண்ட சமூகம் அந்த கிலாபத்தின் கீழ் இருந்தது , சுவனத்தின் ஆசையில் உலகத்தில் அவர்கள் தேடியது 'சஹாதத்தை ' . இரத்தத்தின் மீதே அன்றி இஸ்லாம் வளரவில்லை, வெற்றி அல்லது சுவனம் இந்த ஒரே தாரக மந்திரத்தோடு படை தயாரானது .
'பிரிகேட் கமாண்டர் ' ஸைத் இப்னு அபீ வக்காஸ் (ரலி ) அவர்களின் தலைமையில் மிகப் பாரிய சண்டைகளோடு அந்த 'காதிசீயா ' என்றழைக்கப்படும் அந்தப் போரின் மிக உக்கிரமான கட்டங்கள் தொடர்ந்தன . மிக நெருக்கமாக பாரசீகம் முற்றுகையிடப் பட்டது . அப்போது நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவமே கீழே வருவது .
கிஸ்ராவின் தளபதியான ருஸ்தூமிடம் ஸைத் இப்னு அபீ வக்காஸ் (ரலி ) அவர்களின் தூதுவராக ருபுஹா பின் ஆமிர் என்பவர் அனுப்பப் படுகிறார் . அவரை நோக்கி ருஸ்தூம் "நீங்கள் யார் ? " என்ற கேள்வியை கேட்கிறார் . அதற்கு ருபுஹா பின் ஆமிர் அளித்த பதில் மிகப் பிரசித்தமானது அது இதுதான் .
"மனிதர்கள் மனிதர்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதை விட்டும் அல்லாஹ்வுக்கு அடிபணிய விரும்பும் மனிதர்களை விடுவிக்க அல்லாஹ் எங்களை அனுப்பினான் .மிகவும் குறுகிய கொள்கைகளில் இருந்து விடுபட்டு அல்லாஹ்வின் விசாலமான வாழ்க்கை நெறிக்குள் வர விரும்புபவர்களுக்கு உதவி செய்யவே நாங்கள் அனுப்பப் பட்டுள்ளோம் .அத்தோடு அவர்களுக்கு இறப்பிற்கு பின் வரும் வாழ்க்கையிலும் வெற்றியை பெற்றுத்தர உதவ வந்துள்ளோம் . அநீதிகளில் இருந்து எல்லா மனிதர்களையும் விடுவித்து அல்லாஹ்வின் நீதி கிடைக்க செய்திடவே நாங்கள் அனுப்பப் பட்டுள்ளோம் ."
இந்த பிரசித்தமான பதில் முஸ்லீம் உம்மத்தின் வாழ்வின் பணி ,நோக்கம் என்ன என்பதை மிகவும் தெளிவாக வரையறுத்துள்ளது . ஜாஹிலீயத்திட்கு இஸ்லாமிய சாயம் பூசி குப்ரோடு கைகோர்த்து நவீன இஸ்லாம் பேசும் 'மொடர்ன் இஸ்லாமிஸ்டுகள் ' இது பற்றி சற்று சிந்திக்க வேண்டும் .
'குப்பார்' போற்ற வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தின் சட்டங்களை ,அல்லாஹ்வின் கட்டளைகளை 'பாபெரிசமாக ' இனம் காட்டி இஸ்லாத்தின் நீதித்துறை தொடர்பில் களங்கம் கற்பிக்கும் அதி மேதாவிகள் அல்லாஹ்வின் நீதி என்றால் என்ன ? என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
ஒரு பெண்ணுக்கு சவூதி அரேபியாவில் கொடுக்கப் பட்ட மரண தண்டனை தொடர்பில் ,சர்வதேசத்தோடு சேர்ந்து இவர்கள் சாதிக்க நிணைப்பது என்ன ? மீறப்பட்ட அனைத்து தவறுகளையும் யாரும் அலசவில்லை ! நேரடியாக எல்லோரும் குறிவைப்பது இஸ்லாத்தின் கிரிமினல் சட்டத் தண்டனைகள் மீதே ! ஒவ்வொரு அரசும் 'எண்ட் கவுண்டர்' என்ற பெயரில் தாம் குற்றவாளிகளாக கருதும் நபர்களை தெரு நாயை விட கேவலமாக கொலை செய்வதில் நியாயம் உள்ளதாம் !!! மின்சார நாற்காலியில் வைத்து அமெரிக்காவில் தண்டிக்கும் போது நியாயம் உள்ளதாம் !!!
குவாண்டநோமா , அபூகரீப் சிறைச்சாலைகளில் தன்னை ஒரு மனிதப் பிறவி என கருதும் ஒவ்வொருவனும் வெட்கப் படும் நடத்தைகளை செய்வதில் நியாயம் உள்ளதாம் !!! மனித உரிமை மீறல் என்ற பெயரில் இஸ்லாத்தின் வழிமுறைகளில் மட்டும் பூதக் கண்ணாடியோடு காத்திருக்கும் அநியாயக்காரர்களுக்கு வக்காலத்து வாங்கும் கோடரிக் காம்புத்தனத்தை எம் சமூகம் கைவிட வேண்டும் .
இஸ்லாத்தின் சட்டம் என்பது அல்லாஹ்வின் நீதி .அதில் குறை காணுவது இஸ்லாமிய அகீதாவிட்கு முரணானது . இஸ்லாத்தின் நீதியை தவறாக சிலர் பயன்படுத்துகிறார்கள் என்று கூறினால் அதில் ஓரளவு நியாயம் உள்ளது ,ஆனால் இஸ்லாத்தின் நீதி பிழையானது என்ற வார்த்தை கூட குப்ரிட்கு இட்டுச் செல்லும் . அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் .

No comments:
Post a Comment