(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு
என்ன ? (பகுதி 10))
பெண்ணை நிர்வாணப் படுத்தி பார்ப்பதில் பண்டைய ரோம் , கிரேக்கம் , அரேபியா , இந்த வரிசையில் நவீனத்தின் சொந்தக்காரர்களாக மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேற்கின் சிந்தனையை அடிப்படையாக கொண்ட உலகும் சற்றும் சளைத்தது அல்ல . அவளை காட்சிப் பொருளாக்கி காமக் கண்களால் ரசித்து ருசித்து பார்ப்பதில் இன்று முழு உலகும் ஒருமித்த கருத்திலேயே உள்ளது .
ஆணின் இயல்பான காமப் பசிக்கு முன் அவள் அரை ,முழு நிர்வாணமாக நடமாடுவது என்பதில்தான் பெண் விடுதலை எனும் முட்டாள் தனமான அழைப்பில் அவளும் மயங்கினால் , விளைவு உள ரீதியான விபச்சாரம் கம்பியூட்டர் தொடங்கி மொபைல் போன் வரை சாதாரணமானது . வீதியல் தெரியும் ஒவ்வொரு விளம்பரமும் விபச்சாரத்தின் அழைப்பாக புரியப்படாமல் ஒரு கலை அம்சமாக காட்டப்பட்டது .
ஆண்கள் சமூகம் முன் காமக் காட்சிச் சாலையாக பெண்ணை உத்தியோக பூர்வமாக மாற்றிய பெருமை முதலாளித்துவத்தையே சாரும் . உங்களுக்கு தெரியுமா
'கொக்கா கோலா ' போத்தல் ; அதை சற்று கூர்ந்து பாருங்கள் . அதன் அமைப்பு ஒரு பெண்ணின் உடல் அமைப்பை மையப்படுத்தி செய்யப் பட்டது . கலை என்ற பெயரில் காமத்தை தூண்டும் வகையில் ஒரு குளிர்பானம் !
சிக்மன் புரைட் என்ற யூதனின் சிந்தனை தான் 'எல்லாமே செக்ஸ் ' குழந்தை விரல் சூப்புவதும் செக்ஸ் ! தாயின் மார்பில் சுரக்கும் பாலை அது குடிப்பதும் செக்ஸ் !
தொட்டில் முதல் செக்ஸ் தொடங்கி விடுமாம் !!! இதை கெட்டியாக பிடித்த முதலாளித்துவம் பெண்ணை பண்டமாக்கி ஆணின் முன் அனுபவி ராஜா அனுபவி .... என இவர்களே தாலாட்டுப் பாடி வெறித்தனத்தை தொடங்கி விட்டு பாலியல் வல்லுறவு என்ற அதன் கொடிய விளைவை அனுபவிக்கும் போது மட்டும் சட்டம் ஒழுங்கு என கத்திக் கதறுவதில் என்ன பயன் ?
(தொடரும் ...)
No comments:
Post a Comment