Jan 19, 2013

நமக்குள் முரண் பட ஒரு சில காரணங்கள் இருக்கலாம் அனால் ஒன்று பட பலநூறு காரணங்கள் இருக்கின்றன !

Inamullah Masihudeen
நமக்குள் முரண் பட ஒரு சில காரணங்கள் இருக்கலாம் அனால் ஒன்று பட பலநூறு காரணங்கள் இருக்கின்றன !

கருத்து வேறுபாடுகளை உள்வீட்டு விவகாரங்களாக பண்போடும் பரிவோடும் பக்குவமாக கையாள்வோம் -

தப்லீக் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, இக்வான் முஸ்லிமூன், தவ்ஹீது ஜமாஅத், தரீக்காக்கள் ஆகிய சமூகத்தில் செல்வாக்கு மிக்க சகல இயக்கங்களும் போதிக்கும் மார்க்கத்தின் அடிப்படை விஷயங்களில் உதாரணமாக ஷஹதாத் தவ்ஹீத் , ஸலாத் ,சகாத்து நோன்பு, ஹஜ்ஜு குடும்ப வாழ்வு சமூக வாழ்வு ,ஹலால் ஹராம் ,பொருளாதார வாழ்வு என எவரும் ஒருவருக்கொருவர் முரண் படவில்லை, தங்களுக்கிடையில் பலநூறு விடயங்களில் ஒருமைப்பாடு இருக்கிறது, ஒரு சில விடயங்களில் முரண்பாடு இருக்கலாம்.

இவர்கள் சகலரும் நேர் வழியிலேயே இருக்கிறார்கள், எவரும் எவரையும் வழிகேடர்கள் என அடையாளப் படுத்தவோ ,நிராகரிப்பவர்களை அல்லது அக்கிரமக் காரர்களை வெறுப்பது போல் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் மீது வைராக்கியத்தையும் குரோதத்தையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளவோ கூடாது அது இஸ்லாமும் ஆகாது.

கருத்து வேறுபாடுகளை நாம் பிணக்கு களாக பெரும் சர்ச்சைக் குரிய முரண் பாடுகளாக வளர்த்துக் கொள்ளக் கூடாது, தவ்ஹீதுல் கலிமா எனும் ஏகத்துவ கோட்பாடு போல் தவ்ஹீதுல் ஸாப் எனும் உம்மத்தின் ஐக்கியமும் இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும்.

இன்ஷா அல்லாஹ் பொறுமையும் சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுப்பும் சமயோசிதமும் எங்களிடம் முதலில் வந்தால் மாத்திரமே நாம் ஒட்டு மொத்த சமூகத்திற்கு எதிராக இன்று விடுக்கப் படும் சவால்களுக்கு முகம் கொடுக்கலாம், இன்றேல் நாம் எல்லோரும் தோற்றுப் போய்விடுவோம்,
சமாதான சக வாழ்விற்காக நாம் ஒவ்வொருவரும் பிரிந்து நின்று வகுக்கின்ற சகல் வியூகங்களும் அரத்தமற்றதாய் போய் விடும்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடுகளால் பிணங்கிக் கொள்ளாதீர்கள்; அவ்வாறு கொண்டால் பலமிழந்து கோழைகளாகி விடுவீர்கள்; நீங்கள் தோற்றுப் போய் விடுவீர்கள் ; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அன்பால் : 46)

No comments:

Post a Comment